Wednesday 30 June 2021

வாழிய பல்லாண்டு


 

உங்களை ஊக்குவிக்கும் மனிதர்களுடன் உறவு வைத்திடுங்கள்.

 உங்களை ஊக்குவிக்கும் மனிதர்களுடன் உறவு வைத்திடுங்கள்.

"எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யாரென்றால்!, என்னால் இயன்றதைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்சன்...
நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்...! சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள, என்று எத்தனை மனிதர்கள்!, இவர்களுக்கு தங்கள் குறிக்கோள் எதுவென்று தெரியவில்லை. அதற்கான விழிப்புணர்வும் இல்லை...
அதனால்தான்!,அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன...
நடுவயதைக் கடந்த எத்தனையோ நபர்கள், அதன் பிறகு பேரறிஞர்களாக., தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன...
அதற்கு உந்துகோலாக இருந்தது எது...? அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு நூலாக இருக்கலாம், அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்...
ஐம்பதாயிரம் குழந்தைகளை முப்பது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு என்ன வென்றால்..,
பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட., சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் திறன்மிக்கவை. இவைகளே குழந்தைகளை அதிகமாகப் பாதிப்படைய வைக்கிறது...
தோல்வி அடைந்தவர்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்!, அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும்...
அதனால்!, உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள். உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்...
நீங்கள் முழு மனிதர்களாக மாற, உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்...
ஆம் நண்பர்களே.
ஆர்வமானது தொற்றுநோயைப் போன்றது, நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்தப் பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் தூண்டிவிடும்.
வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகள் இதுதான், ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!, உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும். கால்கள் வலிக்கும் களைப்பாகும். இதெல்லாம் உங்களுக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்திப் பார்க்கும்.
'ஒய்வெடுத்துக்கொள் என்று சபலம் காட்டும்' தளராதீர்கள்...!, செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால், எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் நலமாகும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 29 June 2021

உயர்ந்தவர் என நினைப்பதே முட்டாள்தனம்

 உயர்ந்தவர் என நினைப்பதே முட்டாள்தனம்.

