Tuesday 31 December 2019

மகாத்மா காந்தி நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு 31.12.2019 பக்கம் 5


மக்கள்குரல் மதுரை 31.12.2019 பக்கம் 4


வீரத்தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம்




தினபூமி மதுரை 31.12.2019 பக்கம் 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

‘’மன உறுதி’’ ..,
...................................
ஓர் புகழ் பெற்ற வில் வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில் வித்தைக்காரர் முன் வந்தார்.
துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார்.இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.
தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.
‘அருமை’ என்று பாராட்டிய துறவி,‘ என்னுடன் ஒரு இடத்துக்கு வா.அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா ?என்று பார்ப்போம்’ என்றார்.
அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.
ஒரு பெரிய மலைச் சிகரத்தில் ஏறிய துறவி,மிக உயரத்தில் இரண்டு மலைகளின் இடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார்.
பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது.கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.
தன் வில்லை எடுத்த துறவி,அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.
‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப் பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.
இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.
அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி,உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.
ஆம்,நண்பர்களே..,
உடம்பு வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமை உடையதாக இருக்க வேண்டும்..
மன உறுதி உடையவர்கள் நினைத்ததை நினைத்தபடி அடைய முடியும்.
மன அமைதியைப் பொறுத்தே உங்கள் செயல் உறுதி அமைகிறது. மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை.
மன உறுதி உடையவர்களால் தான் பிறர்க்கு உதவ முடிகிறது.மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கி விடுகிறது.🙏🏻💐🙏🏻

மனிதத்தேனீயின் தேன்துளி


பிள்ளையார் நோன்பு திருநாள்


விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம்


Monday 30 December 2019

திருப்பூர் குமரன் நினைவு தினக் கூட்டம்


வரும் ஞாயிறு மாலை திருமங்கலம் பி கே என் மெட்ரிக் பள்ளியில் சிறப்புரை...



மாலைமுரசு 30.12.2019 பக்கம் 5


மக்கள்குரல் மதுரை 30.12.2019 பக்கம் 7


தினத்தந்தி மதுரை 30.12.2019 பக்கம் 17


மாணவருக்கு மடிக்கணினி மற்றும் கல்வி நிதி



தினபூமி மதுரை 30.12.2019 பக்கம் 6


தினபூமி மதுரை 29.12.2019 பக்கம் 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*🌸மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!*
*༺🌷༻*
இந்த உலகம் நன்மையானதா? தீமையானதா?
தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர்.
*༺🌷༻*
மனம் தூய்மையானால்இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார்.
தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர். உடனே, ”ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு சோதனை!” என்றார் கிருஷ்ணர்.
*༺🌷༻*
இருவரும், ‘என்ன அது?’ என்பது போல், #மகரயாழ் பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.
முதலில் தருமரிடம், ”தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!” என்றார் பகவான்.
*༺🌷༻*
”ஆகட்டும் கிருஷ்ணா!” என்ற தருமர் அங்கிருந்து புறப்பட்டார். அடுத்து, துரியோதனனிடமும் அதே விஷயத்தைக் கூறி அனுப்பி வைத்தார் பரந்தாமன்.
சில நாட்கள் கழித்து இருவர் மட்டும் தனித்துத் திரும்பி வந்தனர். அவர்களிடம் கிருஷ்ணர் கேட்டார்: ”என்னாயிற்று… நான் குறிப்பிட்ட நபர்களை அழைத்து வரவில்லையா?”
*༺🌷༻*
உடனே துரியோதனன், ”கிருஷ்ணா, பல நாட்கள் தேடிப் பார்த்தும் ஒரு நல்லவர்கூட அகப்படவில்லை. உலகில் எல்லோரும் தீயவரே! எனவே, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தீயவராகக் கருதி அழைத்து வர விரும்பவில்லை!” என்றான்.
*༺🌷༻*
ஆச்சரியத்துடன் புருவம் நெறித்த கிருஷ்ணர், தருமரிடம் ”உனக்குக் கூடவா நல்லவர் அகப்படவில்லை?” என்று கேட்டார்.
”நான் தேடிய வகையில் உலகில் தீயவர் என்று எவருமே இல்லை. எனவே, தீயவர் ஒருவரை அழைத்து வர இயலவில்லை. தவிர, எல்லோருமே நல்லவர்கள் எனும்போது, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் எப்படி அழைத்து வருவது? மகரயாழ் எனவே அதுவும் இயலவில்லை!” என்றான்.
*༺🌷༻*
இருவரும் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணர், ”இந்த உலகம் கண்ணாடி போன்றது. கண்ணாடி, தன் முன் எந்த உருவம் இருக்கிறதோ, அதை அப்படியே பிரதிபலிக்கும். இந்த உலகமும் அப்படியே… நல்ல மனம் கொண்டவனுக்கு நன்மையானதாகவும், தீய மனம் படைத்தவனுக்கு தீமைகள் நிறைந்ததாகவும் தோன்றும். நமது மனதை எந்த அளவுக்கு, தூய்மையாக- செம்மைப்படுத்தி வைத்திருக்கிறோமோ… அந்த அளவுக்கு, இந்த உலகமும் தூய்மையானதாக இருக்கும். எனவே, மனதை செம்மைப்படுத்துங்கள்!” என்று கூறி முடித்தார் கீதையின் நாயகன்

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்👍*
*༺🌷༻*
அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் கதை இதுதான்.
அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக இருந்தது. அதனால் அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.
*༺🌷༻*
ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருட்களும், செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.
அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு. பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் பார்த்தான்.
*༺🌷༻*
என்ன அதிசயம்! *அவன் பணக்காரனாகி விட்டான்.* #மகரயாழ் வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.
*༺🌷༻*
மற்றொரு நாள் ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனை கடந்து சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள், படை வீரர்கள். மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல் உடைப்பவன் மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.
*༺🌷༻*
‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும். என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த *அதிகாரியாகி விட்டான்.* அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.
*༺🌷༻*
ஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான், இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன். வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான். வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!
*༺🌷༻*
‘ஓ! உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது. இருக்கட்டும்! நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்’ என்றான்.
*༺🌷༻*
*அவன் இப்போது சூரியனாகிவிட்டான்!*
தனது கிரகணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். அவனுக்கு விவசாயிகளும் தொழிலாளர் களும் சாபமிட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.
*༺🌷༻*
‘ஓகோ.. மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா! அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். நினைத்தபடி *மேகமாகிவிட்டான்.*
*༺🌷༻*
இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.
*༺🌷༻*
‘இந்த காற்றுக்கு எவ்வளவு சக்தி.. நானும் காற்றாக மாறி உலகத்தை ஒரு வழி பண்றேன்’ என்று நினைத்தான் மேகமாக இருந்த கல் உடைப்பவன்.
அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான *காற்றாகி* மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.
*༺🌷༻*
‘காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா, *நானும் பாறையாவேன்’* என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. ஒரு உளியை வைத்து தன் மீது யாரோ அடிக்கும் சத்தம்.
*༺🌷༻*
‘அட.. உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது?’ என்று பார்த்தான், மகரயாழ் பாறையாக இருந்த கல் உடைப்பவன்.
அந்தப் பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் *ஒரு கல் உடைப்பவன்.*
*༺🌷༻*
கதையை சொல்லி முடித்த குரு, *‘ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. எப்போதும் உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்று நினைக்க வேண்டும்’* என்றார்.

மனிதத்தேனீயின் தேன்துளி


Saturday 28 December 2019

பொங்கல் திருநாளை முன்னிட்டு 31ஆம் ஆண்டு புத்தாடை வழங்கும் விழா


தினமலர் மதுரை 26.12.2019 பக்கம் 3


கவிஞர் பாபாராஜ் வாழ்த்து..


விஜயா பிரிண்டர்ஸ் வாழ்க!
அச்சகச் சேவையில் 73 ஆண்டுகாலம் !
எழுபத்து மூன்றாண்டு கால உழைப்பில்
விழுதாக ஊன்றியுள்ள அச்சகத் தொண்டுவாழி!
நம்பிக்கை நாணயம் மூச்சாக வாழும்
நண்பராம் நற்றமிழ்ச் சொக்கலிங்கம் வாழ்க!
செழுந்தமிழ்போல் வாழ்வாங்கு வாழவேண்டும் இங்கு!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மஞ்சள்பை காந்தி படமேந்தும் நாட்காட்டி
நன்றி மறவா நிறுவனர் நூலுடன்
கைக்குட்டை பச்சை நிறவிசிறி நாட்குறிப்பு
கையடக்க சாவிக்கொத்( து) ஏழுபொருள் அன்பளிப்பு
மெய்சிலிர்க்க சொக்கலிங்கம் நட்புடன்
தந்ததை
தெள்ளுதமிழ்ப் பாவினத்தால் வாழ்த்து.
என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்

திருநகர் டி. ராமசாமி பாண்டியன் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள்.


இன்று காலை எங்கள் எதிர் வீட்டில் வசிக்கும் முன்னாள் பி டி ஓ பெரியவர்
டி. ராமசாமி பாண்டியன் எண்பத்து எட்டாம் ஆண்டு பிறந்தநாளில் ஆசி பெற்ற மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், அலமேலு சொக்கலிங்கம், சொ. ராம்குமார்.
அருகில் அவரது மகன் ஒரிசா அரசு உயர் பணியில் உள்ள டி. ஆர். பரத், மற்றும் மல்லிகா தேவி.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)



விடை தெரியாத ஆறு கேள்விகள் :?
1.எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன் ?
2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுத்தப்படுவது ஏன் ?
3. சுற்றமும் நட்பும் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?
4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?
5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?
6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செலவந்தராக இருப்பது ஏன் ?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை நம் ப்ராரப்த கர்மா.
இது சாமானியர் அனைவருக்கும் பொருந்தும். விசேஷமாக சரணாகதி செய்து மோக்ஷத்தை எதிர்பார்த்திருக்கும் முமுக்ஷூவுக்கு இதன் மூலம் பகவான் நம் கர்மாவை கழித்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம்.
இன்னொரு பிறவி எடுத்து கழிக்க வேண்டியதை பகவான் பரம கருணையோடு இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னை வந்து அடையும் படி செய்கிறான்.
இதன் காரணமாக சரணாகதி பண்ணியவனின் துன்பங்கள் பல்மடங்கு பெருகியது போல் தோன்றலாம். ஆனால் அதுவும் பகவானின் பெருங் கருணையே. இது புரிந்த சரணாகதனுக்கு இந்த துன்பங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற ஒரு விளையாட்டு வீரர் எத்தனை தியாகங்கள் செய்கிறார்?
ஒரு நாலு வருடம் தான் அதற்கு மதிப்பு. அதன் பிறகு உலகம் அவரை மறந்தே போகும். இந்த அல்ப விஷயத்துக்கே இந்தப் பாடுபட மனம் இசைகிறது என்றால் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற ஏன் சிறு துன்பங்களை மனம் ஏற்றுக் கொள்ளக் கூடாது?
இந்த கண்ணோட்டத்தில் தான் கண்ணன் கீதையில் சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய் .........
மகிழ்வித்து மகிழுங்கள்

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 27 December 2019

மாலைமுரசு 27.12.2019 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அறிவோம் அற்புதம்...!!
ஔவையார் ஒரே நாளில் இயற்றிய 4 கோடி பாடல்கள்
ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார்.
நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது,
அங்கே வந்த ஔவையார் என்ன வருத்தம்? என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, ஔவையார் இளமுருவலுடன் இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள். கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்" என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கி நிற்க, ஔவையார் "ஒவ்வொரு பாடலும் ஒரு கோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் ஔவையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப் புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் 'ஆமாம்.. ஔவையார் இயற்றியதுதான்' எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து ஔவையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு.
அந்த நான்குகோடி பாடல்கள்:
1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.
நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம்.
2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
உணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்.
3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.
4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை கோடி பெறும்.
கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.
அவ்வையார் நீதிக்கதைகள் எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.
Originally posted by
Lakshmann Chettiar
I took it as reposting

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அருமையான கருத்து. படிக்கத் தகுந்தது 😍😍!!!
நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.
அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.
இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து அவரைக் கடந்தும் விட்டேன். எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.
ஆனால் அந்த நபருக்கு நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.
அவரைக் கடந்த பிறகு நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....
என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.
என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.
என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.
தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.
தேவையற்ற அவசரத்தில் பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.
அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேரம் பேசி நம்முடைய ஆனந்தத்தை நம்மாலேயே இழந்து கொண்டிருக்கிறோம் என்று.
நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.
எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.
உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........
ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.
சிலர் தங்கள் கவனத்தை அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள், எங்கே செல்கின்றார்கள், என்ன அணிகிறார்கள், என்ன வாகனம் ஓட்டுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மை உணருகின்றார்கள்.
உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள். கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.
நாம் யாருடனும் போட்டி அல்ல. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.
ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மை யும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.
உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.
நன்றி பி டு சாமி

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

துணியுங்கள் வெற்றி நிச்சயம்!!!*
வாழ்வு என்ற ஒன்று எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ
அவ்வளவு நாட்கள் நம்பிக்கை என்ற ஒன்றும் இருக்கும்.
மிகவும் உயரமாக இருக்கும் மரத்திற்குத் தான் மிகப் பெரிய வீழ்ச்சி இருக்கும்.
ஒரு நண்பனை இழப்பதை விட
ஒரு நகைச்சுவையை இழக்கலாம்.
மனிதனின் மிகப் பெரிய எதிரியே மனிதன் தான்.
ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதனுக்கு பொறுமை தான் மிகச் சிறந்த மருந்து.
இன்றைய பொழுது இனிமையான
பொழுதாக மலரட்டும் !
*மன மகிழ்வுடன் சிறு* *புன்னகையுடன் உன்னால் இதுவரை முடியாத காரியத்தை முழுதாய் முடித்திட*
*தன்னம்பிக்கையுடன்* *தொடங்குங்கள்!*

மனிதத்தேனீயின் தேன்துளி


Thursday 26 December 2019

மாலைமுரசு 26.12.2019 பக்கம் 5


25.12.2019 நடைபெற்ற தமிழமுதம் நூல் வெளியீடு

மக்கள்குரல் மதுரை 26.12.2019 பக்கம் 4


விஜயா பிரிண்டர்ஸ் 73ஆம் ஆண்டு காலண்டர்


“தமிழமுது” இலவச நூல் வெளியீட்டு விழா





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*உழைப்பு என்ற ஆயுதம்!
*என்னால் முடியாது என்று அடிக்கடி சொல்லாதீர்கள்!*
*அது ஆழ் மனசில் பதிந்து, அது தன் வேலையைச் செய்யும்!*
*நீங்கள் எந்த வேலையில் ஈடு பட்டாலும், நம்மால் முடியாது என்று நினைத்தால் அது உங்களைப் பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கும்!*
*அதற்குப் பதிலாக என்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லிப் பாருங்கள்!*
*அது அடி மனசில் பதிந்து, நீங்கள் செயல் படும் பொழுது ஊக்கப் படுத்திக் கொண்டே இருக்கும்!*
*விடியும் ஒவ்வொரு நாட்களையும் உற்சாகத்தோடு வரவேற்கப் பழகிக் கொள்ளுங்கள்!*
*அப்பொழுது தான் அன்றாடம் நீங்கள் செயல் படுவதற்கு தேவையான சுறு சுறுப்பு கிடைக்கும்!*
*வாழ்க்கையில் எதிர் படும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்!*
*பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்யத் தெரிந்த பலர், நேரத்தை வீணாக கண்டபடி செலவு செய்கிறார்கள்!*
*அதனால் தான் அவர்கள் முன்னேற்றம் தடை படுகிறது!*
*நமக்கு வேண்டிய சக்தி நமக்குள்ளே தான் இருக்கிறது.*
*நாம் அதை பயன் படுத்தும் அளவைப் பொறுத்தே நம் முன்னேற்றம் இருக்கிறது!*
*நம்மால் முடியும் என்று நம்பினால் நிச்சயம் அந்தக் காரியம் நினைத்தபடி நிறைவேறி விடும்!*
*நம் மனசுக்குள் தளராத நம்பிக்கை என்ற ஒரு ஜெனரேட்டர் இருக்கிறது!*
*அதை ‘ஆன்’ பண்ணினால் வேண்டிய மட்டும் நமக்கு சக்தியை உருவாக்கிக் கொடுக்கும்!*
*வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் தங்கள் ஆழ் மனசில் நல்ல சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.*
*எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் நல்ல பலன்களையும், தீய சிந்தனைகள் தீய பலன்களையும் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்!*
*நம் சிந்தனைகள் எப்பொழுதும் நேர்மையான பாதையில் இருக்கும் பட்சத்தில், யார் என்ன நினைப்பார்கள் என்று ஒரு நிமிடம் கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை!*
*வெற்றி பெற்றவர்களைக் கவனித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகப் புரியும்!*
*ஒன்று அவர்கள் எப்பொழுதும் நேர்மையான வழியிலேயே சென்றிருப்பார்கள்!*
*இரண்டு அவர்கள் எந்த சூழ் நிலையிலும் தங்கள் தன்னம்பிக்கையை இழந்திருக்க மாட்டார்கள்!*
*நமது இலட்சியம் மட்டும் மிக உயர்வாக இருந்தால் போதாது.*
*அதை அடையும் வழியும் உயர்வாகவே இருக்க வேண்டும்!*
*ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது இருக்கும் வேகம் அதை முடிக்கும் வரை இருக்க வேண்டும்! ஓவ்வொரு அனுபவமும் ஒரு பாடமாக இருக்கும்!*
*எதிர் படும் ஓவ்வொரு தடையும் ஒரு புதிய வழியை யோசிக்க வைக்கும்!*
*நம் கடமைகளை ஒழுங்காக நாம் செய்யும் பொழுது, தீய வழிகளில் நாம் செல்வதை அதே தடுத்து விடும்!*
*நேரத்தை வீணாக்குவதும், நம்பிக்கையை இழப்பதும் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி தான்!*
*நேர்மையும், நாணயமும் இல்லாதவர்கள் தேடிக் கொள்ளும் புகழும், வெற்றியும் நிரந்தரமானது அல்ல!*
*விரைவில் படு குழியில் தள்ளி விடும்!*
*நல்ல புத்தகங்கள் படிப்பது நல்ல அறிவாளிகளுடன் பேசுவதற்கு சமம்!*
*யாரிடம் பேசினாலும் அளவோடு பேசுங்கள்!*
*இனிமையாகப் பேசுங்கள்!*
*நல்ல ஒழுக்கத்தை விட மேலான ஒன்றை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுத் தந்து விட முடியாது!*
*எப்படி ஒருவன் மொட்டை அடிப்பதால் மட்டும் துறவியாகி விட முடியாதோ, அது போல் வெறும் ஆசைப் பட்டால் மட்டும் வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது!*
*நம்பிக்கையோடு உழைப்பு என்ற ஆயுதத்தை கைகளில் எடுங்கள்!*
*அது வறுமை, சோம்பேறித்தனம், தீய குணம் அனைத்தையும் பொசுக்கி, உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும்!*

மனிதத்தேனீயின் தேன்துளி


நேற்று இரவு திருநகர் எங்கள் இல்லத்தில் நடைபெற்ற நிறுவனர் நினைவு மலர் தமிழமுதம் நூல் வெளியீடு.


Wednesday 25 December 2019

மூதறிஞர் ராஜாஜி நினைவு தினக் கூட்டம்




ஸ்ரீ அனுமன் பிறந்தநாள்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌸நல்லவர்கள் சூழ இருந்தால் என்றுமே நன்மைதான்*
வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர்.
பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது.
*༺🌷༻*
ஒரு நாள்… நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
*༺🌷༻*
”நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கொல்ல வேண்டும்” என்ற அவர்களது பேச்சு, மகிலா முகனின் காதுகளிலும் விழுந்தது. இப்படி, திருடர்கள் யானைக் கொட்டடியில் பதுங்கி, தங்களுக்குள் பேசிக் கொள்வது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது.
தினமும், திருடர்களின் பேச்சைக் கேட்டு வந்த மகிலா முகன் யானை, #மகரயாழ் ‘இவர்கள் நமக்காகவே போதிக்கின்றனர் போலும்!’ என்று எண்ணிக் கொண்டது.
*༺🌷༻*
ஒரு நாள், பாகன் ஒருவன் தன்னருகே வர… அவனை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்துக் கொன்றது மகிலாமுகன். பாகனின் உறவினர்கள், பிரம்ம தத்தரிடம் வந்து முறையிட்டனர்.
மன்னருக்கு அதிர்ச்சி! ‘சாதுவாக இருந்த மகிலாமுகன், திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன்?’ என்று குழம்பினார். முடிவில், அமைச்சர் போதிசத்து வரை வரவழைத்த மன்னர், அவரிடம் நடந்ததை விவரித்து, தகுந்த தீர்வு காணும்படி பணித்தார்.
*༺🌷༻*
யானைக் கொட்டடிக்கு வந்த போதிசத்துவர் மகிலா முகன் யானையைக் கூர்ந்து கவனித்தார். வியாதிக்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை.
*༺🌷༻*
உடனே அங்கிருந்த பாகர்களிடம், ”இங்கே புதிய ஆசாமிகள் எவரும் வந்தார்களா?” என்று கேட்டார்.
அவர்கள், ”ஆமாம் ஐயா! சில தினங்களாக நள்ளிரவில் சிலர், கொட்டடிக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்!” என்றார்கள்.
*༺🌷༻*
‘நள்ளிரவில் கூடுபவர்கள் தீயவர்களாகவே இருக்க வேண்டும்!’ என்று எண்ணிய போதிசத்துவர், மன்னரிடம் விவரங்களைக் கூறினார். அத்துடன், ”ஒழுக்கத்தில் சிறந்த சான்றோர்களை வரவழைத்து, கொட்டடிக்கு அருகில் அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றி பேசச் சொல்லலாம்!” என்றார். மன்னரும் சம்மதித்தார்.
*༺🌷༻*
அதன்படி நல்லோர்களும் அந்தணர்களும் யானைக் கொட்டடியில் கூடிப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நாள்தோறும் அவர்கள் நன்னடத்தைகள்- நீதிநெறிகள் பற்றி உரையாடினர்.
*༺🌷༻*
‘எவரையும் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும்’ என்பன போன்ற அவர்களது பேச்சுகளும் மகிலாமுகன் யானை யின் காதில் விழுந்தன. ‘நமக்காகவே போதிக்கின்றனர்’ என்று கருதிய யானை, படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. மன்னருக்கு ஆச்சரியம்! ”யானை மாறியது ஏன்? அது, பழைய நிலைக்குத் திரும்பியது எப்படி?” என்று போதிசத்துவரிடமே கேட்டார்.
*༺🌷༻*
*”அரசே! எப்போதும் எல்லோரும் நல்ல கருத்து களையே பேச வேண்டும் என்று பெரியோர் கூறுவது இதற்காகவே! திருடர்களது தீய பேச்சுகளைக் கேட்ட யானை, அவற்றை ஏற்று அவ்விதமே செயல்பட்டது. பிறகு அந்தணர்களது நல்லுரைகளைக் கேட்டு, சாதுவாகவும் அன்பாகவும் மாறிவிட்டது”* என்று விளக்கினார் போதிசத்துவர்.
அவரது சாதுர்யத்தைப் பாராட்டிய மன்னர், அவருக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
- எம்.பி. அர்ச்சுனன், கிருஷ்ணகிரி-1

தமிழமுது நூல் வெளியீட்டு விழா


மனிதத்தேனீயின் தேன்துளி


கிறிஸ்துமஸ் வாழ்த்து - மனிதத்தேனீ


Tuesday 24 December 2019

மக்கள்குரல் மதுரை 24.12.2019 பக்கம் 4


தந்தை பெரியார் நினைவைப் போற்றுவோம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
24.12.2019 செவ்வாய் கிழமை

👉🏻இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம்- 1917.
👉🏻பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை நினைவு தினம்-2005.
👉🏻ஈ. வெ. ராமசாமி என்ற தந்தை பெரியார்,
திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர். நினைவு தினம்- 1973.
👉🏻வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர். நினைவு தினம்- 2002.
🎥🎥🎥
எம்.ஜி.ஆர் நடித்த படத்திற்கு
கவியரசர் கண்ணதாசன் எழுதிய, பாடல் ஒன்று.
🎶
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா (உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
படம் : வேட்டைக்காரன்

🙏🏻கண்ணன்சேகர்
9698890108.