Wednesday 31 May 2023

நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

 நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது மல்யுத்தப் போட்டி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது, ஊரே அந்தப் போட்டியைப் பார்க்கக் கூடியிருந்தது.
அந்தப் பிராந்தியத்திலேயே பிரபலமாக இருந்த மல்யுத்த வீரர் அன்று ஊர், பெயர் தெரியாத ஒருவனிடம் தோற்றுப் போனார்.
கூடியிருந்த மொத்தக் கூட்டமும் தோற்ற மல்யுத்த வீரனைப் பார்த்து கேலி செய்து சிரித்துக் களித்தது. அடுத்த கணம் அந்தக் கூட்டமே அமைதிக்குள் உறைந்து போனது. ஆமாம் தோற்ற அந்தப் பிரபலமான மல்யுத்த வீரனும் கூட்டத்துடன் சேர்ந்து கைதட்டிச் சிரிக்கத் தொடங்கினார். அவரது சிரிப்பு ஆரவாரமாக இருந்தது. என்ன நடந்தது இந்த மனிதருக்கென்று நினைத்தேன்.
அன்றைக்குத் தோற்றுப் போன மல்யுத்த வீரர் எங்கள் வீட்டருகே உள்ள ஆலயத்தில்தான் தங்கியிருந்தார். அவரைத் தேடி அடுத்த நாள் போனேன். கூட்டத்தோடு சேர்ந்து அவரும் சிரித்ததை நான் மிகவும் ரசித்ததாகவும் விந்தையான மனிதர்தான் அவர் என்றும் தெரிவித்தேன்.
“நானும் எனது தோல்வியை எதிர்பார்க்கவேயில்லை. அதனால்தான் சிரித்தேன். நேற்று நடந்தது பெரிய கேலிக்கூத்து. அதை எண்ணியே சிரித்தேன்.”
அந்த மல்யுத்த வீரர், தன்னை எள்ளி நகையாடிய அந்தக் கூட்டத்தைப் பார்த்து சிரித்துதான் அவர்களை ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்தார். அதற்கு மிகுந்த தைரியம் தேவை. என்னைப் பொறுத்தவரை வென்றவர் அவர்தான். “நான் சிறுவன். ஆனால் நீங்கள்தான் வெற்றி பெற்றவர். உங்களை நான் மறக்கவே மாட்டேன்.” என்றேன்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறு நகரத்துக்குப் போயிருந்த போது அந்த வீரர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் வயதாகி மிகவும் தளர்ந்துவிட்டிருந்தார். “என்னை ஞாபகம் இருக்கிறதா உனது முகத்தை என்னால் மறக்கவே முடியாது. நான்தான் வெற்றியாளன் என்று தோற்றவனாய் நின்றிருந்த என்னிடம் வந்து சொன்ன குட்டிப் பையன் அல்லவா நீ” என்றார்.
*தோல்வியிலும் வெற்றியிலும் நீங்கள், நீங்களாகவே இருப்பதற்கு பெரும் தைரியம் அவசியம். பாராட்டிலும் கண்டனத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எல்லாப் பருவ நிலைகளிலும் நீங்களாகவே இருப்பதற்கு அந்தத் தைரியம் மிகவும் தேவை.* ஓஷோ

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அங்கயற்கண் அம்மையின் அருள் பெற்ற பெருமகனே அனைத்துத் தரப்பினரும் போற்றும் பேருள்ளமே நேர நிர்வாகத்தின் முன்னோடியே பண்பாட்டுப் பல்கலைக் கழகமே எண்ணிப் பார்க்கிறோம் தங்கள் சீரிய பணிகளை நினைவுகள் மேலோங்க -மனிதத்தேனீ


 

பாராட்டி மகிழ்வோம்.

 பாராட்டி மகிழ்வோம்.

நேற்று நடைபெற்ற ஐ பி எல் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியில்
96 ரன்கள் அடித்த *சாய் சுதர்சன்*. தமிழகத்தைச் சேர்ந்த நமது நகரத்தார் சமூகத்தைச் சேர்தவர்.
விராமதி ஊர்காவலன் கோவில் தெய்வானை ஆச்சி மகள் வழிப் பேரன்.
காரைக்குடி வெங்கடாஜலம் செட்டியார் பேரன்.
தமிழகத்திற்குச் சிறப்புச் சேர்த்த துடிப்பான இளைஞர்
சாய் சுதர்சன்
வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்.
வாழிய பேராற்றல் - மனிதத்தேனீ


பாராட்டி மகிழ்வோம். இவர் நமது அன்புச் சகோதரர் டாக்டர் முருகன், ராகவேந்திரா மருத்துவ மனை அவர்களது மகன், மற்றும் நமது விருதுநகர் அரசு மருத்துமனையின் டீன் டாக்டர் சங்குமணி அவர்கள் மாப்பிள்ளை. எய்ம்ஸ் நடத்திய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான எம்.சி.எச் நுழைவுத்தேர்வில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஹரி நாராயணன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.



 

Tuesday 30 May 2023

அன்பே அபிராமி நூல் வெளியீட்டு விழாவில் மனிதத்தேனீ கருத்துரை 28.05.2023

தொல்லைகள் துன்பங்கள்.

 தொல்லைகள் துன்பங்கள்.

வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், "இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண வேண்டும்.
இடையூறுகள், அய்யப்பாடுகள், துன்ப துயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் வருவது இயல்பானதுதான். ஆனால், சிலர் அதிலே துவண்டு வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது.
ஆனால், வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்து போய்விடுகிறார்கள்.
எதையாவது சாதிக்கும் முயற்சியில் இறங்கினால், தடைகள் உறுதியாக குறுக்கிடத்தான் செய்யும். எல்லோருக்கும் இப்படி நேர்ந்திருக்கும். ஆனால், அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தி விடக்கூடாது.
பாதையில் சுவர் குறுக்கிட்டால், ஓட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் போகக்கூடாது, அதைத் தாண்டிப்போவது எப்படி என கண்டுபிடிக்க வேண்டும்.
வெற்றி எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. இடையிடையே தடைகள், மனச் சோர்வை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற சிக்கல்களெல்லாம் ஏற்படும்.
அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள்தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன.
அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள்கூட நமக்குத் தேவைதான்.
வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். அப்பப்பா, என்னுடைய முன்னேற்றத்துக்குத் தான் எத்தனை தடைகள். இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன். அதனால் தான் இன்று இந்த நிலையில் வாழ்கிறேன் என்பார்கள்.
பயணம் செய்யும்போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்க வேண்டும். தவறிப்போய் முள் குத்தினாலும் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடர வேண்டியதுதான்.
அதற்காக அங்கேயே அமர்ந்து விடுகிறோமா என்ன.
*நம்மைத் தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும்போது துவண்டு விடாதீர்கள். அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப் புள்ளி வைக்காதீர்கள்.*
*அதையும் மீறி நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றிப் பயணம் செய்யுங்கள்.*
*எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள். அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள். ஏனெனில்,
தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் கவியுள்ளம், திருநெல்வேலி நகரத்தார் சங்கத்தின் மேனாள் செயலாளர், திருச்செந்தூர் நகர விடுதி அழகிய கட்டிடம் கட்டும் பணியில் மேன்மையுடன் பணியாற்றிய அன்றைய துணைச் செயலாளர், பன்முகப் பேராற்றல் மிக்க நிதி மேலாண்மையாளர், வேந்தன்பட்டி
என். மோகனசுந்தரம்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


Monday 29 May 2023

மதுரைமணி 29.05.2023 பக்கம் 3


 

சொந்தக் காலில் நிற்க வேண்டும்.

 சொந்தக் காலில் நிற்க வேண்டும்.

நம்மில் பெரும்பாலோனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக ஆலோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்.
அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தவறில்லை. ஆனால், அதனை அப்படியே நகலெடுத்தது போலக் கடைப்பிடித்தல் கூடாது.
அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப்போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசிக்க வேண்டும்.
சில ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனநிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்.
அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சில ஆலோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்.
ஆனாலும், உங்கள் மனோபாவத்திற்கு பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
எல்லோரையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்தல் என்பது இயலாத செயல். 'எடுப்பார் கைப்பிள்ளையாக' இருக்காமல் நாமாகவே நல்லது எது, கெட்டது எது என்பதைச் சுயமாக சிந்தித்து ஒரு செயலில் இறங்க வேண்டும்.
*உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள், நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அல்லது கூற முயற்சி செய்யுங்கள்.*
*மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நினைத்தால் நம் கருத்தை என்றுமே கூற முடியாது, நம் கருத்தை முன்வைப்பதன் மூலமே மேலும் மாற்றுக் கருத்துகளை நம் தவறுகளை நாம் இனம் காண முடியும், அப்போது தான் நம் எண்ணங்களை, தவறுகளைச் சரி செய்து நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்.*
*உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால், முடிவு எடுப்பது என்னவோ நீங்களாகத்தான் இருக்க எண்டும்.*
*எதையும் சுயமாகச் சிந்தியுங்கள்.! ஆரோக்கியமாக வாழுங்கள்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அன்பே அபிராமி நூல் வெளியீட்டு விழா.

அன்பே அபிராமி
நூல் வெளியீட்டு விழா.
எழுத்தாளர், ஆடிட்டர், வரலொட்டி ரெங்கசாமி எழுதிய
அன்பே அபிராமி நூல் வெளியீட்டு விழாவில், இன்று காலை மடீட்சியா அரங்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். ஸ்ரீ மதி
தலைமை தாங்கி வாழ்த்தினார்.
சிவாகமம் ஆகம ஆசிரியர், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயம்,
சிவ ஸ்ரீ கார்த்திகேய சிவம் நூலினை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.
நூலின் முதல் படியை இதயங்கள் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்
மற்றும்
ஜெய கிருஷ்ணா பிளவர் மில்ஸ் உரிமையாளர் ஆர் கே மோகன்
பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஆடிட்டர் இரா. சுந்தரம் அறிமுக உரை ஆற்றினார்.
நூலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றினார்.
பார்வையாளர்கள் சார்பில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்,
நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். மீனாட்சி சுந்தரம் பேசினர்.
மூத்த வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் விஜயன், பேராசிரியர் தீனதயாளன் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சுதேசி இயக்க ராஜாஜி உள்ளிட்ட நண்பர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

சமூக சேவகி பானுமதி சுவாமிநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.





















 

ஒப்பீடுகளால் பயன் இல்லை.

 ஒப்பீடுகளால் பயன் இல்லை.

ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்தது.
அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கைப் பார்க்கும் வரை..
அது கொக்கைப்
பார்த்து சொல்லியது.
நீ வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே. கருப்பா இருக்கும் என்னை எனக்குப் பிடிக்கலை என்றது.
கொக்கு சொன்னது. நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.. அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
காகமும் கிளியிடம் சென்று கேட்டவுடன் அது சொன்னது. உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலைப் பார்க்க அங்கு ஆயிரக்கணக்கான . ஜனங்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது .ம்ம்ம்.
இதுதான் மகிழ்ச்சி என்று.
அழகு மயிலே, உன்னைக் காண இவ்வளவு பேர். என்னைப் பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர், என்றது.
மயில் சொன்னது. அன்பு காகமே. நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.
ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்கச் செய்கிறது.
இந்த மிருகக் காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை ..
எனவே நான் யோசித்தது நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாகச் சுற்றி வரலாமே, என்றது.
இதுதான் நமது பிரச்சினையும்...
*"நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ளச் செய்கிறோம்."*
"நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை."
"அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை." இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்துச் செல்கிறது.
"ஒப்பீடுகளால்
யாதொரு பயனும் இல்லை."
உங்களை முதலில் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
"உங்களை உங்களைவிட யாரும் அதிகமாக நேசிக்க முடியாது".
*"இறைவனின் படைப்புகள் அனைத்தும் உயர்ந்தவை
ஒவ்வொரு விதத்தில்."*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 27 May 2023

எங்கள் சாரதி (வாகன ஓட்டுநர்), உதவியாளர் மூர்த்தி - அருண்மதி திருமண விழாவி...

சின்மயா மிஷன் நூல் வெளியீட்டு விழாவில் மனிதத்தேனீ உரை 08 05 2023

கிரடாய் அமைப்பு மதுரை நிர்வாகிகள் பணி ஏற்பு விழா.

 கிரடாய் அமைப்பு மதுரை நிர்வாகிகள் பணி ஏற்பு விழா.

இன்று இரவு மதுரை பார்சூன் பாண்டியன் ஹோட்டல் அரங்கத்தில் கிரடாய் (கட்டுமானத் துறை அகில இந்திய அமைப்பு) மதுரை சாப்டர் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது.
புதிய நிர்வாகக் குழுவின் சேர்மன் மேக்ஸ் புராபர்டீஸ் பி லிட் இயக்குனர் எஸ் எஸ். ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு விருந்தினர் மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரஞ்சித் சிங் கஹ்லோன் ஐஏஎஸ் புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு செய்து வைத்து பேசினார், சிறப்பு விருந்தினர் டிஆர்டிஏ. திட்ட இயக்குநர் எஸ். சரவணன் ஐஏஎஸ் சிறப்புரை ஆற்றினார்.
கிரடாய் தமிழ்நாடு தலைவர் விஷால் புரமோட்டர்ஸ் சேர்மன் ஆர். இளங்கோவன், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் அருட்செல்வர் எஸ். சீத்தாராமன் வாழ்த்துரை வழங்கினர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், நகைச்சுவை அரசு பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலா 27 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினர்.
புதிய தலைவர் விஜய தயா ரியல்டர்ஸ் சேர்மன்
எஸ் ஆர். முத்து விஜயன் ஏற்புரை ஆற்றினார்.
செயலாளர் எனர்ஜி லிங்க்ஸ்கேப்ஸ் யோகேஷ் திருக்கொண்டா ஈஸ்வரலால், பொருளாளர் ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி. ஜெயக்குமார், துணைத் தலைவர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் பொது மேலாளர் எஸ். ஸ்ரீ குமார், துணைச் செயலாளர்கள் அண்ணாமலையார் பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம். அழகப்பன், பிரைம் புரமோட்டர்ஸ் இயக்குநர் ஜெய்த் உமர் , துணைத் தலைவர் கிரியேட்டிவ் கன்ஸ்ட்ரக்ஷன் சேர்மன்
பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டு விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
அரங்கம் முழுவதும் பங்கேற்றவர்கள் அமர்ந்து கேட்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் சிறப்பான உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
கட்டுமானத் துறையில் புதிய வரலாறு மலர்கின்றது, தொடர்கின்றது.
வாழிய குடியிருப்பு வீடுகள், வளாகம் உள்ளிட்ட நிறுவனங்களின் பணி.