Saturday 30 July 2016

மனிதத்தேனீ உரையாற்ற உள்ள அகில இந்திய மதுரை வானொலியில் சான்றோர் சிந்தனை அழைப்பிதழ்


Malai Murasu Paper 30.07.2016 page 5


மனிதத்தேனீ சிறப்புரையாற்றிய சோலைமலை குழும திருவிழா ஜெ.பி.பி - 2016 News & Photos






லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம் பானர்


ஹிரோசிமா தினம் அழைப்பிதழ்


மனிதத்தேனீ சிறப்புரை ஆற்ற உள்ள விழா


Dinamani Paper 30.07.2016 Page 3


மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள விழா


மனிதத்தேனீயின் தேன்துளி



Nagarathar Post_July 2016 - page - 16 & 17



Friday 29 July 2016

லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு கூட்டம் அழைப்பிதழ்


மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள சிறப்புக் கூட்டம்


கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் நினைவு தினக் கூட்டம் பன்முக ஆற்றலின் அடையாளம் தியாகராசர் - மனிதத்தேனீ புகழாரம்




மனிதத்தேனீயின் தேன்துளி



கருமுத்து தியாகராசர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது....!!!!
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது....!!!!
முக்கிய குறிப்பு:-
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்...!!!!

Malai Murasu Paper 28.07.2016 page 4


மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள விழா



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு எலிக் கூட்டம் உணவு தேடிப் புறப்பட்டது. அவற்றின் தலைவன் ஒவ்வொரு இடமாக மோப்பம் பிடித்தபடி அவற்றை வழி நடத்திச் சென்றது.
வழியில் ஒரு வீட்டின் அறை ஒன்றிலிருந்து அருமையான பலகார வாசனை அதன் கவனத்தை இழுத்தது. தன் கூட்டத்தாருடன் கவனமாய் உள்ளே சென்றது.
ஆஹா ! அங்கே ஒரு மூடப்படாத பெரிய ஜாடிக்குள் நெய்யில் சுட்ட அதிரசங்கள்.
"இன்னிக்கு நல்ல வேட்டைதான் ". உற்சாகமாய் ஜாடிக்குள் குதிக்கும் போது தலைவன் சொன்னது ,
"நண்பர்களே ! இது புதிய இடம் . எங்கிருந்து என்ன ஆபத்து வருமென்பது நமக்குத் தெரியாது. எனவே உங்கள் பசிக்குத் தேவையானதை மாத்திரம் உண்டு விட்டு உடனடியாய் இங்கிருந்து சென்று விடும் வழியைப் பாருங்கள் ".
தலைவன் சொன்னதுடன் நிற்காமல் அவசரமாகக் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு ஜாடிக்கு வெளியே வந்து காவல் நின்றது. மற்ற எலிகளோ தலைவன் சொன்னதை மறந்து நெய் அதிரசங்களை ஒரு கை பார்க்கத் தொடங்கின.
தலைவன் சொன்னது ,
"நண்பர்களே ! தூரத்தில் மனித வாடை தெரிகிறது. உடனே கிளம்புங்கள்".
ஜாடிக்குள்ளிருந்து ,
" இதோ தலைவா! " பதில் மட்டும் வந்தது. எலிகள் வரவில்லை.
மீண்டும் தலைவன் சொன்னது ,
" நண்பர்களே ! மனிதக் காலடி ஓசைகள் நெருங்கி வருகின்றன. உடனே வெளியே வாருங்கள் " .
இம்முறை அதிரசத்தின் சுவையில் மெய்மறந்து போயிருந்த எலிகள் ,
"ம்... ம்... " என்று மட்டும் சொல்லிவிட்டு இன்னும் வயிறு முட்ட அதிரசத்தைத் தின்றன.
இப்போது தலைவன் கத்தியது ,
"முட்டாள்களே ! இதோ ஒரு மனிதன் உள்ளே வந்து விட்டான் . இனி நான் இங்கிருந்தால் என்னைக் கொன்று விடுவான். உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் பாதுகாப்பான இடம் தேடி ஓடிப்போனது.
பிரச்சனையின் தீவிரத்தை அப்போதுதான் புரிந்து கொண்ட எலிகள் ஜாடியிலிருந்து வெளியேற முயன்றன . ஆனால் பாவம் ஆழமான ஜாடியிலிருந்த அதிரசங்கள் தீர்ந்ததால் அது மேலும் ஆழமாகி விட்டதாலும் , வயிறு முழுக்க அதிரசம் நிரம்பி இருந்ததாலும் அவற்றால் தாவி வெளியே வர இயலவில்லை. கோபத்துடன் வந்த மனிதனிடம் சிக்கிக் கொண்டன.
தன் கூட்டத்திருந்த எலிகள் ஒவ்வொன்றாக அடித்துக் கொல்லப் படுவதை ஒரு பொந்திலிருந்து பார்த்து தலைவன் எலி கண்ணீர் விட்டது.
செல்லமே ! உலகத்தின் மயக்கத்தில் அடிமைப் பட்டுப் போனால் எச்சரிப்பின் தொனி காதில் விழாது. எதிலும் அளவுடன் இரு. பிழைப்பாய்

கருமுத்து தியாகராசர் நினைவு தினம் பானர்


அருள்ஞானசபை 197ஆவது மாதக் கூட்டம் போஸ்டர்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

[🎯🎯 ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!!
[🎯🎯 காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும், தெரிந்து விடுகின்றன.. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை..!!
[🎯🎯: இங்கிலிஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில வேலை வாங்குறது பெருசில்ல.. 
தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலை வாங்குற அவன் தான் பெரியாளு..
[🎯🎯: இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. 
கடவுள் மேல அம்முட்டு நம்பிக்கை..!!
[🎯🎯: நாக்கு ஒரு தீ! ஆக்கவும் அழிக்கவும் வல்லது.. கவனமாக பயன்படுத்துங்கள்..
[🎯🎯: படிச்சவன் பாடம் நடத்தறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தறான்..!!
[🎯🎯பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!
[🎯🎯: பத்து ரூபாய் கேட்பவனை பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தும் சமூகம், பல இலட்சம் கேட்பவனை மட்டும் மாப்பிள்ளை என்று கௌரவப்படுத்துகிறது...
[🎯🎯 250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!
[🎯🎯படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க.. பசங்கத்தான் வேலைதேடி தெருதெருவா சுத்துறாங்க.. என்னடா டிசைன்!!
[🎯🎯 ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது.. தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள..!!
[🎯🎯: எந்த சூழ்நிலையிலும் நமது வாழ்க்கையில் இவர்கள் மூவரை மறக்க கூடாது..
1. கஷ்டத்தில் உதவியவன்..
2. கஷ்டத்தில் உதவாதவன்..
3. கஷ்டத்தை உருவாக்கியவன்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் ஏழை...!!
ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் 
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!!!!
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....!!!!
தொடக்கம் நாமாக இருப்போமே...!!!

முகநூல் தகவல்(மனிதத்தேனீ)

