Saturday 27 February 2021

நாளை மாலை நடைபெறும் விழா.


 

காலை உணவின் ராஜா இட்லி.

 காலை உணவின் ராஜா இட்லி.

உணவே மருந்து இட்லியில் இவ்வளவு விஷயமா...
#இட்லி’ என்ற உணவின் வயது 700 ஆண்டுகள். ஆம்... இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய் இருந்து வருகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா என அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது.ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என கேட்டபோது, ‘ஏராளம்... ஏராளம்...’ என்கிறார் உணவியல் நிபுணர் ராதிகா.
* பொதுவாக ஒருவருடைய உயரம் மற்றும் எடையைப் பொறுத்துதான் உணவையும், அதன் அளவையும் தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் எல்லாருக்குமான உணவாக இட்லி இருக்கிறது. அதுபோல இட்லி எல்லா காலத்திலும் சாப்பிடக்கூடிய உணவாகவும். இந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.
* ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது. 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.
* தினமும் 4 இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரி கள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.
* இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது, தசைகளுக்கு பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.
* இட்லியோடு சாம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்லியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
* வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது. வயிற்று புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.
* இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்லி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, வெஜிடபிள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்லியைக் கொடுக்கலாம்.
* இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.
* நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.
* இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவாக இருக்கிறது.
* இட்லி மாவை 12 மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள் உருவாகின்றன.
* இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்தக்கூடாது.
* இட்லியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள் அது இட்லியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது. இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.
* இட்லியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் 12 மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்க கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்லி இருக்கிறது...
நன்றி லெட்சுமணன் செட்டியார்

கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.

 கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.

நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியாரிடம் போனான், "ஐயா எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்” என்று கேட்டான், அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான். நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா” என்று கேட்டான் அந்த நோயாளி. பத்தியம் வேறொன்றுமில்லை, லேகியத்தைச் சாப்பிடும் போது குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்" என்று மருத்துவன் சொன்னான்.
நடந்து அவ்வளவுதான், பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்.
கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை ஏன்? 'குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது' என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று. லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது, அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச்
சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் குரங்கு, குரங்கு என்கிற எண்ணமே வந்தது. அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
மனது எதற்குக் கேட்கும்: யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது மனது.
மனதுக்குள் அடங்கியவனல்ல மனிதன்! மனிதனுக்குள் அடங்கியது தான் மனது.


வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 77 இல் தடம் பதிக்கும் அபிராமி பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் கோவில் தலைவர், மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், அண்ணன் புதுவயல் வீர. ராமசாமி
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



மனமே ரிலாக்ஸ்.

 மனமே ரிலாக்ஸ்.

வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.
யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.
ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
தெளிவாகச் செய்யுங்கள்: எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையை காதலியுங்கள்.
ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
விளையாடுங்கள்: உங்கள் நேர நிர்வாக அட்டவணையில், விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உற்சாகம் தரும்.
பிறரையும் கவனிங்க: உங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது, மன உளைச்சலில் கொண்டு போய்விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், பிரதிபலன் எதிர்பாராமல், தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பி வரும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எழுத்தாளர் சுஜாதா நினைவைப் போற்றுவோம்


 

Friday 26 February 2021

நம் பிரச்சனைகளைத் தீர்க்க

 நம் பிரச்சனைகளைத் தீர்க்க

யாரால் முடியும்.
உன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உன்னால் மட்டுமே முடியும்.
ஏனெனில் உன் பிரச்சனைகளை உருவாக்கியதே நீதான்.
~ஓஷோ
நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க இயலாது. அதுப்போலவே நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்துச் செல்வதையும் யாராலும் தடுக்க இயலாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்துவிடுவதற்கு அல்ல.
ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லா துன்பங்களையும் துயரங்களையும், சோதனைகளையும், பிரச்சனைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றிக்காண்பதில் தான் உள்ளது.
ஒருக் கப்பலானது கடலில் தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும், வீசியடிக்கும் காற்றையும் எதிர்க்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஒருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் அந்தக் கப்பலைக் கரைச்சேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் ஆபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை. அதன் இலக்காகிய கரையைச் சென்றடைகிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலை செய்யத் துவங்கும் போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகின்றோம்.
இன்னல் (துன்பம்) என்றதும் வேலையைப் பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவது இல்லை. பிரச்சனை என்ற ஒன்று இருப்பின் தீர்வு என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும். பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று காண்பது தான் மனிதனின் அழகு.
துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் ஏதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.
வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.
*“உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் நீ எந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல் முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.”*
ஆமாம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?
சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


மனிதத்தேனீ சிறப்புரை ஆற்ற உள்ள நிகழ்ச்சி


 

Thursday 25 February 2021

மனிதத்தேனீயின் தேன்துளி


 

நமக்குள் இருக்கிறார் இறைவன்

 நமக்குள் இருக்கிறார் இறைவன்.

ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார்.
"ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.
குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்.
"தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன்" என்றார் வந்தவர்.
"நான் என்ன செய்யவேண்டும்?" என்று பணிவுடன் கேட்டார் குரு.
"குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது.உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை.அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.
அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார்.
"அறியாமை என்ற வினைதான் காரணம்"
"அறியாமையா?" என்று வியந்தார் வந்தவர்.
"ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும்" என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.
குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார்.
இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
இவராயிருக்குமோ? இல்லை அவரையிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை பரிவோடு நடத்தினர்.
இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பணிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.
இதனைக் கண்ட பிறகு தான் மடாலயத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் பரிவுடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.
கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.

வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

இன்று இரவு மதுரை துவாரகா பேலசில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், அருமை நண்பர், திருமங்கலம்
ஆர். ஜெயராம் அவர்களின் மகன் டாக்டர் அருண்பிரசாத்
- டாக்டர் அனுசாசாய் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.
அரசியல் நெறியாளர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் என் எஸ் வி. சித்தன், மூத்த தலைவர் அவனமுத்து, தமிழக இளைஞர் காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் சி ஆர் சுந்தர்ராஜன், டெம்பிள் சிட்டி குமார், ஹரீஸ் உணவக உரிமையாளர் மூர்த்தி, உரப்பனூர் பிருதிவிராஜ், சிவசுப்பிரமணியன், பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நண்பர்களை சந்தித்து மகிழ்ந்த தருணம்.
வாழிய மணமக்கள்.







Wednesday 24 February 2021

தேடல் தான் கற்றுத் தரும்.

 தேடல் தான் கற்றுத் தரும்.

உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...
"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலைப் போல திசையறியாது மூழ்கிப் போகும்"
படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் அனைவரின் கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!,
அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக்குறி தான் நம் முன் நிற்கும்...
கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடி வரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்...
பெரும்பாலானோர் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை...
வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசை தான்..
அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை, பெரும்பாலானோருக்கு அது பலமுறை தோல்வியைத் தான் பரிசளித்திருக்கிறது...
கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதைவிட அபாயகரமாக இருக்கும்.. இரண்டு உலகங்கள், அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகத் தான் இருக்கும்...
"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லிக் கொடுக்காத பாடத்தை, ஒரு வருடத் தேடல் கற்றுக் கொடுத்து விடும்...!
முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது...
உங்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று சாதித்துக் காட்ட வேண்டும்.
தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்தத் தேடல் மாறிக் கொண்டே இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்...
ஆம் நண்பர்களே.
தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள். வெற்றி உங்களைத் தழுவும் வரை தேடிக் கொண்டே இருங்கள். வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 41 இல் தடம் பதிக்கும் அருமை நண்பர், தேச நலனை கருத்தில் கொண்டு களப் பணியாற்றிவரும், பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப் பிரிவு மண்டல் செயலாளர் க. பூவேந்திரன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ


 

ஆளுமையின் அடையாளம்


 

வாழிய மணமக்கள். இன்று இரவு மதுரையில் நடைபெற்ற ஹாப்பி முதியோர் இல்லத்தின் நிறுவனர் அரிமா என். துரைசிங் அவர்களின் மகள் அமுதா - விக்னேஸ்வரன் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ. அருகில் நண்பர் எஸ். பொய்சொல்லான். வாழிய மணமக்கள்.

