Saturday 30 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை;
பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை*
'தர்மம் தலை காக்கும்' என்பது மூத்தோர்
வாக்கு. நாம் செய்யும் தானதர்மங்கள் எம்மை
என்றும் காத்து வாழ வைக்கும் என்பது இதன்
கருத்து. ஆம்! எமக்கு கிடைக்கும்
செல்வங்களில் ஒரு பகுதியை நாம்
இல்லாதவர்களுக்கு கொடுக்கவென ஒதுக்க
வேண்டும். எமது தேவைகளில்
அத்தியவசியமானவற்றை நிச்சயமாக பூர்த்தி
செய்யத்தான் வேண்டும். ஆனால் எமது
ஆடம்பரச்செலவுகளைக்
குறைத்துக்கொண்டு, அத்தியவசியமான
தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது
தவிக்கும் எமது சமூக அங்கத்தவர்களுக்கு
நாம் வழங்க வேண்டும்.
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பாய்' என்ற ஓர் வாக்குண்டு.
ஏழைகளுக்கு உதவி, அவர்கள் மனதார
எம்மை வாழ்த்துவதை விட மேலான வாழ்த்து
வேறேதும் இல்லை .ஏழைகள் பசியால் வாடும்
போது நாம் பசி தீர்த்தபின் அது
செமிக்கவென மேலும் பழம் உண்ணுதல் நன்றா? நாம் உண்ணத்தான் வேண்டும்,
உடுக்கத்தான் வேண்டும், ஆயினும் எம்மைப்
போன்ற பலர் இப்போது பசியால் துடித்துக்
கொண்டிருப்பதையும் நாம் உணர வேண்டும்.
சமூகத்து அங்கத்தினர் என்ற வகையில்
அவர்களது பசியாற்ற நாம் என்ன செய்ய
முடியும் எனச் சிந்தித்து செயற்பட வேண்டும்.
'தனக்கு மிஞ்சித்தான் தானம்' என்பர். அது
சரியானது தான். எனவே எமது தேவைகளை
பூர்த்தி செய்து பின் ஏனையோருக்கு உதவ
வேண்டும். சிலர் அதனை மறந்து
உள்ளதல்லாவற்றையும் பிறருக்கு வழங்கி
விடுவதுண்டு. ஆனால் அது வரவேற்கத்
தக்கதல்ல. காரணம் நாளை நம் தேவை
எப்படிப் பூர்த்தியாகும் என்பதையும் சற்றுச்
சிந்திக்க வேண்டும்.
எனவே எம்மால் குறைக்கக்கூடிய,
கட்டுப்படுத்தக்கூடிய
தேவையற்ற
செலவுகளை, விரயங்களை குறைத்து,
தவிர்த்து பிறருக்கு வழங்க வேண்டும். மகரயாழ்
இல்லாதவர்களுக்கு வழங்குவது என்பது
வங்கியில் சேமிப்புச் செய்வது போன்றது.
பிறிதொரு நேரம் எமது ஆபத்தின் போது நாம்
செய்த தானங்களும் தர்மங்களும் வேறு ஓர்
உருவில் வந்து எம்மைக் காக்கும். எனவே
சிறுவயதிலிருந்தே நாம் இந் நற்செயலைப்
பழகிக் கொள்வோமாக.
*'இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பாய்'* என்ற பாரதியார்
கனவு நனவாக நடப்போமாக.

No comments:

Post a Comment