Monday 31 August 2020

ஆழ்ந்த இரங்கல் - பிரணாப் முகர்ஜி இறைவன் திருவடி அடைந்தார் - மனிதத்தேனீ


 

தேசிய விருது பெற்ற மதுரை தடகள வீரர் ரஞ்சித்குமார் அவர்களுக்குப் பாராட்டு


 

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
✌ அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..
✌ துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
✌ பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..
✌ சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..
✌ நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..
✌ ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
”வாழ்க வளமுடன்”
நன்றி எழிலரசி

கவியரசு வாட்ஸ் அப்

 கவியரசு வாட்ஸ் அப்*

**************** ********
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 13வது ஆண்டு.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
31.08.2020
திங்கட்கிழமை
🟣இன்றைய தினத்தில்..
🔹இன்று 1897ல் தாமசு ஆல்வா எடிசன் முதலாவது திரைப் படம் காட்டும் கருவிக்கான
காப்புரிமத்தைப் பெற்றார்.
🔹இன்று ஓணம் பண்டிகை.
உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சொந்தங்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
*ஓணம் திருநாள் வாழ்த்துகள்*
〰️〰️〰️🌾🌹🌿〰️〰️〰️
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎵
மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே..
மன்மதன் இவிடத்தன்னே உண்டு
ஓ..எந்தோ
மந்தார மலரே மந்தார மலரே
நீராடி முடித்தாயோ..
மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு
நீ கூட வருவாயோ..
குங்குமம் அணியும் முன்னாலே
கூந்தல் வாரும் முன்னாலே
சுந்தர புருஷன் வந்தல்லோ
சங்கதி பரையான் வந்தல்லோ
அ..மதனா.. அ..இதுதான்.. அ..முதல் நாள்..
மதனா இதுதான் முதல் நாள்
இந்திர மண்டல தேசத்தில்
சுந்தரி நின்னைப் போலில்லா
மந்திரம் ஒன்னு சொல்லட்டா
தந்த்ரம் ஒன்று இல்லல்லோ..
மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே..
ஈ மலரண்ட பேரென்ன
அம்மு..குட்டி... அம்மு குட்டி.. அம்மு குட்டீ..
சுகந்தன்னே...
தத்தித்தாவும் தத்தம்மே
சித்தம் கவரும் செல்லம்மே
மன்னன் தேடும் மகராணி
மன்மதன் நாட்டில் யுவராணி
அ..மதன் நான்.. அ..தருவேன்.. அ..திருநாள்..
மதன் நான் தருவேன் திருநாள்
பெண்கொடி என்னுட உள்ளத்தை
கண்முனை கொண்டு திறந்தல்லோ
மன்னன் தன்னுட வாக்குகளால்
என்னை நானும் மறந்தல்லோ...
அ..மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே..
ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி..ஈ
ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்
ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி
கடலும் கரையும் தாண்டித் தாண்டி
காதல் தீரத்தில் இறங்கும்..
காதல் தீரத்தில் இறங்கும்..
கல்யாணப் பந்தலில் கைகோர்த்த சொந்தம்
கடலலை போலே நிரந்தர பந்தம்..
அஹா..மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே..
படம் : நான் அவனில்லை
〰️〰️〰️😷😷😷〰️〰️〰️
*கரொனா சிந்தனை*
மனத் தளர்வில்லாது காத்திருக்கும்
பேருந்து போக்குவரத்து முழுமையான தளர்விற்காக
தினக்கூலி மக்கள்!
〰️〰〰️🪔🪔🪔〰️〰️〰️
🙏🏻கண்ணன்சேகர்
9698890108/ 9894976159.

வெற்றியடைய ஒரே ஒரு தகுதி மட்டும் போதும். அது என்ன தகுதி

 வெற்றியடைய ஒரே ஒரு தகுதி மட்டும் போதும். அது என்ன தகுதி

அவர் 65 வயதான முதியவர். அந்த தள்ளாத வயதிலும் பல உணவகங்களுக்கு சென்று தன் புது வகையான உணவு கண்டுபிடிப்பை வியாபாரபடுத்த முயல்கிறார். (சிறு வயதில் தாய் தந்தையை இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்தவர். வீட்டில் ஏழ்மை.) அவர் முயற்சியை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தத்துடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அவர் கைகளில் இரண்டு குக்கர்கள், மாவு மற்றும் மசாலாக்கள் மட்டும் இருந்தன.
ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உடன் கடைசியாக ஒரு ஒப்பந்தத்தை கூறுகிறார் தனக்கு இதன்மூலம் ஒரு ரூபாய் கூட லாபம் வேண்டாம். தன்னுடைய உணவு கண்டுபிடிப்பை விற்பனை செய்து அது பிரபலமானால் மட்டும் போதும் ஒரு ரூபாய் கூட கூலி வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார். 1009 உணவகங்கள் அவர் கோரிக்கையையும் அவர் கண்டுபிடிப்பையும் நிராகரிக்கின்றன. கடைசியில் 1010 வது உணவுக் கூடத்தில் அவருடைய புதிய முறையை முயற்சிப்பதாக கூறி ஏற்றுக் கொள்கிறார்கள்.
அன்று ஆரம்பித்த அவருடைய *வெற்றி பயணம்* இன்று அவர் நாட்டில் மட்டுமல்ல உலகின் மூலைமுடுக்கெல்லாம் அவர் நிறுவனம் வெற்றிகரமாக காலூன்றி நடந்து வருகிறது. 65 வயதில் தன் முதல் வெற்றியை பெற்ற அந்த மனிதரின் பெயர் *Colonel Harland Sanders*.
அவர் உருவாக்கிய நிறுவனம் *KFC* (Kentucky Fried Chicken).
உலகில் வெற்றி பெற்ற அனைவரும் ஒரு பக்கம்தோல்வி அடைந்த அனைவரும் ஒரு பக்கம் ,தராசில் வைத்து நிறுத்துப்பார்ப்போம்.
பணக்காரனும் தோற்று இருக்கிறான் ,ஏழையும் வென்றிருக்கிறான்
எனவே, பணம் தடை இல்லை
படித்தவனும் தோற்றிருக்கிறான் , பாமரனும் வென்றிருக்கிறான்
எனவே, படிப்பு தடை இல்லை
வீரனும் தோற்று இருக்கிறான் , கோழையும் வென்று இருக்கிறான்
எனவே பலம் தடை இல்லை
புத்திசாலியும் தோற்று இருக்கிறான், மகரயாழ் முட்டாளும் வென்று இருக்கிறான்
எனவே அறிவு தடை இல்லை
ஆற்றல் படைத்தவனும் தோற்று இருக்கிறான் ,ஊனம் உடையவனும் வென்று இருக்கிறான்
எல்லாம் இருந்தும் தோற்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்
எதுவும் இல்லாமல் வென்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்
ஒன்று மட்டும் தான் இவர்களை பிரித்து காட்டுகிறது ,அது மட்டும் தான் வெற்றியை பெற்றுத்தருகிறது
*அது நம்பிக்கை, தன்னம்பிக்கை*
தோற்றுப்போன எவரிடமும் இல்லாத ஒன்று நம்பிக்கை
வெற்றி அடைந்த அனைவரிடமும் இருந்த ஒன்றே ஒன்று நம்பிக்கை
அந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் அது எல்லாவற்றையும் பெற்றுத்தரும்
வெற்றியை அது மட்டுமே பெற்றுத்தரும்
நீங்களும் வெற்றி அடைவீர்கள் , நம்பிக்கையோடு இருங்கள்.
1

மனிதத்தேனீயின் தேன்துளி


 

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 அந்த மனிதரை ஒரு எம்.பி மறைந்துவிட்டார் என எளிதில் கடந்துவிட முடியாது. ஒரு எம்பியாக தொழிலபதிராக இன்று இருந்திருந்தாலும் அவர் கடந்த காட்டாறும், சந்தித்த அவமானமும், அதை கடின உழைப்பாலும் தன் சிரித்த முகத்தாலும் தாண்டிவந்த அந்த சாதனை கொஞ்சமல்ல‌

அது அகதீஸ்வரத்தின் மிகபெரும் குடும்பம், அதாவது ஏகபட்ட எண்ணிக்கை உண்டு அதில் கடைசி பிள்ளையாக ஹரிகிருஷ்ண நாடாருக்கு பிறந்தவர்தான் வசந்தகுமார்
வறுமை இருக்குமிடத்தில்தான் பிள்ளைகள் அதிகமிருப்பார்கள், வசதி மிக்க கோடீஸ்வரர்கள் ஒரு பிள்ளைக்கு ஏங்குவார்கள் எனும் தத்துவம் அக்குடும்பத்திலும் உண்மையாயிற்று, வீடெல்லாம் பிள்ளை அதை விட பெரும் எண்ணிக்கையில் வறுமை
அக்குடும்பத்தின் முழு பொறுப்பும் மூத்த மகனான குமரி அனந்தன் தலையில் விழுந்தது. அம்மனிதனும் கட்சி ஒருபக்கம் குடும்பம் ஒரு பக்கம் என ஓயாது உழைத்து கொண்டே இருந்தார்
குமரி அனந்தனின் தமிழும் இலக்கிய அழகும் பன்மொழிபுலவர் கா.அப்பாதுரையாரின் சாயல் , குமரி அனந்தன் மட்டும் திராவிட கட்சியில் இருந்திருந்தால் மிக எளிதாக அண்ணாதுரை, கருணாநிதி இடத்தை பிடித்திருப்பார்
ஆனால் அந்த தேசியவாதி அந்த தேசவிரோதகும்பலோடு சேராமல் தேசியவாதியாய் நின்றார், காமராஜரின் கரங்களின் அருகில் நின்றார்
அக்கால காங்கிரஸில் சம்பாதிக்க முடியாது, காமராஜரோடு இருந்தால் சுத்தமாக முடியாது. இந்நிலையில்தான் அந்த 10 வயதிலே குடும்பத்துக்காக உழைக்க வந்தார் வசந்தகுமார்
சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் உண்மை அதுதான், 12 வயதிலே திருவிழாவில் சர்பத் கடை, பலூன் என சிறு சிறுவியாபாரத்தில் அவர் இறங்கியிருந்தார்
அந்த சுசீந்திரமும், அகதீஸ்வரமுமே அவருக்கு வியாபாரம் கற்று கொடுத்தது
நல்ல கூட்டு குடும்பம் என்பது ஒரு பாண்டவர் பூமி, அயோத்தியின் அரண்மனை. மூத்தவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும், அண்ணனின் சுமை குறைக்க தம்பிகளும் ஓடிவருவது அங்குதான் நடக்கும்
படித்து முடித்து ஒன்றுமில்லாமல் சென்னைக்கு வந்த அவருக்கு அன்று தென்னகத்தில் இருந்து வந்த, வள்ளியூர் சந்தையில் 10 வயதிலே பொதிசுமந்து உழைக்க ஆரம்பித்த அந்த வி.ஜி பன்னீர்தாஸின் கடை வேலை கொடுத்தது
கவனியுங்கள், அண்ணன் காங்கிரஸ் தலைவராக இருந்தபொழுதும் தம்பி ஒரு கடையில் வெறும் சேல்ஸ்மேனாகத்தான் இருந்தார்
வி.ஜி.பி குழுமம் அப்பொழுது மர்பி ரேடியோ உட்பட வீட்டு உபயோக கடையினை முக்கியமாக கொண்டிருந்தது, வசந்தகுமார் எனும் தொழிலதிபருக்கான முதல் பாடம் அங்குதான் நடத்தபட்டது அல்லது தத்தி தத்தி வசந்தகுமாரும் படித்து கொண்டார்
ஆனால் கட்சி சார்பான மோதல் ஒன்றில் அவருக்கு காவல்நிலைய சிக்கல் வந்தது, சென்னையில் சில கட்சிகளை பகைத்தால் தொழில்நடத்த முடியாது என அஞ்சிய விஜிபி குழுமம் அவரை கைவிட்டது
இருந்த வேலையும் போனதில் வசந்தகுமார் அசரவில்லை. உழைப்பவனுக்கு வறுமையும் சோகமும் ஒருகாலமும் இருக்காது. அதுவும் விவரம் தெரிந்த வயதில் இருந்து உழைக்க தெரிந்தவனுக்கு எல்லாமே தூசு
வசந்தகுமாருக்கு வாய்ப்பு வி.ஜி பன்னீர் தாஸின் மறைவில் வந்தது. வீட்டு உபயோக பொருளை விட ரியல் எஸ்டேட்டில் பெரும் பணம் குவியும் என முதலில் கண்டது பன்னீர்தாஸே. அவர்களின் தொழில் முழுக்க ரியல் எஸ்டேட் பக்கம் தாவிற்று
பன்னீர்தாஸின் மறைவுக்கு பின் விஜிபி குழுமம் இப்போது இருக்கும் திமுக போல் திசைமாறிற்று
நிச்சயம் தமிழகம் முழுக்க மிக பெரும் வீட்டு உபயோக பொருள் சந்தையினை கைபற்றும் வாய்ப்பும், வசதியும் அனுபவமும் விஜிபிக்குத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் திசை மாற அதைசாதுர்யமாக கைபற்றினார் வசந்தகுமார்
ஒரே நாளில் அவரின் சாம்ராஜ்யம் எழவில்லை, சென்னை டி.நகரில் மெல்ல மெல்ல அவரின் வியாபாரம் பெருகிற்று
அந்த சிரித்த முகமும், எல்லோரிடமும் பணிந்து போகும் அக்குணமும் அவருக்கு தொழிலில் வெற்றியினை கொடுத்தன. 7 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய அந்த நிறுவணம் 74 கிளைகளோடு வளர்ந்து நிற்கின்றது
அவரின் உழைப்பு அசாத்தியமானது. உழைப்பது எல்லோரும் உழைக்கலாம் ஆனால் வெற்றிபெற தெய்வ அனுக்கிரகம் வேண்டும்
அந்த மாபெரும் வெற்றியிலும் வசந்தகுமார் அந்த எளிமையிலே இருந்தார். பலூன் விற்றபொழுது இருந்த அதே எளிமையான சிரிப்புதான் கோடிகளில் வர்த்தகம் செய்யும்பொழுதும் இருந்தது
அதில் கர்வமோ அகந்தையோ யாரும் காணமுடியாது
தொழிலில் அவரும் வளர்ந்தார், எண்ணற்றவர்களை வளர்த்தும் விட்டார். அவரால் அழிந்தவர்கள் என எதிரிகளை கூட நீங்கள் காணமுடியாது ஆனால் வாழ்ந்தவர்கள் ஏராளம்
வியாபாரத்தில் விஜிபியின் இடத்தை பிடித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்
அரசியலில் வந்து சம்பாதிப்பவர்கள் மத்தியில், சம்பாதித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் அவர்
விஜி பன்னீர்தாஸின் இடத்தை வியாபரத்தில் பிடித்த அவர், தன் அண்ணனின் இடத்தை காங்கிரஸிலும் பிடித்ததுதான் ஆச்சரியம்
இரண்டு குதிரையிலும் அவரின் சவாரி வெற்றி சவாரி, காலம் வழிவிட்டிருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சராக அவர் இருந்திருப்பார். ஆனால் விதி அது அல்ல‌
அவரிடம் எமக்கு பிடித்த விஷயம் பல உண்டு. அவர்மேல் ஊழல் வழக்கு என கொடிய எதிரியும் கைகாட்ட முடியாது. தொகுதிக்கு சொந்த பணம் செலவழித்தாரே அன்றி கட்சி பணம் எதிர்பார்த்தவரும் அல்ல‌
வியாபாரத்துக்காக கட்சியினை அவர் பயன்படுத்தியவருமில்லை, வருமான வரி உட்பட சிக்கல்களில் அவர் சிக்கியவரும் இல்லை
நல்ல இந்தியனாக, நல்ல வியாபாரியாக , நல்ல தேசியவாதியாக கடைசி வரை இருந்தார்
ஆம், அவர் தேசியவாதி கடைசி வரை நான் இந்தியன், காந்தி வழி தேசியவாதி என நின்று சாதித்தார்
தன் பதவிக்கும், தொழிலுக்கும் நாளுக்கொரு கட்சியில் இருப்போர் மத்தியில் அந்த தேசியவாதி மிகபெரும் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உரியவர்
இந்தியாவின் தென்முனை எக்காலமும் தேசியத்தில் நிலைத்திருக்கும் என நேசமணி, காமராஜர், டென்னிஸ் போன்றோரின் வாரிசாக அங்கு நின்று வென்று தேசிய கட்சியின் எம்.பி எனும் நிலையில் தேசிய பாரம்பரியத்தை தாங்கி நின்றவர்
அவரின் உழைப்பும், நாட்டுபற்றுமே அம்மனிதன் பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணம்
ஆம், அவன் உழைத்தான். கடுமையாக உழைத்தான், சிரித்து சிரித்து உழைத்தான், இந்நாட்டை நேசித்து கொண்டே உழைதான்
ஒரு இடத்திலாவது அவன் தன் பணத்தை தவறாக செலவழித்தான் என நீங்கள் பார்க்க முடியாது, பண திமிரில் அடாது செய்தான் என ஒரு நொடியினை அவன் வாழ்வில் காட்ட முடியாது
வசந்தகுமார் எனும் அந்த தொழிலதிபர் பல்லாயிரம் ஊழியர்களோடுதான் பணத்தை பகிர்ந்தார், உண்டார், ஊட்டினார், அவர்கள் குடும்பத்தையும் தாங்கி நின்றார்
நான் இந்த சாதி என அவர் பெருமை பேசியதில்லை, மற்ற சாதியினை இழுத்தும் அரசியல் செய்யவில்லை
இட ஒதுக்கீடு என அவர் கிளம்பவில்லை, இரண்டாயிரம் ஆண்டு அடிமைகள் நாம் என கொக்கரிக்கவில்லை
தமிழறிவு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழால் பிழைக்கவில்லை, உழைப்பால் பிழைத்தார்
உழைப்பு ஒன்றே ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்கு பெரும் உதாரணமாக இருந்தார்
உறுதியாக சொல்லலாம் , அவர் கடுமையான உழைப்பாளி உழைப்பு ஒன்றாலே விஜிபியின் இடத்தை அனாசயமாக பிடித்த அளவு நுட்பமான உழைப்பாளி
அந்த தேசியவாதி, உழைப்பாளி இனி இல்லை. அந்த சிரித்தமுகம் இனி இல்லை
காங்கிரஸின் தூணாக நின்று தேசியத்தை தெற்கே தாங்கி நின்ற அந்த அரண் இனி இல்லை
உழைப்பு ஒன்றால் மட்டுமே வாழும், உழைப்பு ஒன்றாலே உயர்ந்த குலத்தில் அதை உலகுக்கு உரக்க சொன்ன நட்சத்திரமான‌ எங்கள் தென்னகத்தின் இரண்டாம் பன்னீர்தாஸ் இனி இல்லை
கேரளாவில் இருந்திருந்தால் எங்களை வாழவிட்டிருக்க மாட்டார்கள், தமிழகத்தில் கன்னியாகுமரி இணைந்ததால் உழைத்து உயர்ந்தோம் என பல குமரி மாவட்ட தமிழர்கள் சொன்னதை நிரூபித்து காட்டி, குமரி விடுதலை போர் நியாமனது என உரக்க சொன்ன அந்த வசந்தகுமார் இனி இல்லை
அவர் குடும்பத்தாருக்கும், கட்சிகாரர்களுக்கும், அவரின் நிறுவண ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தன் குடும்பத்து அர்ஜூனனை இழந்து நிற்கும் அந்த தர்மன் குமரி அனந்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
"உழைக்க கற்றுகொடுத்த மனிதனை கண்ணீரோடு அல்ல மன நிறைவோடு மரியாதையாக‌ அனுப்பு" என்பார் டிங் ஜியோ பெங்
மிகபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிவிட்டு எத்தனையோ குடும்பங்கள் பிழைக்க வழி செய்துவிட்டு, தேசியம் தென்னகத்தில் நிலைத்திருக்க வழிசெய்துவிட்டு செல்லும் அந்த உத்தமனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
இனி அந்த சிரிப்பினை எங்கே பார்ப்போம், கள்ளம் கடபமில்லா அந்த சிரிப்பினை எங்கு நோக்குவோம்
ஆம், தமிழிசை என்பர் சிரிக்கும் அந்த கள்ளங்கபடமில்லா சிரிப்பு அக்குடும்பத்தின் சொத்து
அந்த தமிழிசை அக்காவுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
அண்ணன் அமைவதெல்லாம் ஒரு வரம் அது வசந்தகுமாருக்கு அமைந்தது, அண்ணன் மகளும் அமைவதும் ஒரு வரம் அதுவும் அவருக்கு அமைந்தது
சித்தப்பன் நல்லவனாக அமைவது எல்லோருக்கும்வாய்க்காது, அந்த அதிர்ஷ்டம் தமிழிசை அக்காவுக்கும் அமைந்தது
யாரையும் குறை சொல்லாத, அடிதடியில் சம்பாதிக்காத, அநாகரிக அரசியல் செய்யாத ஒரு நல்ல ஆன்மா பிரிந்துவிட்டது
தமிழக அரசியலில் மிக அழகாக ஒளிவீசிய ஒரு நட்சத்திரம் இன்று உதிர்ந்துவிட்டது
மூப்பனாருக்கு சற்றும் குறையா வகையில் தேசியத்தை காத்து நின்ற அந்த ஜோதி அணைந்துவிட்டது
காலமெல்லாம் உழைத்த அந்த ஆன்மா இறைவனிடம் இனியாவது ஓய்வில் இருக்கட்டும், அவர் செய்த புண்ணியங்களும் தானங்களும் தர்மங்களும் அவரின் குடும்பத்தை காக்கட்டும்
எத்தனையோ குடும்பங்களில் வசந்தம் வீச செய்த வசந்தகுமாருக்கு மனம் கலங்கிய அஞ்சலிகள்
ஓடும் நீரும், உழைக்கும் மனிதனும் ஒருநாளும் கெட்டு போகமாட்டான் என்பதை நீருபித்துவிட்டு உறங்க சென்ற அந்த பெருமகனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.