நாம் கற்ற கல்வி, தேடிய செல்வம், அடைந்த பதவி இவற்றை ஓர் சமூக‌த்தில் உயர்ந்தவர் என்று நினைப்பதே முட்டாள்தனம். முதலில் அதை மாற்றிக் கொள்வோம்...
நீங்கள் படித்தது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன். அதில் உங்கள் திறனைக் காட்டினீர்கள். அதன் விளைவாக, இந்த நிலைக்கு வந்தீர்கள். வேறொருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்திற்குப் பயணம் ஆனார்கள், அவ்வளவுதான்...
துறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவர் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு. தவ வாழ்வு மேற்கொண்டபோதும் முன்கோபக்காரர்...
இவரைப் பற்றித் தெரியாத, ஊருக்குப் புதிதாக வந்த சலவைத் தொழிலாளி ஒருவர், அந்த ஆற்றிற்கு வந்தார்...
அப்போது அந்தத் துறவி, ஆற்றங்கரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருந்தார்...
அந்த சலவைத் தொழிலாளி, அழுக்குத் துணிகளை தண்ணீரில் நனைத்து, கல்லில் அடித்துத் துவைக்கத் தொடங்கினார்...
துணியை அடித்துத் துவைத்தபோது, அதன் அழுக்கு நீர் பறந்து துறவி மீது பட்டது. கண் திறந்து பார்த்தார் துறவி, தன்னைக் களங்கப்படுத்திவிட்டதாக சலவைத் தொழிலாளி மீது கடும் கோபம் கொண்டார்...
அந்தத் தொழிலாளியைக் கண்டபடி திட்டித் தீர்த்தார். சாபமிட்டார். உடனடியாக இந்த இடத்தைவிட்டு ஓடி விடு என்று கூச்சலிட்டார்...
துணி துவைக்கும் வேலையில் முழு கவனமாக இருந்த அந்த தொழிலாளி, துறவி சொன்னதை கவனிக்கவேயில்லை...
தன் வார்த்தையை அவர் மதிக்கவில்லையென்று, கடும் கோபமடைந்த துறவி, நிதானம் இழந்தார். அந்தத் தொழிலாளியை நோக்கி ஓடினார்...
சற்றும் இரக்கம் இல்லாமல் ஒரு தடியால் அந்தத் தொழிலாளியை சரமாரியாக அடித்தார். எதிர்பார்க்காத இந்தத் தாக்குதலால், அந்தத் தொழிலாளி நிலை குலைந்தார்...
“எதற்காக என்னை இப்ப்படி அடித்தீர்கள்...? என்ன தவறு செய்தேன்...?” என்று நலிந்த குரலில் கேட்டார்...
என்ன துணிச்சல் இருந்தால், என் குடிலுக்கு அருகில் நீ வந்திருப்பாய்...? அழுக்கு நீரை என் புனித உடல் மீது படச் செய்து, என்னைக் களங்கப்படுத்தி விட்டாயே...!” என்று கத்தினார்...
தன்னைத் நொந்துகொண்ட அந்தத் தொழிலாளி, “மன்னியுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கு இருந்து புறப்பட்டார்...
தான் அசுத்தப்பட்டுவிட்டதாகக் கருதிய துறவி, ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கினார்...
சற்று தொலைவில், சலவைத் தொழிலாளியும் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்...
துறவிக்கு வியப்பு!. இவர் ஏன் குளிக்கிறார்...? என்று ஐயம் எழுந்தது அவருக்கு...
நான் குளிப்பது நியாயம்!. நீ ஏன் குளிக்கிறாய்...? என்று கேட்டார் துறவி...
நீங்கள் என்ன காரணத்திற்காக குளிக்கிறீர்களோ, அதே காரணத்திற்காகத்தான் நானும் குளிக்கிறேன் என்று அமைதியாக பதில் கூறினார்...
துறவிக்கு வியப்பு!. இழிகுலத்தில் பிறந்த உன்னைத் தொட்டுவிட்டதால் நான் குளிக்கிறேன். என்னைப் போன்ற தெய்வீக சாதுவின் கை பட்டதால் உனக்கு எந்த அசுத்தமும் சேராதே!. நீ பின் ஏன் குளிக்கிறாய்...? என்று கேட்டார்...
அமைதியான குரலில் சலவைத் தொழிலாளி பேசினார்...
அய்யா!, உங்கள் பார்வையில் நான் இழிந்த குலத்தில் பிறந்தவன். ஆனால்!, இழிந்த குலத்தவனைவிட மோசமான ஒருவர் தங்கள் மூலம் என்னைத் தொட்டுவிட்டார்...
தன்னை மறந்து என் மீது கை வைத்து அடிக்கும்படிச் செய்துவிட்ட, பொங்கி எழுந்த தங்களது உணர்ச்சி, வெறுப்பும் அசுத்தமும் கொண்டவை. அத்தகைய உணர்வுகள் கொண்ட ஒருவர் என்னைத் தீண்டிவிட்டதால் நானும் களங்கப்பட்டுவிட்டேன். அதனால் குளிக்கிறேன் என்றார்...
துறவியின் கண்களை மறைத்திருந்த திரை அறுந்து விழுந்தது...
சலவைத் தொழிலாளி சொன்னதை ஆழ்ந்து சிந்தித்தார். தன்னைவிட அந்தத் தொழிலாளி எவ்வளவு மேலானவர் என்பதை உணர்ந்தார். இருவரில், இழிந்தவனாக நடந்து கொண்டது யார்...? என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தார்.
ஆம் நண்பர்களே.
ஆடம்பரமான ஆன்மீக வழிபாடுகளும், வேத வழியில் கடைபிடித்து வந்த தவ வாழ்வும் சொல்லித் தராத பாடத்தை, படிக்காத ஒரு சிலரின் சொற்கள் வாழ்க்கைப் பாடத்தை சொல்லிக் கொடுத்து விடுகிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 28 June 2021

மீண்டும் மீண்டும் மோடி எதிர்ப்பு


 







இவளை என்ன செய்வது..?
மெண்டல் நந்தினி, ''கடந்த ஒன்றரை வருடங்களாக மத்திய பாசிச மோடி அரசு கொரோனாவின் பெயரில் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து மிகப் பெரிய சதித் திட்டத்தைத் தீட்டி இந்திய மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் திட்டமிட்டு அழித்து வருகிறது. இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறித்து மக்கள் அனைவரையும் அடிமைகளாக மாற்றி ஒரு நிரந்தரமான சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதே இந்த பாசிச கும்பலின் நோக்கமாகும். இதற்காகவே கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என நாட்டு மக்களிடம் அச்சத்தை உண்டாக்கி ஊரடங்கு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை திணித்து வருகிறது. டெஸ்டிங் என்ற பெயரில் கொரோனா நோயாளிகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.
இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை கொடுத்து லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாசிச மோடி அரசின் இந்த சதித் திட்டத்துக்கு மருத்துவ மாபியா கும்பல், கார்ப்பரேட் ஊடகங்களும் முழு உடந்தையாக செயல்படுகின்றனர். சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு மிகப் பெரிய போரை பாசிச மோடி அரசு கொடுத்துள்ளது.
இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர். நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ மோடி அரசின் இந்த சதித்திட்டத்தை எதிர்க்காமல் உடந்தையாக உள்ளனர். நாங்கள் ஆரம்பம் முதலே இந்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக பாசிச மோடியை சட்டத்தின்கீழ் நிறுத்தி உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 28. 6 .2021ல் மதுரை காந்தி மியூசியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தோம்.
இதை தடுப்பதற்காக 27. 6 .21 மதியம் முதல் காவல்துறையால் நாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம். நாட்டு மக்களை கொன்று அழிக்கும் மோடிக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட விடாமல் திமுக அரசின் காவல்துறை தடுக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது ஸ்டாலின் ஆட்சியா பாசிச மோடி ஆட்சியா?'' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
கொரானாவின் பெயரில் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து சதி செய்து ஆபத்தான மருந்துகளை கொடுத்து பல லட்சம் இந்தியர்களை படுகொலை செய்த கொடுங்கோலன் மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கிலிட வேண்டும் எனக் கோரி மதுரை காந்தி மியூசியம் அருகே இன்று 28.06.21 காலை 9 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தார் நந்தினி. உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அவர் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ளதால், ''டாஸ்மாக்கை எதிர்த்தாலும் வீட்டுச்சிறை. மோடியை எதிர்த்தாலும் வீட்டுச்சிறை..தமிழ்நாட்டில் நடப்பது ஸ்டாலின் ஆட்சியா? பாசிச மோடியின் ஆட்சியா?கொலைகாரன் மோடியை தூக்கில் போடவேண்டும் என போராட்டம் அறிவித்தால் எங்களை வீட்டுச் சிறையில் வைக்கிறது திமுக அரசு..இந்திய மக்களை கொன்று குவிக்கும் தீய நோக்கத்துடன் பாசிச மோடி கும்பல் நடத்திவரும் கொரோனா சதித்திட்டத்தை முழுமையாக அம்பலப்படுத்துவோம்.'' என்கிறார் என Asianet news பதிவு செய்துள்ளது.
குறிப்பு; இவளை என்ன செய்வது..?ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரை"கொலைகாரன் மோடியை தூக்கில் போடவேண்டும்"என நிருபர்களிடம் சொல்கின்றாள் இவளை இந்த சட்டமும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு வீட்டு சிறை என கூறி அவளுக்கு போலீஸ்பாதுகாப்பும் கொடுத்து அவள் பேச்சை அத்தனை மீடியாக்களும் பேட்டி எடுத்து விளம்பரமும் செய்கின்றதே..?
இவளை எல்லாம் நடுவீதியில் நிற்க வைத்து,அரபு நாடுகளில் உள்ளது போல் கல்லால் அடித்து கொள்ள வேண்டாமா..?அப்பொழுதுதானே அடுத்து அடுத்து இது போன்ற லூசு நாய்கள் புதிதாக தோன்றாமல் இருக்கும்..?
அவளுக்கு ஒரு நாட்டின் பிரதமரை கொலைக்காரன் என்றும் அவனை தூக்கில் போட வேண்டும் என்று ஒருமையில் அழைப்பதும்,பேட்டி கொடுப்பதும்,நடுவீதியில் நின்று போராடுவதும் அவளுக்கு ஜனநாயக உரிமை என்றால்..? அப்படிப்பட்டவளை நடுவீதியில் நிற்கவைத்து கல்லால் அடித்து கொள்ள வேண்டும் என கூறுவதும் எனது ஜனநாயக உரிமையே..

வாழிய பல்லாண்டு


 

ஆழ்ந்த இரங்கல். மதுரை திருநகரில் நீண்ட காலமாக வசித்துவந்த இந்தியன் வங்கி மேனாள் துணைப் பொது மேலாளர், திருநகர் நகரத்தார் சங்கத்தின் ஆரம்ப காலத் தலைவர் , அரிமளம் பிஆர். அழகப்பன் செட்டியார் வயது 85, அவர்கள் இன்று காலை திருநகர் வீட்டில் இறைவன் திருவடி அடைந்தார்கள. அவர்களின் இறுதிச் சடங்குகள் திருநகர் சித்திரகலா காலனி மணி தெருவில் உள்ள வீட்டில் நாளை காலை நடைபெறுகிறது.


 

மாத்தூர் ஐநூறீஸ்வர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் குழு தலைவர் பணி களம் காணும் சொக்கநாதபுரம் ஸ்ரீராம் சொக்கலிங்கம் அவர்கள்.

 மாத்தூர் ஐநூறீஸ்வர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் குழு தலைவர் பணி களம் காணும் சொக்கநாதபுரம் ஸ்ரீராம் சொக்கலிங்கம் அவர்கள்.

இன்று காலை மாநகர் மதுரையில் மூன்று சோனா சந்திப்பு.
மாத்தூர் கோவில் நிர்வாகக் குழு தலைவராக களம் காண உள்ள மதுரை மதுரை மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ஸ்ரீராம் வயி. நா. சொக்கலிங்கம் அவர்கள்
நகரத்தார் சமூகத்தின் முன்னோடியான துவார் வள்ளிலிங்கம் நற்பணி டிரஸ்ட் தலைவரும், மாத்தூர் மேனாள் தலைவருமான வலையபட்டி அக்ரி எஸ்பி. சொக்கலிங்கம் அவர்களுடன் பள்ளத்தூர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம்.
சமூக அக்கறையுடன் உழைப்பவர்கள் உரிய பணியாற்றிட வாழ்த்தி மகிழ்வோம். 28-06-2021

மனதை வெறுமையாக வைத்திருங்கள்

 மனதை வெறுமையாக வைத்திருங்கள்.

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகி விடும்...
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம், அது அமைதியாகிவிடும் .
அது தன்னிச்சையாக நடக்கும்...
அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல...! இயலும் செயலே...! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை...!
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்...
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவரச் சொன்னார்...
சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்...
ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சி அளித்தது...
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்...? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது...? என்று தண்ணீரில்லாமல் திரும்பி விட்டார்...
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்...
நீர் நிலையருகே சென்று சீடர் பார்த்தார். இப்போது நீர் தெளிந்திருந்தது .சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது...
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடர் புத்தரிடம் திரும்பினார்...
புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடரையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார். தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்...? என்றார்...
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி...! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று...!
ஆக!, நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா...?
ஆமாம் சுவாமி...! என்றார் சீடர்.
நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகி விடும் என்றார் புத்தர்.
ஆம் நண்பர்களே.
மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக் கழிக்கிறது. ஏனெனில்!, அமைதியாக இருக்கிறபோதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது.
குழப்பம் என்பது அமைதியின்மை எனினும் குழப்பத்தை அமைதியாகவே அணுக வேண்டும்” மனதில் போராட்டமும் குழப்பமும் மிகுதியாகிறபோது கண்களை மூடுவதற்குப் பதிலாக மனதை மூட வேண்டும்.
மனதை வெறுமையாக வைத்திருந்தால்தான், உங்கள் திறமை முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு ஏற்ப்ப, புகழ்செல்வம் வெளி நாடுகளில் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக இல்லாமல்,

 திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு ஏற்ப்ப, புகழ்செல்வம் வெளி நாடுகளில் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக இல்லாமல்,

தாய் நாட்டுக்கும் அளப்பரிய பெருமை சேர்க்க பாடுபடும் நல்ல உள்ளங்களை நாமும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். .
*"நியூசிலாந்தில் சிறந்த 25 கிவி-இந்திய சமூகத் தலைவர்களின் பட்டியலில்"*
நம் மதுரையை சேர்ந்த ஒரு அனுபவமிக்க வணிக இயக்குனர் திரு இளங்கோ கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் சேவைகளை வழங்குவதோடு வெற்றிகரமான அச்சிடும் தொழிலை நடத்தி வருகிறார்.
NZ இந்து கோயில் சங்கத்தின் பொருளாளராகவும் உள்ளார்.
கிவி இந்திய புலம்பெயர்ந்தோரால் நன்கு அறியப்பட்ட இளங்கோ கிருஷ்ணமூர்த்தி பல ஆண்டுகளாக உள்ளூர் சமூகத்தினருக்காகவும் இந்தியர்களுக்காகவும் , அரசாங்கத்துடனும் குரல் கொடுத்து வருகிறார். ஒரு வலுவான சமூகத் தலைவரான திரு கிருஷ்ணமூர்த்தி ஆக்லாந்து மக்களுக்காக மங்கேரே திரு சுப்பிரமணியார் ஆலயம் கோயிலைக் கட்டுவதில் முதன்மைப் பங்கு வகித்தவர்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மானுரேவா புறநகரில் வசிப்பவர். கிருஷ்ணமூர்த்தி 2019 ஆம் ஆண்டு உள்ளூர் வாரியத் தேர்தலில் நின்றார்.
தென் ஆக்லாந்தின் இந்திய சமூகத்தில் பிரபலமான ஆளுமையான திரு கிருஷ்ணமூர்த்தி 1996 ஆம் ஆண்டில் வைகாடோ பல்கலைக்கழகத்தில் தனது எம்பிஏ பட்டம் பெறுவதற்கு முன்பு அறிவியல் மற்றும் பொறியியலில் இரண்டு பல்கலைக்கழக பட்டங்களுடன் நியூசிலாந்திற்கு வந்தார்.
ஒரு மக்கள் நபராக , வலுவான மக்களின் உரத்த குரலாக திரு கிருஷ்ணமூர்த்தியின் நடவடிக்கைகள் ,இந்திய மக்களின் பிரட்சனைகளை தீர்ப்பதில் ஆர்வம் , இந்திய , தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதில் உள்ள ஆர்வம், ஆகிய பண்புகள் நியூசிலாந்தில் இந்திய கலாச்சாரத்தை உயிரோடு வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக, சமூகம் சுத்தம் செய்தல், இளைஞர்களுக்கு தமிழ் கற்பித்தல், பல்வேறு சமூக நிகழ்வுகளில் சமையல், நிதி திரட்டல், மத மற்றும் பன்முக கலாச்சார உரையாடல்கள், குடும்ப ஆலோசனை மற்றும் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
திரு சுப்பிரமணியம் கோயில் அதன் சமூகத்திற்கான பூஜை சேவைகளுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு உதவுகிறது. அதன் சமூக சேவையின் கீழ் , ஆலயம் சமூக சேவை (ACS) மற்றும் ஒரு வானொலி நிகழ்ச்சியை நடத்துகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிளானட் எஃப்.எம் 104.6 இல் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி வேதங்களைப் பற்றிய இரட்டைவாதத்தையும் புரிதலையும் ஊக்குவிக்கிறது. வேதாந்தத்தில் கேள்வி பதில் அளிக்கிறது, வெளிநாடுகளில் இருந்து சாதுக்களுடன் நேர்காணல்கள் மற்றும் விநாயகர், முருகன், சிவா, விஷ்ணு மற்றும் அம்மன் பாடல்களை ஒலிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியை திரு கிருஷ்ணமூர்த்தி தொகுத்து வழங்குகிறார்.,
தனக்குள்ள தமிழ் மொழி மற்றும் இலக்கியம் மீதான ஆர்வத்தை திரு கிருஷ்ணமூர்த்தி குழந்தைகளுக்கு பக்தி பாடல்களையும் தமிழையும் கற்பிக்கும் ஆலயம் கலாச்சாரம் மற்றும் மொழிப் பள்ளி என்ற பெயரில் குழந்தைகளுக்கான வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஏ.சி.எஸ் விளையாட்டுக் கழகத்தின் கீழ், கோயில் ஒவ்வொரு வாரமும் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளையும் ஏற்பாடு செய்கிறது.

மருத்துவம் படிக்க விரும்புவோர் NEET தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

பாராட்டி மகிழ்வோம். பாண்டிச்சேரியில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 26 வயது சந்திர பிரியங்கா அவர்களின் பணி சிறக்கட்டும். பேராற்றல் மிக்க பெண் இனத்தின் சிறப்பு மேலோங்கட்டும். வாழிய இளம் அரசியல் களம் - மனிதத்தேனீ


 

மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலவசத் தடுப்பூசி முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முருகன் டிராவல்ஸ் எஸ்பி. பழனியப்பன் அவர்களுக்கு அதன் தலைவி மணிமேகலை பழனியப்பன் கைத்தறி ஆடை அணிவித்தார். அருகில் ஆனந்த் மற்றும் இளைஞர் சங்கத்தின் தலைவர் கேஎன். தியாகராஜன்.


 

ஜெய்ஹிந்த் சுந்தர்………..

 ஜெய்ஹிந்த்

சுந்தர்………..
ஜெய்ஹிந்த் என்றுதினம் சொல்வோம் - நாம்
இந்தியர் என்றோங்கிக் கூவிக் களிப்போம்
பொய்முந்தி வைத்திங்கு பேசும் - சிறு
புல்லரைக் கீழ்தள்ளிப் போட்டே மிதிப்போம்
செய்வினை செய்திங்கு வைப்பார் -இவர்
செய்யாத துயரில்லை போட்டுத் துவைப்பார்
பொய்வினை பலவிங்கு ஆற்றி - நாளும்
பிரிவினை பேசிநம் மானம் சிதைப்பார்
தமிழென்ற மொழியொன்று கொண்டோம் - அதன்
தம்பிகள் எனநூறு நாடெங்கும் கண்டோம்
அமிழ்தென்று சொல்லித்தேன் உண்டோம் - இவை
அத்தனையும் ஒருதாயின் உதிரமே கண்டோம்
இந்தியும் சமஸ்க்ருதமும் உண்டு - இன்னும்
இவையோடு மொழிநூறு நாடெங்கும் உண்டு
சொந்தமே நமக்கென்று கொண்டு - வைடா
சொல்லாத வர்வாயில் பெரிதொன்று குண்டு
வடக்கென்றும் தெற்கென்றும் சொல்லிப் - பிரிக்கும்
வழக்கொன்றை நாட்டிலே இன்றே ஒழிப்போம்
கிழக்கென்ற திசையார்க்கும் ஒன்று - வெள்ளிக்
கீற்றென்று வெளியில்வர இன்றே முழிப்போம்
கூவியே சொல்லுவது ஜெய்ஹிந்த் - எங்கள்
குரல்வளை நெரித்தாலும் கூறுவது ஜெய்ஹிந்த்
ஆவியே போனாலும் ஜெய்ஹிந்த் - அந்த
ஆண்டவன் தடுத்தாலும் பாடுவது ஜெய்ஹிந்த்


வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

 வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ..

ஒரு அறிஞர் கூறினார்:
''வாய்ப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்குக் கிடைக்கும் இனிய பழத்தைப் போலத்தான்''. அது கெட்டுப் போவதற்கு முன் அதைப் பயன்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் பழம் அழுகிப் போய் விடும்; பயன் தராது...
இன்றைய விநாடிகளை!, நாளையோ!, நாளை மறுநாளோ!, நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது..
நாளை மறுநாள் நீங்கள் செய்யும் வேலை, நாளை மறுநாள் நீங்கள் செய்யக் கூடிய வேலை தானே தவிர, இன்றைக்குச் செய்யக் கூடிய வேலை அல்ல.
இன்றைய நாளது தேதி, மாதம் - ஆண்டு இனி மீண்டும் வராது...
இன்று கிடைப்பன இன்றே, உடனே மதிப்பிட்டு ஏற்கும் உறுதியும், மனப்பான்மையும் நமக்கு இருக்க வேண்டும்...
கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவர், மனிதனிடம் வந்து போகும் வாய்ப்பினை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறார்...
அதுதான் வாய்ப்பு (opportunity) என்னும் சிலை...
அந்தச் சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்...
வாய்ப்புச் சிலையிடம் சில கேள்விகள் ...
உனக்கு இறக்கை எதற்கு...?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக.?
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு...?
மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக...!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்...?
வாய்ப்பினைப் பயன்படுத்தாதோர்களிடம் இருந்து
கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக...!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது...?
வாய்ப்பினைத் தவற விட்டவர்கள் என்னைப் பற்றிக் கொள்ளாது இருப்பதற்காக...!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள்...
இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்...
ஒரு முறை வாய்ப்பு நழுவி விட்டால் அதே வாய்ப்பு மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்...?
ஆம் நண்பர்களே.
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் எப்போதும் வராது; வரும் போது அதை வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நழுவ விடக் கூடாது. நழுவ விட்டால், அதே வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் அடுத்த மனிதர் அதைக் கொத்திக் கொண்டு போய் விடுவார்.
இன்று கையில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்து இருப்பதை விட, கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேற முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மனோஜ் சின்ஹா - ஜம்மு காஷ்மீர் யூனியன் டெரிடரியின் லெஃப்டினட் கவர்னர். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. 24 ஜூன் இவருடைய மகனின் திருமணம். ஆனால் இவர் அந்த திருமணத்திற்குப் போகவில்லை. காரணம் அன்று பிரதமர் நடத்திய ஜம்மு காஷ்மீர் டீலிமிடேஷன் தொடர்பாக அதி முக்கியமான அனைத்து கட்சி மீட்டிங் நடைபெற்றது. அது தொடர்பாக அஜீத் தோவல், அமீத் ஷா என் பலரும் சில நாட்களாக முக்கியமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அது தேசத்திற்கு மிகவும் முக்கியமான மீட்டிங் என்பதாலும், தான் அந்த மீட்டிங்கில் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்பதாலும் தன் கடமையைச் சொய்துள்ளார் இந்த அற்பணிப்புள்ள தேசபக்தர். பிஜேபி சர்காரைப் பொறுத்தவரை தேசமே முதன்மையானது..!


 

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை.

 கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை.

அர்த்தமுள்ள இந்து மதம்
*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மதக் குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துக்களுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம்.
பன்னிரு திருமுறைகள்,
பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,
மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பாகவதம்,
அரசியலுக்கு
👉அர்த்த சாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு
👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.
11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையைக் கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலைக் குறிப்பிடுவது மிகவும் கடினம்.
ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.
14. சகிப்பு தன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனித மதம்.
இன்னுமும் சொல்லிக்கொண்டே போகலாம்......
இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை
கொள்வோம்.

Saturday 26 June 2021

டாக்டர் வி.ரவீந்திரநாத் இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதத்தேனீ 26.06.2021


 

தீர்வுகள் இல்லாத சிக்கலே இல்லை.

 தீர்வுகள் இல்லாத சிக்கலே இல்லை.

சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை. சிக்கல் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதேபோல தீர்வுகள் இல்லாத சிக்கல்களும் இல்லை...
ஆனால்!, நாம்தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சில வேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறு செயல்கள் கூட பெரிய சிக்கல்களாக கருதுவதுண்டு...
அதைப் பற்றியே நினைத்து, நினைத்து கலங்குவதுண்டு. ஆனால்!, அவை மிகச் சிறிய செயலாக இருக்கும். முதலில் நாம் சிக்கலுக்குள்ளேயே இருக்காமல், அதைவிட்டு வெளிவர வேண்டும்...
அதைத் தீர்க்கும் வழிபற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் உரிய சிக்கலுக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பதில்லை...
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள்...
அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக சுவையானதாக இருக்கும். ஆனால்!, மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்...
மீனவர்கள் கையோடு, பனிக்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும்!, மக்களுக்கு மனநிறைவு இல்லை...
அப்போது பிடிக்கப்பட்ட மீனுக்கும் பனிக்கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர், இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர்…
ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை…
இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு என்று ஆலோசித்தார்கள் மீனவர்கள், புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள்...
குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக. அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக ஓய்வின்றி நீந்திக் கொண்டே இருந்தன...
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது...
ஆம் நண்பர்களே.
நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கையைச் சுவைக்க கவலைகளோடே இருக்கக் கூடாது.
சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். சிக்கல்கள் என்கிற சுறா இருந்தால் மட்டும்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும்.
சிக்கல்கள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பியேதான் கிடப்போம், சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்.