Thursday 30 August 2018

மாண்புமிகு செல்லூர் கே.ராஜீ அவர்களது தாயார் இறைவன் திருவடி அடைந்தார்


வேந்தன்பட்டி எம்.எஸ்.பாலமுருகன் - மீனாட்சி இல்ல மணவிழா


தினபூமி மதுரை 30.08.2018 பக்கம் 9


தினத்தந்தி இளைஞர் மலர் 11.08.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


இன்று காலை வேந்தன்பட்டியில் சிறப்புரை.


மதுரையில் நடைபெற்ற முனைவர் கு. ஞானசம்பந்தன் - அமுதா தம்பதியரின் மகன் குரு.-மீனாட்சி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ,

இன்று இரவு மதுரையில் நடைபெற்ற முனைவர் கு. ஞானசம்பந்தன் - அமுதா தம்பதியரின் மகன் குரு.-மீனாட்சி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, சொ. அலமேலு, சொ. ராம்குமார், அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன் தம்பதியர், ஆர்.பி. உதயகுமார் மற்றும் தமிழ்க் கடல் அண்ணன் நெல்லைக் கண்ணன், கருமுத்து தி. தியாகராஜன், மரபின் மைந்தன் முத்தையா, முனைவர் த. ரவிச்சந்திரன், சுகா, மின்னல் பிரியன் தம்பதியர், பேராசிரியர் ஆர் ராஜா கோவிந்தசாமி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை பாண்டியராஜன், எம். ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள், காமடி பாய்ஸ் நண்பர்கள் உள்ளனர். நெகிழ்வான தருணம்.








மதுரை காவல்துறை ஆணையரின் புதிய முயற்சிக்குப் பாராட்டுக்கள். கால் செய்தால் வீடு தேடி வரும் என்ற அறிவிப்பு.




