Thursday 28 September 2017

Daily Thanthi paper 28.09.17 page 15


கவியரசு கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Ullachi Saral Paper 26.09.2017 page 2


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முக்கிய செய்தி :
பீதியை கிளப்ப வேண்டாம். ஆனால்...
ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றுதான்...
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே கடல் பரப்பில் காற்று அழுத்தம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இது சிறிது காலத்தில் இரண்டாக பிரியும். ஒன்று இலங்கை நோக்கி நகரும். மற்றது தமிழகத்தை நோக்கி வரும்.
தமிழகம் நோக்கி வட மேற்காக நகரும் காற்று அழுத்த மண்டலமும், இலங்கை நோக்கி தென் மேற்காக செல்லும் கா. அ. மண்டலமும் அரை வட்டமிட்டு மீண்டும் ஒன்றாக சேரும். அப்போது அது அநேகமாக சென்னை அருகில் கடலில் நிலை கொள்ளும்.
சுற்றுப் பயணம் செய்ததால் இரு மண்டலங்களின் அழுத்தமும் அதிகமாகி இருக்கும். அப்படி வலுவான ஒருங்கிணைந்த மண்டலம் சென்னை அருகே நிலை கொள்ளும்போது சென்னையிலும் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் காற்றும் மழையும் மிக பலமாக இருக்கும்.
பின்னர் இது மீண்டும் இரண்டாக பிரிந்து, ஒன்று வடக்கு வட கிழக்கு திசையில் ஆந்திரா ஒடிசா கடலோரத்தை தேடி பயணம் தொடங்கும். ஆனால் இரண்டாவது பிரிவு, அதாவது எஞ்சியுள்ள அழுத்த மண்டலம் எங்கேயும் நகராமல் சென்னையை நோக்கியபடி பிரியாமல் அப்படியே உட்கார்ந்திருக்கும்.
அந்த அழுத்த மண்டலம் எத்தனை நாள் சென்னை அருகே முகாமிடும் என்பதை உறுதியாக சொல்ல இயலாது. ஆனால், கடந்த வருடங்கள் அதாவது 2015 2016 ஆம் ஆண்டுகளில் நடந்ததை விட கூடுதல் கனமழை சூறாவளி காற்று இருக்கும் என்பது மட்டும் மிக உறுதியாக தெரியும். மேலும் பல பல புயலும் கா. தா. நிலையும் சென்னையையும் தமிழகத்தையும் தாக்கும் என்று பஞ்சாங்கத்திலும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்னும் எளிமையாக சொல்வது என்றால், அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகும் மழை வரும் மாதங்களில் சென்னை நகரை மறுபடியும் அடித்து துவைத்து புரட்டி எடுக்கப் போகிறது கனமழை.
அது, ஏற்கனவே கடந்த வருடம் பெய்த மழையை ஜுஜுபி என்று சொல்லும் அளவுக்குக் கூட இருக்கலாம்.
இது நமது உள்ளூர் மழை ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் தெரிவித்த தகவல் அல்ல.
அமெரிக்காவின் க்ளைமேட் ப்ரெடிக்‌ஷன் சென்டரும் ஐரோப்பாவின் சென்டர் ஃபார் மீடியம் ரேஞ்ச் வெதர் ஃபோர்காஸ்டும் நாஸாவும் விடுத்த அறிக்கைகள் தரும் எச்சரிக்கை.
முன் எச்சரிக்கை நல்லதுதானே ?

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இணைய தளத்தில் இரண்டாவது இடத்தில் அன்னைத் தமிழ்...................
தமிழின் நவீன சிறப்பு !
~~~~~~~~~~~~~~~
கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் ..!
1.டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி.
2.வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழை தான் இந்தியை அல்ல.
3.சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்.
4.ரஷ்ய அதிபர் மாளிகையான 'கிரெம்ளின் மாளிகை' என்னும் பெயர் நான்கு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக நம் தமிழ் உள்ளது.(ரஷ்ய மொழி, சீன மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ்)
5.உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் நம் தமிழின் திருக்குறள் உள்ளது.
