Tuesday 24 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வெளிநாட்டு வாசி ஊருக்கு வரும்பொழுது*
"நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன்
ஏ வந்தீங்க, சரி ஆஸ்பத்திரிக்கு போயிருங்க, ஊரே நேத்து கூடி சொல்லிட்டு போச்சி, ஊருக்குள்ள வந்தா எங்களையும் விலக்கி வச்சுருவாங்க,, நீங்க ஆஸ்பத்திரிக்கு போங்க இன்னும் வெளிநாட்டுல இருக்குறதா நினைச்சிக்குறோம்
ஏ பாட்டி உன் பேத்திக்கு வாட்ச்..
கிறுக்கு பயலே , எதுக்கு வாட்ச பாத்துட்டே சாகவா? வீட்டு பக்கம் வந்தா கைய கால உடைச்சிருவேன்
அந்த தலைவலி தைலம்..
எனக்கு ஒரு குறை இல்ல கண்ணு... உன் பாசம் போதும் அப்படியே ஆஸ்பத்திரிக்கு போயிருப்பா
மாமா நல்லாயிருக்கீங்ளா?
இதுவரை நல்லாருந்தோம் நீ வந்து பார்காமல் இருந்தா இன்னும் நல்லாருப்போம்
சித்தப்பா
சித்தப்பா கிழிச்சாரு ஓடிரு...
அந்த சொத்து விவகாரம்?
அது அப்படியே கிடக்கட்டும், நீ இந்தபக்கம் வந்த கொன்னுருவேன் அப்புறம் எனக்கு மட்டும்தான் சொத்து
மாம்ஸ் பாட்டில்..
நீ அந்த மரத்தடில வச்சிட்டு போ, 14 நாள் கழிச்சி எடுக்கலாம் ஒரு பயலும் எடுக்கமாட்டான் மாப்ள
அண்ணே சிகரெட்
மண்வெட்டியால மண்டைய பொளந்திருவேன், நீ சம்பாதிச்சிட்ட இங்க உசுராவது மிஞ்சணுமில்ல‌
இல்லண்ணே உங்க தம்பிக்கு விசா
ஆள விடுசாமி, உங்க சகவாசமே வேண்டாம்..
ஒரு பையன் அமெர்ரிக்காவுல இருக்கான் உங்க மகளுக்கு
இருக்கட்டும், உன்கிட்ட நாயா கேட்டுச்சி... போய்யா
இன்னார் மவன் வந்துட்டான்
அந்த குடும்பத்த விலக்கி வைங்க,
கோயில்ல விடாதீக,
பால்காரன் காய்கறிகாரன்கிட்ட சொல்லுங்க.
ஊரை அழிக்க வந்துட்டான்...."
*அரசு உடனே செய்யவேண்டியது இனி வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு விமான நிலையம் அகதி முகாம் அமைப்பது, நிலமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பாடகன் அல்ல..பரம்பொருளுக்கு நிகரானவன்
இன்று குரலரசர் டி எம் செளந்தரராஜன் 98 ஆம் ஆண்டு பிறந்த நாள்...
அதிகாலை. பேருந்து நிலைய பக்கம் சென்றால், டீக்கடைகளில் ஊதுவத்தி மணக்கும். கடவுள் படங்களுக்கு பூமாலை தொங்கும்..
வெப்பமற்ற அந்த குளுமையான சூழலில், காதுகளில் மெதுவாக பாயும்…..உள்ளம் உருகுதய்யா முருகா உன் எழில் காண்கையிலே..என….. இன்னொரு கடையில் கற்பனை என்றாலும் சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன். என பாடும்.
அழகென்ற சொல்லுக்கு முருகா..
புல்லாங்குழல் கொடுத்த மூங்கல்களே என எல்லாக்கடைகளிலும் பெரும்பாலும் ஒலிப்பது டிஎம் சௌந்தர்ராஜன் பாடிய பக்திப்பாடல்களே..
கோவில்களில் அவர் பாடல்கள் ஒலிக்கும் என்பதை விட வியப்பான அம்சம், டிஎம்எஸ் பாடும் டீக்கடைகள் கூட தெய்வாம்சம் வாய்ந்த கோவில்களாக மாறிவிடும் என்பதுதான்..
எம்கேடி பாகதவர் பியுசின்னப்பாவும் கோலோச்சிய 1940கள் காலகட்டங்களில் சினிமா வாய்ப்பு என்பது மதுரையைச்சேர்ந்த டிஎம்எஸ்சுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.
1946ல் கிருஷ்ணவிஜயம் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. பெரிதாக பேசப்படாமல் 1950ல் எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் ஒரேயொரு பாடல்..அட பரவாயில்லையே என்று இசையமைப்பாளர்கள் நினைத்துவைத்தனர் அவ்வளவுதான்..
தமிழ்சினிமா வரலாற்றில் அதகளமான ஆண்டு என்று சொன்னால் அது 1954 ஆம் ஆண்டுதான்.
நக்கல்பாணி படங்களுக்கெல்லாம் இன்றளவும் தலைநகராக திகழும், எம்ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர், எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி, கலைஞர்-சிவாஜி காம்பினேஷனில் வசனகாவியமாய் திகழ்ந்த மனோகரா, எம்ஜிஆரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய மலைக்கள்ளன் வரிசையில் இன்னொரு படம் சிவாஜி நடித்த தூக்குத்தூக்கி.. எல்லா பிளாக் பஸ்டர்களுமே அந்த ஆண்டில்தான் வெளிவந்தன..
இரண்டாண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘’இந்த பையன் ரொம்ப ஒல்லியாக இருக்கிறான் இவனை தூக்கினால்தான் படம் தேறும்’’ என்று புதுமுக சிவாஜி விஷயத்தில் ஏவிஎம் செட்டியார் முரண்டுபிடித்தார்.
கூட்டுத்தயாரிப்பாளரான வேலூர் நேஷனல் தியேட்டர் அதிபரான பி.ஏ பெருமாள் முதலியார் . நன்றாக நடிப்பதுடன் நம்மை மலைபோல நம்பியிருக்கும் இந்த பையன் இல்லாவிட்டால் படமே தேவையில்லை என்று மல்லுக்கு நின்றார். சிவாஜி கணேசன் பிழைத்தார்.. இரண்டு வருடங்களில் வரலாறு மாறுகிறது
சிவாஜி பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகி விட்டார். அவரது தூக்குத்தூக்கி படத்தில் டிஎம்எஸ்சை பாட வைக்க, தமிழின் நெம்பர் ஒன் இசையமைப் பாளரான ஜி.ராமநாதன் முயற்சிக்கிறார்..
ஆனால் பிரபலம் இல்லாத புதுஆள் வேண்டாம் என்று நிராகரிக்கிறார்..ஆனால் ஜி.ராமநாதன் மல்லுக்கு நிற்கிறார். மாதிரிக்கு ஒரு பாடலை டிஎம்எஸ் பாடிக்காட்ட சிவாஜி வேண்டா வெறுப்பாய் தலையாட்டுகிறார்.
படத்தின் எல்லா பாடல்களையும் டிஎம்எஸ் பாடுகிறார்..ஏறாத மலைதனிலே குட்டி ஜோரான கௌதாரி ரெண்டு…என உச்சஸ்தாயில்.. அதே வகையில் பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற இன்னொரு பாடல்.. எட்டு பாடல்களை டிஎம்ஸ்சே பாடினார். எல்லாவற்றையும்விட கண் வழி புகுந்து கருந்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் என்ற டூயட் பாடல்தான் கிளாசிக் ரகத்தில் அமைந்தது..
தனியாக பாடும்போது உச்சஸ்தாயில் பாடும் டிஎம்ஸ், காதலில் குழையும் பெண் குரலோடு இணைந்தால், அவரின் குரலில் அப்படியொரு மென்மைக்கு போய்விடுவார் என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லிய பாடல் அது.
இன்னொரு பக்கம் மலைக்கள்ளனில், எம்ஜிஆருக்காக பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல், டிஎம்எஸ்சுக்கு..அதைப்பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா?
டிஎம்எஸ்சின் குரல் தெய்வீகம் என்பதை மற்றவர்கள் எல்லோரையும்விட இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன் தான் அதிகம் நம்பினார்.
அதனால்தான் அவர் இசையமைக்கும் படத்தில் ஆண் தனியாக பாடும் பாடல்களை டிஎம்எஸ்க்கு அவ்வளவு அற்புதமான உருவாக்கி அழகு பார்த்தார்.
காத்தவராயனில், வா, கலாப மயிலே ஓடிநீ வா கலாப மயிலே.. சதாரம் படத்தில் நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, சிவகாமியில், வானில் முழு மதியை கண்டேன் போன்ற பாடல்களை லட்சம் தடவை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.
இரண்டு மூன்று வாத்தியங்கள், ஒரேயொரு டிஎம்எஸ் குரல்.. தமிழ் சினிமா உலகின் மேஜிக் ரகங்கள் அவை.. வெளிப்படையாக சொன்னால், மனுஷங்களாடா நீங்க ரெண்டு பேரும்? என்று ஜி.ராமநாதனையும் டிஎம்எஸ்சையும் பார்த்து கேக்கலாம்..
எம்ஜிஆர் சிவாஜிக்கு டிஎம்எஸ் குரல்தான் நிரந்தரம் என்று முடிவான பிறகு, இருவரில் டிஎம்எஸ்சை இசையமைப்பளாரையும் தாண்டி, கனக்கச்சிதமாக தனக்காக மட்டுமே அப்படியொரு கம்பீரமான பாடல் அமைய வேண்டும் என்று தத்துவபாடல்களை டிஎம்எஸ்க்கு அள்ளிஅள்ளி கொடுத்தார்.எம்ஜிஆர்..
தாய்க்குபின் தாரம் படத்தின் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே..நாடோடி மன்னன் டைட்டில் சாங்கான செந்தமிழே வணக்கம், மன்னாதி மன்னனின் அச்சம் என்பது மடமையடா, அரசிளங்குமரியின் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளுடா, திருடாதே படத்தின் திருடாதே பாப்பா திருடாதே என டிஎம்எஸ் பாடல்கள்,
தியேட்டர்களையும் தாண்டி, சோர்வுறும் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் புத்துணர்ச்சியை ஊட்டின.
அதேசமயத்தில் காதல் பாடல்களிலும் டிஎம்எஸ் தன் தனித்தன்மைகளை விதவிதமாக காட்டினார்.
மதுரை வீரனில், நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே..என்று டூயட் பாட ஆரம்பிக்கும் போது. தியேட்டரே உற்சாகத்தில் மிதக்கும்.
சிவாஜிக்காக சாரங்கதாராவில் வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே, அதே ரகம்தான்.
யாராடி நீ மோகினி கூறடி என் கண்மணி..
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து
சட்டி சுட்டதடா கைவிட்டதா புத்தி கெட்டதடா
படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தான்
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
பாலூட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ
இதுபோன்ற பாடல்கள், கதவுகளே இல்லாத கிராமத்து டெண்ட் கொட்டகைகளில் இரவுநேரங்களில ஓடும்போது சுற்றுவட்டாரத்தில் வீடுகளில் உறங்கும் க்களின் காதுகளில்கூட டிஎம்எஸ் குரல் ரீங்காமிடும்.
எம்ஜிஆர் சிவாஜி மட்டுமல்ல ஜெமினி எஸ்எஸ்ஆர் அடுத்த தலைமுறை ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், ஏவிஎம் ராஜன் அதற்கு அடுத்த தலைமுறை கமல் ரஜினி சத்யராஜ் வரை டிஎம்எஸ் பாடித்தள்ளினார்.
இளைஞனாகி 1970ல்.கமல் சினிமா உலகில் ரீஎண்ட்ரி ஆன போது அவருக்கு பாடிய முதல் குரல் டிஎம்எஸ்தான்.
1975 பட்டாம்பூச்சி படத்தில் 21 வயதான ஹீரோ கமலுக்கு சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழியுது என்று பாடி மெகா ஹிட் தந்தவர் டிஎம்எஸ்தான். அதே படத்தில் எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி என்ற பாடலும் செம ஹிட்..அன்றைய காலத்தில் அந்த படத்தின் பாடல்களை விவிதபாரதி ஒலிபரப்பாதே நாட்களே கிடையாது..
கமலுக்காக தாயில்லாமல் நானில்லை படத்தில் டிஎம்எஸ் பாடிய வடிவேலன் மனசை வெச்சான் மலரை வெச்சான்..என்ற டூயட் எவ்வளவு தெறி ஹிட் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
ரஜினி முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பைரவி படத்தில் டிஎம்எஸ்தான் அவருக்காக இரண்டு பாடல்களை பாடி மெகா ஹிட் தந்தார்.
டி.ராஜேந்தரின் ஆரம்பகால படங்களில்கூட, என் கதை முடியும் நேரமிது,… அமைதிக்கு பெயர்தான் சாந்தி என வரிசையாக கலக்கினார்.
எல்லா காலகட்டத்திற்கும் எல்லாருக்கும் பாடும் திறன்கொண்ட அற்புதமான பாடகர் டிஎம்ஸ்..
நினைத்து பாருங்கள்..கீழ்வானம் சிவக்கும் படத்தில் டிஎம்எஸ் பாடிய கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் என வயதான காலத்தில் நடித்தபோதும் சிவாஜி எவ்வளவு கச்சிதமாக பொருந்தியது
பக்திப்பாடலோ சினிமா பாடலோ, தமிழ்நாட்டில் காலையில் விழிக்கும் ஒருவர், உறங்கச்செல்வதற்கு முன், மறைந்துபோன அந்த டிஎம்எஸ்சின் குரலை ஏதாவது ஒரு இடத்தில் காதில் வாங்காமல் போகவே முடியாது..
ஏனெனில் அவன் வெறும் கலைஞன் அல்ல,..காற்றாய் வியாபித்திருப்பன்.
ஈடு இணையே இல்லாத பின்னணி பாடகர், நடிகர் வாழ்வாங்கு வாழ்ந்து 91 வயதில் மறைந்த இசை மேதை டிஎம் சௌந்தர்ராஜனின் 98வது பிறந்த நாள் இன்று
நன்றி எழுமலை வெங்கடேசன்

தினபூமி மதுரை 24.03.2020 பக்கம் 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*''கூட்டு முயற்சிதான்"*
பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர்.
*எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர்'. ஆனால் மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அந்த வேலை முடிந்து இருக்காது.*
ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப் படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது.
*ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது* குழுவிலில இருப்பவர்களுடன் வேலை செய்யும் போது நமக்கு சகிப்புத்தன்மை, பல விதமான சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.
கோடை காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்க விடுவதைக் கண்டார்.
அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது.
அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாக பறந்தது.
பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் மேயர்.
இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு?” எனக் கேட்டார் மேயர்.
நான் தான்” என்றான் ஒரு சிறுவன்..“நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன்.. நானே அதை பறக்க வைத்தேன்” என்றான் அவன்.
ஆனால் காற்றோ நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது. என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும் சரியான திசையிலும் பறக்கச் செய்தது.
நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்து இருக்க முடியாது. எனவே, நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.
இல்லை நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால்.
நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நானில்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி தரையில் விழுந்திருக்கும்..
அதை அந்த பையனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.
இப்போது, உங்களைப் பொறுத்தவரை யார் உண்மை யில் காற்றாடியை பறக்க வைத்தவர்கள்.?
ஆம்.,நண்பர்களே..,
*எந்த ஒரு செயலையும் "நான் தான் செய்தேன்", என்னால்தான் அந்த செயல் செய்யப் பட்டது" என்று தன்னைப் பற்றி பெருமை கொள்ள வேண்டாம்.*
*நமது அல்லது எங்களது கூட்டு முயற்சியால் சாதித்தோம்" அல்லது, "செய்யப் பட்டது"போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம்...*
*இங்கு யாரும் தனியானவர்கள் இல்லை. எனவே மற்றவர்களையும் எப்போதும் நினைவில் வையுங்கள்!

