Monday 30 September 2019

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா கருத்தரங்கம்


திருநகர் நகரத்தார் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழா








காசிச் சத்திர சொத்துக்கள் மீட்பில் மின்னல் வேகப் பணி


நம்பிக்கை நாயகி......

நம்பிக்கை நாயகி......
புடவை வாங்கி 21 வருடங்களாகுதாம் …நமது இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி
•ஆடித்தள்ளுபடி ஆஃபர், அள்ளிக்கோ ஷாப்பிங் என சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணிக்கடைகளை மொய்க்கத் தொடங்கியுள்ளன மக்கள் கூட்டம். தேவைக்காக ஷாப்பிங் செய்தது மாறி இப்போது போர் அடித்தால் ஷாப்பிங் என்ற அளவிற்கு மக்கள் ஆடம்பரத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். பொருளாதார சூழ்நிலை காரணமாக எளிமையாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் வசதி படைத்தவர்கள் ஆடம்பரமில்லாமல் இருப்பதை கேட்டால் இன்றைய நவீன உலகில் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?
பணம் கொட்டிக் கிடந்தால் கட்டித்தங்கத்தில் பிளவுஸ், வைரத்தில் செல்போன், ஹேண்ட் பேக் என்று ஃபேஷன் ஃபீரிக்குகளாக வலம் வருபவர்கள் மத்தியில் அமைதி, எளிமையே உருவான சுதா மூர்த்தி நம் மனதை ஆட்கொள்கிறார். இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் தலைவருமான சுதா மூர்த்தி தனித்து அடையாளம் காணப்படுவதற்கும் அவர் மீது தனி மரியாதை ஏற்படுவதற்கும் அவருடைய சாதனைகள் மட்டும் காரணமல்ல.
வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுதாவை யாருமே ஆடம்பரமான உடையிலோ அல்லது நகைகள் அணிந்தோ பார்த்ததேயில்லை.
சாதாரண காட்டன் புடவையை அணிந்து கொண்டிருக்கும் இவரைப் பார்த்தால் பலருக்கு ஆச்சரியம் ஏற்படும். இதில் பெண்களுக்கு ஷாக் அடிக்கும் மற்றொரு விஷயம் என்ன தெரியுமா சுதா மூர்த்தி 21 ஆண்டுகளாக ஒரே ஒரு புதுப் புடவை கூட வாங்கியதில்லையாம்.
இதற்கு அவர் கூறும் காரணம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும்.
“நான் காசிக்கு சென்றிருந்த போது புனித நதியில் நீராடும் போது நமக்குப் பிடித்த எதையாவது விட வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஷாப்பிங் செய்வதை விட்டுவிடுவதாக, குறிப்பாக சேலைகள் வாங்குவதை விட்டுவிடுவதாக உறுதியெடுத்தேன். அப்போது முதல் தேவையானவற்றைத் தவிர வேறு எதையுமே ஷாப்பிங் செய்வதில்லை,” என்கிறார் சுதா மூர்த்தி.
நாம் எப்போதுமே பிறருக்காக வாழ்கிறோம். அவர்கள் என்ன நினைப்பார்களோ என்றே பலவற்றை செய்கிறோம். என்னைப் பொருத்தவரையில் அது தேவையில்லை, நாம் நமக்காக வாழ வேண்டும்.
“எப்போதுமே நான் பிறருக்கு சொல்லும் அறிவுரை எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். மனிதத்தின் அழகு எளிமையான வாழ்க்கையிலும், நம்பிக்கையிலுமே இருக்கிறது. எனவே உங்களுக்காக வாழுங்கள். என் கணவர் நாராயணமூர்த்தியின் எளிமை என்னையும் தொற்றிக்கொண்டது என நினைக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர், நேர்மையானவர், எப்போதும் என்னுடைய ஆடை பற்றியோ அழகு பற்றியோ பேசியதே இல்லை. ஆனால் நான் ஒரு நல்ல மனுஷி என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது,” என்கிறார் சுதா.
மிகவும் சாதாரணமான புடவை உடுத்தி இருப்பதால் பல நேரங்களில் சுதாவை பலர் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளை சந்தித்த போதும் சுதாவின் உறுதியை அசைக்க முடியவில்லை. சங்கடப்பட்டுக் கொண்டு தனது வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளாமல் தனக்கு பிடித்தது போலவே எளிமையாகவே இன்றளவும் வாழ்ந்து வருகிறார் 68 வயதான சுதா.
ஒரு முறை விமான பயணத்திற்காக பிசினஸ் கிளாஸ் வகுப்பினருக்கான வரிசையில் சுதா காத்திருந்த போது அந்த வரிசையில் நின்றிருந்த பணக்கார பெண்மணி ஒருவர் இது வசதி படைத்தவர்கள் செல்லும் வரிசை நீங்கள் ’கேட்டில் கிளாஸ்’ (cattle class) வரிசைக்குச் செல்லுங்கள் என்று ஏளனம் செய்துள்ளார். தனது எளிமையான ஆடையை பார்த்து அவர் இவ்வாறு இகழ்வதை புரிந்து கொண்ட சுதா, அமைதியை மட்டுமே அந்த பணக்கார பெண்மணிக்கு பதிலாக தந்துள்ளார்.
“வகுப்பு என்பது அதிக பணம் சம்பாதித்தால் மட்டும் வந்துவிடாது. இந்த உலகில் பல குறுக்கு வழிகளில் கூடத் தான் பணத்தை சம்பாதித்து விட முடியும். ஆடம்பரத்திற்கும், வசதியாக வாழ்வதற்கும் மட்டும் வேண்டுமானால் பணம் உதவும். ஆனால் அதே பணம் உங்கள் வாழ்க்கையின் உன்னதம் என்ன என்பதை புரிய வைக்காது, ஏனெனில் அவை விலை கொடுத்து வாங்க முடியாத மனித மனங்கள்,” என்கிறார் சுதா மூர்த்தி.
ஆடம்பரத்தின் பின்னால் இந்த உலகில் உள்ள மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வாழும் உதாரணமாக இருக்கும் சுதா மூர்த்தியின் எளிமை மக்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை யோசிக்க வைத்திருக்கிறது.
கணவர் நாராயண மூர்த்தி உடன் சுதா மூர்ததி காஸ்ட்லியான பொருட்களை வாங்கிக் குவிப்பதில் இல்லை மகிழ்ச்சி உயர்ந்த சிந்தனைகளும், மதிப்புகளுமே சிறந்த மனித வாழ்க்கைக்கான அஸ்திவாரம் என்பதை வாழ்ந்து காட்டி வரும் சுதா மூர்த்தி நிச்சயம் ஒரு நம்பிக்கை நாயகி.
மீனா ராஜன்
நன்றி பிஎல். சந்திரன்

தினகரன் மதுரை 30.09.2019 பக்கம் 16


பயனாளிக்கு வண்டி வழங்குதல்





தினபூமி மதுரை 30.09.2019 பக்கம் 6


தினத்தந்தி மதுரை 30.09.2019 பக்கம் 15


தினமலர் மதுரை 29.09.2019 பக்கம் 7


மக்கள்குரல் 29.09.2019 பக்கம் 8


மதுரைமணி 29.09.2019 பக்கம் 4


மாலைமுரசு 29.09.2019 பக்கம் 5







ஆழ்ந்த இரங்கல்....


தனித் தமிழ் உணர்வாளர், தன் பார்வைக் குறைபாடு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இதழியல் களத்தில் பணியாற்றிய
நகரத்தார் சமூகத்தின் மூத்த பத்திரிகையாளர் நகரத்தார் இதழின் ஆசிரியர் சோழபுரம் திரு.சுப.செந்தமிழன் அவர்கள் நேற்று 29/09/19 இரவு 11 மணிக்கு காலமானார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*அவர்களது இறுதிச் சடங்கு இன்று 30/09/19 மாலை 4 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் உள்ள நகரத்தார் சிவமடத்தில் நடைபெறும்.*
*(தொடர்பிற்கு மகள் திருமதி. நிலவு+917397457699)*
கவலையுடன் - மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.*
சுமார் *40,000* கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.
அன்று *உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்*,
கங்கை கொண்ட சோழபுரம்தான்.
அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது.
இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக *1066* ல் நிறுவப்பட்டது.
*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது.*
இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.
இந்தத் தங்கப் போர்வை *1311* - ஆம் வருடம் மாலிக்கபூரின் *முஸ்லிம் படைகளால்* கொள்ளையடிக்கப்பட்டு, *500யானைகள் மேல்* எடுத்துச் செல்லப்பட்டது.
🌟🌟🌟🌟🌟🌟
*இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?*
எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.
🎋🍃🎋🍃🎋🍃🎋🍃🎋🍃🎋
உலகிலேயே ஒரே சீராக 80இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.
🐘🐘🐘🐘🐎🐎🐎🐎🐘🐘🐘
மலேயா காடுகளிலிருந்தும்,
மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் *முறையைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர்களே!*
*ஏழுமலையானும்* *சோழர்களும் என்ற* *நூலில் இருந்து...!!! இன்னும்* *பல* *தகவல்களுடன் உங்களுடன்....*
*தென்னாடுடைய சிவனே போற்றி!*
*என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை அரசர் பிறந்தநாள் வாழிய புகழ்


மனிதத்தேனீயின் தேன்துளி


திருநகர் நகரத்தார் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழாவில் தலைவர் அக்ரி ஆத. பஞ்சநதம் தலைமை தாங்கிட, செயலாளர் சி. முத்துராமன் வரவேற்புரை ஆற்றிட தேவகோட்டை லெ. விஜய் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். கமலா சினிமாஸ் வி. என். சிடி. வள்ளியப்பன், மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்


நேற்று இரவு திருப்பரங்குன்றம் நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருநகர் நகரத்தார் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழாவில் தலைவர் அக்ரி ஆத. பஞ்சநதம் தலைமை தாங்கிட, செயலாளர் சி. முத்துராமன் வரவேற்புரை ஆற்றிட தேவகோட்டை லெ. விஜய் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். கமலா சினிமாஸ் வி. என். சிடி. வள்ளியப்பன், மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி கடந்த 14 நாட்கள் நடைபெற்ற மின்னல் வேகப் பணிகளை எடுத்துச் சொல்லி நன்றி தெரிவித்துப் பேசினார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய டைரியை தொழிலதிபர் மகிபாலன்பட்டி மா. சாத்தப்பன் வெளியிட்டார். புதிய நிர்வாகிகள் தலைவராக ஏ ஆர். சிவா, செயலாளர் எஸ். ஆதப்பன், பொருளாளர் எல். எஸ். ஆறுமுகம், துணைத் தலைவர் சுப. சேக்கப்பன், துணைச் செயலாளர் எஸ். கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொருளாளர் வீர. காசி நன்றி கூறினார். கொப்பனாபட்டி மலர்விழி பழனியப்பன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழா அரங்கில் முழுவதும் நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
விரிவான செய்திகள் நாளை வரும்.