6.லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை வழங்கப்பட்டுள்ளது.
7.ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழி தமிழ்.
8.இந்தியாவிலேயே முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான்.
9.முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஒன்று.
10.ஆங்கிலத்துக்கு பின் இணைய தளத்தில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே.
நவீன யுகத்திலும்,
சாகா வரம் பெற்றது நம் தமிழ்..!
தமிழ் மொழி காப்போம்..!
தமிழ் வளர்ப்போம் ..!

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இஸ்லாமிய நாடாக இருப்பினும் துருக்கியில் சட்டப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்பதே கடைபிடிக்கப் படுவதாக எங்கள் வழிகாட்டி சொன்னார்.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அதிகாரமுண்டாம். பெண்ணின் கொடுமையிலிருந்து தப்பிக்க அதோ அந்த பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டவர்கள் பலர் என்றார். இருப்பினும் தனது மனைவியைப் போலவே பெரும்பாலான பெண்கள் தங்களது கணவனின் மீதும் குடும்பத்தின் மீதும் அன்பைப் பொழிபவர்கள்தானாம்.
கல்லூரி படிக்கும் போது இராணுவப் பயிற்சி கட்டாயமாம்.
இந்தியாவிலிருந்து சென்ற கோகினூர் வைரங்களும் தங்க ஆபரணங்களும் காட்சியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அரண்மனைத்தூணின் குழியில் கட்டைவிரல் வைத்துச் சுற்றி வந்தால் நல்லது நடக்கும் என்பதைப் போன்ற நம்பிக்கைகள் பல அவர்களிடமும் இருக்கிறது!
இன்று உலக சுற்றுலா தினம்!

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பார்த்தேன் அதிர்ந்தேன் பகிர்கிறேன்...
(அனைவரும் பார்த்து பகிர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.)
பொன்னுலகம் கனவுகள் பயங்கரமானவை. அங்கு பாலாறுகள் ஒடுவவதில்லை. இவர்கள் சதா சர்வ காலமும் கத்தும் மனித உரிமைகள் துளியும் இல்லை, தனி மனித சுதந்திரம் ஏட்டளவில் கூட அனுமதியில்லை. அது சைனாவோ வடக் கொரியாவோ எங்கு எல்லாம் கம்யூனிசம் இருக்கிறது அங்கு எல்லாம் அந்த நாட்டின் மக்கள் உயிரை கையில் பிடித்துதான் வாழ வேண்டும்...
கொட்டம் பட்டியை தாண்டாத அல்லது மார்க்ஸ், பிடல், ஸ்டாலின் என்ற பேய்களின் திரித்த் பொன்னுலக கனவு புத்தகங்களை அரைகுறையாக படித்த ஜந்துக்கள் கொரியாவின் கிம் என்ற ராட்சசனை புகழ்வதை நான் பார்க்கவும் நேர்ந்தது.
உண்மையில் வடகொரியா என்பது இஸ்லாமிய ஜிஹாதிகள் போன்ற ஒரு மோசமான நாடு... இதை பற்றி அந்த நாட்டிலிருந்து தப்பித்த ஒரு சிறுமியின் விடியோ வாக்குமூலத்தை தமிழில் பதிகிறேன். நானே நேரடியாக சந்திக்க நேரிட்ட ஒன்றிணைந்த கொரியாவை விரும்பும் தென் கொரிய பிரஜையின் தகவல்களை அடுத்த பதிவுகளில் கொடுக்க முயல்கிறேன்...
இனி விடியோவின் தமிழாக்கம்...
இதை நான் சொல்லியே ஆக வேண்டும், இது நான் பேசுவது என்று மட்டும் ஆகாது எங்களது மக்கள் உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தியாக இது இருக்க வேண்டும்.
வடகொரியா உங்கள் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும் ஒரு நாடு.
அங்கு ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டுமே உண்டு. அங்கு மக்கள் பயன்பாட்டிற்கு இணைய சேவையே கிடையாது.
எங்களுக்கு பிடித்த பாடலை பாடவோ, பிடித்த உடையை உடுத்தவோ அல்லது பேச்சுரிமையோ கிடையாது.
அனுமதியில்லாமல் வெளிநாடிற்கு தொலைபேசியில் பேசியவர்களுக்கு உலகத்திலேயே மரண தண்டனை கொடுக்கும் நாடு வடகொரியாதான்.
வடகொரியர்கள் இன்று தீவிரவாதப்பிடியில் இருக்கிறார்கள். நான் வடகொரியாவில் வளர்ந்த பொழுது ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் கதைகளை கேட்டதோ, படித்ததோ, பார்த்ததோ இல்லை. ஒரு திரைப்படம் கூட இதை பற்றி இருந்ததில்லை.
புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள் என எல்லாமே கிம் சர்வாதிகாரத்தை ஏற்க வைக்கும் மூளை சளவை மட்டுமே...
நான் பிறந்தது 1993ல்... சுதந்திரம், மனித உரிமை போன்ற வார்த்தைகளை நான் கேள்விப்படும் முன்னமே நான் கடத்தப்பட்டேன்...
வடகொரிய மக்கள் அனைவருக்கும் இதில் இருந்து சுதந்திரம் வேண்டும். அதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது என் கண் முன்னே பொது மக்கள் முன்னிலையில் என் தோழியின் அம்மாவை கொன்றார்கள். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஹாலிவுட்டில் தயாரான ஒரு திரைப்படத்தை பார்ததுதான்...
சைனாவிற்கு தப்பி ஓடியபின் என் அப்பா உயிரழந்தார். உயிரழந்த அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் விடியற்காலை 3 மணிக்கு புதைக்க வேண்டிய சூழல். அப்பொழுது எனக்கு வயது 14. எனக்கு அழ கூட முடியவில்லை காரணம் எங்கே நம்மை திரும்பவும் வடகொரியாவிற்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சம்...
நான் வடகொரியாவை விட்டு தப்பிய நாளில் என் கண் முன்னே என் தாய் கற்பழிக்கப்பட்டார். இதை செய்தது ஒரு சைனா புரோக்கர். அவனின் குறி உண்மையில் நானாக இருந்தேன் அப்பொழுது எனக்கு 13 வயது.
வடகொரியாவில் ஒரு சொல்லாடல் உண்டு...
"Women are weak,
But Mothers are Strong!"
தன்னை கற்பழிக்க அனுமதித்து என்னை காப்பாற்றினார் என் தாய்...
சைனாவில் 3,00,000 வடகொரிய அகதிகள் இருக்கிறார்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 70% பெண்களும், பருவமடைந்த பெண்களும் அங்கு $200 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு திசைகாட்டியை வைத்துக் கொண்டு கோபி பாலைவனத்தை கடந்து மங்கோலியா செல்ல ஆயுத்தம் ஆனோம்...
கையில் இருக்கும் திசைக்காட்டி வேலை செய்யாமல் போனால் எங்கள் சுதந்திரத்திற்காக நட்சத்திரங்களை நம்பி சென்றோம். இந்த உலகில் நட்சத்திராங்கள் மட்டுமே எங்களுக்கு உதவுவதாக நான் நினைத்ததுண்டு...
மங்கோலியா எங்களது சுதந்திரத்திற்கு வித்திட்டது. மரணம் அல்லது சுந்திர வாழ்க்கை...
கையில் கத்தியை வைத்துக் கொண்டு மீண்டும் எங்களை வடக்கொரியா அனுப்பி வைக்க முடிவு செய்தால் எங்களை நாங்களே மாய்த்துக் கொள்ள தயாரானோம்...
நாங்கள் மனிதர்களாக வாழ மட்டுமே ஆசைப்படுகிறோம்...
இதற்கு மேல் பதிந்தால் படிக்க முடியாது...
என் வலைதளத்தில் இதோடு அந்த பெண் பேசிய விடியோவையும் பதிக்கிறேன்...