Wednesday 29 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வங்கியில், இரண்டொரு மாதம் முன்பு - ஒருநாள் அவரை கவனித்தேன்.
வெள்ளை வேட்டி. வெள்ளை - தொள தொள - சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் ச்செலான். கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன்.
அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் ச்செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ் புக்கை சரிபார்த்தபடியே, ஒவ்வொரு எண்ணாய்ப் பொறுமையாய் அக்கவுண்ட் நம்பரை எழுதினார்.
எழுதிக் கொண்டே என் பக்கம் திரும்பி சிரித்தார்.
“எழுதணும்களாய்யா?” என்றவனை ‘வேண்டாம் தம்பி” என்று சிரித்து மறுத்தார்.
தொகை எழுதும் Column வந்ததும், உள் பையிலிருந்து எதையோ எடுத்தார்.
சாணிப் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு நான்காய் மடித்து வைத்திருந்த அது - வாய்ப்பாடு.
”மொதல்லல்லாம் யார்ட்டயாச்சும் எழுதித்தரச் சொல்லிக் கேட்கறதுண்டு தம்பி. ஒருநாள் என் பையண்ட்ட சொன்னப்ப, படிச்சிருக்கலாம்லப்பா?ன்னு கேட்டுட்டான். சங்கடமாப் போச்சு. படிக்காட்டிதான் என்ன.. நாம நெனைச்சா எழுத முடியாதான்னு இப்ப, நானே எல்லாம் எழுதிக்கிடறது. ஆனா இந்த நம்பருங்க மட்டும்தான் மனசுக்குள்ள நிக்க மாட்டீங்குது. அதான் வாய்ப்பாடு புக்கை வெச்சுக்க ஆரம்பிச்சேன்” என்றார்.
அவரை நினைத்துப் பெருமையாக இருந்தது.
அதன்பிறகு பலமுறை அவரை காண்பதும், புன்னகையைப் பரிமாறிக் கொள்வதுமாய்க் கழிந்தது. ஒருமுறை திண்டுக்கல்லில் ஓர் இடத்தைச் சொல்லி, “அங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்குல்ல.. அங்கதான் இருப்பேன்” என்றிருந்தார்.
இரண்டுநாள் முன், பைக் பெட்ரோலுக்காக அருகே இருந்த பெட்ரோல் பங்கில் செலுத்தினேன்.
பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்தபோதுதான் அங்கே அந்தப் பெரியவரைப் பார்த்தேன். காற்றுப் பிடிக்கும் இடத்தருகில் தரையில் அமர்ந்து எஞ்ஜின் போன்ற எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்.
நிமிர்கையில் அவரும் என்னைப் பார்த்திருந்தார். சிரித்தபடி அருகே வந்து, “வாங்க வாங்க தம்பி..” என்றபடியே அருகே வர நான் பைக்கை விட்டிறங்கியபடி அவரிடம் நெருங்கினேன்.
“பைக்கை அப்டி ஓரமா நிறுத்துங்க..” என்றவர் அலுவலக அறைக்கு நடந்தார்.
“இல்லீங்கய்யா.. நான் கெளம்பறேன். நீங்க வேலையைப் பாருங்க” எனும்போது “அட வாங்க தம்பி” என்று கையைப் பிடித்து அழைத்துப் போனார்.
அலுவலக அறையில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்க போய் அறிமுகப்படுத்தினார். “பேங்க்ல அடிக்கடி பார்ப்பேன்ம்பேனே? இவருதான். இந்தத் தம்பிகிட்ட மட்டும்தான் பேசுவேன் அப்பப்ப” என்று சொல்லிவிட்டு,
“டீயா காப்பியா” என்று கேட்டார்.
“இல்லீங்கய்யா” என்றவனை “அட சும்மா இருங்க” என்றுவிட்டு அலுவலக இளைஞரிடம் ‘ஒரு 20 ரூவா குடுப்பா.. டீ வாங்கிட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு போனார்.
என்ன பேசுவது என்று புரியாமல், “பெரியவர் ரொம்ப கவனம்க. பேங்க் வர்றப்ப பார்த்திருக்கேன். அவரு பையன் ஏதோ பேசிட்டான்னு அவரே எல்லாத்தையும் எழுதிக்கிறார். நீங்க வேற யாரையாச்சும்கூட அனுப்பலாமே சார்? பாவம் வயசான காலத்துல....”
“இல்லீங்க.. அவருக்கு சில வேலையை அவரே செஞ்சாத்தான் பிடிக்கும்.. அப்டியே வளர்ந்துட்டார்” என்றார் இளைஞர்.
“அதுசரிதான்க. நீங்க ஓனர். நீங்க சொன்னா கேட்க மாட்டாரா என்ன?”
ஒரு 30 வினாடி சிரித்தவர் சொன்னார்: “நீங்க வேறங்க. அவருதாங்க ஓனர். இந்த பங்க், அதோ அந்த காம்ப்ளக்ஸ்லாம் அவருதுதான். அவர் பையன்தான் நான். எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், எனக்கே சம்பளம்தான்னுட்டார்”
விக்கித்துப் போய் வெளியே பார்த்தேன். அந்தப் பெரியவர் டீ பார்சலோடு நடந்து வந்துகொண்டிருந்தார்.
#நெத்தியடி..
1. என்ன ஒரு அருமையான மேனேஜ்மெண்ட்.?!!
2. என்ன ஒரு உழைப்பு..?!!!
3. சிம்பிளிசிட்டி..!!!!
4. வாழ்க்கையில் எதார்த்தம்..!!!
நாம் கற்றுக்கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள். நாம் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும்.

என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

.............................................
'விளையாடுங்கள்... விளையாடுங்கள்..''..
.............................................
விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய செயலாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளம் ஆகவே, பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், விளையாட்டு என்பது மிகப் பெரிய உடற்பயிற்சி.அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’
விளையாட்டால் அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, உடல் மற்றும் மனநலன் பேணப்படுகிறது.
20, 25 வருடங்களுக்கு முன்னர், ஓய்வு நேரம் என்றால் வீட்டிலுள்ள பெரியவர்கள் சிறுவர், சிறுமியரை ‘வெளியே சென்று விளையாடுங்கள்’ என்று அனுப்புவது வழக்கமாக இருந்தது.
இன்றைய தலைமுறையினரிடம்,ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் விதம் மாறி விட்டது.
விளையாடுவதால் உடல் நலம் பேணப்படுவதோடு, அறிவாற்றல் வளர வழிவகுக்கும்;
கல்வித்திறன் அதிகரிக்கும் விளையாட்டு என்பது உடல் நலம் மட்டுமில்லாமல், மன நலமும் சார்ந்தது.
விளையாடுதல் காரணமாக, மாணவ, மாணவியரின் உள்வாங்கிக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
விளையாடிய பின்னர் படிக்கும் மாணவ, மாணவியர்
மூன்று மணி நேரத்தில் படிப்பதை அரை மணி நேரத்தில் படித்து விடுவார்கள். மன அழுத்தத்தைக் குறைத்து அமைதி தருவதால் எல்லோருக்கும் விளையாட்டு மிகவும் அவசியம்.
உலக சுகாதார மையம்(World Health Organisation) நடத்திய ஓர் ஆய்வின் முடிவில், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் உடல் நலக் குறைபாட்டால் பெற்றோருக்கு முன்னர் இறப்பார்கள் எனக் கண்டறியப்பட்டது அதிர்ச்சி தந்தது.
இதைத் தவிர்க்க, மருத்துவமனைகள் தேவையில்லை.
விளையாட்டு மைதானங்கள்தான் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது.
அதிலும், குறிப்பாக, உள்ளரங்கு விளையாட்டுத் திடல்கள்தான் அதிகளவில் தேவைப்படுகின்றன.
ஏனென்றால், நகரங்கள் மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இந்நிலை நீடித்தால் தற்போது உள்ள மருத்துவ மனைகள் கண்டிப்பாக போதாது. இந்த நோய்கள் எல்லாம் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள்.
இந்த ஆபத்தான அவல நிலையை நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியும்.
பள்ளிக்குச் செல்லுங்கள்: டியூஷனுக்குப் போங்கள்’ எனக் குழந்தைகளை அறிவுறுத்துவதுபோல்,மாலை நேரங்களில் விளையாட செல்லுங்கள்’ எனவும் சொல்லித் தர வேண்டும்.
இன்றைய தலைமுறையினர், ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் எனக் கருதுகின்றனர். இது கொஞ்ச நேரம்தான் நீடிக்கும். இந்த நிலை மாறா விட்டால், மருத்துவமனைகளில் நாமும் ஓர் அங்கமாக மாறி விடுவோம்.
நோய்கள் வராமல் தடுக்க உடல் ஆரோக்கியம் மிக அவசியம். இதை பின்பற்றாத இடத்தில் உலகப்போரில் உயிரிழந்தவர்களைவிட, அதிகமாக உயிரிழக்க நேரிடும்;
உடலுக்குத் தேவையான உழைப்பு; மனதுக்குத் தேவையான அமைதி என ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத எல்லா மருந்துகளும் நமது உடலில் உள்ளன.
ஆம்.,நண்பர்களே..,
விளையாட்டின் மூலம் குழு மனப்பான்மையும் வளரும்..
கால்பந்தோ,ஆக்கியோ,கைப்பந்தோ,இறகுப்பந்தோ நமக்குத் தெரிந்த, நமக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்!🌷🙏🏻
நன்றி வ உ சி வா சிதம்பரம்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"நேரம்"
நேரத்துக்கு நாம் கொடுக்கும் மதிப்புதான் உலகில் மிகவும் விலை உயர்ந்தது.
நேரம் - சரியாகக் கடைப்பிடித்தால் மனிதனை உச்சத்தில் வைத்து விடும்.
நேர மேலாண்மையை அவமதித்தவரை வாழ்க்கையில் அதல பாதாளத்தில் தள்ளி விடும்.
நேரம் அனைவருக்கும் பொதுவானதே...
அதனை அழகாகக் கடைப்பிடித்தால் போதும் உங்களை அது மகுடம் சூட்டி அழகு பார்க்கும்...
நேரத்தை நேர்த்தியாகக் கையாளுங்கள்.
வெற்றி உங்களுக்கே . நன்றி திரு. லெட்சுமணன்

மனிதத்தேனீயின் தேன்துளி


மாலைமுரசு 28.08.2018 பக்கம் 4


மதுரைமணி 28.08.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அடுத்தவர்கள் உடைய அந்தரங்கத்தைக் கூட அறிந்து வைத்திருக்கும் நாம், நம்மைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது என்னவோ வெறும் பூஜ்யம் தான்.
பிறர் குற்றத்தை ஒரு போதும் கவனிக்காதீர்கள். பிறர் நிறையையும் தனது குறையையும் கருதுபவனே மேன்மையுறுகிறான்.
நாணயமான மனிதர்கள் எப்போதும் நியாயமாகவே செயல் படுவர்! நியாயமாகவே சிந்திப்பர். நியாயமாகவே வாழ்வர். நியாய தேவதை அம்மனிதர்களைக் கை விட்டதில்லை.
உங்கள் மனசாட்சியே! உலகத்தைப் பார்க்கிற பெரிதும் உண்மையானதுமான நீதிபதி!
முயற்சி இருந்தால் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும்!
நாளைய காலம் நம்மோடு என்று போராடுபவனே வெற்றி பெறுவான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

சுற்றுச்சூழல், உடல்நலம் என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நெதர்லாந்து.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுதந்திரப் போராட்டக் காலம். கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.
நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.
உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..
"என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.
பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்டபோது அவர் சொன்னார்,
"உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டுவர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''
வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.
அந்த வழக்கறிஞர்:
சர்தார் வல்லபாய் பட்டேல்.
இப்படியான அருமையான மனிதர்கள்
வாழ்ந்து சென்ற பூமி: இந்தியா
நன்றி பெரிச்சியப்பன் அழகப்பன்

Tuesday 28 August 2018

தமிழ்ப்பணிச் செம்மல் கால்டுவெல் நினைவு தினம் 1891, வாழிய புகழ் -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💃 உற்சாகமே ஆரோக்கியம்
உற்சாகமாக இருப்பது ஒரு கலை
அது மிக சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும்
பாருங்களேன்....
பெரும்பாலும் உற்சாகமாக இருப்பவருக்கு அதிக கஷ்டங்கள் வருவதில்லை
வந்தாலும் அவ்வளவு பாதிப்பு இருப்பதில்லை
கடல்போல் வந்தாலும் பனிபோல் மறைந்து விடும்
அவர்களை சுற்றி எப்போதுமே கூட்டம் இருக்கும்
பிரச்சனைகளை அதிகம் கொண்ட நோய்கள்கூட அதிகம் தாக்குவதில்லை இத்தகையவர்களை
எப்பொழுதும் உற்சாகமாக வளைய வருபவர்களுக்கு உறவுகளும்.. சுற்றமும் அதிகரிக்கும் நாளுக்கு நாள்
இதிலிருந்து என்ன தெரிகின்றது
எல்லோரது மனமுமே
அந்த உற்சாகத்திற்கு ஏங்குகிறது
ஆசை கொள்கிறது
அந்த உற்சாகத்தை அனுபவிக்கின்றது
தான் இருக்கும் நிலையைவிட
அந்த உற்சாக நிலை தன்னை எளிதில் ஆட்கொள்கின்றது
இயற்கையாக அமைந்தால் தான் என்றில்லை
தனக்கு பிடித்தது போல் தன்னை மாற்றி கொள்ளலாமே
அதில் என்ன தடை இருக்கின்றது
இந்த மாதிரி விஷயங்களில் தயக்கமும்.. கூச்சமும்
நமது மிக வலுவான எதிரிகள்
அவர்களை கழுத்தை பிடித்து அப்புறப்படுத்தி விட வேண்டும்
ஒருவரை சந்திக்கும் போது
ஹாய் என்ற நமது உற்சாக குரலே
அந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் கலகலப்பாக்கவல்லது
அதே சூழ்நிலையை
அழு மூஞ்சியாக்குவதும் நமது கையிலேயே
நடவடிக்கையிலேயே தான் இருக்கின்றது அனைத்தும்
பலர் கூடியிருந்தாலும் மோசமான மந்த நிலை நிலவினாலும்
ஒரே ஒரு உற்சாகவாதி அங்கே தலைகாட்டினால் போதும்
எல்லா முகங்களும் ஆட்டோமேட்டிக்காக டியூப்லைட் போட்டுக் கொள்ளும்
புன்னகையும்.. உற்சாகமும்.. சிரிப்புகளும்.. கலகல பேச்சுகளும் தீபோல் பற்றிக் கொள்ளும்
இறுக்கம் மாறும்
வெண்கல கடையில் யானை புகுந்தது போல் மிக கலகலப்பாகும்
இரத்த ஓட்டம் சீராகும்
சுகர் லெவலை உடனே பார்த்தால் தெரியும் மாற்றமாகியிருக்கும்
மன உளைச்சலும்... அழுத்தமும் சீரடையும்...
சுவாசம் இழுத்து விடப் படும்
உற்சாகத்தோடு அடுத்த வேலையில் ஈடுபட தோன்றும்
நல்ல உறக்கம் இருக்கும்
மொத்தத்தில் இலவசமாக கிடைக்கும்
காஸ்ட்லியான ஒன்று இந்த உற்சாகம்
பல வகையிலும் பயனளிக்க கூடிய ஒரு சொத்து இந்த உற்சாகம்
இந்த சொத்தை மட்டும் சேர்த்து விட்டோமானால் போதும்
எந்த பிரச்சனையையும் எளிதாக கடந்து விடுவோம்
இலவசம் தான் நமக்கு பிடிக்காதே
அதுவும் நல்ல விஷயங்கள் ஆகவே ஆகாது
வறட்டு கௌரவம் உற்சாகமாக இருக்க விடாது
சிரிக்கவே காசு கேட்டால் என்ன செய்வது.......???
எப்போதும் இல்லாவிட்டாலும்
அவ்வப்போதாவது கொஞ்சம் உற்சாகமாக...... சந்தோஷமாக........
இருக்கலாமே
இதில் என்ன பிரச்சனை என்றால்,
நாமும் சிரிக்க மாட்டோம்
மற்றவன் சிரித்தாலும் பிடிக்காது என்றிருந்தால்
யாராலும் காப்பாற்ற முடியாது
ஆரோக்கியத்திற்கு அவசியமானது உற்சாகம்
வாழ்வதற்கு அவசியமானது ஆரோக்கியம்
உற்சாகம் வந்தால் சிரிப்பு சிதறும்
சிரித்துவிட்டால் உற்சாகம் உற்சவம் ஆகும்
அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டதே 💃
💃 உற்சாக உற்சவத்தில் : உள் முக பயணம் 💃

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


வரும் வியாழக்கிழமை சிறப்புரை.


Monday 27 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌓அதிகம் விட்டுக் கொடுத்துப் போறவங்ககிட்ட உங்க திமிரை காமிக்காதிங்க, முடிஞ்சா அவங்க ஏன் உங்களுக்காக விட்டுக் கொடுத்துப் போறாங்கன்னு யோசிங்க.
🌓சாதிக்க விருப்பமெனில் எதையுமே "தெரியாது" என பின் வாங்காமல் தெரிந்து கொள்ள தயங்காதே. "முடியாது"என முடங்கிடாமல் முயற்சிக்கத் தவறாதே.
🌓மனிதர்களின் திறமைக்கும் இயல்புக்கும் மீறிய செயலை செய்ய நிர்பந்திக்கப் படும் போது, கடுமையான மன அழுத்தத்தை எதிர் கொள்கிறார்கள்.
🌓தவறு ஒன்றும் செய்யாமலே அடுத்தவரின் சாபத்தை பெற்று கொள்வது எல்லாம் அவர்கள் நம்மை வாழ்த்துவதற்கு சமம்.
🌓யாரிடமும் அதிகம் பேசாமல் இருக்கும் தனிமை விரும்பிகள் பலரும் அன்பையும் உணர்வுகளையும் வெளிப் படுத்த தெரியாதவர்களே தவிர அவை இல்லாதவர்கள் அல்ல.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

கும்பகோணம் நகரத்தார் சங்கம் 33 ஆம் ஆண்டு விழா