Monday 11 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உச்சம் தொட்ட நிவாரணப் பணிகள்....
தேவகோட்டை கு. கரு. வெ. ராம. அண்ணாமலை செட்டியார் - ஆனந்தவல்லி ஆச்சி தம்பதியர் வழங்கிய ஆறாயிரம் செட் (6000 பேருக்கு )நிவாரணப் பொருட்கள்.
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் வசம் இதனை இந்தத் தம்பதியர் வழங்கி, நமது 76 ஊர்களில் உள்ள பயனாளிகளுக்கு கிடைத்திட அறிவுறுத்தினர்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் உள்ள மக்களை ஆறுதல்படுத்தும் இந்த மகத்தான வேள்வியை நேற்று காரைக்குடியில் பொதுக் குழுவினர் மற்றும் சமூக அக்கறையுள்ள பலர், காரைக்குடி இளைஞர் சங்கத்தின் துடிப்பான உறுப்பினர்கள் பங்களிப்புடன் நேர்த்தியாக, அரிசி உள்ளிட்ட 14 அத்தியாவசிய பொருட்களை ஒன்று சேர்த்து உரிய பைகளில் நிரப்பி, ஊர் வாரியாக எடுத்து வைத்திடும் பணியைச் செய்து முடித்து, இன்று அதிகாலை முதல் பயனாளிகளுக்கு 76 ஊர்களுக்கு நேரில் சென்று வழங்கினர்.
தலா ரூ 800 மதிப்பிலான இந்தப் பொருட்கள் ஒவ்வொரு ஊரிலுள்ள பயனாளிகளுக்கும், அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள், மயான ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 48 நாட்களாக நிலவும் சிரமங்களை ஆறுதல்படுத்தும் இந்தப் பேருதவி, நமது வடக்குக் கோபுரத்தைக் கட்டி எழுப்பிய வயிநாகரம் குடும்பத்தினர் பணியை நினைவுபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
வாழிய தேவகோட்டை கு. கரு. வெ. ராம. அண்ணாமலை செட்டியார் - ஆனந்தவல்லி ஆச்சி குடும்பத்தினர்.
வாழிய காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகத்தின் நேர்த்தியான பணி.
தொடரட்டும் அறப் பணிகள், நலம் பெற்று மீண்டும் மேன்மையுறட்டும் மக்கள்.
நகரத்தார் குலம் வாழியவே.
வணங்கி மகிழும் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment