Monday 31 October 2016

Makkal Kurual Paper 31.10.2016 Page 5


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வயிற்று பூச்சிகளை எளிதில் வெளியேற்றும் உணவு இதுமட்டும் தான்!
சத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது.
இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும்.
முதிர்ந்த புடலங்காய் கசக்கும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம்.
இதில், புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம் மற்றும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், ப்ளேவனாய்ட்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது, புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் போதும். புடலங்காய் இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது.
அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
இந்நிலைக்கு ஆளானோர், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
காலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாக பிழிந்து, வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டால் இதயம் சமநிலை பெறும்; இதயமும் பலம் பெறும்.
நன்றி ஆா் பாஸ்கர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா - கருத்தரங்கம் News & Photos



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மகிழ்ச்சி தருவது மனமே...*
கவலை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அரசன் இருந்தான்.
ஒருநாள் தனது சபையைக் கூட்டி, ‘‘எல்லாரும் பற்றி பேசுகிறார்களே... கவலை என்றால் என்ன? 
கவலை எப்படியிருக்கும்?
என்ன செய்யும்…?’’ எனக் கேட்டான்.
‘‘இது தேவையில்லாத விஷயம் மன்னரே! அதைப் பற்றியெல்லாம் இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை...’’ என்றார் அமைச்சர்.
மன்னர் விடாப்பிடியாக ‘"எனக்குக் கவலையைப் பற்றி உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாராவது விளக்கிச் சொல்லுங்கள்…’’ என்றார்.
ஆளாளுக்கு கவலையைப் பற்றி விளக்கம் சொன்னார்கள்.
‘‘இவ்வளவுதானா கவலை? இது வெறும் பயம். இதற்குப் போயா நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வருந்துகிறீர்கள்?’’ என மன்னர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்தார்.
‘கவலை என்பதை மன்னருக்கு எப்படி உணர்த்துவது?’ என எவருக்கும் தெரியவில்லை.
அப்போது அரண்மனை ஓவியன், ‘‘மன்னரே நான் கவலையை ஓவியமாக வரைந்திருக்கிறேன். பாருங்கள்…’’ எனக் காட்டினான்.
அதை வாங்கிப் பார்த்த மன்னன் திகைத்துப் போனார்.
காரணம், அதில் அவரது உருவம் மெலிந்து, நரைத்து, முகமெல்லாம் சுருக்கம் விழுந்து, ஒரு நோயாளியைப் போல் இருந்தது.
அவர் ஆத்திரத்தில் ‘‘முதுமையில் நான் இப்படி ஆகிவிடுவேனா..?’’ எனக் கேட்டார்.
அதற்கு ஓவியன் ‘‘முதுமையில் நீங்கள் இப்படி ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று பதில் சொன்னான்.
‘‘இதை எப்படி தடுப்பது? வாழ்நாள் முழுவதும் இதே இளமையுடன் சந்தோஷத்துடன் எப்படி வாழ்வது?” எனக் கேட்டார் மன்னர்.
ஒருவரிடமும் பதில் இல்லை.
அன்றிரவு மன்னரால் உறங்க முடியவில்லை.
மறுநாள் சபைக்கு வந்தபோது அமைச்சர் சொன்னார்:
‘‘மன்னா உங்கள் முகத்தில் கவலை படர்ந்திருக்கிறது. மனித மனதில் ஒரேயொரு கவலை புகுந்துவிட்டால் போதும், அது பெருகி வளர்ந்து விடும். இனி நீங்கள் நினைத்தாலும் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார்
மன்னர் வருத்தமான குரலில் கேட்டார், ‘‘முதுமையில் நான் மெலிந்து நோயாளி போலாகி விடுவேனா..?’’
‘‘இது உங்கள் குரல் இல்லை. கவலையின் குரல் மன்னா! இனி, உங்களால் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார் அமைச்சர்.
மன்னர்
கவலையில்
மூழ்க தொடங்கினார்.
ஆக...
கவலை, மகிழ்ச்சி போன்ற தீய மற்றும் நல்ல உணர்வுகள் அனைத்தும் நமது எண்ணத்தில் (சித்தத்தில்) இருந்து தான் தொடங்குகின்றன...
ஆகவே, சித்தம் தெளிவாக இருந்தால் தீய சக்திகள் (உணர்வுகள்) நெருங்காது...
இவ்வாறு தவறான எண்ணங்களை விலக்கியே பேரின்ப நிலையை பெற்றார்கள் நம் சித்தர்கள்...
*மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை...*
என்றார்கள் சித்தர்கள்.
ஆக, கவலை போன்ற தவறான உணர்வுகளை போக்க...
உண்மையான சித்தர்களை அறிவோம்...
அவர்கள் கூறிய கருத்துக்களை கற்போம்...
அதன் வழி நடப்போம்...
நம் வாழ்க்கை மகிழ்ச்சியில் திழைக்க... 💐
நன்றி அறிவானநந்தம்

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மூளை..!
நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்:
1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும்.
2. உணவை தவிர்த்தால் ,இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும்.
3. அதிகமாக சாப்பிடுவது மூளைத் தமனிகளை கடினமடையச் செய்து, ஞாபக சக்தியைக் குறைத்துவிடும்.
4. அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும்.
5. உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது மூளை என்பதால் மாசுபட்ட காற்றினைச் சுவாசிக்கும் பொழுது , மூளையின் செயல்திறனானது குறைந்துவிடும்.
6. நல்ல தூக்கம் இல்லாவிட்டால், மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும் தூங்கும் போது முகத்தை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது. ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய
ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.
7. உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்தாலோ அல்லது படித்தாலோ மூளை பாதிக்கப்படும்.
8. குறைவாக பேசினால் மூளையின் செயல்திறனும் குறையும் . அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.நன்றி ஆா் பாஸ்கர்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴
🔮உன்னைப் பத்தி நல்லா புரிந்து வைத்திருப்பவர்களிடமும், தெரிந்து வைத்து இருப்பவர்களிடமும் புதுசா உன்னைப் பத்தி சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யாதே.
🔮நமது திறமைக்கான ஊதியம் கிடைக்கவில்லை என அழுவதை விட நமது திறமைக்கு ஒரு வேலை கிடைத்ததே என சந்தோசப் பட வேண்டும்.
🔮படிக்காதவர்கள் பிறருக்குத் தருகிற மரியாதை அதிகம். ஆனால் படித்தவர்களில் சிலர் யாருக்குமே மரியாதை தருவது இல்லை என்பது வருத்தம்.
🔮எல்லோர் இடமும் "நீ செய்வது நன்று" என்ற வார்த்தையை நாம் எதிர் பார்ப்பது இல்லை. நமது எதிர் பார்ப்பு எல்லாம் நமக்குப் பிடித்தவர்களிடம் இருந்து மட்டும் தான்.
🔮பிடிக்காதவர்களைப் பழி வாங்கினால் சாதாரண மனிதர் தான். பிடிக்காதவர்களை அலட்சியம் செய்தால் உயர்ந்த மனிதர் ஆவோம்.
🔮பணிந்து பேசுவது பயத்தினால் அல்ல மற்றவர் மீது உள்ள மரியாதையால். துணிந்து பேசுவது அலட்சியத்தால் அல்ல மற்றவர் மீது உள்ள அக்கறையால்.
🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*
நன்றி எஸ் நாகப்பன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தீபாவளி : வாரியார் விளக்கம்.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.
பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.
ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:
சோமவார விரதம்
உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
திருவாதிரை விரதம் (மார்கழியில்)
சிவராத்திரி விரதம் (மாசியில்)
கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
பாசுபத விரதம் (தைப்பூசம்)
அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே
இந்த விரதம் நோற்கும் முறை
புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.
ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.
மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.
பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.
கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.
கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.
இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.
இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.
தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.
[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]

மல௫ம் நினைவுகள்


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பகவத்கீதை
பொறிகள் புலன்களிடமிருந்து பொருந்துவதால் குளிர், வெப்பம், இன்பம், துன்பம் முதலியவை உண்டாகின்றன. சுகமும் துக்கமும் என்றும் நிலைப்பதில்லை. அது நொடிப் பொழுதில் மறையும். இவற்றில் எதுவும் உண்மையானது இல்லை. உறவுகளும் இப்படித்தான்.
உறவுகளும் நிலையானது இல்லை. தர்மத்தை நோக்கி பயணிப்பவன் உறவுகளுக்காகவோ, இன்ப துன்பங்களுக்காகவோ, அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இதனால் அவன் அடையும் லாபம் மோட்சம், முக்தி என்ற பேரானந்தமே ஆகும்.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
நன்றி ஆா் பாஸ்கர்

மனிதத்தேனீ இல்லத்தில் தீபாவளி


உடல் நலம் மன நலம் மேம்பட பணியிடத்தில் நட்பு அவசியம்


மனிதத்தேனீயின் தேன்துளி



Malai Murasu Paper 28.10.2016 page 4


என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?
கண்ணபிரானும், அர்ஜுனனும் கால்நடையாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை பார்த்து அது புறா தானே அர்ஜூனா என்றார் கண்ணன்.
அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.
ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.
மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...
என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.
என்னடா நீ!
நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!
அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்றகண்ணனிடம்
கண்ணா!
என்பார்வையை விட உன்வார்த்தையில்எனக்கு நம்பிக்கைஅதிகம்.
மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்!
நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...!
உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.அர்ஜூனன்
பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! என்று புராணங்களே கூறுகையில்
நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால்....
மனிதனானவன் பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க இயலாது....
இறைவனின் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையே முதல் படி

Wednesday 26 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கர்மா என்பது என்ன..?
கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்!
அந்தக் கதை இதோ:
ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்..
“மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!
சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!
நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்,
ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!
அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்!
அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது!
இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார்..
“இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்..
நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்...
எனவே,
நல்லதையே தேடுவோம்...
நல்லதையே சிந்திப்போம்...
நல்லதே நடக்கட்டும்!
நன்றி அஸ்வின்

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வாழ்வின் யதார்த்தம் 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉பற்றி
காஞ்சி பெரியவா !!📢📢
வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று கதறுவார்கள். சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர் சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.
🕉🙏🏼🕉
நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!
உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது… உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?
இல்லையே….
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ! உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.
அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
உங்களுக்கு ஏன் வீண் கவலை… எதுவும் உங்கள் கையில் இல்லை…. அமைதியாய் இருங்கள்.🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🙏🏼🍇🍇
நன்றி நாகசுப்பிரமணியன்