Saturday 31 December 2016

மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் மற்றும் தர்மம் தலைகாக்கும் மாத இதழ் ஆசிரியர் பவானி மின்னல் பிரியன், மின்னல் பிரியன், மூத்த பத்திரிகையாளர் எஸ்.ஞானசேகரன்


மகாத்மா காந்தி நினைவு தினம் அழைப்பிதழ்


Malai Murasu Paper 31.12.2016 page 5


Madurai Mani Paper 31.12.2016 Page 4


Makkal Kurual Paper 31.12.2016 Page 7


Dinamalar Paper 31.12.2016 page 3


வீரத்தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம்



 



நேதாஜி பிறந்தநாள் விழா அழைப்பிதழ்



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடவுள் எங்கே? எப்படி?
ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.
அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.
''அம்மா!நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.
அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.
உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.
உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.
அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.
நன்றி ஆா் பாஸ்கர்

மனிதத்தேனீயின் தேன்துளி



Friday 30 December 2016

Malai Murasu Paper 30.12.2016 page 5


Madurai Mani Paper 30.12.2016 Page 4


சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


நீதியரசர் வைத்தியநாதனின் குரல் மக்களின் குரல்


திருப்பூர் குமரன் நினைவு தினம் அழைப்பிதழ்


தினமலர் - Page 10 - Dec 30, 2016


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💢💢💢💢💢💢💢💢💢💢
*_சுயம் அறிதல்_*
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.
கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.
‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.
கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.
சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.
‘ஏன்?’ என்றார் கடவுள்.
‘அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’ என்றான்.
‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.
அப்படியே செய்தான் பக்தன்.
அப்போது ஒரு குடிகாரன் வந்தான் ,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.
பிறகு ஒரு திருடன் வந்தான் ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு நோயாளி வந்தான் ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு துறவி வந்தார், ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.
சிறிது நேரம் கழிந்தது. கடவுள் பக்தனிடம் வந்தார்.
‘பார்த்தாயா உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும். உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல் வெற்றி உனக்குத்தான்’ என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்
நாமும் தெளிவடைவோம்.
💢💢💢💢💢💢💢💢💢💢
நன்றி எஸ் நாகப்பன்

மனிதத்தேனீயின் தேன்துளி