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பயம் பாதி கொல்லும்
திடம் நின்று வெல்லும்....
*அனைவருக்கும் வணக்கம்..*
*அடுத்த 15 நாட்கள்..*
*ஆம் நமக்கு..*
அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானது. இந்த 15 நாட்கள்தான் கொரோனாவின் தமிழக தாக்க த்தை உறுதி செய்யும். 15 நாட்களுக்குள் கட்டுக்குள் வந்து விட்டால் பிரச்சனை இல்லை..
கட்டுக்கடங்காமல் பரவினால் நிலைமை மோசமாகிவிடும். எனவே முடிந்தவரை இல்லை.. அறவே வெளியே செல்லாதீர்கள்..
இது ஒரு தீவிர தொற்றுநோய். ஒருவருக்கு பாதித்தால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும். நம்மைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நம் குடும்பத்தாரை பற்றி சிந்தித்து செயல்படவும்..
விடுமுறை விட்டதால் குழந்தைகளை வெளியில் அனுப்பி விளையாட வைப்பதை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும்..
வழக்கம்போலவே மொபைல்போன், தொலைக்காட்சிகளில் குழந்தைகளை குதுகலப்படுத்துங்கள்..
இப்போதைக்கு தவறில்லை..
கடைகளை அடைக்கிறார்கள், மளிகை பொருட்கள் கிடைக்காது, காய்கறிகள் கிடைக்காது என்றெல்லாம் தேவையில்லாத கற்பனைகளை மனதில் வைத்துக்கொண்டு முண்டியடித்து மளிகை கடைகளுக்கும் மார்க்கெட்டு களுக்கும் ஓடி அலைய வேண்டாம்..
அடுத்த இருபது முப்பது நாட்களுக்கு தேவையான பொருள்களை பொறுமையாக வாங்கி வைத்துக்கொண்டால் போதும். பொதுவாக குடும்பங்களில் மாத பட்ஜெட் முறையில் பொருட்கள் வாங்குவது வழக்கமானதுதான்..
எனவே அதே நடைமுறையில் பதட்டமில்லாமல் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளவும். வாங்க கூடிய பொருள்களும் ஆடம்பரம் தரக்கூடியதாக இல்லாமல் அன்றாட நம் உடம்புக்கு ஊக்கம் தரக்கூடியதாகவும் ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்கட்டும்..
குடிநீரை அனைவரும் சுட வைத்து குடிக்கவும். குடிநீரில் கொரோனா தொற்று வராது; அதே நேரத்தில் சுகாதாரம் இல்லாத குடிநீர் பருகுவதால் சளி காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு அது கொரோனாவாக இருக்குமோ என்கிற தேவையற்ற அச்சத்தில் விடுபட உதவும்..
இது வெயில் காலம் என்பதால் வெளியில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் அதிக வியர்வை வரலாம். அதனால் சளி பிடித்து தலைவலி உள்ளிட்டவை வரலாம். அதையும் கொரோனா என நினைத்து அச்சப் படக்கூடாது..
இவற்றையெல்லாம் தவிர்க்க முழுமையான ஓய்வு நல்ல காற்றோட்டமான பகுதியில் தேவை. இதற்கு ஏசி தேவையில்லை நல்ல மின்விசிறி வசதி இருந்தாலே போதும்..
ஊரில் இருந்து வெளியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கை கால்களை சுந்நம் செய்த பின்பாக உள்ளே அனுமதிக்கவும். முடிந்தவரை அவர்கள் வருவதை தவிர்க்க கூறவும். நீங்களும் செல்ல வேண்டாம்..
மருந்து இல்லாத ஒரு நோயை தடுக்க முடியாது தவிர்க்க முடியும். அது அரசாங்கமும் அதிகாரிகளும் நினைத்தால் மட்டும் நடக்காது. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தில் விருப்பத்தில் அதை கடைபிடிக்க வேண்டும்..
நம்மிடம் வந்தால் நம் குடும்பத்தை தாக்கும் என்கிற சுயநலம் வேண்டும். பிறருக்கு பரவும் என்கிற பொதுநலம் அதற்கு பிறகு தான். பிறப்பைப் போலவே இறப்பும் பொதுவானதுதான். ஆனால் அந்த இறப்பு அலட்சியத்தால் இருக்கக்கூடாது..
நம்மை நாம் பாதுகாத்தால் பிறர் ஆரோக்கியமாக வாழ்வார்கள். நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் மகிழ்வுடன் வாழும் என்றால்...விருப்பம்போல் சுற்றுங்கள்..
இல்லையெனில்... அனைவரிடத்திலும் சற்று ஒதுங்கியே இருங்கள். ஒரு மாதத்திற்கு தான். நீங்களும் ஒரு பிக் பாஸ் போட்டியாளர் என நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை பிக் பாஸ் வீடாக மாற்றிக் கொள்ளுங்கள். ஓடவோ ஒளியவோ சொல்லவில்லை..
ஒழித்துக் கட்டுவோம் என்றுதான் சொல்கிறேன். பயம் பாதி கொல்லும்; திடம் நின்று வெல்லும்..
*அன்புடன் உங்கள்..*
*🙏தமிழ்நாடு காவல்துறை🙏*

Monday 23 March 2020

மாலைமுரசு 23.03.2020 பக்கம் 6


மதுரைமணி 23.03.2020 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

_🌺வாழ்க்கை ஒரு பயணம்..._
_நல்லதோ கெட்டதோ நகர்ந்து_
_கொண்டே இருங்கள்..._
_🌺இன்பம் வந்தால் ரசித்து_
_கொண்டே செல்லுங்கள்..._
_🌺துன்பம் வந்தால் சகித்து_
_கொண்டே தேங்கிவிடாதீர்கள்..._
_🌺தேங்கினால் துயரம்; வாடினால் வருத்தம்; நிற்காமல் ஓடுவதே பொருத்தம்..._
_🌺ஓடுங்கள் நதியாக வளைந்து நெளிந்து இலக்கை அடையும் வரை._
*🌺இனிய காலை வணக்கம்...

நூல் அறிமுக விழா



தினபூமி மதுரை 22.03.2020 பக்கம் 7


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌀நம்மை மேம்படுத்தும் அனுபவ அறிவு..!*
அனைவரும் தேடியலையும் ஓர் அரிய செல்வம் தன்னிடம் தான் அது மிகுதியாக உள்ளது என்றும், மற்றவரிடம் இல்லை என்று ஒவ்வொருவரும் பிறரைக் குறித்து உறுதியாக நம்பக்கூடிய செல்வம் அறிவு.
*༺🌷༻*
சூழ்நிலை அறிவு, கல்வியறிவு, எழுத்தறிவு, இயற்கை அறிவு, அனுபவ அறிவு என்னும் காட்சி அறிவுபோன்ற பல வகையான அறிவுகள் கூறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையன; எனினும் காட்சியறிவு என்னும் *அனுபவ அறிவே* மிகவும் சிறந்தது என்பது சான்றோர் கருத்து. #மகரயாழ் தனிமனித வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நெருக்கடிக் காலங்களில் மிகவும் பயன்படக் கூடியது அனுபவ அறிவுதான்.
*༺🌷༻*
கம்பராமாயணத்திலிருந்து ஒரு சான்றினைக் காணலாம். கிஷ்கிந்தா காண்டத்தில் வாலியின் சினத்திற்கு ஆளாகித் தோற்றோடிய சுக்ரீவன் ராமனின் துணை கிடைத்தவுடன் மீண்டும் வாலியின் அரண்மனைக்கு முன்னே வந்து நின்று வாலியைப் போருக்கு அழைத்து அறைகூவல் விடுக்கிறான். வாலியும் போருக்குப் புறப்படுகிறான். அப்போது அவன் மனைவி தாரை வாலியை நோக்கி, "தங்களின் தோள் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றோடிய பலவீனனான சுக்ரீவன் மீண்டும் தங்களை வலிந்து போருக்கு அழைப்பதில் ஏதோ வஞ்சனை உள்ளது. அவனுக்கு இப்போது ராமனின் துணை கிடைத்துள்ளது;
எனவே போரைத் தவிர்த்திடுக” என்று அறிவுரை கூறுகிறாள். வாலியின் மனைவி அறிவுத்திறன் உடையவள். ஆனால் வாலி வரங்கள் பல பெற்றிருந்தாலும் வலிமையும் வீரமும் உடையவனாக இருந்தாலும் அறிவு நலம் இல்லாதவன். அறிவுடைய மனைவியின் பேச்சைக் கேட்காமல் போருக்குச் சென்று ராமனின் அம்புக்கு இரையாகிறான். இது ராமாயணம் தரும் செய்தி.
*༺🌷༻*
வியாசர் பாரதத்தில் குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு குல முதல்வனான திருதராஷ்டிரன் மனத்தில் பழி உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. சஞ்சயன் அவனுக்குத் தேறுதல் கூறி, பாண்டவர்களை ஆசிர்வதித்து ஆட்சி புரிய அழைக்குமாறு அறிவுரைகள் கூறுகிறான். மகரயாழ் திருதராஷ்டிரன் பாண்டவர்களை ஒவ்வொருவராக அழைத்து அரவணைத்து ஆசி கூறுகிறான். ஒரு கட்டத்தில் பீமன் வந்து திருதராஷ்டிரனை வணங்கும்போது அவனைக் கட்டித் தழுவுகிறான். ஆயிரம் யானைகளின் பலமுடையவனான திருதராஷ்டிரன் மனதில் பழி உணர்வு மேலோங்க அவன் பீமனை இறுக்கமாகத் தழுவுகிறான். பீமன் உடல் துண்டு துண்டாக நொறுங்கி வீழ்கிறது. அந்தக் கணத்தில் குற்ற உணர்வும் தான் செய்த தவறும் மனத்தை உறுத்த திருதராஷ்டிரன் கதறி அழுகிறான். இப்போதுதான் பாண்டவர்களின் துணைவனான கிருஷ்ணன், “திருதராஷ்டிரா! உன் மகனான துரியோதனனைக் கொன்ற பீமன் மீது உனக்கு ஆழ்மனத்தில் வஞ்சம் இருக்கும் என்பதை ஊகித்து நான்தான் பீமனுக்குப் பதிலாக பீமனைப் போன்ற ஒரு இரும்புச் சிலையை உன்னிடம் அனுப்பினேன். இப்போது நீ இறுக்கிப் பிடித்து நொறுக்கியது வெறும் இரும்புச்சிலைதான்; அது பீமனல்ல; *உன் மனத்தில் இருந்த பழி உணர்ச்சி இப்போது விலகிவிட்டதால் இனி நீ பீமனை ஆசிர்வதிக்கலாம்”* என்று கூறுகிறான். கிருஷ்ணன் அனுபவ அறிவுமிகுதியாக அமையப் பெற்றவன்; பாரதத்தில் பல இடங்களில் இது வெளிப்படுகிறது. இங்கும் *பீமனைக் காப்பாற்றியது கிருஷ்ணனின் அனுபவ அறிவு எனும் காட்சியறிவுதான்!* அனுபவ அறிவு மிகவும் இன்றியமையாதது என்பது இப்போது புரிகிறதல்லவா?
*🙏முனைவர் ம.திருமலை,💐*
*முன்னாள் துணைவேந்தர்,*
*தமிழ்ப்பல்கலைக்கழகம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சென்னையில் இப்போது தனியாக வசிக்கும் முதியவர்கள் உங்களுக்கு உண்ண உணவு,அவசரமான மருந்துகள் எதுவும் தேவையெனில் உடன் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டால்,நல்லமனம் கொண்ட அன்பர்கள் வந்து உதவ காத்துள்ளார்கள்!
For Senior citizens living by themselves. If you need essentials like groceries or medicines or cooked food pls call us. Happy to help
A few volunteers. Baby steps. May be more will join . But for now we have :
1. Advaith Shivram
Valasaravakkam
7358516184
2. J S Sekar
Saligramam /Ashoknagar
+91 98400 47101
3. Veeramani Raju
Valasaravakkam
9841068548
4. Sriram
Kodambakkam
9840079929
5. Nancy
Kolathur
+91 89254 04028
6. Vinoth
Chrompet
9551305656
7. Thomas
Thiruvanmiyur
9884555533
Note to volunteers :
Thank you for your prompt response. pls do not step out without your masks. Pls carry a sanitizer and pls use it as and when required.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஈரோட்டை தனிமைப்படுத்த காரணம் என்ன ?*
கரோனா பாதிப்புள்ள ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும்." இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஈரோட்டில் சென்ற 11 ஆம் தேதி இரவு தாய்லாந்தை சேர்ந்த 7 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஈரோட்டில் கொல்லம்பாளையத்தில் உள்ள இரண்டு மசூதிகளில் தங்கி மதப்பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களில் ஒருவர் கடந்த 16 ஆம் தேதி ஊருக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆறு பேர் பற்றிய விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது அதைத் தொடர்ந்து அந்த 7 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
அவர்களுடைய இரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் இருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இந்த 7 பேரில் ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் இறந்துள்ளார். அவர் சிறுநீர் கோளாறால் இறந்ததாக கூறப்பட்டது. மீதம் இருந்த 6 பேரில் 2 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நேற்று ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறுகையில், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். தாய்லாந்து நபர்கள் இருவர் தங்கியிருந்த மசூதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பொதுமக்கள் என அனைவரையும் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்தால் தான் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க முடியும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தற்பொழுது தெரிவித்துள்ளார். இந்த மூன்று மாவட்டங்களிலும் ரயில், பேருந்து போன்ற எந்த பொது போக்குவரத்து சேவைகளும் நடைபெறாது மார்ச் 31ம் தேதி வரை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் : ஜீவா தங்கவேல் , நக்கீரன்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மார்ச் 31 வரை ஊரடங்கு வேண்டாம், பிழைப்பை பார்க்க வேண்டாமா ? வீட்டு செலவுக்கு பணம் வேண்டாமா ? என கேட்பவர்களை இத்தாலிய மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன். உங்களை போலதான் ஒரு இருபத்தைந்து நாள் முன்பு இத்தாலியர்கள் பேசிக் கொண்டார்கள். இதெல்லாம் சீனாவின் அழுக்குப்பிடித்த பகுதிகளில் மட்டுமே இருக்கும் வைரஸ், நான் எல்லாம் ஸ்டீல் பாடி, இங்கே அதிநவீன மருத்துமனைகள் இருக்கின்றன என்றெல்லாம் பேசினர். ஆனால் தற்போது முப்பது பேர் படுக்கவைக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவமனையில், நுரையீரல் முழுவதுமாக வைரஸால் அடைக்கப்பட்டு, ஒரே ஒரு மூச்சுக்காக துடிக்கிறார்கள். செயற்கை சுவாசம் வழங்கும் எக்மோ (extra-corporeal oxygenation) கருவிகள் வளர்ந்த நாடுகளிலேயே மிகக் குறைவு. இதில் முப்பது பேருக்கு ஐந்து கருவி என்றால் எப்படி இருக்கும் நிலை ?
இவருக்கு, அவருக்கு என மாற்றி மாற்றி கருவியை பொறுத்தி, ஓரிரு மூச்சிழுக்க வைக்கிறார்கள். யார் உயிர் வாழ வேண்டும், யாரை வேறு வழியில்லாமல் கைவிட வேண்டும் என்பது மருத்துவர்கள் முடிவெடுக்க வேண்டிய மிக சிக்கலான ஒரு விஷயம். "கருவியை கொடுங்கள் கொடுங்கள்" என கெஞ்சியவாறே பலர் உயிரிழப்பதை பார்த்து பார்த்து, மருத்துவர்கள் மனத்தளர்வுக்கு ஆளாகிறார்கள். சில மருத்துவர்கள் பணிச்சுமை தாங்காமல் மயங்கி விழுகிறார்கள். வளர்ந்த நாடான இத்தாலி, ஸ்பெயினிலேயே இப்படி ஒரு நிலை என்றால் இந்தியாவில் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்.
உண்மையில் எனக்கு ஸ்டீல் பாடி ஒன்றும் ஆகாது என்று வெளியில் திரிந்து இதை பரப்புபவரை நெற்றிபொட்டில் சுட்டு வீழ்த்த வேண்டும் போல் கோபம் வருகிறது.
கொரானாவை நாம் அழிக்க இயலாது. அதன் பரவலை தள்ளிப் போடலாம். அதன் மூலம் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க செய்யலாம். அதற்கு நாம் யாரோடும் கலக்காமல் தனித்திருப்பதே சிறந்தது.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டுப் பிள்ளைகளே உங்களுக்கு கொரானாவை கொண்டு வரலாம். இந்த நோய் பாதிக்கப்பட்ட பலர், எந்த அறிகுறியும் இன்றி நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பயங்கரம்.
ஆகையால் மார்ச் 31 வரை ஊரடங்கு இருக்க வேண்டும் என்பது ஒரு நிர்பந்தம். அதை மட்டும் செய்யாமல் விட்டால் இந்த நாட்டு மக்கள் சுருண்டு, சுருண்டு விழுந்து அழிவதை யாராலும் தடுக்க இயலாது. இன்று 300 பேர் வரை அது பரவி இருக்கிறது என்றால் வைரஸ் ஒரு மூவாயிரம் பேரிடம் அறிகுறி இல்லாமல் இருக்கிறது என்று கணிக்கலாம். இதை அடியேன் நிச்சயமாக யாரையும் அஞ்ச வைக்க சொல்லவில்லை. இதற்காக அடியேனை சிறையில் தள்ளினாலும் கவலை இல்லை. இந்த வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 31 வரை ஊரடங்கு மிக மிக மிக மிக மிக அவசியமானது. இதற்காக காவல்துறைக்கு மற்றும் பொதுமக்களுக்கு உதவக் கூடிய (போதிய பாதுகாப்பு கவசத்தோடு) தன்னார்வளர்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
உடனிருப்போம் இந்தியா அரசிடம். உதவுவோம் தமிழக அரசுக்கு.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

கேடுகெட்ட மனிதர்கள், திருந்த மாட்டார்கள், நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்..

ஊடக வியாபாரி எலிகள் ஏன் கோவணத்துடன் ஓடுகின்றன என்று பார்த்தால்...
ஊடக விபாயரிகள் பர்க்கா தத்தும், இண்டியா டுடேயின் ராகுல் கன்வாலும் நேற்று திடீரென அமெரிகாவிலிருந்து ஒரு "டாக்டர்" ரமணன் லக்ஷ்மிநாராயணனை பேட்டி கண்டனர். ஊடக வியாபாரிகள் அவரை 'தொற்றுநோயியல் நிபுணர் ' என்று அறிமுகம் செய்கிறார்கள்.
அதில் அந்த டாக்டர், "பிரதமர் மோதி மெத்தனமாக நடந்து கொள்கிறார். இந்தியாவில் கொரோனாவைரஸ் மிக மோசமாக உள்ளது. 30 கோடிப் பேராவது பாதிக்க படுவார்கள். 10 லட்சம் முதல் 20 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கலாம்" என்று பீதியை கிளப்பினார்.
இது சமூக வலைதள காலம் என்பதை நிரூபிக்கும் விவத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த 'டாக்டர்' யார் என்று விவரங்களை போட்டுடைத்தனர் நெட்வாசிகள்.
1) முதலில், அவர் மருத்துவம் படித்த டாக்டர் கிடையாது. அவர் ஒரு பி.எச்.டி. ஆராய்ச்சிபடிப்பு - பொருளாதார ஆராய்ச்சி - டாக்டர்.
2) ஒரு என்.ஜி.ஓ வைத்திருக்கிறார் இவர். அது தவிர HealthCube என்ற medical diagnostics நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
3) அவர் தொற்றுநோயியல் நிபுணர் இல்லை, பொருளாதாரம் படித்த பி.ஹெச்.டி.
4) இந்திய பொது சுகாதார அறக்கட்டளையில் (Public Health Foundation of India PHFI) பணி புரியும் போது, இரண்டு நிறுவனங்களை PHFI அனுமதியின்றி ஆரம்பித்து, PHFI விவரங்களை திருடியுள்ளார். PHFI அவரை நீதிமன்றம் இழுத்து சென்றது. அவர் திருடியவற்றை திரும்ப பெற்றது. அந்த வழக்குக்காக PHFI செலவிட்ட தொகையையும் அவரிடமிருந்தே பெற்றது.
5) அது தவிர மஹிந்திரா குழுமத்தின் அருண் நந்தாவையும் ஏமாற்றியிருக்கிறார் ரமணன். அதில் வழக்கு நடந்து வருகிறது.
ஒரு பொருளாதார 'டாக்டரை' தொற்றுநோயியல் டாக்டர் என்று சொல்லி ஏமாற்றி, பீதியை கிளப்பும் வகையில் பேசச் செய்து, மக்களை குழப்பும் இந்த பர்க்கா தத், ராகுல் கன்வால் போன்றவர்களை சிறையில் அடைப்பது நாட்டுக்கு நல்லது.
இந்த கூட்டத்தின் பின் நிச்சயம் ஜார்ஜ் சோரோஸ் கிழம் இருக்கும்.
Dr Ramanan Laxminarayan suggests that if mathematical models applied in US & UK were applied to India, we could be looking at 300 million #Covid19 infections.
Listen in to Dr Ramanan Laxminarayan in conversation with
@rahulkanwal .
https://twitter.com/IndiaToday/status/1241068883429056515
"If PM believed official numbers on #Corona he wouldnt have drawn a World War II analogy," says renowned expert Dr Ramanan Laxminarayan on #Mojo,"our model shows 300-500 million #Corona cases in India, by July end, & at its peak, we likely to lose 1-2 million lives."-a preview
https://twitter.com/BDUTT/status/1241352659585708032
Did @bdutt tell you that Dr Ramanan Laxminarayan is NOT a doctor.
He has a PhD in economics. A director of a US based NGO.
Ramanan Laxminarayan is a director in a medical diagnostics company named HealthCube
https://twitter.com/SureshNakhua/status/1241440462365290496
First of all, he is economist and not epidemiologist. He worked with Public Health Foundation of India for 4 years. While working with PHFI, he launched two private companies without PHFI permission. PHFI did not renew his contract in 2016 .
PHFI sued him for stealing it's intellectual property . PHFI won the case against him and got back it's rights. The court even awarded legal costs to PHFI.
In addition to his role in CDDEP, he started company called Health cube, which works in the area of diagnostics. His second venture is "Public Health Technologies Trust". He has ongoing legal dispute with Mr Arun Nanda of Mahindra & Mahindra regarding PHTT.
In short, this fear mongering by Dr Lakshminarayan needs rigourous questioning, esp with reference to his credentials, his track record and his vested interests. This is a clear case of conflict of interests.
https://twitter.com/vijai63/status/1241601103470325760

*கொரனோ பானக்கம்*


கொரனோ பானக்கம் குடிக்கனும் அல்லது விட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
இப்ப கொரனோ பானக்கம் செய்முறை :
*சின்ன வெங்காயம்*
*பூண்டு* *இஞ்சி* *துளசி* *கற்பூரவல்லி* *வேம்பு* *குப்பை மேனி* *மஞ்சள்* *சீரகம்* *மிளகு* . *எலுமிச்சை* *உப்பு*.
சீரகம் மிளகை தூளாக்கி மீதமுள்ளவற்றை சிறுதுண்டுகளாக்கி மிக்ஸியில் இரண்டு சுத்துவிட்டா போதும் அதில் ஒன்னறை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இறக்கி ஆறவைத்து அதில் உப்பு அரை எலுமிச்சை சாறு ஊற்றி குடிக்கவும்.
வேம்பு சேர்த்தால் கொஞ்சம் கசப்பாக இருக்கும். இல்லை எனில் பெரிய காரமோ சுவையோ இன்றி உடலுக்கு மட்டும் வலு சேர்க்கும். சுறுசுறுப்பாக இருக்கும்.
நல்லது......... செய்து பாருங்கள் . நலம் பயக்கும்.

நாவெல் கொரோனா பிடியில் இருந்து நம்மைக் காத்திடும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தேச உணர்வுடன் பணியாற்றும் நமது சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கரவொலி எழுப்பிய தருணம்.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மூன்று மணி நேரத்துக்கு முன்பு தான் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தொற்றுநோய்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனது கல்லூரித் தோழனிடம் பேசினேன். அவனது முதல் வாக்கியமே 'ராஜேந்திராஜி , இந்த மோடி ஒரு தலை சிறந்த மனிதரப்பா' என்பதுதான். ' அதில் சந்தேகமில்லை ஆனால் இப்போது அதற்கென்ன ?' என்றேன். 'நாங்கள் 30 வருடங்களாக அமெரிக்காவில தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் இந்த 'ஒரு நாள் கர்ஃப்யூ'(ஊரடங்கு) எங்கள் மூளைக்கு எட்டவேயில்லை.'என்றான். ' 'மதச்சார்பின்மைவாதிகள்,இடதுசாரிகள்,முஸ்லிம்கள்,டுக்டே டுக்டே கும்பல்(நாட்டைத் துண்டு துண்டாக்க வேண்டும் என்பவர்கள்) , நகர்ப்புற நக்சல்கள், விருதைத் திரும்ப அளிக்கும் நபர்கள்(நாட்டில் சகிப்புத் தன்மை இல்லையென்று கூறி) ,என் டி டிவி போன்ற மோடியைக் கேலி செய்யும் கூட்டத்துடன் நீயும் சேர்ந்து விட்டாயா? 'என்றேன் நான். 'அய்யோ,அப்படியெல்லாம் இல்லை, நானும் எனது குடும்பத்தினரும் 19 வருடங்களாக அமெரிக்கக் குடிமக்களாக உள்ளோம்.எங்களது குடும்ப வருமானம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல்.ஆனால் எங்கள் மனமெல்லாம் இந்தியாவில்தான் உள்ளது'என்றான். 'மோடி அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் முடிவுகளை- அவற்றால் இந்தியாவுக்கு நன்மை விளையுமா , மக்களுக்கு நல்லதா என்று- நான் அலசி ஆராய்வேன். மோடியின் 'ஒரு நாள் ஜனதா கர்ஃப்யூ '( சுய விருப்ப ஊரடங்கு) என்ற ஐடியாவைப் பலர் கேலி செய்வதையும் நான் பார்க்கிறேன். ஆனால் மோடி அவர்களின் இந்த யுக்தியைப் பற்றி விவாதிக்க எங்களது ஆய்வகத்தில் மிகப் பெரிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவின் 45 நிமிடக் கூட்டத்துக்கு ஏற்பாடாகியது. .இந்த 45 நிமிடக் கூட்டம் மூன்று மணி நேரம் நீண்டது என்றால் நீ ஆச்சரியப்படுவாய்.' 'தொற்று நோய்களின் மீது, குறிப்பாக கொரோனா தொற்றின் மீது இந்த 'ஒரு நாள் ஊரடங்'கின் தாக்கம் விவாதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் மனித உடலுக்கு வெளியே 12 மணி நேரத்துக்கு மேல் உயிரோடு இருக்காது என்பதால் உலகின் ஒவ்வொரு மனிதனையும் 12 மணி நேரத்துக்கு இதன் தொடர்பிலிருந்து விலக்கி விடுவது இது மேலும் பரவுவதைத் தடுக்கும் சிறந்த வழியாகும என்பது அனைத்து விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக இருந்தது. இந்நிலையில் வைரஸ் படிந்திருக்கக் கூடிய கதவுக் கைப்பிடிகள், கரன்சி நோட்டுகள்,கோப்புகள், கூரியர் பார்சல்கள்,வண்டிகளின் ஸ்டியரிங் வீல்கள்,பேனாக்கள் போன்றவை நமது தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுகின்றன. ஆக மோடி அவர்களின் யுக்தியால் ஒரு ரூபாய் செலவில்லாமல் வைரஸ் அழிக்கப்படும்; இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைகள் தடைபடாது; நாடு வைரசிலிருந்து விடுதலை பெறும்.' 'இத்துறையிலுள்ள மாபெரும் விஞ்ஞானிகளின் மூளைகளில் கூட இத்தகைய யுக்திகள் தோன்றவில்லை.இந்த யுக்தி மோடி அவர்களின் ஆலோசகர் ஒருவரால் கூறப்பட்டிருந்தால் அவர் நோபல் பரிசு பெறத் தகுதி உடையவராகிறார்.ஆனால் இது மோடி அவர்களின் மூளையில் உதயமாகிய ஒன்று என்றால் தொற்று நோய் சிகிச்சை தொடர்பான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கலாம். ' என்று முடித்தான். எனக்குப் பேச நா எழவில்லை. இங்கே என்னடாவென்றால் ஏராளமான எனது நாட்டு மக்கள் 'படிக்காதவர்' என்றும், வசைபாடியும் மோடி அவர்களை அவமானப் படுத்துகின்றனர்! ( வாட்ஸ் அப் ஆங்கிலப் பதிவின் பார்வேர்ட்) தமிழில்:இரா.ஶ்ரீதரன்

22.03.2020 இரவு முதல் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது....*


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிரபல பாடகி கொரோனா தொற்று இருப்பதை மறைத்து அரசியல் தலைவர்களுக்கு விருந்து..
மும்பையில் உள்ள பிரபல பாடகி கனிகா கபூர் தனக்கு கொரோனா இருப்பதை மறைத்து அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்டார். அதனால் தற்போது அந்த விருந்தில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உண்மையை மறைத்ததற்காக கனிகா கபூர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிகா கபூரின் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பஜக எம்பி துஷ்யந்த், அவரது தயாரும் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
கனிகா கபூரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின்னர், துஷ்யந்த், குடியரசுத்தலைவர் சில எம்பிக்களுக்கு கொடுத்த விருந்திலும், திமுக எம்பி கனிமொழி கொடுத்த விருந்திலும் கலந்துகொண்டுள்ளார். அதனால் அந்த விருந்தில் அவருடன் கலந்துகொண்ட மற்ற எம்பிக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விருந்துகளில் துஷ்யந்த் கலந்துகொண்டபோது, கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது நிகழ்ச்சியில் துஷ்யந்த் கலந்துகொண்டதும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அந்த தகவல் தெரியவந்திருப்பதால், அவருடன் விருந்தில் கலந்துகொண்ட சக எம்பிக்கள் அவர்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரானா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,தஞ்சை அரசு மருத்துவமனையில் தனி வார்ட்டில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றுவிட்டதாகவும்,அவரை தேடிவருவதாகவும் இன்று ஒரு செய்தியை பார்த்தேன்,
இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் ஆகும். இவற்றைத் தடுப்பதற்காக அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை செயல்படுத்துவதே நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என கருதுகிறேன்.
நமது நலனிற்காக, நமது பிரதமர்,நமது சுகாதாரத்துறை மந்திரி,மற்றும் டாக்டர்கள்,நர்ஸ்கள்,தூய்மை பணியாளர்கள் எல்லாம் தன் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.நாம் பொறுப்பில்லாமல் இருந்தால்..?நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இல்லை எனில் பயன்..?

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆரம்பம்தான்......
_*பாஜக சொன்னது உண்மையாயிருச்சு, நான் என்ன இளிச்சவாயனா..?*_
_*சீறிய லலிதா ஜுவல்லரி ஓனர் - தி.மு.க-வினர் அதிர்ச்சி !*_
_தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிலங்களை அபகரித்தல், போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை பிடுங்குதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறும் என்று அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூறிவந்த நிலையில், அது உண்மைதான் என கூறுவது போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது._
_தமிழகத்தில் மிகப் பிரபலமான லலிதா ஜூவல்லரி பல ஊர்களில் தனது கிளைகளை நிறுவி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. புனித நகரமான திருவண்ணாமலையில் தனதுகிளையை திறக்க முடிவு செய்த அந்நிறுவனம் இதற்காக இடம் தேடியபோது திருமஞ்சன கோபுரம் அருகே தனது பெயரில் இடம் இருப்பதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க பொருளாளராகவும் உள்ள பன்னீர்செல்வம் கூறியுள்ளார்._
_அதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு தனது இடம் எனக் கூறிய பன்னீர்செல்வம் 1.75 கோடி ரூபாய்க்கு லலிதா ஜூவல்லரிக்கு இடத்தினை விற்பனை செய்துள்ளார். அது சம்மந்தமாக ராதா என்பவர் பிரச்சனை செய்தபோது பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது._
_இதுதொடர்பாக ஜூவல்லரி தரப்பு முக்கிய பிரமுகர்கள் மூலமாக பன்னீர்செல்வத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனில்லை. இதனை தொடர்ந்து, லலிதா ஜூவல்லரியின் திருவண்ணாமலை கிளை மேலாளர் பத்மநாபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தனது தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விவகாரத்தை அமுக்கியதாக கூறப்படுகிறது._
_பின்னர், லலிதா ஜூவல்லரி தரப்பு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்ட சிபிசிஐடி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே, தாம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அவர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்._
_பன்னீர்செல்வம் இதுபோன்ற பலரின் நிலங்களை போலி பத்திரம் தயாரித்து விற்றுள்ளதாகவும், நிலத்திற்கு உரியவர்கள் கேட்டால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி அடங்கியதாக கூறப்படுகிறது. மிக பிரபல நிறுவனத்தையே ஏமற்றிய பன்னீர் செல்வத்திற்கு சாதாரண மக்களை மிரட்டுவது ஒன்றும் பெரிதல்ல என வேதனை தெரிவிக்கின்றனர்._
_மேலும் பா.ஜ.க பலமுறை சொன்னது உண்மையாகியுள்ளது. இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர் பல முக்கிய பிரமுகர்களிடம் பேசியும் காரியம் நடக்காத நிலையில் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். என்னை பார்த்தால் இளிச்சவாயன் என எழுதியுள்ளதா? எனவும், நீதிமன்றத்தில் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளதால், நிலத்தை ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது._
_அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளதாம் தி.மு.க. தற்போது இந்த விவகாரம் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவந்துள்ளதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை மூடி மறைக்கப்படுமா? என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்._

மனிதத்தேனீயின் தேன்துளி


திவ்யா பாரதி-ராமகிருஷ்ண யோகேஷ் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ

21.03.2020 இரவு மதுரையில் நடைபெற்ற கள்ளிக்குடி பி டி ஓ, சிறந்த சொற்பொழிவாளர் கே. முத்து இளங்கோவன் - சென்ட்ரல் எக்சைஸ் நிர்வாக அலுவலர் சரஸ்வதி தம்பதியர் திருமகள் திவ்யா பாரதி-ராமகிருஷ்ண யோகேஷ் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, ஏ ஐ ஆர். ஞானசம்பந்தன், புலவர் வை. சங்கரலிங்கம், நகைச்சுவை நாவலர் திருநாவுக்கரசு, சீ. கிருஷ்ணமூர்த்தி, சோலை மலை பிச்சை, ஜாபர் உள்ளனர்.
வாழிய மணமக்கள்



Saturday 21 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிந்தனைக் களம்*
பல திறமையாளர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென்று உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்றுவிடுவார்கள். அதன்பின் அவர்களிடம் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது!
ஏன்?
உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டு இருக்கும் வலைகளிலிருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்! அதற்குப் பிறகும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும். ஆனாலும், கிடைத்திருப்பதை விட்டுவிடக்கூடாது என்று அச்சத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். அதற்கு அப்புறம் எப்படி வளர்ச்சி இருக்கும்?
குட்டி மண் தொட்டியில் வேரோடு வைத்து விற்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள். பத்திரமாக நிழலில் வைத்தப் பார்த்துக் கொண்டால், தொட்டியில் செடி வேகமாக ஓரளவுக்கு வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி, அது தன் வளர்ச்சியைக் குறுக்கிக் கொள்ளும்.
அதே செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால், அது பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கும். கடைசி வரை புதிது புதிதாகக் கிளைகளை எல்லாத் திசைகளிலும் அனுப்பிக் கொண்டு இருக்கும்.
உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான்!
வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் தகதகத்துக் கொண்டு இருக்கிறது.
இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்துப் போட நீங்கள் தயங்குவதால், வளர முடியாமல் தவிக்கிறது.
உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டு இருக்கும் வலைகளிலிருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!
👤 *இனிய காலை வணக்கம்*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஜெய்சங்கர் எனும் ராஜதந்திரி
இந்திய பாதுகாப்பு துறைகளில் ராணுவம் உளவுக்கு அடுத்து மாபெரும் சவாலான விஷயம் வெளிநாட்டு தூதரக பணியும் அதை முறையாக ராஜதந்திரமாக கையாள்வதும்..
ஒரு பக்கம் நெருப்பு, ஒரு பக்கம் பனி ஒரு பக்கம் பள்ளம் ஒரு பக்கம் நாகம் என சுற்றும் உலகில் தேச நலன் எனும் எண்ணெய் கலயத்தை மெல்லிய கம்பியில் நடந்து மிக கவனமாக கொண்டு செல்ல வேண்டியது அப்பணி
கடும் ஆபத்திலும் சிக்கலிலும் சுயநலம் தேடும் உலகிலும் பிராந்திய நலம், கண்டத்தின் நலம் இன்னும் பலவகையான நலன் என இழுத்துவிட்டு அவைகளின் நம்பிக்கையினை பெற்று அதே நேரம் எதிர்தரப்பினையும் பகைக்காமல் லாவகமாக நடந்து தன் நாட்டின் நலனை காப்பது பெரும் திறமை, அப்படி ஒரு ராஜதந்திரி கிடைப்பது வரம்
அப்படி ஒரு மாபெரும் வரம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றது அவர் பெயர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். தமிழர்
இன்று 65 வயதை எட்டும் அவரின் வெளியுறவு துறை பணி அவருக்கு 22 வயதான பொழுது 1977ல் தொடங்குகின்றது, முதல் பணியாக இரு வருடங்கள் மாஸ்கோவில் அன்றைய சோவியத் யூனியனில் இருந்தார். அது இந்திய சோவியத் உறவு உச்சத்தில் இருந்த காலம், உலக அரசியலை அந்த சிகப்பு பூமியில்தான் கற்க தொடங்கினார் கூடவே நிறைய கற்றார் ஜெய்சங்கர்.
2004ல் அமெரிக்க தூதரனார் அந்த காலகட்டம் இந்தியா அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அடம்பிடித்த காலம் மிக கடுமையாக மிரட்டிய காலம், அதில் இந்திய நலன்களை காத்து, அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து மீட்டவர் அவர்தான்
2004ல் இந்தியாவினை சுனாமி தாக்கியபொழுது உலகெல்லாம் இருந்து மீட்புகுழு வரவும் ஜெய்சங்கர் முக்கிய காரணம் அவரின் தொடர்பு அப்படி இருந்தது
ஒரு கட்டத்தில் வெளியுறவு துறையின் பெரும் அதிகாரியனார், காங்கிரஸ் அரசு அவரை அதிகாரியாகவே வைத்து சிங்கப்பூரின் தூதராக அனுப்பியது, அங்கு ஓசைபடாமல் ஒரு காரியம் செய்தார், ஆம் சிங்கப்பூரில் இந்தியாவுக்கான அவசரகால ராணுவ விஷயம் சில உண்டு
அட்டகாசமாக அதை சாதித்தார் ஜெய்சங்கர் அதன் பின் சீனாவுக்கான தூதரனார்
அது சிக்கலான காலகட்டம் சீனா ஒருமாதிரி அடம்பிடித்து கைலாச யாத்திரைக்கு விடமாட்டோம், அருணாசல பிரதேசம் தெற்கு திபெத் என அடம்பிடித்த காலத்தில் சீன தூதராக இருந்தும் திபெத்துக்குள் வந்தார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திர அணுகுமுறையால் கைலாச யாத்திரை திறக்கபட்டது
திபெத்தில் கால் வைத்த அல்லது வைக்க அனுமதிக்கபட்ட முதல் இந்திய தூதர் அவர்தான்
சீனா பொதுவாக யாரையும் நம்பாது, அந்த சீனாவினையே இந்தியா சீனாவுக்கு எதிரி அல்ல என ஓரளவு தெளிவினை கொடுத்தவர் ஜெய்சங்கர், அவரின் சாதனை அது
அதன்பின் மறுபடி அமெரிக்க தூதரனார், அப்பொழுது பல ராஜதந்திர சர்ச்சைகளும் தேவயாணி கோப்ரகடே என்ற அதிகாரி சிக்கி கொண்ட விஷயமும் நடந்தது அதை எல்லாம் சமாளித்தது ஜெய்சங்கரே
நிச்சயம் நீண்ட அனுபவம் கொண்டவர் ஜெய்சங்கர், உலகில் அவர் கால் படா நாடு இல்லை, அவரை அறியாத வெளிநாட்டு துறைகள் இல்லை. எல்லா இடத்திலும் அவருக்கு நற்பெயரே
இதைத்தான் மோடி குறித்துகொண்டார்
மோடி தன் இரண்டாம் ஆட்சியில் பெரும் திட்டங்களை வைத்திருந்தார், அவை உலகை உலுக்கபோகும் விஷயம் எனவும், தேர்ந்த ராஜதந்திரியின்றி அவை சாத்தியமில்லை என்பதையும் நன்றாக உணர்ந்தபொழுது அவர் கண்முன் வந்தவர்தான் ஜெய்சங்கர்
கொஞ்சமும் யோசிக்காமல் அவரிடம் வெளியுறவு துறை அமைச்சர் பதவியினை கொடுத்தார் மோடி
அதன் தாக்கம் காஷ்மீர் விவகாரத்தில் 370 ரத்து செய்யபடும் பொழுது தெரிந்தது, தன் தேர்ந்த அனுபவத்தாலும் தன் அகில உலக தொடர்பாலும் உலகில் ஒரு குரல் ஒலிக்காமல் பார்த்துகொண்டார்
அரபு நாடுகளையே அசால்ட்டாக கட்டிபோட்டார் ஜெய்சங்கர்
பாகிஸ்தானை அடுத்து முணுமுணுத்த நாடு சீனா, அவ்வளவுதான் ஜின்பெங்கை மாமல்லபுரத்துக்கு இழுத்து வந்து அசத்தினார் ஜெய்சங்கர்
அதன்பின் துருக்கி முணுமுணுத்தது அதுவும் ஓரிருநாளில் அமைதியாயிற்று.
இதெல்லாம் மாபெரும் சாதனைகள், ஒரு வரியில் விளக்கமுடியாதவை
இந்தியாவுக்கு அந்த தேர்ந்த அமைச்சரை மோடி நியமித்தது மிக பெரும் நல்ல விஷயம், மோடிக்கு ஏன் சில இடங்களில் கைதட்டுகின்றோம் என்றால் இதற்காகத்தான்
கிட்டதட்ட 22 வயதில் இருந்து 43 வருடமாக இந்தியாவுக்கு உழைத்து வருபவர் ஜெய்சங்கர், அவர் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் சீனாவிலும் எடுத்த பயிற்சியே இன்று காஷ்மீர் சிக்கலை உலக தலையீடு இன்றி தீர்க்க முடிந்தது
இன்றும் சீனா இந்தியாவோடு இனி உரசல் இல்லை என சொல்லிவிட்டது, அமெரிக்கா இந்தியாவினை தேடுகின்றது, ஈரான் தேடுகின்றது, ஜெர்மன் தேடுகின்றது இன்னும் ஏகபட்ட நாடுகள் நட்புறவில் இருக்கின்றன என்றால் காரணம் ஜெய்சங்கர்
இலங்கையில் இந்தியா இன்று கால்பதிகின்றது என்றால் அன்று பார்த்தசாரதி எனும் தமிழனிடம் தமிழன் ஜெய்சங்கர் பெற்ற அனுபவமும் மகா முக்கிய காரணம்
மோடி ஊர்சுற்றுவார் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருப்பான், அவரின் ஒவ்வொரு பயணத்தின்பொழுதும் ஒரு நாட்டு நலன் இருக்கும் அதை ஜெய்சங்கர் திட்டமிட்டு வைப்பார் மோடி சென்று கையெழுத்திடுவார்
அந்த அளவு உலக அரங்கில் தனி இடம் பெற்றிருக்கின்றார் ஜெய்சங்கர் எனும் தமிழர்
"கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே" என்ற வரிக்கு ஏற்ப காஷ்மீரை இந்தியாவோடு முழுக்க சேர்த்த தமிழன் அவர்
ஆம் அவர் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் காஷ்மீர் விவகாரம் உலக விஷயமாகி இந்திய மானம் சந்தி சிரித்து காட்சிகளே மாறியிருக்கும்
பண்டைய சேர, பாண்டிய மன்னன் வரிசையில் அந்த இமயமலையினை மீட்டெடுத்தவர் ஜெய்சங்கர்
இந்த தமிழரை பற்றி இங்கு யாராவது பேசுவார்களா?, இந்த மாபெரும் ராஜதந்திர் தமிழன், உலகில் இந்தியாவுக்கு தனி இடம் பெற்றுகொடுத்திருக்கும் தமிழன் பற்றி தமிழக ஊடகமோ டிவியோ பேசுமா என்றால் பேசாது
நடிகர் ஜெய்சங்கர் தெரிந்த அளவு இந்த மாபெரும் சாதனையாளர் தமிழர் தேசிய ஜெய்சங்கர் தமிழனுக்கு தெரியாது
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரைவேக்காடு அரசியல்வாதிகளும் அவர்களின் அறிவே இல்லா அடிப்பொடிகள் மட்டுமே, தமிழகத்தின் சாபக்கேடு அப்படி
நாம் அந்த அற்புத தமிழனை எப்பொழுதும் நன்றியோடு நினைப்போம், தகுதியான தமிழனுக்கு பொருத்தமான பொறுப்பை கொடுத்த மோடியினையும் நினைப்போம்
இன்று அந்த மாபெரும் ராஜதந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு பிறந்த நாள்
சுப்பிரமணி என்பது தமிழ்கடவுளின் பெயர், தமிழர்களின் அடையாளம்
ஆம் அந்த சுப்பிரமணிய ஜெயசங்கரும் தமிழக அடையாளம்
இந்த ஜெய்சங்கரும் டெல்லி பல்கலைகழகத்தில்தான் படித்தார், ஆனால் நாட்டுக்கு எப்படி நல்ல பொறுப்பான ராஜதந்திரியாக உருவாகிவிட்டார் பார்த்தீர்களா?
அந்த பெருமைமிக்க நிறுவணத்தின் இன்றைய நிலை என்ன? இன்று தேசவிரோதிகளால் நிறைந்து குட்டிசுவராயிற்று
இன்று ஜெய்சங்கரின் பிறந்த நாள், 65ம் பிறந்த நாள்
நாம் முன்பே குறிப்பிட்டபடி ராணுவ தளபதி போல வெளியுறவு துறை பணியும் சவால்மிக்கது பொறுப்பும் உயிர் ஆபத்தும் மிக்கது
அந்த வரிசையில் இந்த தமிழனும் மாபெரும் சவால் எடுத்து தேசம் காக்கின்றார்
ரஷ்யாவினையும் அமெரிக்காவினையும் பதமாக கையாண்டு, இஸ்ரேலையும் அரபு நாடுகளையும் ஒருசேர கையாண்டு, சீனாவினையும் ஜப்பானையும் ஒருசேர கையாண்டு, ஐரோப்பாவினையும் லத்தீன் அமெரிக்காவினையும் ஒருசேர கொண்டுவந்து, ஆப்ரிக்க நாடுகள் முழுக்க இந்திய சார்பு எடுக்க வைத்து..
நினைத்தாலே மயக்கம் போட வைக்கும் விஷயம் இது, இவ்வளவையும் செய்துதான் ஐ.நாவில் காஷ்மீர் இந்தியாவின் பகுதி என நிரூபித்திருக்கின்றார் ஜெய்சங்கர்
எவ்வளவு பெரும் ராஜதந்திரம் இது, பெரும் வீரமும் கூட.
அந்த நகர்வுதான் அயோத்தி தீர்ப்பு உலக சலசலப்பு ஆகாமலும் பார்த்து கொண்டது, அது ஜெயசங்கர் தவிர யாருக்கும் சாத்தியமில்லை
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்றார் கண்ணதாசன்
அப்படி நாட்டின் மானம் காத்து நிற்கும் ஜெய்சங்கர் சரித்திரமாகிவிட்டார், அவர் ஆயிரம் பிறை காண இந்நாட்டின் எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும் எல்லா ஆலயத்திலும் அவருக்காய் பிரார்த்தனை நடக்கட்டும்
வாழிய நீ எம்மான், வாழிய வாழியவே

பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் விழா


மனிதத்தேனீயின் தேன்துளி