Thursday 21 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1894 மே 20
*🌹காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியாக இருந்த, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், பிறந்த தினம் இன்று *🌹
விழுப்புரத்தில், 1894, மே 20 ல், சுப்ரமணிய சாஸ்திரிகள் - மகாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். தன், 13வது வயதில், காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.
பின், 1919 முதல், 1940 வரை, 21 ஆண்டுகள், நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு புனிதத் தலங்களை தரிசித்து, பக்தர்களுக்கும் அருளாசி வழங்கினார்.
பழமையான கோவில்களை புனரமைக்கவும், வேதக் கல்வியை ஊக்குவிக்கவும், சுவாமிகள் செய்த தொண்டு அளப்பரியது.
தமிழ் மட்டுமின்றி, சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரான்ஸ் உள்ளிட்ட பல மொழிகளில், வல்லமை பெற்றிருந்தார்.
சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் உள்ள பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த சுவாமிகள், அதில் சொல்லப்பட்ட வாழ்க்கை தத்துவத்தை, பக்தர்களுக்கு போதித்து, அவர்களை நல்வழிப்படுத்தினார்.
மக்கள் மத்தியில், அவதார புருஷராக வாழ்ந்த, ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994, ஜனவரி 8ல், சித்தியடைந்தார். அவர் பிறந்த தினம் இன்று

No comments:

Post a Comment