Wednesday 27 September 2017

ராமச்சந்திர ஆதித்தன் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Malai Murasu Paper 27.09.2017 Page 3


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 *பிறப்புக்கு முன்னாலும், இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே ! உன்னை நான் வணங்குகிறேன்!..*
மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக்கழிக்கப்படுவது போல மண்ணிலே விழுந்து நானும் அலைக் கழிக்கப் படுகின்றேன்!
எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால் . அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு .
நான் அரக்கனாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன் ,அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு!
நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னை தவிர வேறு காரணம் இருக்க முடியாது . என் அறிவு சிறியது . உன் ஆட்சி பீடம் பெரியது!
அகந்தை . ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால் . இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்!
இனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா! எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்!..
*கவியரசர் கண்ணதாசன்...*

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


 நம் நிறைவேறாத ஆசைகளுக்கு சில நேரம் நாம் தான் காரணம்.
 குறிக்கோள் அற்ற வாழ்வும், செய்ய வேலை ஒன்றும் இல்லா நிலையும் மன உளைச்சல் தரும்.
 நமது அறிவுக்கு தெரிந்த புரிந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கு அறிவு இருந்து என்ன பயன்.
 யாரை சந்திக்கிறோம் என்பதல்ல. யாரைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்பது தான் முக்கியம்.
 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும்.
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*
நன்றி திரு அ௫. சொக்கலிங்கம்

Tuesday 26 September 2017

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினக் கூட்டம்


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லோரையும்* எப்பவும் பிஸியாவே வச்சுரு ஆண்டவா அப்ப தான் யார் மேலயும் போட்டி பொறாமை போன்ற எண்ணமே வராது.
*மற்றவர்* மாதிரி நம்மனால வாழ முடிலயேனு எண்ணம் இருந்துச்சுனா அத மாற்றிக் கொள்ளுங்கள். ஏனா அங்குட்டு நாலு பே௫ உங்கள மாதிரி வாழ முடிலைன்னு கவல பட்டுட்டு இ௫க்காங்க.
*எதையும்* அறிவுப் பூர்வமாக அல்லாமல் உணர்வு பூர்வமாக அணுகியே பழகி விட்டோம்.
*குடும்பத்தில்* பிரச்சனை சகஜம். ஆனால் பிரச்சனைக்குக் காரணம் நாமாக இருக்கக் கூடாது.
*மனது* ஏற்றுக் கொள்ளும் வரை தான் எல்லாமே. மனது ஏற்கவில்லை என்றால் சொர்க்கம் கூட நரகம் தான் மனது ஏற்றுக் கொண்டால் நரகம் கூட சொர்க்கம் தான்.
*நல்லதே நடக்கும்*

மனிதத்தேனீயின் தேன்துளி


சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா பானர்


Monday 25 September 2017

Gandthi, Kamarajar, Lal Bahadur Birth & Memorial day


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாம் வளா்ந்த வழி...
*நான் ரசித்த மிக அழகான பதிவு*..
படியுங்கள் பிறருக்கு பகிருங்கள்...
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,
மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.
‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,
ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,
பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது.
இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.
”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”
என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.
நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை.
கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.
குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறை யில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான்.
நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.
“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு.
“நமக்கு இங்கு வேலை
கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.
அதையும் வருத்தத் துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர் களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.
இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.
சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.
”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார்,
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.
கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம்.
அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித் தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லா மல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.
நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.
அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.
வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.
அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!
உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,
வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.
நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,
கட்டுப்படுத்துவதால் தான்,
நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று,
அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.
தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.
" ஆனால் தந்தை அப்படி அல்ல "
தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.
ஒரு சொல் கவிதை அம்மா !
அதே ஒரு சொல்
சரித்திரம் அப்பா !!
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.
தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.
நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.
தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.
அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.
தந்தை , தாயாரின் உழைப்பும் அவர்கள் தந்த ஒழுக்கமும் , வளர்ப்பும் தான் நம்மை மனிதர்கள் என்னும் சிலைகளாக செதுக்கி தற்போது உலகில்
மனிதர்களாக உள்ளோம் .

Malai Murasu Paper 25.09.2017 Page 5