Wednesday 31 January 2024

உயர்வு உன்னதம் .

 உயர்வு உன்னதம் .

_*கடக்கும் தூரம் வெகு தூரமில்லை. *_
_*காலத்தை உணர்ந்து, கடமையை அறிந்து கருத்தை ஆழ்ந்து செயல்படு. *_
_*வெற்றியின் அடையாளம் புரியும். *_
_*வாழும் போது உன்னைப் பேச வேண்டும். *_
_*நீ வாழ்ந்த பின்னும் பேச வேண்டும். *_
_*அதற்காக உழை, உயர்வு பெறு, உன்னதம் அடை, எண்ணம் ஈடேறட்டும், மாற்றம் உருவாகட்டும். *_
_*நீங்கள்*_
_*உங்கள் கருத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்த உலகமே*_ _*எதிர்த்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.*_
_*அதுபோலவே உங்கள்*_
_*கருத்தில் நீங்களே*_ _*முரண்பட்டு இருந்தால் உலகமே உங்களை ஆதரித்தாலும் உன் வாழ்வில் நீங்கள் வெற்றி அடைய முடியாது.*_
_*அறிமுகமில்லாத*_
_*பாதைகூட பிடித்தவர்*_ _*துணை இருந்தால் அழகாகவே தோன்றும்.*_
_*நம்பக் கூடாதவனை*_ _*நம்பிக் கெடுவதும்*_
_*தவறு.*_
_*நம்பக் கூடியவனை*_ _*நம்பாமல் கெடுவதும்*_
_*தவறு.*_
_*தெரிந்ததை தெளிவாகப் பேசு .*_
_*தெரியாததை தெரியாமல் கூடப் பேசி விடாதே.*_
_*ஒரு முடிவு அனைத்தையும் மாற்றும் எனில்.*_
_*அது முடிவு அல்ல ஆரம்பம்.*_
_*துன்பத்தில் துணையாகாத எதுவும்.*_
_*இன்பத்தில் இளைப்பாற்றிட அவசியமற்றது.*_
_*எந்த பக்கம் பிடித்தாலும்*_
_*மேல் நோக்கி எரியும்*_
_*தீபம் போல் எந்த நிலை*_
_*வந்தாலும் ஒரே*_ _*நிலையில்*_
_*இருங்கள் அது உங்கள் மதிப்பை*_
_*உயர்த்தும்*_
_*நிகழ்காலத்தில் நீ என்ன செய்கிறாய் என்பதைப் பொருத்து தான் உன் எதிர்காலம் அமையும்*_
_*உங்களுக்குக்*_
_*குறைவான காலமே*_
_*இருக்கிறது...*_
_*இதில் அடுத்தவர்கள்*_
_*வாழ்க்கையை வாழ்ந்து நேரத்தை*_
_*வீணாக்காதீர்கள்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கவலை எனும் பேப்பர் வெயிட்.

 கவலை எனும் பேப்பர் வெயிட்.

நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பொறுமையோடு கையாளக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால்
பொறுமை இல்லாவிட்டால் நாளை
அதுவே பெரும் பிரச்சனையாகி விடும் நமது வாழ்வில்.
பிரச்சனை என்பது ஊதினால் பறக்கும் காகிதத்தைப் பாேன்றதே
அதன் மேல் கவலை எனும் பேப்பர் வெயிட் வைப்பது நாம் தான்.
வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை கூட நமக்கு வேண்டாம்;
வலிகள் இல்லாத வாழ்க்கை கிடைத்தால் அதுவே நமக்குப் போதும்.
இன்பத்திலும் துன்பத்திலும்
வாழ்விலும் தாழ்விலும்,
நாம் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய ஒரே உண்மை
இதுவும் கடந்து போகும் இந்த நிலையும் மாறும் என்பதே, ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.
தோற்றத்தை வைத்து யாரையும் வேண்டாம் என ஒதுக்காதீர்கள். ஒருவேளை, அவருக்குச் சேரவேண்டிய மொத்த அழகையும் கடவுள் அவர் இதயத்தில் வைத்திருக்கலாம்.
இன்றைக்கு கஷ்டபடுகிறார்கள் என்று யாரையும் ஒதுக்கி விடாதீர்கள் நாளைக்கு உங்களுக்கு உதவும் படி நிலை அவர்களுக்கு மாறினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
காற்றிற்கு தாங்காது பறந்திடும் குடைதான் நனையாது நம்மைக் காக்கிறது. பலம் என்பது அதன் பயனைப் பொறுத்தது.
எதையும் எளிதில் தொலைத்து விடாதீர்கள். மீண்டும்
அது எளிதாகக் கிடைப்பதில்லை.

Monday 29 January 2024

*மதுரை சித்திரை திருவிழா-2024*

 *மதுரை சித்திரை திருவிழா-2024*

மதுரை சித்திரை திருவிழா 2024 அட்டவணை - ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேதிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12, 2024 அன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
11 ஏப்ரல், 2024 - வியாழன் - வாஸ்து சாந்தி
12 ஏப்ரல் 2024 - வெள்ளிக்கிழமை
காலை: - சித்திரை திருவிழா கொடியேற்றம் (கொடியேற்றம்) - கொடியேற்றம் நேரம்: லக்னம் - (விரைவில் புதுப்பிக்கப்படும்)
இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை - கற்பக விருட்சம், சிம்ம வாகனம்
13 ஏப்ரல் 2024 - சனிக்கிழமை
காலை: 7 முதல் 9.30 வரை - தங்க சப்பரம்
இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை - பூத, அன்ன வாகனம்
14 ஏப்ரல் 2024 - ஞாயிறு
காலை: 7 முதல் 9.30 வரை - தங்க சப்பரம்
இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
15 ஏப்ரல் 2024 - திங்கள்
காலை: 9 மணி - தங்க பல்லக்கு
இரவு: மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை - தங்க பல்லக்கு
16 ஏப்ரல் 2024 - செவ்வாய்
காலை: 9 மணி - தங்க சப்பரம்
இரவு: 7 மணி முதல் 9.30 மணி வரை - வேடர் பரி லீலை - தங்க குதிரை வாகனம்
17 ஏப்ரல் 2024 - புதன்
காலை: 7.30 முதல் 10.30 வரை - தங்க சப்பரம்
இரவு: 7.30 மணி முதல் 11.00 மணி வரை - சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை - ரிஷப வாகனம்
(தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்)
18 ஏப்ரல் 2024 - வியாழன்
காலை: 8 முதல் 10.30 வரை - தங்க சப்பரம்
இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை - நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்
19 ஏப்ரல் 2024 - வெள்ளிக்கிழமை
காலை: 10 மணி - தங்க பல்லக்கு
மாலை: - ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் - (பட்டாபிஷேக நேரம்: லக்னம் - விரைவில் புதுப்பிக்கப்படும் - பெரும்பாலும் மாலை 7 மணியளவில் IST)
இரவு: 9 மணி முதல் 11 மணி வரை - வெள்ளி சிம்ஹாசன உலா
20 ஏப்ரல் 2024 - சனிக்கிழமை
காலை: 7 முதல் 9.30 வரை - மரவர்ண சப்பரம்
மாலை / இரவு: மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை - ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா
21 ஏப்ரல் 2024 - ஞாயிறு
காலை: 4 மணி - வெள்ளி சிம்ஹாசனம்
காலை: - ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (விண்மீன் திருமணம்) - (திருக்கல்யாண நேரம்: லக்னம் - விரைவில் புதுப்பிக்கப்படும்)
இரவு: 7.30 முதல் 11.30 வரை - தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
22 ஏப்ரல் 2024 - திங்கள் - திரு தேர் - தேரோட்டம் (ரத உற்சவம், தேர், தேர் திருவிழா)
- திருத்தேர் எழுந்தருளல் நேரம்: லக்னம் - விரைவில் புதுப்பிக்கப்படும்
- திருத்தேர் வடம்பிடித்தல் நேரம்: விரைவில் புதுப்பிக்கப்படும்
இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை - சப்தாவர்ண சாப்ரம்
23 ஏப்ரல் 2024 - செவ்வாய்
- தீர்த்தம்,
இரவு: 7 மணி முதல் 10 மணி வரை - வெள்ளி ரிஷபம் சேவை
கள்ளழகர் (கள்ளழகர்)
21 ஏப்ரல் 2024 - ஞாயிறு
இரவு:- அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், கலழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் மதுரை எழுந்தருளல்
22 ஏப்ரல் 2024 - திங்கள் - எதிர் சேவை
இரவு - ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கொடுத்த மாலை சூடு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில்
23 ஏப்ரல் 2024 - செவ்வாய் - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் - (1000 பொன்சபரம் தேர் - தங்க குதிரை வாகனம் - ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுத்தல்)
- வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோவில் இரவு சைத்யோபச்சாரம்
24 ஏப்ரல் 2024 - புதன்கிழமை
- காலை: - காலையில் சேஷ வாகனம் (வண்டியூர் தேனூர் மண்டபத்தில் இருந்து புறப்படுதல்)
- பிற்பகல்: - மதியம் கருட வாகனம் - மண்டூக மகரிஷிக்கு மோக்ஷம்
- நள்ளிரவு: - இரவில் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி
25 ஏப்ரல் 2024 - வியாழன்
- காலை: - மோகனாவதாரம் ( மோகினி அவதாரம் )
- பிற்பகல்: - ராஜாங்க அலங்காரம் (அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபம் புறப்படுதல்)
- மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்
- இரவு: - சேதுபதி மண்டபம் பூ பல்லக்கு அலங்காரம்
26 ஏப்ரல் 2024 - வெள்ளிக்கிழமை
- அதிகாலை - பூ பல்லக்கு எழுந்தருளல் (சேதுபதி மண்டபம் )
27 ஏப்ரல் , 2024 - சனிக்கிழமை
- அதிகாலை: - அப்பன் திருப்பதியில் ஸ்ரீ கள்ளழகர் எழுந்தருளல்
- காலை: - ஸ்ரீ கள்ளழகர் அழகர் மலை வந்து சேர்தல்..
சுபம்.

தண்ணீரும் வார்த்தையும் ஒன்றுதான்.

 தண்ணீரும் வார்த்தையும் ஒன்றுதான்.

வானத்தைவிட உயர்ந்தது இனிமையான சொல்.
எனவேதான் ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும் என்பர்.
தவறான நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு, தவறான வார்த்தைகளைப் பேசாமல் இருப்பதே, சரியான நேரத்தில் செய்கின்ற சரியான விஷயம்.
ஆத்திரத்தில் பேசினாலும் ஆயிரம் முறை யோசித்துப் பேசுங்கள். தண்ணீரும், கோபத்தில் வரும் வார்த்தையும் ஒன்றுதான் சிந்திவிட்டால் மீண்டும் எடுக்க முடியாது.
ஒரு நாள் தவறும் வார்த்தை போதும்.
பல ஆண்டு வாழ்ந்த உறவை முறித்துவிடும்.
வார்த்தையிலும் நிதானம் தேவை.
_*பதட்டமில்லாத மனிதன் இந்த உலகிற்கே ஒரு வரம்.
அவனது இருப்பு இந்த உலகிற்கு ஒரு அழகைக் கொடுக்கிறது.
பதட்டம் மிகுந்த மனிதன் ஒரு சாபம்.*_
_*பயந்தவன் கவலையோடு தினம் தினம் போராடுகிறான்.*_ _*துணிந்தவன் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையோடு*_
_*போராடுவான்.*_
_*அருவியும், உருதியான மனிதனும்
தன் பாதையைத் தானே உருவாக்கி கொள்கின்றனர்.*_
_*வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கற்றுத் தருகிறது, எப்படி வாழ வேண்டும் என்று அல்ல. எப்படி வாழகூடாது என்று.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 27 January 2024

மாநகர் மதுரையில் கிரடாய் பேர்ப்ரோ 2024 கண்காட்சி தொடங்கியது.

 மாநகர் மதுரையில்

கிரடாய் பேர்ப்ரோ 2024 கண்காட்சி தொடங்கியது.
மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கத்தில் கிரடாய் சார்பில் நடைபெறும் வீடு மற்றும் மனைகள் கண்காட்சிக்கு 26.01.2024 காலை தொடங்கியது.
மாநகராட்சி ஆணையர் மதுபாலன் திறந்து வைத்தார்.
மூத்த உறுப்பினர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ். சீத்தாராமன், தமிழ்நாடு தலைவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கி முன்னிலை வகித்தனர். மதுரை தலைவர் விஜய தயா நிர்வாக இயக்குநர் முத்து விஜயன் வரவேற்பு ஆற்றினார், சேர்மன் மேக்ஸ் பிராப்பர்ட்டி நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன் நினைவுப் பரிசு வழங்கினார். செயலாளர் எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ் நிர்வாக இயக்குநர் யோகேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
துணைத் தலைவர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சி இ ஒ ஸ்ரீ குமார் நன்றி கூறினார்.
பொருளாளர் ஜெயபாரத் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன், ஜெயண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஜெயச்சந்திரன், நமது கன்ஸ்ட்ரக்ஷன் சக்திவேல் உள்ளிட்ட பலர் ஒருங்கிணைப்பில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வாழ்வின் நிம்மதி என்ற தலைப்பில் தொடக்க உரை நிகழ்த்தினார்.
27 உறுப்பினர்கள் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கட்டுமானப் பொருட்கள் நிறுவனம் என களை கட்டியுள்ளது தமுக்கம் மைதானம்.
இன்று முதல் ஞாயிறு வரை நடைபெறும் இந்த கண்காட்சி ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்புடன் உள்ளது.