Thursday 28 February 2019

தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தலைப்பு - மீண்டு வரவேண்டும்*
அண்டை நாட்டு நல்லுறவை
அமைதி வழியாய் பேணுவதும்
சண்டை சச்சரவு தவிர்த்திட்டு
சமாதானம் விரும்பும் பாரதம்
போரைத் தேடிப் போவதில்லை
போட்டுத் தாக்கும் நோக்கமில்லை
பொதுவாய் அமைதி நிலவவே
பொறுப்புடன் இருக்கும் பாரதம்
புல்வாமா தாக்குதல் நடந்ததால்
புரவியின் வேகம் கொண்டாலும்
புத்தி சாதுர்யம் கொண்டிங்கே
பொறுமையொடு தீட்டிய திட்டமாகும்
வேகம் கொண்டு விமானங்கள்
விடியலில் விரைந்து சென்றது
வளரும் தீவிரவாத மண்ணை
வேரோடு வீழ்த்திட்டு வந்தது
பக்குவம் இல்லா பாகிஸ்தான்
பரந்து அனுப்பிய விமானங்கள்
பாரதம் நோக்கி வந்ததை
பக்குவமாய் விரட்டியது ராணுவம்
விமானம் சுற்றி வளைத்ததில்
வேகமாய் திரும்பினர் எதிரவர்கள்
விமானி நம்மவர் வீரமகன்
வசமாய் அவரிடம் சிக்கிட்டார்
பாரதத் தாயின் இனியமகன்
பாரதம் காக்கச் சென்றமகன்
பண்பு நிறைந்த‌ அபிநந்தன்
பத்திரமாய் மீண்டு(ம்) வரவேண்டும்
இத்தனை நடந்து இருந்தாலும்
எதையும் எதிர்க்கும் ஆற்றலொடு
எல்லாம் பலமும் கொண்டிங்கே
எதிர்த்து வென்றிடும் பாரதம்!
என்றும் அமைதி விரும்பும்
தேவகோட்டை லெட்சுமி நாராயணன்.

மாலைமுரசு 28.02.2019 பக்கம் 7


வேண்டுபவர்கள் பயன்படுத்திடலாம். கீழே உள்ள தொலைபேசியில் பேசிய பிறகு முடிவு செய்திடலாம்...


அழகான பழனிமலை ஆண்டவர் பாடல். டாக்டர் சோபனா விக்னேஷ் குரல் வளம்..

உயர்ந்த குணம்....




















உயர்ந்த குணம்....
இருட்டில் கண் பார்வை இழந்த
ஒருவர் கையில் விளக்குடன் சென்றிருக்கிறார் அதை கண்ட
ஒருவர் "உனக்குத்தான் கண் 
தெரியாதே நீ எதற்கு விளக்கோடு
சென்று கொண்டிருக்கிறாய்" என்று
கேட்டார் அதற்கு அந்த கண்பார்வை இழந்தவர் "எனக்குத்தான் கண்
தெரியாது எதிரில் வருபவர்களுக்கு
கண் தெரியுமே அவர்கள் என்னை
பார்த்து விலகிச் செல்வார்கள் அல்லவா அதற்குத்தான் "என்றார் .......
நன்றி விஜயநாதன்

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானம்..

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானம்..
அபிநந்தனை மரியாதையா நடத்தி அவர மத்தவங்க கிட்ட இருந்து காப்பாத்தியிருக்க பாகிஸ்தான் இராணுவத்தினர் ஒழுக்கத்தை இந்தியா கற்றுக்கொள்ளவேண்டும்.
இதுவே பாகிஸ்தான் இராணுவ வீரன் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டிருந்தால் அவனை என்ன பாடுபடுத்தியிருக்கும் இந்தியா..?
இப்படிக்கு அந்த நாட்டின் சமாதான தூதுவர்கள்.
இந்தியா பிரான்ச்.
வரலாறு தெரியாத கோமாளிகளே..!
ஒரு பாகிஸ்தான் வீரனல்ல 90,000 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள், அதுவும் இராணுவ தளபதியுடன் பங்களாதேஷ் போரில் இந்திய இராணுவத்திடம் சரணடைந்து, உயிருடன் பத்திரமாக மரியாதையுடன் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதுமட்டுமல்ல கார்கில் போரில் கொல்லபட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உடலை அந்நாடு வாங்கமறுத்து, இவர்கள் யாரென்றே தெரியவில்லை என்று கைவிரித்துவிட்டது.
காரணம் மானப்பிரச்சனையாம்.
ஆனால் இந்தியா என்ன செய்தது தெரியுமா..?
அவர்கள் அனைவரும் இந்தியாவிலேயே
அவர்கள் மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு , இந்த மண்ணில் புதைக்கப்பட்டனர்.
அதுவும் எப்படி..?
அவர்கள் உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டு இராணுவ மரியாதை செய்யப்பட்டு, இங்கே அடக்கம் செய்யப்பட்டனர்.
உலகத்துக்கே கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, ஒழுக்கம் கத்துக்கொடுத்த தேசத்துக்காடா ஒழுக்கபாடம் நடத்துறீங்க...?
வரலாறு தெரியாத கோமாளிகளா.
நெல்லை ஜவகர்
-Ashok Ranjit

#அபினந்தா உனக்கு அபிநந்தனம்....! எங்கள் அகம் நிறைத்தவனே

#அபினந்தா உனக்கு அபிநந்தனம்....!
எங்கள் அகம் நிறைத்தவனே
கருப்பு கண்ணாடியும்,
மஞ்சள் சால்வையும்,
கம்பீர தமிழும்,
இருந்திருந்தால் உன்
வீரம் பாடியிருக்கும்..!
கம்பீரத்தின் மொத்த உருவமே
அஞ்சாத உன் முகம் காட்டியது
இந்தியாவின் முகம்..
எங்கள் சிந்தை நிறைந்தவனே
சிறுநரிகளிடம்
சிக்கிவிட்டோமே
என எண்ணாதே
சிங்கத்தை சிறுநரிகள்
என்ன செய்யும்..!
சிறு பயமுமின்றி
நெஞ்சை நிமிர்த்தி நீ
நடந்த நடை சொன்னது
சிங்கத்தின் நடை என்று..!
இந்தியன் நடை இப்படித்தான்
என நானிலம் அறிந்தது...!
உனை அழைத்து செல்லவில்லை
இழுத்து செல்லுகிறார்கள் என
உலகம் அறிந்தது..!
கட்ட பொம்மனும்
இப்படித்தான் நடந்திருப்பான் என
உனை பார்த்து அறிந்தோம்..!
#புறநானூற்று வீரனை
புத்தகத்தின் பக்கங்களில் கண்டோம்
இன்று கண்டுவிட்டோம்..!
சகோதர சண்டையில்
சரிந்தவர்கள் இனம் பேசலாம்
இங்கே இனம் பேச்சில்லை உனக்காக
இந்தியனின் சுவாசம் பேசும்..!
உன் உயிர் பாகிஸ்தானிடம் இல்லை
பாகிஸ்தானின் உயிர்
உன்னிடம் மட்டுமே உள்ளது..!
இந்தியனின்
நாட்டுப்பற்றை
நாடு அறிந்தது
பாரத மாதாவின் தவப் புதல்வனே
உறங்க மனமின்றி
வாஞ்சையுடன் உனை
வரவேற்க காத்திருக்கிறோம்...!
பல்லாவரம் சம்பத்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழகத்திலிருந்து போர் வேண்டாம் என்று சொல்பவர்கள் இரு தரப்பினர். முதல் தரப்பினர் உண்மையாகவே போர் வேண்டாம் என்று கருதுகிறவர்கள். இரண்டாம் தரப்பினர் இந்தியாவை, இந்திய ஒற்றுமையை அடியோடு வெறுக்கும் பொறுக்கிகள். அயோக்கியர்கள். இந்தியாவின் கை ஓங்கியிருப்பதாக அவர்கள் நினைப்பதால் போர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் கை ஓங்கினால் இவர்கள் வாய் அடைத்துப் போய் விடும்.
இம்ரான்கானை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்வது வேறு. அவருக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசுவது வேறு. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியவில்லை என்பது எல்லா நாடுகளுக்கும் தெரிந்தது. அந்த அளவில் இந்தியா எடுத்த நடவடிக்கையை அனேகமாக எல்லா நாடுகளும் ஆதரிக்கின்றார்கள். மோதியை எனக்கும் பிடிக்காது. ஆனால் அவர் இந்தியப் பிரதமர். ஆனால் பிரிவினைப் பொறுக்கிகள் அவர் இந்தியப் பிரதமர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இம்ரான்தான் அவர்களுக்கு பிரதமர்.
வெட்கம் கெட்ட பிறவிகள்.
நன்றி அனந்தகிருஷ்ணன் பக்சிராஜன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லை மீறி வந்த எனிமி நாட்டு ராணுவ வீரனை தான் சிறைபிடித்து விட்டால், எந்த நாடும் முதலில் அதை வெளியே சொல்லாது..! ஏன் ...?
பாகிஸ்தான் இதைச் சொல்லாமல் இருந்தால், "எல்லை மீறி உங்கள் நாட்டிற்குள் எங்கள் ராணுவவீரர் வந்தார்.. அவரைத் திருப்பிக் கொடுங்கள்..!" என்று இந்தியாவால் கேட்க முடியாது..!
ஆனால் இப்போது ஜெனிவா ஒப்பந்தப்படி, பிடிபட்ட அபினந்தனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படித்தான் நடத்த வேண்டும் என்றும், திருப்பி அனுப்புமாறும் இந்தியாவால் கோர முடியும்..! காரணம்: அவர் பிடிபட்டிருப்பதை பாகிஸ்தானே சொல்லியிருக்கிறது. எனவே நம் அபினந்தன் உயிருக்கும் உடல்நலத்திற்கும் ஆபத்தில்லை..!
பயங்கரவாத பாகிஸ்தானுக்கு இது கூட தெரியாதா என்ன..? தெரியும்..! அப்புறம் ஏன் அபினந்தனை சிறைபிடித்ததைக் காட்டுகிறார்கள்..?
நண்பர்களே..! காரணத்தை நான் மனம் வருந்திச் சொல்கிறேன்...
உலகின் எந்த நாட்டிலும் நாட்டு மக்களிடையே அரசியல் வித்யாசங்கள் இருக்கும். ஆனால் , இது போன்ற சோதனை நேரங்களில், மக்கள் எல்லோருமே தம் தாய்நாட்டின் பின்னால், அரசாங்கத்தின் பின்னால், ஒற்றுமையுடன் ஆதரவாய் இருப்பார்கள்..! அதன் பெயர்தான் நாட்டுப்பற்று..!
ஆனால், இந்தியாவில் மட்டும்தான்... அதுவும் இப்போதுதான்... ஒரு கேவலம் நடந்து கொண்டிருக்கிறது..! மோடி வெறுப்பு என்பது இப்போது அரக்கத்தனமான, அசிங்கமான, அராஜகமாக இங்கே மாறிக் கொண்டிருக்கிறது..!
"அபினந்தன் பிடிபட்டது பிஜேபி அரசாங்கத்தின் தவாறால்தான் ..!" என்று இதைக் கூட வைத்து இந்திய அரசாங்கத்தை ஏளனம் செய்யவும், நம் நாட்டையே கேவலப்படுத்தவும், பிரிவினை வளர்க்கவும் இங்கே ஒரு மாக்கள் கூட்டம் இருக்கிறது..! இது பாகிஸ்தானுக்குத் தெரியும்; அந்தக் கூட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வளர்ப்பதே பாகிஸ்தான்தான்..!
அதனால்தான் பாகிஸ்தான், அபினந்தன் பிடிபட்டதை விலாவாரியாக வீடியோவில் காட்டுகிறது..! அதை வைத்து இங்கிருக்கும் புல்லுருவிகள், அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்வார்கள் என்பதே அவர்களின் நோக்கம்..! பாகிஸ்தானுக்கு இன்றைய முக்கியத் தேவை ராணுவ வெற்றி அல்ல; பிஜேபி அரசை அகற்றுவதுதான்..!
பிளான்படியே, இங்கிருக்கும் உள்ளூர் துரோகிகளின் அசிங்கப் பிரச்சாரங்கள் இப்போது நடக்கிறது..! மோடி வெறுப்பில், நாட்டையை காவு கொடுக்கும் சாத்தான்கள் போல ஆகி விட்டார்கள்..!
இதற்கு மேல் நான் சொல்ல ஏதுமில்லை. ஈனப்பிறவிகள் கண்டு வெறுப்பில் மனம் அமைதி கொள்ளவில்லை.
நன்றி Shankar Rajarathnam சார்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🙋‍♂️இது தான் வாழ்க்கை🙋‍♀️🙌😍
தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த அறிவறியா சமுதாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் போதிக்கிறது.
எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.
அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.
இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன.
இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் நிறைந்தது என்பது தெரிவதில்லை.
என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!
இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!
நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரத்தை நான் கண்டு கொள்ள வேண்டும்????
யார் இவர்கள்????
என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????
நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!
மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!
தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.
"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
இன்னார்க்கு நான் கணவன்/மனைவி,
இன்னார்க்கு நான் அப்பா/அம்மா,
இன்னார்க்கு நான் அண்ணன்/தம்பி,
இன்னார்க்கு நான் அக்கா/தங்கை,
இன்னார்க்கு நான் அதிகாரி/வேலையாள்,
இன்னார்க்கு நான் நண்பர்/எதிரி
இந்த வட்டத்துக்கு உள்ளேயே சாகும் வரை உழன்று கொண்டு இருக்காதீர்கள்.
எல்லோரையும் படைத்த இயற்கை என்னையும் படைத்திருக்கிறது.
இயற்கையின் ஒரு பகுதி நான்.
இயற்கைக்குள் நான்,
எனக்குள் இயற்கை.
நான் வேறு, இயற்கை வேறு இல்லை.
இயற்கை தான் நானாக இருக்கிறது.
நான் தான் இயற்கையாக இருக்கிறேன்.
உங்கள் மனதை விரியுங்கள்,
இதயத்தில் அன்பு சிறகடித்து பறக்கும்.
அப்புறம் பாருங்கள் உங்களுக்குள்,
எப்போதும் பேரமைதி, பேரின்பம்...
வாழ்க வளமுடன்🙌
வளர்க அருளுடன்🤚அன்பர்களே💖💖💖

நெப்போலியன் நேரந் தவறாமை


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


















எழவு வீட்டில் இறுக்கமான நேரத்தில் கூட ஒரு ஆள் தெளிவாக சுற்றிகொண்டிருப்பார்...
எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து மயானத்தில் இருந்து கொல்லிவைத்தவன் வந்தபிறகுதான்
சாப்பாடு போடுவார்கள்..
அப்ப அந்த பந்தியில் முதல் ஆளாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அருகில் போட்டிருக்கும் பெஞ்சியில உட்கார்ந்து கொண்டு
வெத்தலைய போட்டபடி
#முட்டைக்கோசுல_உப்பு_பத்தலை
என்று கொறைசொல்லிகிட்டு இருப்பார் அந்த ஆள்..
அந்த இரகத்தை சேர்ந்தவன்தான் இந்த எச்சநாய் மதிமாறனும்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்லது நடக்கட்டும்...
பாகிஸ்தானிடம் விமானப்படை
கமாண்டர் அபிநந்தன் சிக்கிக்
கொண்டிருக்கிறார் என்ற தகவலை
நமது பாதுகாப்பு செயலரும் உறுதி
செய்திருக்கிறார்.
இது தொடர்பாக நம் முகநூல்
போராளிகளின் நடவடிக்கைகள்தான்
கதிகலங்க வைக்கிறது.
ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இராணுவ சேவை என்பது மிகவும்
பாதுகாப்பாக தினமும் போய் வருகின்ற
IT வேலை இல்லை. சிவிலியன்
உத்தியோகமும் இல்லை.
இராணுவத்தில் சேரும்போதே
வீட்டில் வாய்கரிசி வாங்கி பையில்
போட்டுக் கொண்டு உயிருக்கு துணிந்தே
பணியில் சேருகிறார்கள்.
யாருக்கும் எந்த சேதாரமும் ஆகாது என்று
உறுதி கொடுத்து விட்டு போகுமளவுக்கு,
இது முயல் வேட்டையில்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சிங்கவேட்டை.
சில விரும்பத் தகாத இழப்புகள்
ஏற்பட்டே தீரும். அபிநந்தனா இருந்தாலும், நானா இருந்தாலும், நீங்களா இருந்தாலும்... சில தியாகங்கள செய்தே ஆகணும். விரும்பினாலும் விரும்பாட்டாலும், ராணுவத்துல சென்டிமென்டுக்கு இடமே கிடையாது.
பாகிஸ்தானை பொறுத்தவரை... அவனோட மூலதனமான ; கோடிக்கணக்குல கொட்டி ட்ரெயின் பண்ணின நூத்துகணக்கான பயங்கரவாதிகள் மற்றும் கோடிகணக்கான மதிப்புள்ள ஆயுதங்கள இழந்தது மட்டுமில்லாம, சர்வதேச அரங்கத்துல தலைகுனிஞ்சு நிக்கறான். ஏற்கனவே காட்டுமிராண்டி குணம், இதுல... ரெண்டுநாளா அடிபட்ட புலிமாதிரி, காயம்பட்ட கால நக்கிட்டு உக்காந்திருக்கான். 'இந்தியன்' ன்னு சொல்லி, கைல எவன் கிடைச்சாலும்... அசுரத்தனமா வேட்டையாடவே செய்வான். இந்த விஷயத்துல அதிரடி எல்லாம் வேலைக்கு ஆவாது. தூதரக ரீதியான பேச்சு மட்டுமே பலன் கொடுக்கும். சீனாவின் எச்சரிக்கைக்கு பிறகு, "போருக்கு விருப்பமில்லை"னு, பாக் குடுத்த அறிக்கைய பாக்கும்போது, 'இந்தியாவை பழிவாங்கும் அளவுக்கு எங்களுக்கு பலமில்லை. பாலகோட் தாக்குதலால், எங்களுக்கு ஏற்பட்ட அவமானம் துடைக்கப்பட்டால்... அதுவே போதும். இந்தியவிமானி எங்களிடம் பிடிபட்டதே கூட, எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கப் போதுமானது' ன்னு நினைச்சு, பாக் பின்வாங்குறது தெரியுது. அதனால, அபிநந்தன உயிரோட ஒப்படைப்பாங்கன்னு தோணுது.
மத்தபடி இம்ரான்கான்... மொத்த பாக் விமான நிலையங்கள மூடி, ரெட்அலர்ட் குடுக்குறதும்... அணுஆயுத ஆலோசகர்கள் கூட மீட்டிங் போடுற தெல்லாம், "சீக்கிரமா வந்து பஞ்சாயத்த முடிச்சு விடுங்கைய்யா. எங்க ஆளுங்க முன்னூறு நானூறுபேர கொன்னும் கூட, அந்தாளு வெறி அடங்காம திரியுறான். இத லேசுல விடமாட்டான் போலிருக்கு. இதுக்குமேல இனி நேரடியா இந்தியாவோட கால்ல விழுந்தா... சொந்த நாட்டுக்குள்ள நடமாட முடியாம, மானம் கப்பலேறிடும்" ன்னு, உலக நாடுகளுக்கு சிக்னல் குடுத்து பாவ்லா காட்டுறவேலை. ஏன்னா... இத்தன வருஷமா, வழக்கமா இதுதான் நடந்துகிட்டு இருந்தது. இப்ப நடக்குறதுதான்... பாகிஸ்தானுக்கு புதுசு.
மோடியும்... அவ்வளவு லேசில் ஒரு ஜவானை கைவிடமாட்டார். முழு நம்பிக்கை இருக்கு !!! 

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொள்கை பிடிக்கவில்லையென்றால் ஒரு கட்சியில இருந்து நல்ல விஷயம்..
ஆனால் என்ன காரணத்தை சொல்லி விலகினோமோ, அதையே காமடியாக்கிடக்கூடாது..
மிடாஸ் கம்பெனி சர்பத் தயாரிக்கிறாங்களா ரஞ்சித்.. ?
அரசியல் கட்சியில ரெண்டே வகைதான்...ஒன்னு பால்ல கலந்த விஷம், இன்னொன்னு பச்சை விஷம்..
அமமுகவில் இணைந்தது ஏன்? - ரஞ்சித் விளக்கம்
இது இன்னும் காமெடி..
இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன்
தினகரனின் கட்சி பொதுச்செயலாளர் சசிகலா தண்டனை கைதியாக சிறையில்.. தினகரனே கோடிக்கணக்கில் அபாரதம் விதிக்கப்பட்டவர். வழக்கு இன்னமும் நடக்குது..இன்னும் பல வழக்குகள்..
பாமகவில் இருந்து அமைதியாக விலகி, பின், ஒற்றை வரியில் எனக்கு பிடித்த கட்சியில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தால் தொல்லையே இல்லை...
ஓவரா சவுண்ட் விடறவனுக்கெல்லாம் செமையாக கும்பாபிஷேம் நடக்கிற சீசனாச்சே இது..

Wednesday 27 February 2019

தியாகி ஜார்ஜ் ஜோசப் நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உண்மையான ராணுவ குடும்பம் பதறவே பதறாது..
கடைசிவரை ராணுவ சீரூடை என தனிப்பெருமை தரும் பீல்ட் மார்ஷல் என்ற அந்தஸ்த்தை இந்தியா வில்,பெற்றவர் ராணுவ தளபதியாக திகழ்ந்த கரியப்பா..
இவரது மகன் நந்தா.. 1965 பாகிஸ்தான் போரின் போது விமானப்படையில் பணியாற்றினார்.துரதிஷ்டவசமாக எதிரிகளிடம் பிடிபட்டுவிட்டார்.
பாகிஸ்தான்.தளபதி அயூப்கான், நந்தாவை அடையா ளம் கண்டுகொண்டதால் உடனே கரியப்பாவை தொடர்பு கொண்டார்..
சுதந்திரந்திற்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவில்,
ராணுவத்தில் கரியாப்புவுக்கு கீழே பணி புரிந்தவர் அயூப்கான்..
அந்த விசுவாசத்தில், நந்தாவை நல்ல முறையில் வைத்திருந்து விடுதலை செய்வதாக சொன்னார்..
ஆனால் கரியாப்பா சொன்ன பதில்...
அதெல்லாம் தேவையில்லை. மற்ற போர் கைதிக ளைப்போலவே அவனை நடத்துங்கள்..நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவன் உயிரை பற்றி கவலை யில்லை.அவனை மட்டுமல்ல, எல்லோரையும் விடுதலை செய்வதாக இருந்தால் விடுதலை செய்யுங்கள்.. இல்லையென்றால் எதுவுமே வேண்டாம்.. என்பதுதான்..
இந்திய ராணுவத்தினர் பலரும் அடிக்கடி பெருமையோ டு சொல்லி மார்தட்டிக்கொள்ளும் சம்பவம் இது..
ஒவ்வொரு போர் விமானமும் மேலே கிளம்பும்போது பைலட்டுக்கு வைக்கப்படும் சல்யூட், கிட்டத்தட்ட இறுதி சல்யூட் என்றே சொல்வார்கள்..
ஒரு ஜனநாயக நாட்டின் நன்மைக்கு என,வீர மரணத் திற்காக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கு எதுவுமே பெரிய விஷயமல்ல..
''யுத்த களத்தில் கருணை காட்டுவது என்பது செத்தவன் வீட்டில் சிரித்து மகிழ்வது போல..''
1948 எம்ஜிஆர் நடித்த அபிமன்யூ படத்திற்கு கலைஞர் எழுதிய மேற்படி வசனம்..ஞாபகத்திற்கு வருகிறது..
( பாவம், அந்த பட டைட்டிலில் கலைஞர் பெயர் வராது)
நமக்கு தோன்றியது இவ்வளவுதான்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உயர்கல்வியில் தமிழகம் முன்னணி...
சர்வதேச மற்றும் தேசிய சராசரியை விட தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
"தமிழக அரசு உயர் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் தேசிய சராசரியை விட தமிழகம் முன்னணியில் உள்ளது.
கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு கணக்கின்படி தேசிய அளவில் 26.30 சதவீதம் மாணவர்களும், 25.40 சதவீதம் பெண்களும் உயர் கல்வியைப் பெறுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் 49.10 சதவீத ஆண்களும், 48.20 சதவீத பெண்களும் உயர் கல்வி பெறுகின்றனர். அதேபோல் தேசிய அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் 21.80 சதவீதமும், பழங்குடியினரில் 15.90 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வி பெறும் நிலையில், தமிழ்நாட்டில் 42.10 சதவீத தாழ்த்தப்பட்டவர்களும், 40.50 சதவீத பழங்குடியினரும் கல்வி பெறுகின்றனர்.
தேசிய அளவில் ஒட்டு மொத்தமாக 25.80 சதவீதம் பேரே உயர் கல்வி பெறுகின்றனர். இதை வரும் 2020-க்குள் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், சர்வதேச சராசரி கூட 36 சதவீதமாக உள்ளது. ஆனால், தேசிய மற்றும் சர்வதேச சராசரியை விட தமிழகத்தில் 48.60 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர்" என்றார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

இது உண்மையா

தேனி மாவட்ட நகரத்தார் சங்க ஆண்டுவிழா மற்றும் பரிசு வழங்கும் விழா









தினபூமி மதுரை 27.02.2019 பக்கம் 8


ழுத்தாளர் சுஜாதா நினைவு நாள் சிந்தனை..

எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள் சிந்தனை..
சுஜாதாவின் பத்து கட்டளைகள்…
(கண்டிப்பாகப் படிக்கவும் !!!)
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்..
ஏதாவது ஒன்று.
உதாரணம் கடவுள், இயற்கை,
உழைப்பு, வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல.
கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.
நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது
பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள்.
அவர்கள் கேட்பது உங்களால்
செய்யக் கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர்
(அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்..
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம்.
வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு
ரொம்ப ஞாபக சக்தி வேண்டும்.
இந்த உபத்திரவத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம்.
இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல்
மிகவும் குறைந்த காலம்..
அதைக் க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும்
விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள்,
மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.
சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும்
ஆக்கிரமிக்கும் தீ அது.
பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு:
பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும்,உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும்,
காதலோடு சேர்த்தியில்லை.
8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும்.
ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ
தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள்..
எதையாவது வீசி எறியுங்கள்..
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு
ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை.
ராத்திரி சரியாக தூக்கம் வரும்.
கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும்.
ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.
பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும்.
மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

கவிஞர் அரிமழம் ப.செல்லப்பாவின் கருத்து..

கவிஞர் அரிமழம் ப.செல்லப்பாவின் கருத்து..
நாளும் ஒரு நற்கருத்து!(27-02-2019)புதன்கிழமை!
அடக்கம் வெல்லும்!அதிகாரம் கொல்லும்!
மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்கள்,தாங்கள்கடைபிடித்தஅடக்கத்தாலும், அடுத்தவர் மீது காட்டியஇரக்கத்தாலும் தங்களின்பதவிக்குபெருமை சேர்த்தவர்கள்!மக்களின்இதயங்களில்வாழ்ந்தவர்கள்.மக்களும்அத்தகையதலைவர்களைமறக்காமல்போற்றி,தங்களதுவழிகாட்டிகளாகஏற்றுக்கொண்டனர்.அந்தவகையில்வாழ்ந்தவர்கள்உத்தமர்காந்தியடிகள்அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆபிரகாம்லிங்கன்!இந்தியாவின்குடியரசுத்தலைவராக விளங்கிய அப்துல்கலாம்தென்னாப்பிரிக்காவின்விடுதலைக்காக போராடி, அதன்அதிபராகவிளங்கியநெல்சன்மாண்டேலா!ஒரு முறை தனது பாதுகாப்புஅதிகாரியுடன்நடைபயிற்சிமேற்கொண்டார் ஆபிராகம் லிங்கன்.அவர் சென்ற வழியில்,கருப்பினத்தைச்சார்ந்தபிச்சைக்காரன் ஒருவன், ஆபிரகாம் லிங்கனைப்பார்த்தவுடன் எழுந்து நின்று பணிந்து வணக்கம் சொன்னான்.பதிலுக்கு வணக்கம் சொன்ன லிங்கன்,தான்அணிந்திருந்த தொப்பியை பிச்சைக்காரனது தலையில்அணிந்துமகிழ்ந்தார்.இதைப்பார்த்த லிங்கனின் பாதுகாப்பு அதிகாரி நீங்கள் அவன் அருகில் சென்றதும் தவறு,அவனுக்குதொப்பியை கொடுத்ததும் தவறு இதை ஏன் செய்தீர்கள்?என்று கேட்டார்.உடனே பதில் சொன்னார்ஆபிரகாம்லிங்கன் என்னைவிட பணிவுகாட்டுவதில்,அடக்கமாய் வாழ்வதில் அவன்உயர்ந்துநிற்பதாகஉணர்ந்தேன்.அதனால்கொடுத்தேன்என்றார்.பாதுகாப்பு அதிகாரி சொன்னார்பிச்சைக்காரனின்செயலைபார்த்தவுடன்நான்உத்தரவிட்டிருந்தால்அவன்தண்டனைபெற்றிருப்பான்
என்றுசொன்னார்.லிங்கன்சொன்னார்அடக்கமே என்றும் வெல்லும்!அதிகாரம் என்றும் கொல்லும்என்றார்.ஆம் நண்பர்களேஅடக்கத்தின் பெருமையை நமது குறளாசான் வள்ளுவர் நமக்குச்சொன்னது நினைவுக்குவருகிறதா?"அடக்கம் அமரருள் உய்க்கும்!"என்று.
நாளைமீண்டும்சந்திப்போமா!
தகவல்தந்தோன்
கவிஞர் அரிமழம்
ப.செல்லப்பா
9791033913
aamchennai@gmail.com

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

என்னவென்றே தெரியாமல் மற்றவருடைய பிரச்சனையில் நுழையக் கூடாது. அது பெரும்பாலும் சங்கடத்தையேத் தரும்.
சின்ன தவறைக் கூட நியாயப் படுத்தாதீர்கள். அதுவே பெரிய தவறுகளுக்கு வழி வகுக்கும்.
தகுதியானதை அங்கீகரிப்பதும் ஆதரிப்பதும் நாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு.
காரம் அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காது. கவலைகள் அதிகமாக இருந்தா மனசுக்கு ஒத்துக்காது.
வயதுக்கு தகுந்தாற் போல் வாழ்க்கை மாறுகிறது. நாம் தான் மாறுவது இல்லை.
தயங்குபவருக்கும், பயப்படுபவருக்கும் இந்த உலகம் சொந்தமில்லை. துணிந்து செயலில் இறங்குங்கள்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

எழுத்தாளர் சுஜாதா நினைவைப் போற்றுவோம்


மனிதத்தேனீயின் தேன்துளி


ரஜினி எஸ். குமாரவேல் - அகல்யா தம்பதியரின் மகன் கீர்தி குகன்- அக்சயா திருமண வரவேற்பில் மனிதத்தேனீ

26.02.2019 இரவு மதுரை ரிங் ரோடு துவாரகா பாலசில் நடைபெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், நண்பர், ரஜினி எஸ். குமாரவேல் - அகல்யா தம்பதியரின் மகன் கீர்தி குகன்- அக்சயா திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, லக்கி டிராவல்ஸ் மைதீன் பாட்சா, தாய் மூகாம்பிகை சேதுராமன், பிருந்தா ராஜா, வழக்கறிஞர் அசோகன் உள்ளனர். வாழிய மணமக்கள்.




முதல் அடிக்கே அலறல் ஆரம்பம்....

முதல் அடிக்கே அலறல் ஆரம்பம்....
பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியி்ல் இந்தியா ஈடுபடுகிறது..பாகிஸ்தான் அலரல்..
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.
இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசுக்கு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் முப்படை தளபதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் குரேஷி கூறியதாவது:
‘‘பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது எங்கள் நாட்டின் இறையான்மையை மதிக்காத செயல். பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம். எங்களுக்கு ஆதரவான நாடுகளை அணி திரட்டுவோம். இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்’’ எனக் கூறியுள்ளான்.
நன்றி ராஜப்பா தஞ்சை

Tuesday 26 February 2019

மதுரைமணி 26.02.2019 பக்கம் 4


மாலைமுரசு 26.02.2019 பக்கம் 7


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!
இன்று ஒரு நாள் மட்டும்....,
"யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்"......!!
அன்றே..,
" கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ".....!!
இருவரும் அவர்கள் வருவதை...,
"ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்"......!!
இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.....!!
"கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை"......!!
ஆனால் ,
"ஒப்பந்தம் போட்டு விட்டதால்"....,
"அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்".......!!
அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து.....,
" திரும்பி போய் விட்டனர்"......!!
கொஞ்ச நேரம் கழித்து..... ,
"மனைவியின் அம்மா அப்பா வந்தனர்".....!!
கதவை தட்டினார்கள்....!!
" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்".....!!
ஆனால்,
" மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது".......!!
" என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது " .....,
என்று சொல்லி கதவை திறந்தாள்.
ஆனால் ,
"கணவன் ஒன்றும் சொல்ல வில்லை"......!!
வருஷங்கள் உருண்டோடின....!
"இரண்டு ஆண் குழந்தை பிறந்தது"....!!
மூன்றாவதாக....,
"பெண் குழந்தை பிறந்தது"......!!
கணவன்...,
" பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்"...... ,
பெரிய அளவில் செலவு செய்து.....,
" அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்".......!!
அதற்கு மனைவி ,
"இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது"......,
" இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை".......!!
" பெண் குழந்தை பிறந்தவுடன்"....,
" இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்"......?
என்று கேட்டாள் .....!!
அதற்கு கணவன்....,
" ரொம்ப நிதானமாக சொன்னான்"......
எதிர்காலத்தில்.....,
" எனக்காக கதவை திறக்க"......
" ஓரு பெண் பிறந்துவிட்டாள் "....!!
என்றான் கர்வத்துடன்....!!!
பெண்களை பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்🙏🙏🙏
படித்ததில் கண்கலங்க வைத்தது.....
உண்மையும் கூட......
அன்புடன் உங்கள் Vijayanaathan.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


கஷ்டங்களை மீறிய வெற்றி


மனிதத்தேனீயின் தேன்துளி