Tuesday 28 February 2017

உலக நுகர்வோர் தினம் அழைப்பிதழ்


முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வு


Dinamalar _ Madurai _ 28.02.2017 Page 4


Madurai Mani Paper 27.02.2017 Page 4


Malai Murasu Paper 27.02.2017 Page 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

[23/02 12:39 pm] ‪+91 98650 26626‬: ஒரு சின்ன கதை:
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.
கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
பறவை இனம் பெருகியது.
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.
அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.
எதிரிகளுக்கு உணவானது.
மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.
பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).
எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.
அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.
பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.
அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.
பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.
நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.
நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.
நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல.
இதை தான் ஆங்கிலேயத்தில்
*survivaloffittest* என்று சொல்லுகிறோம்.
அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
[26/02 6:33 am] Baskar R (PRO): ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.
"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''
"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.
"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.
"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.
பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.
ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.
மாணவர்களும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது..
அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர் வேறு யாருமில்லை.
நான் தான்.... 3 வது படிக்கும் போது இது நடந்தது..
சொல்லவேண்டாம் என்று தான் நினைத்தேன் இருந்தாலும் மனசு கேக்கலை....

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு இளைஞனுக்கு தெய்வீகத் தன்மையுடன் வாழ வேண்டுமென்று மிகுந்த ஆசை வந்தது.
ஆனால் அதை எப்படி அடைவதென்று தெரியவில்லை.
பலரிமும் அதைப் பற்றிக் கேட்டுப் பார்த்தும் சரியான பதில் கிடைக்க வில்லை. கடைசியாய் ஒரு பெரியவரிடம் யோசனை கேட்டான்...
அவர் சொன்னார்...
" மகனே ! இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு உயர்வான தேடல் உனக்குள் எழுந்ததற்காக உன்னைப் பாராட்டுகின்றேன்.
அதே சமயத்தில் இதற்கான பதிலை இப்போதே நான் சொல்லிவிட்டால் உன்னால் கிரகித்துக் கொள்ள முடியாது. இது ஒவ்வொரு கட்டமாகப் பயணித்து அடையக் கூடிய நிலை .
எனவே நீ இந்த ஊரிலுள்ள தலை சிறந்த சிற்பியை சந்தித்து , அவரால் எப்படி இத்தனை தத்ரூபமான சிற்பங்களை உருவாக்க முடிகின்ற தென்று தெரிந்து வா .
அதில் உன் கேள்விக்கு விடை கிடைக்கலாம்" என்றார். இளைஞனும் ஆர்வத்துடன் கிளம்பிப் போனான்...
பலரிடம் விசாரித்த போது, அவர்களில் பலரும் ஒரு சிற்பியின் பெயரையே குறிப்பிட்டனர். இளைஞன் அந்த சிற்பியிடம் போனான்...
அவர் ஒரு புதிய சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தார். நிஜமாக அது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
அவன் அருகில் சென்ற போதும் அவர் அவனைக் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையிலேயே மும்முரமாக இருந்தார்.
சில மணி நேரங்கள் கழிந்தன. ஒரு அழகிய சிற்பம் உருவாகியிருந்தது. இப்போது சிற்பி அவனை கவனித்தார் .
" என்ன தம்பி , ரொம்ப நேரமா நிக்கிறியே ? என்னப்பா வேணும் உனக்கு ?" என்றார்.
இளைஞன் சொன்னான்...
" ஐயா ! இத்தனை தத்ரூபமா சிலை வடிக்கிறீங்களே, இதன் ரகசியம் என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான் நிக்கிறேன் "
அவனது வார்த்தையைக் கேட்ட அவர் ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டு விட்டது போல சிரித்து விட்டுக் கேட்டார் ,
" இந்த சிலையில என்ன உருவம்ப்பா தெரியுது உனக்கு ?"
அவன் , " அழகான யானைங்க ஐயா " என்றான்..
உடனே அவர் சொன்னார்...
" இதுல பெரிய ரகசியம் ஏதுமில்ல. இந்தக் கல்லுல எதெல்லாம் யானை மாதிரி தெரியலையோ அதையெல்லாம் நீக்கிட்டேன். அழகான யானை கிடைச்சிடுச்சி " என்றார் .
மிகப் பெரிய கேள்விக்கு எளிமையாய் விடை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இளைஞன் சந்தோஷமாய் அவரை அணைத்துக் கொண்டான்.
ஆம்...
வேண்டாத குணங்கள், வேண்டாத நபர்கள், இவைகளை மாத்திரம் வாழ்க்கையில் நீக்கினால் போதும்..
மிக அழகான வாழ்வு நம் கையில். இதற்க்கு சிற்பி முன் உதாரணம்.

சுத்தானந்த பாரதி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Monday 27 February 2017

மடோபா முப்பெரும் விழா





மனிதத்தேனீயின் தேன்துளி



மனிதத்தேனீயின் தேன்துளி



அரிமளம் ஸ்ரீசிவகமலம் பள்ளி விழாவில்

அரிமளம் ஸ்ரீசிவகமலம் பள்ளி விழாவில் தந்தி தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியர் ஆா். ரெங்கராஜ் பாண்டே, மனிதத்தேனீ ரா சொக்கலிங்கம், நிறுவனா் ப. தங்கவேல், தாளாளர் சபரி தங்கவேல், எம். எஸ். எம். சோமு,
சொ. ராம்குமார் உள்ளனர்

Saturday 25 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...
😬😁😂😬😁😂😬😁😂
🤔🤔🤔
இந்தக் கதைக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை,
😬😬😬
நான் ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்..
😐😐😐
நன்றி முனைவா் எஸ் எம் கண்ணன்

மடோபா 5ஆம் ஆண்டு, ஆண்டு விழா


காசி நகரச்சத்திரத்தில் சிவலிங்கம் சுமந்திடும் பாக்கியம் பெற்ற தலைவர் லேனா காசிநாதன், துணைத் தலைவர் வழக்கறிஞர் பழ. ராமசாமி


மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது.
புத்தகங்களை துணை கொள்.
உடலுழைப்பை அதிகரி.
சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
குளிர் நீரில் குளி.
கொஞ்சமாய் சாப்பிடு.
தியானம் கைகொள்.
இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
உணவில் கீரை சேர்த்துக் கொள்.
எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
ஆத்திரம் அகற்று.
கேலிக்கு புன்னகை தா.
கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
நட்புக்கு நட்பு செய்.
வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
அன்பு செய்தால் நன்றி சொல்.
இதமாகப் பேசு.
நீ ஜெயிப்பாய். இது நிச்சயம்.
வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

Thursday 23 February 2017

Madurai Mani Paper 23.02.2017 Page 3


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு அழகான கதை!
அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படிக் கேட்டார்.
அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, "ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே" என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.
இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.
சுமார் 10 தினங்கள் கழித்து மீண்டும் அந்த வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக்கல்லை கொடுத்து, "இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள்" என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி, பிள்ளைகளிடம்கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது வீட்டில் யாருமில்லா சமயம்மட்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.
இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.
அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம், அதைக் கவனித்த வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, "எங்கே அதிலிருந்த கல்?" என்று மனைவியை கேட்டான்.
ஏதுமறியாத மனைவி நடந்ததைக்கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.
சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்ச்சுனன் கண்ணனிடம்,"இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன்" என்று கூறினார்.
அதை ஆமோதித்த கண்ணனும்,"இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு" என்றார்.
ஆச்சர்யப்பட்டான் அர்சுனன். ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, "இதென்ன விந்தை….! வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?"
"எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம்" எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.
அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் "உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா?" எனக் கேட்டான்.
உடனே தனக்குள் யோசித்த இவன் "இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது" என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்பவிட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை
விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலைவிட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.
ஆம், அவன் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கலதான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால் 'என்னிடமே சிக்கி விட்டது' என்று கூச்சலிட்டான்.
அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.
அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மட்டுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டான்.
அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப்பட்ட அர்சுணன் கண்ணனிடம், "இது எப்படி சாத்தியம்?" எனக் கேட்க கண்ணனும் சிரித்துக்கொண்டே…
"இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.
ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.
ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….
அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை" எனக் கூறினார்.
இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்..!
நன்றி டாக்டர் துளசிராம்

மனிதத்தேனீயின் தேன்துளி



Wednesday 22 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அரசுப் பணியில் அதிசயம்.....
பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர், தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.
“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.
நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.
இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.
“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம், உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.
அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.
காலங்கள் உருண்டன.
கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனதப் பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும், ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.
ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.
அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.
“ஆமாம்… சார்…”
உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”
“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.
“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா, அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”
“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த, இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.
அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.
இரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.
இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.
மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.
அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.
“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”
கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.
“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”
“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”
“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”
நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?
உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை, ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ
அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.
நேர்மை, நாணயம், ஒழுக்கம்,
சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன.
கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன.
வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.
உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…
*“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.
* நிறைய உண்மை கலந்த கதை இது! * நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள்!
*உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும்*
*நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற வேண்டும்.
ஆகவே மகிழ்ச்சியாக, நேர்மையாக சமுதாயப்பணியாற்றுவோம்.

வீரப்பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை நினைவுதினம்