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் முக்கிய வேண்டுகோள்.
---------------------------------------------------------------------------
*இளைஞர்களில் ஒரு சிலர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், வேலைக்கு செல்லாமலேயே சுகபோக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் குற்ற சம்பவங்களில் (வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை, கன்னக்களவு, ) ஈடுபட்டுவருகிறார்கள்.
*இந்த குற்ற சம்பவத்திற்கு, உறவினர் மற்றும் நண்பர்களை ஏமாற்றி இரு சக்கர வாகனங்களை இரவல் வாங்கிசென்று சமூகவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
*ஆகவே யாரேனும் உங்களது இரு சக்கர வாகனத்தை இரவல் கேட்டால் தயவு செய்து சரியான காரணம் தெரியாமல் கொடுத்து உதவ வேண்டாம்.
*அதையும் மீறி யாரேனும் இரு சக்கர வாகனத்தை கொடுத்து தங்களது வாகனத்தை இளைஞர்கள் குற்ற செயலுக்கு பயன்படுத்தினால் அந்த குற்றச்செயலில் தாங்கள் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் வாகனத்தை கொடுத்த குற்றத்திற்காக தாங்களும் குற்றவாளியா கருதப்பட வாய்ப்பு உண்டு.
* தங்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இளம் சொற்பொழிவாளர் உருவாகின்றார். பேச்சுலகில் முத்திரை பதித்து மேன்மை பெற்றிட வாழ்த்துகின்றேன்.


காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் புதிய செயலாளர் காரைக்குடி ராம. லெட்சுமணன் (புதுக்கோட்டை) அவர்களின் மகள் ஏம். பி. ஏ. பயின்று வரும் மாணவி லெ. மீனாட்சி இன்று காலை திண்டுக்கல் ஐ. லியோனி நிகழ்ச்சியில் பேசிய காணொளி. பாராட்டுக்கள் - மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


28.09.2019 பிற்பகல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற உலக இருதய தின விழா கருத்தரங்கில் 44 நிமிடங்கள் நலம் சார்ந்த நகைச்சுவை என்ற தலைப்பில் சிறப்புரை.



மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)



புத்தகம் பிறந்த வரலாறு...


நூல் (book)
நூல் என்பது கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது.


மதுரை திருநகர் நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வாகியுள்ள ராங்கியம் ஏஆர். சிவா தலைமையிலான குழு புதிய வரலாறு படைத்திட பாராட்டுக்கள். இவர் சார்ஜாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் நகரத்தார் நலனுக்கும் கால் நூற்றாண்டுக்கு முன்பே உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழிய அவரது பணி. -மனிதத்தேனீ


அண்ணன் நெல்லை கண்ணன் நலம் பெற இறையருள் துணை நிற்கட்டும். -மனிதத்தேனீ


Saturday 28 September 2019

கவியரசு கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்


உலக இருதய தினம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருத்தரங்கம்





















மதுரைமணி 28.09.2019 பக்கம் 4


மக்கள்குரல் மதுரை 28.09.2019 பக்கம் 4



தினமலர் மதுரை 28.09.2019 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

’வினோதமான வேலை.'
………………………………….......
நடந்து போன செயல்களில் ஏற்ப்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப் போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம் தான்.
அது தான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு எழுந்து வரத்தான் வேண்டும்..
மனிதனுக்கு துன்பம் வரும் பொழுது தான் மூளை அதிலிருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.
ஆகவே துன்பம் வரும் போது துவண்டு விடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும்..
மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து விடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.
ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை.கையில் காசு இல்லை..
எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார்.
“நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக
வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன்.
உணவும் தங்கும் இடமும்அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்”என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்பு கொள்ள
ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுத்தார்கள்..
500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள்.
உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டு கொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் மோசமாக நடத்தியது இல்லை என்றார்..
ஆம்.,நண்பர்களே..,
மனித வாழ்வில் சோதனைகளும் , துயர்களும் இயல்பானவை..
அவற்றைக் கண்டு துவண்டு போகக்கூடாது..
நம்பிக்கை இழந்து விரக்தி அடையக் கூடாது..
ஆம்., உலகில் வாய்ப்புகள் நிறைந்து உள்ளது..நாம் தான் அதைக் கண்டு கொள்வதில்லை. கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தினால்
நாமும் வாழ்வில் முன்னேறலாம்.......

அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலை சிறப்புரை.