Wednesday 30 November 2022

வாழிய பல்லாண்டு


 

துன்பத்தில் உதவும் மக்கள்.

 துன்பத்தில் உதவும் மக்கள்.

தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.
"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும். எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.
அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள்.
"தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.
நெருப்பை அணைக்க வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாகச் சாப்பிட்டு குடித்து கொண்டாட்டமாகக் கழித்தனர்.
திகைத்த தந்தை தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.
"வந்த மக்களை எனக்குத் தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை. எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே".
மகள் சொன்னாள், நெருப்பு எரிவதாக நான் கத்திய போது நம் உறவினர்களும் வரவில்லை. நண்பர்களும் வரவில்லை.
"இவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதற்கே வந்தவர்கள், விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள்."
நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்.
நம் துன்பத்தில் பங்கு பெறுபவர்களுக்கே நம் சந்தோஷத்திலும்
பங்கு பெற உரிமை உள்ளது.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 29 November 2022

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வார்த்தைகளின் வலிமை.

 வார்த்தைகளின் வலிமை.

நம்முடைய வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாக அமையவேண்டும். பேச்சுக்கள் மற்றவர்களின் துயரைப் போக்க வேண்டும்.
பதறிய உள்ளங்களைச் சாந்தப்படுத்த வேண்டும், வார்த்தைகள் சொல்லப்படும் போது உணர்ச்சியுடன் சொல்லப்பட வேண்டும்.அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்.
கனிவான வார்த்தைகள் உயிரைக் காக்கும். கருணையான வார்த்தைகள் காலம் அறிந்து சொன்ன வார்த்தைகள் துன்பத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும். நகைச்சுவை வார்த்தைகள் மன இறுக்கத்தைத் தளர்த்தும்.
பண்பான வார்த்தைகள்
இதயத்தைத் தொடும்.
பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும். பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டும்
மன அழுத்தத்தைக் குறைக்கும். வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். முடித்து வைக்கவும் முடியும். சில வார்த்தைகள் கசக்கும். சில வார்த்தைகள் இனிக்கும்.
சில வார்த்தைகள் இருட்டைப் போக்கும். சில வார்த்தைகள் மயில் இறகு போல் இதமாக இருக்கும்.
இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.அவருக்கு எதிரே வந்தார் ஒரு பிச்சைக்காரர்.
அவர் அய்யா,'' ஏதாவது உதவி செய்யுங்கள்,உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது'' என்று கூறினார்
ஆனால் அப்போது அவரிடமோ சோதனையாக ஒரு காசு கூட இல்லை. உடனே அவரைப் பார்த்து மிகவும் கனிவான குரலில்,
அன்பு சகோதரனே,'', உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே என்றார்''.
அவரது வார்த்தையைக் கேட்ட பிச்சைக்காரர் அவர் மேல் கோபம் கொள்ளவும் இல்லை.தன் நிலையை எண்ணி நொந்து கொள்ளவும் இல்லை.
அதற்கு மாறாக முக மலர்ச்சியோடு, நன்றி ஐயா, தாங்கள் போய் வாருங்கள் என்றார் .
அவரது முகப் பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், "நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.ஆனால், நீங்கள் மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறீர்களே எதற்காக என்று அவரிடம் வியப்பாகக் கேட்டார்.
ஐயா,''நான்இதுநாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.
நீங்கள் ஒருவர்தான் என்னை பாசத்தோடு சகோதரனே என்று சொல்லி அன்போடு அழைத்து பரிவாகப் பேசி இருக்கிறீர்கள்.
அந்த அன்பு ஒன்றே போதும்.
நீங்கள் என் மீது காட்டிய
இரக்கம் ஒன்றே போதும்,வேறு எந்த உதவிகள் எனக்குத் தேவை இல்லை அய்யா, என்று மனம் உருகிச் சொன்னார் .
*வார்த்தைகளை உபயோகிக்கும் போது யோசித்துப் பேசுவது நல்லது...*
*அன்பான வார்த்தைகள் உறவின் இடை வெளியைக் குறைக்கின்றன...*
*உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன...*

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள்

 


நிம்மதியும் அமைதியும் தவழும்.

 நிம்மதியும் அமைதியும் தவழும்.

''தன்னிடம் இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம்.
*எத்தனை கிடைத்தாலும் மனம் திருப்தி,நிம்மதி அடைவது இல்லை..*
நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் போது, நிம்மதியை இழக்கக் கூடிய சூழல்கள் ஏற்படுகிறது.
*இருப்பதைக் கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடிகோடியாக கொட்டினாலும் போதாது தான்.!*
ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை.என்ன காரணம் என்பது புரியவில்லை என்று கேட்டார்.
அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை.
அங்கே அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.
அதன் கையில் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தார்.
குழந்தை அதைத் தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.
அடுத்து ஒரு பழத்தைக் கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது. மீண்டும் ஒரு பழத்தைக் கொடுத்தார்.
தன்னுடைய ஒரு கையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.
ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக் கண்டு அந்தக் குழந்தை அழுதது.
இதை கவனித்துக் கொண்டு இருந்த அந்தப் பணக்காரரிடம் அந்த அறிஞர்,
"இந்தக் குழந்தையைப் பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா?" என்றார்.
அதே போன்று தான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை வராது.நிம்மதி கிடைக்கும்.
தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்தப் பணக்காரருக்குப்
புரிந்து விட்டது.
*தங்களிடம் உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..*
*அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 28 November 2022

மதுரைமணி 28.11.2022 பக்கம் 3


 

மும்பையில் நடைபெற்ற நகரத்தார் சங்கத்தின் இலக்கியத் திருவிழா.

 மும்பையில் நடைபெற்ற நகரத்தார் சங்கத்தின் இலக்கியத் திருவிழா.

நேற்று மாலை மும்பைப் பெருநகரில் உள்ள முலூண்ட் மேற்குப் பகுதியில் உள்ள நகர விடுதியில் நாராயணன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் இலக்கியத் திருவிழா சங்கத் தலைவர் குழிபிறை முரு. இராமசாமி தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் அரிமளம் ஏஆர். செல்லப்பன் வரவேற்புரை ஆற்றினார்.
ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் நெற்குப்பை சேதுராமன் சாத்தப்பன் தொகுப்புரை ஆற்றினார்.
மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் பள்ளத்தூர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் 85 நிமிடமும்
கவியரசு கண்ணதாசன் குறித்து பனித் துளிக்குள் ஒரு கடல்
என்ற தலைப்பில் 36 நிமிடமும் சிறப்புரை ஆற்றினார்.
நமது செம்மொழித் தமிழுக்கும் வளரும் தலைமுறைக்கும் உரம் சேர்ப்பதாக அமைந்த இந்நிகழ்வில் அரங்கம் நிரம்பிய அளவில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து சிரிப்பலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேனாள் நிர்வாகிகள், சங்கம் வளர்ந்திட உழைத்தவர்கள், செயல் செம்மல்கள், ஆச்சிமார்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
முன்னதாக மீனாட்சி மணிகண்டன், சாந்தி ராமு இறைவணக்கம் பாடினர். தெய்வானை பழனியப்பன் வாழ்த்து ஓவியம் பூங்கொத்து வழங்கினார்.
அரியக்குடி மெய்யப்பன் கவிதை வாழ்த்தினை அவரது சகோதரர் வெங்கடாஜலம் செட்டியார் வாசித்து வழங்கினார்.
மும்பை தமிழ்ச் சங்கத்தின் முன்னோடிகள் பாலு, புவனா வெங்கட் நிகழ்வு குறித்து கருத்துரை வழங்கினர்.
இரவு உணவுடன் நிறைவு பெற்றது.














மும்பை சித்தி விநாயகர் கோவிலில் நேற்று நண்பகல் தரிசனம்.



 

மும்பை மகாலெட்சுமி கோவிலில் நேற்று காலை தரிசனம். மக்கள் பெருமளவில் நீண்ட வரிசையில் நின்று வழிபடுகின்றனர்.


 

மும்பை நகரத்தார் விடுதியில். நேற்று காலை நமது நகரத்தார் விடுதியில் விநாயகர், முருகன் வழிபாடு. அதன் ஆற்றல் மிக்க செயலாளர் அரிமளம் ஏஆர். செல்லப்பன், மேலாளர் ஒ. சிறுவயல் பழனியப்பன். வாழிய நகரத்தார் பணிகள்.

 


மனதைத் திறந்து வையுங்கள்.

 மனதைத் திறந்து வையுங்கள்.

வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது. அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம்.
ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதன் விளைவுதான் முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும். ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள்.
மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல. ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும். நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச் சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

நவி மும்பையில் இனிய தருணம். நேற்று இரவு மும்பைப் பெருநகரில் நகரத்தார்களின் முன்னோடி, மும்பை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், தொழிலதிபர் நாட்டரசன்கோட்டை எம் கே செட்டியார் என்ற ஆர்எம். முத்துக்கருப்பன் செட்டியார், அவரது இல்லத்தரசியார் நாச்சம்மை ஆச்சி அவர்கள் இல்லத்தில் மனிதத்தேனீ க்கு சால்வை அணிவித்து மகிழ்ந்த தருணம். அருகில் மும்பை நகரத்தார்களின் முன்னோடி, எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன் உள்ளார். வாழிய பண்பாடு.

 


நேற்று பிற்பகல் மும்பை கேட்வே ஆஃப் இந்தியா, தாஜ் ஹோட்டல் பகுதியில் ஆற்றல்மிக்க சேதுராமன் சாத்தப்பன் மற்றும் அரிமளம் செல்லப்பன் அவர்களுடன் மனிதத்தேனீ.

 



வாய்ப்புகள் தானாக வருவதில்லை.

 வாய்ப்புகள் தானாக வருவதில்லை.

*உங்கள் சொந்த தொழிலிலோ,அல்லது நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தையோ முன்னேற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.*
*அப்போது தான் சொந்தத் தொழிலையும், நிறுவனத்தையும் முன்னேற்றம் அடைய வைக்க முடியும்.*
*எதையும் ஏனோதானோ என்று செய்ய வேண்டாம்.. உங்கள் தொழிலும்,நீங்கள் பணி புரிகின்ற நிறுவனம் முன்னேறினால் தான் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.*
*அலைகள் ஓய்ந்தப் பின்னர் கடலுக்குள் இறங்குகிறேன் என்பதும், வாய்ப்புகள் வரும் வரை காத்து இருப்பேன் என்பதும் ஒன்று தான்.*
*அலைகள் ஒருபோதும் ஓயப்போவதில்லை வாய்ப்புகள் ஒருபோதும் தானாக வருவதில்லை.*
*சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது தான் புத்திசாலித்தனம்.*
*முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.*
*உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் ஒவ்வொரு நாளையும்*
*ஒவ்வொரு மணிநேரத்தையும் ஒரு வரமாகக் கொண்டாடுங்கள்.*
*உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு பல மடங்கு அன்பை அளித்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழுங்கள்.*
*பிரச்சனைகள் எதுவும் நிரந்தரமல்ல இறைவன் அருளால் விரைவில் எல்லாம் சரியாகும்.*
*உங்கள் எண்ணங்களால் உங்கள் வாழ்க்கையையே மாற்ற முடியும்.*
*இறைவனின் பரிபூரண அருளால் உங்கள் வாழ்க்கை வரமாகட்டும்.வளம் ஆகட்டும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மும்பைப் பெருநகரில் இனிய வேளை. சனிக்கிழமை பகல் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் வந்து அழைத்துச் சென்ற சிறந்த எழுத்தாளர் நெற்குப்பை சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் இல்லத்தில் மகிழ்வான தருணம். அருகில் மும்பை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க செயலாளர் அரிமளம் ஏஆர். செல்லப்பன் அவர்கள். மகிழ்வோடு மனிதத்தேனீ

 


Friday 25 November 2022

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு. எனது இல்லத்தரசியார் அலமேலு சொக்கலிங்கம் 61 ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை எங்கள் திருநகர் 94 ஆவது வார்டு மாமன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் சிறப்பாக நடத்தி வரும் இல்லத்தில் உள்ள பயனாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்த தருணம். அருகில் எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார். இன்று மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டுப் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகின்றோம். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ





 

Wednesday 23 November 2022

மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள்.

 மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநான் அவரைச் சந்திக்க வந்த ஒருவர், ""ஐயா எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்'" என்று கேட்டார். சிறிது நேரம் யோசித்தவர். " உங்கள் கோபம் தீர, அவரை விமர்சித்து கடிதம் எழுதுங்கள். என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
அவரும் கடிதத்துடன் வந்தார். "நீங்கள் கூறியபடி எழுதியுள்ளேன். இதைத் தபாலில் அனுப்பவா" எனக் கேட்டார்.
"உங்கள் கோபம் குறைந்ததா"
என லிங்கன் கேட்டதற்கு,
"ஆம்
எனச் சொன்னார்.
"சரி, கடிதத்தை
குப்பைத் தொட்டியில் போடுங்கள். அவரை மன்னியுங்கள்.
மனச்சுமை குறையும்” என்றார்.
பிறர் செய்யும் தவறுகளை மறந்தால் மனம் லேசாகும். அதுவே மன்னித்தால் மன நிறைவு உண்டாகும். இதைப் பின்பற்றினால் எப்போதும் அமைதி இருக்கும்.
ஒருவர் நமக்கு தீமை செய்கிறார் என்றால், பதிலுக்கு நன்மைதான் செய்ய வேண்டும். மனதால் கூட அவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. இந்த மனப்பக்குவம் இருந்தால் நமது வாழ்வு வளமாகும்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 22 November 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 71 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், பக்தி நெறி மன்றத்தின் மேனாள் தலைவர், விஜயதசமி விழாக் குழுவின் செயல்வேகமிக்க பொருளாளர் , கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோவில், இளையாத்தங்குடி கோவில் மேனாள் நிர்வாகி, பாளையங்கோட்டை நிதி மேலாண்மையாளர் எனப் பல்வேறு நிலைகளில் சிறப்பாக முத்திரை பதித்த பண்பாளர் சிஎன். இராமநாதன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



 

வாழிய பல்லாண்டு.


 

முதுபெரும் தமிழறிஞர் தஞ்சைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், எங்கு பார்த்தாலும் எங்கள் தமிழ்ப் பணியைப் பாராட்டி மகிழும் பண்பாளர் பத்மஸ்ரீ ஒளவை நடராஜன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

வெற்றி நிச்சயம்.

 வெற்றி நிச்சயம்.

தோற்றுவிடுவோம்
என்றெண்ணி முயற்சிக்காமல் இருப்பது தான்,
மிகப் பெரிய தோல்வி.
திட்டமிட்ட செயல்,
செய்யும் செயலில்
பின்வாங்காத முயற்சி,
விவேகத்துடன் கூடிய
வேகம் இவையனைத்தும்
வெற்றிப் பாதையை
அமைத்துக்கொடுக்கும்.
வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவன்
ஒரு இலக்கையும் அடைய முடியாது.
நாம் ஜெயித்தோமா தோற்றோமா என்பது முக்கியமில்லை.
நாம் நமது கடமையைச் செய்தோமா இல்லையா என்பதுதான் முக்கியம்.
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பே
ஏனெனில் எந்த நொடியிலும்
உங்கள் எண்ணங்களை
மாற்றிக் கொள்ள முடியும்.
கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்துங்கள்.
வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.
இழந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம்.
ஆனால் இழந்த நேரத்தையும் காலத்தையும் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது.
சிந்தித்துச் செயல்படுங்கள்
வெற்றி நிச்சயம்.
ஒன்றைத் தெரிந்து கொள்வதற்கும்,
அதைப் புரிந்துகொள்வதற்கும்.
நிறைய வேறுபாடுகள் உண்டு.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 21 November 2022

மதுரைமணி 21.11.2022 பக்கம் 4


 

ஆழ்ந்த இரங்கல். தன் பணிகளால் உயர்ந்த பெருமகன், திருச்சி கே கே நகர் கற்பக விநாயகர் நகரத்தார் சங்கத்தின் நிறுவனத் தலைவர், குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர், 88 வயதிலும் கார் ஓட்டிச் சென்று தன்பணியைச் செய்த இளைஞர், கடலில் நீந்தும் பேராற்றல் பெற்றவர், சிறந்த தொழிலதிபர்,திருக்கார்த்திகைத் திருநாளில் பிறந்தவர், சத்தமில்லாமல் சாதனை படைத்த பெரி. சி. சுப்பையா செட்டியார் அவர் பிறந்த நாளான இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களது இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணியளவில் திருச்சி கே கே நகர் எண் 45 ராஜாராம் சாலையில் உள்ள வீட்டில் நடைபெறுகிறது. -மனிதத்தேனீ தகவல் :மா. சோம. இராமநாதன்


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மனதைக் கட்டுப்படுத்தும் மந்திரம்.

 மனதைக் கட்டுப்படுத்தும் மந்திரம்.

கவனச்சிதறலில் இருந்து விடுபட்டு வெற்றி பெறுவது எப்படி.
கவனச்சிதறல்களை தவிர்ப்பது
அவ்வளவு எளிதானது அல்ல.
அவ்வாறு கவனச்சிதறல்களை
எளிதில் துரத்த முடிந்தால்,
அனைவரும் சிறந்த விளையாட்டு
வீரரின் கூர்மையைக்
கொண்டிருப்போம்.
ஒரு குறிப்பிட்ட பணி நமக்குத் தெரிந்திருந்தாலும், அது முறையாக செய்து முடிக்க முடியாமல் இருப்பதற்கான
முக்கியக் காரணம் கவனச்சிதறலே. பெரும்பாலும்,
உங்கள் கைப்பேசியால் தான் கவனச்சிதறல் (Distraction) ஏற்படுகிறது.
ஒரு வேலை செய்கையில்
மொபைலைத் திரும்பி பார்க்கிறீர்கள்அப்போது சில நோட்டிஃபிகேஷன்கள்வரும். அதைப் பார்த்ததும்,
மொபைல் போனை எடுத்து என்ன
என்று கூர்ந்து கவனிக்கத்
துவங்குவீர்கள். அவ்வேளையில்,
நீங்கள் செய்து கொண்டிருக்கும்
பணி பாதியில் நிற்கிறது என்பதை
மறந்திருப்பீர்கள்.
உங்களின் மனம், புதியது ஒன்றை
முயற்சி செய்யவும், ஒன்றை சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டலாம். ஆனால், சில குறிப்பிட்ட விசயங்கள்
உங்களுக்கு கவனச்சிதறல்களை
ஏற்படுத்தும்.
நீங்கள் செய்து கொண்டிருக்கும்
பணியின் முடிவு அல்லது நீங்கள்
ஓட்டப்போட்டியில் பங்கேற்கையில், உங்களின் கவனம் செலுத்தும் திறன்வெற்றி தோல்விக்கு இடைப்பட்ட
வித்தியாசத்தைக் குறிக்கும்.
கவனச்சிதறல்களை தவிர்ப்பது
அவ்வளவு எளிதானது அல்ல.
அவ்வாறு கவனச்சிதறல்களை
எளிதில் துரத்த முடிந்தால்,
அனைவரும் சிறந்த விளையாட்டு
வீரரின் கூர்மையைக் கொண்டிருப்போம். கவனச்சிதறல்களை எளிதில் துரத்த 5 அற்புதமான டிப்ஸ்.
1 உங்கள் மனதை மதிப்பிடுங்கள்
நீங்கள் பணியைத் தொடங்கும் முன் உங்கள் மனதை மதிப்பிடுவதன்
மூலம் வேலையை எளிதாக்கலாம்.
முதலில் உங்களுக்கான பணி பெரிதானதாக தெரிந்தாலும், உங்கள் மனதையும் உங்கள் திறனையும் பற்றி
நீங்கள் நன்கு அறிந்திருந்தால், அது அந்த வேலையை எளிதாக்கும்.
ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றால்,நீங்கள் உங்கள் மனநலனிற்காக சில பயிற்சிகளை செய்ய வேண்டும்.
அதாவது, நல்ல பழக்கவழக்கங்களைபழகிக் கொள்ள வேண்டும்.
2 கவனச்சிதறல்களை நீக்குதல்
கவனச்சிதறல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைவது ஒலியாகவே இருக்கும். அந்த ஒலி, நம்மால் கட்டுப்படுத்தும் நிலையில் இருந்தால்
அதைச் செய்யலாம்.
ஆனால், அது ஒருவேளை,
உங்களுடன் பணிபுரிபர்கள்,
உறவினர்கள், நண்பர்கள் மூலம்
எழுப்பப்படுகிறது என்றால், அதை
தடுப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும். அவ்வேளைகளில், நீங்கள் அவர்களிடம் இருந்து வேறு
பகுதியில் உங்கள் பணியைத் தொடரமுற்படுவது நல்லது.
அவ்வாறு நீங்கள் வேறு இடங்களை தெரிவு செய்து பணிகளைச் செய்யத் துவங்கினாலும், உங்கள் மனம் வேறுகவலைகளுடனோ, மற்ற சிந்தனைகளுடனோ இல்லாமல் இருந்தால்
மட்டுமே குறிப்பிட்ட வேலையைச்
சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
3 கவனத்தை கட்டுப்படுத்துங்கள்
ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வது அல்லது பலவற்றைச் சிந்திப்பதுஇரண்டும், உங்களுக்கான
உற்பத்தித் திறனை முற்றிலும்
பாதிக்கும். நீங்கள் ஒரு வேலையை செய்கையில் உங்கள் கவனத்தை
ஒன்றின் மீது முழுமையாகச் செலுத்துவதன் மூலம் அதற்கான பலனை
முழுமையாகக் காண முடியும்.
ஓட்டுநர்களின் கவனச்சிதறலால்
56,374 விபத்துகள் நடந்துள்ளன.
4 நிகழ் காலத்தைச் சிந்தித்தல்
நீங்கள் கடந்த காலத்தைச்
சிந்திப்பதும், எதிர்காலத்தைப் பற்றி வருந்துவதும், உங்களை மனதளவில்மிகவும் பாதிக்கும். இவை இரண்டும் நிகழ்கால சூழலுக்கும் தேவையற்றதாகவே உள்ளது. ஏனெனில்,
எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும்அமையலாம். அது இப்படிதான் இருக்கும் என்று கற்பனை செய்து
வருந்துவதில் பயனில்லை.
அதேபோல் கடந்த காலம் இறந்து
போய்விட்டது அதைப் பற்றிய
சிந்தனை தேவையற்றதே. அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை
நினைத்து வருந்தி நிகழ்காலத்தில்
உள்ள இனிப்புகளை சுவைக்காமல் விட்டுவிடுகிறோம் என்பதை நாம்
நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே நிகழ்காலத்தைப் பற்றிய
சிந்தனைகளை
வளர்த்துக்கொள்ளுங்கள்.
அது உங்கள் கவனச்சிதறல்களை
தவிர்க்க உதவும்.
5 மன நிறைவடைதல்
மனநிறைவு என்பது ஒரு
முக்கியமான பங்கு வகிக்கிறது.
இந்த மனநிறைவு தியானம், யோகா போன்றவையால் சாத்தியப்படுகிறது
இது குறித்த ஆய்வு ஒன்றிலும்,
தினமும் அவசர அவசர வேலைகளைசெய்பவர்களைத் தேர்வு செய்து 8 வாரங்கள் தியானப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில்,
பயிற்சிக்கு பின் பலர், வேலையில்
கவனம் செலுத்தும் திறன் பெற்றிருந்தனர். எனவே தியானம் மனதைக்
கட்டுப்படுத்தும் சிறந்த ஆயுதம் என்றஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று பல
நல்ல வழிமுறைகள் உங்களை
நிச்சயம் கவனச்சிதறலில் இருந்து
தப்பிக்கச் செய்யும்.

சர்.சி.வி.ராமன் நினைவைப் போற்றுவோம்


 

பாராட்டி மகிழ்வோம். நேற்று காலை சென்னை பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற்ற விழாவில், "எம்.டி.எஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா, பாரதீய வித்யா பவன்" ஆகியோர் இணைந்து வழங்கிய "அறிவுக் களஞ்சியம்" விருது 2022"- மேனாள் முதுநிலை அறிவிப்பாளர் திரு.ஜெயம்கொண்டான் அவர்களுக்கு மாண்புமிகு. திரு எம். எம். ராஜேந்திரன் இ.ஆ.ப. (மேனாள் ஆளுநர், ஒடிசா மாநிலம், மற்றும் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு சென்னை) அவர்களால் வழங்கப்பட்டது.


 

சமூக சேவகர், பா ஜ க மூத்த முன்னோடி கே டி ஹரிராம் புகழஞ்சலி. நேற்று இரவு மதுரை திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில் உள்ள அரங்கில் அண்மையில் வாகன விபத்தில் தலைக் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவன் திருவடி அடைந்த பா ஜ க மூத்த முன்னோடி, ஸ்ரீ மன் நடனகோபால நாயகி சுவாமிகள் இயக்கத்தின் தலைவர், சாமானிய மக்களின் நலனில் பெரிதும் அக்கறையுடன் உதவும் உள்ளம் கே டி ஹரிராம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன் ஆர் கே பலராமன் தலைமையில், சேவா சங்கத் தலைவர் கே எஸ். தங்கமணி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் நினைவுப் பேருரை ஆற்றுகையில் குடும்பத்தின் வறுமை நிலையிலும் ஊருக்கு உழைத்திடும் உள்ளத்துடன் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர் என்றார். சமூக சேவகர் பொள்ளுமணி, எல் கே பாலாஜி, ஜெயராஜ், சுரேந்திரன், ஜெயக்குமார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் இரங்கல் உரை ஆற்றினார்கள். அரங்கம் முழுவதும் பங்கேற்றவர்கள் முன்னதாக மெளன அஞ்சலி செலுத்தினர்.