Thursday 31 May 2018

மாலைமுரசு 31.05.2018 பக்கம் 5


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💮 *உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம*்.
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
💮 *மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
💮 *ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம*்.
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
💮 *அரசியல்வாதியின் கல்லறையில்*,
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."
💮 *ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.*
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."
இவ்வளவு தானா வாழ்க்கை
ஆம் அதிலென்ன சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்
நமது *பதவியா?*
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது *படிப்பா?*
நமது *வீடா?*
நம் முன்னோர்களின் *ஆஸ்தியா?*
நமது *அறிவா?*
நமது *பிள்ளைகளா?*
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
*ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை*.
*பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
*ஒரே முறை வாழப்போகிறோம*் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.
*பிறரை வாழ வைத்து வாழ்வோம்.*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பல்லவி இல்லாமலேயே சரணமோ அல்லது சரணத்தின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.
அவ்வகை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த MSV ஐயா, கே.வி.மகாதேவன் ஐயா,T.M.S ஐயா ,P.சுசீலா அம்மா, PB சீனிவாஸ ஐயா ,சிவாஜி ஐயா, எம்.ஜி.ஆர் அவர்கள் ,ஜேசுதாஸ் , SPB ,சீர்காழி ஐயா மற்றும் இதில் விடுபட்ட ஏனைய கலைஞர்களையும் நினைவு கொள்ளுவோம்.
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? .
கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா
பிரமிப்பாக இருக்கிறதல்லவா? வாழ்க காவியக் கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களுடைய புகழ்.
தகவல் லெட்சுமன்குமார் ராஜு


தினபூமி 31.05.2018 பக்கம் 9


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்" என்ற மன நிலை எப்போது வருகிறதோ, அப்போது தான் நாம் பயம் என்ற‌ உணர்வில் இருந்து விடு பட முடியும்.
பாதி வாழ்க்கையை படிப்புக்காக செலவழிக்கறோம். மீதி வாழ்க்கையை பணத்துக்காக செலவழிக்கறோம்.
எதையும் விதி என்று கடக்கும் முன் நீங்கள் செய்த தவறு என்ன என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் உலகம் ஒவ்வொரு முறையும் உங்கள் விளக்கங்களை ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.
உங்களை மேலே ஏற்றி விட துடிப்பவர், எதை எதிர் பார்த்து செய்கிறார் என்று யோசித்து பார்த்து அவரின் உதவியை ஏற்றுக் கொள்ளவும்.
இறைவனின் திருவடிகளில் அனைத்து ஆசைகளையும் சமா்ப்பிப்பதே மிகவும் சிறந்தது. நமக்கு எது நல்லதோ அதை இறைவன் செய்வான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)



திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையில் உள்ள மேலக்குடிகாடு என்ற கிராமத்தில் கிராம அதிகாரியான அய்யம்பெருமாளுக்கும் மிளகாயி அம்மாளுகும் பிறந்தவர் மருதகாசி (1920) பிறந்து வளர்ந்து குடந்தையில் கல்லூரி.. சிறுவயது முதலே கவிதை எழுதத்தேர்ந்தவர்.. பின் நாடக ஆர்வம்.
சேர்ந்தது குடந்தை தேவி நாடக சபை.. திருச்சி லோக நாதனின் இசைக்கு இவர் எழுதிய நாடகப் பாடல்கள் பேசப்பட கதவைத்தட்டியது சினிமா வாய்ப்பு..
ஜி. ராமனாதனின் இசையில் பெண் எனும்மாயப் பேயாம் (படம் மாயாவதி தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ்) எனும் பாடலே முதல் பாடல்..
மெட்டுக்குத் தக்கபடி வார்த்தைகள் இவருடைய விரல்களில் சுற்றிச் சுற்றிச் சுழன்றோடி வந்து டபக்கென ஆங்காங்கே அமர்ந்து கொண்டன.. இவரது திறமையில் அழைப்புகளும் தானே வந்தன..
சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார் என்றால் கொஞ்சம் நம்புதற்குச் சிரமம் தான்..ஆனால் தெரிந்த பாடல்களைப் பார்க்கும் போது இவரா என ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை..
தூக்குத்தூக்கியில்…
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
கண்ணொளி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்.. பாடலும் இவர் தான்..
இவர் எழுதிய பாடல்களில் எதைச்சொல்ல எதைவிட எனத் தெரியவில்லை..எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்..இருந்தாலும் கொஞ்சம் செலக்ட் செய்ததில்..
"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
"அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
"அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
"ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960)
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
"உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
(மந்திரி குமாரி, 1950)
"எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960)
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!" (பாகப்பிரிவினை, 1959)
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" (விவசாயி, 1967)
"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?" (தூக்கு தூக்கி, 1954)
"கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்" (சாரங்கதாரா, 1958)
"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
"காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960)
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
"கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
"தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்" (பெற்ற மகனை விற்ற அன்னை, 1958)
"தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
"நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" (மங்கையர் திலகம், 1955)
"நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
"மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
"மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
"மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)
"மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!" (வண்ணக்கிளி, 1959)
"மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி" (வண்ணக்கிளி, 1959)
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
"வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
"வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!" (பாவை விளக்கு, 1960)
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" (மந்திரி குமாரி, 1950)
ஸாரிங்க..லிஸ்ட் கொஞ்சம் நீளமாய்டுத்து..
அ முதல் அஃகு வரை.

Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஒரு எளிமையான கதை ...மனதை கவர்ந்தது*.
அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன.
அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.
அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து.
அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .
அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது.
கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர்.
இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது .
இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.
தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை.
எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
🌸
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி .
இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான்.
இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும்.
நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள்.
நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் .
தீர்ந்த பிறகு காட்டில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் தீ வைத்துக் கொளுத்துங்கள் .
அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் .
உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் .
🌸
பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும்.
அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும்.
அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் .
இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும்.
ஆனால் சோள அடையோ, சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
🌸
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள்.
போட்டி ஆரம்பமாகிவிட்டது .
இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள்.
இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.
🌸
நாட்கள் ஓடின.
மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது.
உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.
அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான்.
இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
"தலைவா, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன்.
அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
💪
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது .
இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார்.
இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன.
தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது .
தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார்.
🌸
படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .
இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது.
அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ?
என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.
ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு.
🌸
இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.
🌸
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான்.
*முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்*.
தலைவரை வணங்கி வரவேற்றான்.
" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான்.
உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.
தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே .
நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய்.
நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
🌸
"கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே" என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான்.
அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது.
🌿🌿🌿🌿
அவன் சொன்னான்,
"தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன்.
இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது.
நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன்.
இந்த நான்கு மாதம் மட்டுமல்ல .
இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
🌸
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
"நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ *உன் அறிவாலும், உழைப்பாலும்* என்னைத் திணறடித்து விட்டாய்.
காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி" என்றார்.
🌸
*செல்லமே, கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.*
*அது பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும்...*..
👍🙏
*நன்றி ---- கதையை படைத்தவருக்கு ... !!*
🙏👍

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔮நான் சொல்வது தான் சரி என்று நினைப்பதும், நான் செய்வதெல்லாம் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்து மற்றவர்களுடன் ஓயாமல் “விவாதம்” செய்வது தான் தனி மனித வளர்ச்சிக்கு தடை.
🔮உங்களை மற்றவர்கள் நம்ப வேண்டுமா? உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள். அதுவே நம்பிக்கையை பெற்று தரும்.
🔮மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி, நாம் நினைக்கின்ற மாதிரி எல்லாமே நடக்காது என்பதை முதலில் உணர்வது தான்.
🔮நல்லது செய்பவருக்கு நல்லதும், கெட்டது செய்பவருக்கு கெட்டதும் நடப்பது இல்லை. எதைச் செய்தாலும். எது நடக்கனுமோ அதுவே நடக்கும். எல்லாம் முருகன் செயல்.
🔮நம்பிக்கைக்குறிய மனிதன் என்று யாரும் கிடையாது. எந்த நேரத்திலும் எப்படியும் மாறக் கூடியவன் மனிதன்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முப்பதாம் ஆண்டு கல்வித் திருவிழா.


தினத்தந்தி - இளைஞர் மலர் 19.05.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


மாலைமுரசு 29.05.2018 பக்கம் 5


ஸ்ரீ முருகன் வைகாசி விசாக 46ஆவது ஆண்டு மஹோத்ஸவம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்கள் மதிப்பையும், உள்ளார்ந்த அன்பையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் விலை மதிக்க முடியாத பொக்கிஷம். இழந்து விடாதீர்.
கடவுளிடம் நமக்காகவும் சேர்த்து வேண்டிக் கொள்ளும் நபர்கள் நம்முடன் இருப்பது நமக்கு கிடைத்த வரம்.
எண்ணத்தில் சோகம் சூழ்கையிலே, உள்ளத்தில் வேதனை வருகையிலே, நினைவினில் துணிவும் வரட்டுமே. கவலையும் ஓடியே போகட்டுமே. இரவொன்று வந்தால், பகலொன்று வருமே. இந்த இயற்கை நியதி மன அமைதி தரட்டுமே.
நோய்களிலே மிகக் கொடிய நோய் மற்றவர்கள் மீது அக்கறையற்று இருப்பதே.
கடந்த காலத்தை அசை போட்டுட்டே இருக்காதீங்க, கண்ணீர் வரும். எதிர் காலத்தை பற்றி யோசிச்சிட்டே இருக்காதீங்க, பயம் வரும். இந்த நொடியை மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்க்கையில் சந்தோஷம் வரும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்