Friday 11 December 2020

ஆர்வம் என்னும் உந்து சக்தி

 ஆர்வம் என்னும் உந்து சக்தி.

உலகில் எவராலும் செய்ய முடியாது என்று கைவிட்ட செயல்களை சிலர் நிறைவேற்றி காட்டியது, அவர்கள் அந்த செயலின் மீது உள்ள தனியாத ''ஆர்வம்''தான்...
எடுத்த செயலில் ஒருவனிடம் ''ஆர்வம்'' இருந்து விட்டால், ஒவ்வொரு நாளும் அவனது குறிக்கோளை நெருங்கிக் கொண்டிருப்பான் என்பது திண்ணம்...
வாழ்வின் வெற்றி என்பது, ஒருவரின் செயலில் காட்டும் முயற்சி மட்டும் போதாது. அதன் மீது மிகுந்த ஆர்வத்தை பொறுத்தது...
பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி ஒரு நாவல் ஆசிரியரும்கூட. அவர் அறுபத்தேழு நாவல்களை எழுதியுள்ளார்.
ஒருமுறை செய்தியாளர்கள் அவரிடம், எழுத்தில் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி ஏற்பட்டது? என்று வினவினார்கள்.
அதற்கு அவர் கூறியதாவது... '’எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. படிப்பதற்கு புத்தகம் ஏதும் கிடைக்காவிட்டால் அதற்க்காவே நானே நாவல் எழுதிப் படிக்க ஆரம்பித்து விடுவேன். அப்படியே எழுதி எழுதி எழுத்தாளராகி விட்டேன் என்றார் பெஞ்சமின் டிஸ்ரெலி...
குருதியில் உறுதியும், நெருப்பும் கொண்டு, சிந்தனை வேகமும் ஆர்வமுள்ள மனிதர்கள்தான் உலக ஓட்டத்திற்கு காரணமாக இருக்கின்றார்கள்...
அரை மனமுள்ளவர்கள், குறிக்கோள் அற்றவர்கள், வாழ்க்கையென்னும் கடலிலே அடித்து செல்லப்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்...
□ ஆம் நண்பர்களே.....
புவி அச்சிலிருந்து வெளியேறி வளிமண்டலம் செல்ல ஒரு ஏவூர்திக்கு அதிக 'உந்துசக்தி' தேவைப்படுகிறது, அதிக 'உந்துசக்தி' இருந்தால் மட்டுமே ஏவூர்தி தனது இலக்கை அடைய முடியும்...! (ஏவூர்தி- ராக்கெட்)
அதுபோலத்தான்!, ஒரு செயலை தொடங்குகையில் நம் மனதிற்கு அபாரமான உந்துசக்தி தேவைப் படுகிறது , அது இல்லாமல்தான், நம்மில் பலரும் முதல் நிலையிலேயே இருந்து விடுகிறோம்...!
அந்த ஆரம்ப உந்துசக்தி கிடைத்து, ஒரு செயலை நாம் தொடங்கிவிட்டால், எதிரே என்ன தடை வந்தாலும் நொறுக்குவதற்கு நம்மால் முடியும். எந்த செயலிலும் ஆர்வம் என்னும் உந்துசக்தி இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்...
நன்றி கோனாபட்டு சுப்பு
Krishna Raman

No comments:

Post a Comment