Monday 29 April 2024

மிதக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

 மிதக்கக் கற்றுக் கொள்ளுங்கள் .

_*கேள்விகள்*_
_*மதிக்கப்பட்டாலே போதும்*_
_*பதில்கள் கூட*_
_*அவசியமில்லை.*_
_*ஆகச் சிறந்த பக்குவம் என்பது..*_
_*வெற்றியின் போது*_
_*துள்ளாமலும்*_
_*தோல்வியின் போது*_
_*துவளாமலும்,*_
_*எதுவும்*_ _*நிரந்தரமில்லை*_
_*என உணர்தலே.*_
_*ஒருவருக்குக் குப்பையாகத் தெரியும் நீ மற்றவர்க்குப் பொக்கிஷமாகத் தெரிவாய்.*_
_*அது நீ இருக்கும் இடத்தைப் பொறுத்து.*_
சிறு சிறு செயல்களில்
கிடைக்கும் அனுபவங்களைக் கூட சிந்தையில் நீ சேகரித்து வை.
வாழ்வில் சிரமங்கள் ஏற்படும் போது அது சிறப்பாக வழி நடத்தும்.
ஒரு சிறு சறுக்கல் கூட
உங்களைக் கீழே தள்ளிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் மேலே செல்ல ஒரு பெரும் முயற்சி தேவை. ஆதலால் கவனமாய் இருங்கள்.
அனுபவம் என்பது
எதை எப்படிச் செய்ய வேண்டும், என்பதில் இல்லை. எதை, எப்படி, எப்போது, செய்யக் கூடாது என்பதிலே தான் இருக்கிறது.
எதுவாக இருந்தாலும் சரி மூழ்கி விடாதீர்கள்.
மிதக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
_*தீ என்றால்*_
_*சுடத்தான் செய்யும் ...*_
_*வாழ்கையும் அப்படியே...*_
_*உங்களுக்கு*_ _*ஒதுக்கப்படுவதும்*_
_*தீ தான்...*_
_*ஆனால் அது...*_
_*தீபமா....*_
_*தீப்பந்தமா ...*_
_*ஜோதியா ....*_
_*காட்டு தீயா ...*_
_*என்ற முடிவுகளை*_
_*எடுக்க காலம்*_
_*எப்போதும் உங்களைத்தான் தேர்ந்தெடுக்கிறது .*_
_*மிக உச்சிக்கு சென்றவன் தான்*_
_*பயத்தோடு வாழ்வான்....*_
_*தரையில் நடப்பவன்*_
_*தைரியமாகத் தான்*_
_*நடப்பான்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

சிறந்தவர்கள்

 சிறந்தவர்கள் .

_*நம்பிக்கை என்பது*_
_*வெறும் சொல்*_
_*சார்ந்தது மட்டுமல்ல..*_
_*உங்கள்*_
_*நடவடிக்கைகளையும்*_
_*உங்கள் நேர்மையையும்*_
_*சார்ந்தது..*_
_*நம்பிக்கையுடன் நகர்வோம்.*_
_*வேண்டுதல்களைத் தவிர்த்து விட்டு..*_
_*வேண்ட நினைத்தக் காரியத்தை*_
_*செயலாற்ற நினைத்தாலே..*_
_*நாம் நினைத்தது நிறைவேற*_
_*வாய்ப்புகள் உண்டு.*_
*_பேராசை கொண்டவன்_*
*_உலகத்தையே பரிசாக கொடுத்தாலும்_*
*_திருப்தியடைய மாட்டான்_*
“குருவே வணக்கம்.
எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை
நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அதனாலென்ன, நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’
என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர்.
இளைஞர்கள் மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க,
இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள்.
ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியைப் பார்க்க முடியவில்லை.
அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப்
பிச்சை போட்டிங்களா’ என்று.
இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.
“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுல்லாம் உழைப்புதான்.
ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூடப் பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்குச் சொன்னது
*அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.*
*சிறந்த மனிதர்களாக*
*யாரும் பிறப்பதில்லை...*
*அவரவர் நடவடிக்கைகளே*
*அவர்களை*
*சிறந்தவர்களாக்குகிறது...*
_*நடக்கும் போது கிடைக்காத செறுப்பு படுக்கையில் கிடக்கும் போது கிடைத்தாலும் புண்ணியம் இல்லை.*_
_*தேவைப்படும்போது கிடைக்காத பணமும், பாசமும் கூட அப்படித்தான்.*_
_*செருப்பு தேயும் போது, கால் ஜாக்கிரதையாகி விட வேண்டும், வயது வளரும் போது பணச்சேமிப்பு பத்திரமாக இருக்க வேண்டும்.*_
_*பணம் ஆறாம் அறிவு போன்றது.*_
_*அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும், நீங்கள் பயன்படுத்த முடியாது.*_
_*வருவாய்க்கு குறைவாக செலவு செய்ய நீங்கள் கற்றுக்கொண்டால் உங்களை விட பணக்காரர் எவருமில்லை.*_
_*நம் அணுகுமுறை சரியாக இருந்தால், நாம் நினைப்பது எளிதாக நிறைவேறும்.

உ.வே.சாமிநாதய்யர் நினைவைப் போற்றுவோம்


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 27 April 2024

ராம. வெங்கடாஜலம் - சிவகாமி ஆச்சி அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா

 வாழிய மணிவிழாத் தம்பதியர்.

செட்டிநாட்டு அரசரின் நம்பிக்கை நட்சத்திரம் ஆறு. ராமசாமி அவர்களின் இளைய மகன், எங்கள் பெரிய தகப்பனார் மகள் வழிப் பேரன்
ராம. வெங்கடாஜலம் - சிவகாமி ஆச்சி அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா இன்று காலை ஆத்தங்குடியில் நடைபெற்றது.
பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கொத்தமங்கலம் வள்ளிக்கண்ணு சுப்பிரமணியன்.
மிகச் சிறப்பாக மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள், செட்டிநாட்டு முன்னோடி பெருமக்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
நளபாக நாயகர் அன்புச் சகோதரர் ஆத்தங்குடி பெருமாள் சிறப்பு உணவு.
சிவாச்சாரியார்கள், ஓதுவார் பெருமக்கள், நாதஸ்வரக் கலைஞர்கள் என எங்கும் திருமந்திரம் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது.
ஒரு பெரிய குடும்பத்தின் நெறியான வாழ்வின் நீட்சியாக இவர்கள் குடும்பத்தினர் ஆறு. ராமசாமி செட்டியார் - மீனாட்சி ஆச்சி அவர்களின் வழிகாட்டலில் இளைய தலைமுறை ஒன்று கூடி வாழ்வது நமது பண்பாட்டின் அழுத்தமான சிறப்பு.
வருகை தந்த பெருமக்களை
ஆறு. மணி,சொ. வள்ளிக்கண்ணு ஆச்சி, டாக்டர் ராம. ஆறுமுகம், ராம. நடராஜன், ராம. ராஜேந்திரன் குடும்பத்தினர், மற்றும் குருவிக்கொண்டான்பட்டி மேனகா ஆச்சி தேனப்பன் குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் வரவேற்று சிறப்பித்தனர்.
பாரம்பரிய குடும்பத்தின் சிறந்த பண்பாளர் ராம. வெங்கடாஜலம் தம்பதியர் வாழியவே.






































நேர மேலாண்மை எனும் கலை

 நேர மேலாண்மை எனும் கலை .

_*வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்ங்க.*_
_*ஒன்னு...வெற்றியைத் தேடி ஓடணும்...*_
_*இரண்டு...தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்.*_
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில்
அதை செய்து முடிக்க வேண்டும்
என்கிற சூட்சுமம்தான்
நேர மேலாண்மை.
செய்கிற பணியிலேயே முழுமையாக திளைத்திருப்பவர்கள் மூன்று நிமிடங்களில் முடிய வேண்டியதை முக்கால் நிமிடத்தில் செய்து விடுவார்கள்.
நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டு இருப்பதற்கு காரணம், கண்டதிலும் வாய் வைப்பதுதான். முனைப்பு என்பதை வேட்டையாடும்போது பல்லியிடம் காணலாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக முன் வைத்து, சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தாமல், முன்னேறி பூச்சியினை விழுங்க எந்த பள்ளியிலும் பல்லிக்கு பாடம் கற்றுத் தரப்படவில்லை.
எழுத்தில் தீவிரம், முழுமையாய் கவனம், அதன் மையத்தில் ஆர்வம் என்கிற கலவையுடன் செயலை மேற்கொள்பவர்கள்,
மேன்மை அடைவார்கள்.
சாப்பிடும்போது
உணவே உலகம்,
படிக்கும்போது புத்தகமே வேதம், விளையாடும்போது பந்தே உலக உருண்டை,
குளிக்கும்போது தண்ணீரே அபிஷேகம் என எந்த நேரத்தில்
எது செய்கிறோமோ அந்தச் செயலில் முழுமையாக ஐக்கியமாகிற மனப்பான்மையே நல்ல
நேர மேலாண்மைக்கு இலக்கணம்.
காலையில் எழவேண்டியபோது எழுந்தால், நேரம் போதவில்லை என புலம்ப வேண்டியதில்லை.
பறவைகள் பாடலாலும்,
தேனீக்கள் ரீங்காரத்தாலும், பட்டாம்பூச்சிகள் சிறகசைப்பாலும், வண்டுகள் இன்னிசையாலும்
விடியலை வரவேற்கும்போது,
மனிதன் மட்டுமே
படுக்கையில் புரண்டு, பொழுது புலரும்போது புலம்பித் தீர்க்கிறான்.
படிக்கிற நேரத்தில் படிப்பு,
பல் துலக்கும் பொழுதில் பல் துலக்குதல், விளையாடும்போது விளையாட்டு என வகைப்படுத்தி கொள்கிறவன் வாழ்வு, முன்னேற்றத்தை நோக்கி ஓடுகிற வாய்க்காலின்
நீராக வளர்கிறது.
அவசரத்தில் உண்டால்
உணவும் விஷம். ரசித்துக் குளித்தால் கொப்பரை நீரே குற்றாலமாகும்.
சுற்றுலா போகிற இடத்தில்
பாடத்தை பற்றி சிந்திக்கிறவர்கள், இரண்டையும் தவறவிடும்
இருண்ட பிரதேசத்தின் பிரஜைகள். சோம்பலில் சுகம் காண்கிறவர்களுக்கு ஓராண்டு கூட ஒரு மாதத்தின் அடர்த்தியையே பெற்றிருக்கும். சுறுசுறுப்புள்ளவர்களுக்கு ஒரு வாரம், ஒரு மாதத்தின் பலனை தரும்.
இன்று என்ன செய்ய வேண்டும் என குறித்துக் கொண்டும், ஒரே மாதிரியான பணிகளை தொகுத்துக்கொண்டும், செய்பவற்றை திருப்தியுடன் செய்து கொண்டும் நாட்களை திட்டமிடுபவர்களுக்கு அனைத்து நாளும் திருநாளே
அனைத்து நேரமும் நல்லநேரமே.
*நொடிகளை வீணடிப்பவர்கள் நொடிந்து போவார்கள்.* *அவற்றை பயன்படுத்துபவர்கள் கோடீஸ்வரர்களா ஆவார்கள்!*
*_வாழ்க்கையில் சில_*
*_மனிதர்களிடம் கேள்வியையும்._*
*_சில மனிதர்களிடம் பதில்களையும்_*
*_எதிர்பார்க்காமல் இருப்பது_*
*_மிகவும் நல்லது._*
_*சில கனவுகள் நாம் உயரும் வரை நம்மை உறங்க விடுவதில்லை சில துரோகங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை*_
_*வாழ்க்கை என்பது நமக்கு தினிக்கப்பட்ட பாடம் தான் அதற்காக அதை வெறுத்துவிடாதே விரும்பி படித்து பார் ஒவ்வொரு பக்கமும் சுவார்ஸ்யம்தான்*_
_*உங்கள் வாழ்க்கை ஒரு நெடுங்கதைப் புத்தகம் .*_
_*அதை பலர் விரும்பி வாங்கி படித்து பயனுறும்*_
_*வகையில் எழுதுங்கள்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Friday 26 April 2024

கற்களும் வைரமும் .

 கற்களும் வைரமும் . .

_*ஒரு துளி மையினால்
எழுதும் கருத்துக்கள்
ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.*_
_*தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை
வாங்கவே பயன்படும்.*_
வீழ்ந்தவன் மீண்டும் எழ ஒரு நொடி போதும், ஊக்குவிக்க உண்மையான நண்பர்கள் இருந்தால்.
வாழ்க்கைக்குப் பணம் முக்கியம்தான் ஆனால், அதைவிட முக்கியம் நல்ல நண்பர்கள் உங்களுடன் இருப்பதுதான்.
கற்களைச் சேர்ப்பதில் மும்முரமாக இருந்து வைரத்தை இழந்து விடாதீர்கள். நம்முடன் பலர் இருக்கின்றனர் என்று உண்மையான ஒருவரை இழந்து விடாதீர்கள்.
_*கிரீடம் தானே சூட்டுகிறார்கள் என்று மெத்தனமாக இருக்காதே...*_
_*உனக்கு சூட்டப்படும் கிரீடம்*_
_*முட்களால் வேயப்பட்டதாக கூட இருக்கலாம்...*_
_*எதிலும் எச்சரிக்கையாக இருந்திடு*_
_*அந்த கிரீடத்தின் முட்களே*_
_*உன் மூளையை சிதைத்து மழுங்கடித்து விடக்கூடும்.*_
இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கலாம்.
குடும்ப கஷ்டங்கள் இருக்கலாம்.
வேலை இழக்கும் அபாயம் இருக்கலாம். நம்மைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை இருக்கலாம். பிறர் உங்களுக்கு காயங்களைப் பரிசாகக் கொடுக்கலாம். பிறர் மோசமான துரோகத்தை இழைக்கலாம்.
ஆனால்
இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்ந்து கொண்டுதான் இருப்போம்.
நிச்சயமாக இதுபோன்ற கடினமான சூழல்களை எண்ணி மனம் வருந்த நேரிடும். ஆனால் அந்த மன வருத்தத்திற்கு காரணமாக இருக்கும் காரணிகளை எப்படி விடுவது என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையாகினும் அதிலிருந்து சற்று விலகி நின்று அதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். இது எதனால் எனக்கு ஏற்பட்டுள்ளது, இதை எப்படி நான் சரி செய்ய முடியும், இது மேலும் தீவிரமடையாமல் எப்படி தடுப்பது.
என்பது போன்ற சிந்தனைகள் நீங்கள் மூன்றாம் நபர் பார்வையிலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். கவலை கவலை என புலம்பிக்கொண்டே இருந்தால் தீர்வுகளை யார்தான் காண்பது. நம் வாழ்க்கை முழுவதுமே கவலைகள்தான்.
சற்று அதனைப் பற்றி சிந்தித்து, அதிலிருந்து வெளிவர முயற்சித்துப் பாருங்கள்.
*தூர நின்று உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது
கவலைகள் கூட
கடுகுகளாகவே தெரியும்.*
_*எல்லாம் இருந்தும் இல்லாதவரை போல் வாழ்ந்து பழக ஆரம்பித்து விட்டால்... எந்த நேரத்திலும் எந்த சங்கடங்கள் நெருங்கினாலும் எதுவும் பெரிதாக மனதை பாதிக்க போவதில்லை... என்றென்றும் அமைதியே.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

சூரிய நாராயண மூர்த்தி

 சூரிய நாராயண மூர்த்தி

காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது
நம் பாரம்பரிய
வழிபாட்டு முறைகளில் ஒன்று.
இயற்கை வழிபாட்டில்
சூரியவழிபாடே முதல் வழிபாடாகும்.
1. சூரியக் கடவுள் ‘கொடிநிலை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் உச்சிகிழான் கோட்டம் என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.
2. உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப்பட்டிருக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.
3. ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.
4. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாகவும், யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும், அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர்.
5.சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான்.
6. “ஆதித்யானாம் அஹம் விஷ்ணு’ என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் “நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாகும்.
7. சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.
8. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய “காலம்‘ என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
9. சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.
10.ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை “சூரியநாராயணன்’ என்று போற்றுகின்றனர்.
11. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர்.
12. சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.
13.தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு “ரதசப்தமி’ என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.
14. ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.
15. வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.
16. இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸலமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான “மார்த் தாண்டா’ ஆலயம் ஆகியவையாகும்.
17. நம் ஆரோக்கியத்துக்கும் அதி பதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன.
18.காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.
19. சூரிய வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண்பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.
20. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.
21. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன.22.வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள்.
23. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.
24. சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.
25. சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.
26. சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருந்தது.
27. ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.
28. அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள்.
29. சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள்.
30. நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
31. கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
32. எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
33. ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன..
நன்றி தெய்வங்களின் சங்கமம் முகநூல்

Thursday 25 April 2024

கவலையும் குப்பையும்

 கவலையும் குப்பையும் . .

_*எதிர்த்து நிற்பவனெல்லாம் எதிரியும், துரோகியும் அல்ல,*_
_*ஆமாம் போடுபவனெல்லாம் நண்பனும் அல்ல..!!*_
_*சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறும் இவ்வுலகில் எவனும் எவனுக்கும் உத்தமன் அல்ல.*_
_*மகிழ்ச்சியின் எல்லை*_
_*நம்மால் மற்றவர்கள்*_
_*மகிழ்ச்சி அடைவது தான்.*_
_*அளவுக்கு மீறினால்*_
_*அமிர்தமும் நஞ்சே...*_
_*அதிகமாகப் படித்தவன்*_
_*வாழ்க்கையில் வெற்றி பெற்றதில்லை...*_
_*அதிகமாக உழைத்தவன் வாழ்க்கையின் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை.*_
_*காலம் உள்ள போதே*_
_*எல்லாம்*_ _*பயன்படுத்துங்கள்...*_
_*ஞாலம் சிறக்க உன் பேர் இருக்க வேண்டுமெனில்,*_
_*எண்ணங்களை நேர்மையாக வை...*_
_*வெற்றி நிச்சயம். *_
பெயர் தெரியாத
நம் முன்னோர்கள் செய்த
நன்மைகளால் தான் நாம் இன்று பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஒருவன் துன்பப்படும் பொழுது நிபந்தனையின்றி அவனுக்கு உதவுவது தான் மிகச்சிறந்த நட்பின் அடையாளம்.
பசி என்ற இரண்டு எழுத்துக்காக எழுந்து, பணம் என்ற மூன்று எழுத்துக்காக ஓடுவதே வாழ்க்கை.
பணத்தை விட அதிக
மதிப்புடையது மகிழ்ச்சி
அதை யாரும் உங்களுக்கு
கடனாகக் கூடத் தரமாட்டார்கள்.
பணத்தை மட்டும் சம்பாதித்தவர் இருக்கும் போது வாழ்கிறார்
அன்பையும் உறவையும் சேர்த்து சம்பாதித்தவர்
இறந்த பிறகும் வாழ்கிறார்.
_*கவலையும் குப்பையும்*_
_*ஒன்றுதான்*_
_*நம்மை கேட்காமலேயே*_
_*வந்து சேர்ந்துவிடும்*_
_*ஆனால் நாமாக அகற்றாமல் அவை வெளியேறாது...!*_
_*சின்ன சின்ன*_
_*அக்கறையும்*_
_*அனுசரணையும்*_
_*போதும்*_
_*வாழ்க்கையை*_
_*அர்த்தம் உள்ளதாக மாற்ற

வ.சுப.மாணிக்கம் நினைவு தினம்


 

மனிதத்தேனீயின் தேன்துளி