Saturday 30 July 2022

வாழிய பல்லாண்டு


 

வீசப்படும் கல்லும் பேசப்படும் சொல்லும்.

 வீசப்படும் கல்லும்

பேசப்படும் சொல்லும்.
உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழையத் துணியாது.
உங்களுடைய துணிச்சல், உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி.
உழைப்பு உண்மையாக இருந்தால் உயர்வு தானே தேடி வரும்.
ஆழம் குறைவோ அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே, சோதனைகள் ஒன்றோ பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே.
பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் வெற்றிக்கு ஏற்ற வழி.
நாம் விதைக்கும் நமது எண்ணங்கள் எல்லாம் விளைந்து நம்மிடமே திரும்ப வந்து சேரும்.
நன்மை, தீமை, அறம், உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்.
எப்படிபட்ட எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை, நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில், வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும், ஒரு அனுபவத்தை நமக்கு தந்து கொண்டே இருக்கிறது.
அதுபோல நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆனால், புதிதாக கற்றுக் கொண்டே இருப்பவர்கள் வாழ்க்கையில் வென்று கொண்டே இருக்கிறார்கள்.
ஏனெனில் வாழ்க்கை நேற்று போல் இன்றில்லை, இன்று போல் நாளையும் இல்லை.
எனவே புதிது புதிதாகக் கற்றுக் கொண்டே இருங்கள், உங்கள் வாழ்க்கை புதிதாக மலரும்.
ஒருவரை நீங்கள் கண்டிக்க நேர்ந்தால் அவரைத் தனிமையில் கண்டியுங்கள்.
ஆனால், அதுவே அவரைப் பாராட்ட நேர்ந்தால் பலர் அறியப் பாராட்டுங்கள்.
எப்போதும், தேவையான இடங்களில் நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறந்து விடாதீர்கள்.
வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் என்றும் நாம் கவனமாக இருந்திடல் வேண்டும்.
ஏனெனில்,
கல் உயிரைக் கொல்லும்.
கடும் சொல்லோ உயிரோடு கொல்லும்.
கதவைப் பூட்டி வைத்து விட்டு,
உள்ளே யாரும் வரவில்லையே என கவலைப்பட்டு என்ன‌ பயன்?
காற்று கூட கண்ணுக்குத் தெரியாது தான்,
ஆனால் காற்றாடியால்
அதனை காண்கிறோம்.
உதவுவது யாரென, உதவிகள் பெறுபவர்க்கு தெரியாமலே இருக்கட்டும்....
தேவைகள் வரும்போது தான்,
இறைவன் கூடத் தேவைப்படுகிறார்...
மனதைத் திறந்து வையுங்கள்.

தூய எண்ணம், சொல், செயல்.

 தூய எண்ணம், சொல், செயல்.

மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் எற்பட்ட பதிவுகளின் மூலம் செயல் படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல் அனத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்து இருக்கும்.
அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும் பெற்று இருக்கின்றான். ஆகவே மனதின் நிலைமைக்கேற்ப அவனிடம் இருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடு உடையதாகவும் இருக்கின்றன.
இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனை பொறுத்து அமைவது இல்லை.
அவை யாரிடம் இருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையைப் பொறுத்து அமைகின்றன.
இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேருன்ற செய்து கொண்டோம்.
தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீய பதிவுகள் கட்டு படுத்துமாறு ஆகிவிடுகின்றன.
நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும்.
தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை (யோகா, தியானம், பிராணயாமம்) மேற்கொள்ள வேண்டும்.
ஒருவரை மனமுவந்து வாழ்க நலத்துடன் என்று வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளைத் துவங்க
இறைவன் அருள் புரியட்டும்…!

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எங்கள் குலதெய்வம் துவார் அருள்மிகு வள்ளிலிங்கம், அடைக்கம்மை அப்பத்தாள் கோவிலில் நேற்று மாலை வழிபாடு. அருகில் விடுதி மேலாளர் ராங்கியம் ஆர்எம். பழனியப்ப செட்டியார் இல்லத்தரசியார் மங்கையர்க்கரசி ஆச்சி. - மனிதத்தேனீ


 

Friday 29 July 2022

இளம் தொழிலதிபர் மனிதத்தேனீக்கு வாழ்த்து. மதுரையில் புகழ் பெற்ற சாமி ஆட்டோ மொபைல் (மதுரைக் கல்லூரி அருகில்) மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் இயக்குனர் உ. அன்புராம் மனிதத்தேனீக்கு பரிசும், அதன் மேலாளர், ஓய்வறியா உழைப்பாளி, எதனையும் நேர்த்தியாகச் செய்திடும் நண்பர் என். சிவானந்தம் அவர்கள் சால்வை அணிவித்து மகிழ்ந்த தருணம். வாழிய நட்புணர்வு - மனிதத்தேனீ


 

கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் நினைவைப் போற்றுவோம் - மனிதத்தேனீ


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

நேற்று இரவு மதுரை கப்பலூர் டோல்கேட் அருகில் உள்ள பிரம்மாண்டமான ஹரீஸ் ரெஸ்டாரண்ட் உணவகத்தில் எனது மூத்த சகோதரர் ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், ஆச்சி கஸ்தூரி கிருஷ்ணன், என் மனைவியின் தங்கை உமா சிதம்பரம், மற்றும் அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார். இந்த உணவகம் அருமை நண்பர், ஓய்வறியா உழைப்பாளி எல். ஈஸ்வர மூர்த்தி அவர்களின் நிர்வாகத்தின் ஒரு அங்கம். -மனிதத்தேனீ


 

Thursday 28 July 2022

அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பட்டிமன்றம்.

 அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பட்டிமன்றம்.

சிவகங்கை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை ஜென்ஃபோரியன்ஸ் ' 18 சார்பில் தமிழ் மன்ற விழா திகழ்' 22 கல்லூரிக் கலையரங்கில் அதன் முதல்வர் டாக்டர் சி. ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் டாக்டர் என். சர்மிளா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பி வி பாலமுருகன், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர். மகேந்திரன், மாணவர் மன்ற ஆலோசகர்கள் டாக்டர் எம். மனோன்மணி, டாக்டர் ஏ ஜி கிருஷ்ணவேணி, டாக்டர் டி சேதுபதி, டாக்டர் பி. சந்திரன், டாக்டர் எஸ். அஞ்சலா முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முனைவர்
பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நடுவராகப் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் ஊரட‌ங்கு காலத்தில்
இழந்ததைப் பெற்றோமா
பெற்றதை இழந்தோமா
என்ற தலைப்பில் நூறு நிமிடங்கள் நடைபெற்றது.
கல்லூரி மாணவர்கள் டாமினிக் கிறிஸ்டோபர், ப்ரீத்தி பிரியதர்ஷினி, ஹேமா ஸ்ரீ, நிமல் ராஜ்
மற்றும் மீனா, இந்துஜா, ஜமீன் பானு, ஆண்டோ யோகேஷ் வாதிட்டனர்.
இழந்ததைப் பெற்றோம் என்ற தீர்ப்பு வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை மாணவச் செல்வங்கள் கெளதம், சூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மிகச் சிறந்த தமிழ்ப் புலமையுடன் மாணவர்கள் இதனை நடத்தியது பாராட்டுக்குரியது.

















சிறிய செயலையும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

 சிறிய செயலையும்

சிறப்பாகச் செய்ய வேண்டும்.
நல்ல சிந்தனைகளே இல்லாமல் வாழ்ந்து பயன் ஏதும் இல்லை. மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உதவி செய்யும் போது வாழ்க்கை நம் தேவைகளை தானாகவே நிறைவேற்றி விடும். சிடு மூஞ்சித்தனமாக இருப்பவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. புன்னகைக்க விலை ஏதுமில்லை தானே? உள்ளத்தில் அன்பு மலரும் போது தான் புன்னகை முகத்தில் மலரும்.
கிடைத்த வாழ்க்கையை அழகாக வாழாமல் வெற்றுப் புலம்பல்களோடே வாழ்வதல்ல வாழ்க்கை.
பழைய நினைவலைகளை யோசிக்கும் போது அதில் உள்ள சோகங்களை மட்டுமே அசை போடாமல் நல்ல நிகழ்வுகளையும் அசை போடுங்கள். இன்முகத்துடன் ரசித்து ருசித்து வாழ்வதே சிறப்பு.
ஒரு நாள் தான் வாழ்க்கை என்று தெரிந்த போதும் மலரும் பூக்கள் போலச் சிரித்துக் கொண்டே வாழலாம். சிறிய செயல்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலே போதும் ஆத்மார்த்தமான ஈடுபாடு எந்தச் செயலையும் அழகாக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

இன்று காலை வளரும் தலைமுறையினரின் வாதிடும் பேராற்றலைப் பறைசாற்றும் சிறப்புப் பட்டிமன்றம்.


 

Wednesday 27 July 2022

கடமையில் கவனம்.

 கடமையில் கவனம்.

எப்போதும் கடமைகளைச் செய்யும் ஆயத்த நிலையில் இருப்பவர்கள் எதையும் சாதிப்பார்கள்.
கடமைகளைச் செய்வதற்குரிய விதிமுறைகளை மேற்கொள்ளாதார் கடமைகளைப் பயனுறச்செய்தல் இயலாது.
வழியோடு போதல் உழைப்பைக் குறைக்கிறது. களைப்பைக் குறைக்கிறது. பயத்தை குறைக்கிறது. பயணத்தை எளிதாக்குகிறது.
அதுபோலவே விதிமுறைகளின்படி கடமைகளைச் செய்து வாழ்தலும் பயன்பல கூட்டுவிக்கும்.
இப்போதுள்ள முறையில் இல்லற வாழ்க்கையின் மூலம் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்.
அன்பு வளர்ந்தால்தான் இன்பம் தரும். அன்பால் முற்றுப்பெறுவதையே பலர் வாழ்க்கையில் பார்க்கிறோம்.
கோப்புகள் நினைவுக்குரிய சாதனமே தவிர, பணிகளை நிறைவேற்றக்கூடிய சாதனமல்ல.
வளர்ச்சிப் பெறாத மக்களிடம் நன்றியை-கடப்பாட்டை எதிர்பார்ப்பது தவறு; கிடைக்காது.
விளம்பர வெளிச்சம் தேவையற்றது தவிர வேறென்ன.
தொழிலுக்குத் தகுந்த நபர்களும் கிடைப்பதில்லை: நபர்களுக்குத் தகுந்த வேலை தேடுவதும் தொல்லையே.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 26 July 2022

விழிப்புணர்வு.

 விழிப்புணர்வு.

இனிப்பு மட்டுமே இருந்தால் வாழ்க்கை திகட்டி விடும் அல்லவா? ஞானி ஒருவனிடம் சீடனாகச் சேர விரும்பினான் ஒருவன். குரு சொன்னது முதல் 6 மாதங்கள் நீ கவனமற்று இருக்கும் போதெல்லாம் உன்னை நான் அடிப்பேன். நீ தடுக்கும் போது அடிக்க மாட்டேன். அதற்குத் தயாரா என்று கேட்க ஒத்துக் கொள்கிறான்.
பகலில் கவனமுடன் இருக்கும் அவனால் இரவில் தூங்கும் போது அடி விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கான வழிகளை யோசித்தான். முன்பு போலவே துாங்கினான். ஆனால் குரு அறைக்குள் நுழையும் போது அவன் மனம் விழிப்புணர்வை அடைய ஆரம்பித்தது. அவர் வருவதை அவன் உள் மனம் அவனுக்கு உணர்த்தியது.
அவன் அடி வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொண்டான்..குரு சொன்னார். விழிப்புணர்வு அடைந்து விட்டாய். இனி நீ சீடன் இல்லை. நீயே ஞானி என்றாராம். நமக்கும் கூட இத்தகைய விழிப்புணர்வு நிச்சயமாக தேவை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 25 July 2022

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

வாழிய பல்லாண்டு


 

வ.உ.சி. வாலேஸ்வரன் நினைவைப் போற்றுவோம்


 

எங்கள் திருநகர் சீரமைக்கப்பட்ட இல்லத்தில் எளிய விழா.

 எங்கள் திருநகர் சீரமைக்கப்பட்ட இல்லத்தில் எளிய விழா.

திருநகர் பேரூராட்சி, வீடு கட்டும் சங்கம், சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, டவுன் கிளப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய
கே. ராமன் செட்டியார்
1962 இல் கட்டிய இல்லத்தினைச் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்து சீரமைக்கப்பட்டதற்கான எளிய விழா இன்று நடைபெற்றது.
விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் அருட்செல்வர்
எஸ். சீத்தாராமன், தமிழறிஞர்
கி. வேலாயுதன், ஜவஹர் அசோசியேட்ஸ் பொறியாளர்கள்
ஜெ. சுகுமார், ஜெ. சுரேஷ்,அரசு போக்குவரத்து கழக இணை இயக்குநர் ஆர். பாஸ்கரன், சமூக ஆர்வலர் ஹைடெக்
வ. சண்முகசுந்தரம் தம்பதியர்,
இல. அமுதன், திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன் ஆர். கே. பலராமன் தம்பதியர் , திருநகர் சித்தி விநாயகர் கோவில் மேனாள் தக்கார் வீ. கிருஷ்ணமூர்த்தி, நடை பயிற்சி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்
பாண்டியராஜன், பொன். மனோகரன்,பொள்ளு மணி, மைதீன் சுக்கூர், மலரகம் சந்திரன் தம்பதியர் , தணிகை வாசன், திருநகர் நகரத்தார் சங்கத்தின் நிர்வாகி ஏஎல். பழனியப்பன், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த நா. நாச்சியப்பன், பாண்டியன் பிளாஸ்டிக்
எஸ்பி. செந்தில், எஸ். சொக்கலிங்கம், அரவிந்த் ஸ்நாக்ஸ் உரிமையாளர் திண்ணப்பன், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் நிர்வாகிகள்
சி. லெட்சுமணன், எம். முருகப்பன், பிரேம் நிவாஸ் ராமசாமி, செந்தில் ஹையர் பர்சேஸ் பிஎல். சுப்பிரமணியன், எழுத்தாளர் மூத்த பத்திரிகையாளர்
ப. தி௫மலை, கட்டிட கலைஞர்
முத்துமணி நிறுவனத்தினர், பெயிண்டிங் கலைஞர் அங்கீஸ்வரன் குழுவினர், டைல்ஸ் கலைஞர் திருப்பதி குழுவினர், கப்போர்டு மற்றும் மரவேலை கலைஞர் மயில் முருகன், கிரில் எஸ். ரவிச்சந்திரன், கணபதி லாரி சுப்புராம், கணேஷ் எண்டர்பிரைசஸ் ரமேஷ், டாக்டர் எஸ். வெங்கடேஸ்வரன் தம்பதியர், மின்வாரிய உயர் அதிகாரி இளம்பரிதி குடும்பத்தினர், கிப்டா ராஜா குடும்பத்தினர், முனைவர் எஸ். எம். கண்ணன் குடும்பத்தினர், பேராசிரியர் ந. நாட்டுத்துரை தம்பதியர், எக்சலன்ட் ஹரிமாதவன், மற்றும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் உள்ளிட்ட நண்பர்கள், எங்கள் சகோதர சகோதரிகள் உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து திருநகர் ஸ்வீடு டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
நண்பகல் உணவு திருநகர், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
எங்கள் பெற்றோர் நிழலில் நாளும் வளர்கின்றோம். - மனிதத்தேனீ