Monday 31 December 2018

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚶ஒரு நல்ல கருத்தை சொல்வது சிறப்பு. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்கும் திறனே அதற்கான பலன் தரும்.
⚶தன் மேல் உள்ள நம்பிக்கையை விட பணத்தின் மேல் உள்ள நம்பிக்கை அதிகமாக, அதிகமாக எதையும் துணிந்து செய்யலாம் என்ற நம்பிக்கையை பணம் பலருக்கு தருகிறது.
⚶ஒரு போதும் தற்புகழ்ச்சி கொள்ள வேண்டாம். அதனால் மனதின் பேராற்றல் சிறிது சிறிதாக வீணாகி விடும்.
⚶காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.
⚶கண்ணாடியைப் போலவே ஜாக்ரதையாக உறவுகளைப் பேண வேண்டும். உடைந்த பின் ஒட்டினாலும் கண்ணாடி முன்பு போல் இருக்காது. இதே தான் வாழ்க்கை நடைமுறையும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


புத்தாண்டில் புதிய பாதை திறக்கட்டும்


ரசகுல்லா 150 ஆம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு தபால் தலை வெளியீடு கல்கத்தாவில் இன்று, இனிக்கட்டும் என்றும். -மனிதத்தேனீ


ஏமாற்றங்களே ஏணிப் படிகளாய்....

தகவல் :பொருளாதார நிபுணர் வ. நாகப்பன்.


அண்மைக் காலமாக பிளாக் மெயிலர்கள் சிக்கி சீரழிந்து வருவது நல்ல தொடக்கம், நல்லதே நடக்கும். -மனிதத்தேனீ


வாழ்வே வேளாண்மை.... நம்மாழ்வார் நினைவைப் போற்றிடுவோம். அவர்களுடன் மூன்று நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பசுமையான நினைவுகளுடன் - மனிதத்தேனீ


எளிய பக்தியும் வாழ்வும் வழங்கிய ரமண மகரிஷி 139 ஆம் ஆண்டு பிறந்த நாள், வாழிய புகழ். -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குறை கூற பலர் இருந்தாலும், நம்பிக்கையூட்ட சிலர் இருப்பதால் தான் வாழ்க்கையில் பலர் முன்னேற முடிகிறது.
நாம் செல்லும் பாதை நேர் வழியாக இருந்தால் துஷ்டர்கள் குறுக்கீடு இருக்காது. காரணம் துஷ்டர்கள் குறுக்கு வழியில் தான் செல்வர்.
புத்தகங்களை இழந்து விட்டு அறிவைத் தேடுகிறோம். உறவுகளை இழந்து விட்டு அன்பை தேடுகிறோம். நம்மை நாமே இழந்து விட்டு நிம்மதியை தேடுகிறோம். இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாததை தேடுவதையே வாழ்க்கை என வாழ்கிறோம்.
யாருக்கும் யாரும் சொந்தமில்லை. நட்பின் மேல் நம்பிக்கை இல்லை. தேவைகள் ஓய்ந்தாலே புரிதல். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நாம் செல்லும் பாதை. சரியென்ன தவறென்ன, எவருக்கு எது வேண்டும் செய்வோம்.
விட்டுக் கொடுத்து, மற்றவர்களுக்காக வாழ்கின்ற வாழ்க்கை தான், தன்னையும் வாழ வைக்கும், பிறரையும் வாழ வைக்கும். Adjusting and living a life for others, will allow you to live alongwith others to live.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


இன்று இரவு மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற மதுரை மிட்டவுன் ரோட்டரி சங்க குடும்ப விழாவில் 58 நிமிடங்கள் ஆனந்த குடும்பம் தலைப்பில் மனிதத்தேனீ சிறப்புரை, அருகில் தலைவர் ஹெர்பர்ட், செயலாளர் பாஸ்கர், முன்னாள் தலைவர் நிக்கோலஸ் பிரான்சிஸ். விரிவான செய்தி திங்கட்கிழமை வரும்.



Saturday 29 December 2018

விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு 29.12.2018 பக்கம் 5


திருப்பூர் குமரன் நினைவு தினக் கூட்டம்


காரைக்குடி அரவிந்த் சிதம்பரம் செஸ் விளையாட்டில் தொடர் சாதனை. எங்கள் திருநகரில் வளர்ந்த இவர் வீரப்பன் தெய்வானை தம்பதியரின் மகன். பள்ளத்தூர் முருகப்பா குழுமத்தின் துணையுடன் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்று வருகிறார். வெற்றிச் சரித்திரம் தொடரட்டும் பாராட்டுக்கள் - மனிதத்தேனீ 29-12-2018 தினத்தந்தி இளைஞர் மலர் பக்கம் | | |


முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.
திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).
“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.
கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.
சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.
மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.
சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...
அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....
சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.
“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.
புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.
இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.
கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு💗

நகைச்சுவைக்கு ஒரு சந்தானம்


மனிதத்தேனீயின் தேன்துளி


நமது மதுரைக்காரர் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வரும் தைப் பொங்கல் விருந்து பேட்ட முன்னோட்டம் மீண்டும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளது. பாராட்டுக்கள் - மனிதத்தேனீ


மதுரையின் பேராற்றல்..... அண்மையில் ஒடிசாவில் கூடுதல் தலைமைச் செயலாளர் பணி நிறைவு பெற்ற நமது மண்ணின் மைந்தா் ஆர். பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் தனது செம்மையான செயல்பாடுகளால் அம்மாநில முதல்வர் நவீன பட்நாயக் அவர்களின் சிறப்புத் திட்டங்களின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். வாழிய பேராற்றல், வாழிய தமிழர்களின் நிர்வாகவியல். பாராட்டி மகிழ்வோம். - மனிதத்தேனீ


Friday 28 December 2018

மாலைமுரசு 28.12.2018 பக்கம் 4


மதுரைமணி 28.12.2018 பக்கம் 4


பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா


காசி சத்திரத்தின் கல்கத்தா திருவிழா


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஊடகங்கள் மீண்டும் எழுச்சி பெற்றிட.......
மீடியா மக்கள் நம்மை கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த பதிவு..
அது ஆசிரியர் குழுவே அல்ல..கூகுளாண்டவர் குழு...
சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்
களத்தின் காமிராமேன் செய்தியாளன், ஆசிரியர் குழு..இவர்கள்தான் ஊடக உலகின் மிக முக்கியமான பகுதி. இவர்களுக்கு மேலும் கீழும் உள்ளவர்கள், சப்போர்ட் ரோல்தான்.
ஒரு செய்தியாளன், அதிகாரிகள், அரசியல் பிரமுகர் என பல மட்டத்தில் நம்பகத்தன்மையுடன் பழகி தனக்கென செய்தி ஆதார களத்தைஉருவாக்கிக் கொள்ளவேண்டும்.
யார் சொன்னாலும் அவற்றை ஒருமுறை நேரடியாக விசாரித்து பார்ப்பது அவசியம். கிராஸ் செக்கிங் என்பது மிகமிகமிகமிக அவசியம்.
அதுமட்டுமின்றி துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஐபிசி, சிஆர்பிசி போன்றவற்றை கரைத்து குடிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் முக்கிய குற்றங்கள் தொடர்பான பிரிவுகளாவது தெரிந்திருக்கவேண்டும்.
..
காலையில் ஒரு மணிநேரமாவது ஒதுக்கி பல பத்திரிகைகளின் செய்திகளை ஆழ்ந்து படித்தால்தான் ரிப்போர்ட் டிங்கில் உள்ள பல வித்தியாசங்கள் தெரியவரும்.
செய்தியாளார்கள் சந்திப்புக்கு போகும்முன், யாரை சந்திக்கபோகிறோமோ அவர் மற்றும் அவரின் அரசியல் வரலாற்றை தெரிந்துகொண்டு, அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை தாமோ அல்லது மூத்தவர்களை கேட்டுத்தெரிந்தோ செல்வது நலம்.
கேள்வி கேட்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் நாம் கற்க தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள் ளன என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்
நாம் பேசுவதை விட நமது செய்தியை மக்கள் பேச வேண்டும் என்று நினைத்தால் தன்னை முன்னிலைப் படுத்தும் மனநிலை குறையும்.
ஒரு தரப்புக்கு ஆதரவாளனாகவே காட்டிக்கொண்டு அரசியல் தலைவர்களிடம் தனிப்பட்டநோக்கத்துடன் கேள்வி கேட்டு எரிச்சலூட்டுவது கேவலமான செயல்.
நான் பிரஸ், நான் கேட்டால் நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற திமிர்தனத்தமான மனநோய்க்கு ஆளாகாமல், ஆவேசமே படாமல் பொறுமையாக பணிவாக, நாசூக்காக செயல்பட்டு கருத்துக்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதுதான் செய்தியாளனுக்கு முழு அழகு
செய்தியாளனுக்கு அடுத்தபடி செய்தி ஆசிரியர் குழு.. பத்திரிகையோ டீவியோ, இந்தக்குழுதான் முழுபலமே..
இங்கே தேவைப்படுவது சகல துறை சார்ந்த விஷயங் களில் தேவையான அளவு ஞானம்.. அதிகாரி களின் அதிகார வரம்பு, அரசியல் வரலாறு, சட்ட அறிவு, எந்த ஊர் எந்தப்பக்கம் இருக்கிறது என்ற குறைந்தபட்ச அறிவு..
எல்லாவற்றையும் விட செய்தியில் லாஜிக் இடிக்கிறதா என்று ஒன்றுக்கு பத்துதடவை குடைந்து பார்க்கிற சந்தேக புத்தி… இத்துடன் மக்களுக்கு எளிமையாக புரிய வைக்கிற சுருக்கமான எழுத்து நடை.. செய்தியாளர் களுக்கு விஷயங்களை விளக்கி வேலை வாங்க வேண்டிய பாங்கு.. இவையெல்லாம் இருந்தால் செய்திக்கு கிடைக்கும் வலிமையே வேறு..
செய்தியாளன் போனில் வந்தால், பெயர், இடம் சம்பவம் பற்றி கேட்டுக்கொண்டு செய்தி ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் அந்த செய்திக்கு தங்கள் அறிவு பலத்தால் செழுமைப்படுத்தி தரவேண்டும்.
ஆனால் செய்தியாளன் சொல்லித்தான் எல்லா விஷயமும் தெரியவரும் என்றால் அது ஆசிரியர் குழுவே அல்ல..பக்கா, கூகுளாண்டவர் குழு...கூகுளிலேயே அவ்வளவு தவறான தகவல்கள் என்பது தனிக்கதை
மேட்டூர் அணை தொடர்பாக செய்தியாளர் போனில் வருகின்றான் என்றால் அவர் பேசுவதற்கு முன்பே, எடிட்டோரியலில் உள்ளவருக்கு அணையின் உயரம் கொள்ளளவு, பாசன பரப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் முன் கூட்டியே மூளைக்கு வந்து நிற்கவேண்டும்.
மேட்டூர் அணையில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு…என்று செய்தி யாளன் சொன்னால், ஏம்பா அணையே 1934ல்தாம்பா கட்டினார்கள் என்று கொக்கிபோடும் அளவுக்கு உஷார் தன்மை இருக்க வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த காலத்தில்நடிகை பானுமதிக்கும் பாரதியாருக் கும் கள்ளத்தொடர்பு இருந்தது என்று அளந்துவிட்டால் அதை சோஷியல் மீடியாவில் அதை அப்படியே நம்புகிற ஒரு கூட்டம் இருக்கிறதே அதைப்போல் படித்த முட்டாள் மூளை கணக்காக இருக்கக்கூடாது.
அடேய் கூறுகெட்ட குக்கர்களே, பாரதியார் செத்துப்போ; நாலு வருஷம் கழிச்சிதானடா பானுமதியே பொறந்தாங்கன்னு நக்கலடிக்கிற அளவுக்கு ஆண்டுதோறுமான நிகழ்வுகள் குறித்த வரலாற்று அறிவு வேண்டும்.
உச்சகட்டமாக, ஒன்றுமே இல்லாத விஷயங்களுக் கெல்லாம் செய்தியாளனே திரையில் சொல்லிவிட்டு போகட்டும் என சப்பை நேரலைகளில் தள்ளிவிட்டு ஸ்கிரிப்ட் எழுதும் பணியை எடிட்டோரியல் தவிர்க்கிற மோசமான நிலைமை..
மிகமிக இளவயது ஆட்களை தேர்வு செய்வு செய்தி களையே இளமையாக காட்டலாம் என்று முடிவு செய்த வர்கள், இளையவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்காததுதான் எல்லாவற்றிற்கும் கோளாறு..
நேற்று பணியில் சேர்கிறார்கள், இன்று திரையில் தெரிகி றார்கள் முக்கியமான நேரலைகளில்.. ஸ்டுடியோ, செய்தியாளன், கருத்து சொல்பவர் என அனைத்து தரப்பிலும் கடுப்பாகிற அளவிற்கு ரிபீட்டுகள்..
விஷயம் தெரியாதவர்களுக்கு, மேலே இருப்பவர்கள் அனைத்து வகைகளிலும் விளக்கி வழிநடத்தி செல்ல வேண்டும். அது அவர்களின் கடமையும்கூட.
ஆனால் இளையவர்கள் கேட்டால் ''இதுகூடத் தெரியாம ஏன் வேலைக்கு வந்தே?''என்று ஏளனப்படுத் தினால்.. ஒன்று மூத்தவர்கள் சோம்பேறிகளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கே விஷயம் தெரியாமல் இருக்கவேண்டும்
ஊடகத்தின் மீது விழும் விமர்சனங்களுக்காக, அது தொடர்பானோர் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது...
(சில ஆண்டுகளுக்கு முன் போட்ட பதிவு. சில சேர்ப்புகளுடன்)
நன்றி :எழுமலை வெங்கடேசன்

துள்ளல் ஆற்றல் அருமை

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!
🍎 தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
🍊 சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
🍋வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
🥑 பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
🥥. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
🍏மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
🍅சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
🍉பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.
🍏கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
🍓நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
🍈அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
🍉தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
🍋ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
🍓மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
🍐தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
🍎கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
🌿கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
🍎காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
🍊பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
🌿வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
🥝பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
*அசத்தல் டிப்ஸ்*🌹
............................
🍎சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
🍊. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
🍓ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்
🍋சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
🍏விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
*எதுக்கு எது நிவாரணம்?*
🥝மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
🥑உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
🍅பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
🍏கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
🍎அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
🍊தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
🍋குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
🍌மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
🍉விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.
🍇காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
🍓உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
🍒வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
🍑உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.
🍍வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.
🎯வாழ்க வளமுடன் ஜிM🎯.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


Thursday 27 December 2018

மாலைமுரசு 27.12.2018 பக்கம் 4


மதுரைமணி 27.12.2018 பக்கம் 4


மதுரைமணி 27.12.2018 பக்கம் 3


தினபூமி மதுரை 27.12.2018 பக்கம் 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நகைச்சுவை உணர்வு...
நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, ’நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்லணும். அதை கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும்’ அப்பட்டின்னு ஒரு போட்டி வச்சது. சிங்கம் தான் அதுக்கு தலைமை. ஒரு மிருகம் சொல்ற நகைச்சுவையைக் கேட்ட உடனே மத்த விலங்குகள்லாம் சிரிக்கணும். அப்படி சிரிக்கல்லைன்னா நகைச்சுவை சொல்ற மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்கணுங்கறது போட்டியோட விதி.
குரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்குகளும் சிரிச்சுது. ஆனா ஆமை மட்டும் சிரிக்கலை. அதுனால குரங்குக்கு ஒரு அடி விழுந்துச்சு. அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அப்பவும் ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் அடி. மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்துது. கரடி வந்து நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது. கரடி எதுவும் நகைச்சுவை சொல்லவேயில்லை. ஆனாலும் ஆமை விடாம சிரிச்சிக்கிட்டிருந்திச்சு. ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.
உடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, ’கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஏன் சிரிச்சே’ன்னு கேட்டது.
அதுக்கு ஆமை, ’குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா அதை நினைச்சுச் சிரிச்சேங்க’ அப்படின்னுச்சாம்.
இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை அப்பப்பச் செய்யாம பின்னாடி காலங் கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்”
தென்கச்சி கோ.சுவாமிநாதன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


மக்கள்குரல் 26.12.2018 பக்கம் 6


Wednesday 26 December 2018

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வழங்கிடும் நாட்காட்டியில் அண்ணல் காந்தியடிகள் படம் பதித்து வருகிறோம். இதோ இந்த ஆண்டும்...


வாழ்க நீ எம்மான்! இலவச நூல் வெளியீட்டு விழா







தினபூமி மதுரை 26.12.2018 பக்கம் 9


தினபூமி மதுரை 26.12.2018 பக்கம் 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இன்றைய சிந்தனைக் கதை...
‘’மன உறுதி’’
ஓர் புகழ் பெற்ற வில் வித்தைக்கார ஜென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில் வித்தைக்காரர் முன்வந்தார்.
துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார்.இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.
தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.
‘அருமை’ என்று பாராட்டிய துறவி, என்னுடன் ஒரு இடத்துக்கு வா.
அங்கு வந்து உன்னால் ஜெயிக்க முடிகின்றதா? என்று பார்ப்போம்’ என்றார்.
அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.
ஒரு பெரிய மலைச் சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளின் இடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார்.
பாலம் ஒரே ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது.கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினாலும் மரணம் நிச்சயம்.
தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.
‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப் பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.
இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. அந்தப் பதற்றத்தில் அவ் வீரருக்கோ அக் கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.
அப்போது, அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.
ஆம்...
உடம்பு வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமை உடையதாக இருக்கவேண்டும்..
.மன உறுதி உடையவர்கள் நினைத்ததை நினைத்தபடி அடைய நிட்சயம் முடியும்.
மன அமைதியைப் பொறுத்தே நம் செயல் உறுதி அமைகிறது. மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை.
மன உறுதி உடையவர்களால் தான் பிறர்க்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கி விடுகிறது.
ஆகவே, நாம் செய்யும் எச்செயலும் மன உறுதியுடன் துணிந்து செயல்பட்டால் அக் காரியத்தில் வெற்றி நிச்சயம்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

என்னை கலாய்த்த கண்ணதாசன் - இயக்குனர் விசுவின் சுவாரஸ்ய அனுபவம்.
தமிழக திரையுலக வரலாற்றில், கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞராக மதிக்கப்படுகிறார். நினைத்தவுடன் பாட்டெழுதும் அவருடைய திறமையை மெச்சாதவர்களே கிடையாது.
50-களில் தொடங்கி தான் மறையும் வரை, மிகச் சிறந்த பாடல்களை அளித்தவர் கவிஞர் கண்ணதாசன். தத்துவம், காதல், சோகம், சந்தோஷம் என பலதரப்பட்ட விஷயங்களில் எழுதியவர் கண்ணதாசன்.
ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து அம்சங்களையும் அவரது பாடலில் தொட்டிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் பாட்டெழுதக் கூடியவர் என்கிற பெருமை பெற்றவர் கண்ணதாசன்.
கண்ணதாசனுடனான தனது அனுபவத்தை நடிகரும், இயக்குநருமான விசு, ஒரு தடவை பிரமிப்புடன் கூறியுள்ளார். தனது முதல் படமான குடும்பம் ஒரு கதம்பம் படத்திற்காக பாட்டெழுத கண்ணதாசனை சென்று பார்த்தேன்.
தன்னைப் பற்றி, கண்ணதாசனிடம் இயக்குநர் பாலசந்தர் சொல்லி அனுப்பியதன் அடிப்படையில் கண்ணதாசனைச் சென்று ஒரு அறையில் சப்பனமிட்டு அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த பஞ்ச அருணாச்சலத்திடம் கண்ணதாசன் கேலியாக பேசிக் கொண்டிருந்தார்.
நான் போய் அமர்ந்தவுடன், நீதான் குடும்பம் ஒரு கதம்பம் படத்தை இயக்குகிறாய? என்று கேட்ட கண்ணதாசன், எந்தவகையான பாடல் வேண்டும் என்று கேட்டார்.
படத்திற்குரிய டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி பாடல் ஒன்று வேண்டும். அதில் அந்த படத்தில் உள்ள கதையின் முக்கிய அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று கூறினேன்.
கதையைச் சொல்லும்படி கண்ணதாசன் கூறினார். படத்தின் கதையை விவரிக்க தொடங்கினேன். ஆனால், கண்ணதாசன் கதையை காது கொடுத்து கேட்காமல் பக்கத்தில் உள்ள பஞ்சு அருணாச்சலத்தை சீண்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
கதையை நான் சொல்லச் சொல்ல, அவர் அதைக் கேட்காமல் பக்கத்தில் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க நான் கதை சொல்வதை நிறுத்தினேன்.
நீயேம்பா... நிறுத்தி விட்டாய்... நீபாட்டுக்கு சொல்லிட்டே இரு... என்று கண்ணதாசன் கூறினார். உள்ளுக்குள் வெறுப்பாக இருந்தாலும் பெரிய கவிஞர் என்பதால் வேறு வழியில்லாமல் கதையைச் சொல்லி முடித்தேன். இவ்வளவுதான் கதையா என்று சொல்லவிட்டு, சரி எழுதிக்கோ என்று சொல்லி,
"குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை..."
என்ற பாடல் வரிகளை கடகடவென்று கூறினார். அந்த பாடலில் நான் சொன்ன திரைக்கதையின் அத்தனை விஷயங்களையும் அடக்கியதோடு அல்லாமல், நான் விட்டுவிட்ட ஒரு விஷயத்தையும் பாடலில் சேர்த்திருந்தார். இதுபற்றி நான் கேட்டபோது அவர்
விளக்கி கூறியது, எந்த அளவிற்கு நான் சொன்ன திரைக்கதையை அவர் ஊன்றிக் கவனித்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.
அவர் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார், எங்கே கவனிக்கப் போகிறார் என்று நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர் உணர்ந்தேன். அவர் எழுதிய அந்த பாடல், குடும்பம் ஒரு கதம்பம் படத்துக்கே முதுகெலும்புபோல் அமைந்து, படத்தை
வெற்றிபெற வைத்தது. பாடலை விரைவாக கொடுத்த அவரின் வேகம் என்னை பிரமிக்க வைத்தது என்று இயக்குநர் விசு தெரிவித்துள்ளார்.
நன்றி இணையதளத்திலிருந்து