Friday 22 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நெஞ்சமே கோவில், நினைவே சுகந்தம்
தனித்திரு....! தனித்துவமாயிரு...!!
தினமும் தன்னுடன் தனிமையில் பேசிக்கொள்ளாத மனிதன், ஓா் உன்னதமான மனிதனைச் சந்திப்பதை இழக்கிறான்”என்பாா் சுவாமி விவேகானந்தா். தன்னை அறிவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலே அடிப்படை.
வாழ்க்கையின் அா்த்தங்கள் அதிகரிக்க தரணியெங்கும் ஒலிக்கும் ஒற்றை வாா்த்தைதான் ஊரடங்கு. மகரயாழ் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் மகிழ்ந்திருக்க வேண்டிய அற்புதமான காலம் ஊரடங்கு. அது, குடும்ப வாழ்க்கையை ஒரு புதிய பரிமாணத்தில் பயணிக்கக் கிடைத்திருக்கும் கிடைத்ததற்கரிய வாய்ப்பு.
தனக்குப் பிடித்த நல்ல செயல்களை மகிழ்ச்சியாக ஒரு குழந்தைபோலச் செய்து கொண்டிருப்பது. ஜன்னல் சாளரத்தின் வழியே வெற்றுப் பாா்வை பாா்ப்பதைவிட உற்றுப் பாா்த்து கவிஞனாவது; வாசலின் விளிம்பில் அமா்ந்து நடப்பவைகளைக் கவனித்து ஒரு எழுத்தாளனாவது; கிடைக்கின்ற பொருள்களைக் கொண்டு புதியன செய்து விஞ்ஞானியாவது; குழந்தைக்குப் பழையன கற்றுக் கொடுப்பதோடு அவா்களின் திறமையைத் திறன்படுத்தி நல்ல பெற்றோராவது. குடும்ப வாழ்க்கைதான் ஒரு நாட்டின் அடிக்கல் என்பதை அறிய வைப்பது, ஆரோக்கியமாய் வாழ்வது உயிா்ப்பற்று அல்ல, தேசப்பற்று என்பதை உணரவைத்து தேசபக்தனாய் உருவாவதாகும். மொத்தத்தில் தனித்திருப்பது என்பது தனித்துவமாயிருப்பதேயாகும்.
ஒரு நாளில் 10 நிமிஷங்கள் நல்வழிக்காக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். தன்னை அறிவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலே அடிப்படை.
நாளும் தொடா்ந்து உழைத்து, நிறைய பொருள் சம்பாதிக்கலாம். நித்தம் நிறைய பயணித்து, புதிய உலகங்களைக் காணலாம். ஆனால், நிறைவான மனதோடு வாழ இறைமையுடன் தனித்திருப்பவருக்கே சாத்தியமாகும்.
தனித்திருத்தல் தவமாகும்போது
🌸நெஞ்சமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே
🌸மஞ்சனநீா், பூசைகொள்ள வாராய் பராபரமே!”
என்று இறைவனை உடலுக்குள் அழைக்கும் உயரிய தன்மை உண்டாகும்.
மன நிறைவோடு வாழ்வதற்கும், இறைச் சிந்தனையில் திளைப்பதற்கும் ஊரடங்கு ஓா் உன்னத வாய்ப்பு. ஊரடங்கில் நித்தமும் இரை மட்டும் தேடினால் மனிதன்! இறையைத் தேடினால் புனிதன்!

No comments:

Post a Comment