Tuesday 19 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உ.எண்.363 .
இந்தியா, அமெரிக்கா உட்பட 150 நாடுகள் அழுத்தம் : பன்னாட்டு விசாரணையை ஏற்று பணிந்தது சீனா.!
சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகின் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 3 இலட்சம் பேரை கொன்றுள்ளது. கிட்டத்தட்ட 50 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா நுண் கிருமியை வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் வைத்து சீனாதான் பரப்பியது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆஸ்திரேலியாவும் இது பற்றி பரந்த அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ஐநா சபையின் முக்கிய அமைப்பான உலக சுகாதார சபையின் 73 வது கூட்டம் நேற்று ஜெனிவாவில் தொடங்கியது. காணொலி முறையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஐநா பொது செயலர் ஆண்டோனியோ குட்ரேஸ், உலக சுகாதார சபையின் தலைவர் டேற்றோஸ் அதானம் ஆகியோர் உட்பட முக்கிய பன்னாட்டு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
இதில் பேசிய அந்தோனியா குட்ரேஸ் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை ஏற்று பல நாடுகள் செயல்படாததால்தான் தொற்று அதிகம் ஏற்பட்டு அதற்கான விலையை நாம் கொடுத்துக் கொண்டு வருகிறோம் என்றார். அடுத்து கொரோனா நோய் தோற்று உருவானது குறித்து சுதந்திரமான விசாரணை ஓன்று நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தீர்மானம் கொண்டு வந்தது.
ஐநா உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் பாரபட்சமற்ற, சுதந்திரமான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
மேலும் எந்தெந்த வழிகளில் இது மனிதர்களுக்கு பரவுகிறது என்பது குறித்து அறிவியல் பூர்வமான கள ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஐநாவின் உணவு, வேளாண் அமைப்பு, கால்நடை துறைகளுடன் இணைந்து இந்த விசாரணை செய்யப்பட வேண்டும் என கூறினர். ஆனால் இந்த பேச்சுக்களில் எதிலும் சீனாவின் பெயரை நேரடியாக சபையினர் கூறவில்லை.
இந்த தீர்மானத்துக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், கனடா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, கத்தார், ரஷ்யா, சவூதி அரேபியா, பிரிட்டன் உட்பட 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த விசாரணையை நடத்துவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த சீனா இப்போது உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து தீர்மானத்துக்கும், விசாரணைக்கும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காணொலி மூலமாக பங்கேற்று பேசிய சீன அதிபர் ஷி-ஜின்பிங் "சீனா ஆரம்பத்தில் இருந்தே பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார். சுதந்திரமான விசாரணையை ஏற்பதாகவும் கூறிய அவர், ஆனால் இப்போது விசாரணைக்கான நேரமில்லை என்றும், முதலில் மக்களை முழுமையாக காப்பாற்றுவோம், பிறகு விசாரணை செய்வதே நல்லதாக இருக்கும்" என்றார்.
சீனாவை பணிய வைக்கும் இந்த நடவடிக்கைகளை ஐநா சுகாதார சபை மூலம் ஆஸ்திரேலியா ஒரு முக்கிய நாடாக இருந்து செய்து முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://kathir.news/news/-150--13608
நன்றி வெங்கடேசன் சுவாமிநாதன்

No comments:

Post a Comment