Wednesday 30 November 2016

விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Madurai Mani Paper 30.11.2016 Page 4


ராஜாஜி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Dinamalar Paper 30.11.2016. Page 3


தந்தை பெரியார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

போர் முடிந்ததும், தேரோட்டியான கிருஷ்ண பகவான் தன் கரங்களைப் பிடித்துத் தன்னைக் கீழே இறக்க வேண்டும் என்று அர்ஜுனன் கர்வம் கொண்டிருந்தான். ஆனால் கிருஷ்ணரின் கட்டளையோ வேறாக இருந்தது.
""போர் முடிந்து விட்டது. இனி என்ன தயக்கம்? அர்ஜுனா! தேரை விட்டு கீழே இறங்கு'' என்று கிருஷ்ணர் கட்டளையிட்டார்.
வெற்றிபெற்ற தன்னை தனக்குத் தேரோட் டிய கிருஷ்ண பரமாத்மாவே கைகளைப் பற்றிக் கீழே இறக்க வேண்டும் என்ற அர்ஜுனனின் கர்வத்தை அறிந்த இறைவன்,""அர்ஜுனா! உன் கர்வத்தை விலக்கு. நான் இட்ட கட்டளையை உடனடியாகச் செய்'' என்று அழுத்திச் சொல்ல, அர்ஜுனனும் கீழிறங்க, அடுத்த நொடியே தேர் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அர்ஜுனன் திகைத்து நின்றான்.
கிருஷ்ணன் புன்முறுவல் பூத்துச் சொல் கிறார்: ""அர்ஜுனா! பயம் வேண்டாம். வேண்டாத கர்வத்தை விட்டுவிடு. நான் உன்னைக் கீழே இறக்கிவிட வேண்டும் என்று நீ எண்ணினாய். வெற்றி வரும்பொழுதுதான் மனிதனுக்குப் பணிவு அவசியம் என்பதை முதலில் உணர்ந்து கொள். பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியர், துரியோதனன் போன்றோர் இட்ட அம்புக் கணைகள் நம் தேரில் குத்திட்டு நிற்கின்றன.
அந்த அம்புகள் அனைத்தும் மந்திர சக்திகள் நிறைந்தவை. நான் தேரை விட்டு இறங்கியவுடன் கொடியில் இருக்கும் அனுமனும் போய்விடுவான். அப்பொழுது மந்திர சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். பின் உன் கதி அதோகதிதான். அதனால்தான் உடனே தேரை விட்டு இறங்கச் சொன்னேன்.''
கிருஷ்ணரின் விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். கர்வம் கொள்பவனே மனிதன். நமது எண்ணங்களும், நமது எண்ணங்களை ஒட்டி உண்டாகும் கோப- தாபங்களும், கர்வம், அகங்காரம் போன்றவையே நமக்கு உண்டாகும் நோய்களுக்குக் காரணமாகும்.
நன்றி டாக்டர் துளசிராம்

மனிதத்தேனீயின் தேன்துளி



Tuesday 29 November 2016

கக்கன்ஜி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Malai Murasu Paper 29.11.2016 page 4


வல்லபாய் பட்டேல் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌺🌺🌺ஆளுக்கொரு அளவுகோல்-து.ராமராஜ்
🌺✍உலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது தான் ஆச்சரியம். “நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.
🌺✍இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா? இதில் யார் சரி, யார் தவறு? என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.
🌷குடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.
🌷நம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.
🌷நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், ஓய்வு எடுத்துக் கொண்டாலும், விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.
🌺✍நம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.
🌷நம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்குக் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.
🌷நம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.
🌷மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.
🌺✍தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம். எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே....” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”
🌺✍அந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”
அவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
🌺✍உலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.
🌺✍உலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம். அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.
--
அன்புடன்-து.ராமராஜ்
மாவட்ட பொருளாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி
நாமக்கல் மாவட்டம் (கிளை)🙏💐🌺
நன்றி ஆா் பாஸ்கர்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான். காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.
நேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.
அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,ஆறுதலான வார்த்தை,சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான்.கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சீனிவாசன்

மனிதத்தேனீயின் தேன்துளி



கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா கூட்டம்




Monday 28 November 2016

மகாகவி பாரதி பிறந்தநாள் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'நான்'தான்
--------------
ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய்தான் எனக் கூறி அதை விளக்கினார்:
ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன்.ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது.
வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது.
சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்பசெய்து கொண்டிருந்த நாய்,தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது.
அப்போதுதான் அது உணர்ந்தது,இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே.
இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.
நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது,'நான்'தான் என்பதை உணர்ந்தேன்.அந்த 'நான்'என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன்.
நன்றி ஆா் பாஸ்கர்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்...
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.
திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.
கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....
மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.
வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.
அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.
அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.
அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்.....
பிடித்திருந்தால் படித்துவிட்டு பகிரவும்...
நன்றி....டாக்டர் துளசிராம்

அம்பேத்கர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

👌👌👌👍👏👏👍👌👌👌
🚩🚩
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்

*பகவத் கீதை*
🚩🚩
யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
*கண்ணதாசன்*
🚩🚩
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
*A .P . J . அப்துல்கலாம்*
🚩🚩
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
*ஹிட்லர்*
🚩🚩
அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
*A .R . ரகுமான்*
🚩🚩
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
*நெப்போலியன்*
🚩🚩
கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
*புத்தர்*
🚩🚩
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
*காரல் மாக்ஸ்*
🚩🚩
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
*பில்கேட்ஸ்*
🚩🚩
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன்
இதயம்
இரும்பை விட வலிமையானது
*விவேகானந்தர்*
🚩🚩
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
*விவேகானந்தர்*
🚩🚩
தோல்விக்கு இரண்டு காரணம் ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
*ஸ்ரீ கிருஷ்ணர்*
🚩🚩
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
*சார்லி சாப்பிளின்*
🚩🚩
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
*Lion Francis Leonard*
🚩🚩
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
*Lion Francis Leonard*
🚩🚩
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
*Lion. Francis Leonard*
🌹🌹
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
*விவேகானந்தர்*
💚💚
எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே

*விவேகானந்தர்*