 



வாழிய மணமக்கள்.

 வாழிய

மணமக்கள்.
இன்று இரவு மதுரை புதூர் விஜய் கிருஷ்ணா மகாலில் நடைபெற்ற அருமை நண்பர் ஓம் முருகா ஜவுளி குடும்பத்தின் பா. முத்து அவர்களின் மகள் சிநேகா - ராம்
திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.
மற்றும் அரிமா ராம் வீடீயோ பஜார் ரவிச்சந்திரன், புரபசனல் கொரியர் சுரேஷ், ரமேஷ், ஓம் பிரகாஷ் கோத்தாரி, சோலைமலை கண்ணன், காலேஜ் ஹவுஸ் ம. கார்த்திகேயன்.
வாழிய மணமக்கள்.






தியாகி அ. வைத்தியநாத அய்யர் 66 ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் அடித்தள மக்களின் உயர்வு என்ற தலைப்பில் மனிதத்தேனீ 65 நிமிடங்கள் சிறப்புரை.

நேற்று இரவு மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் நடைபெற்ற தியாகி அ. வைத்தியநாத அய்யர் 66 ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் அடித்தள மக்களின் உயர்வு என்ற தலைப்பில் மனிதத்தேனீ 65 நிமிடங்கள் சிறப்புரை.

அருகில் இல்லத்தின் செயலாளர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் ராணி, ஆசிரியர்கள் ஜானகி, சூர்யா, இல்ல மேற்பார்வையாளர் ரவிக்குமார் மற்றும் தியாக சீலர் கக்கன்ஜி குடும்பத்தினர்.
நமது நற்பணி மன்ற நிர்வாகிகள்
ரெ. கார்த்திகேயன்,
மீ. ராமசுப்பிரமணியன், கவிஞர்
மு. முருகேசன், பி. பன்னீர்செல்வம், தெட்சிணாமூர்த்தி, ஐ என் டி யு சி மின் வாரிய மாநில துணைத் தலைவர்
ராதாகிருஷ்ணன் உள்ளனர்.
வரலாற்றை ஆழ்ந்து கவனித்த மாணவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.






குஜராத் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.மீண்டும் அனைத்து மாநகராட்சிகளையும் கைபற்றும் சூழலில் உள்ளது.

 குஜராத் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.மீண்டும் அனைத்து மாநகராட்சிகளையும் கைபற்றும் சூழலில் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசமே இருந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
அம்மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான அகமதாபாத் மகாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 81 வார்டுகளில் பாஜக முன்னிலை பெறுள்ளது. காங்கிரஸ் 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெறுள்ளது.
அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் என 6 மாநகராட்சிகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.
குறிப்பு;இரண்டுதினங்களுக்கு முன்பு பஞ்சாபில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை என்ற தகவலை உடனுக்கு உடன் தமிழக ஊடகங்கள் பதிவு செய்தன.ஆனால் குஜராத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சியி்ல் இருக்கும் போதும் மீண்டும் மீண்டும் பாஜக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவதை,தமிழக ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை..!


Tuesday 23 February 2021

எதற்கும் தயாராக இருங்கள்

 எதற்கும் தயாராக இருங்கள்.

'Positive Thinking' மற்றும் 'Positive Approach' பற்றி எல்லோரும் ஏராளமாக எழுதியும் சொல்லியும் ஆகி விட்டது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில்
நல்லதே பெருகக் காண்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நல்லதையே எதிர்பார்த்திருந்து விட்டு நல்லது நடக்காமல் போகையில் ஏமாற்றத்தின் அளவும் அதிகமாகவே ஆகி விடுகிறது. எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது மனக்கசப்பு தான் அதிகம் மிஞ்சுகிறது. அப்படியானால் பாசிடிவ் அப்ரோச் என்கிற வழியே தவறா?
இல்லை. 'Positive Thinking/Approach' என்பது உண்மையில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நடப்பதை எல்லாம் நமக்குப் பயனுள்ளதாக ஆக்கிக்
கொள்ள வேண்டும் என்கிற அணுகுமுறையே. எது நடந்தாலும் தளர்ந்து விடாமல் சந்திக்கத் தயாராக இருப்பதே அதன் குறிக்கோள்.
எத்தனை தான் படித்தும், கேட்டும், சிலாகித்தாலும் தினசரி வாழ்க்கையினை சந்திக்கும் போது பல சமயங்களில் பெரும்பாலானோரது Positive Thinking/Approach எல்லாம் தகர்ந்து போய் விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. அதற்கு என்ன செய்வது?
தத்துவஞானியும், ரோமானியச் சக்கரவர்த்தியுமான மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய டைரியில் தான் இன்று நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் சந்திக்கக்கூடும் மன அமைதியை இழக்க வைக்கக்கூடிய சம்பவங்களில் சிக்கக்கூடும் என்பது போன்ற பிரச்சினையான சாத்தியக்கூறுகளை எழுதி வைத்து விட்டு, தினமும் காலை அதைப் படித்து விட்டுத் தான் தன் நாளைத் தொடங்குவாராம். ராஜ்ஜியம் பரிபாலனம் செய்யும் சக்கரவர்த்தி இயல்பாக சந்திக்கக் கூடிய அது போன்ற சாத்தியக்கூறுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்து, அவற்றை கையாள வேண்டிய வழிமுறைகளையும் யோசித்தும் வைத்திருந்த அவரது தயார் நிலை அவர் மன அமைதியை இழக்காமல் காத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.
பிரச்சினைகளும் சவால்களும் தான் பலரை நிலைகுலைய வைக்கின்றன என்றில்லை. பழகிப் போன ஒரு வாழ்க்கை முறை மாறத் துவங்கும் போதும் அந்த மாற்றத்தை பலர் சங்கடமாகவே நினைக்கின்றனர். உலகில் மாற்றம் ஒன்றே நிச்சயம் என்பது மாபெரும் உண்மை. அப்படி இருக்கையில் மாற்றம் நிகழும் போது தயார்நிலையில் இல்லாமல் இருப்பதும், மாற்றமே கூடாது என ஆசைப்படுவதும் அறிவீனம் அல்லவா?
எனவே எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்திருங்கள். மாறுதல் நிகழும் போது அதை உற்சாகமாக எதிர்கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமுள்ள மாற்றங்களும் நிகழ்வுகளும் மட்டுமே ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகம் உங்கள் விருப்பப்படி இயங்குவதில்லை. எல்லாமே ஒரு காரணத்தோடு
தான் நடக்கின்றன. அவை நடக்கையில் சிணுங்குவதும் குமுறுவதும் வாழ்க்கை ஓட்டத்தை எளிதாக்குவதற்கு பதிலாக மேலும் மோசமாக்குகின்றன.
எனவே நல்லதே எண்ணுங்கள். நல்லதையே வாழ்க்கையில் பிரதானப்படுத்துங்கள். ஆனால் விதி உங்களை முன்னேற்றவும், பதப்படுத்தவும் எதிர்பாராத சிக்கல்களை உங்கள் வழியில் அனுப்பி வைக்கக்கூடும்.
அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருங்கள். வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வருவதை சந்தித்து மனதைப் பாழாக்கி, மூளையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக தெளிந்த மனதுடன் மூளையைக் கூராக்கி இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுக் கொண்டால் எதனாலும், யாராலும் உங்கள் முன்னேற்றம் தடைப்படுவதில்லை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வைத்தியநாத அய்யர் நினைவைப் போற்றுவோம்


 

ஆழ்ந்த இரங்கல்.

 ஆழ்ந்த இரங்கல்.

மதுரையின் மகத்தான மருத்துவர், விளாச்சேரி ஐயப்பன் ஆலயத்தின் நிறுவனர், ஏவிஎன் மருத்துவ நிறுவனம் மற்றும் விளாச்சேரி ஆர்ய வைத்திய நிலையம் என சேவைகள் செய்த நமது டாக்டர்
ராகவ வாரியார் 89
இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று இரவு விளாச்சேரி இல்லத்தில் நடைபெறுகின்றன.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..

போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..
புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண் பேடி, சில நாள்களுக்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூடுதலாக அந்தப் பொறுப்பை கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவிக்க, தமிழிசை அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை விமான நிலையத்தில், இது குறித்து பேட்டியளித்தார். அப்போது, ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க பிரதமர் மோடி, கிரண்பேடியை அனுப்பியிருந்தார். இப்போது அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தமிழிசையை அனுப்பியுள்ளார். கிருஷ்ணரை கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினர். ஆனால், எல்லா முறையும் கிருஷ்ணர் தப்பித்தார். பெண்கள்தான் தப்பிக்கவில்லை. அதுதான் தற்போது கிரண்பேடிக்கு நடந்துள்ளது. அடுத்து தமிழிசைக்கு என்ன நேரப்போகிறது என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டேதான் இருக்கும். புதுச்சேரியிலும் அப்படி ஓர் அரசியல் மாற்றம் நடந்திருக்கிறது. ஆனால், துணைநிலை ஆளுநர், ஆளுநர் என்ற பொறுப்புகளில் இருப்பவர்களையும், `பெண்கள்' என்றே சுருக்கிப் பார்க்கிறார் கே.எஸ்.அழகிரி.
இத்தனை ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கூட அவரை நெறிப்படுத்தவில்லை என்பது துயரம்.
அதிலும், கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கும் இதிகாச உதாரணம், இன்னும் கொடூரம். கிருஷ்ணரை கொல்ல அனுப்பப்பட்ட பெண்களை, கிரண் பேடி, தமிழிசை சௌந்தரராஜனோடு ஒப்பீடு செய்திருக்கிறார்.
சதி வேலைகளுக்காக அனுப்பப்படும் மாயவேலைக்காரர்கள் பெண்கள் என்ற தன் ஆழ்ந்த நம்பிக்கையை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக, `கிருஷ்ணரைக் கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினர்' என்றிருக்கிறார் இந்த கே.எஸ்.அழகிரி.
இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. ஒவ்வொரு முறையும் கிருஷ்ணர்தான் ஜெயித்தாராம், பெண்கள் தப்பிக்கவில்லையாம்.
மேலும், கிருஷ்ணரை அழிக்க வந்த பெண்களுக்கு நேர்ந்ததுதான் கிரண் பேடி, தமிழிசைக்கும் நடக்கும் என்றும் எச்சரிக்கை விட்டிருக்கிறார்.
இங்கு ஜெகம் காக்க வந்த கிருஷ்ணர் யார்.? என்று தெரியவில்லை. ஆனால், அழிக்க புதுச்சேரிக்கு வந்தவர்கள், பெண்கள்.
கே.எஸ்.அழகிரிகளே... பெண்களை கீழ்மையானவர்களாகச் சித்திரிக்கும் இதுபோன்ற வார்த்தைகளை, உதாரணங்களை, கருத்துகளை எல்லாம் அரசியல் அரங்குகளில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
கிரண் பேடியோ, தமிழிசை சௌந்தரராஜனோ பெண்கள் என்பதாலேயே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல. வகித்த பொறுப்புகள், அரசியல் செயல்பாடுகள், கொள்கைகள், செயல்பாடுகள் என அவர்களை அவர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் விமர்சியுங்கள். ஆனால், `பெண்களா இருந்துக்கிட்டு...' என பாலினம் ரீதியாக அவர்களை விமர்சிக்கும் வார்த்தைகள், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு அழகா?
நீங்கள் சார்ந்திருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஒரு பெண்தானே?
தாங்களின் கருத்துப்படி சதி வேலைகளுக்காக அனுப்பப்படும் மாயவேலைக்காரர்கள்தான் பெண்கள் என்றால்.தாங்கள் கட்சிதலைவி சோனியா இத்தாலியில் இருந்து இந்தியா வந்து அரசியில் செய்வதும் அதுதான் காரணமாக இருக்கும் என்பது மட்டும் தாங்களுக்கு தெரியாமல் போனது ஏன்..?
அவரால்தான் இந்த சொகுசு வாழ்க்கை தாங்கள் வாழ முடிகிறது என்பதால் அதற்கு மட்டும் விதிவிலக்கா..?இப்படி எல்லாம் பேசி,நடித்து இந்த சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பதில்...?
குறிப்பு; கண்டனங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வது என்பது குற்றங்களைக் குறைக்கும் கருவிகளில் ஒன்று. அந்த வகையில், கே.எஸ்.அழகிரியின் வார்த்தைகளுக்கான எதிர்ப்பைப் பதிவு செய்வது, கடமையாகிறது.
ஏதோ பெண்களின் பாதுகாவலர்களே நாங்கள்தான் என எதிர்கட்சியினரின் செயல்களுக்கு மட்டும் எதிராக குரல் கொடுக்கும்,திமுக கனிமொழி,காங்கிரஸ் ஜோதிமணி எம்பிக்கள் ஏன் இதற்கு குரல் கொடுக்கவில்லை.?
மேலும், பெண்கள் சதிவேலைகளுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுபவர்கள், பெண்களால் ஒருபோதும் ஜெயிக்க முடியாது என்ற கே.எஸ்.அழகிரியின் நம்பிக்கை இன்றே பாண்டிச்சேரியில் பொய்த்துப் போனது.
இனியாவது அவர் குணம் பெறுவார் என்றும் நம்புவோம்..


Monday 22 February 2021

கதி. பழனியப்பன் அவர்கள் இன்று அவர்களது இல்லத்தரசியார் முனைவர் மு. வள்ளியம்மை ஆச்சி எழுதிய திருவாசகம் நூலினை வழங்கிய மகிழ்வான தருணம்.

 நேமம் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இணைச் செயலாளர், காரைக்குடி ஒண்டர்ஸ் கிளப் ரோட்டரி இயக்கத்தின் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் (பணி நிறைவு) தலைவர், அர்த்தமுள்ள இந்த மனம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், கானாடுகாத்தான் முனைவர்

கதி. பழனியப்பன் அவர்கள் இன்று அவர்களது இல்லத்தரசியார் முனைவர் மு. வள்ளியம்மை ஆச்சி எழுதிய திருவாசகம் நூலினை வழங்கிய மகிழ்வான தருணம்.
வாழிய பேராசிரியர்களின் பேராற்றல். - மனிதத்தேனீ


அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள்.

 அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள்.

இன்று காலை டி பி கே ரோடு கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் நெறியாளர் பி. பன்னீர்செல்வம் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அதன் முன்னோடிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது. மனிதத்தேனீ சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நற்பணி மன்ற நிர்வாகிகள்
தியாக தீபம் அ. பாலு,
சீ. கிருஷ்ணமூர்த்தி, கவிஞர்கள்
மு. முருகேசன்,
மீ. ராமசுப்பிரமணியன், ரெ. கார்த்திகேயன், எம். செல்வம் பங்கேற்று வாழ்த்திய தருணம்.
நலமும் வளமும் தொடர்ந்திடப் பாராட்டுக்கள்.




வைத்தியநாத அய்யர் 66ஆம் ஆண்டு நினைவு தினம்


 

பி.பன்னீர்செல்வம் அகவை 69 இல் தடம் பதிக்கும் வாழிய பல்லாண்டு


 

சகித்துக் கொள்வோம்.

 சகித்துக் கொள்வோம்.

வஞ்சகம் செய்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அவர்களுடைய அறியாமையால் தான் அதைச் செய்து வருகிறார்கள்.
பெரிய புராணத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம்.
மெய்பொருள் நாயனார் எல்லோருக்கும் நல்லவர் தான். ஆனால், அவரை முத்திநாதன் எதிரியாக கருதினான். அவரை வென்று விட பல முறை முயன்றான். முடியவில்லை. இறுதியில் வஞ்சகமாக அவரை கொலை செய்ய எண்ணினான். உடல் முழுவதும் திருநீறு அணிந்து அடியவர் போல வேடம் போட்டான். ஒரு நீண்ட வாளை ஓலைச்சுவடியினுள் வைத்து சுற்றி மறைத்து வைத்துக் கொண்டு அவரை சந்திக்கச் சென்றான்.
“உங்களிடம் ஒரு நூலின் உண்மை பொருளை பற்றி கூற வந்துள்ளேன். அதனால், நாம் இருவரும் தனியான இடத்தில் அமர்ந்து பேசலாம்” என்று அவரை நயவஞ்சகமாக அழைத்தான்.
அவனது நயவஞ்சக பேச்சை உண்மையென்று நம்பி, நாயனாரும் அவனை தனியிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவன் ஓலைச்சுவடியை அவிழ்ப்பது போல பாவனை செய்து, அதனுள் மறைத்து வைத்திருந்த வாளை உருவி அவரை வெட்டி வீழ்த்தினான்.
உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நாயனாரின் நிலையைக் கண்டு, ஆத்திரமடைந்த அவரது மெய்க்காப்பாளன் தத்தன் ஓடிவந்தான். அவன் முத்திநாதனைக் கொல்ல வாளை உருவும்போது, நாயனார் அந்த மரணத்தறுவாயிலும், “தத்தா, அவர் நமது உறவினர் தான். அவரைக் கொல்லாதே. அவருக்கு எந்த விதமான தீங்கும் நேராதவாறு பாதுகாப்பாக வெளியே கொண்டு போய் விட்டு விடு” என்று கூறி, தன் இன்னுயிரை நீத்தார்.
மன்னிக்கும் பக்குவம் எல்லாருக்கும் இருந்து விடுவதில்லை. தெய்வரீதியிலோ, மகான்கள் ரீதியிலோ தான் இப்படியான பக்குவநிலையை பார்க்கமுடிகிறது.
மனிதன் `கூடி வாழும் ஒரு சமூக விலங்கு’ என்று உளவியல் நிபுணர்கள் கூறுவதுண்டு. நாம் தினமும் தொழில்ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ எத்தனையோ மனிதர்களை சந்திக்க வேண்டியதாகிறது. ஒவ்வொவாருவரும் ஒவ்வொருவிதமான மனநிலையில் இருப்பவர்கள். இவர்களின் எண்ணங்களுக்கேற்ப நாம் அனுசரித்து நடக்கமுடியாத சூழ்நிலை பலநேரங்களில் நமக்கு ஏற்படும். ஆனாலும் வேறுவழியின்றி அவர்களைச் சகித்துக் கொள்கிறோம். ஆனாலும் இப்படிபட்டவர்களுடன் நம்மால் தொடர்ந்து சகிப்புத்தன்மைடன் இருக்க முடிவதில்லை. நமக்கென்று உள்ள நம் தனித்தன்மை இவர்களால் மறைந்தே போகும் என்கிற எச்சரிக்கை மணி தான் இவர்களிடம் இருந்து நம்மை பிரித்து விடுகிறது.
ஒருவிதத்தில் இந்த புரிதல்…அதனால் பிரிதல் நல்லது தான். பழக நேர்ந்தவர்களின் பாவ மூட்டைகளையெல்லாம் நாம் சுமக்க நாமென்ன தேவ அவதாரமா?