Monday 31 October 2022

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி











 

வாழ்வியல் வழிகாட்டி.

 வாழ்வியல் வழிகாட்டி.

ஆதிசங்கரர் ஒரு அழகான உவமையைச் சொல்வார். *“நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது”.*
விரல் எங்கு சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு பார்ப்பதே ஞானம்.
கற்கும் அறிவு அந்த விரல் போல. அது நிலவு அல்ல. நிலவு என்கிற ஞானத்தைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். கற்ற விஷயங்கள் சொல்லும் வழியில் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும். அதுவே ஞானம்.
வேதங்கள், உபநிஷத்துகள், திருக்குறள், கீதை போன்ற வழிகாட்டும் நூல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் விரல்களே. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிலவைக் கண்டு விட்டதாக திருப்தியடைவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது போலத் தான்.
அந்த நூல்கள் என்ன சொல்கின்றன என்றறிந்து அதன்படி வாழ ஆரம்பிப்பதே ஞானத்திற்கான ஆரம்பம்.
நல்ல விஷயங்களைப் படித்தோ கேட்டோ அறிந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரே உருப்படியான விஷயம் என்னவென்றால் இதை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து நடைமுறைப் படுத்துவது தான்.
அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அதைச் சிந்தித்து விடா முயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் போது தான் ஞானம் சித்தியாகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழ்க்கை இசையாகும்.

 வாழ்க்கை இசையாகும்.

துளைகளைக் கையாளப் பழகினால் மூங்கில் குழலாகும்.
துன்பங்களைக் கையாளப் பழகினால் வாழ்க்கை இசையாகும்.
எந்தச் சிக்கலும் உன்னைச் சிதைக்க வந்தது அல்ல.
செதுக்க வந்தவையே.
மகான் போல நீ வாழ
வேண்டும் என்றில்லை.
மனசாட்சிப் படி
வாழ்ந்தால் போதும்.
பணம் கூட ஒரு சில இடங்களில்
மட்டுமே தேவைப்படுது.
ஆனால், பொறுமை எல்லா இடத்துலேயும் தேவைப்படுது.
இரு மனதாய் செயல்பட்ட எந்தக் காரியமும் வெற்றியடைந்ததில்லை.
முழுமனதாய் செயல்பட்ட எந்தக் காரியமும் தோல்வியடைந்ததில்லை.
பல முயற்சிகளில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும்
நம்மை மிகப் பெரிய வெற்றிப் பாதையை
நோக்கி அழைத்துச் செல்லும்.
உண்மைகள் சில நேரங்களில் தொலைந்துத் தான் போகுமே தவிர
ஒரு போதும் தோற்றுப் போகாது .

மாலை 5-30 மணிக்கு


 

காலை 10 மணிக்கு


 

வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

இன்று காலை நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற அருமைச் சகோதரர் தியாகராஜர் கலைக் கல்லூரி துறைத் தலைவர், முதுநிலை பேராசிரியர் கோனாபட்டு ராம. முருகப்பன் அவர்களின் மகன்
ராமநாதன் - அபிராமி திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், மணமகனின் அத்தை எம் சி என் மாணிக்கம் அவர்களின் இல்லத்தரசியார் வள்ளிக்கண்ணு மாணிக்கம், கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், எனது சகலை கோனாபட்டு ஹைடெக் ஆப்செட்
எஸ். ஆறுமுகம் என்ற செந்தில் உள்ளனர்.
விழாவில் எம் சி என். மாணிக்கம் போடி ராஜேந்திரன், தேனி டாக்டர் உ. கண்ணப்பன், அலமு வீடீயோ வெங்கடாஜலம் , வைகை எவர் சில்வர் சின்ன ஆறுமுகம் குடும்பத்தினர், வி. சீனிவாசன், திருப்பூர் சிதம்பரம் (பள்ளத்தூர்), மூத்த பத்திரிகையாளர்கள் ஒக்கூர்
எல். சுந்தரம், நகரத்தார் மலர் நா. இளங்கோவன், மற்றும் யுஎஸ்ஏ கண்ணப்பன், கோனாபட்டு ஏஎல். லெட்சுமணன், எம். ராமசாமி, பி. சீத்தாராமன், சரவணன் மற்றும் கீழச்சிவல்பட்டி எஸ் எல். சண்முகம்,நா. மெய்யப்பன், புகைப் படக் கலைஞர் செல்வம் ராமசாமி, வழக்கறிஞர் கண்ணன், எம் சிஎன் மா. சின்ன நாச்சியப்பன் குடும்பத்தினர், கண. ராமநாதன் , அரண்மனை சிறுவயல் வெள்ளையப்பன் உள்ளனர்.
அருகில் அரண்மனை போல பிரம்மாண்டமான முறையில் எழுபது ஆண்டுகால முன்பு கட்டிய விகேஎன் மாளிகையில் அவர்களின் மகன் விகேஎன் மீசை உலகப்பன் அதனை நமக்கு விளக்கிக் காட்டினார்கள்.
மணவிழாவில் பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.






























வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

இன்று காலை ஆத்தங்குடியில் நடைபெற்ற எங்கள் அத்தை பேரன் காரைக்குடி சாரதா அன் சன்ஸ் உரிமையாளர் எஸ். ராமநாதன் இளைய மகள் சின்னம்மாள் என்ற வித்யா - வள்ளியப்பன் என்ற அரவிந்த் (சொக்கநாதபுரம் கண்டி வள்ளியப்ப செட்டியார் பேரன்) திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்த தருணம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் என பலரைச் சந்தித்த இனிய வேளை.
உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.