Wednesday 13 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முயற்சி திருவினையாக்கும்....
தள்ளுவடியில் சென்று 10 பைசாவிற்கு
ஐஸ்விற்றவர். -இன்று
தமிழ்நாட்டின் ஐஸ்க்ரீம் உலகின் முடிசூடா மன்னன்!!
சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் பிறந்தவர்
இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவரில்லை.
பியுசி தேர்வில் தோல்வியடைந்தவர்
முதலில் தள்ளுவடியில் சென்று 10 பைசாவிற்கு ஐஸ் கிரீம் விற்றார்.
தன் குடும்ப சொத்துக்கள்
சிலவற்றை விற்று,
அதன்மூலம் கிடைத்த
13,000-ரூபாயில்
R. G .& CO என்ற
நிறுவனத்தை 1970 ல் நிறுவினார்
எந்த ஒரு தொழிலும் உடனடியாக வெற்றிக்கனியை சுவைத்து விடுவதில்லை.
பயணங்களில் பல தடைக்கற்களை சந்தித்த பிறகே வெற்றி இலக்கை எட்டி இருக்கிறார்கள். அதேபோல் அவரும் 10 ஆண்டுகள் பல போராட்டங்களை சந்தித்தார்
அருண் ஐஸ் கிரீம் தொடங்கிய போது. அப்போது அவருக்கு வயது 21.
அருண் ஜஸ்கிரீம் தொடங்கிய அந்த சமயத்தில் நிதியளவிலும், சந்தையளவிலும்
பெரிய நிறுவனங்களாக இருந்த Dasaprakash, Joy and Kwality ஐஸ் போன்றவரிடமிருந்து போட்டியை சந்தித்தார்.
அவருக்கு மார்க்கெட்டிங் பற்றின அறிவு அப்பொழுது குறைவானதாகவே இருந்தது. அதனால் சபரி கல்லூரியில் marketing management, export management and personal management course ஐ படித்தார்.
1986-ல் இது Hatsun Foods Private Ltd என்று பெயர் மாற்றி நிறுவப்பட்டது.
1991 ல் 3 கோடி வருமானத்தை ஈட்டியது. ஐஸ் கிரீம் செய்வதற்கு பாலை கொள்முதல் செய்யவேண்டும் என்பதால் பாலையும் விற்கலாம் என்று தோன்றவே, 1995 ல் ஆரோக்கிய பால் தொடங்கப்பட்டது
அருண் ஐஸ் கிரீம் மட்டுமல்ல
ஆரோக்யா பால்,
கோமாதா பால்,
Hatsun Dairy பொருட்கள்,
Oyalo Gravy & snacks,
சந்தோசா கால் நடை தீவனம்
மற்றும் நம்மை கவர்ந்திழுக்கும்
Ibaco Ice Cream என்று நாம் எல்லோரும் கேட்டு வாங்கும் படியான பிராண்டை உருவாக்கியவர் ஆர். ஜி. சந்திரமோகன்.
13 ஆயிரம் ரூபாயில் தொடங்கி இந்தியாவின் மிகப் பெரிய பால் பொருள்கள் நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை உருவாக்கிய : ஆர். ஜி. சந்திரமோகன் அருண் ஐஸ் கிரீமை சுவைக்காதவர் நம்மில் யாரும் இருக்கமுடியாது
.
இந்த ஆண்டு வருமானம் ரூ . 3,600 கோடிக்கும் மேல் ஆகும்.
இத்தனைக்கும் இங்நிறுவனம் வெறும் 13,000 ரூபாயில்தான் தொடங்கப்பட்டது.
சிறு வயதில் ஐஸ் கிரீம் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதை வாங்குவதற்காக சில்லறைகளை சேர்த்து வைப்பாராம். இந்த விருப்பமே பிற்காலத்தில் ஐஸ் கிரீம் சார்ந்த மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க தூண்டுதலாக இருந்திருக்கிறது. .
. எந்த ஒரு தொழிலையும் வெற்றி பெற சிறந்த ஐடியா முக்கியம். அந்த வகையில் “அர்ஜூன் அம்மா யாரு?” என்ற வித்தியாசமான விளம்பரத்தை பயன்படுத்தி ஆரோக்கியா பாலினை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஹட்சன் நிறுவனம்.
இன்று ஆரோக்கியா பால் மட்டும் வருடத்திற்கு ரூ.1400 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. பால் மட்டுமல்ல மோர், தயிர்,வெண்ணெய், நெய் மற்றும் பிற பால் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது ஹட்சன் நிறுவனம்.
வாழ்த்துக்கள்!!!💪💪💪
நன்றி அகிலாண்டேஸ்வரி முத்தையா

No comments:

Post a Comment