Tuesday 26 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாம்தான் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும்....
*விகடன் ஓர் ஆரம்பம் தான்.*
இன்னும் பல நிறுவனங்களில் வேலைகள் பறிபோகும் காலம் தொலைவில் இல்லை. வணிகத்துக்காக நடத்தப்படும் நிறுவனங்களில் அறம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் அறிவின் அளவுகோல்.
பாதிக்கப்பட்டவர்கள் மனத்தளவில் மிகுந்த சோர்வில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாக அன்பாகப் பேசுங்கள்.
அதே நேரம் வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்வது பற்றி அவர்களுடன் பேசுங்கள். அப்படிப் பேசும்போது உங்களுக்கு இந்நிலை வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பதும் உங்களுக்குத் தெரிய வரும்.
144 காலத்தில் போராட்டம் நடக்காது, போராடினாலும் போனது திரும்பக் கிடைக்காது.
இது மிகவும் சிக்கலான காலக்கட்டம்.
இன்று நாம் அனுபவிக்கும் பாதுகாப்பான வசதிகளும் இன்னும் சில காலத்துக்குப் பின் இருக்காது இருப்பதைப் பகிர்வோம்.
இந்நேரம் உங்களையும் உங்கள் நண்பர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்,
நோய்த் தொற்று அதிகமாகி வருகிறது.
சாலைகளின் வண்டிகள் ஓடலாம், வண்டிகளில் ஏறி எங்கே போவது? வேலைகள் இருக்காது, வருமானம் இருக்காது, செலவுகளையாவது குறைக்கப் பார்ப்போம்.
முகநூல் வருத்தத்தையும் கோபத்தையும் கொட்ட ஒரு வடிகால் மட்டுமே.
இது சமூக மாற்றம் கொண்டுவராது என்பதைக் காலம் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது
ஆனாலும் இந்த ஒரு வடிகாலும் இல்லாவிட்டால் மனம் வெம்பி வெடித்து விடும்.
ஆகவே எழுதிக் கொண்டிருப்போம்.
எழுதுவதோடு நிற்காமல் முடிந்த அளவு அடுத்தவர்க்கு உதவிக் கொண்டிருப்போம்.
இறுக்கமான காத்திருத்தல் தவிர்க்க முடியாதது.
*இனி, நாம்தான் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.*
*ஆர்.கே.ருத்ரன்*
*மனநல மருத்துவர்*

No comments:

Post a Comment