Friday 31 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்லது நடக்கட்டும்...
அமைச்சருக்கு நன்றியும் இப் பணி தொடர வாழ்த்துக்களும்..
கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு..
தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்
தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
அரசு கேபிளில் 200-ஆவது சேனல்:
இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும். நீட் உட்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200-ஆவது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் தொடங்கியது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு செய்யப்படும். இதை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்க இருக்கிறார். இதுதவிர மாநிலம் முழுவதுள்ள 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஆய்வு: கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புத் தளம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்பது, எப்படி இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் சாதனையாக பேசப்படுகிறதோ?அதைப் போல் இன்றைய கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் பேச படக் கூடிய சாதனையாளராக வரும்காலங்களில் இருப்பார்.
நன்றியும் இப் பணி தொடர அமைச்சருக்கு வாழ்த்துக்களும்..
நன்றி ராஜப்பா தஞ்சை

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நம்ப முடிகிறதா....
ஒடிஷாவின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வான பிரதாப் சந்திர சாரங்கிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது கேபினட்டில் இடம் அளித்திருக்கிறார்.
ஒடிஷா மாநிலத்தின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி-யாகியிருக்கிறார் அந்த எளிய மனிதர். சைக்கிளில், கிராமங்களில் மக்களோடு மக்களாக வலம்வரும் இவர், தேர்தலின்போது ஆட்டோவில் சென்றுதான் பிரசாரம் செய்துள்ளார். சொந்த வீடோ அல்லது காரோ இல்லாத எளிமையான மனிதரான இவரை அணுகுவதும் எளிது என்கிறார்கள், ஒடிஷா மக்கள்.
முதல்முறையாக மக்களவைக்கு பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய பிரதாப்சந்திர சாரங்கிக்கு எதிராகக் களமிறங்கிய 2 வேட்பாளர்களும் மிகவும் பலம்பொருந்தியவர்கள். ஒருவர் பிஜுஜனதா தளம் சார்பில் களமிறங்கிய சிட்டிங் எம்.பி-யும் தொழிலதிபருமான ரபீந்திரகுமார் ஜெனா. பெரும் பணக்காரரான அவருக்கு சொந்தமாக News World Odisha என்ற செய்தித் தொலைக்காட்சியும் உண்டு. அவருக்கு ஆதரவாக, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கே பிரசாரம் மேற்கொண்டார்.
மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். ஒடிஷா மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக்கின் வாரிசு என்ற அடிப்படையில் மக்களிடம் பிரபலமானவர் அவர். நபஜோதியின் சித்தப்பாவான சௌமியா ரஞ்சன் பட்நாயக், ஆளும்கட்சியான பிஜுஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவி வகித்துவருகிறார். ஒடிஷாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான ஈஸ்டர்ன் மீடியா லிமிட்டெட் (EML) ரஞ்சன் பட்நாயக்கிற்குச் சொந்தமானது. அம்மாநிலத்தில் அதிகம் விற்பனையாகும் சம்பாத் (Sambad) மற்றும் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சியான கனக் டிவி (Kanak TV) ஆகியவை ஈஸ்டர்ன் மீடியாவுக்குச் சொந்தமானவை.
இந்த இரண்டு வேட்பாளர்களின் அரசியல், அதிகாரம், பணபலம் ஆகியவற்றைத் தோற்கடித்து வென்றிருக்கிறார், பிரதாப்சந்திர சாரங்கி.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இளம்வயதில் இருந்தே ஈடுபாடுகொண்ட சாரங்கி, அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சைக்கிளில் கிராமம் கிராமமாக வலம்வந்து, தொடர்ந்து மக்களைச் சந்தித்துவந்த அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக பாலாசோர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நீலகிரி தொகுதியில் இருந்து இரண்டு முறை சுயேச்சை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர்.
இப்பொழுது மக்களவைக்கு,பா.ஜ.க சார்பில் களமிறங்கிய சாரங்கி 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் கோடீஸ்வர் ஜெனாவைத் தோற்கடித்து, பலாசோர் தொகுதி எம்.பி-யாகியிருக்கிறார்.
பணக்கார வேட்பாளர்களின் செல்வத்துக்கு- தமிழர்களாகிய நம்மைப் போல -விலை போகாமல், எளிமையான, நேர்மையான மனிதரைத் தேர்ந்தெடுக்கும் அந்தப் பண்பு அந்த எளிய அத்தனை மக்களுக்கும் ஒருசேர எப்படி உள்ளது? உண்மையிலேயே அந்தத் தொகுதி மக்கள் வசிக்கும பக்கம் நோக்கி,கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
யாரைப் புகழ்வது? இந்த எளிய வேட்பாளரையா? இவரைத் தேர்ந்தெடுத்த அந்தத் தொகுதி மக்களையா? இவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்த பாஜகவையா? இந்த எளிய மனிதருக்கு கவனம் கொடுத்து பிரசாரமும் செய்து,மந்திரி பதவியையும் கொடுத்துள்ள பிரதமரையா?
இவர்களுக்கு இந்தப் பண்பு எப்படி வந்தது? இந்தக் கட்சியி்ன் தலைவரும், பிரதமரும்,வேட்பாளரும் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு என்பதனால் இருக்குமோ?
எத்தனையோ கோடீஸ்வரர்கள், ராஜ குடும்பத்தினர், சினிமா பிராபல்யங்கள் எனப் பலர் மந்திரி பதவிக்குக் காத்திருக்க, இந்த எளிய மனிதரைத் தேடிப் போய், அவருக்கு மந்திரி பதவியைக் கொடுத்து கௌரவிக்கும் இந்தப் பண்பு வேறு எந்த கட்சிக்கு,வேறு எந்தத் தலைவனுக்கு இருக்கும்?
இவை எல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா?
இதனை தமிழர்களாகிய நம்மால் நம்பத்தான் முடிகிறதா?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க்குடியாம் நமக்கு #நேசமணி_டிரெண்டிங் மட்டுமே சாத்தியம்.☹️

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படு தோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராஜரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காமராஜரிடம் புலம்பி தீர்த்து விட்டார்.
உடனே காமராஜர் “இப்ப என்ன பிரச்னைங்கறேன்?”
அதற்கு நேரு “நம்ம கிட்ட போதுமான நவீன ஆயுதங்கள் இல்லாததினால் தான் இந்த தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நவீன ஆயுதங்கள் இருந்திருந்தால் நாம் ஜெயித்து இருக்கலாம்” என்றார்.
அதற்கு காமராஜர் “மத்த வேலையை நிறுத்திவிட்டு அந்த அமெரிக்ககாரன்கிட்ட நமக்குத் தேவையானதை வாங்குங்கறேன்”
வாங்கலாம் தான் ஆனால்….. என்று இழுத்தார் நேரு….
இன்னும் என்ன பிரச்னை?
இல்ல! அந்த வெப்பன்ஸ் இந்தியாவுக்கு அனுப்பனும்னா அமெரிக்காவில ஏதாவது ஒரு வங்கி நமக்கு பண உத்தரவாதம் எழுதி குடுக்கணும். ஆனா, இந்தியாவை நம்பி எந்த வங்கியும்உத்திரவாதம் தர மாட்டேன்ங்கிறான்…” என்று வருத்தத்துடன் சொன்னார் நேரு.
உடனே காமராஜர் அவருடைய பாஷையில்.
அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?
நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜர் மீண்டும் கேட்டார்.
அட அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?
நேரு புரிந்துகொண்டு உடனே..
இருக்கு…. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ன்னு ஒரு வங்கி இங்க இயங்கிட்டு இருக்கு..
உடனே காமராஜர்..அதை உடனே இழுத்து மூட சொல்லுங்கறேன்..
நேரு திகைத்தார்… அய்யோ அதை மூட சொன்னால் சர்வதேச பிரச்னை ஆகுமே?
உடனே காமராஜர்..அட என்னமோ ஆகட்டும். நமக்கு உதவாத அவன் கடை இங்க எதுக்குங்கறேன்?
உடனே நேரு எதையும் யோசிக்காமல் அந்த வங்கிக்கு உடனடியாக ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தார்.
எங்களுக்கு உதவி செய்யாத உங்கள் நாட்டு எந்த தொழிலும் இனி எங்கள் நாட்டில் வேண்டியதில்லை… உடனே இடத்தை காலி செய்யவும்” என்ற தகவல் வங்கி அதிகாரியை திகைக்க வைத்தது.
உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பினர். அடுத்த சில மணி துளிகளில் அமெரிக்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா ஆயுதம் வாங்குவதற்கு உத்தரவாதம் தர தயார் ஆயினர்.
எவனோ எழுதியதை
வெறுமனே மனப்பாடம் செய்து பரிட்சை பேப்பரில் வாந்தியெடுத்தால் மட்டும் போதாது..
எப்படிப்பட்ட காரியத்தை
எப்படி அனுக வேண்டும் என்ற நெஞ்சுரம்
தேவை....
அதுதான் சரியான படிப்பு....நன்றி ஜெசி ஜெசிகா

31-5-2019 "மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்" நன்றி மீனாள் காந்தி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லாம் இன்பமயம் 🌷*
*🧩🌷🧩மகரயாழ்🧩🌷🧩*
*(31.05.2019)*
*🧩🌷🧩எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்*
* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.
🌷🧩🌷🧩🌷
* ‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்துவிட்டதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாளே வராது.
🌷🧩🌷🧩🌷
* எப்போதும் பாசிட்டிவ் மனிதர்கள் பக்கத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். ஆனால், நெகட்டிவ் மனிதர்கள் எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையுடன் காத்திருப்பார்கள்.
🌷🧩🌷🧩🌷
* மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தாம்.சூழ்நிலையை மாற்றுங்கள்… அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்.
🌷🧩🌷🧩🌷
* மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம், உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது.
🌷🧩🌷🧩🌷
* உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கிறபோதுதான் கவலை அதிகரிக்கிறது. இருப்பவற்றை மட்டும் நினைத்துப்பாருங்கள்; மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.
🌷🧩🌷🧩🌷
* ஒரு நல்ல செய்தி… ஒரு கெட்ட செய்தி தெரியுமா? கெட்ட செய்தி – இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல செய்தியும் அதுவே.
🌷🧩🌷🧩🌷
* கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதது, இருப்பதை நினைத்து நன்றியுணர்வு கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையோடிருப்பது – மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

லட்யன்ஸ் கும்பலின் வீழ்ச்சி ஆரம்பம்.....
"நான் கான் மார்க்கெட் கும்பல் உருவாக்கிய தலைவன் அல்ல" என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உத்தமத் தலைவன் மோடி முழக்கமிட்டபோது பலருக்கும் குறிப்பாக
தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
டெல்லியில் பத்திரிக்கைகள், அறிவு ஜீவிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், உலகமயமாக்கல் காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்கள், இடைத் தரகர்கள் ஆகியோரைக் கொண்ட கும்பல்தான் கான் மார்க்கெட் கும். இதை லட்யன்ஸ் டெல்லி கும்பல் என்றும் அழைப்பர்.
உண்மையும் பொய்யும் கலந்த வதந்திகளைப் பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றது இந்த கும்பல். மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏன் நீதிபதிகளுக்கும் ஆதரவாகவோ எதிராகவோ கருத்துக்களை உருவாக்க வல்ல செல்வாக்கும்
அறிவுக்கூர்மையும் கொண்ட கும்பல் இது.
டெல்லியில் இருந்துகொண்டு வதந்திகளை உருவாக்கி, அதைச் செய்தியாக மாற்றி, நாடு முழுவதும் பரப்புவதற்கு அதனுடன. இணைந்த பிரபல பத்திரிக்கையாளர்களை அந்த கும்பல் பயன்படுத்துகிறது. இந்தக் கும்பலைச்
சேர்ந்தவர்களை குஷிப்படுத்தாதவர்கள்
யாரும் நிம்மதியாக இருக்க முடியாது.
பிரதமரையும் அமைச்சர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு இந்தக் கும்பலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். இந்தக் கும்பல் சிபாரிசு செய்பவர்களையும் சந்திக்க வேண்டும்.
இந்தக் கும்பலைக. கண்டு அஞ்சாத பிரதமரோ, அரசியல் கட்சியோ, தலைவர்களோ, அதிகாரிகளோ ஏன் நீதிபதிகளோ டெல்லியில் கிடையாது. இந்த லட்யன்ஸ் கும்பலின் வாயிலிருந்து தப்பிக்கவே அனைவரும்
முயற்சிப்பார்கள்.
இப்படி சர்வ அதிகாரங்களும் கொண்ட கும்பலைத்தான், மோதிஜி அப்படியே ஓரம் கட்டினார்.
இந்தக் கும்பலுக்கு இருந்த அத்தனைச் சலுகைகளையும் நீக்கினார் மோடி.
பெரிய பத்திரிக்கையாளர்கள் கொண்ட கூட்டத்தினை அரசாங்கச் செலவில் வெளிநாடுகளுக்குச் செல்வதை
தடுத்தார் மோடி.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதை அறவே தவிர்த்துவிட்டார் மோடி.
அதனால் ஆத்திரம் கொண்ட அந்தக் கும்பல்,மோடிக்கு எதிராக நாடு முழுவதும் செய்திகளை பரப்பினார்கள்.
மோடியின் சாதனைகளை மறைத்து, அவரைப் பற்றி அவதூறுகள. கூறி, அங்குமிங்குமாக நடந்த சிறு சிறு நிகழ்வுகளைக. கூட பெரிது படுத்தினார்கள்.
நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு,
அதன் சகிப்புத்தன்மை குறைந்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோய் நாடே நாடே மாறிவிட்டதாக மோடியின் கடந்த ஐந்தாண்டு காலமும் பிரச்சாரம் செய து வந்தனர்.
வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களுடன. இணைந்து கொண்டு உலக அளவில். நமது
நாட்டை தலைகுனிய வைத்தனர்.
அந்த லட்யன்ஸ் கும்பலைச் சேர்ந்த
பத்திரிக்கையாளர்கள்தான் "2019ல் மோடி தோற்று விடுவார்" என்ற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.எதிர்க்கட்சிகளும் இந்தக் கும்பலை நம்பி பகல்கனவு கண்டனர்.
தோற்றது எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல....
இந்த லட்யன்ஸ் கும்பலும்தான்.
நன்றி : துக்ளக் (05-06-2019)

வாழிய தேசப் பணி


Wednesday 29 May 2019

மக்கள்குரல் 29.05.2019 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லாம் இன்பமயம் 🌷*
*🧩🌷🧩மகரயாழ்🧩🌷🧩*
*(29.05.2016)*
*🧩🌷🧩இலக்கை நிர்ணயித்தலும்🎯 அதற்காக திட்டமிடுதலும்👍*
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
🌷🧩🌷🧩🌷
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக,மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து,ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
🌷🧩🌷🧩🌷
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
🌷🧩🌷🧩🌷
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
🌷🧩🌷🧩🌷
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
🌷🧩🌷🧩🌷
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
🌷🧩🌷🧩🌷
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
🌷🧩🌷🧩🌷
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்,தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
🌷🧩🌷🧩🌷
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
🌷🧩🌷🧩🌷
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
🌷🧩🌷🧩🌷
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
*ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.*
*இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!*
🌷🧩🌷🧩🌷
*அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே*
*இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் வருங்காலம்.*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார்.
அவரது பக்தி மனம பதறியது.
அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில்,
கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது.
யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை.......?
நாள்தோறும் இரவு,
கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார்.
மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால்,
கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம்.
எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது....!
யாரிடம் போய்ச் சொல்வது இதை..!
பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே...!
யார் உள்ளே வந்து இப்படி செய்கிறார்கள்...?
அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே,
""கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா...?
கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே.....!
அதையும் வீட்டில் என தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன்.
அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது......?
உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன்.
காலையில் வந்து பார்த்தால் ,
உன் காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்.....!
ஏன் இப்படி?''
என்று அரற்றினார்...!!
இரவு கோயிலைப் பூட்டும் போதுதான் பார்த்தார்.
நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள்.
தளர்ந்த தேகம்.
கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தில் அப்படியொரு பரவசம்.
அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.
பல ஆண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.
அர்ச்சகர் பிரியத்தோடு கேட்டார்:
""பாட்டி!
இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?''
""நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான்.
அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டேன்.
அர்ச்சகர் சிரித்தார்.
""அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?''
""எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது....?
போகப் போகிற கட்டை.
என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா!
ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான்.
அவனது வலது கை வலிக்காதோ!
இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை.
நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்?
அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம் கொண்டாடிக் கேட்கிறது.
நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன்.
எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி,
அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!''
அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.
கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இவள்.
படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி.
ஆனால் எத்தனை பக்தி!
நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன்,
எப்படி பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும்.
அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.
மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு,
தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.
அன்றிரவு,
அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல்,
புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.
பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை.
கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.
""அர்ச்சகரே!
உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை.
என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் ,
நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.
அதன் மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள்.
மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று நடப்பதைப் பாருங்கள்.
பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!
மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க,
அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது.
மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.
அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.
பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள்.
அதற்கு முன் தோத்திரங்களைச் சொன்னபடி,
அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.
மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது.
"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!' என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள்,
சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.
என்ன ஆச்சரியம்!
அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,
சாணம் பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து ,
கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.
நன்கு உறங்கிய அவள்,
அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.
""கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா?
நேற்று குளிர் அதிகம்.
போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?''
என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.
வாய் கொப்பளித்து,
முகத்தைத் தூய்மை செய்து கொண்டு வந்தாள்.
""தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா.
உடம்புக்கு ஆகாது.
நீ வெது வெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள்.
இன்று உனக்காக புள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,''
என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள்.
ஒவ்வொரு புள்ளி வைக்கும் போதும்
"கிருஷ்ணா! முகுந்தா! முராரே!'
என்று கண்ணன் திரு நாமங்களைச் சொல்லிக் கொண்டே புள்ளிவைத்தாள்.
பின் கண்ணனைப் பற்றிய தோத்திரங்களைச் சொல்லியவாறே,
இழையிழுத்துக் கோலம் போட்டாள்.
தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி,
அடுப்பு மூட்டிச்
சமைக்கலானாள்.
உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.
நடந்ததெல்லாம் கனவா , நனவா...?
அன்றும் கோயிலுக்குப் போனார்.
கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப் பார்த்ததும் ,
அவரது மனம் பக்தியில் தழதழத்தது.
அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி,
வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார்.
அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அவள் வரவில்லை.
அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:
""அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.
இனி அது கிடைக்காது''.
ஏன்?-
வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.
""நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது.
இன்று அவளுக்கு உடல் நலமில்லை.
அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.
நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக,
நீங்கள் அவள் இல்லம் செல்லுங்கள்.
அங்கே மக்கள் கூடியிருப்பார்கள்.
மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும்.
சுயநலமின்றி,
தாய்ப்பாசத்தோடு
என்னை நேசித்த அவள்,
பக்தியின் பெருமையை நாளை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்!''
அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.
அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை.
மறுநாள் காலை மூதாட்டியின் இல்லத்திற்கு விரைந்தார்.
கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.
பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.
அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.
அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல,
விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.
கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.
""இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு?
என் பிள்ளை கண்ணனை,
எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அது போதும் எனக்கு!''
மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன்,
மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.
""என் தாய் அல்லவா நீ!....!!!
எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?'' என்ற கண்ணன்,
அந்த ஆன்மாவை,
"இரு குண்டலங்களாக்கி"
தன் செவிகளில் அணிந்து கொண்டான்.
குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.
அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு,
அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார்.
கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.
எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ ,
அந்த இடத்தில் இப்போது,
" இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன"....!!
சுயநலமற்ற ஏழைக் கிழவியின் பக்தியை அங்கீகரித்த ,
கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது....!!
*" சர்வம் கிருஷ்ணார்ப்பணம்."*