Friday 30 November 2018

நெற்குப்பையில் ஒரு இனிய தருணம், மனிதத்தேனீ, காசி தலைவர் லேனா. காசிநாதன், ஈரோடு லேனா நாராயணன், கண்ணாத்தாள் நிறுவனங்கள் தலைவர் ராம. சோமசுந்தரம், சேலம் முத்துராமன், பழ. ராமநாதன், பழ. அழகப்பன் உள்ளனர்.


விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


வாழிய ஷங்கரின் பேராற்றல்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌷அடுத்தவர்கள் இதயத்தை நோகடித்தால் அது பாவம். அடுத்தவர்களின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்தால் அது புண்ணியம்.
🌷வசதிகள் இல்லை என்றாலும் எப்போதும் பிள்ளைகள் ஆசைப்பட்டதை செய்து கொடுக்கவே விரும்புகிறது பெற்றவர்கள் மனது.
🌷பல பெண்களுக்கு இரண்டு மாமியார். ஒன்னு கணவனின் தாயார் மாமியார், இன்னோன்னு மகள் என்ற மாமியார். இன்றைய நாகரீக உலகில்.
🌷முடியாது என கை விரித்து விடுவது மேன்மையானது. உதவுகிறேன், பார்க்கலாம் என்று ஏமாற்றுவதை விட.
🌷எனக்கு யாருமே உதவி செய்யவில்லையென புலம்பாதீர்கள். அவரவர்கள் சூழ்நிலை அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


உலகத் தரத்தில் 2.0

உலகத் தரத்தில் 2.0
ஷங்கர் ரஜினியின் இந்தப் படம் நேற்று இரவுக் காட்சி 3 டி கண்ணாடி அணிந்து திருநகர் மணி இம்பாலா மேஜிக் திரையரங்கில் பார்த்தேன் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு.
படம் அருமை, காட்சி அமைப்பு மேல்நாட்டுப் படங்களுக்கு சவாலாக உள்ளது. கதை புதிய வகையில் பறவைகளின் பாதுகாப்பு மற்றும் செல் போன் பயன்பாடு, செல் போன் டவர்களினால் வரும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு.
பாடல்கள் மறைந்த பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் மதன் கார்க்கி காட்சிக்கு ஏற்ப சிறப்பாக உள்ளது.
விஞ்ஞானம் தொழில்நுட்பம் பெரும் பொருட் செலவு, நீண்டகால தயாரிப்பு. ஆனால் பிரம்மாண்டம்.
ரஜினிக்கு மீண்டும் மிகப்பெரிய சிறப்புதான், ஷங்கரின் பேராற்றல் நிச்சயம் பாராட்டுக்குரியது.-மனிதத்தேனீ

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருநகர் மணி இம்பாலா மேஜிக் திரையரங்கில் இரவுக் காட்சி 2.0..


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


Thursday 29 November 2018

ராஜாஜி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


இஸ்ரோவின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்


இறுதிவரை வள்ளலாக வாழ்ந்த கலைவாணர் என் எஸ் கி௫ஷ்ணன் பிறந்த நாள் வாழிய புகழ் -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நீதிக்கதை
வனத்துக்கு வந்த வானவில்!
அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது. தூரத்தில் தூறல் விழுந்து கொண்டிருந்தது. வெயிலும் மெள்ள மறையத் தொடங்கியிருந்தது. சிவகிரி மலைக்கும் அய்யனார் கோயில் மலைக்குமாக வானவில் பளீரெனப் பிரகாசித்தது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, நீலம், கருநீலம், பச்சை வண்ணங்கள் மேகங்களினூடே ஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. வனத்தில் விலங்குகள் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தன.
யானை ஒன்று அடுத்த யானையை அழைத்தது. ``என்ன அண்ணா கூப்பிட்டீங்க?’’ என்றது.
``தம்பி, நாம் மலை உச்சிக்குப் போய் வானவில்லைத் தூக்கிவந்து, நமது வனத்துக்கு வாசல் வளைவாக வைப்போம். வனம் மேலும் அழகாகும்'' என்றது பெரிய யானை.
``நல்ல யோசனை அண்ணா. இப்பவே போகலாம்’’ என்றதும், இரண்டும் மலைமீது ஏறத்தொடங்கின. மேலே செல்லச் செல்ல, வானவில்லின் அழகு கம்பீரம் கூடிக்கொண்டே செல்வதைப் பார்த்து வியந்தன. அந்த வியப்பில் மேலே ஏறிய களைப்பே தெரியவில்லை.
கொஞ்ச நேரத்தில் வானவில்லை நெருங்கிவிட்டன. தங்கள் தும்பிக்கையால் பிடித்து இழுத்து, முதுகுகளில் தாங்கிக்கொண்டன. இரண்டு யானைகளுக்கும் அவ்வளவு ஊற்சாகம். பாட்டுப் பாடியவாறு தூக்கிவந்து, வனத்தின் நுழைவுவாயில் வளைவாக வைத்தன. அடுத்தடுத்த வனங்களிலிருந்த விலங்குகளும் வேடிக்கை பார்க்கக் கூடி, தமக்குள் பேசிக்கொண்டன. மற்ற வனங்களின் விலங்குகள், ``இது நம் வனத்தில் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா'' என்று பேசிக்கொண்டன.
அடுத்த வனத்தின் புலி ஒன்று வந்து, ``யானை அண்ணா! இயற்கையான வானவில் அனைவருக்கும் சொந்தமானது. இங்குள்ள மற்ற வனங்களுக்கும் நுழைவாசல் வளைவாக இது இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நாள் ஒரு வனம் என வைத்துக்கொள்வோம்’’ என்றது.
கரடி ஒன்று வந்தது. ``இல்லை... இல்லை... ஒரு வனத்துக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்துக்கொள்வோம்’’ என்றது.
``அப்படிச் செய்தால் அழகு குறைந்துவிடுமே’’ என்றது மான்.
``அப்புறம் என்னதான் செய்வது?’’ என்றது மிளா.
``இதைப் பல பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு துண்டிலும் ஏழு வண்ணங்கள் வருமாறு எடுத்து, ஒவ்வொரு வனத்திலும் தொங்க விடலாம்’’என்றது நரி.
``மனிதர்கள் உடைப்பதற்கும் அறுப்பதற்கும் கத்தி, ஈட்டி, வாள், அரிவாள், வில் அம்பு, சுத்தியல் என்று வைத்திருப்பார்கள். அப்படி நம்மிடம் என்ன இருக்கு?’’ எனக் கேட்டது கழுகு.
உதட்டில் விரல்வைத்து யோசித்த புலி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்தது.
``நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்ற குரல் மேலிருந்து வர, அனைத்து விலங்குகளும் தலையைத் தூக்கிப் பார்த்தன. மரக்கிளையில் தொங்கியவாறு குரங்கு ஒன்று கீழே குதித்தது.
``நண்பர்களே... வானவில்லை உடைக்கவோ, சிதைக்கவோ, பிரிக்கவோ இயலாது. இது இயற்கையின் கொடை. மனிதர்கள், இயற்கையைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றுகிறார்கள். அழகுக்காக, பொழுதுபோக்குக்காக, மன நிம்மதிக்காக என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். அதே தவற்றை நாமும் செய்யலாமா? எந்த ஒன்றும் அதனதன் இடத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு. அதோடு, அப்படி இருப்பதுதான் இயற்கையின் சமநிலையையும் கட்டுக்குலையாமல் வைத்திருக்கும்'' என்றது.
``யாரடா இவன்? பெரிய ஞானி மாதிரி உபதேசிக்க வந்துவிட்டான்'' என்றபடி குரங்கை அடிக்கப் பாய்ந்தது சிறுத்தை.
சட்டென தடுத்த யானை, ``அவன் சொல்வது சரிதான். நான் இருக்கும் இந்தக் கானகத்தில் மனிதர்கள் நுழையும்போதும், மரங்களை வெட்டும்போதும் நாம் கோபப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் அல்லவா? அப்படித்தான் இதுவும். சொல்பவன் சிறியவன் என்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏதோ ஆர்வத்தில் வானவில்லைக்கொண்டுவந்தது நாங்கள் செய்த தவறுதான். மீண்டும் வானிலேயே வைத்துவிடுகிறோம்’’ என்றது பெரிய யானை.
பெரிய யானை சொன்னதை மற்ற விலங்குகளும் ஆமோதித்தன. ``நாங்களும் வருகிறோம். எல்லோருமாக வானவில்லை வழியனுப்பி வைப்போம்'' என்றன.
அனைத்து விலங்குகளும் வானவில்லைத் தூக்கி யானைகளின் முதுகில் வைத்தன. ஆட்டம் பாட்டத்துடன் மலை உச்சிக்குச் சென்று வானில் வீச, மேகங்களுக்கு மத்தியில் மிதந்தவாறு சென்ற வானவில், இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தது. மேகங்களும் மகிழ்ச்சியாகி மழையைப் பொழிந்தன. சூரியனும் மகிழ்ச்சியாகி இதமாக வெளிச்சம் பரப்பியது.
அந்த மழைச்சாரலிலும் இதமான சூரிய வெளிச்சத்திலும் வானவில் இன்னும் இன்னும் அழகுடன் ஜொலித்தது.
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

தினத்தந்தி இளைஞர் மலர் 17.11.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


அழகன் முருகன் பாடல், அருமை.

Wednesday 28 November 2018

தந்தை பெரியார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


நெற்குப்பை பழ. இராமநாதன் மகள் தேனம்மை- காரைக்குடி எஸ். எல். என். நாராயணன் செட்டியார் சகோதரர் வள்ளியப்பன் மகன் வெங்கடாஜலம் திருமண விழாவில் மனிதத்தேனீ

இன்று காலை நெற்குப்பையில் நடைபெற்ற மதுரை பசுமலை தி இந்தியன் 3 சி ஸ்கூல் தாளாளர் நெற்குப்பை பழ. இராமநாதன் மகள் தேனம்மை- காரைக்குடி எஸ். எல். என். நாராயணன் செட்டியார் சகோதரர் வள்ளியப்பன் மகன் வெங்கடாஜலம் திருமண விழாவில் மனிதத்தேனீ, ஆச்சி வந்தாச்சு பழனியப்பன், வி. டி. கண்ணன், தியாகராஜர் மில்ஸ் செயல் இயக்குநர் கருமுத்து க. தியாகராஜன், மற்றும் நா. இராமநாதன், பழ. கண்ணன் உள்ளனர். வாழிய மணமக்கள்.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிந்தனைக்கு*
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது
அவன் உடனே கடற்கரையில்,
*“இந்தக் கடல் மாபெரும் திருடன்...!”* என எழுதிவிட்டான்
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார்
அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின
அவர் அக்கடற் கரையில்,
*“இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!”*
என எழுதிவிட்டார்
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான்
மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய்
*இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!”*
என கரையில் எழுதினாள்
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று
முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார்
அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில்,
*“இந்தக் கடல் ஒன்றே போதும் நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!”* என எழுதினார்
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது
*பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே*
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால்
நீ *பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு*
தவறுக்காக *உன்* *நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே*
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால்
அதை விடவும் பலமாக அதற்கு *பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே*
சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு .......💪
வாழ்வில் *நமது தேவை குறித்த தெளிவான தேர்வும்,*
*அதை நோக்கிய* *நேர்மையான தேடலும்* இருந்துவிட்டால்,
*வெற்றி கூடிவரும்.. அமைதி தேடிவரும்..*
*நல்விடியல் வந்தனம்*

600 கோடி செலவில் தமிழில் சினிமா இது வளர்ச்சியா சிந்திக்க வேண்டும். -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


வரும் 03-12-2018 மாலை ஆத்தன்குடி விழாவில் சிறப்புரை. - மனிதத்தேனீ


Tuesday 27 November 2018

கக்கன்ஜி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மாலைமுரசு 27.11.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தர்மபுரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மா. பூவிழி பாடிய உணர்ச்சியும் உத்வேகமும் நிறைந்த பாடல்,பாராட்டுக்கள் - மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனசு போல வாழ்க்கை - 05
மனித வள வழிகாட்டி டாக்டர் கார்த்திகேயன்....
எதை நினைத்தோமோ அதுவே நடந்தது
நன்றி - டாக்டர். ஆர். கார்த்திகேயன்
“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் Self Fulfilling Prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.
“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன் தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன் கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”
நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப் படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது. எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.
.
நடக்காது என்பார் நடந்துவிடும்
“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.
‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில் அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள் சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.
இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன் மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின் கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.
.
ஊத்திக்கொள்பவர்கள்
தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில் இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.
அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.
.
பட்டியலிடுங்கள்
நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம் ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால் உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள் எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள் எண்ணங்களைச் சொல்லுவார்கள்.
உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.
.
வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா?
வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?
முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.
.
ஒரு நாளில் 35 ஆயிரம்
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’ என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம் எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.
.
ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?
சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும் வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும் யோசிக்கிறோமாம்!
ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!
.
தொடர்புக்கு:
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
ஆசிரியர் உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர்.
gemba.karthikeyan@gmail.com
.
நன்றி - தி இந்து
.
முந்தைய பதிவை வாசிக்க
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
https://www.facebook.com/groups/811220052306876/
.
தெரியாது என்று சொல்வதற்கும் கிடையாது என்று சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.
# தெரியாது என்றால் எனக்கு தெரியவில்லை என்று அர்த்தம்.
# கிடையாது என்றால் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்த நானே கூறுகிறேன் அப்படி ஒன்றும் கிடையாது என்று அர்த்தம்.
எனவே நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
.
‘கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’
.
"யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்.
சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்."
.
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"
.
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் என்ன பேசினால் என்ன...
யாரும் கூறுவதை எல்லாம் அப்படியே காதில் வாங்கி கொள்வது நல்லதல்ல அது புழ்ச்சியோ... கெடுதலோ..வேறு விமர்சனங்களோ.. எதவாகினும்...இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
நமது உறவுகளும் சுற்றமும்.. நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நாம் பிறரின் தவறுகளை நம் மனதிலிருந்து அப்போதைக்கப்போதே அழித்துவிடத்தான் வேண்டும்....
தவறுக்காக நம் உறவுகளையோ சுற்றங்களையோ நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடவேண்டாமே.
நாம் ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணவேண்டாமே.சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாள்வது நலம்..என்றும் நன்மை தரும்..
விமர்சனங்கள் பலவகையானது... நம்மிடம் ஒருவேளை உணவருந்தியவன் ஒருவிதமாக நம்மைபற்றி கூறிவிட்டுபோனால்.. நம்மிடம் எதையோ எதிர்பார்த்து வந்து கிடைக்காமல் ஏமாற்றமடைந்தவன் வேறுவிதமாக கூறுவான்..
நம் அருகிலிருப்பவன் ஒருவாறு கூறினால்... இரண்டு தெரு தள்ளி இருப்பவன் வேறுமாதிரி கூறுவான்...
ஒரு புதிய உறவை தேடிபோகுபவர்கள்கூட.. நான்கு பேரிடம் விசாரித்தாலும்... தானே ஒரு மதிப்பீடும் செய்தபின்னரே முடிவெடுக்கின்றனர்...
பலவிதமான விஷயங்கள் விமர்சனங்கள் நம்மைபற்றி நம் காதில் வந்து விழும்போதெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளானால் வாழ்வில் நிம்மதி எட்டாகனவாகிவிடும்....
யார் என்ன பேசினால் என்ன... நாம் போகும் பாதையில் கவனமோடு.. அடிவைத்து முன்னேறிகொண்டே இருப்போம்..
அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்..
செல்வி அருள்மொழி...மனநல ஆலோசகர்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தினத்தந்தி இளைஞர் மலர் 17.11.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


Monday 26 November 2018

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மதுரைமணி 25.11.2018 பக்கம் 4


மக்கள்குரல் 25.11.2018 பக்கம் 7



அருமையான நேர்காணல், பெற்றோரையும் முன்னோர்களையும், செம்மொழித் தமிழையும், நம் தேசத்தின் மேன்மையைப் பதிவு செய்துள்ளார் திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட அனுகீர்த்தி, பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ

நாளிதழ்களின் நம்பிக்கையை நடவு செய்த நற்பண்பாளர் ஐராவதம் மகாதேவன் இறைவன் திருவடி அடைந்தார்.... நேர்மை, துணிவு, மேன்மை, பயனுள்ள செய்தி வழங்கிய பாங்கு. வாழிய அவர் நினைவுகள் - மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முயற்சியும்,பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயமே!
வெறும்,முயற்சி பயிற்சி இருந்தால் போதாது.திட்டமிடுதலும்,கடுமையான உழைப்பும் அவசியம்.இவையனைத்தும் இருந்தாலும் கூட தோல்வி நேரலாம்.
இந்த தோல்வி எதனால் ஏற்பட்டது என மறுபரிசீலனை செய்து,அதாவது தோல்வியில் இருந்து பாடம் பயின்றால் வெற்றி அடையலாம்.
சிந்தனைக் கவிஞர்
கவிதாசன் அவர்கள் வெற்றிக்கு தாரக மந்திரம் முயற்சி என்றாலும்,முயற்சியை முன்னிருத்தி கடுமையாக உழைக்க வேண்டும்.
உழைப்பின் வெளிப்பாடு வியர்வையில் தொடங்கும்.
வெற்றி என்னும் வாசலை திறக்கும்
சாவியாக உழைப்பைச் சொல்கிறார்.
ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால்
திட்டமிடுதலை சரியாக செய்ய வேண்டும் எனக் கூறும் கவிஞர்,அதனை,
திட்டமிட்டு தோற்பதில்லை....
திட்டமிடுவதில்
தோற்கிறாய்..!
திட்டமிடுவதில் தோற்பதென்பது
தோற்றுப் போகத்
திட்டமிடுவது!
என முறையான திட்டமிடலுக்கு வழி கூறுகின்றார்.
நொடிகள் தோறும் படிகள் ஏறத் திட்டமிடு..!
தினம் தினம் திட்டமிடு!
கனவுப் பறவையின் இலட்சிய முட்டையிலிருந்து வெற்றிக் குஞ்சுகளை வெளியில் எடுக்கத் திட்டமிடு...!
என்று வழியும் காட்டுகின்றார்.
திட்டமிடுதலில் இருந்து தோற்றாலும்,அதில் இருந்து பாடம் கற்று,மீண்டும் எழுந்து வெற்றி பெறவேண்டும்
என்பதை நம் கவிஞர் கூறும் போது,
விழாமல் இருப்பதல்ல வெற்றி,
ஓவ்வொருமுறையும் வீழும் போதும்
வீறுகொண்டு எழுவதே வெற்றி என. மறுவெற்றிக்கு
ஊக்கம் அளிக்கின்றார்.
ஆம்!கடும் உழைப்பு,திட்டமிடுதல்,தோல்வியில் இருந்து பாடம் என சிந்தனைக் கவிஞரின் காந்த வரிகளை மனதில் இருத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.வாழ்த்தும்.டாக்டர் கோவை கிருஷ்ணா.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தமிழர்கள் தமிழில் பேச எழுத இயலவில்லை என்றால் பெரும் குற்றம், ஆனால் அதற்காக இப்படியா விவாத நாடகம் நடத்துவது, இது விஜய் டிவி நீண்ட காலமாக செய்து வரும் தொலைநோக்குச் சதி.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே!!!என்ற தகவலை படித்த போது வேதனை அடைந்தேன்... கடற்கரைபகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் 30 கோடி மரங்கள் இருந்தது...இன்று நான்கு கோடி மட்டுமே..
கஜா புயலால் 7 மாவட்டங்கள் அடியோடு சிதைந்து கிடக்கிறது. காற்றின் வேகத்துக்கு இவ்வளவு பலமா என எண்ணி பார்க்கும் போது அதையும் முன்னோர்கள் சமாளித்த விதம் வியப்பை தருகிறது. ஆழிப் பேரலையை சமாளிக்கு திறன் பனைமரத்துக்கு உண்டு என்பதை அறிந்த முன்னோர்கள் கடலோர மாவட்டங்களில் ‘பனைக்கு பத்தடி’ என்ற முறையில் வளர்த்துள்ளனர். கோடிக்கணக்கான பனை மரங்கள் அணிவகுத்து நின்ற தமிழக கடற்கரையோரங்களில் இன்று தேடி பார்த்தாலும் ஒரு பனை மரத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு வெட்டி அழித்துவிட்டனர். அதன் பாதிப்பு தான் இன்று புயல் போன்ற இயற்கை சீற்றங்களை சமாளிக்க முடியாமல் கடலோர மாவட்டங்கள் தவிக்கும் நிலை உள்ளது.
பனை மரங்கள் அழிவுக்கான காரணங்களை பார்க்கும் போது அதிர்ச்சி தருவதாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. கள் விற்பனை சூடு பிடித்தால் மது விற்பனை குறைந்து விடும் என கருதி தமிழக அரசும் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வேதனைக்குரிய ஒன்று.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கள் எடுக்க தடை சட்டம் கொண்டு வந்து மக்களை டாஸ்மாக்இல் தள்ளி காசு பார்க்கிறது..
சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானோ புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை.
மற்ற மரங்களை எல்லாம் சுருட்டி வீசியிருக்கிறது. ஆனால் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் பனை மரம் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட பனை மரத்தின் அருமை பெருமைகள் தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள்.
திட்டம்போட்டு மக்களை ஏமாற்றும் கட்சிகளை இனம் காண்போம்...
பனைமரத்தை காப்போம்
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

எங்கள் திருநகரின் மூத்தவர், நற்பண்பாளர், தியாகராஜர் பொறியியற் கல்லூரி மேனாள் சிவில் துறை பேராசிரியர், பேராற்றலும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கே. வி சாரி உடல் நலக்குறைவால் 85 வயதில் இறைவன் திருவடி அடைந்தார். அவர்களது இறுதிச் சடங்கு இன்று காலை 12 மணிக்கு திருநகர் இல்லத்தில் நடைபெறுகிறது. - மனிதத்தேனீ


பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற பிள்ளைகள் பேரணி, அருமை....

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*இன்றைய சிந்தனைக்கு:*
*விஷம்:* நம் தேவைக்கு மேல் அதிகமாக இருக்கும் அனைத்துமே விஷம் தான். அது அதிகாரமாக, சொத்தாக, பேராசையாக, ஓய்வாக, அன்பாக, குறிக்கோளாக, வெறுப்பாக அல்லது எதுவாக இருந்தாலும் அளவோடு இருந்தால் விஷம் இல்லை.
*பயம்:* நிச்சயமில்லாதவற்றை ஏற்றுக் கொள்ளாத நிலையில் பயம் ஏற்படுகிறது. ஏற்றுக்கொள்ளும் போது சாதனையாக கருதப்படுகிறது.
*பொறாமை:* மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், பொறாமை ஏற்படுகிறது. ஏற்றுக் கொள்ளும் நிலையில் உத்வேகம் தோன்றுகிறது.
*கோபம்:* நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளும் போது பிறப்பது கோபம், ஏற்றுக் கொள்ளும் போது சகிப்புத் தன்மை தோன்றுகிறது.
*வெறுப்பு:* ஒரு மனிதனை அவனிருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்ளும் போது வெறுப்பு ஏற்படுகிறது. எந்த விதக் கட்டாயங்களும் இல்லாமல், அம்மனிதனை ஏற்றுக் கொள்ளும் போது நேசம் ஏற்படுகிறது.
*சிந்தித்து செயலாற்றுங்கள்!!!!!*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தினத்தந்தி இளைஞர் மலர் 10.11.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் அசத்திய மேரிகோம்.

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் அசத்திய மேரிகோம்...
பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், உக்ரைனின் ஹன்னா ஒஹோடாவை மூன்றாவது சுற்று முடிவில் 5.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் ஆறாவது தங்கத்தை (2002,05,06,08,10,18)பெற்று,அதிக தங்கம் வென்ற வீரங்கனை என உலக சாதனை படைத்தார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

எம். எஸ். ஜி. இளங்கோவன் - லதா தம்பதியரின் மகள் ஜெய ஸ்ரீ - மதுரை ஆர். பழனிக்குமார் - சசிப்பிரியா தம்பதியரின் மகன் சந்திரவேல் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ,

மதுரையில் புகழ்பெற்ற வணிக நிறுவனமான எம். எஸ். குருசாமி ஸ்டோர் குடும்பத்தின் நண்பா், கோவில் மாநகா் ஜேஸிஸ் முன்னாள் தலைவர் எம். எஸ். ஜி. இளங்கோவன் - லதா தம்பதியரின் மகள் ஜெய ஸ்ரீ - மதுரை ஆர். பழனிக்குமார் - சசிப்பிரியா தம்பதியரின் மகன் சந்திரவேல் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, பேராசிரியர் ஆர். ராஜா கோவிந்தசாமி, சுங்கிடி ரமேஷ் உள்ளனா். வாழிய மணமக்கள்.



Saturday 24 November 2018

மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களுக்கான பயிலரங்கில் பேச்சுக் கலை பயிற்சி







திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் மீனாட்சி திரு மைந்தா் என்று பாராட்டுப் பெற்ற அண்ணன் வி. என். சிதம்பரம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவைப் போற்றிடும் நாள். வாழிய அவர் புகழ். - மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கஜா புயல் நிவாரண நிதிக்கு சிங்கம்புணரியில் ஒரு பிச்சைக்காரர் தன் தட்டில் இருந்த முழு பணத்தையும் வழங்கியுள்ளார். வாழிய கொடையுள்ளம்.
வெறும் வார்த்தை விளையாட்டை தவிர்த்து முடிந்ததை கொடுத்து துணை நிற்பதே பேரழகு, பேருதவி.
- மனிதத்தேனீ

மாடுகளின் மந்திரச் சொல்...

மாடுகளின் மந்திரச் சொல்...
சக்கரம் கழண்டுவிட்டது...வண்டியும் உடைந்துவிட்டது..எங்களை இயக்குபவனும் கீழே விழுந்துவிட்டான்...ஊக்குவிக்க சாட்டையும் இல்லை...நுகத்தடியும் கழண்டு எங்களை பிரித்துவிட்டது..
By
ஆனாலும் ஜெயித்தே ஆகவேண்டும் எங்களை வளர்த்தவனுக்காக!...👇👇👇👇👇

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மனவுறுதி*
ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார்.
துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார்.
இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.
தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.
‘அருமை’ என்று பாராட்டிய துறவி, ‘என்னுடன் ஒரு இடத்துக்கு வா.
அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா என்று பார்ப்போம்’ என்றார்.
அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.
ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளினிடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.
தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.
அடித்து விட்டு,
‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.
இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.
அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.
—————————————————————————————————
மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.
~ பாரதியார் ~

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி





மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் புத்தாக்கப் பயிலரங்கம்