ஒரு எலிக் கூட்டம் உணவு தேடிப் புறப்பட்டது. அவற்றின் தலைவன் ஒவ்வொரு இடமாக மோப்பம் பிடித்தபடி அவற்றை வழி நடத்திச் சென்றது.
வழியில் ஒரு வீட்டின் அறை ஒன்றிலிருந்து அருமையான பலகார வாசனை அதன் கவனத்தை இழுத்தது. தன் கூட்டத்தாருடன் கவனமாய் உள்ளே சென்றது.
ஆஹா ! அங்கே ஒரு மூடப்படாத பெரிய ஜாடிக்குள் நெய்யில் சுட்ட அதிரசங்கள்.
"இன்னிக்கு நல்ல வேட்டைதான் ". உற்சாகமாய் ஜாடிக்குள் குதிக்கும் போது தலைவன் சொன்னது ,
"நண்பர்களே ! இது புதிய இடம் . எங்கிருந்து என்ன ஆபத்து வருமென்பது நமக்குத் தெரியாது. எனவே உங்கள் பசிக்குத் தேவையானதை மாத்திரம் உண்டு விட்டு உடனடியாய் இங்கிருந்து சென்று விடும் வழியைப் பாருங்கள் ".
தலைவன் சொன்னதுடன் நிற்காமல் அவசரமாகக் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு ஜாடிக்கு வெளியே வந்து காவல் நின்றது. மற்ற எலிகளோ தலைவன் சொன்னதை மறந்து நெய் அதிரசங்களை ஒரு கை பார்க்கத் தொடங்கின.
தலைவன் சொன்னது ,
"நண்பர்களே ! தூரத்தில் மனித வாடை தெரிகிறது. உடனே கிளம்புங்கள்".
ஜாடிக்குள்ளிருந்து ,
" இதோ தலைவா! " பதில் மட்டும் வந்தது. எலிகள் வரவில்லை.
மீண்டும் தலைவன் சொன்னது ,
" நண்பர்களே ! மனிதக் காலடி ஓசைகள் நெருங்கி வருகின்றன. உடனே வெளியே வாருங்கள் " .
இம்முறை அதிரசத்தின் சுவையில் மெய்மறந்து போயிருந்த எலிகள் ,
"ம்... ம்... " என்று மட்டும் சொல்லிவிட்டு இன்னும் வயிறு முட்ட அதிரசத்தைத் தின்றன.
இப்போது தலைவன் கத்தியது ,
"முட்டாள்களே ! இதோ ஒரு மனிதன் உள்ளே வந்து விட்டான் . இனி நான் இங்கிருந்தால் என்னைக் கொன்று விடுவான். உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் பாதுகாப்பான இடம் தேடி ஓடிப்போனது.
பிரச்சனையின் தீவிரத்தை அப்போதுதான் புரிந்து கொண்ட எலிகள் ஜாடியிலிருந்து வெளியேற முயன்றன . ஆனால் பாவம் ஆழமான ஜாடியிலிருந்த அதிரசங்கள் தீர்ந்ததால் அது மேலும் ஆழமாகி விட்டதாலும் , வயிறு முழுக்க அதிரசம் நிரம்பி இருந்ததாலும் அவற்றால் தாவி வெளியே வர இயலவில்லை. கோபத்துடன் வந்த மனிதனிடம் சிக்கிக் கொண்டன.
தன் கூட்டத்திருந்த எலிகள் ஒவ்வொன்றாக அடித்துக் கொல்லப் படுவதை ஒரு பொந்திலிருந்து பார்த்து தலைவன் எலி கண்ணீர் விட்டது.
செல்லமே ! உலகத்தின் மயக்கத்தில் அடிமைப் பட்டுப் போனால் எச்சரிப்பின் தொனி காதில் விழாது. எதிலும் அளவுடன் இரு. பிழைப்பாய்.
"வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். நீதிமொழிகள் " 15 :10

Thursday 28 July 2016

பாரத்ரத்னா அப்துல்கலாம் நினைவுதின முப்பெரும் விழா News & Photos




மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பத்து தடவை கீழே விழுந்தால்
ஆயிரம் தடவை எழுந்திரு . . .
ஐம்பது தடவை ஏமாந்துபோனால்
பத்தாயிரம் தடவை ஏமாறாமலிரு . . .
நூறு தடவை தோற்றுப்போனால்
லக்ஷம் தடவை ஜெயித்துவிடு . . .
ஆயிரம் தடவை அவமானப்பட்டால்
கோடி தடவை மரியாதையை அடைந்துவிடு . . .
கோடி தடவை பயந்துபோனால்
பலகோடி தடவை தைரியமாயிரு . . .
விடாதே . . .
உன்னை நீயே பலவீனமாக்காதே . . .
மறந்துவிடாதே . . .
உனக்குள் இருக்கும் சக்தியை
மறந்துவிடாதே . . .
தொலைத்துவிடாதே . . .
உன்னுள் புதைந்திருக்கும் திறமையை
தொலைத்துவிடாதே . . .
விட்டுக்கொடுக்காதே . . .
உன் முயற்சிகளை
விட்டுக்கொடுக்காதே . . .
நீ விழுந்ததைக்
கணக்குப் பண்ணாதே . . .
நீ எழுந்ததை மட்டுமே
நினைவில் வைத்திரு . . .
நீ தோற்றதை
எண்ணிப் புலம்பாதே . . .
நீ ஜெயித்ததை எண்ணி
இன்னும் ஜெயிக்கப்பார் . . .
நீ அவமானப்பட்டதை
நினைத்து அழாதே . . .
நீ பெருமையடைந்ததை
நினைத்து வென்றுகாட்டு . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை !
உன்னுடைய புலம்பலைக் கேட்டு
உனக்குச் சமாதானம் சொல்ல . . .
உன்னுடைய தோல்விகளில்
உனக்குத் தோள் கொடுக்க . . .
உன்னுடைய பலவீனங்களுக்காக
உனக்கு உதவி செய்ய . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை . . .
இது வெல்பவர்களின் உலகம் !
இது வெல்பவர்களுக்கான உலகம் !
இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை !
இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை !
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை !
உனக்கு உதவிக்கு யாரும் வேண்டாம் !
இந்த மனிதரை நம்பி நேரத்தை வீணாக்காதே !
நீயே விழுந்தாய் . . நீயே எழுந்திரு !
நீயே தோற்றாய் . . .நீயே வெல் !
நீயே அவமானப்பட்டாய் . . .நீயே மரியாதை அடை !
நீயேதான் எழ வேண்டும் . . .
உன்னை கைதூக்கி விட
இந்த உலகிற்கு நேரமில்லை . . .
நீயேதான் வெல்லவேண்டும் . . .
உனக்கு வழிசொல்லிக் கொடுக்க
இந்த உலகிற்கு பொறுமையில்லை . . .

Monday 25 July 2016

Malai Murasu Paper 24.07.2016 page 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கல்வி கடனை பெற மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்கிற இணைய தளத்திலும் விண்ணபிக்கலாம். மத்திய அரசால் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த இணைய தளத்தில் 39 வங்கிகள் இணைந்துள்ளன. இதை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததால், மாணவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் வங்கிகளை நேரடியாக அணுகுகிறார்கள். வங்கிகளும், இந்த தளத்தைப்பற்றி சொல்லுவதில்லை. மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
உப்பு சப்பில்லாத விவாதங்களை நடத்தும் டி.வி கள் இரண்டு மூன்று நாட்களுக்கு “வித்யாலட்சுமி கல்வி கடன் இணைய தளம் - சமஸ்கிரத திணிப்பா? அல்லது இந்துத்துவா திணிப்பா?” என்கிற தலைப்பில் விவாதம் நடத்தினால், மோடி எதிப்பாளர்கள் பொங்குவார்கள். செக்யூலர் தலைவர்களும் பொங்கி அறிக்கை மேல் அறிக்கை விட்டு www.vidyalakshmi.co.in தளத்தை பிரபலபடுத்துவார்கள். தேசிய ஊட்கங்களும் பொங்கி எழுவார்கள்.
அரசாங்கமும், வங்கிகளும் இந்த தளத்தை மணவர்களிடையே பிரபலபத்தவில்லை. மாணவர்கள் நலன் கருதி டி.வி.களும், செக்யூலர் தலைவர்களும், இந்த பணியை செய்தால், நன்றாக இருக்கும். லட்சக்கணக்கான மாணவர்களும் பயனடைவார்கள்.
எனக்கு வேறு வழியே தெரியவில்லை.
www.vidyalakshmi.co.in தளத்தை மாணவர்களிடையே பிரபலப்படுத்த வேண்டுகிறேன்.

40 நாட்களாக நடைபெற்ற கல்வித் திருவிழா நிறைவு பெற்றது News & Photos



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.
மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சி களிடமும் இந்த வி­ஷயம் சென்று இருக்கிறது.
ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.
வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.
அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.
பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏக் களும் எம்.பிக் களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இ­­ஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரி க் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பல்பாலே.
17 வயது காலேஜ் பையன்கள் பேருந்து மேல் ஏறி நடனமாடுவதும், டாஸ்மாக்கில் சரக்கு அடிப்பது
எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் போலிருக்கிறது
இந்த பையன்னை பாரட்ட நினைத்தால் ஷேர் செயுங்கள்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

📚
*_ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாகக் கவனிக்கும் . ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”_*
ஒரு
பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும்
என்பதை நினைவில் வைத்துக்கொள்.
வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”
உண்மைதான்.
வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 21. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
நான் காரணத்தைச் சொன்னேன்.
அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால்.
ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான்.
இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
-👍👍👍👍👍👍👍👍👍
படித்ததில் பிடித்தது

மனிதத்தேனீயின் தேன்துளி