Wednesday 27 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மற்றவர்களை குறை காணும் முன்பு சுய பரிசோதனை செய்யுங்கள்....
ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும் சாப்பிட குட் டே பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு சேரில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார். மகரயாழ் அவருக்கு ஒரு சேர் தள்ளி ஒரு வாட்டசாட்டமான நபர் உட்கார்ந்து இருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர்
மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்,ச்சே பிஸ்கட் திருடி திண்கிறானே இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம் இல்லையா என்று நினைத்து கொண்டே அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
இப்படியே இருவரும் மாறி மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்,சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்த சேரில் வைத்தார்.அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.இப்படியா திருடி திண்பது என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.
அவருக்கு ஒரே ஆச்சரியம் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் அவர் பையில் இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.
*நீதி: "அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் தகுதியானவரா என்று நினைக்க வேண்டும்”*

No comments:

Post a Comment