Wednesday 28 February 2018

தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளைக்கார #நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் #கார்த்தி_சிதம்பரம் தப்பி ஓட முயன்ற போது #சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்... சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பல கொள்ளைக்கார கும்பல்கள் அதிர்ச்சி.....

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நமது அஞ்சலி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


பேருள்ளம் வாழியவே சித.வெ.கண்ணப்பன் (எ) ராஜாமணி செட்டியார் இன்று காலமானார்


யுகாதி திருநாள் தெலுங்கு வருடப் பிறப்பு அழைப்பிதழ்


அலவாக்கோட்டை கண்ணப்பச் செட்டியார் 84 காலமானார்.

அலவாக்கோட்டை கண்ணப்பச் செட்டியார் 84 காலமானார்.
திருநகரில் நீண்டகாலமாக இருந்து வந்த அலவாக்கோட்டை கண்ணப்பச் செட்டியார் என்ற ராஜாமணி செட்டியார் இன்று காலை 7-45 க்கு இறைவன் திருவடி அடைந்த செய்தியறிந்து கவலையுற்றேன். இன்று மாலை 4மணிக்கு அலவாக்கோட்டையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. - மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்*
இன்று பலரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் மனஅழுத்தச் சிறையில் அதிகம் சிக்கித் தவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதற்கு, இன்று அதிகரித்து வரும் நகர மயச் சூழல் ஒரு முக்கியக் காரணம். இன்று நம் மீது அதிகம் சூரிய ஒளி படுவதில்லை, சுத்தமான காற்றை அதிகம் சுவாசிப்பதில்லை, கண்கள் குளிர பசுமைச் சூழலை பார்ப்பதில்லை.
இவையெல்லாம் நம் மூளையில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எழில் கொஞ்சும் இயற்கை, மூளைக்கு இதம் அளிக்கிறது என்றால், கச கசப்பும் பர பரப்பும் நிறைந்த நகரச் சூழல், மூளைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இன்று இந்தியாவில் 40 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் தான், அதிகரித்து வரும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பட படப்பு, தற்கொலை உணர்வு போன்ற பல்வேறு தீமைகளுக்கு மூலவேர் என்பதை நாம் உணர வேண்டும்.
சரி, மனஅழுத்தத்தில் இருந்து எப்படித் தப்பிக்கலாம்?
நிபுணர்கள் கூறும் சில ஆலோசனைகள் இதோ...
*ஆரோக்கியமான, சரியான அளவு உணவு, மூளைச் செயல் பாட்டை ஊக்குவித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.* சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை, பதப் படுத்திய உணவு போன்றவற்றைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இறைச்சி புரதத்தைக் குறைக்க வேண்டும். புளிக்க வைத்த தயிர் போன்ற உணவுகள் செரிமானத்துக்கும், மூளைக்கும் நல்லது.
* தினந் தோறும் இரவு 7 முதல் 9 மணி நேரம் உறங்குவது மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது, மன நிலையை மேம் படுத்துகிறது.
* தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஏதாவது உடல் உழைப்பு சார்ந்த விஷயத்தில் ஈடு படுவது, மன அழுத்தத்தைத் துரத்துகிறது, உடலெங்கும் உற்சாகத்தைப் பரப்புகிறது. யோகாசனம், பிராணாயாமம் போன்றவையும் நன்கு பலன் தரும்.
* மன அழுத்தம், மன நெருக்கடியைக் குறைப்பதில் தியானத்தின் பங்கை பல ஆய்வுகள் தற்போது நிரூபித்திருக்கின்றன. 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்தாலே, மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு கட்டுப் படுகிறது, ரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் மிதமாகிறது, மூளையின் நலத்துக்கு உதவுகிறது.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ, எவை எல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ, எவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ, அவை அனைத்தும் நமக்குக் கிடைக்க முயற்சி செய்வோம். ஆனந்தத்துடனும் உற்சாகத்துடனும்.
 கற்றுக் கொண்டே இருக்கிறோம் கடைசி வரை வாழ்க்கை பாடத்தை. புரிந்து திருத்திக் கொள்வதில் இருக்கிறது அவரவர் வாழ்வின் வித்யாசம்.
 சில சமயம் நமக்கு திடீரென்று வரும் உடல் நலக் குறைவு மனதையும் ரொம்பவே பாதித்து விட்டு செல்கிறது.
 தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப் படாத மனிதன் எவனோ, அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
 நம் மீதான நல்ல எண்ணங்களை, பிறரிடத்தில் நாம் இழந்த பின், விவாதத்தை ஜெயிப்பதில் மட்டும் என்ன லாபம்?
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

மேலூர் உறங்கான்பட்டி கயல்விழி பள்ளியின் 28 ஆம் ஆண்டு விழாவில்.





Tuesday 27 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

📚தெரிந்து கொள்வோம்🐢 மூளையை உடம்பிலிருந்து எடுத்துவிட்டாலும் உயிர் வாழும் ஒரே உயிரினம் ஆமை.
🐍பாம்பு முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகள் பெரிதாக வளரும் தன்மையுடையவை.
🐀நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை எலிகள் அழிந்து விடுகின்றன.
🐘 யானை நம் அருகில் வரும் வரை அதன் காலடி ஓசை நமக்கு கேட்பதில்லை. ஏனென்றால் யானையின் பாதத்தில் சதையும் கொழுப்பும் நிறைந்து கனமான மெத்தை போல் இருக்கின்றது.
🐷 நீர் யானை கொட்டாவி விட்டால் அது கோபத்துடன் இருக்கிறது என்று அர்த்தம்.
🦁ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.
🐳ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கலம், 4 டன் உணவு உண்ணும்.
🐢 கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
🐬டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும் காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
🐡 அனைத்து உயிரினங்களும் தலை இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும். ஆனால், 'கடம்பா' என்றொரு மீன் வகை வால் இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும்

மனிதத்தேனீயின் தேன்துளி


Monday 26 February 2018

தியாகி ஜார்ஜ் ஜோசப் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌗கோப தாபங்களால் அலைக்கழிக்கப் பட்டு, விருப்பு வெறுப்புகளால் பாதிக்கப் பட்டு, வெற்றி தோல்வியை அனுபவித்த பின்னர் கிடைத்ததே பலரின் மன அமைதி.
🌓நவீன உலகில் பலரும், முயற்சி இல்லாமல் வாழ்வில் அதிசயங்கள் நடக்க வேண்டும் என விரும்பும் சராசரி மனிதர்கள் தான்.
🌓தேவையற்ற சிந்தனைகளைச் சுமக்காதே. குழம்பாமல், தெளிவாகச் சிந்திக்கப் பழகு. மனதைக் கட்டுப் பாடுடன் அமைதியாக வைத்துக் கொள்.
🌓சுற்றியுள்ள அனைவரும் சுகமாக இருப்பது போலவும், நீங்கள் மட்டும் போராடிக் கொண்டு இருப்பது போல உள்ள மன நிலையே மன அழுத்தம் வரக் காரணம்.
🌓உங்களது உள் மனப் போராட்டம், ஓயாது தொடர்ந்தால், அது உங்களது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

திருக்குமரன் மகள் மணவிழா


நகரத்தார் சிவமடம் ஒப்படைப்பு நிகழ்வு


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் !
1000 சிவலிங்கமும் ஆறு வற்றும் போது தான் தெரியுமாம்....!!
சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே கோவில்கள் அமைந்திருந்தால் ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். அப்படி அமைந்துள்ள ஒரு இடத்திற்கு சென்றால் ஒரு வித மன அமைதி கிடைக்கும்.
🌊 இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை உணர்த்துவதற்காக இங்கே ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
🌊 கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் சால்மலா ஆற்றங்கரை அமைந்துள்ளது. இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான்.
🌊 மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான இங்கு தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த அத்தனை லிங்கங்களும் ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் உள்ளன. இவை அனைத்தையும் ஆற்றுநீர் வற்றும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.
🌊 இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது.
🌊 கோவில்களில் உள்ள லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வதுபோல இங்கு லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் செய்ய தேவையில்லை. ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம்தான். இதுதான் இங்குள்ள லிங்கங்களின் சிறப்பாகும்.
படித்தது.
நன்றி திரு Suresh Bharani.
நன்றி ராஜப்பா தஞ்சை

Aachi Vanthachu Ithal 16.02.2018 Page 132 & 133



திருநகர் நண்பர்கள்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிறகு பார்க்கலாம்
ஒரு உணவக உரிமையாளர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்க்கு வெளியே வீதியில் ஞானி வருவதை கண்டார்.
ஒரு உணவக உரிமையாளர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்க்கு வெளியே வீதியில் ஞானி வருவதை கண்டார்.
அவரிடம் ஏதாவது ஞானக்கருத்துகளை கேட்டுக்கொள்ளலாம் என இருக்கையிலிருந்து எழுந்து சென்று " ஐயா தாங்கள் எனக்கு ஏதாவது ஞான கருத்துக்களை வழங்க வேண்டும்" என்றார்.
அவரும் சில கருத்துக்களை அவனுக்கு சொன்னார்.
அவன் அதை கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளது ஆனால் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் வளர்ந்தவுடன் இந்த உணவகத்தை அவனிடம் விட்டுவிட்டு பிறகுதான் முயற்ச்சி செய்யமுடியும் என்றான்.
சரி பரவாயில்லை என்று சொல்லிய ஞானி அவனிடம் நான் பசியாக உள்ளேன் நான் உணவருந்தி ஓய்வெடுக்கவேண்டுமே என்றார்.அதற்க்கு அவன் சொன்னான் அதற்க்கென்ன ஐயா இதோ தெரு குழாயில் தண்ணீர் வருகிறது அதை குடித்துவிட்டு எதிரில் உள்ள மரத்தடியில் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான்.
சிரித்துகொண்டே தண்ணீரை குடித்துவிட்டு அவர் போய்விட்டார்.ஆண்டுகள் கடந்தது அந்த வழியே மீண்டும் ஒருநாள் ஞானி வந்தார்.இப்பொழுது உணவகம் வளர்ந்திருந்தது.உரிமையாளர் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை போடப்பட்டு அதில் அவனுடைய மகனும் அமர்ந்து உணவகத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.
ஞானியை பார்த்ததும் எழுந்து வந்த முதலாளி.எனக்கு இன்னும் ஏதாவது ஞானக்கருத்துகள் சொல்லவேண்டும் என்றான்.அவரும்சொன்னார்.அவன் சொன்னான் இப்பொழுது முடியாது என் மகனுக்கு தொழில் தெரியவில்லை கற்றுக்கொடுத்துவிட்டு பிறகு முயற்ச்சி செய்கிறேன் என்றான்.
அவர் சரி பரவாயில்லை எனக்குபசியாக உள்ளது என்றார் அவன் குழாயடியையும்,மரத்தையும் காட்டினான்.தண்ணீரை குடித்து விட்டு போய்விட்டார்.ஆண்டுகள் கடந்தது.மீண்டும் ஞானி வந்தார்.
முதலாளி இப்பொழுது கிழவன் ஆகிவிட்டான்.அவனுக்கு அவனுடைய மகன், உணவகத்தின் வெளியே ஒரு நாற்க்காலியை கொடுத்து உட்கார வைத்திருந்தான்.
ஞானியை பார்த்ததும் கிழவன் எழுந்து ஓடிவந்தான்.,ஞானக்கருத்துகள்கேட்டான்.சொன்னார்.அவன் சொன்னான்"இப்பொழுது முடியாது எனக்கு வயதாகிவிட்டது.
ஆண்டுகள் தாண்டி மீண்டும் வந்தார் ஞானி.முதலாளியை காணவில்லை.அவனுடைய புகைப்படம் மாலை போட்டு மாட்டப்பட்டிருந்தது. மகன் ஒரு நாயை கல்லால் அடித்து விரட்டிவிட்டு உணவகத்திற்க்கு உள்ளே போனான்.நாய் இவரை பார்த்ததும் ஓடி வந்து வாலை ஆட்டியது.
ஞானி அது யாரென்று புரிந்து கொண்டார்.தன்னிடம் இருந்த ஒரு தடியால் அதன் தலையில் ஒரு போடு போட்டார்.
நாய் இப்பொழுது பேசியது அய்யா நீங்கள் சொன்னதை நான் கேட்காமல் போய்விட்டேன் இப்பொழுது என் மகனே என்னை கல்லால் அடிக்கிறான்.நான் விடுதலையாக எதாவது ஞான கருத்துக்கள் சொல்லுங்கள் என்றது.
ஞானி கருத்துக்கள் சொன்னார்.அதற்க்கு நாய் சொன்னது.........
இப்பொழுது என்னால் முடியாது ஏனென்றால் இப்பொழுதுதான் எட்டு குட்டிகள் போட்டிருக்கிறேன் அது வளர்ந்தவுடந்தான் முயற்ச்சி செய்யவேண்டும் என்றது.
தடியால் இன்னொரு அடி போட்டார்.நாய் கத்திக்கொண்டே ஓடிசென்று குழாயடியில் வழிந்தோடும் நீரை குடித்துவிட்டு மரத்தடியில் படுத்துக்கொண்டது.
மனதின் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்று ஒத்திப்போடுதல்
ஓஷோ
நன்றி திரு லெட்சுமணன்

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌷நம்ம ரொம்ப முக்கியம்னு நினைக்கிற உறவுகள், நண்பர்கள் நம்மள புரிஞ்சிக் கிட்டு நம்ம கூடவே இருந்தால் அது தான் வாழ்க்கையில் மிகப் பெரிய வரம்.
🌷தவறு செய்யும் மனிதர்கள் தன் மனசாட்சிக்கு கட்டுப் படாதது தான் காரணமே.
🌷நம் பேச்சுக்கு நமக்கே தெரியாத பல்வேறு அர்த்தங்கள் உள்ளதை நம் உறவினர்களின் மூலம் அறிய முடிகிறது.
🌷ஒரு வெற்றி எதிரில் இருக்கும் வலிமையானவர்களை எளியவர்களாகவும், ஒரு தோல்வி எதிரில் இருக்கும் எளியவர்களை வலிமையானவர்களாகவும் நினைக்க வைத்து விடும்.
🌷கிடைக்காதவற்றைத்
துரத்துவதும். கிடைத்ததை
மதிக்காததும் தான் கவலைக்குக் காரணம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன
நன்றி அரு. சொக்கலிங்கம்

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது