Tuesday 31 May 2022

ஆளுமைத்திறன் நேர்த்தியான உழைப்பு.

 ஆளுமைத்திறன்

நேர்த்தியான உழைப்பு.
''வேலையில் தரம், திறமை என்பதெல்லாம் ஒருநாளும் நேர்ச்சியாகக் கிடைப்பதில்லை. அறிவுத்திறன் ஆளுமைத் திறன் மற்றும் தொடர்முயற்சியால் மட்டுமே அது கிடைக்கும்’' - என்று அழகாகக் கூறியிருக்கிறார் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளர் ஜான் ரஸ்கின் (John Ruskin)... (நேர்ச்சி- தற்செயல்)
எந்தத் தொழிலாக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்த இடம் கிடைத்து விடுவதில்லை. உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானே வருவதுமில்லை.
*அறிவுத்திறன், சூழ்நிலைக்கேற்ப செயல்படும் மிகைத் திறன்,தொடர் முயற்சி, கடின உழைப்பு, இவை அனைத்தும்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும்...*
அது இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய கப்பல் நிறுவனம். இரண்டு மாத காலமாக அவற்றில் ஓரிடத்தில் மட்டும் சிக்கல் ஏற்பட்டது. சடுதியில் ஒருநாள் கப்பலின் முதன்மை பாகத்தில் ஒரு இயந்திரம் இயங்காமல் நின்றுவிட்டது.
எவ்வளவோ முயற்சித்தும் நிறுவனத்தின் பொறிமுறை நிறைஞர்களால் என்ன பழுதானது என்பதைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை... (பொறிமுறை நிறைஞர்- இயந்திரவியல் நிபுணர்/ Engineer)
கப்பல் கடலில் தொடர்ந்து பயணம் செய்தால்தான் நிறுவனத்துக்கு பயன் ஈட்டவியலும். இயந்திரத்தைப் பழுதுநீக்க பல பொறிமுறை நிறைஞர்களை வரவழைத்துப் பார்த்தார்கள், அவர்களும் வந்து முயற்சித்தும் பயனற்றுவிட்டது.
இந்தநிலையில்தான் ஓர் அதிகாரி தகவலொன்றை தயங்கித் தயங்கிக் கூறினார்.
அய்யா...!, நார்விச் (Norwich) நகரத்தில் வயோதிகர் ஒருவர் இருக்கின்றாராம். இயங்காமல் நிற்கின்ற எந்த இயந்திரத்தினையும் செயல்படச் செய்வாராம், வேண்டுமானால் அவரை அழைப்போமா என்றார்.
இயந்திரம் இயங்கினால் போதும். அழைத்து வாருங்கள் என்றார் அந்த கப்பலின் உரிமையாளர். அடுத்த நாளே அவரும் வந்துவிட்டார்.
அவருடைய தோளில் ஒரு பெரிய நூற்பை தொங்கிக்கொண்டிருந்தது. கண்டாலே உபகரணங்களை நிறைந்திருக்கும் நூற்பை (Tool Bag) என்பது புரிந்தது, அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக கப்பலின் பழுதான இயந்திரத்திற்கு அருகே சென்றார்.
இயந்திரம் முழுவதையும் கவனமாக ஆராய்ந்தார். அனைத்தையும் ஆராய்ந்த பிறகு அந்த முதியவர் தன் உபகரண நூற்பையைத் திறந்தார், அதிலிருந்து ஒரு சிறிய சுத்தியலை எடுத்தார். இயந்திரத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுத்தியலால் மெதுவாக அடித்தார்.
அவ்வளவுதான் கப்பலின் இயந்திரம் பழையபடி சீராக இயங்கத் தொடங்கிவிட்டது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கப்பல் நிறுவன உரிமையாளர்ளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வியந்தனர்.
அந்த முதியவர் `நான் வீட்டுக்குச் சென்று செய்கூலியை கணக்கிட்டு தாளில் எழுதி அனுப்பி வைக்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரண்டே நாட்களில் அவர் இயந்திரத்தைச் சீரமைத்ததற்கான பட்டியலும் வந்தது.
மொத்தம் 10,000 யூரோ பணம் கேட்டிருந்தார், பலரால் இயலாத பழுதுதான். ஆனால், ஒரு சின்ன சுத்தியலால் ஒரே ஒரு இடத்தில் தட்டியதற்கு 10,000 யூரோ என்பது அதிகமில்லையா...?, இதை அப்படியே ஒரு கடிதமாக எழுதி, முதியவருக்கு அனுப்பி விளக்கம் கேட்டார்கள்.
அந்த வயோதிகரிடமிருந்து பதில் வந்தது. `நீங்கள் கேட்டிருக்கும் விளக்கம் நியாயமானதுதான். சுத்தியலால் தட்டியதற்கு கூலி வெறும் 2 யூரோதான். ஆனால்!, எங்கே தட்ட வேண்டும் என்று நான் தெரிந்து வைத்திருப்பதற்கான கூலி 9,998 யூரோ என்றாராம்.
அறிவுக்கூர்மையும். ஆளுமைத் திறனும் இல்லாவிட்டால் நம்மால் எடுத்த செயலை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க இயலாது.
சிந்தனையாற்றல் உள்ள அறிவை எப்பொழுதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் நம்மால் மிகையாகச் சாதிக்கவியலும். நம் குறிக்கோள்களையும் விரைவில் அடைய முடியும்.
கடுமையாக உழைப்பதைக் காட்டிலும் திறமையாக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இக்கட்டான சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முடிவு எடுப்பதை விட, அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், நிதி நிறுவன மேலாண்மையாளர், சென்னை மற்றும் கோவையில் நிதி நிறுவனங்கள் நடத்தும் ஆற்றல் மிக்கவர், தனது பெரும் முயற்சியில் நகரத்தார் புள்ளிகள் கணக்கெடுப்பில் சிகரம் தொட்ட கணினித் துறை வல்லுநர், வளரும் தலைமுறைக்கு கல்வி உதவி நிதியாக அள்ளித் தரும் கொடையாளர், ஆறாவயல் ஒ. சோமசுந்தரம் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


Monday 30 May 2022

நல்ல சிந்தனைகள்.

 நல்ல சிந்தனைகள்.

எண்ணங்கள் மனிதர்களை
ஆக்கிரமிக்கும் வல்லமை பெற்றவை. எந்த அளவுக்கு ஒருவருக்கு உயர்வான எண்ணங்கள் வாய்க்கிறதோ
அந்த அளவுக்கு அவரிடமுள்ள
தாழ்வான எண்ணங்கள் அகலுகின்றன.
எண்ணங்களைப் பற்றிய மதிப்பீடு அதனை மதிப்பிடும் நபர்களைப் பொறுத்து மாறுபடக்கூடியது.
எது உயர்ந்த எண்ணம், எது தாழ்ந்த எண்ணம் என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டியது அவசியம்.
ஒருசிலர் தாம் எண்ணியிருப்பதே சிறந்தது என்று வாழும் காலம் வரை எண்ணிக் கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு தமது
எண்ணங்களுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதே தெரிவதில்லை.
அதே நேரம் சிலர், உயர்வான எண்ணம் எது என்று தெரிந்தபிறகும், தாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரி என்று வாதிடுவர். அதற்குக் காரணம் அவர்கள் பாரபட்ச மனதுடையவர்களாக இருப்பார்கள்.
ஒரு இடத்தை வெளிச்சம் அடையும் வரை அந்த இடம் இருட்டாகவே இருக்கும், அது போன்றதே மனிதர்கள் மனத்தில் உயர்வான எண்ணங்கள் நிறையும் வரை அது தாழ்வான எண்ணங்களின் கூடாரமாகவே இருக்கும். உயர்வான எண்ணங்களை அளவிடமுடியாது என்றாலும் ஒருவர் பிறரை நடத்தும் பாங்கு இதன் பாற்பட்டே அமையும்.
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறான புதிது புதிதான சேர்க்கை, தனிநபர் மனத்திலும் நல்ல சிந்தனைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கும். இவ்வாறான நல்ல சிந்தனைகளின் வரவு உயர்வான எண்ணங்களையும் பிறப்பித்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு மனிதர்கள் தாங்கள் நடத்தப்படும் விதங்களிலிருந்தும் தமது எண்ணங்களுக்கான ஊற்றை அடைகின்றனர்.
நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும் அவ்வளவு எளிதில் கைகூடாது. ஆனால், அதற்கான வழிமுறைகளை அறிந்து அதனை உருவாக்க எந்த அளவுக்கு தனிநபர்களும், நிறுவனங்களும் முயல்கிறனரோ அந்த அளவுக்கே குடும்பங்களின் அல்லது நிறுவனங்களின் வெற்றி அமையும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


உழைப்பும் தன்னம்பிக்கையும்.

 உழைப்பும் தன்னம்பிக்கையும்.

மற்றவர்களின் சோதனையான நேரங்களில் அவர்களுக்கு நாம் தரும் ஊக்கமே வெற்றிக்கு மருந்தாக அமைகின்றது.
ஊக்கமும்,பாராட்டும் தரப்படுகின்ற எந்த மனிதரும் தோற்க முடியாது.
டென்னிஸ் விளையாட்டில் சாதனை புரிந்து கொண்டு இருந்த போது ரேன்டி வாட்டர் என்பவர் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார்..இந்த நிகழ்வினால் அவர் தன வலது கையை இழந்தார்.
அப்போது அவரது பள்ளிக்கூடப் பயிற்சியாளர் ‘’வலது கை போனால் என்ன? இடது கை இருக்கிறது..
அதைக் கொண்டு நீ விளையாடலாம்.
உனக்குள் நிறைய திறமைகள் இருக்கிறது,,அது எனக்குத் தெரியும் என்று சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார்.
அவரின் மற்ற நண்பர்களும் அவரை உற்சாகப் படுத்தினார்கள். அவர்களது உற்சாகமான ஊக்கம் அவருக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது.
கடினமாக தன் இடது கையினால் பயிற்சி செய்து மனவுறுதியுடன் விளையாடி ஏராளமான பதக்கங்களையும்,
வெற்றிகளையும் டென்னிஸ் விளையாட்டில் பெற்றார்.
பிறரின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்துங்கள்,
மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கம் அளிக்கும் போது அவர்களின் சுயமதிப்பைப் பெறுக்குகிறீர்கள்,
தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள், அவர்களை உழைக்கத் தூண்டுகிறீர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கிறீர்கள்.
எனவே ஊக்கம் அளிப்பவராகவே இருங்கள், எப்போதும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 28 May 2022

வாழிய தம்பதியர். இன்று காலை எங்கள் இலுப்பைக்குடியில் நடைபெற்ற எனது சகலை சென்னை ஹைடெக் ஆப்செட் நிர்வாக இயக்குநர், கோனாபட்டு எஸ். ஆறுமுகம் என்ற செந்தில் - சேதுக்கரசி அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார். மற்றும் அரிமளம் எம் எஸ் எம். சோமு, இலுப்பைக்குடி டிரஸ்ட் கண்டனூர் அண்ணாமலை உள்ளனர்.





 

பாடமும் பாதையும் .

 பாடமும் பாதையும் .

அவமானத்தை வலியாய் எடுத்துக்கொள்ளாதீர்
வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
இங்கே கை தூக்கி விடுபவர்களை விட கையில் தள்ளி கீழே விழ வைப்பவர்களே அதிகம்.
எதிரில் நிற்பவரெல்லாம் எதிரியுமில்லை. தோளில் கையிட்டவனெல்லாம் நண்பனுமில்லை!இதை உணர்ந்து கொண்டவருக்கு கவலையுமில்லை.
வாழ்க்கை ஒரு "ஓவியம்" அல்ல, திரும்பத் திரும்ப வரைவதற்கு. அது ஒரு "சிற்பம்" செதுக்கினால் செதுக்கியதுதான்.
உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்.
கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்.
மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பதைப் பொறுத்தது.
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.
தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.
கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான். அதனதன் வலிமை அதனதன் உயரம்.
உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம்.
பிறரிடம் இருந்து எதையும் பிரபஞ்சம் உங்களுக்குப் பிடுங்கி கொடுப்பதில்லை.
உங்களுக்கானது உங்களை வந்தடையும், எனவே பிறரின் வளர்ச்சியைக் கண்டு மகிழுங்கள், வாழ்த்துங்கள். விரைவில் நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள்.
எந்த விஷயம் நீங்கள் செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடைபிடிக்க வேண்டிய தாரக மந்திரம் என்னால் முடியும் என்பது தான்.
ஒரே நாளில் எதுவும் கிடைத்து விடாது. ஆனால் ஒரு நாள் எல்லாம் கிடைக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Friday 27 May 2022

நிம்மதியும் அமைதியும்.

 நிம்மதியும் அமைதியும்.

மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக்கழிக்கிறது. ஏனெனில் அமைதியாக இருக்கிறபோதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது.
ஒரு அமைதியான சூழலில், நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பது எளிது; ஆனால்!, மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில் அமைதியைத் தேடுவது கடினம்.
நாம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளேயே தேடக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முள்ளேயே உறைந்திருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் கண்டு பிடித்தால், வெளிப்புறச் சூழ்நிலை நம்மைப் பாதிக்காது.
சிலநேரம் நாம் அனைவரும் ஆசை, காமம் பற்றி தேவையற்ற சிந்தனைகளால் மனதின் அமைதியைக் கெடுக்கிறோம். மனதை அமைதிபடுத்துவதற்கு அதன் போக்கிலேயே சென்று வெல்வதே எளிமையான வழியாகும். அதனைச் செய்ய மனதை இனிமைப் படுத்த வேண்டும்...
அமைதியை மனமே ஏற்படுத்த வேண்டும். உலக அமைதியில் மட்டுமல்ல உள்ளூர் அமைதியிலும் நமது மனமே அதிகமாய் ஒரு மந்திரச் சாவியை வைத்திருக்கிறது...
அமைதியில்லாமல் தவிப்பவர்களில் பலர் குழம்பிய குட்டைகளாகவே இருப்பார்கள். ஆழம் குறைந்த குட்டைதான் என்றாலும் அது கலங்கியிருந்தால் அதன் அடியில் இருப்பது எதுவும் நமக்குத் தெரியாது...
ஆனால்!, தெளிவாக இருக்கின்ற நீர்நிலை ஆழம் மிகுந்திருந்தாலும் அதன் அடியில் இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
புறச்சூழல் எப்படியிருந்தாலும் அமைதி வெளியே இல்லை; நம் அகத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைதி'' என்றால், நம்மைச் சுற்றி, சிக்கல்கள் ஏதுமற்ற அமைதியான சூழல் அல்ல.
மாறாக, நம்மைச்சுற்றி அச்சுறுத்தும் சிக்கல்கள் இருந்தாலும், உள்ளத்தில் உணரும் அமைதியே, உண்மையான அமைதி

மனிதத்தேனீயின் தேன்துளி

 


வாழிய பல்லாண்டு இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர், பேராற்றல் மிக்க எழுத்தாளர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, அனைவரிடமும் உள்ளன்புடன் பழகும் பண்பாளர் கோ. ஏகாம்பரம் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

Thursday 26 May 2022

வாழிய பல்லாண்டு


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஏமாறுவதும் ஏமாற்றுவதும்.

 ஏமாறுவதும் ஏமாற்றுவதும்.

அந்தந்த நொடியை அழகாய் வாழ்ந்து விட
எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை.
சிலர் மட்டும் அப்படி அமையும் வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை.
பொறுமை என்பது அவசியமான ஒன்று
விதைத்தவுடன் எவராலும் அறுவடை செய்து விட முடியாது.
எங்கேயும் எப்போதும் அள்பை உணர்தல் ஆகப்பெரும் மகிழ்ச்சி
அன்பிற்கு இனமில்லை.
அறிவுரைகள் எளிதில் கிட்டிவிடும்
அனுபவங்கள் அவமானங்களால் தான் வரும்.
கொண்டாட்டங்களின் குவியல் தான் இந்த வாழ்க்கை,
எதை எடுக்கிறோம்
எதைக் கொடுக்கிறோம்.
எப்படிக் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமே மாறுபடுகிறது.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது
நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொண்டது
எச்சரிக்கையுடன் இருங்கள்.
நீங்கள் உதிர்க்கும் வார்த்தையில்
உதிரம் இல்லை
ஆனால் உயிர் உண்டு.
தவறுகளுக்குச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம்
திருத்திக் கொள்ளாததற்கு சூழ்நிலை காரணமாகாது.
ஏமாறுவதற்கும்
ஏமாற்றுவதற்கும்
சிறு வித்தியாசம்
ஒருவரின் அலட்சியம்
மற்றவருக்கு அவசியம்.
கற்றுக்கொள்வதை விட
காயம்படுவதே அதிகம் இங்கே.
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்
என்றும் நினைவில் வையுங்கள்.
உதவாதவர்கள் உங்கள் வெற்றிக்குரியவர்கள்
என்றும் மறந்து விடாதீர்கள்.

Wednesday 25 May 2022

வாய்ப்புகளால் ஆனதே வாழ்க்கை.

 வாய்ப்புகளால் ஆனதே வாழ்க்கை.

நிகழ்வுகளையும் நினைவுகளையும் கொண்டாடுங்கள். அப்படிக் கொண்டாடப்படாவிடில் அது உங்களைக் கடந்து போய்விடும். வாழ்வு எப்போது கொண்டாட்டமாக உருவெடுக்கிறது? ஒவ்வொருவரும் தம் ஆற்றலை உணரும்போதுதான்.
அதே போல் வாழ்வில் முடிவுகள் எடுப்பதென்பது கொஞ்சம் கடினம்தான். நாம் எடுக்கும் முடிவுகள் சாதகமாகவோ பாதகமாகவோ நம்மைப் பாதிக்கும். இன்றைய உடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, நமக்குத் தேவையான பொருள்கள் வாங்குவது வரை முன்முடிவுகளுடனே பயணிக்கிறோம். முடிவுகள் குறித்த நம்பிக்கையின்மையே மனித ஆளுமையைப் பெரிதும் பாதிக்கிறது.
இதிலிருந்து வெளிவர ஒவ்வொரு மனிதரும் தம் சுயஆற்றலை உணர வேண்டும். அப்படி உணரும்போதுதான் வாய்ப்புகளைத் தேடவும் உருவாக்கவுமான திறன் பிறக்கும். வாய்ப்புகளால் ஆனதே வாழ்க்கை. ஒன்று இல்லையெனில் மற்றொன்று. சரியான முறையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறருக்குத் தேவைப்படும் சமயத்தில் ஆலோசனைகளை வழங்குங்கள். ஆனால் அவை நிச்சயம் பின்பற்றப்படும் என எதிா்பாா்க்காதீா்கள். எதிா்பாா்த்து ஏமாந்தால்தான் கோபம் வரும். அதனால் நம்மால் கொடுக்க முடிந்தததைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாகப் பயணிப்போம்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 51 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரி, சிறந்த சொற்பொழிவாளர், சிறந்த குடும்பத் தலைவி, வயதான உறவினர்களை பேருள்ளத்துடன் கவனித்திடும் நற்பண்பாளர், மதுரை மாதங்கி மகளிர் மன்றத்தின் மேனாள் தலைவி, கொப்பனாபட்டி சொல்லரசி
மலர்விழி பழனியப்பன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 92 இல் தடம் பதிக்கும் அறப்பணிச் செம்மல், நகரத்தார் சமூகத்தின் மூத்த முன்னோடி, தேவகோட்டை ஜமீன்தார்
சோம. நாராயணன் செட்டியார்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

ஆழ்ந்த இரங்கல். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் #இளைய_மன்னர், ஆன்மிக வாழ்வில் உயர்ந்த இளைஞர், மாநகர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி #ராஜா_குமரன்_சேதுபதி அவர்களின் திடீர் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறப்பு செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். ராமநாதபுரம் மன்னர் இளம் வயதிலேயே காலமானது சமஸ்தானத்திற்கும், அவரது குடும்பத்துக்கும் நமது தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கவலையுடன் - மனிதத்தேனீ

 


Tuesday 24 May 2022

ஆழமாக நம்புங்கள்.

 ஆழமாக நம்புங்கள்.

உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கைதான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும்...
அதே நேரத்தில் இலக்கு குறித்த தெளிவும் வேண்டும். இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்.
இலக்குகளைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளைச் சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.
இரண்டு பேர் ஒரு பெரிய மலைமுகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால்!, கண்முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது.
இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் நிறைந்த செங்குத்தான மலை முகடு. சில அடிகள் வேகமாக முன்னேறுகிறார்.
தடுமாறிக் கீழே விழ, சுற்றியிருப்பவர்கள் அவரை ஆசுவாசப்படுத்துகிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட இன்னொருவரைக் காணவில்லை.
அவரோ!, நிதானமாக ஒரு கயிறும், சில ஆணிகளும் எடுத்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக மலையை ஏற ஆரம்பிக்கிறார்.
பிறகென்ன! வெற்றி அவருக்குத்தான். இருவருக்கும் சமமான ஒரே களம்தான். கயிறுகளையோ பாதுகாப்பு உபகரணங்களையோ பயன்படுத்தக் கூடாது என யாரும் கூறவில்லை.
ஆனால்!, அவ்வளவு பெரிய மலையை ஏறுவதற்கு அவை மட்டும் போதுமா என்ன.முதலில் அந்த மலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.
அதோடு பாதுகாப்பாக உச்சியை அடையத் தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிக்கவும் வேண்டும். இதைத்தான் செய்தார் அந்த இரண்டாம் நபர்.
மலை ஏறும் பந்தயத்தைப் போலத்தான் நம் வாழ்வும் அதில் இணைந்திருக்கும். செய்வதைத் துணிந்து செய்யுங்கள். நீங்கள் செய்யும் செயலில் முழுமையான நம்பிக்கை உங்களுக்கே இல்லாத பொழுது அது எந்த தருணத்திலும் வெற்றியைத் தந்து விடாது.
வெற்றிதான் இலக்கு. அதை நோக்கித்தான் இந்த ஒட்டு மொத்த பயணமும். எந்த வேலையைத் தொடங்கும் போதும் வெற்றி பெறுவதற்காகத் தான் செய்கிறோம் என்பதை ஆழமாக நம்புங்கள்.
சிறுசிறு தோல்விகளில் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா எனப் பாருங்கள். தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடத்தை மீறி யாருடைய வெற்றிக் கதையும் அந்த அனுபவத்தைத் தந்துவிடாது.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Monday 23 May 2022

மாற்றுக் கருத்தின் மகத்துவம்.

 மாற்றுக் கருத்தின் மகத்துவம்.

எதிர் கருத்து உடையவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல
நமக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அனைவரையுமே நல்லவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது
இந்த வாழ்வு சற்று விசித்திரமானது. நாம் சொல்லும் கருத்துக்கும் நாம் வாழும் வாழ்வுக்கும் யார் துணை நிற்கிறார்களோ அவர்களையே நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறோம். அதிலிருந்து மாறுபட்டு நினைப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு எதிரியாகவே தெரிகிறார். மாறுபாடு உள்ள கருத்துடையவர்கள் எல்லோரும் நம்மீது அன்பு செலுத்தாதவர்கள் என்று சொல்ல இயலாது. நமக்கு மிகப் பிடித்தவர்கள் நிச்சயமாக நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல மாட்டார்கள். அந்தவகையில் நாம் செல்லும் பாதையில் தவறு என்றால் அதை சுட்டிக் காட்டுபவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.நண்பர்களை விட நாம் எதிரியாக கருதும் நபர்கள் அதை மிகச்சரியாக செய்வார்கள்.ஒருமுறை நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் போதே நாம் நல்லவர்களிடமிருந்து விலகி வந்து விடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்ற மனோபாவமே நமது ஒவ்வொரு தவறுக்கும் காரணமாகிவிடுகிறது. அதுவே நமது அடுத்தடுத்த தவறுகளுக்கும் அஸ்திவாரம் போட்டு விடுகிறது.
அனைவரோடும் இணைந்து வாழும் வாழ்வு தான் நமக்கு எப்போதும் இனிய நினைவுகளையும் இனிய நிகழ்வுகளையும் தரும். அந்த வாழ்வு சாத்தியமாக வேண்டும் என்றால் நமது எதிரிகளாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களையும் நாம் ஏற்க வேண்டும். மிகப்பெரிய அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் எல்லா துறையில் இருக்கக்கூடிய ஜாம்பவான்கள் அனைவரும் முதலில் தனது நிலை குறித்து எதிரிகள் என்ன நினைக்கிறார்கள் என்று அறியவே ஆசைப்படுவார்கள். அதற்காகவே பல்வேறு காலகட்டங்களில் இந்த மண்ணில் வாழ்ந்த மாபெரும் தலைவர்களும் மன்னர்களும் தனக்கு அருகிலேயே தன் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டும் அமைச்சர்களையும் அமைச்சர்கள் வடிவிலிருந்த நல்ல நண்பர்களை வைத்திருந்தார்கள்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்
என்பார் வள்ளுவப் பெருந்தகை.
மாற்றுக் கருத்துக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் இந்த உலகிலே மிகப்பெரியதாக சாதித்ததாக வரலாறுகள் இல்லை. மாறாக அவர்களின் உயரத்திலிருந்து சரிந்து விழுந்து இருக்கிறார்கள்.நல்லவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் வந்தால் மட்டுமே நாம் மனிதர்களாக இருக்க முடியும். அதன் வழியாகவே இந்த சமூகத்தை வழிநடத்தும் தலைவராக முடியும்.
ஆதரவாகப் பேசும் அனைவரையுமே நண்பர்கள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நிச்சயமாக அவர்களில் நல்ல நண்பர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களில் பலர் நாம் வகிக்கும் பதவிக்காகவும் ,நாம் வைத்திருக்கும் பணத்திற்காகவும் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயமாக அவர்களை நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் நாம் கொண்டு வர இயலாது. அவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்தான். துரோகிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்களின் பேச்சை நாம் கேட்கத் தேவையில்லை.
ரத்தம் வருகிறது என்று சொன்னால் காலில் குத்திய முள் வெளியேறிவிட்டது என்று சொல்வார்கள் கிராமங்களில். அதுபோலவே நமது கருத்து உடைகிறது என்று சொன்னால் அந்தக் கருத்தில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அந்த தவறுகளை திருத்திக் கொண்டு நாம் மீண்டும் சொல்லும் போது நிச்சயமாக அந்த சொல்லுக்கு மிகப்பெரிய வலிமை இருக்கும். அந்தச் சொல்லையே பகைவர்களையும் நேசிக்க வைக்கும்.
வெல்லும் சொல்லைச் சொல்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றுவோம்

 


நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.

 நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.

வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை என்றும் மறவாதீர்கள். ஒன்று மற்றவர் உழைப்பில் வாழக் கூடாது, இரண்டு மற்றவர் சிரிக்கும்படி வாழக் கூடாது.
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதீர்கள். உங்கள் மனநிறைவுக்காக உங்களுக்குப் பிடித்ததை பெருமையோடு செய்யுங்கள்.
யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.
எல்லோரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள ஏதேனும் ஒன்று இருக்கும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 67 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அறப்பணிச் செம்மல், சிறந்த குடும்பத் தலைவர், சமூக வலைதளங்களில் நற்சிந்தனை தரும் பேருள்ளம், கண்டனூர் வீர. நாராயணன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்.

 வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்.

ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.
விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.
அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதைப் பார்த்து , அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?, என ஆதங்கமாகக் கேட்டார்.
*"எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது",* என அப்பா வருத்தமான குரலில்
சொல்லவே,
நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.
இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்... *"உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?".*
"உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள்.
அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை.
ஆகவே தவறி விழுந்து விட்டது.
இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார்.
அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன்.
ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார்.
அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.
மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
*"உறவுகளை உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன".*
*அப்பாவின் முப்பதுஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்கச் செய்திருக்கிறது*.
வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!
இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்
உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது.
காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல.
வீட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.
நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 21 May 2022

வெளிப்படைத்தன்மை இருக்கட்டும்.

 வெளிப்படைத்தன்மை இருக்கட்டும்.

உயர்வான சிந்தனைகளின் ஊற்றுக்கண் எது?
அனுபவம்‌ வாய்ந்த, பாரபட்ச
எண்ணம் இல்லாதவர்களிடம் பழகுதல், நிறைய நல்ல நூல்களை வாசித்தல், நல்ல நூல்களை
அடுத்தோர்க்கு அறிமுகம் செய்தல்,
சிறிது சிறிதாக நல்ல சிந்தனைகளைப் பரப்புதல், ஒவ்வொரு செயலின் பல்வேறு கோணங்களையும் உணர்தல்,
உடனிருப்போரின் நோக்கங்களைப்
புரிந்துகொள்ளுதல் போன்றவை எனப் பட்டியல் நீளூம்.
எவ்வளவு பெரிய நிறுவனமாக
இருந்தாலும் அதன் செயல்பாடுகளை தீர்மானிப்பவர்கள் ஒருசில நபர்களாகவே இருப்பர். அவர்கள் வெளிப்படைத் தன்மை உடையோராகவும், உயர்வான சிந்தனைகள் உடையோராகவும் அமைந்து விட்டால் அந்த நிறுவனத்தின் வெற்றி சிறப்பாக இருக்கும்.
சில நேரம் ஒருவரது நோக்கம் புரிந்துகொள்ளப்படாமல் அவருடைய செயல்கள் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கலாம். அதனால் தவறில்லை.
விமர்சனத்துக்கு ஆளாகாமல்
இருப்பதற்கு ஒரேவழி எந்தச் செயலையும் செய்யாமல் சும்மா இருப்பதுதான். சும்மா இருப்பதைவிட விமர்சிக்கப்படுவதே நல்லதல்லவா.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உண்மையின் உரைகல் மதுரையின் தூய உள்ளம், வேந்தன்பட்டி அழ. சோமசுந்தரம் மீட்புச் செம்மல் பழ. இராமசாமியை பாராட்டி மகிழும் இனிய வேளை. நேற்று இரவு ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர், மீட்புச் செம்மல், முப்பது ஐந்து ஆண்டுகளாக களப்பணி முன்னோடி, மாநகர் மதுரையின் மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி செல்லூர் அலுவலகத்தில் முதல் முறையாக சந்தித்து, அண்மையில் காசி சத்திர சிக்ரா நந்தவனம் மீட்புப் பணிகள் குறித்து நெகிழ்வுடன் நன்றி தெரிவிக்கும் மனிதத்தேனீ, உண்மையின் உரைகல், மதுரை நகரத்தார்களின் மூத்த முன்னோடி, கோரிப்பாளையம் அபிராமி மெடிக்கல்ஸ், வேந்தன்பட்டி அழ. சோமசுந்தரம், மதுரை நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க செயலாளர், தொழிற்சங்கப் போர்வாள், வேந்தன்பட்டி ஆர். மெய்யப்பன். வாழிய அறப்பணிகள். தொடரட்டும் மீட்பு வேட்டை.


 

மனதை மாற்றிய மந்திரச் சொல்.

 மனதை மாற்றிய மந்திரச் சொல்.

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது, ​​சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார்.
இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம் தருவார் என்று அவர் நினைத்தார். எனவே அவர் சென்று அந்த மனிதரிடம் பிச்சை கேட்டார்.
அந்த மனிதர் பிச்சைக்காரனைப் பார்த்து, "நீங்கள் எப்பொழுதும் பிச்சையெடுத்துக் கொண்டே இருப்பீர்கள், யாரிடமாவது ஏதாவது கொடுக்கிறீர்களா?"
பிச்சைக்காரன், "ஐயா, நான் ஒரு பிச்சைக்காரன், நான் மக்களிடம் பணம் மட்டுமே கேட்க முடியும், நான் எப்படி யாருக்கும் எதையும் கொடுக்க முடியும்?"
அந்த மனிதர் பதிலளித்தார், "நீங்கள் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாதபோது, ​​​​அப்படி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் ஒரு தொழிலதிபர் மற்றும் பரிவர்த்தனைகளை மட்டுமே நம்புகிறேன் - என்னிடம் கொடுக்க ஏதாவது இருந்தால், என்னால் கூட முடியும். பதிலுக்கு ஏதாவது கொடுங்கள்."
அப்போது, ​​ரயில் ஒரு ஸ்டேஷனுக்கு வந்தது, தொழிலதிபர் இறங்கிக் கிளம்பினார்.
பிச்சைக்காரன் அந்த மனிதன் சொன்னதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுடைய வார்த்தைகள் எப்படியோ பிச்சைக்காரனின் இதயத்தை எட்டின.
நான் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாததால், பிச்சையில் எனக்கு அதிக பணம் கிடைக்காது என்று அவர் நினைக்கத் தொடங்கினார். ஆனால் நான் ஒரு பிச்சைக்காரன், நான் யாருக்கும் எதையும் கொடுக்க கூட தகுதியற்றவன். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் எதையும் கொடுக்காமல் மக்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
ஆழ்ந்து யோசித்த பிச்சைக்காரன், தனக்கு பிச்சை எடுக்கும் போது ஏதாவது கிடைத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொடுப்பேன் என்று முடிவு செய்தான்.
ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், அவர் பிச்சை எடுப்பதற்கு ஈடாக மற்றவர்களுக்கு என்ன கொடுக்க முடியும்? நாள் முழுவதும் இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தது, ஆனால் அவரது கேள்விக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
மறுநாள் ஸ்டேஷன் அருகே அமர்ந்திருந்தபோது, ​​ஸ்டேஷனைச் சுற்றியிருந்த செடிகளில் பூத்திருந்த சில பூக்களில் அவன் பார்வை பட்டது. பிச்சைக்கு ஈடாக சில பூக்களை மக்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்று அவர் நினைத்தார்.
அவர் இந்த யோசனையை விரும்பினார் மற்றும் அங்கிருந்து சில பூக்களை பறித்துக்கொண்டு ரயிலில் பிச்சை எடுக்க சென்றார்.
யாராவது அவருக்கு தானம் செய்யும் போதெல்லாம், அவர் அவர்களுக்கு சில பூக்களைக் கொடுப்பார். அந்த மலர்களை மக்கள் தங்களிடம் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்.
இப்போது பிச்சைக்காரன் தினமும் பூக்களைப் பறித்து அந்த பூக்களை பிச்சைக்கு ஈடாக மக்களுக்கு விநியோகம் செய்கிறான்.
இப்போது நிறைய பேர் அவருக்கு தானம் செய்ய ஆரம்பித்து விட்டனர் என்பதை சில நாட்களிலேயே உணர்ந்தார். ஸ்டேஷன் அருகே உள்ள பூக்களை எல்லாம் பறித்து வந்தார். அவரிடம் பூக்கள் இருக்கும் வரை பலர் அவருக்கு தானம் செய்து வந்தனர். ஆனால் அவனிடம் இன்னும் பூக்கள் இல்லாதபோது, ​​அவனுக்கு அதிகம் கிடைக்காது. மேலும் இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.
ஒரு நாள் அவர் பிச்சை எடுத்தபோது, ​​அதே தொழிலதிபர் ரயிலில் அமர்ந்திருப்பதைக் கண்டார், அதன் காரணமாக அவர் பூக்களை விநியோகிக்கத் தூண்டப்பட்டார்.
பிச்சைக்காரன் உடனே அவனிடம் கை நீட்டி, "இன்று உனக்கு தானமாக கொடுக்க என்னிடம் சில பூக்கள் உள்ளன" என்றார்.
அந்த மனிதன் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தான், பிச்சைக்காரன் அவனுக்கு சில பூக்களை கொடுத்தான். அந்த நபர் அவரது யோசனையை மிகவும் விரும்பினார் மற்றும் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
"அடடா! இன்று நீயும் என்னைப் போல் *வியாபாரி* ஆகிவிட்டாய்" என்றார். பிச்சைக்காரனிடம் பூக்களை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இறங்கினான்.
ஆனால் மீண்டும் ஒருமுறை, அவன் வார்த்தைகள் பிச்சைக்காரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த மனிதர் சொன்னதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட ஆரம்பித்தார்.
அவரது கண்கள் இப்போது பிரகாசிக்கத் தொடங்கின, அவர் தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய வெற்றிக்கான திறவுகோல் இப்போது கிடைத்திருப்பதாக உணர்ந்தார்.
உடனே ரயிலில் இருந்து இறங்கி உற்சாகமாக வானத்தைப் பார்த்து, மிகவும் உரத்த குரலில், “இனி நான் பிச்சைக்காரன் இல்லை, நான் இப்போது தொழிலதிபர், அந்த மனிதரைப் போல நானும் ஆகலாம், பணக்காரனாகவும் ஆகலாம். ”
அவரைப் பார்த்ததும், இந்த பிச்சைக்காரனுக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம் என்று நினைத்தார்கள். மறுநாள் முதல் அந்த பிச்சைக்காரன் அந்த நிலையத்தில் மீண்டும் தோன்றவே இல்லை.......
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஸ்டேஷனில் இருந்து சூட் அணிந்த இரண்டு ஆண்கள் பயணம் செய்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது, ​​ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி, "என்னை அடையாளம் தெரிகிறதா?"
மற்றவர், "இல்லை! ஒருவேளை நாம் முதல்முறையாகச் சந்திக்கலாம்" என்று பதிலளித்தார்.
முதலாமவர் மறுபடியும் சொன்னார், "சார், நினைச்சுப் பாருங்க, நாம முதல் தடவையல்ல, மூணாவது தடவை சந்திக்கிறோம்".
இரண்டாவது நபர், "சரி, எனக்கு நினைவில்லை. இதற்கு முன் எப்போது சந்தித்தோம்?"
இப்போது முதல் நபர் சிரித்துக்கொண்டே, "இதற்கு முன்பு ஒரே ரயிலில் இரண்டு முறை சந்தித்திருக்கிறோம், வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று முதல் சந்திப்பில் சொன்ன அதே பிச்சைக்காரன் நான், இரண்டாவது சந்திப்பில் நான் யார் என்று சொன்னீர்கள். நான்."
"இதன் விளைவாக, இன்று நான் மிகப் பெரிய பூ வியாபாரி, அதே வியாபாரம் தொடர்பாக வேறு ஊருக்குச் செல்கிறேன்."
“முதல் சந்திப்பிலேயே இயற்கையின் விதியைச் சொன்னீர்கள்... அதன் படி நாம் ஒன்றைக் கொடுத்தால்தான் நமக்கு ஒன்று கிடைக்கும்.
இந்த பரிவர்த்தனை விதி உண்மையில் வேலை செய்கிறது, நான் அதை நன்றாக உணர்ந்தேன், ஆனால் நான் எப்போதும் என்னை ஒரு பிச்சைக்காரனாகவே நினைத்துக் கொண்டேன், அதற்கு மேல் உயர நினைத்ததில்லை.
நான் உங்களை இரண்டாவது முறை சந்தித்தபோது, ​​நான் ஒரு தொழிலதிபராக மாறிவிட்டேன் என்று சொன்னீர்கள். உங்களுக்கு நன்றி, அன்று முதல், எனது பார்வை மாறி, இப்போது நான் ஒரு தொழிலதிபராக மாறிவிட்டேன், நான் இனி பிச்சைக்காரன் அல்ல.
‘ *உன்னை* *அறிதல்* ’ என்பதை வலியுறுத்துதல்.
பிச்சைக்காரன் தன்னைப் பிச்சைக்காரனாகக் கருதும் வரை, அவன் பிச்சைக்காரனாகவே இருந்தான், அவன் தன்னை ஒரு வணிகனாகக் கருதியபோது, ​​அவன் ஒரு வணிக னாகவே மாறினான்.
*நாம் எதை நம்புகிறோமோ அதுவாக மாறுவோம்...*
நன்றி கோனாபட்டு சுப்பு