Saturday 30 January 2021

வாழிய பல்லாண்டு ஆ.வள்ளியப்பன் அவர்களுக்கு மனிதத்தேனீ வாழ்த்து


 

கவலைகளைக் களைவோம்.

 கவலைகளைக் களைவோம்.

இறுதி வரை வாழ்க்கை இப்படியே
இருக்க வேண்டும் என்ற
கவலை சிலருக்கு..
இப்படியே
இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு..!
கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவிதச் சொத்து. கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்தில் மனிதனை ஆர்வத்தோடு இயங்க வைத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் விரக்தியில் படுகுழியில் தள்ளிவிடும்.
கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையில் துன்பப்படும் எல்லோரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி விடுவது உண்டு. நன்றாக மூடப்பட்ட பாட்டிலில் காற்றைத் திணிப்பதைப் போன்று நமது உள்ளமாகிய பாட்டிலில் கவலைகளை அடைத்துத் திணித்துப் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழக்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். உங்களுடைய கவலைகளை உங்களுடைய நண்பர்கள், மனைவி, பெற்றோர்கள் மற்றும் உங்களை விரும்பும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் கவலைகளின் சுமை குறையும்.
அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதோ கவலைகள் குடிகொண்டிருக்கின்றன. கவலைப்படும் சமயங்களில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். அதாவது நான் எதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது தேவைதானா….? இப்படி கேட்டு பார்த்தால் கவலைப்படும் விஷயங்கள் பெரும்பாலானவை கவலைப்படத் தேவையற்ற சில அர்த்தமற்ற விசயங்களாக தென்படும். கவலைகள் மலையாக உருவெடுத்து, தன் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற மனநிலையை வளர்த்தல் கூடாது. கவலைகளுடன் போராடி அவைகளை எப்படியும் வெல்ல முயற்சி செய்வது சாலச்சிறந்தது.
எதற்கும் உற்சாகமிழந்து விடாதீர்கள். உலகம் இருக்கிறது.நாட்கள் இருக்கின்றன. எதை இழந்தாலும் எதிர்காலம் இருக்கிறது. வாழக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கின்றது. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. கவலைகளை வளர விடாதீர்கள்.
ஒரு நாளும், ஒரு வாரமும், ஒரு மாதமும், ஒரு வருஷமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இது நம்மால் முடியும், நிச்சயம் முடியும் என்கிற அழுத்தமான மனக்கட்டளையிடுங்கள். முதலில் பூ… பூக்கும் பிறகு காயாகி அதன்பின் தானே கனியாகும். எனவே எப்போதும் எதிலும் வெற்றியைக் குறி வைத்துச் செயல்படுங்கள். நிச்சயம் கனி கிடைக்கும். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மகாத்மா காந்தி நினைவைப் போற்றுவோம் - மனிதத்தேனீ


 

Friday 29 January 2021

*நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு* .*

 *நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு* .*

திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், 'இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக
சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.
கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத் தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

வெற்றிச் சரித்திரம்.

 வெற்றிச் சரித்திரம்.

நம் இளைஞர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் அவசியம்;பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு..
இந்தியாவின் 72வது குடியரசு தினவிழாவில்,வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான பத்ம ஸ்ரீ விருதினை ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு அளித்தது.
அதெல்லாம் சரி, யார் இந்த ஸ்ரீதர் வேம்பு. எதற்காக இவருக்கு இந்த விருது..?
தற்பொழுது தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் ஐ.டி. நிறுவனம் நடத்திவரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்தமைக்காக மத்திய அரசு பதமஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சோஹோ என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் செங்கல்பட்டு, மத்தளம்பாறை, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மற்றும் அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, துபாய் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
ஜோஹோ (ZOHO) நிறுவனம், இன்று உலகம் முழுக்க தனது சேவைகளை செய்து வருகின்றது. மிக சிறிய அளவில் ஆரம்பித்த இந்த சேவையானது, இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சொல்லப்போனால் மைக்ரோசாப்ட், கூகுள், ஆரக்கிள் ,மற்றும் சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட பெருந்தலைகளுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்றது.
ஸ்ரீதரின் பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டத்தின் காவேரிகரையோரம் உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர் தான் ஸ்ரீதர் வேம்பு. அவரின் சொந்த ஊர் கொள்ளிடக் கரையோம் உள்ள திருப்பனந்தாள் அணைக்கரை பகுதி கிராமமான சிதம்பரநாதபுரம் கிராமமாகும். பிறந்தது கிராமப்புறம் என்றாலும் வளர்ந்தது சென்னை தான்.
இத்தகைய பெரிய வளர்ச்சியை அடைந்தும், ஜோஹோ தனது நிறுவன விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆரம்பம் முதல் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெறவில்லை. அனைத்து விதமான நிதியுதவியும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்டவை.
ஆரம்பத்தில் பற்பல பிரச்சனைகளை எதிர்கொண்ட ஸ்ரீதர், பல சோதனைகளையும் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றித் தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இன்று இந்த நிறுவனத்தின் வருவாய் டிசம்பர் நிலவரப்படி, 2.5 பில்லியன் டாலராகும். இன்றைய இதன் மதிப்பு சில மில்லியன்கள் ஆகும்.
நிறுவன ஆண்டு வருமானம் 3 ஆயிரம் கோடி ரூபாயை கடந்தும் ஆடம்பரத்தால் தன்னை அலங்கரிக்காதவர். தோற்றத்தில் எளிமையும் பேச்சில் இனிமையும் கொண்டவர். செயல்களில் விந்தையானவர். நெரிசல் தாண்டவமாடும் பெருநகரங்களில் மட்டுமே இடம் தேடும் ஐ.டி., கம்பெனிகளுக்கு ஊடே, இயற்கை கூத்தாடும் கடைக்கோடி கிராமங்களைத் தேடி அலுவலகத்தை திறப்பவர்.
மெத்தப்படித்த மென்பொருள் இன்ஜினீயர்களை விடுத்து பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களை பயிற்சி கொடுத்து தன் நிறுவனத்தில் சேர்த்து அசத்துபவர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் திறமை இருந்தால் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு நற்சாட்சி இவர்.
திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள் அளித்த சிறப்பு பேட்டி;
சாதாரண குடும்பத்தில் பிறந்தேன்.அப்பா நீதிமன்ற தட்டச்சர், அம்மா ஹோம் மேக்கர். 9 வரை தாம்பரம் அரசுப்பள்ளி, பின் தனியார் பள்ளி, சென்னையில் கல்லுாரி, அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தேன்.
சிறு வயதில் பொருள் வாங்க கடைக்கு போனால் என் தாய் என்னை நம்பமாட்டார். கடைக்காரரிடம் ஏமாந்துவிடுவேன் என நினைப்பார். 'சயின்டிஸ்ட்' ஆக வேண்டும் என்பதே கனவு. அதற்காக தான் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தேன்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் போது கடைவீதிகளில் வாங்கும் பொருட்கள் எல்லாமே 'மேட் இன் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, மலேசியா'ணு தான் இருந்தன. எங்கேயுமே 'மேட் இன் இந்தியா' இல்லை. பள்ளி காலத்திலேயே நாம் ஏழை நாடாக இருப்பது பற்றி கவலைப்பட்டதுண்டு. இக்கவலை இன்னும் அதிகமானது. பணக்கார நாடாக மாற நம் தேவைகளை நாமே உற்பத்தி செய்யணும். வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வரணும். இதற்கு என்னளவில் ஏதாவது செய்ய விரும்பினேன். உலகத்தையே ஒரு இந்திய சாப்ட்வேர் தயாரிப்பை பயன்படுத்த வைக்க வேண்டும் என எடுத்த முடிவு தான், 'ஸோகோ'வாக வளர்ந்தது.
24 ஆண்டுக்கு முன்பு 6 பேரோட சென்னையில் துவங்கினேன். இப்போது 9 ஆயிரம் பேர் வரை இருக்காங்க. இந்தியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, துபாய், ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான்ணு அலுவலகங்களை விரிவுப்படுத்திக்கிட்டு இருக்கிறோம். பிரேசில், நைஜீரியாவில் இப்போது பணிநடக்கிறது.
மேலும்,எச்.ஆர்., ஆன்லைன் மீட்டிங், இ-மெயில், சி.ஆர்.எம்., கணக்கு, பிராஜெக்ட் மேனேஜிங்.... என ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் தயாரிக்கிறோம். இதுவரை 50 வகையான சாப்ட்வேர்களை அறிமுகம் செய்துள்ளோம். உலகில் 5 கோடி பேர் 'ஸோகோ' சாப்ட்வேரை பயன்படுத்துகின்றனர். 40-45 சதவீத பயன்பாடு அமெரிக்காவில் உள்ளது. அடுத்த 10 ஆண்டில் 50 கோடியாக பயனாளர்களை உயர்த்த வேண்டும் என்பது என் இலக்கு. 'ஸோகோ' தயாரிப்பை இதுவரை 5 லட்சம் நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இதை 50 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு தேவையான சாப்ட்வேர்கள் தொகுப்பாக ஒரே இடத்தில் கிடைப்பதால் 'ஸோகோ'விற்கு மவுசு அதிகம். விலையும் அதிகமல்ல. புதிதாக துவங்கும் நிறுவனங்களுக்கு ஒரு வருடம் வரை சாப்ட்வேரை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கிறோம்.
சென்னை ஐ.டி., கம்பெனிகளில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இருப்பர். தென்மாவட்டத்தினரும் அதிகமாக இருப்பாங்க. இவங்க இடத்திற்கே சென்று நிறுவனம் அமைக்க விரும்பினேன். அதன் சோதனை முயற்சி தான் தென்காசி அலுவலகம். கரூர் மோகனுார், தேனி போடிநாயக்கனுார், தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதிகளில் அலுவலகம் திறந்திருக்கிறேன். மதுரை சோழவந்தான் அருகே திறக்க இருக்கிறேன். இம்முயற்சி தொடரும். கிராமப் பகுதிகளை நோக்கி நிறுவனம் செல்லும்போது கிராமத்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். சென்னை போன்ற பெருநகரங்களின் நெரிசல், மாசுபாடு, குடிநீர் பிரச்னை குறையும்.
இதற்காக 'ஸோகோ ஸ்கூல் ஆப் லேர்னிங்'ணு ஒரு பயிற்சி பள்ளியை 15 ஆண்டுகளாக நடத்துகிறேன். கிராமப் புறத்தில் பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்சி கொடுத்து பணிக்கு தேர்வு செய்கிறோம்.
இந்த ஆண்டு 160 பேரை உருவாக்கி இருக்கிறோம். மொத்த பணியாளர்களில் 15-20 சதவீதம் பேர் கல்லுாரியையே பார்க்காதவர்கள். 2 வருட பயிற்சிக்குப் பிறகு அற்புதமாக பணி செய்கின்றனர்.
தேர்வு, மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கல்விமுறையை நான் ஏற்பதில்லை. நம் கல்விமுறை மாற வேண்டும். இதற்கு முன்மாதிரியான பள்ளிகளை நான் துவங்குகிறேன். இங்கு தாய்மொழி தமிழ், அனைத்து இடங்களிலும் தேவைப்படும் ஆங்கிலம் பிழையின்றி எழுத, படிக்க, பேச, விவாதிக்க கற்பிக்கப்படும். கணக்கில் மாணவர்கள் ஜொலிக்க வேண்டும். நாளிதழ்கள் வாசிப்பு கட்டாயம். தினசரி செய்திகள் பற்றி வாதிக்கப்படும். இதன் மூலம் உலக அறிவு வளரும். தனித்திறன்களை கண்டறிந்து அதில் சிறந்து விளங்க பயிற்சி வழங்கப்படும். மியூசிக் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். ஏனென்றால் இதற்கும் கணிதத்திற்கும் மன ரீதியாக தொடர்புள்ளது. செயல்வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பள்ளியின் பெயர் கலைவாணி. இங்கு தேர்வு கிடையாது. மத்திய திறந்தநிலை பல்கலை மூலம் சான்றிதழ் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் வெற்றி என்பது யாருக்கும் உடனடியாக வராது. அடைய பொறுமை, நிதானம், விடா முயற்சி அவசியம். வாழ்க்கை, தொழிலில் தோல்வியும் நேரும். எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். நம் இளைஞர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் அவசியம். ஒரு நிறுவனம் நம்மை வேலைக்கு அழைக்கும் வகையில் நம்மை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும். பாரம்பரியம், கலாச்சாரத்தை பறிகொடுத்துவிடக் கூடாது.
தென்காசி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நான் ஏற்பாடு செய்து வருகிறேன். பொதுவாக கிராமங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை அதிகரிக்க செய்ய முயற்சி செய்கிறேன். இந்த முயற்சிக்காக மத்திய அரசு எனக்கு இந்த விருதை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
நன்றி ராஜப்பா தஞ்சை





மனிதத்தேனீயின் தேன்துளி


 

நன்மையே தீமைக்குத் தீர்வு.

 நன்மையே தீமைக்குத் தீர்வு.

வழிகாட்டுகின்றார் வள்ளுவர்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
விளக்கம்.
தன்னையே தோண்டினாலும், தோண்டுபவர் விழுந்து விடாதபடி தாங்கும் நிலம் போல, தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.
நிலமானது நமக்கு இருக்க இடம், நாம் உண்ண காய் கனிகள் வளர்வதற்குத் தோட்டம் என்று எல்லாம் தருகிறது...
அதைக் கடப்பாரை கொண்டு காயப்படுத்தினாலோ, மண்வெட்டி கொண்டு வெட்டினாலோ, குண்டு வைத்து தகர்த்தாலோ, அப்படிச் செய்பவர்களைக் கூட அது தண்டிப்பதில்லை. மாறாக அவர்களைத் தாங்குகிறது...
நம்மைப் பற்றித் தவறாக, இழிவாகப் பேசுபவர்களை, செய்பவர்களை பொறுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்குத் தீங்கு வராமல் தாங்க வேண்டும். தீங்கு செய்பவர்களைத் தாங்கும் நிலம் போல. நன்மையானது தீமையை விடப் பலமும் மேலானதும், மிகவும் வல்லமை வாய்ந்ததுமாகும்.
தீமையானது நன்மைக்கு மேலாக ஒரு போதும் நீடித்த அதிகாரம் செலுத்த முடியாது. இந்த உலகம் கொடுமை நிறைந்ததும் கற்பனை செய்யவியலாத அளவிற்கு பகை நிறைந்தது என்று சிலர் சொல்வார்கள்.
ஆனால்!, அன்பு பகையை,வெறுப்பை விட மேன்மையும் திறனும், வாய்ந்தது. இது ஒளியையும் இருளையும் போன்றது. இருள் ஒரு போதும் ஒளியை மேலோங்க, மேற்கொள்ள முடியாது. ஒளியில் மிளிரும் போது இருள் மறைந்து போகிறது...
பெரும்பாலானோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒளிக்கு பதிலாக இருளைப் பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...
ஒளியே இருளிற்கு தீர்வாகும். அன்பு மாத்திரமே வெறுப்புக்கு தீர்வாகும். நன்மையே தீமைக்குத் தீர்வாகும்...!
நாம் செய்ய வேண்டியது , தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.. அதனால் பகைமை விடுத்து மிகுந்த நேசத்தை ஏற்படுத்த முடியும்...
எவராவது தீமை செய்து விட்டால், மிகப் பொறுமையாக நடந்து கொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப் பல நன்மைகளுக்கு நாம் சொந்தக்காரன் ஆகலாம்...!
ஆம் நண்பர்களே...!
எவராக இருந்தாலும், எங்கே இருந்தாலும் அதிக தீமை செய்தால் நீங்கள் பதிலாக அதிக நன்மை செய்யுங்கள்...!
நன்மை செய்வது உங்களை வெற்றியாளர்கள் ஆக்கும்...!!
தீமை செய்பவர்கள் ஒருவரும் ஒருபோதும் வெற்றிவீரனாக ஆவதில்லை.

Thursday 28 January 2021

தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் நலனையும் உலக மக்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு களப் பணியாற்றிவரும் இருவர் சந்திப்பு.

 தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் நலனையும் உலக மக்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு களப் பணியாற்றிவரும் இருவர் சந்திப்பு.

இன்று மதுரையில் கட்டிடக் கலைப் பொறியாளர், மிகச் சிறந்த தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சர்வீஸ் டு சொசைட்டி அமைப்பின் நிறுவனர், அரசுப் பள்ளி மாணவர்கள் மேன்மை பெற உழைக்கும் திருநெல்வேலிக்காரர், துபாயில் உயர் பணியில் உள்ள அன்புச் சகோதரர்
ரவி சொக்கலிங்கம் அவர்கள் மனிதத்தேனீயுடன் சந்தித்து மகிழ்ந்த தருணம்.
தொடரட்டும் தமிழர்களின் பேராற்றல்.



பணிவு தரும் உயர்வு

 பணிவு தரும் உயர்வு

சிலர் நிறையத் திறமை, அறிவு இருந்தும்
வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாகப்
போராடியே அடைகிறார்கள். ஆனால்
அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம்
இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல
வேலை , அந்தஸ்து என உயர்ந்த
நிலைக்குப் போய் விடுகிறார்கள்.
அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில்
கிடைக்கிறது. வாழ்வில் மேலும் மேலும்
உயர்ந்து கொண்டே செல்பவர்களை
உற்று நோக்கினால் அவர்களுகிடையே
ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம்
பிரதானமாக *பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.*
மற்றவர்களைப் புண்படுத்தாத, பிறரை
மதிக்கும் , பிறர் உணர்வை புரிந்து
கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை
லிப்டில் உயரே போவது போல் வாழ்வில்
உயரச்செய்யும். மற்றவர்கள்
படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற
வேண்டும். *ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.*
பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள
பிள்ளைகளுக்குத் தான் அதிகம் பாசம்
கிடைக்கிறது. அவர்கள் தேவைகள்
கேட்காமலேயே நிறைவேற்றப்படுகி
றது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது
ஆசிரியர்கள் அடிப்பதில்லை . சிறப்பாக
கவனித்துப் பாடம் சொல்லிக்கொடுகிற
பார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க்
வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பைத்
தருகிறது , எளிதில் வேலை கிடைக்க
உதவுகிறது. பணி உயர்வுக்கு
பிறரிடமிருந்து சிபாரிசு
பெற்றுத்தருகிறது. போட்டிகள்
பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள்
எதுவும் இருக்காது. இன்சூரன்ஸ்
ஏஜென்டுகள் போல எல்லாப்
பக்கமிருந்தும் நீங்கள் கேட்காமலே
உதவி தேடி வரும். மற்றவர்கள்
கருத்துக்கு எதிர் கருத்தைக் கூட
பணிவுடன் சொல்லும்போது அதற்கு
நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ
இருக்கும்.
இனிமையாக
் பேசுதலும் பிறர்
நலனில் அக்கறை காட்டுதலும்
எப்போதும் நமக்குப் பல மடங்காகத்
திருப்பிக் கிடைக்கும். திறமையான
பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின்
சக்தியைக் கொண்டே *காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.*
பிறர் பேச்சைக் காது கொடுத்து கேட்பதும்
பணிவு தான். தன்னடக்கம்
உடையவனது அதிகாரம் மந்திரக்கோல்
போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த
தலைவனாக முடியும். எல்லா மதங்களும் முதலில் பணிவை,
கீழ் படிதலை அல்லது அகந்தை
அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப்
பருவத்திலிருந்தே கடைபிடிக்க
வேண்டிய முதன்மைப் பண்பு இது
தான். இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டால் வாழ்வில் அனைத்திலும் வெற்றி தான்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

தைப்பூசத் திருநாள்


 

நல்லதே நடக்கும்.

 நல்லதே நடக்கும்.

🌺 மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது.
🌺 முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட #சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான்.
🌺 ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான்.
🌺 அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை #திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார்.
🌺 இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார்.
🌺 முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், #தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.
🌺 முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள #திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடு ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
🌺 முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.
🌺 பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள #பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும்.
🌺 அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுத பாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.



Wednesday 27 January 2021

வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

இன்று காலை காரைக்குடி சா. நா. நா. இல்லத்தில் நடைபெற்ற மதுரை
செந்தில் பைனான்ஸ் & ஹையர் பர்சேஸ் நிறுவன உரிமையாளர், அருமை நண்பர் மதகுபட்டி
பிஎல். சுப்பிரமணியன் மகன் முத்தையா - மீனாட்சி திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் பள்ளத்தூர் கே டி எஸ். பழனியப்பன், ரியல் எஸ்டேட் பள்ளத்தூர் சேகர், காரைக்குடி மயில் சொக்கலிங்கம், மாப்பிள்ளையின் மாமக்காரர் பழ. அண. ராமநாதன், மணமகளின் தந்தை வழக்கறிஞர் எஸ். முருகப்பன் உள்ளனர்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



பயம் தேவையில்லை.

 பயம் தேவையில்லை.

ஆம் யதார்த்தவாதிகள் அனுபவித்து சொல்லும் உண்மை
இந்த நிமிடம் முக்கியமானது
மன அமைதியின் அடித்தளமே இந்த நிமிடத்தில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது.
நேற்று என்ன நடந்தது,நாளைக்கு என்ன என்ன நடக்கப் போகிறது என்பதை விட , நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிமிடம் முக்கியமானது.
நாம் நடந்து போன விசயங்களையோ, அல்லது நடக்கப் போகின்ற விசயங்களையோ நினைத்துக்கொண்டிருந்தால் ,தற்போது நடந்து கொண்டிருக்கின்ற விசயங்களை கவனிக்க ( உணர ) தவறிவிடுவோம்.
அதன் விளைவு நிகழ்கால நடப்புகளையும் தவற விட்டு விட்டு அதற்கும் வருத்தப்பட்டு கவலை,சோர்வு, ஏமாற்றம்,நம்பிக்கையின்மை ஆகியவை எந்நேரமும் நம்மை ஆட்டிப் படைக்க அனுமதித்து விடுகிறோம்.
நாளைய பொழுதை நினைத்து இன்றைய பொழுதை மறப்பதால் இன்றய நேரத்தை வீணாக்குகிறோம்.
மீண்டும் வலியுறுத்திச் சொல்வது என்னவென்றால் கடந்த நாட்களும் வேண்டாம்,நாளைய கனவு வாழ்க்கையும் வேண்டாம்.
இன்றய நிஜத்தை உணர்ந்து வாழப் பழகுங்கள்.
இன்று என்பது நேற்றய பொழுதில் நாளை தானே. இன்றய தினத்தைப் பற்றி நேற்று நினைத்து பார்த்திருப்பாய் .ஆனால் இன்றைய பொழுதை இன்று நினைக்காமல் இருப்பது ஏன்?
நாளை நாளை என்று நாளைய தினத்தைப்பற்றி திட்ட மிடுவதிலேயே காலத்தைத் தள்ளினால் இன்றய நிஜம் நம்மை விட்டுப் போய் விடும்.
நாளைய தினத்தைப் பற்றி கவலைப் பட்டு இன்றய பொழப்பை விட்டுவிட்டால் நம் உறவு கூட நமக்கு மிஞ்சாது.
நிஜ வாழ்க்கையில் நாம் உழைக்காமல் நாளையைப் பற்றி திட்டமிடுதலும் கனவுலகிலும் சஞ்சரித்துகொண்டிருந்தால் , காலமும் கடந்து போய் எதுவும் மிஞ்சாமல் எல்லாம் இழந்து மன நிம்மதி இழந்து தவிப்போம்.
மன நிம்மதி இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை,சந்தோசமும் இல்லை.
இந்த நிமிடம் மறந்து எதிர்காலம் நினைக்கயில் பயம் வருகிறது.
பணம் பற்றாக்குறை,குழந்தைகளை பற்றிய பயம் வருகிறது. பயம் வந்தால் படபடப்பு ,புத்தியில் நிதானம் இல்லாமை எல்லாம் வருகிறது.
வந்தால் உடலைப் பாதிக்கிறது. மேலும் மனம் பாதிப்படையும்.
பயம் போக கடந்து போன நாளும் வேண்டாம்,நாளைய பற்றிய பயமும் வேண்டாம். இன்றைய நிஜம் போதும்.
இந்த நிமிஷம் சந்தோசமாக இரு.
அது ஒன்றே வாழ்க்கை சிறக்க வழி.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

நல்ல எண்ணம் வேண்டும்

 நல்ல எண்ணம் வேண்டும்

உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
*நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.*
நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
*அன்பான ஒரு வார்த்தை போதும்!*
ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.
*படித்தால் மட்டும் போதுமா?*
தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன் உடைய மனிதராக இருப்பார்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

நேற்று காலை காரைக்குடியில் நடைபெற்ற எனது மாமியார் புதுவயல் வீஆர். வள்ளியம்மை ஆச்சி எண்பதாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் குடும்பத்தினர். பேரன் பேத்திகள் சூழ உறவினர்கள் பங்கேற்ற இனிய விழா. - மனிதத்தேனீ

 



குடியரசு தின வாழ்த்துகள்


 

வாழிய பல்லாண்டு. இன்று பிறந்தநாள் கண்டு மகிழும், மாநகர் மதுரையில் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து பல புதுமைகள் படைத்திடும் பேராற்றல் மிக்க அன்புச் சகோதரர் விஷால் டி மால் மற்றும் பல்துறை நிறுவனம் நடத்தி வரும் ஆர். இளங்கோவன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது.

 தமிழறிஞர்

சாலமன் பாப்பையா அவர்களுக்கு
பத்மஶ்ரீ விருது.
நமது அன்னைத் தமிழுக்கு உலக அளவில் நாள்தோறும் சிறப்புச் சேர்த்து வரும் தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு நமது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க உள்ளது அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக நாம் குரல் எழுப்பினோம்.
இப்போது நடந்துள்ளது காலம் கடந்தாலும் மகிழ்ச்சி தான்.
உலகின் மூத்த மொழியான நமது செம்மொழித் தமிழை கடைக்கோடி மனிதனுக்குக் கொண்டு சேர்த்தவர் நமது ஐயா அவர்கள்.
வாழிய மத்திய அரசு
வாழிய தமிழறிஞரின் பணி.
பாராட்டியும் வணங்கியும் மகிழும்
- மனிதத்தேனீ


Monday 25 January 2021

வாழிய மணமக்கள். இன்று காலை மதுரை சூர்யா நகர் விஜய் கிருஷ்ண மகாலில் நடைபெற்ற தி சிட்டி ஆட்டோ மற்றும் தி சிட்டி கேப்ஸ் உரிமையாளர், ஜேசி இயக்கத்தில் பழகிய சகோதரர், எதனையும் நேர்த்தியாகச் செய்திடும் அருமை நண்பர் டி. அபேதானந்தக் கண்ணன் மகன் ஆதித்யக்குமரன்-ஜெய ஸ்ரீ திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் வி எம். ஜெயப்பிரகாஷ் அவர்கள். வாழிய மணமக்கள்.





 

மத்திய,மாநில அரசுகளின் கையாளாகத்தனத்தைதான் காட்டுகின்றன..

 மத்திய,மாநில அரசுகளின் கையாளாகத்தனத்தைதான் காட்டுகின்றன..

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறான்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் 2018-ல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல்கேட்டை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கினர்.
இது தொடர்பான வழக்கில் பண்ருட்டி வேல்முருகன் கைது செய்யப்பட்டான். அவன் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் சாலையில் உள்ள சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கியுள்ளனர்.
அரசாங்கத்தை எதிர்த்து ஒரு சிறு முட்டாள் கூட்டம் அராஜகம் செய்கிறது அதை கூட கட்டுப்படுத்த முடியாதது அரசுகளின் கையாளாகத்தனத்தைதான் காட்டுகிறது.இப்படியே சென்றால்..?


கடும் உழைப்பு தான் வெற்றியைத் தரும்.

 கடும் உழைப்பு தான்

வெற்றியைத் தரும்.
வெற்றி மீது நமக்கு மிகப் பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறோம்.
போட்டி நிறைந்த உலகில் இதைத் தவிர்க்க முடியாது தான்.
சூறாவளியாக சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற நம்முடைய இந்த வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது கண்டிப்பாகத் தேவையாகும் .
ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்குச் சென்று வேட்டையாட விரும்பினார்கள் , அதற்காக அவ்விருவரும் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர் .
அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்த போது வேட்டையாடுவதற்காக வைத்திருந்த அவர்களுடைய துப்பாக்கிகளிலிருந்த தோட்டாக்கள் காலியாகி விட்டதை உணர்ந்தார்கள்.
அந்த சூழலில் திடீரென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியைக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர் கொள்ள இயலாது என தெரிந்து கொண்டு உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர்.
ஆனால் அவ்விருவரில் ஜப்பானியர் மட்டும் தன் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்திருந்த முழுக்காலணிகளை கழற்றி கைகளில் எடுத்துக் கொண்டார்
இதனைக் கண்ட அமெரிக்கர், "நீங்கள் என்ன இப்போது செய்கிறீர்கள்? சீக்கிரம் வாருங்கள்... நாமிருவரும்.. இந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக நம்முடைய மகிழ்வுந்து இருக்குமிடத்திற்கு விரைவாக ஓடி விடுவோம் "எனக் கூறினார் .
அதற்கு ஜப்பானியர், இந்த முழுக்காலணிகளானவை வேகமாக ஓடுவதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன அதனால் இந்த முழுக்காலணிகளை கழற்றி விட்டேன்.
இப்போது பாருங்கள் நம்மில் யார் முதலில் மகிழ்வு உந்திற்கு செல்கின்றோம் என்பதை." எனக்கூறி கொண்டு மகிழ்வுந்து இருக்கும் இடம் நோக்கி பறந்தோடி சென்றார் ,
நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்கும் நபர்கள், நிச்சயம் அந்த இலக்கை அடைந்து விடுவர்.
ஏனெனில், அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உத்வேகமும், ஆற்றலும், இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும். நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்.
இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது,
வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால் தான் சாத்தியப்படும். வெற்றி பெற வேண்டும் என்னும் தாகம் மனத்தில் இருந்து கொண்டே இருக்க்க வேண்டும்..