Monday 31 January 2022

மனித மனம்.

 மனித மனம்.

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்.
வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக ஆலயம் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு இறைவனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், இறைவனை தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, இறை தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்தான்.
கடைசி நாளான, 48ஆவது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, 'என்ன இறைவா இது... விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே...' என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.
'டேய்... திருடன் திருடன்...' என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, மறைந்த சிறுவன், அங்கே ஒரு சிலையாக‌ தரிசனம் தந்தான்.
திகைத்துப் போன முதியவர், 'கடவுளே... என்ன நியாயம் இது... என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..' என்று கண்ணீர் விட்டார்.
உடனே, , 'பக்தா... உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்...' என்றார்.
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், 'இறைவ‌னே... என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே...' என்றார்.
'நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்...' என்றார் இறைவ‌ன். உண்மையை உணர்ந்தார் முதியவர்.
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஆழமான அறிவுக்குச் சிந்தனையே வித்தாகும்.

 ஆழமான அறிவுக்குச்

சிந்தனையே வித்தாகும்.
சிந்தனையில் இருந்து தான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல
கேள்விகளை எழுப்பி விடை காண வைக்கும்.
ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும்.
சிந்தனை இல்லாவிட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.
ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டு இருப்பதும், ஆராய்ந்து கொண்டிருப்பதும் தான் சிந்தனை.
இதன் மூலம் தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனை தான் நமது வாழ்வின் அடிப்படை.. வாழ்வே இதனால் தான் ஆக்கப்பட்டது என்கிறார் புத்தர்.
நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்தது தான்.
அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி
கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.
நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும்.
சிந்தித்துச்
செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும்.
சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது.
சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்.
சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.
சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால் தான் வெற்றி பெற முடியும்.
சிந்தனைப் பெருகும் போது அறிவு வளரும்.
அறிவு தெளிவு பெறும் போது மனநிலையில் வரவேற்கத் தகுந்த பல மாறுதல்களை உண்டு பண்ணும்.
அதன் மூலம் முன்பு செய்ய இயலாத' பல செயல்களைத் திறம்பட முடிக்க முடியும்.
நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது.
நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற முடியாமல் போகும்?
ஆம் நண்பர்களே
ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்தாலே போதும். அது தானாகவே வெற்றி பெற்று விடும்.

மகாத்மா காந்தி நினைவைப் போற்றுவோம்


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 29 January 2022

வரும் வெள்ளிக்கிழமை மாலை


 

நாம் வாழும் முறை .

 நாம் வாழும் முறை .

இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களுக்கும் எல்லாமும் நிறைவாகவே இருக்கத் தான் செய்கிறது.
பேராசைப்பட்டு நாம் தான் நம்மிடம் இருப்பவைகளை அறிந்து முழுமையாக உபயோகித்து மகிழ்ந்து வாழாமல்,பிறரிடம் உள்ளதைப் பார்த்து, பெரும்பாலும் பொறாமைப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.
வாழு! வாழ விடு! எவ்வளவு எளிமையான அழகான வார்த்தை.
வாழ்க்கை என்பது ஒரு பெரிய கடல் போன்றது. அதில் பயணம் செய்வது தான் நாம் வாழும் முறை.
கடல் பயணத்தில் பலவிதமான துயரங்களும், இழப்புக்களும் ஏற்படத் தான் செய்யும்..
அவ்வளவு இடர்ப்பாடுகளையும் கடந்து, பயணத்தை மகிழ்ச்சியாக்கி, அனுபவித்து, நாமும் நல்ல முறையில் வாழ்ந்து, பிறருக்கும் நல்ல உதாரணமாய், உபயோகமானவர்களாக வாழ்ந்து காட்டுவோம்...
அதாவது., மனிதனின் எண்ணங்கள் இன்று மாசடைந்து விட்டன என்ற நிலையை மாற்ற நாம் செய்ய வேண்டியது
இப்படிச் செய்தால்., மனிதனின் மாசடைந்த எண்ணங்கள் எங்குமே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடலாம்.
ஆம் நண்பர்களே
தனக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி நமக்கு என்ற நிலைக்குச் சென்றால் மனிதகுலம் மெச்சும்.. நாமும் மனிதரில் மாணிக்கம் ஆகலாம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய ஈரோடு நகரத்தார் பணி.

 வாழிய ஈரோடு நகரத்தார் பணி.

நாணயமும் நா நயமும் நிறைந்த லேனா நாராயணன்.
இன்று பிரம்மாண்டமான முறையில் திறப்பு விழா காணும் ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஈரோடு நகரத்தார் சங்கத்தின் எழில் மிகுந்த செட்டிநாடு பேலஸ்.
தனது நீண்ட கால உழைப்பால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றலால், சிறந்த சொற்பொழிவாளர் என்ற நிலையில், சிரித்த முகத்துடன் ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவராக உள்ள
உலகம்பட்டி லேனா நாராயணன்
தனது நிர்வாகக் குழுவினர் ஒருங்கிணைப்பில் அழகிய தோற்றமும் பொருட் செலவும் கூடிய புதிய செட்டிநாடு பேலஸ் திறப்பு விழாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்.
நண்பர் லேனா நாராயணன்
காசிச் சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் பணிக்கு களத்தில் முதன்மையான முன்னணியாளர் என்பது இந்த இனிய நாளில் கூடுதல் மகிழ்ச்சி.
நீங்கள் வாழ்க உங்கள் நிர்வாகிகள் வாழ்க. நகரத்தார்களின் மேன்மைக்கு மேன்மை சேர்த்து வரும் தங்கள் பேராற்றல் வாழ்க.
வாழிய செட்டிநாடு பேலஸ்
- மனிதத்தேனீ





வரும் 04-02-2022 வெள்ளிக்கிழமை மாலை வயிரவன்பட்டி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நமது பட்டி மன்றம்.



 

Friday 28 January 2022

ஆரோக்கியமான செயல் .

 ஆரோக்கியமான செயல் .

சந்தேகம் என்பது மிகப் பெரிய கொடிய நோய். இந்த சந்தேக நோய் எவ்விதக் கிருமிகள் இல்லாமலே ஒரு மனிதனுக்கு பிறவியிலோ, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப் பெரிய விசக் கிருமி.
சந்தேகம் என்பது ஆறாத, ஒரு
புற்றுநோய். இது வளர்ந்து கொண்டே இருக்கும். மற்றொரு புறம், நமது மகிழ்ச்சியை அழித்துக் கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது குடும்பம் தான்.
எத்தனை எடுத்துச் சொன்னாலும், பலர் இதனைப் புரிந்து கொள்வதில்லை. பின் உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ்நாள் முழுதும் வருந்திக் கொண்டு
இருக்கிறார்கள்.
இந்த சந்தேகம் ஒவ்வொரு மனிதனையும்
மரணக்குழி வரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டு என்பதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.
எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான செயல்.
ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே வீண் சந்தேகப்பட்டு வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே
கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.
ஒருவருக்கு வீண் சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்.
நமது அய்யன் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்
''தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.. (.குறள்:510..)
குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவு அடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும் என்கின்றார்.
ஆம் நண்பர்களே
நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்து இருக்கின்றோம் என்பதை உணருங்கள்.
நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்
அனாவசியமாக மற்றவர்கள் மீது வீண்' சந்தேகம் வைத்து உங்களின் வாழ்க்கையில்
அல்லல்பட வேண்டாம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Thursday 27 January 2022

சிதம்பரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் நகர விடுதி திறப்பு விழா.

 சிதம்பரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் நகர விடுதி திறப்பு விழா.

இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழாவில் நகரத்தார் ஐக்கிய சங்கத்தின் தலைவர் டாக்டர் இ. ஞானம்,
சிதம்பரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் தலைவர் பழ. பொன்னழகப்பன் செட்டியார், செயலாளர் இராம. இளங்கோ, தொழிலதிபர் வ. காசிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கே ஏ. பாண்டியன், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி, மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளர் ஆர். மெய்யப்பன், நகரத்தார் திருமகள் வள்ளிக்கண்ணு நாகராஜன் , கட்டிடக் குழு செயலாளர் நா. மீனாட்சி சுந்தரம் உள்ளனர்.
அரங்கம் நிறைந்து பெருந்திரளான நகரத்தார் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிர்வாகிகள் மிகச்சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
வாழிய சிதம்பரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் பணி. - மனிதத்தேனீ



மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஏற்றத் தாழ்வுகளை அகற்றிட கல்வி .

 ஏற்றத் தாழ்வுகளை அகற்றிட கல்வி .

நீங்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள் என்றால், உலகத்தில் உள்ள நல்ல நிகழ்வுகளை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக கல்வி கற்க வேண்டும்.
சமூகத்தில் நற்பெயருடன் இருக்க நன்றாகப் படிக்க வேண்டும். ஒரு படித்தவர் என்று சொல்வதில் பல நன்மைகள் உள்ளது.
கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோரின் வாக்கு. இதனை மனதில் நிறுத்தி நன்றாகப் படிக்க வேண்டும்.
கல்வி என்பது ஒரு உறுதி மிக்க மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான வாழ்க்கைக்கும் அவசியம்.
ஒரு படித்தவர் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பைக் கொண்டு இருக்கிறார்.
இன்றைய உலகில் உயிர் வாழ்வதற்கு பணம் முக்கியம் என்பதைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
நீங்கள் மிகவும் படித்தவர்கள், திறமையுடன் தங்கள் வேலைகளை செய்வீர்கள் என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்
எல்லோரும் சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ள இடமாக உலகைப் பார்க்க விரும்பினால்,கல்வி தேவைப்படுகிறது.
ஏழைகளுக்கு வாய்ப்புகளை உலகம் முழுவதும் திறந்து விடுகிறது,இதனை முழுமையாகப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வி என்பது பெண்களின் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
நீங்கள் சுய சார்புள்ள நபராக விரும்பினால் கல்வி மிகவும் முக்கியம். நீங்கள் நிதி ரீதியாக சுயாதீனமாக ஆக உதவுவது கல்வி,
சொந்த முடிவை எடுக்க நீங்கள் படித்த கல்வி பெரும் பங்கு வகுக்கிறது. உண்மையில் உங்கள் கனவுகளை மாற்றியமைக்கிறது.
உங்கள் கனவு என்ன, வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் செல்வந்தர்களா? பிரபலமாக இருக்க விரும்புகிறீர்களா? மக்களை மதிக்கும் ஒரு மிக வெற்றிகரமான நபராக நீங்கள் விரும்புகிறீர்களா? சரி, இது அனைத்திற்கும் முக்கியமானது கல்வி
கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும்.
அறிவியலும், சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும்.
ஆம் நண்பர்களே
வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும்.
வாழ்க்கையை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் கல்வியைப் பயன்படுத்த வேண்டும்.

வாழிய பல்லாண்டு. நேற்று முத்து விழா கண்டு மகிழும் அறப்பணிச் செம்மல், காரைக்குடி அழ. சொ. அழகப்பச் செட்டியார் - அலமேலு ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



 

மனநிறைவும் அமைதியும் .

 மனநிறைவும் அமைதியும் . .

நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்குப் பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கிறோம்...
அத்தோடு, இல்லாததை நினைத்து பலநேரங்களில் வருந்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக, இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்...
இருப்பதை வைத்து நிறைவு அடைவதும், இல்லாதை நினைத்து வருத்தபடாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ!, அவரே நோயற்ற நிலையுடன் நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்...
அன்று தென்றல் ஒரு பாறையைக் கடந்துபோனது. அது போகும்போது அந்தப் பாறையின் மேல் ஒரு சிறிய விதை கிடந்ததைக் கண்டது...
உடனே தென்றல், அந்த விதையிடம், நீ இருக்கிற இடத்தைக் கண்டாயா, அது ஒரு பாறை. அங்கு உன்னால் எதுவும் செய்ய முடியாது...!
அதனால்!, என்னோடு வந்துவிடு, நான் உன்னை பாதுகாப்பாக ஒரு நல்ல நிலத்தில் விட்டுச்செல்கிறேன். நீ வளர்ந்து பெரிய மரமாகி விடுவாய் எனக் கூறியது...
அதற்கு அந்த விதை, பரவாயில்லை, நீ உனது வழியில் செல். நான் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எப்படியாவது உயிர்வாழ முயற்சி எடுக்கிறேன் என்று கூறி, தென்றலோடு செல்ல மறுத்துவிட்டது...
தென்றலும் தன் வழியே சென்றது. ஆறுமாதம் சென்று அந்த தென்றல் அதே வழியில் வந்தது. அந்த இடத்தில் ஒரு மரத்தைப் பார்த்ததும் தென்றலுக்கு வியப்பு...!
நீ அந்த விதைதானே!, ஆறு மாத காலத்திற்குள் நீ எப்படி இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கிறாய் என்று தென்றல் கேட்டது...
அதற்கு அந்த விதை, நான் இந்த இடத்தில் கிடைத்த ஒரு சிறிய மழைத்துளியைப் பயன்படுத்தி, என் வேரை ஊன்றினேன். பின்னர் என் வேரைப் பரப்பி இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்திருக்கிறேன்...
ஆக!, நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல., எனது மனநிலை எப்படி இருக்கின்றது என்பதுதானே முக்கியம். அதனால்தான் இன்று இவ்வளவு பெரிய மரமாக நான் உருவாக முடிந்தது என்று சொன்னது...
ஆம் நண்பர்களே
நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். அது, வாழ்க்கையில் மன நிறைவையும், அமைதியையும் ஏற்படுத்தும்.
கிடைத்த வாழ்க்கையைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும். மகிழ்ச்சியான நாட்களைத் தொடங்க, காலை எழுந்ததும் நமக்கு இருப்பதை வைத்து மனநிறைவு கொள்ளவேண்டும்.
இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 25 January 2022

இன்று காலை மதுரை திருநகரில் எங்கள் தகப்பனார் சிவ. க. ராமன் செட்டியார் 60 ஆண்டுகள் முன்பு கட்டிய சி. 24 வீட்டில் மராமத்துப் பணிகள் செய்திட வாஸ்து நாளில் சிறப்பு வழிபாடு.

 இன்று காலை மதுரை திருநகரில் எங்கள் தகப்பனார்

சிவ. க. ராமன் செட்டியார் 60 ஆண்டுகள் முன்பு கட்டிய சி. 24 வீட்டில் மராமத்துப் பணிகள் செய்திட வாஸ்து நாளில் சிறப்பு வழிபாடு.
மூத்த சகோதரர் ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், இளைய சகோதரர் ஆர். சம்பந்தன், வள்ளியம்மை சம்பந்தன், மூன்றாவது சகோதரி மீனாட்சி ராஜன், என் எஸ். ராஜன், மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார்.
கட்டிட கலைஞர் விளாச்சேரி
எம். தங்கப்பாண்டியன்.
வாழிய முன்னோர் மனை.

















மரியாதை எனும் உயர்நிலை .

 மரியாதை எனும் உயர்நிலை .

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின்
சுயசரிதையைப் படித்தோம் என்றால் அவர்களிடத்தில் தலைக்கனம் ( EGO) என்ற குணமே இருக்காது.
தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ்நிலை பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்க மாட்டார்கள்.
சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்..
ஒரு நாள் மாலை வேலை முடியும் தறுவாயில் இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாதன( Freezer ) அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக் கொண்டு விட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா.... உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பி விட்டனர்...
இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணிக் கவலை அடைந்தான் சிவா.... அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தான்..
தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்..... மகிழ்ச்சியில் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டான்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும், சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..
ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்... அப்போ தான் உங்களைக் கண்டு பிடிச்சேன் ." என்றார்..
ஆம் நண்பர்களே
ஒருவருக்கொருவர் மற்றவர்களைத் தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர் என்று தரக்குறைவாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மரியாதை
(அன்பு) செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்.
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து உங்களைப் பெரிதும் விரும்பச் செய்யும்.
ஒருவருடைய மனதைப் புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும் போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 24 January 2022

மரியாதை எனும் உயர்நிலை .

 மரியாதை எனும் உயர்நிலை .

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின்
சுயசரிதையைப் படித்தோம் என்றால் அவர்களிடத்தில் தலைக்கனம் ( EGO) என்ற குணமே இருக்காது.
தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ்நிலை பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்க மாட்டார்கள்.
சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்..
ஒரு நாள் மாலை வேலை முடியும் தறுவாயில் இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாதன( Freezer ) அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக் கொண்டு விட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா.... உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பி விட்டனர்...
இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணிக் கவலை அடைந்தான் சிவா.... அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தான்..
தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்..... மகிழ்ச்சியில் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டான்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும், சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..
ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்... அப்போ தான் உங்களைக் கண்டு பிடிச்சேன் ." என்றார்..
ஆம் நண்பர்களே
ஒருவருக்கொருவர் மற்றவர்களைத் தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர் என்று தரக்குறைவாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மரியாதை
(அன்பு) செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்.
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து உங்களைப் பெரிதும் விரும்பச் செய்யும்.
ஒருவருடைய மனதைப் புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும் போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் ஆன்மிகச் செல்வர், மேனாள் ஐ சி ஐ சி ஐ மேலாளர், பல்வேறு அறப்பணிகள் சிறக்க துணை நின்றிடும் நேர்மையும் நல்வழியும் கொண்ட இணையர், காசிச் சத்திரப் பணிகளுக்குப் பேருதவி புரியும் அன்பர், மதுரை ஒத்தக்கடை நகரத்தார்களின் முன்னோடி, அலவாக்கோட்டை அண்ணன்
ஆர்எம். அருணாசலம்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


மனிதத்தேனீயின் தேன்துளி


 

சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

 சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

அண்மையில் ஒரு சர்வே செய்தார்கள். உங்களுக்குப் பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்களாம்.
ஊருக்குச் செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக் கொள்வார்கள். எந்த ஊருக்குப் போக வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அது போல ஏதோ சோற்றுப் பாட்டிற்கு வேலை என்று, ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரி தான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.
வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையைக் கேட்டுப் பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த உலகம் நம் காதுபட சதா சொல்லி கொண்டு இருக்கிறது. அரசாங்க வேலைக்குப் போ.... நிறைய சம்பளத்துடன் மற்ற வகையில் நிறைய கிம்பளம் கிடைக்கும் என்று..
நல்ல இடத்தில் இருந்து பெண் கொடுப்பார்கள். சொந்தத் தொழில் இறங்கு. ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். நமக்கோ வாலிப வயசு, அனுபவமோ இல்லை. பெரியவர்களைச் சார்ந்தே பழகி இருக்கிறோம்.
எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்துக் கொள்கிறோம்.
பின் கொஞ்ச நாளில் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனை ஆக எழுகிறது. என்ன சாதிக்கிறேன், இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.
இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை. என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோபமாக எழுகிறது.
உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையைத் தேர்ந்தே எடுத்துக் கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
தன்னை நம்புகிறார்கள், தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.
தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன்படுகிறார்கள். அவர்கள் சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை.
சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழுத் திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆம் நண்பர்களே
நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்.உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு அதன்படி நடங்கள்.
உங்கள் உள் மனம் கூறுவதைக் கவனியுங்கள்.
எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உங்களை எவ்வழியில் செல்ல உந்துகிறதோ அதன்படி நடங்கள்.