Wednesday 30 September 2020

வாழ்நாள் முழுவதும் இறைவனின் பணியைச் சிந்தித்துச் செயல்பட்ட வீரத் துறவி, அருளாளர் இராம கோபாலன் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தது அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 ஆழ்ந்த

இரங்கல்.
வாழ்நாள் முழுவதும் இறைவனின் பணியைச் சிந்தித்துச் செயல்பட்ட வீரத் துறவி, அருளாளர்
இராம கோபாலன் அவர்கள்
இறைவன் திருவடி அடைந்தது அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

அச்சகத்தின் புதிய தொலைபேசி எண்


 

எண்ணி தருவது உதவியல்ல .

 எண்ணி தருவது உதவியல்ல .

நல்ல எண்ணத்தால் தருவதே உதவி.
உதவி பண்ணுங்க.... ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்
1.துடுப்பு கூட உதவி பண்ணுகிறது ஓடம் செல்வதற்க்கு..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
2.புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
...
3.ஏணியும் கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றிவிட.....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
4.மரம் கூட நிழல் தந்து நமக்கு உதவுகிறது...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
ரோட்டுல விபத்துல அடிபட்டிருப்பவரை பார்த்து உச்சு கொட்டுவதை நிறுத்துங்கள் முதலுதவி பண்ணுறவரை தடுக்காதீங்க அதுவே நீங்க அவருக்கு செய்யுற மிகப்பெரிய உதவி...அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.உதவி பண்ணிட்டு அதை ஊர்ல உள்ள அம்புட்டுபேருக்கும் போஸ்டர் அடிக்காத குறையாக தம்பட்டம் அடிக்காதீங்க ,அதுக்கு நீங்க உதவி பண்ணாமலே இருக்கலாம்.(உ.தா) நம்ம நடிகர்கள் பண்ணுற உதவிகள்.....கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் நம் மக்கள் தங்கள் பெயரையே அந்த அன்பளிப்பு பொருள் மறையுற அளவுக்கு பொறிச்சுருப்பாங்க.
நீங்கள் செய்கிற உதவி ஒருவரால் மனதாரா வாழ்த்தட்டும் உதட்டால் அல்ல.....
எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி.....
ஒருவேளை உணவளித்தாலும் மகரயாழ் மனதளவால் அளியுங்கள் கையளாவால் அல்ல.....
தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....
தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...
கஷ்டத்திலும், நஷ்டத்திலும் துவண்டிருக்கும் ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்
Bhagavathi Thirumalai, GS Srinivasan and 5 others

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அண்ணாமலை அரசர் பிறந்த நாள் வாழிய புகழ்


 

Tuesday 29 September 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 இருப்பதைக் கொண்டு.

உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான மகிழ்ச்சியை அடைவதே ஆகும். மகிழ்ச்சி என்பது நமது மனதின் ஒரு நிலை தான்.
அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தான் உண்மை.
போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும் இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்.
சில நேரம் நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி தேவைக்கு அதிகமாகவே கவலைப்படுகின்றோம்..
நமக்கு கிடைத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நல்லவைகளுக்காக, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு நலத்தோடும், நீண்ட ஆயுளுடனும், வாழ்ந்ததற்காக மகிழ்ச்சியடைந்தாலே இன்னமும் ஆனந்தமும், உடல் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வோம்..
பணம்,சொத்து நமக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே கொடுக்கும்.
நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைவதும், இல்லாததை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்..
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார்..
21..12.1875 முதல் 4.8.1997 வரை வாழ்ந்தார்.தனது கடைசி 12 ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே வாழ்ந்தார்..
இறுதி 5 ஆண்டுகள் அவருக்கு காது கேட்கவில்லை. பார்வையும் குறைந்து விட்டது..
ஆனாலும் இறுதி வரை மகிழ்சியாகவே வாழ்ந்து வந்து இருக்கிறார்..
இவரது மகளும், மகனும், பேரனும் கூட இவருக்கு முன்னால் காலமாகி விட்டார்கள்.
.
இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்கு அவர் கூறியது,
’ நான் எப்போதும் எதற்காகவும், பெரிதாக ஆசை கொள்ள மாட்டேன். என்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து மன நிறைவு கொள்வேன் மற்றும் என்னிடம் இல்லாதைப் பற்றி எந்த சூழலிலும் கவலைப்பட்டதே இல்லை என்று சொன்னாராம்..
`உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!’ என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லிச் சென்று இருக்கிறார்.
எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட, எது இருக்கிறதோ அதை நினைத்து ஆனந்தப்பட்டு அதை வைத்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம்!
ஆம்.,நண்பர்களே..,
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நம்மிடம் என்ன உள்ளதோ, அதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும். இல்லாதவற்றை எண்ணிக் கவலை கொள்ளக் கூடாது.
இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 28 September 2020

நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, அண்ணன் RMP RMP முத்தையா அவர்கள் இன்று 28.09.2020 பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ஆழ்ந்த இரங்கல்.

பூலாங்குறிச்சியைச் சேர்ந்த தொழிலதிபர், நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, அண்ணன் RMP RMP முத்தையா அவர்கள் இன்று 28.09.2020 பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லா ஏற்பாடுகளும் மதுரையில் நடைபெறுகிறது.
கவலையுடன் - மனிதத்தேனீ

சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் உடன் கடன் வசதி

 

🍅சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் உடன் கடன் வசதி
💥ஆத்ம நிர்பார் நிதி திட்டம் 💥
👨🏻‍🏭இந்த திட்டம் மோடி அவர்கள் அறிவித்த திட்டம்
🍀இந்த திட்டப்படி ரோட்டோரம் வியாபாரிகளுக்கு 10000 ரூபாய் கடன் கொடுக்குறாங்க 🍀அதுக்காக உங்க இடத்துக்கு பக்கத்துல உள்ள கார்பொரேஷன் போய் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து இந்த இடத்தில் நாங்க தொழில் பண்றோம் சொல்லி தொழில் சான்றிதழ் வாங்கணும். 🍀அப்புறம் இந்த மூன்றையும் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, தொழில் சான்றிதழ் )நெட் சென்டர்க்கு போய் சிறு வியாபாரிகள் கடன் திட்டத்தில் (Portal )பதிவு செய்யணும். 🍀அதில் பேங்க் என்ற இடத்தில் உங்க பேங்க் பேரை போடவேண்டும். 🐴ஒரு வாரத்தில் அந்த பேங்க் மூலமாக உங்க கணக்கில் ரூபாய்
10, 000 போட்டு விடுவாங்க. அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கலாம். 🏹இதுக்கு எட்டு சதவீதம் வட்டி போடுறாங்க. ஆனால் கெவர்மெண்ட் ஏழு சதவீதம் வட்டி மானியமாக கொடுக்குறாங்க.👨‍🎓 நாம ஒரு சதவீத வட்டி தான் கட்டணும்.10 மாதம் ரூபாய் 1000 கட்டணும். 👍🏾அதை கட்டி முடித்த பிறகு ரூபாய் 20000 கொடுப்பாங்க. 🙏🏻நீங்க பக்கத்துல உள்ள கடைகளுக்கும், வீட்டுக்கு காய் கொண்டு வருபர்களுக்கு சொல்லுங்க. 👍🏾கந்து கந்து வட்டி கடன் வாங்கி கஷ்டப்படுவத லிருந்து தவிர்க்கலாம் அன்புடன🙏🏻
M. ஜெயக்குமார்
TACED
&
மதுரா கன்சல்டன்சி சர்வீசஸ் (MCS) மதுரை

சந்தேகம்(அயிர்ப்பு ) கொள்ளல் அறிவிற் கேடு.

 சந்தேகம்(அயிர்ப்பு ) கொள்ளல் அறிவிற் கேடு.

அயிர்ப்பு என்னும் கொடிய நோய்க்கு உலகிலேயே மருந்து கிடையாது, இந்த அயிர்ப்பு நோய் எவ்வித கிருமிகளும் இல்லமாலே ஒரு மனிதனுக்குப் பிறவியிலோ அல்லது தருணச் சூழ்நிலையிலோ பரவக் கூடிய மிகப் பெரிய கொரானா போன்ற உயிர்கொல்லி... (அயிர்ப்பு- சந்தேகம், தருணம்- சந்தர்ப்பம்)
இந்த அயிர்ப்பு, ஒவ்வொரு மனிதனையும் மரணக் குழி வரை அழைத்துச் சென்ற உண்மை நிகழ்வுகளும் நிறைய உண்டு. நமது அன்றாட வாழ்விலும் கண்கூடாகக் காண்கிறோம்...
அயிர்ப்பினால் வாழ்வை தொலைத்தவர்கள் தான் எத்தனை எத்தனை...!!
அயிர்ப்பினால் துண்டாடப்பட்ட நட்புகள் தான் எத்தனை எத்தனை....?!
அயிர்ப்பினால் பிரிந்து விட்ட இணையர்கள் தான் எத்தனை எத்தனை...!?
அயிர்ப்பினால் உடைந்த குடும்பங்கள் தான் எத்தனை எத்தனை...??
இந்த அயிர்ப்பின் உண்மைத் தன்மையை உரசிப் பார்த்தால் பெரும்பாலும் எல்லாம் வெறும் கணிப்புகளாகவே இருந்திருக்கும். எதுவும் உண்மையாக இருந்திருக்காது...
எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு அயிற்பு கொள்வது வளமான செயல்...
ஆனால்!, நம்மில் பலர் தொடர்பில்லாமலே வீணாக அயிர்த்து வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு...
ஒருவருக்கு வீண் அயிர்ப்பு வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்...
ஆம் நண்பர்களே...!
நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்திருக்கின்றோம் என்பதை உணருங்கள், நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்...!
தேவையற்று மற்றவர்கள் மீது ''வீண் அயிர்ப்பு" கொள்வதை வைத்து உங்களின் வாழ்க்கையில் அல்லற்பட வேண்டாம்...
நமது அய்யன் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்...!
'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.'' (குறள்:510) - என்று
குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும் என்கிறார்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கவனிக்க வேண்டிய செய்தி

 கவனிக்க வேண்டிய செய்தி.

தலைக்கு ' *டை* ' அடிக்கும் நண்பர்கள் கவனிக்க...
எனக்கு தெரிந்து கொரானா பாதிப்பில் இறந்தவர்கள் 90% பேர் தலைக்கு மை ( DIE ) பூசிய வர்கள் தான் ...
ஜெ.அன்பழகன் , வசந்த குமார், எஸ்.பி.பி என பட்டியல் நீள்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டி ஆறுமுகம் இறப்புக்கும் , ஏன் ஜெயலலிதா இறப்புக்கும் கூட இதையே ஒரு காரணமாக பலரும் விவாதித்தார்கள் .
கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள ,
எம்.எல்.ஏ க்கள் , எம் .பி க்கள் என அரசியல் பிரமுகர்கள் அனைவரும் டை அடிப்பவர்களே .
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் சக்தி அந்த தலை ' மை ' யில் உள்ளதோ என எனக்கு சந்தேகமாக உள்ளது.
அறிவியல் பூர்வமான விளக்கம் தெரிந்தவர்கள் கூறினால் வரும் காலங்களிலாவது நமது நண்பர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்து உதவலாம் .
இது எனது அனுமானம் தான் . இதுபற்றிய உண்மையான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன .

உங்கள் சிந்தனைக்கு

 *உங்கள் சிந்தனைக்கு...*

🤔 எண்ணமும் மனமும்.
மனிதக்குலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் மிகமுக்கியமானது : நம் எண்ணத்தை மாற்றினால் நம்வாழ்க்கையை மாற்றலாம் என்பதுதான்.
மனிதமனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச்சாதிக்க முடியும் என்பதுதான்
மனிதக்குலவரலாறு.
வேளாண்மை முதல் வாட்ஸ்அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.
நம் உள்ளே உள்ள எண்ணமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள்.
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது?" என்று கேட்கலாம்.
உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களை ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்பவாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள் தான்.
ஆம்..
நண்பர்களே...
நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள்.
உங்களின் ஒவ்வொரு பெருமை படக்கூடிய,
வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும், உங்களது எண்ணமும், மனமும் தான் காரணமாய் உள்ளது
என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப்பாடல் வரியில் சொல்லிவிட்டார் :
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.!"

அருமையான, கருத்தில் நிறுத்த வேண்டிய பதிவு.

 அருமையான, கருத்தில் நிறுத்த வேண்டிய பதிவு.

*கவரிமான்*
Dr. B.R.J. Kannan
சென்னையில் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தன் உடலில் பல இடங்களில் பலதரப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு உறக்கத்தில் இருந்தார் எஸ்பிபி. திடீரென்று முழிப்புத் தட்டியது. தன்னைப் பற்றியும் தற்போதைய நிலைமையைப் பற்றியும் உடனே தெளிவடைந்தார். அந்த சமயத்தில் அவரெதிரே மிகுந்த பிரகாசமான ஓர் உருவம் தோன்றியது. வந்திருப்பது அந்த இறைவனே என்பதை அறிந்தார். கை கூப்பினார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன.
“மகனே என்னிடம் ஏதாவது பேசத் தோன்றவில்லையா உனக்கு?”
இல்லை என்று தலையசைத்தார் எஸ்பிபி.
“எனக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்பாயோ?”
இல்லை என்று மீண்டும் தலையசைத்தார். “எனக்கு மட்டும் இந்த அளவு குரல்வளம் தந்தாய். கோடிக்கணக்கான ரசிகர்களைத் தந்தாய். பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரவைக்கும் திறமையைத் தந்தாய். இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று நான் கேட்டேனா? அதுபோலத்தான் இதையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஏதோ என் வினைப்பயன் கழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்”
இறைவன் முகத்தில் புன்னகை. “உன்னை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது தெரியுமா?”
“என் பாடல்கள். அதனை அவ்வளவு அருமையாக வடிவமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் மிக்க நன்றி”
“பாடல்கள் மட்டுமா?”
வேறு என்ன என்பதுபோல் பார்த்தார் எஸ்பிபி.
“நீ உண்மையான மனிதத்துவம் அறிந்த மனிதன். எந்த ஒரு சிறிய ஆத்மாவையும் மதிப்பவன்”
இரு கைகளையும் கூப்பினார் பாலு.
“புகழின் உச்சியை அடைந்தாலும் அது உன் தலைக்கேறாது பார்த்துக்கொண்டாய். உன் நெருங்கிய நண்பன் உன்னைக் காயப்படுத்திய போதும், அடுத்த மேடையிலேயே அவனைப் போற்றியவன் நீ. பெரியவர்களை மதிப்பதிலும் இளையவர்களை ஊக்குவிப்பதிலும் உனக்கு நிகரில்லை”
மீண்டும் இரு கைகளையும் கூப்பினார் பாலு.
“அதனால்தான் எல்லோரும் தங்களில் உன்னைப் பார்க்கிறார்கள் உன்னில் தங்களைப் பார்க்கிறார்கள்”
“போதும் பெருமானே. இதுவெல்லாம் நீ கொடுத்ததன்றோ?”
“அப்படிச் சொல்லிவிட முடியாது, நீ வளர்த்துக் கொண்டது. பலபேர் பாலுவைப்போல் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எல்லோரும் உன்னைப்போல் பாடி விட முடியுமா என்ன? ஆனால் எல்லோரும் உன் மனித குணங்களைப் பேண முடியும்”
“அந்த வகையில் என் ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஐயனே, இன்று நீங்கள் வந்திருக்கும் நோக்கம்?”
“உன் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்”
“புரியவில்லையே…”
“இப்பொழுது உன் உடலும் மனமும் எப்படி இருக்கின்றன?”
“மனம் அதே போல் தான். உடல்தான் சுகமில்லை. இதோ இத்தனை கருவிகள் மூலமாக என் உயிர் ஓடிக்கொண்டிருகிறது. முன்னை விடத் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்”
இறைவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். எஸ்பிபி தொடரட்டும் என்று காத்திருந்தார்.
“ஒரு சந்தேகம் கேட்கலாமா?”
“கேட்பாயாக”
“என் தொண்டையில் துளையிட்டு சுவாசக்கருவி பொருத்தி இருக்கிறார்கள். நாளை நான் குணமடைந்த பின் மீண்டும் முன்புபோல் பாட இயலுமா?”
“சில மாதங்கள் கழித்து நன்றாகப்பேச முடியும். உன் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. முன்புபோல் பாட இயலாது என்பதுதான் உண்மை”
இதைக் கேட்டவுடன் பாலுவின் கண்களில் தாரைதாரையாக்க் கண்ணீர் வழிந்தது. அதை எதிர்பார்த்து இறைவன் அமைதி காத்து இருந்தான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பாலு பின்னர் கேட்டார், “எனக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அது செய்து முடிந்தால் நான் பாட முடியுமா?”
“அப்பொழுதும் சந்தேகமே. அந்த நுரையீரலைக் காப்பாற்றும் பொருட்டு நிறைய மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும். சாதாரணமாக வெளியில் சென்றுவரக் கட்டுப்பாடுகள் இருக்கும்”
“அப்படியானால் நான் முன்புபோல வானம்பாடியாக வாழ முடியாதா?”
“என்னை மன்னித்துகொள் மகனே”
மீண்டும் பாலுவின் கண்களில் கண்ணீர்.
“முடிவு உன் கையில். இருக்க விருப்பமா, இறக்க விருப்பமா?”
“என்னால் பாட முடியாது என்றால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை இப்பொழுதே அழைத்துக் கொள்”
இறைவனின் முகத்தில் அதே புன்னகை. “நன்றாக மீண்டுமொருமுறை யோசித்துக் கொள்”
“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் தயார்”
மீண்டும் பாலுவின் கண்கள் கண்ணீர் சிந்தின.
“இப்பொழுது எதை நினைத்து அழுகிறாய் மகனே?”
“என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்குத் துன்பம் தருகிறேன். அதை நினைத்தால்….”
“நீ திடீரென்று அகால மரணம் அடைந்திருந்தால் பலரும் அதிர்ச்சியில் உயிர் விட்டிருப்பார்கள். அவர்கள் மனதையும் தயார் படுத்தும் பொருட்டுத்தான் கடந்த 40 நாட்களாக நாடகம் நடந்தது. முடிவை யாரும் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் ஓரளவு பக்குவப்பட்டு விட்டார்கள். உன் பூத உடல் தான் இல்லாதிருக்கும். இசையாக நீ நெஞ்சில் என்றும் நிறைந்து இருப்பாய். தமிழ் உள்ளவரை உன் புகழ் இருக்கும்”
கண்ணீர் மல்க மீண்டும் கை கூப்பினார் பாலு. “பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்களின் முன் நான் பாடியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முன் பாடும் வாய்ப்பை வேண்டுகிறேன் இறைவா”
“ஆரம்பிக்கலாம் மகனே உன் இசையை”
கண்கள் மூடி மனம் உருகிப் பாடத் தொடங்கியது அந்தக் குயில். அதை அணைத்தவாறு, அதனை அழைத்துகொண்டு அதன் இசையில் மயங்கியவாறே பயணிக்க ஆரம்பித்தான் இறைவன். சன்னமாக வெகுநேரம் அந்தப் பாட்டு கேட்டுக்கொண்டேயிருந்தது.
‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…………’

இடர்பாடுகளும் தீர்வுகளும்

 இடர்பாடுகளும் தீர்வுகளும்

இடர்பாடு என்றால் என்ன...?அதற்கு ஏதாவது வடிவம் உண்டா...?
உறுதியாகக் கிடையாது...
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் வடிவமும், பொருளும் தான் ஒரு நிகழ்வை இடர்பாடாக எடுத்துக் கொள்வது, ஒரு நிகழ்வை உணர்வின் மூலமாக அணுகும் பொழுது அது வழக்கமான நிகழ்வாக இருந்தாலும் அதற்குக் கொடுக்கும் பெயர் இடர்பாடுகள்..
எந்த ஒரு நிகழ்வுக்கும் இறுதி என்பது ஒன்று உண்டு என்று உறுதியாக ஏற்க வேண்டும். நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு இடர்பாடு என்று தான் பெயர் சூட்டல் வேண்டும்...
வாழ்வில் சிக்கல்கள் இல்லாதோர் எவரும் இல்லை...!
திருமணம் ஆனவருக்கும், ஆகாதவருக்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும்
ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும்
சிக்கல்கள் இருக்கத் தான் செய்கிறது...
சரி..நமக்கு வரும் சிக்கல்களைத் தீர்க்க என்ன செய்வது...?
முதல் வழி சிக்கல்களைத் தீர்க்க வழி தேடுவது...!
சிக்கல்களை விலக்கி விட்டுச் செல்வது...!
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வது...
இதில் மூன்றாவது வழியே சரியானது...
இடர்பாடு எவ்வளவு பெரிதாயினும், அதனோடு ஒன்றி, உடன் வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக் கொண்டால் எந்த சிக்கல்களையும் வெல்லலாம்...
ஆம் நண்பர்களே...!
அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்றுக் கொண்டால் அங்கு சிக்கல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை...
அமைதியாக ஏற்றுக் கொள்ளும் போது உணர்சிகளுக்கு இடமில்லை...
உணர்ச்சிகள் தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய இடர்பாடுகளாக ஆக்கி விடுகிறது...
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றியும், அறைகூவல்களைப் பற்றியும் சிந்திப்பது மிக மிக முதன்மை தான்...
ஆனால்!, அந்த முதன்மைகள் நம்மை முடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.