Wednesday 31 July 2019

தினத்தந்தி மதுரை 31.07.2019 பக்கம் 9


பள்ளிப் பருவம் தொட்டு தொடர்ந்து நகரத்தார் நலனுக்கு பணியாற்றிவரும் மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி.


கடந்த மூன்று ஆண்டுகளாக காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் துணைத் தலைவராக பல்வேறு நிலைகளில் துடிப்புடன் சிறந்த பணியாற்றி முன்னோர்கள் வழங்கிய பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க களப்பணி ஆற்றியவர்.
தொடர்ந்து பல அறப்பணிகளையும் மீட்புப் பணிகளையும் தொய்வின்றிச் செய்திட பேராதரவை வழங்கிட அன்புடன் வேண்டுகின்றேன்.
மனிதத்தேனீ 31-07-2019

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...


அருமையான பதிவு.அதற்கான விளக்கம் மேலும் சிறப்பு.
விளக்கத்தின் மறு பதிப்பு👇 சிங்கமாய் இருந்தால் மட்டும் போதாது அதற்கும் ஒருநண்பன் வேண்டும். சிங்கமாய் இருந்தால் கூட ஓநாய்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டால் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிவிடும். மனித வாழ்க்கையிலும் ஓநாய்கள் கூட்டம் உண்டு. சிங்கமாய்இருந்தாலும்தனித்துஇராதே துணையோடு இரு! சிங்கமாய் இருந்தால் கூட துணையோடுதான் இருக்க வேண்டும். கூட்டமாய் இருந்தால் இன்னும் சிறப்பு. நம் முன்னோர்கள் அப்படித்தானே வாழ்ந்தார்கள். தற்போதும் அப்படி வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏக்கம் அடைகிறது.இந்த ஏக்கம்அனைவரி்ன் மனதி லும்எழுந்து நிற்கவேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?..''
.........................................
பிரச்சனை என்றால் என்ன? அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாக கிடையாது.
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையான பிரச்னைகள் நம் எண்ணங்களில்தான் இருக்கின்றன.
''இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்று பெரிய மனிதர்களாக இருக்கும் பலரும் மிகவும் ஏழ்மையான பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள்தான்.
நமக்கு வரும் பிரச்சனைகள் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ, பணி செய்யும் மேலதிகாரிலிடமோ நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனதில் இருக்கிறது.
ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் மதிய உணவு இடை வேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும்.( பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம் நடக்க வேண்டும்.
ஒரு முறை ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்.
அந்த அதிகாரி பாவம்.. தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்து விடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார்.
பாதி தூரம் கடந்தவுடன் ""என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்."
"உங்கள் தலையில வச்ச பேப்பர் வெயிட்டை நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே எடுத்து விட்டோம்.
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே! பிரமாதம் என்றார்கள்..
ஆம்.,நண்பர்களே..,
இது நகைச்சுவை அல்ல;
இது வாழ்வியல் விளக்கம்.
இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக் கொண்டும்,நாமே உருவாக்கிக் கொண்டும் இருப்பதால்தான்., நாம் பல வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டி ருக்கிறோம்...💐🙏🏻🌺

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


Tuesday 30 July 2019

ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினக் கூட்டம்


காந்தி நிகேதன் ஆசிரம ஆண்டு விழா நிறுவனர் பிறந்தநாள் - மலர் வெளியீடு








மதுரைமணி 30.07.2019 பக்கம் 4


இன்று மாலை 5 மணிக்கு.


தினமலர்மதுரை 30.07.2019 பக்கம் 3


தினபூமி மதுரை 30.07.2019 பக்கம் 9


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'உழைத்து ஈட்டுகின்ற பணம் தான்..''
...........................................
திருட்டுத்தனமாகப் பணத்தை ஈட்டுபவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது; அந்தப் பணத்தைப் பலர் அறிய நிம்மதியாக அனுபவிக்கவும் முடியாது.
பணத்தை அனுபவிக்காமல், பிறருக்குக் கொடுக்காமலும் இருப்பவனுடைய செல்வம், வீதியில் செல்பவர்களுக்குத் தான் சொத்தாகப் போய்ச் சேரும்’ என்பது பழமொழி.
நியாயமான வழிகளில் பணத்தைச் சேமிப்பவர்களே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உழைத்து ஈட்டுகின்ற பணம் தான் திருப்தியையும் பெருமையையும் தரும்.
அதில் நாம் வாங்குகிற பொருள்கள் ஒவ்வொன்றும் நம் வியர்வையின் நினைவுச் சின்னங்களாக நீடிக்கும்.
ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்
பட்டார்.
நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?'
"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர். நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.
"பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன் என்றார்..
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டு இருந்தார்.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டு விடுங்கள் என்றார் நீதிபதி..
முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.'
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லி தான். அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?
மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. அகந்தையின் தேவைகள் தான்
அதிகம்.
உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.
அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் அகந்தைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது.. ''என்றார் நீதிபதி.
இயக்குனர் பெரிதாக அழ ஆரம்பித்தார்.அவர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது.
ஆம்.,நண்பர்களே..,
மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டிப் பொருளைப் பறிப்பவர்கள்... யாரானாலும் பறித்த சொத்துக்கள் என்றைக்கும் நிலைக்காது.
கொண்டு போக முடியாத பொருளைச் சேர்ப்பதை விட இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.
இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வரும் காலத்தில் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


இன்று காலை எனது சிறப்புரை.


Monday 29 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


கலைத்தந்தை கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினக் கூட்டம்




தினபூமி மதுரை 28.07.2019 பக்கம் 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)

ஒரு
மகன் பார்க்கக் கூடாதது
தந்தையின் கண்ணீர்
ஒரு 
தாய் கேட்கக் கூடாதது
மகனின் அவப்பெயர்
ஒரு
சகோதரன் காட்டக் கூடாதது
உடன்பிறந்தோரிடம் அந்தஸ்த்து
ஒரு
தம்பதிகள் கொள்ளக் கூடாதது
தங்களுக்கு இடையில்
சந்தேகம்
ஒரு வெற்றியாளன்
எண்ணக் கூடாதது
எளியவன் என்ற இருமாப்பு
ஒரு
தலைவன் அடையக் கூடாதது நொடிப்பொழுது சபலம்
ஒரு
ஊர் தூற்றக் கூடாதது வாழ்ந்து கெட்டவனின் வறுமை
கடும் பசியிலும்
உண்ணக் கூடாத இடம்
அவமதித்தவனின் விருந்து
பகைவனிடத்தும்
மகிழக் கூடாதது
அவனது இறப்பு
ஒருவன் செய்யக் கூடாத காரியம்
தர்மம் கொடுப்பதை தடுப்பது

மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள விழா


மனிதத்தேனீயின் தேன்துளி


இன்று மாலை மாநகர் மதுரையில் நடைபெற்ற வைகைப் பெருவிழா.

இன்று காலை நடைபெறும் நமது கூட்டம்.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தன்னம்பிக்கை பதிவு.*
*நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்.*
பவளசங்கரி.
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
*பகிர்வு*
~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி.*
*ஆம், தெளிந்த நீரோடை போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.*
*இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது.*
*ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை.*
*காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம்.*
*நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான்.*
*மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று.*
*நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி.*
*மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது நம்மிடமே உள்ளது.*
*நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த சரக்கிற்கு பெருத்த லாபம் கிடைக்கப்போவதாக கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார்.*
*ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறிவிட, அவர் எதிர்பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்துவிட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை.*
*ஆனாலும் அவர் தாம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு?*
*கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரேதானே பொறுப்பாக முடியும்.*
*ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது.*
*மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!*
*மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது.*
*அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்.*
*ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள்.*
*இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.*
*வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித்தீவிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை.*
*அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும்.*
*அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே?*
*இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை.*
*உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்துவிட்டால் மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா?*
*அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்.*
*அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம்.*
*நல்ல வாழ்த்துகளைப் பெற்றுத் தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம்.*
*அதை அனுபவிக்கப் பழகி விட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும்.*
*வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி.*
*நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகிவிடும்.*
*குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.*
*நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?*
*பெற்ற சிறிய வெற்றியையும் மனம் மகிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா....*
*அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே.*
*ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம்.*
*அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே.*
*இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத்தானே அர்த்தமாகிறது.*
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
*பகிர்வு*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


எம்.எல்.ஏ. என்றால் இப்படி இருக்க வேண்டும்?

எம்.எல்.ஏ. என்றால் இப்படி இருக்க வேண்டும்?
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்
இந்நிலையில், அசாமின் அம்தய் தொகுதியில் இருந்து தேர்வான பா.ஜ., எம்.எல்.ஏ., மிரினால் சாய்கியா, தனது சொந்த செலவில் உணவு சமைத்து விநியோகித்து வருகிறார். இதுவரை அவர் 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து விநியோகம் செய்துள்ளார். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அவரே உணவு தயாரிக்கிறார். இதற்காக, வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதில், உணவு சமைப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்துள்ளார். மேலும், இந்த வாகனம் மூலம் நடமாடும் மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக மிரினால் சாய்கியா கூறுகையில், வெள்ளத்தால், உதவ வேண்டும் என்பதற்காக சொந்தமாக வாகனம் வாங்கினேன். முதல்நாள் சொந்த செலவில் உணவு சமைத்து வநியோகம் செய்தேன். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த பலர், தாமாக முன்வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது, தேவைக்கும் அதிகமாக பணம் சேர்ந்துள்ளது. இதனால், நன்கொடையாளர்கள் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கூறிவிட்டேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதே எனது நோக்கம். அவர்களுக்கு, அரிசியும், பருப்பும் இலவசமாக வழங்க முடியும். ஆனால், அவர்கள் சமைப்பதில் சிக்கல் ஏற்படும். எனது தொகுதியான கும்தய் மற்றும் அருகில் உள்ள போகாகாட் தொகுதியில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம் செய்துள்ளேன்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்களால் பாதிக்கப்படும். இதனால், மொபைல் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டேன். இதற்காக அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவினர். அரசே, மருந்துகளை விநியோகம் செய்தது என்றார்.
மேலும், மிரினால் சாய்கியா, விவசாயிகளுக்கு, இலவசமாக நெல் நாற்றுகளை வழங்கி வருகிறார். இதுவரை 800 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். பொது மக்களுக்கு உதவுவதே எனது நோக்கம் எனக்கூறும் அவர், எம்எல்ஏ.,வாக பதவியேற்பதற்கு முன்னரும் இவ்வாறு உதவி செய்துள்ளேன் என்கிறார். இவரின் இந்த பணியை தொகுதி மக்கள் ஏராளமானோர் பாராட்டியும்,இவை எல்லாம் உண்மை எனவும் கூறுகின்றனர்.
குறிப்பு;இப்படி உதவக் கூடிய ஒரு எம்.எல்.ஏ.தமிழகத்தில் உண்டா?எம்.எல்.ஏ.என்று எதற்காக தேர்வாகி உள்ளோம் என்றுதான் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியுமா?போதுமான நிதி சேர்ந்து விட்டது இனி பணம் அனுப்பாதீர்கள் என அறிக்கை விடும் ஒரு எம்.எல்.ஏ வை தமிழக்தில் கண்டது உண்டா?இத்தனை கோடி தமிழர்களில் தொகுதிக்கு ஒரு தமிழன் கூட நல்லவன் இல்லையா?அல்லது நல்லவனை தேர்ந்து எடுக்கும் தகுதி தமிழர்களுக்கு இல்லையா?




மனிதத்தேனீ மணிவிழா மலர் வெளியீட்டு விழா

மனிதத்தேனீ மணிவிழா மலர் வெளியீட்டு விழா வரும் 11-08-2019 மாலை வடக்கு மாசி வீதி தருமபுர ஆதீனம் மண்டபத்தில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை வழங்கி மகிழும் மூத்த பத்திரிகையாளர் ப. தி௫மலை, தியாக தீபம் அ. பாலு, கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், சீ. கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் மு. முருகேசன்.


Saturday 27 July 2019

கூப்பிடுங்கள் கண்ணதாசனை..

கூப்பிடுங்கள் கண்ணதாசனை..
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன் ,
அந்த பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..!
இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.
'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.
இந்தக் காட்சிக்கு 'அபிராமி அந்தாதி' பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை.
"கூப்பிடுங்கள் கண்ணதாசனை!"
வந்தார் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.
கண்ணதாசன் தயாரானார் :
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம்.
எழுதிக் கொள்ளுங்கள்."
கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.
"மணியே மணியின் ஒளியே
ஒளிரும் மணி புனைந்த
அணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே
பிணிக்கு மருந்தே
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே."
இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்.
கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்:
"சொல்லடி அபிராமி
வானில்
சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"
வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்.
கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.
பாடலின் இறுதி வரிகளாக , என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.
மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன்.
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள்.
அவள் துள்ளிக் குதித்து பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன்.
ஆம். திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.
(தென்காசியை அடுத்த மேலகரத்தில்
18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி)
அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச்
சொல்லும் வரிகள்.
பந்து துள்ளுவதைப் போல,
பாடல் வரிகளும் கூட துள்ளும்.
இதோ , அந்தப் பகுதி :
வசந்தவல்லி பந்தடித்தல்
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட -
இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட -
இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட -
மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.
இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன்.
முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்.
"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ."
இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.
நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது.
எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

''எல்லாம் நன்மைக்கே''..
...........................................
மனக் கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மனநோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த கற்பனையாக சொல்லப்பட்டதுதான் ''எல்லாம் நன்மைக்கே'' என்ற தன்னம்பிக்கை வாசகம்.
மன்னர் ஒருவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.
மன்னரின் நண்பர், வாழ்க்கையில் எது நடந்தாலும், `எல்லாமே நல்லதுதான்' என்பார்.
ஒருநாள் மன்னரும் நண்பரும் வேட்டைக் குச் சென்றார்கள். மன்னர் பயன்படுத்தும் துப்பாக்கியைத் துடைத்து தோட்டாக்களைப் போட்டுக் கொடுத்தார், நண்பர்.
மன்னர் துப்பாக்கியை எடுத்து சுட, அது வெடித்து, மன்னருடைய கட்டைவிரல் துண்டானது. வலியில் மன்னர் துடிக்க, அந்த சூழ்நிலையிலும் அந்த நண்பர் `இதுவும் நல்லதுதான்' என்றார்.
மன்னருக்கு கோபமும் எரிச்சலும் தாங்க வில்லை. ‘இல்லை... இது நல்லது இல்லை’ என்றுகூறி அந்த நண்பரை சிறையில் தள்ளினார். ஓர் ஆண்டு கழிந்தது. மன்னர் மீண்டும் வேட்டைக்குச் சென்றார்.
இந்த முறை அவர் போகக்கூடாத ஒரு பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கே சில காட்டுவாசிகள் மன்னரைப் பிடித்து, அவர்களது கிராமத்துக்கு கொண்டு போனார்கள்.
இந்த காட்டுவாசிகளோ, மனிதர்களைக் கொன்று மனித மாமிசத்தைச் சாப்பிடுவார்கள். அதன்படி மன்னரை தங்கள் குல தெய்வத்துக்கு நரபலி கொடுத்து அவரை சமைத்துச் சாப்பிட முடிவு செய்தார்கள்.
மன்னரை ஒரு தூணில் கட்டி, அவரைச் சுற்றி விறகுகளை அடுக்கி, தீ மூட்ட அருகில் வந்தபோது, மன்னருக்கு ஒரு கட்டைவிரல் இல்லை என்பதைக் கண்டு பிடித்தார்கள்.
அவர்களுடைய சம்பிரதாயப்படி அங்ககீனம் உள்ளவர்களை நரபலி கொடுக்கக்கூடாது. ஆகவே, அவரை விடுதலை செய்து விட்டார்கள்.
மன்னர் அரண்மனைக்குத் திரும்ப, எத்தகைய சூழலில் தன் கட்டை விரலை இழக்க நேரிட்டது என்பதை நினைவுகூர்ந்தார்.
அப்போது நண்பருக்கு தான் இழைத்த கொடுமையும் நினைவுக்கு வந்தது. உடனே சிறையில் அடைக்கப்பட்ட தன் நண்பரை விடுவித்தார்.
‘அன்றைக்கு நீ என் கட்டைவிரல் துண்டான போது, ‘இதுவும் நல்லது தான்’ என்றாய். அதனால்தான் இன்று என் உயிர் காப்பாற்றப்பட்டது என்று நடந்தவற்றைச் சொன்னார்.
அப்போது நண்பர் மீண்டும், ‘இதுவும் நல்லதுதான்’ என்றார். ‘என் ஆருயிர் நண்பரையே நான் சிறையில் அடைத்து விட்டேன். இதையும் நல்லது என்று எப்படிச் சொல்கிறாய்?’ என்று மன்னர் கேட்டார்.
அதற்கு நண்பர்... ‘நான் இன்று சிறையில் இல்லை என்றால், உங்களோடு காட்டுக்கு வந்திருப்பேன். அந்தக் காட்டுவாசிகள் என்னைப் பிடித்து இருப்பார்கள். நான் அங்ககீனம் இல்லாதவன்... இந்நேரம் என்னை பலி கொடுத்திருப்பார்கள்.
என்னை நீங்கள் சிறையில் அடைத்து வைத்ததால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்‘ என்றாராம்!
ஆம்.,நண்பர்களே.,
எப்போதுமே நேர்மறை (Positive -) ஆக ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டும். நம்பிக்கையோடு இருந்தால் தீமையிலும் நன்மை விளையும். சோதனைகளைக் கடந்து எத்தகைய சூழ்நிலையிலிலும் நாம் வெற்றி கொள்ளலாம்!
ஆக உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பமும் நன்மைக்காகவே என்பதை புரிந்து வாழ்க்கையை முன்னெடுத்து செல்லுங்கள்💐🙏🏻

மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள நிகழ்ச்சி


முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவைப் போற்றுவோம்


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த நாள் வாழிய புகழ்


மனிதத்தேனீயின் தேன்துளி


மாநகா் மதுரையில் நடைபெறும் வைகைப் பெருவிழா மூன்றாம் நாள் மகளிர் மாநாடு, மாலை நடைபெற்ற வைகை நதிக்கு ஆர்த்தி வழிபாடு.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*டென்சனை குறைங்க!*
ஒரு அலுவலகத்தில் பணி புரிந்து வந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.
அடுத்து என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி,
"நீங்க ஏன் ஒரு வெட்னரி டாக்டர் கிட்டபோகக் கூடாது?"
என்று கேட்டாள்.
அதிர்ச்சி அடைந்த கணவன்,
"உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றான்.
மனைவி சொன்னாள்,
"எனக்கொன்றும் இல்லை.
உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு.
காலங்காத்தால 🐔 *கோழி* மாதிரி எந்திரிச்சு,
அப்புறம்
🐦 *காக்கா* மாதிரி குளிச்சிட்டு,
🐒 *குரங்கு* மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு,
🐎 பந்தயக் *குதிரை* மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி,
அங்க 🐮 *மாடு* மாதிரி உழைக்கிறீங்க.
உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட 🐻 *கரடி* மாதிரி கத்துறீங்க.
மேலே உள்ளவங்க கிட்ட 🐱 *பூனை* மாதிரி பம்முறீங்க.
சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட 🐩 *நாய்* மாதிரி குரைக்கிறீங்க.
அப்புறம்
🐊 *முதலை* மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு,
🐃 *எருமை மாடு* மாதிரி தூங்குறீங்க.
அதனால தான் சொல்றேன். உங்களுக்கு வெட்னரி டாக்டர் தான் சரிப்பட்டு வரும்.
என்ன சொல்வதென்று புரியாமல் கணவன் விழிக்க,
மனைவி சொன்னாள்,
😳"என்ன *ஆந்தை* மாதிரி முழிக்கிறீங்க?"

Friday 26 July 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …!!

தட்டாமல் ஒலி எழுப்பும்
மேளம் …!!
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.
அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.
இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.
அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.
நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.
ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.
தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.
எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.
மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.
வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.
சாம்பல் கயிறு.
ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.
சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.
போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.
அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.
போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.
மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.
அடி எது? நுனி எது?
ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.
அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.
மரக்கொம்பை வீட்டுக்கு எடுத்து வந்த மகன் தந்தையிடம் காண்பித்து அரசனின் கேள்வியைக் கேட்டான்.
தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.
அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.
அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.
வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.
அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.
தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.
அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.
இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.
அனுபவம் தந்த பதில்கள்.
“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.
இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.
உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.
அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.
அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.