Tuesday 26 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழகத்தின் ஹரித்ரா நதி..
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் உலகச் சிறப்பு வாய்ந்தது.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது.
கோயில் பாதி குளம் பாதி என்ற பழமொழியைத் தனக்கே உரித்தாக்கிக் கொண்ட ஊர் மன்னார்குடி அந்தக் காலத்தில் மொத்தம் 98 குளங்கள் மன்னார்குடியில் இருந்துள்ளன. இன்றும் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. கோபிலர் கோப் பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாகக் காட்சியளித்தார் என்றும் ஹரித்ரா நதியில் கண்ணன் கோபிகையருடன் ஜலக்கிரீடை செய்தபோது அந்தக் கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் [ ஹரித்ரா ] மற்றும் நறுமணப் பூச்சுப்பொருட்கள் அந்த நதியின் தீர்த்தத்தில் படிந்ததால் அந்த நதி ஹரித்ரா நதி [ மஞ்சள் ] என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்த நதி காவிரியின் மகள் என்றும் 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றுசேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன.
இங்கு இராஜ கோபாலஸ்வாமி கோயில் மிகப் பழமையானது. இங்குள்ள கடவுளுக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இந்த நதியில் இருந்துதான் எடுத்துச் செல்கிறார்கள். மற்ற ஊர்களில் தெப்ப உற்சவம் 10 நாட்கள் என்றால் இங்கு மட்டும் 15 நாட்கள் நடக்கும். ஆனி பௌர்ணமியில் நடக்கும் தெப்ப உற்சவத்தைப் பார்க்க கண் கோடி வேண்டும்.
குளத்துக்கு நடுவில் கோபுரத்தோடு ஒரு கோவில். ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கானது !
இப்படியும் சிலர் சொல்வது உண்டு;
"ஒருசமயம் ஆயிரத்தெட்டு முனிவர்கள் சேர்ந்து க்ருஷ்ணனை நேரில் பார்க்க வேண்டும் என்று தியானம் செஞ்சுக்கிட்டு இருக்க. நேரில் பார்க்க வேண்டும் என்றால் த்வாரகைக்குப் போங்கன்னு உத்தரவாச்சு. கிளம்பி வந்துக்கிட்டு இருக்காங்க. பாதிவழி போகுமுன்பே.... த்வாபரயுகம் முடிஞ்சு க்ருஷ்ணன் வைகுண்டம் போயிட்டார்னு சேதியாம்.
குளக்கரை சமீபம் கூடி நின்னவர்கள், நடையா நடந்தும் நமக்கு வாய்க்கலையேன்னு மனத் துக்கம் தாங்காமல் தவிக்கும்போது, அதே குளத்தை யமுனை நதியாகவும், அதில் ஆயிரக்கணக்கான கோபியருடன் கண்ணன் நீராடிக்களித்த காட்சியுமா மாற்றிக் காமிச்சு முனிவர்களுக்கு தரிசனம் கொடுத்தாராம்......... அந்தக் குளம்தான் இந்த ஹரித்ரா நதி. அப்போ தரிசனம் கொடுத்தவந்தவர் கோவிலுக்குள் ராஜகோபாலனாக இருக்கார்.
கோவிலும் குளமும் வந்தபிறகு, ஊரையே இதைச் சுத்திக் கட்டி இருக்காங்க"என்று கூறுவதும் உண்டு.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment