Wednesday 31 March 2021

மதுரை உலா நற்பணி மன்ற நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

 மதுரை உலா நற்பணி மன்ற நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

இன்று 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் கண்டு மகிழும் அருமை சகோதரர், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர், தினச்சோலை ஆசிரியர், கனகமகால் ரெ. கார்த்திகேயன் அவர்களுக்கு மனிதத்தேனீ கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த தருணம்.
அருகில் நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ. பாலு, கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன்,
பி. பன்னீர்செல்வம் மற்றும் புகைப்பட கலைஞர் ஆர்.சம்பத், வீடீயோ கிராபர் எம். செந்தில் குமார் உள்ளனர்.
வாழிய பல்லாண்டு.


புதிய இலக்கு, புதிய பாதை, புதிய வாழ்க்கை.

 புதிய இலக்கு, புதிய பாதை,

புதிய வாழ்க்கை.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு சரித்திரம். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கங்கள். ஒவ்வொரு நாளிலும் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமுதாயத்திற்கோ பயன்படாத நாட்கள், வெறும் பக்கங்களாகவே இருக்கும். இப்பக்கங்கள் கிழிக்கப்படும்; இல்லையெனில் பிறரால் கிறுக்கப்பட்டுவிடும். நம் பண்டைய தமிழ் மக்கள் போரில் சென்று எதிரியின் அம்புகளை நெஞ்சினிலே தாங்காத நாட்களை இம்மண்ணில் வாழாத நாட்களாக அறிவித்திருக்கிறார்கள். இதனைத் திருவள்ளுவர் “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தந்நாளை எடுத்து” என்று இரண்டடியில் அடிக்கோடிடுகிறார். எனவே, ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக வாழ்வதால் மட்டுமே நம் வாழ்நாள் பக்கங்களை அலங்கரிக்க முடியும்.
சாதனையான ஒரு வருடம் வேண்டுமெனில், வெற்றிகரமான மாதங்கள் அவசியம். வெற்றிகரமான ஒரு மாதத்திற்கு அற்புதமான வாரங்கள் அடிப்படை. அற்புதமான வாரங்கள் அமைய உழைத்து மகிழும் ஒவ்வொரு நாளும் அவசியம். அத்தகைய ஒவ்வொரு நாளையும் நட்சத்திரங்களைச் சேகரிக்கும் வானம் போல் சேகரிப்போம். நமது வாழ்க்கையையும் நம்பிக்கை நட்சத்திரமாக்குவோம். இதற்கான தீர்மானத்தை எவரிடமும் காப்பியடிக்காது, சொந்தமாக நிர்மாணிப்பவனே தனது தலைவிதியைத் தீர்மானிக்கிறான்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். அவரது பேச்சினை ஓர் அரங்கத்தில் வியந்து கேட்ட ஓர் இளைஞன், “ஐயா! கடந்த அரை மணி நேரம் உங்களால் எப்படி இவ்வளவு அற்புதமாக பேச முடிந்தது? என்றார். அதற்கு, *"நான் மேடையில் பேசிய அரை மணி நேரம் தான் என்னை நீ பார்த்தாய். அதற்காக நான் ஆறு நாட்கள் தயாரானதை நீ பார்க்கவில்லையே”* என்றார். ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறும் வீரனின் வெற்றி, அவன் சாதாரண நாட்களில் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கியுள்ளது. அதே போல், ஒரு மனிதனின் வெற்றி, அவன் ஒவ்வொரு நாளையும் வெற்றியாக்குவதில் தான் உள்ளது.
ஒவ்வொரு நாளையும் நமது செயல்பாட்டால் உயர்த்தும் போது, நாமும் உயர்கிறோம். ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் போது, “நான் சிறந்தவன்; இந்த நாள் பிறந்தது எனக்காக; இந்நாளில் நான் வெற்றியடைவேன், மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன், பிறருக்கு இன்று உதவி செய்வேன்; என்ற மந்திர வார்த்தைகளோடு பயணிக்கும் நாட்கள் வெற்றியான நாட்களாய் அமையும்.
அன்றைய நாளில் செய்ய வேண்டியது எவை? செய்யக்கூடாதது எவை எவை? என்று முந்தைய நாளில் திட்டமிட்டு இரவு தூங்கச் சென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்பார்த்தது போல் விடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

இன்று பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தி௫ப்பரங்குன்றம் அ௫ள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி - தெய்வானை தி௫க்கல்யாணத்தில் எழுந்த௫ள மதுரை அ௫ள்மிகு மீனாட்சிஅம்மன் -மற்றும் சுந்தரேஸ்வரர் சென்றுகொண்டுஇ௫க்கும் வழியில் அக்ரிணி மண்டகப்படிக்கு தர்சனம் தந்து பக்தகோடி பெ௫மக்களுக்கு அ௫ள்பாலித்தார்கள் 🙏🙏🙏 ஸ்ரீமீனாட்சிசுந்தரேஷ்வரர் நமஹ ஒம்நமச்சிவாய நமஹ நன்றி ஸ்ரீ ராம் கண்ணன்



 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 64 இல் தடம் பதிக்கும் வெள்ளை உள்ளம், திறந்த புத்தகம், நேர்படப் பேசும் அண்ணன், காரைக்குடி ஸ்டீல்ஸ் நிர்வாகி, உலகம் போற்றும் நகரத்தார் குழுவின் நிறுவனர், நாட்டரசன்கோட்டை இராம. சண்முகநாதன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். நலமே மேலோங்கட்டும் - மனிதத்தேனீ


 

மணவிழாவில் சிறப்பு நிகழ்ச்சி.

 மணவிழாவில் சிறப்பு நிகழ்ச்சி.

இன்று இரவு திருப்பரங்குன்றம்
ஸ்ரீ கிருஷ்ண மகாலில் நடைபெற்ற, திருநகர் எங்கள் வீட்டின் அருகில் உணவகம் நடத்தும் எஸ். புள்ளிக்குமார்-மீனாட்சி தம்பதியரின் மகன் பொன் சரவணன் -
சி. செந்தாமரைக் கண்ணன் - சிவசுந்தரி தம்பதியரின் மகள் கண்மணி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் முதல் நாள் வரவேற்பில் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நற்குடும்பத்தின் ஆனந்த வாழ்க்கை என்ற தலைப்பில்
45 நிமிடங்கள் சிறப்புரை.
அரங்கில் நிரம்பி இருந்த அனைவரும் மிகுந்த கரவொலி எழுப்பி கேட்டு மகிழ்ந்தனர்.
யாதவர் கல்லூரி முன்னோடி சிவராம கிருஷ்ணன், கொடிமங்கலம் நண்பர்
ப. பழனிச்சாமி, த. குபேரன், திருநகர் பேராசிரியர் முத்தையா, ட்வாடு குமார், பிஎல். சுப்பையா, நண்பர் ஜெயபால், கிருஷ்ணசாமி, எஸ் பி டி மாணிக்கராஜ், பரமசிவம், எல் ஐ சி எஸ். ராஜேந்திரன், அண்ணன் தேசிகன் உள்ளிட்ட ஏராளமான நண்பர்களை சந்தித்து மகிழ்ந்த தருணம்.
வாழிய மணமக்கள். - மனிதத்தேனீ














நண்பர்களே யார் அந்த நீதிபதி சைனி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

 _நண்பர்களே யார் அந்த நீதிபதி சைனி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்_

*_நீதிபதி ஷைனி_*
_கனிமொழி ராசா ஆகியோரை 2G வழக்குகளில் இருந்து விடுவித்தார்_.
*_நீதிபதி ஷைனி_*
_மாறன் சகோதரர்களை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்_.
*_நீதிபதி ஷைனி_*
_ப சிதம்பரத்தை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்._
*_நீதிபதி ஷைனி_*
_தொடர்ந்து 8வது முறையாக ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை Aircel Maxis வழக்கில் கைது செய்ய தடை வழங்கி இருக்கிறார்._
*_நீதிபதி ஷைனி க்கு , Y+ க்ரேட் பாதுகாப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப் பட்டது._*
*_நீதிபதி ஷைனி மகன் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்_*.
_வேற சொல்ல ஒண்ணும் இல்லீங்கோ!_

Tuesday 30 March 2021

புதிய சிந்தனை

 புதிய சிந்தனை

புதிய முயற்சி
புதிய பாதை
செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து வேறு முடிவை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.
மாடுகளில் இரண்டு வகையுண்டு
ஒன்று செக்கு மாடு
மற்றது வண்டி மாடு
இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால் அது சாலையில் நேராகச் செல்லாமல் தனது வீட்டையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள்.
மனித சோம்பலின் மனோபாவமும் அப்படித்தான் மாற்றிப் போகிறது
பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன.
இதைத்தான் பாரதி *தேடித் தினம் சோறு தின்று உறங்கும் இந்த வேடிக்கை மனிதரென* பாடினான்.
இதுவும் ஒரு சோம்பல் தான் அதனால் தான் அடிக்கடி *“மாத்தி யோசி”* என்றார்கள்.
மனித செயல்களிலும் மாற்றும் பயிர் போல மாறுபட்ட முயற்சிகளும் வேண்டும்.
இதைதான் இந்த பாமர மக்களின் சோம்பல் என்கிறார்கள்.
புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

இன்று இரவு.


 

துக்ளக் வாசகர்கள் குழு பதிவு.



 






துக்ளக் வாசகர்கள் குழு பதிவு.
M.no.1697
சோனியா ஜாமீன்ல இருக்காங்க*
*ராகுல் ஜாமீன்ல இருக்கார்* *ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார்*
*ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க*
*இதே மாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க*
*திமுக வுல*
*கனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2g கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி*
*மாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு*
*அதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு*
*தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள் தாம்*
*போதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது*
*தற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன*
*இவை மட்டும் அல்ல*
*இந்திய அளவில் மோடியை எதிர்ப்பவர்களில்*
*லாலு பிரசாத் மாட்டுத்தீவனத்தைத் திருடித் தின்ற வழக்கில் சிறையில் இருக்கிறார்*
*அவரது வாரிசுகள் அனைவர் மீது வழக்குகள் மற்றும் ஜாமீனில்தான் இருக்கின்றனர்*
*மாயாவதி மீதும் பல ஊழல் வழக்குகள்*
*அதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு*
*மமதா பற்றிக் கேட்கவே வேண்டாம் சாரதா ஊழல் வழக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார் பீவி*
*நமது சந்திரபாபு நாயுடு கலப்படபால் ஊழலில் மாட்டியதால் தான் மோடியை வசை பாட ஆரம்பித்தார்*
*இப்படி ஒவ்வொரு திருடர்களும் ஒன்று சேர்ந்து மோடி என்ற மகத்தான மனிதனை எதிர்க்கிறார்கள்*
*இவ்வளவு வழக்குகளிலும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு*
*60 வருட காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் நீதி அரசர்களின் லட்சணம் இது*
*சிறு உதாரணம்*
*ப.சி குடும்பத்தைக் கைது செய்ய விடாமல் 18 முறை ஜாமீன் வழங்கியது*
*பண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வங்கி அதிகாரிகளே பணத்தை மாற்றிக் கொடுத்தது*
*இது போன்று அடிமட்டத்திலிருந்து ஊழல்*
*இவற்றையெல்லாம் ஐந்து வருடத்தில் நிச்சயமாக கடவுளால் கூட சரி செய்ய முடியாது*
*அதற்குத் தேவையான இராஜ்யசபை பெரும்பான்மையும் மோடியிடம் இல்லை*
*எனவே தான் பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டிய நிலை*
*களைகளைக் களைவதே*
*பயிர்களைக் காக்கத்தான்*
*ஆனால், இங்கே களைகளையே பயிர்களாக நம்பும் ஒரு கூட்டம்*
*எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு *தமிழ்நாட்டில் அதிகம்*
*கட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள்*
*நடுநிலையானவர்களே வாக்களிக்கும் முன் ஒரே ஒரு முறை சிந்தித்துப் பாருங்க...

Monday 29 March 2021

அட்மிஷன் விண்ணப்பம் 01.04.2021

 மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 2021-2022 ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் அட்மிஷன் விண்ணப்பம் 01.04.2021 காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2021 மாலை 7 மணி வரை.https://www.kvsonlineadmission.kvs.gov.in என்ற வலைதளத்திலும் மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பவர்கள் https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ என்ற URL google play store ன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண்டு குடும்ப வருமானம் ரூ 8லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் OBC- NCL எனும் கோட்டாவிலும் ,ஒரே பெண்குழந்தை மட்டும் உள்ளவர்கள் SGC எனும் கோட்டாவிலும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பகிருங்கள் யாருக்கேனும் உபயோகமாகும்.
நன்றி வணக்கம்!💐

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 90 இல் தடம் பதிக்கும், மாநகர் மதுரையில் கடந்த எழுபது ஆண்டுகளாக நாளும் தமிழ்ப் பணியாற்றி, பக்தி இலக்கியங்கள் மேம்பட உழைத்து வரும் எங்கள் வணக்கத்திற்குரிய தருமை ஆதினப் புலவர் தா. குருசாமி தேசிகர் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ

 


வாழ்க்கை என்னும் கலை.

 வாழ்க்கை என்னும் கலை.

காலை அலுவலகத்திற்கு கூட்ட நெரிசலில் இடம் பிடித்து, பயணம் செய்து, வீடு வந்ததும் சற்று நேரம் தொலைக்காட்சி, பின் உணவு, உறக்கம், மீண்டும் காலையில் அலுவலகம். சில நேரங்களில் என்ன வாழ்க்கை என்று சலிப்பு தட்டி வாழ்க்கை மீதே ஒரு வெறுப்பு வருகிறது...
சிலர் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்வதற்கு இந்த சலிப்பு ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்...?
வாழ்க்கை நமக்குச் சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்துவதற்கான காரணம், நாம் இன்னும் வாழ்க்கையெனும் கலையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை...
இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனிதர்கள் மிகவும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். குடும்ப உறவுகளில், அலுவலக வேலைகளில், பொது நிகழ்வுகளில், என அனைத்தும் சலிப்பூட்டுகிறது...
சலிப்பைப் போக்கிக் கொள்ள என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை, விருப்பமான செயல்களை மறுமுறை செய்வது சலிப்பு தருகிறது என்பதால் புதியதாக ஒன்றினை மேற்கொள்ள விரும்புகிறார்கள்...
ஆனால்!, அந்த ஒன்றை எப்படி அடைவது...?! அல்லது நிறைவேற்றிக் கொள்வது எனத் தெரியவில்லை...
தனது இயலாமையின் மீது சலித்துக் கொள்கிறார்கள்,
சலிப்புடனே தொடர்ந்து வாழ வேண்டியிருக்கிறதே என்பதற்காக வாழ்க்கையை கவர்ந்து கொள்ள பகட்டாக, பொய்யாக, நடிக்கத் துவங்குகிறார்கள்...
அந்த நடிப்பு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளுதல் என உணரும் போது குற்றவுணர்வு அடைகிறார்கள்.
ஆம் நண்பர்களே.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை அமைந்துள்ளது. துன்பமும், வேதனையும் யாருக்கும் நடுவுநிலை அற்ற நிலை (பாராபட்சம்) காட்டுவதில்லை.
எனவே!, எதிலும் சலிப்பு எனும் சரிவில் வீழ்ந்து விடாமல் இருக்க சலிப்பு என்னும் இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்.

நாளை இரவு


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

இவை எனது கணிப்புக்கள் மட்டுமே - தீர்மானமான முடிவுகள் அல்ல!

 இவை எனது கணிப்புக்கள் மட்டுமே - தீர்மானமான முடிவுகள் அல்ல!

திமுக தோற்க வேண்டும் என்றே கூட கனிமொழி ஒருவேளை திட்டமிட்டுக் காய் நகர்த்தக் கூடும்.
இப்போது திமுக ஆட்சியைப் பிடிப்பதால் கனிமொழிக்கு ஏதும் லாபமில்லை.
தோற்றால்?
பல அனுகூலங்கள் உள்ளன.
1) கட்சியை சரியாக வழி நடத்தவில்லை என்று ஸ்டாலின் மீது அதிருப்தியைக் கிளப்பலாம்.
2) பிரசாரத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததற்காக ஸ்டாலினைக் குற்றம் சாட்டித் தோல்விக்குப் பொறுப்பேற்று விலகச் சொல்லலாம்.
3) கட்சி தோற்றால் அடுத்த வாரிசு - உதயநிதி - அமைச்சராவதைத் தடுக்கலாம்.
4) அழகிரியும் கட்சியில் இல்லை - இப்போதைக்கு ஸ்டாலினும் முதல்வர் இல்லை - 5 வருடம் கழித்து 2026 க்குள் எந்த நிலை வேண்டுமானாலும் மாறும்.
5) தனக்கு இன்னும் வயதும் காலமும் நிரம்ப இருக்கிறது. எதற்கு அவசரப்பட்டு ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்?
6) இந்தத் தேர்தலில் திமுக தோற்றால் ஸ்டாலின் தலைமை காலி - அழகிரியும் கட்சிக்கு வெளியே உள்ள நிலையில் தலைமை தானாகத் தன்னைத் தேடி வரும்.
7) தப்பித் தவறி திமுக ஜெயித்துவிட்டால் தான் பிரசாரம் செய்து "உழைத்த உழைப்பையும்" - கணக்கில் சேர்த்து விடலாம்!
இப்படி 5 வருடம்/ 10 வருடம் கழித்து கட்சித் தலைமை அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதில் தான் கட்சியில் என்ன பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற ஆழமான திட்டம் கொண்டவர் கனிமொழி.
ஆ.ராசாவின் பேச்சுக்கு இன்று "கண்டனமும்" தெரிவித்துவிட்டார் கனிமொழி!
அவ்வளவு நேர்மை மிக்கவராம்!
எப்படியும் செய்ய வேண்டிய டேமேஜ் செய்து, கொங்கு மண்டலத்தில் திமுகவை பஞ்சர் ஆக்கியாயிற்று!
எழுத்தாளர் ஞாநி தனது "ஓ பக்கங்கள்"- தொடரில் கூறியது போல - "கருணாநிதியின் வாரிசுகளிலேயே மிகவும் ஆழமானவர், ஆபத்தானவர் கனிமொழி!"

சோம்பேறிகளுக்குத் தான்

 சோம்பேறிகளுக்குத் தான்

அனைத்துச் செயலும்
கடினமாகத் தோன்றும்.
முயற்சி உள்ளவர்களுக்கு
அனைத்தும் இலகுவாக
தான் கண்ணுக்குத் தெரியும்.
அடுத்தவர்களின் வளர்ச்சியை
பார்த்து பொறாமைப்படும்
மனம் கொண்டவர்கள்
அவர்களின் வளர்ச்சியை
பார்க்கும் போது
அவர்களது முயற்சியையும்
சேர்த்துப் பாருங்கள்
உங்களுக்கு பொறாமை வராது.
வெற்றி எனும்
இலக்கை அடைவதற்கு
யாரும் நமக்கான
பாதையை
உருவாக்க மாட்டார்கள்
நாம் தான் அதற்கான
பாதையை செதுக்க வேண்டும்.
உழைப்பையும் ஊக்கத்தையும்
மட்டும் வைத்து வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது.
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும் ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான்
வெற்றிக்கு வித்திடும்.
நிலத்தில் தவறி விழுந்த
விதையே முளைத்து
மரமாகும் போது
தடுமாறி விழுந்த
நம் வாழ்வு மட்டும்
சிறப்பாக மாறாமல்
போய் விடுமா.
விழும் போது
தன்னம்பிக்கையுடன்
எழ வேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும்
முடிவுகளை நாம் தான்
எடுக்கப் பழக்க வேண்டும்.
பலரிடம் ஆலோசனை
கேட்கலாம்
ஆனால் இறுதி முடிவு
நம்முடையதாகத் தான்
இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் நமக்கு வளரும்.
நீங்கள் தனியாக
போராட பலம் இருந்தால்
மட்டும் போதாது
அதற்கான மன உறுதியும்
உங்களிடம் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் தான்
வெற்றி பெற முடியும்.
கடைசி நேரத்தில் கூட
எதாவது அதிசயம் நடக்கலாம்.
அதனால் ஒரு போதும் தன்னம்பிக்கையை மட்டும்
விட்டு விடாமல்
முழு மன உறுதியுடன்
முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

தீரர் சத்தியமூர்த்தி நினைவைப் போற்றுவோம் - மனிதத்தேனீ


 

மனிதத்தேனீயின் தேன்துளி




 

இன்று பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற எனது இளைய அண்ணன் ரா. சம்பந்தன் செட்டியார் - வள்ளியம்மை ஆச்சி பீமரத சாந்தி விழாவில் எங்கள் உறவினர்கள்.


 

இன்று பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற எனது இளைய அண்ணன் ரா. சம்பந்தன் செட்டியார் - வள்ளியம்மை ஆச்சி பீமரத சாந்தி விழாவில் மதுரை உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் எஸ் எம். முருகப்பன், காரைக்குடி லெட்சுமணன்.

 


இன்று காலை பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற எனது இளைய அண்ணன் ரா. சம்பந்தன் செட்டியார் - வள்ளியம்மை ஆச்சி பீமரத சாந்தி விழாவில் பிள்ளையார்பட்டி நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி பி எஸ் ஆர் எம் ராமு, வலையபட்டி எம். நாகப்பன் மற்றும் எங்கள் குடும்பத்தினர்.

 



இன்று காலை அருள்மிகு கற்பக விநாயகர், பிள்ளையார்பட்டியில் தரிசனம். மனிதத்தேனீ, பிள்ளையார்பட்டி நடப்பு காரியக்காரர் வலையபட்டி எம் நாகப்பன் மற்றும் எஸ் எம். முருகப்பன், சொ. ராம்குமார், அண. அருண்.


 

இன்று காலை பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற எனது இளைய அண்ணன் ரா. சம்பந்தன் செட்டியார் - வள்ளியம்மை ஆச்சி பீமரத சாந்தி விழாவில் விகாஸ் ரத்னா டாக்டர் பிச்சை குருக்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர். - மனிதத்தேனீ


 

#JUSTIN : மதுரையில் ஏப்.2ல் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு * பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு கால்கோள் நிகழ்ச்சி - அமைச்சர்கள் பங்கேற்பு * கால்கோள் விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

 


Saturday 27 March 2021

26-03-2021 எண்ணமெல்லாம் தமிழ் என்ற தலைப்பில் 34 நிமிடங்கள் மனிதத்தேனீ சி...

வேடதாரிகள்.......

 வேடதாரிகள்.......

சுந்தர்
பகுத்த அறிவுப் பாதை என்றே
பலவித மாகச் சாற்றியவர்
தொகுத்த அறிவின் நூல்களை எல்லாம்
துச்சம் என்றே தூற்றியவர்
நகத்தைக் கடித்துத் தேர்தல் என்றொரு
நாளும் வரவே அஞ்சுகிறார்
உகுத்துக் கண்ணீர் வடிக்கின் றார்பொய்
ஒழுக்கம் காட்டிக் கெஞ்சுகிறார்
சிலையே என்றும் உயிரே இல்லாச்
சிற்பம் என்றும் சொல்லியவர்
தலையே ஏறும் விஷமே போலும்
தருக்குட னேநிதம் துள்ளியவர்
அலையாய் இன்று அலைகின் றார்பேர்
ஆண்மைக் கேஓர் இழுக்கானார்
விலையே போகாச் சரக்கா னார்இவர்
வீணாய்ப் போன அழுக்கானார்
காலை மாலை நாளும் இறையைக்
காட்டு மிராண்டி தான்என்றார்
ஓலைச்சுவடி சொல்வது எல்லாம்
ஒதுக்கித் தள்ளி வீண்என்றார்
வேலைப் பழித்த வாயால் இன்று
வேதம் கற்பேன் நான்என்றார்
பாலைக் குடித்த பூனை போலப்
பதுங்கிப் பாயில் தான்நின்றார்
பூட்டைப் பெருமாள் உண்டிய லுக்குப்
போட்டல் ஏனெனப் பகர்ந்தவராம்
ஓட்டை உடைசல் மதமே என்று
ஓங்கித் திருவாய் மலர்ந்தவராம்
ஓட்டை இழக்கும் பயங்கொண் டார்முன்
உரைத்ததை எல்லாம் மாற்றுகிறார்
பாட்டை மாற்றிப் பாடுகி றார்பல
பாசாங் கால்ஏ மாற்றுகிறார்
பேறும் வீடும் தந்திடு வோனைப்
பேயே போலச் சித்தரித்தார்
ஏறு மயிலோன் என்பவ னையிவர்
ஏளனம் செய்து கொக்கரித்தார்
நாறும் வாய்அது நல்வாய் ஈதென
நகைச்சுவை இன்று தீட்டுகிறார்
கூறும் பொழுதொரு கூச்சமி லாமல்
குள்ள நரித்தனம் காட்டுகிறார்
நாத்திகம் நன்றென நவிலு தலாலே
நமக்கெல் லாம்ஒரு குறையில்லை
ஆத்திகம் என்னல் அவலம் என்றார்
அதுதா னேஒரு முறையில்லை
வாய்த்துடு க்காகப் பேசிடு வாரின்
வன்மை எல்லாம் அடக்கிடுவோம்
தோய்த்தநல் அறங்கள் ஏசும் ஈனர்
தலைக்கனம் இன்றே ஒடுக்கிடுவோம்

முதுமையை வெல்வோம்.

 முதுமையை வெல்வோம்.

முதுமை வந்து விட்டதே!, என வருந்த வேண்டாம். முதுமைப் பருவம் தவிர்க்க முடியாது. இளமையைப் போல முதுமையையும் நேசிக்கப் பழக வேண்டும்...
முதுமையும் ஓர் அழகு. நமது ஒத்துப் போகும் குணம், மனதை இளமையுடன் வைத்துக் கொள்ளப் பழகுவது ஆகியவை முதுமையைக் கடக்க எளிதான வழிகளாகும்...
முதுமையில் ஏற்படும் களைப்பை, நோய்களை, உடல் வலிகளை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...
உடல்நிலை எதற்குத் தகுதியோ அதை மட்டும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது...
பேரக் குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் குறும்புகளை அனுபவிக்க வேண்டும். ஆனால்!, முழு நேரக் காப்பாளராக இருக்கக் கூடாது...
மகள் அல்லது மகன் பொறுப்பில் அவர்கள் வளர்க்கட்டும், அவர்களிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டும்...
மக்கள் கூட்டம், அக்கம்பக்கத்தார் , நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்கள் கூட்டத்தை அதிகரித்து அவர்களுடன் மகிழ்வுடன் இணைந்து இருக்க வேண்டும்...
தன்னை ஒரு சுமையாகக் கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் சுமையாகக் கருதும் அளவிற்கு பேசிக்கொண்டும், நாளது சிக்கல்களில் தாமும் போய் விழுந்து, அதிக சிக்கல்களாக மாறிக் கொண்டும் இருந்தால், உறுதியாக அமைதியே கிடைக்காது.
ஆம்!, அன்பு மூத்த குடிமக்களே.
முதுமை வரும் பொழுது மனதைத் தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் மறைபொருளாகும்.
இவ்வளவு நாள் சேமித்ததை நல்ல முறையில் செலவிடுங்கள். உங்கள் உடல் நிலை, பொருளாதார வசதி ஒத்துழைத்தால் இதுவரை சென்று வர இயலாத இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள்.
கடந்த கால நினைவுகளை எண்ணாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள். நேற்றைய நினைவுகளோ, நாளைய கவலைகளோ தேவையற்றவை. நேற்று என்பது முடிந்து போனது. நாளை என்பது வராமலேயே கூடப் போகலாம். உங்களையும் மற்றவர்களையும் மன்னித்து விடுங்கள்.
உங்களால் பிறருக்கு ஏதேனும் இடர் ஏற்பட்டிருந்தால் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள். குடியொன்றும் முழுகிப் போவது இல்லை. இறுதியாக வாழ்வின் சுழற்சியில் மரணமும் ஒன்று. அமைதியோடு அஞ்சாமல் இருங்கள்.
இந்த வாழ்வை விடச் சிறந்த வாழ்வின் திறவுகோல் தான் மரணம். செல்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள். முதுமையை வென்று இளமையாக வாழ்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி