Saturday 30 December 2023

அவரவர் வாழ்க்கை.

 அவரவர் வாழ்க்கை.

கட்டுப்படுத்த முடியாத மனம்தான்
ஒரு மனிதனின்
மோசமான எதிரியாகும்.
கரைகளைத் தாண்டும் முதலைகளும்,கட்டுப்பாடுகளைத் தாண்டும் மனங்களும்
தங்கள் பலத்தை இழக்கின்றன.
மனம் இயங்கும் போது
இன்பம்,
துன்பம்,
வெற்றி,
தோல்வி,
மகிழ்ச்சி,
இகழ்ச்சி
இவற்றை வழங்குகிறது.
மனம் தன் இயக்கத்தை
நிறுத்தும்போது போது
தெளிவு, ஞானம், பேரானந்தம் ஞானத்தையும் கடந்த நிலை ஏற்படுகிறது.
விழுவதற்கு உங்கள்
கால்கள் முடிவு செய்தால்
எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதைத் தயார் செய்யுங்கள்.
விழுவது உங்கள் கால்களாக
இருந்தால். எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக இருக்கட்டும். உடல் திடமாக இருப்பதை விட
மனம் திடமாக இருப்பது மிக அவசியம்.
அவரவர் மனம்போல்
அவரவர் பாதை.
அவரவர் மனம்போல்
அவரவர் வாழ்க்கை.
கடினமான பாதைகள் தான்
அழகான இடத்திற்கு
நம்மை அழைத்துச் செல்லும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Friday 29 December 2023

மனிதத்தேனீயின் தேன்துளி


 

இது ஒரு மருத்துவரின் பதிவு.

 இது ஒரு மருத்துவரின் பதிவு.

ஐயா
நான் மருத்துவத் துறையைச் சேர்ந்தவன்.
புதிய வகை கொரோனா
எந்த விதமான
அச்சுறுத்தலையும் தராது.
பயப்பட வேண்டாம்.
பீதி அடைய வேண்டாம்
அது ஒரு சாசாதாரண காய்ச்சல் மாதிரி.
ஓரிரு நாட்களிலே
குணமாகிவிடும்.
நம் உடம்பில்
அனைவருக்கும்
கொரோனா
எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது.
இனி எதற்கும்
கவலைப்பட வேண்டாம்.
மீண்டும் மக்களை அச்சப்படுத்தி
குளிர் காய முடியாது.

Thursday 28 December 2023

தேமுதிக தலைவரும் நடிகரும் விஜயகாந்த் காலமானார்


 

கல் தடுக்கி புல் தடுக்கி . .

 கல் தடுக்கி புல் தடுக்கி . .

"இருப்பதைக் கொண்டு
நிறைவாக வாழக் கற்றுக் கொள்"
"போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து"
"பொறுத்தார், பூமியாள்வார்"
இப்படிப் பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒரு நினைவில் சிக்கிக் கொண்டு அதைப் பற்றியே கவலை கொள்கிறது.அதில் இருந்து மீள்வது இல்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கிறது.
ஏன் கவலை நாம் நினைத்தது அல்லது எதிர்ப்பார்த்தது நடைபெறவில்லை என்றால், கவலை நம்மை ஆட்கொள்ளும்.
இந்த உலகில் கவலை இல்லாமல் மனிதர்கள் எங்கேயும் இருக்க முடியாது.. இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கவலைப்படும் போது அதைப்பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.
நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் படபடப்புடன்
எப்போதும் காணப்படுவார்.
இந்தக் கவலைகள் என்பது ஒரு மனிதனுக்கு புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ,
அதைப் போன்று கவலை என்பது ஒரு கவலை போய் இன்னொரு கவலையை உண்டாக்கும் சக்தி கொண்டது.
கவலைகளை நம்முடைய மனத்துக்கு உள்ளேயே போட்டு அழுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும்.
இதனால் மனச்சோர்வும், மனச்
சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம்.
எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டு அதில் இருந்து விலகி நின்று, வாழ்க்கைப் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது
என்பதே முக்கியம்.
எந்த ஒரு இக்கட்டான சூழலையும் நம்மால் சமாளிக்க முடியும். எதையும் தீர அலசி ஆராய்ந்தால் தீர்வு கிடைக்கும்.
வின்ஸ்டன் சர்ச்சில்
அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, கவலைப்படுவதற்கு எனக்கு நேரம் இல்லை என்றார்.
இதைக் கேட்டது ஒரு நிருபர்
அந்த நிருபருக்கு ஒரே ஆச்சர்யம்.
என்னடா இது கவலையில்லாத ஒரு மனிதனா அல்லது கவலையைப் பற்றி நேரம் இல்லை என்று சொல்லும் ஒரு மனிதனா என்று ஆச்சர்யம்.
வின்ஸ்டன் சர்ச்சில்
அதற்குக் கூறிய விளக்கம்,
நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறேன்.
அதனால் எனக்கு கவலைப்படுவதற்கு நேரம் இல்லை என்று கூறினார்.
உண்மையிலேயே
நல்ல பதில் மற்றும் உண்மை கூட.
கவலைகளின் மூலகாரணத்திற்கு நம்முடைய கற்பனையும் ஒரு காரணமாகும்.
செய்தித்தாள்களில் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் விபத்து இல்லாத செய்தி என்பது அபூர்வமாகத் தான் இருக்கும்.
அது விமான விபத்தாக இருக்கலாம், பேருந்து விபத்தாக இருக்கலாம், அல்லது நடந்து செல்லும் போது வாகனம் மோதி இறந்த விபத்தாக இருக்கலாம்.
அதை நினைத்து நீங்கள் எங்குமே செல்லாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா
ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்றால் ஏதோ ஒரு வழியை உபயோகப்படுத்தித் தான் ஆக வேண்டும். நடந்து செல்ல வேண்டும் அல்லது ஏதாவது ஒரு வாகனத்தில் சென்று தான் ஆக வேண்டும்,
விபத்து நடக்கிறது என்று வீட்டுக்கு உள்ளேயே இருந்தால் என்ன நடக்கும்
கல் தடுக்கி விழுந்து பிழைத்தவனும் உண்டு, புல் தடுக்கி செத்தவனும் உண்டு, என்பது பழமொழி.
கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான். இங்கு தான் மனித இனத்திற்கு வேதனையைத் தரக் கூடிய கவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தக் கவலைகளின் மூலப்பொருள் நினைவுகள். நினைவுகள் தான் ஒருவரின் கவலைக்கு முக்கியக் காரணம். நடந்துப் போனதை நினைத்துக் கவலை கொள்வதை விட்டு இனி நடக்கப் போவதை மட்டும் நினைவில் கொண்டு உற்சாகமாக செயல்படுங்கள்.
கவலைப்பட்டு, கவலைப்பட்டு
மனம் நொந்து போய் விடாதீர்கள்.
மன வலிமையை இழந்து விடாதீர்கள்.
மனக் கவலைக்கு இடம் தராதீர்கள்.
எப்போதும் உற்சாகமாக இருங்கள். கவலைகளைத்
தூக்கி வெளியே எறியுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


மனசும் மனசாட்சியும் . .

 மனசும் மனசாட்சியும் . .

தவறான செய்திகள்,
காழ்ப்புணர்ச்சி,
கசப்பு, வெறுப்பு செய்திகள்,
கிசு கிசுக்கள், எதிர்மறை செய்திகள், ஆபாசங்கள், வதந்திகள், நீங்க நம்புனாலும் சரி நம்பாகாட்டியும் சரி, வேணும்னு சொன்னாலும்
வேண்டாம்னு சொன்னாலும்,
நம் கண் முன்னே வந்து நிற்கும், காதினுள் செல்லும்,
நம் இதயமும் அதை விரும்பும்.
இப்படிபட்ட செய்திகள்
நம் கண்களில் படுவது மேலே பறக்கின்ற பறவைகள் போல. அதை நம்மால் தடுக்க முடியாது.
ஆனால்
அது நம் தலையில்
கூடு கட்டுவதைத் தடுக்கலாம்.
அது தான் நம் எண்ணத்தை இந்த செய்திகள் கறைபடுத்தாமல் தவிர்ப்பது. நம் எண்ணங்களை பாதித்து அதிலே திளைக்காமல் உடனே வெளி வருவதற்கான பிரயாசத்தை
நாம் தான் எடுக்க வேண்டும்.
இது எப்படி என்றால் ஆழமான ஒரு ஆற்றிலே அடித்து செல்லப்படுவதைப் போன்றது, நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் நீரோட் டத்தின் திசையில் அடித்து செல்லப்படுவீர்கள், எதிர் நீச்சல் செய்தால் தான் குறைந்த பட்சம் அதே இடத்திலாவது இருக்க முடியும்.
உண்மைதான், நேர்நிலை எண்ணங்கள், மற்றும் செய்திகளை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.
எதிர்மறைச் செய்திகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் நேர்நிலை எண்ணங்கள் மற்றும் செய்திகள் தேடிக் கண்டுபிடிக்க நாம் சிறிது முயற்சி எடுக்கத் தான் வேண்டும்.
நாம் எவற்றைக் கேட்கிறோமோ
அது தான் நம்மை உருவாக்கக்கூடியது, உருமாற்றக் கூடியது.
ஆகையால்
*நம் மனசையும்
மனசாட்சியையும்
எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வோம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 26 December 2023

மாலைமுரசு 26.12.2023 பக்கம் 4


 

மதுரைமணி 26.12.2023 பக்கம் 2


 

2024 ஆம் ஆண்டு நாட்காட்டி கடந்த ஐம்பது ஆண்டுகளாக எங்கள் அச்சகத்தின் நாட்காட்டி.


 

நம்பிக்கை விதைகள் (இலவச வெளியீடு) நூல் வெளியீட்டு விழா

 நம்பிக்கை விதைகள்

(இலவச வெளியீடு)
நூல் வெளியீட்டு விழா.
இன்று மாலை மதுரைத் திருநகர் எங்கள் இல்லத்தில் நடைபெற்ற எளிய விழாவில், திருநகர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில், இருபத்தைந்து ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய எங்கள் தகப்பனார் கா. ராமன் செட்டியார் 35 ஆம் ஆண்டு நினைவைப் போற்றிடும் வகையில் நம்பிக்கை விதைகள் எனும் நூலினை சமூக ஆர்வலர், ஹைடெக் அராய் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் வ. சண்முகசுந்தரம் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முதல் நூலினை திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன், பொறியாளர் ஆர். கே. பலராமன் பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கினார்.
பொறியாளர் சொ. ராம்குமார் வரவேற்புரை ஆற்றிட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் தலைமையுரை ஆற்றினார். ஆர். விஸ்வநாதன் முன்னிலை வகித்தார் ஆர். சம்பந்தன் நிறுவன நினைவு நிதியினை வழங்கினார்.
திருநகர் மூத்த முன்னோடி கே. தேசிகன், பேராசிரியர் சி எஸ். விசாலாட்சி, கோவில்பட்டி த. சரவண செல்வன், கஸ்தூரி கிருஷ்ணன், தாம்பிராஸ் இல. அமுதன் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றச் செயற்குழு உறுப்பினர் அ. பாலு நன்றி கூறினார்.
விழாவில் சமூக சிந்தனையாளர் பொன். மனோகரன், எழுத்தாளர் கோ. ஏகாம்பரம், ரெ. கார்த்திகேயன், மீ. ராமசுப்பிரமணியன், பி. பன்னீர்செல்வம், ஏ சி. பாபுலால், தனித்தமிழ் முருகேசன், கந்தசாமி, பேராசிரியர் மு. முருகேசன், பேராசிரியர் ஸ்ரீ ராம், எம். தங்கமாரியப்பன், கவிஞர் சு. பாலகிருஷ்ணன், வீ. காளீஸ்வரன் ஜெயப்பிரகாஷ் ஆசிரியர் செல்வா, குடந்தை ரகுநாதன், என். மகேந்திரராஜா, ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ், பிஎல். சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இருபது நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற விழாவில் அண்ணல் காந்தியின் நாட்காட்டி வழங்கப்பட்டது.























நிழலும் நிம்மதியும் . .

 நிழலும் நிம்மதியும் . .

ஒருவன் வேகமாக
ஓடி வந்தான்.
எதிரே ஒரு முனிவர் வந்தார்.
ஏனப்பா இப்படி
தலைதெறிக்க
ஓடி வருகிறாய் என்று கேட்டார்.
என்னை துரத்திக் கொண்டு வருகிறது ஐயா என்றான் அவன்.
ஏதாவது நாய் துரத்திக் கொண்டு வருகிறதோ என்று நினைத்து அவனுக்கு பின்னால் பார்த்தார் முனிவர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை.
எதுவும் இல்லையே என்றார்.
நல்லா பாருங்க என்றான் அவன்.
பார்த்துவிட்டு தான் சொல்கிறேன் என்றார் முனிவர்.
இதோ பாருங்கள்
இதுதான் என்னைத் துரத்துகிறது என்று சுட்டிக்காட்டினான். அந்த இடத்தில் அவனுடைய நிழல் இருந்தது.
என்னப்பா சொல்றே என்று கேட்டார் முனிவர் கொஞ்சம் சந்தேகமாக.
அதன்பிறகு அவன் விபரமாகச் சொன்னான் எனக்கு நிழலைக் கண்டால் பிடிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனிடமிருந்து பிரிவதற்கு எவ்வளவு முயற்சிகள் பண்ணிப் பார்த்துவிட்டேன். முடியவில்லை என்றான்.
அப்படி என்ன முயற்சிகள்
செய்தாய் என்று கேட்டார் முனிவர்.
ஒரு பெரிய குழியைத் தோண்டி அதிலே என்னுடைய நிழலைப் புதைத்து விடலாம் என்று முடிவு செய்து மண் வெட்டி எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனேன். ஆழமான குழியைத் தோண்டினேன். குனிந்து பார்த்தேன். அந்த குழிக்குள்ளே நிழல் தெரிந்தது . இதுதான் சமயம் மண்ணைப் போட்டு மூடி விடலாம் என்று நினைத்து கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டேன். இப்போது நிழல் மண்ணுக்கு மேலே வந்து இருந்தது. இது என்னடா வம்பா போச்சு என்று சொல்லி அவசரம் அவசரமாக மண்ணை அள்ளிப் போட்டேன். குழி பூராகவும் நிரம்பிவிட்டது. மறுபடியும் நிழல் மேலே வந்து உட்கார்ந்து இருந்தது.
சரி இதை குழியில் புதைக்க முடியாது என்று முடிவு பண்ணி இங்கே விட்டுவிட்டு ஓடி விடுவோம் என்று நினைத்து ஓடினேன் .அது காலை நேரம் இவன் மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி பார்க்கிறான் . நிழல் இவனை விட வேகமாக இவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது.
சரி திரும்பி ஓடிப் பார்ப்போம் என்று நினைத்து அப்படியே திரும்பி ஓட ஆரம்பித்தான். இப்போது நிழலை காணவில்லை. கொஞ்ச தூரம் ஓடி விட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான். பின்னாலேயே நிழல் துரத்துகிறது.
இப்படி ஓடி வரும்போது தான் முனிவர் இவனை நிறுத்தியிருந்தார்.
இந்த நிழலை துரத்த
ஒரு வழி சொல்லுங்கள் ஐயா என்றான் .
முனிவர் சொன்னார் அங்கேயும் இங்கேயும் ஓடாதே . அப்படியே கீழே படுத்துக் கொள் என்றார் . அவன் அப்படியே படுத்துக் கொண்டான். அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தான். நிழலைக் காணவில்லை. இப்போது தான்
நிம்மதியாக இருந்தான்.
எல்லா மனிதர்களும் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நான்
எனது
என்கின்ற ஆணவம்
அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
அதை விட்டு விட்டு ஓட வேண்டும் என்று நினைத்தாலும் அது முன்னால் வந்து நிற்கிறது.
பரம்பொருளை நோக்கி ஓடும் போது இந்த ஆணவம் பின்னால் வந்து விடுகிறது.
தன்னை உணர்ந்து
மனிதனுக்கு விடுதலை உணர்வு ஏற்படுகின்ற நேரத்திலே அதாவது பரிபூரண சரணாகதி என்கின்ற நிலையிலே அது முழுவதுமாக மறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட
சுதந்திர மனிதர்களாக எல்லோரும்
மாறி விட்டால் இந்த உலகமே இன்பமயம் தான்.

Monday 25 December 2023

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ராஜாஜி நினைவைப் போற்றுவோம்


 

மதுரை தினமலர் பக்கம் 1 25-12-2023


 

கிறிஸ்துமஸ் வாழ்த்து


 

தளராத நம்பிக்கை .

 தளராத நம்பிக்கை . .

*விடியும்
ஒவ்வொரு நாட்களையும் உற்சாகத்தோடு வரவேற்கப் பழகிக் கொள்ளுங்கள்.*
*அப்போது தான்
அன்றாடம் நீங்கள் செயல்படுவதற்குத் தேவையான சுறுசுறுப்பு
தெம்பாகக் கிடைக்கும். *
*வாழ்க்கையில்
எதிர்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தான்
வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்.*
*பணத்தைப் பார்த்துப்
பார்த்து செலவு செய்யத்
தெரிந்த பலர், நேரத்தை வீணாகக் கண்டபடி செலவு செய்கிறார்கள் *
* அதனால் தான் அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது.*
*நமக்கு வேண்டிய சக்தி நமக்கு உள்ளேயே தான் இருக்கிறது.*
*அது வேறு எங்கும் இல்லை.*
*நாம் அதைப் பயன்படுத்தும்
அளவைப் பொறுத்தே
நமது முன்னேற்றம் இருக்கிறது*
*நம்மால் முடியும்
என்று நம்பினால்
நிச்சயம் அந்தக் காரியம்
நினைத்தபடி எண்ண அலைகளால் நிறைவேறி விடும். *
*நம் மனசுக்குள்
தளராத நம்பிக்கை என்ற ஒரு ஜெனரேட்டர் இருக்கிறது*
*அதை ‘ஆன்’ பண்ணினால்
வேண்டிய மட்டும் நமக்கு சக்தியை உருவாக்கிக் கொடுக்கும்.*
*எல்லாம் சரியாயிடும் அப்படிங்கறது*
*-நம்பிக்கை.*
*எல்லாத்தையும் சரி செஞ்சிடலாம் அப்படிங்கறது*
*- தன்னம்பிக்கை.*
*எல்லாத்தையும் சரி செஞ்சு தான் ஆகணும் அப்படிங்கறது*
*- வாழ்க்கை.*
*மனிதன்*
*பொம்மையில்லை தான்.*
*ஆனால்
அவனும் உடையும்*
*தன்மையுடையவன் தான்.*
*அனைவரும்*
*அமைதியாக*
*இருக்கும் போது*
*"நீ" சிரித்தால் உன்னை*
*"விரோதமாக"*_ _*பார்ப்பார்கள்.*
*அதே..*
*அனைவரும் சிரிக்கும்*
*இடத்தில்*
*"நீ" அமைதியாக*
*இருந்து பாரு*
*உன்னை "வினோதமாக"*
*பார்ப்பார்கள்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 23 December 2023

மதுரைமணி 23.12.2023 பக்கம் 2


 

ஏறுவதும் இறங்குவதும் . .

 ஏறுவதும் இறங்குவதும் . .

கவலை
பலூன்ல இருக்குற காத்து மாதிரி,
உள்ள இருக்குற வரை
பெருசாத் தெரியும்.
வெளியில் விட்டுட்டா
இருந்த இடம் கூடத் தெரியாது.
பலூன்களைப் போலத்தான்
சில பிரச்சினைகளும்,
ஊதினால் உடையும்
எனத் தெரிந்த பின் ஊதி உடைப்பதை விட, பாதியில் பறக்கச் செய்வதே மிகவும் சிறந்தது.
நீங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரச்சனைகள் வந்து சேரும்.
நீங்கள் தீர்வுகளைப் பற்றிச் சிந்தித்தால் நிறையவே வாய்ப்புகள்
உங்கள் எதிரே தோன்றும்.
எதிலும் வாழப் பழகிக்கொள்ளுங்கள். அப்போது தான்
எதையும் தாங்கும் இதயம் வரும். வாழ்க்கை ஒரு படிக்கட்டு. ஏறுவதும், இறங்குவதும் அவரவர் திறமை.
*நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை அனுமதிக்காதீர்கள்.*
*வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை என்றும் மறவாதீர்கள்.
ஒன்று
மற்றவர்
உழைப்பில் வாழக் கூடாது,
இரண்டு
மற்றவர்
சிரிக்கும்படி வாழக் கூடாது.*
*வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதீர்கள்.
உங்கள் மனநிறைவுக்காக உங்களுக்குப் பிடித்ததை பெருமையோடு செய்யுங்கள்.*
*யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.*
*எல்லோரிடமும்
நீங்கள் கற்றுக்கொள்ள
ஏதேனும் ஒன்று இருக்கும். *
*வார்த்தைகள்*
*பலம் மிகுந்த ஆயுதம் *
*தாக்குவதற்கு*
*பயன்படுத்தாதே *
*தற்காத்துக்*_ _*கொள்வதற்கு*
*மட்டுமே பயன்படுத்து. *

விவேகானந்த கேந்தரம் நடத்திய கீதை ஜெயந்தி விழா

 






22.12.2023 இரவு மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் நடைபெற்ற விவேகானந்தர் கேந்திரா கீதை ஜெயந்திப் பெருவிழாவில் மனிதத்தேனீ எழுபது நிமிடங்கள் சிறப்புரை.