Thursday 30 November 2017

மதுரைமணி 30.11.2017 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏹குறை கூறும் உலகம் எப்போதும் குறை கூறிக் கொண்டு தான் இருக்கும். நீ குலுங்கி சிரித்தாலும் சரி, நீ குமுறி அழுதாலும் சரி.
🏹நீங்கள் சரியானவர்கள் என்பதற்காக, அடுத்தவரை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு கிடையாது.
🏹எவ்வளவு தான் துன்பங்கள் வந்தாலும் சிலரிடம் சொல்லாம இருக்குறது மறைப்பதற்கு அல்ல அவங்களும் கஷ்ட படக் கூடாதுனு தான்.
🏹படிப் படியாய் மேல் நோக்கிச் செல்வதே வாழ்க்கை. மகிழ்ச்சி நினைத்தது நடக்கும் போது மட்டுமல்ல, அதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் இருக்கிறது.
🏹ஏமாற்றம் எப்படிப் பட்டவர்களையும் பக்குவப் படுத்தி விடுகிறது.
🏹வெற்றியின் பொருள் ஒன்று தான் நாம் செய்யும் வேலை எதையும் எங்கேயும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் செய்வது தான்.
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனம் என்பது வெல்ல முடியாத ஒன்று என்றும், அதை அடக்கி ஒடுக்குவது
அவ்வளவு எளிதான செயலல்ல என்றும் அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு தியானம்
செய்ய அமரும் பொழுது மனம் அடங்குவதில்லை. எண்ணங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன.
பிறகு என்னதான் வழி ? ஒரு வழிதான் உண்டு. மனதை தெய்வீகத் தன்மை உடையதாக ஆக்கிக் கொள்வது மட்டுமே
ஒரே வழி. மற்ற எந்த உபாயங்களைக் கையாண்டு மேலேறினாலும் சாண்
ஏறினால் முழம் சறுக்கும் நிலைதான்.
நல்லதும், தீயதும் நேருக்கு நேர் எதிர் கொள்ளும் போது அந்த இடத்தில் பரபரப்பும். செயலும் எழுகின்றன. இந்த இரண்டு உணர்ச்சிகளில் இருந்து நம் மனமானது ஒரு போதும் தப்ப முடிவதில்லை.
எனவே அவற்றின் வயப்பட்டு அவற்றால் விளையும் இன்ப துன்ப நுகர்ச்சியில் வீணே பொழுதை விரையம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு சமயம் செய்யக் கூடாத செயல்களைச் செய்து விட்டு துன்பப்படுகிறோம். இன்னொரு சமயம் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து விட்டு நல்ல செயலைச் செய்து விட்டு
கர்வம் கொள்கிறோம்.
இவ்வாறு உள்ளத்தில் நன்மைக்கும், தீமைக்கும், கடவுளுக்கும், சைத்தானுக்கும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடைபெறும் யுத்தம் நிரந்தரமானதாக இருக்கிறது. மனதை தெய்வீகமான
வழியில் செலுத்தும் போதுதான் அங்கே படிப்படியாக தீமை என்பது விலகி பிறகு நிரந்தரமான நன்மை மட்டும் மிஞ்சுகிறது.
அதையும் களைந்து விட வேண்டியது அவசியமாகும். என்றாலும் தீமையின் அளவுக்கு நன்மையானது எண்ணங்களை வளர்ப்பதில்லை. அர்ஜுனனைப் போல இறைவனிடம் ரதத்தை ஒப்படைத்து
விட்டால் பிறகு கவலை இல்லை அல்லவா ? அவரை எங்கே போய் தேடுவது ? நம் ஆன்ம தாகம் தான் இறைவன் வேறு யாருமல்ல,
கண்ணனையே சாரதியாக அமர்த்திக் கொண்ட அர்ஜுனனுக்குத்தான் வெற்றி கிட்டுகிறது. அந்த நிலைக்கு நம் மனம்
வந்து விடுமானால், அதன் பிறகு நாம்
வெறும் கருவிதான். அதன் பிறகு
காரியங்கள் கச்சிதமாக நடைபெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே நம் மனமெனும் ரதத்தை
தெய்வீக சாரதியின் கையில் ஒப்படைத்து விடும் சாதகனுக்கு தோல்வி என்பதே கிடையாது. எங்கும், எப்போதும்
வெற்றிதான். காரியமாற்றுவது மட்டுமே நம் செயல் இயக்குவதும், இயங்கச் செய்வதும் இறையாற்றலே.
எனவே தெய்வீகமே நம் உண்மையான இயல்பு. அதை அடைவது மட்டுமே நம் நோக்கம் என்ற ஆன்மதாகம் உள்ளவனுக்கு வெற்றி நிச்சயம்..!!
#ஸ்ரீராமஜெயம்.
நன்றி ராஜ்குமார்

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அந்த இளம்பெண்ணின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத குறை..!
அவர் பெயர் மினு பவுலின் .
ஹோட்டல் ஒன்றை , கொச்சியில் நடத்தி வருகிறார் ..!
ஹோட்டலின் பெயர் - “பப்படவடா” .
நிறைவாகவே பிசினஸ் நடந்தாலும் மினு பவுலின் மனதிற்குள்
ஒரு குறை..!
.
தன் ஹோட்டலுக்கு வருபவர்கள் விதம் விதமான உணவுகளை ஆர்டர் செய்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டு விட்டு, மனநிறைவோடு பாராட்டி விட்டுப் போனாலும்...
தங்களுக்கான ஒருவேளை உணவை சாலையோர, சாக்கடையோரம்...
குப்பைத்தொட்டியில் தேடும் மனிதர்களும் இங்கே இருக்கத்தானே செய்கிறார்கள் ..?
இவர்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்..?
இவர்கள் ஒரு பக்கம் இருக்க , இன்னொரு பக்கம் ...
தேவைக்கு மிஞ்சிய உணவை நாள்கணக்கில் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு, கெட்டுப் போனவுடன் வீதியில் குப்பைத்தொட்டியில் வீசும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..?
.
இரண்டு விசித்திரமான கேள்விக்குறி மனிதர்கள்..?
விடை என்ன..?
.
விடாமல் சிந்தித்தார் மினு பவுலின். விடை கிடைத்து விட்டது.
.
420 லிட்டர் ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கி, அதை தன் ஹோட்டலுக்கு முன் ரோட்டிலேயே வைத்துவிட்டார் மினு. இரவும், பகலும்...24 மணி நேரமும், எல்லா நாட்களிலும் இந்த ஃபிரிட்ஜ் இயங்கிக் கொண்டே
இருக்கும் .
எந்த நேரத்திலும் யாரும் வந்து இந்த ஃபிரிட்ஜ்ஜில் உணவுகளை வைத்துச் செல்லலாம் .
அது போல, பசியுள்ள யாரும்,
எந்த நேரத்திலும் இங்கே வந்து, யாரிடமும் எதுவும் கேட்காமல் ... இந்த ஃபிரிட்ஜ்ஜில் உள்ள உணவுகளை எடுத்துச் செல்லலாம் .
.
உணவை வைப்பவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் :
“ தயவு செய்து கெட்டுப் போன உணவுகளை வைக்காதீர்கள் ..!
நன்றாக பேக் செய்து வையுங்கள் ...
ஃபிரிட்ஜ்ஜூக்குள் உள்ள மார்க்கர் பேனாவால் , உணவை வைக்கும் தேதியை மட்டும் எழுதி விடுங்கள் .”
.
ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது . ஆனால்...''தேவையில்லாத ஒருவர் வந்து உணவை எடுத்துக் கொண்டு போய் விட்டால்..?”
இதற்கும் மினுவிடம் பதில் இருக்கிறது : “ நான் எப்போதும் நல்லதையே நினைக்க விரும்புகிறேன்..”
.
மினுவின் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த பலர், இந்த ஃபிரிட்ஜ்ஜில் வைப்பதற்காக அவரது ஹோட்டலிலேயே உணவை வாங்கும்போது, மினு சொல்கிறார் :
“ஸாரி...இதை வைத்து எனது பிசினஸில் சம்பாதிக்க நான் ஆசைப்படவில்லை .
உங்கள் வீட்டில் வீணாகும் உணவை மட்டும், வெளியே கொட்டி விடாமல், இங்கே கொண்டு வந்து வையுங்கள் அது போதும்...”
.
எப்படியும் தினமும் 50 குடும்பங்களாவது பசியோடு இங்கே வந்து, இந்த ஃபிரிட்ஜ்ஜூக்குள் இருக்கும் உணவை எடுத்துச் சென்று, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, மினுவை மனதார வாழ்த்துகிறார்கள்...
.
“இது பெரிய சாதனை” என யாராவது பாராட்டினால் அவர்களுக்கு மினு சொல்லும் பதில் :
“இல்லை...இந்த ஃ பிரிட்ஜை வாங்கி வைத்ததும், இதற்கு கரண்ட் பில் கட்டுவது மட்டும்தான் நான் மற்றதெல்லாம் அன்பு உள்ளம் கொண்ட மக்கள்தான்..!”
இன்னொன்றும் சொல்கிறார் மினி :
“இந்த திட்டத்தை நான் ஆரம்பிக்க காரணமே, எந்த வீட்டிலும் யாரும் உணவை வீணாக்க கூடாது.
எந்த ஒரு உயிரும் இந்த உலகில் பட்டினி துன்பத்தை அனுபவிக்கக் கூடாது ”
.
நன்மைகளால் நிரம்பிய இந்த ஃபிரிட்ஜ்ஜூக்கு என்ன பெயர் வைக்கலாம் ..?
மினு வைத்திருக்கும் பெயர் :
“நன்மை மரம்”
.
ஊரெங்கும் நிறைய நன்மை மரங்கள் இருக்க வேண்டும் என்பதே மினுவின் ஆசை ..!
.
நடக்குமா..?
.
மினு சொன்னதுதான் இதற்கு பதில் :
“ நான் எப்போதும் நல்லதையே நினைக்க விரும்புகிறேன்...”

Wednesday 29 November 2017

மாலை முரசு பாரி இல்ல விழாவில் மனிதத்தேனீ


மூதறிஞர் ராஜாஜி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள நிகழ்ச்சி


மாலை முரசு 29.11.2017 பக்கம் 5


மக்கள்குரல் 29.11.2017 பக்கம் 4


தந்தை பெரியார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்ததின விழாக் கூட்டம்





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚀ நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நிலையாய் இருப்பதே நீங்கள் உங்களுக்குகு கொடுக்கும் மிகப் பெரிய மரியாதை.
⚀ வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் பற்றி கவலை இல்லை. ஆனால் ஆறுதல் சொல்வதற்கு யாரும் விரும்பாததே பெரும் கவலை.
⚀ அழியாத செல்வம் என்பது சேர்த்து வைக்கும் சொத்துக்கள் அல்ல. அவரவர் நற்குணங்களால் சேர்த்து வைக்கும் உயர்ந்த பண்புகளே அழியாத செல்வம்.
⚀ பணமும், பாசமும் சுலபமாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது.
⚀ வெற்றி பெறுவதற்காக தனியாக முயற்சி எதுவும் தேவை இல்லை. தனித் தன்மையுடன் முயன்றால் போதும்.
நன்றி அரு சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இனம் ஒன்று தான்,குணம்.....?
ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன.
ஈ , தேனீயிடம் கேட்டது ,
" நண்பா , சாப்பிட்டு விட்டாயா ? "
தேனீ சொன்னது ,
" இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்
தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?
உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?
அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் "
என்றது.
தேனீ கோபப்படவில்லை.
உன் கண்களுக்கு இனிய உணவாகவும்,
இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும்,
அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே
இயற்க்கை எழில் கொஞ்சும் நந்தவனங்களில்,நான் சேகரித்து சேமித்து வைக்கும் என்னுடைய உணவுகளின் இனிமை,ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் மருந்தாகவும் பயன்படும்.
ஆனால் உன்னுடைய உணவு,
அழுகிப் புழுத்து அழிந்து போன,சாக்கடையும் குப்பையும் பல பேருக்கு வியாதியை உற்பத்தி செய்வதும்,ஏன் அவர்களின் உயிரையும் பறிக்கக் கூடியது.
அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும்.அதை இன்பமாகவும் கருதும்.
அதனால் தான் உன்னை அழிக்கவும்,என்னை வளர்க்கவும் செய்கின்றனர்".
பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.
நன்றி திரு ராஜப்பா

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


பூ.கக்கன்ஜி நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மதுரை எப்.எம்.ரெயின்போவில் மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அம்மாவின் அரசு கல்வித் துறையில் தொடர்ந்து சாதனை...........
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் “இன்சூரன்ஸ்”...
News Fast
🇮🇳🇲🇾🐅
நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விபத்துக் காப்பீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திருச்சியில்நிருபர்களிடம் கூறியதாவது-
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள்,மாணவிகளுக்கு விபத்துக்காப்பீடு வழங்க தமிழக அரசுபரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.
ஆனால், இந்த விபத்துக்காப்பீடு திட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்களா அல்லது அரசு உதவி பெறும் அனைத்து பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் பயன்பெறுவார்களா என்பது குறித்து தெளிவாக அமைச்சர்கள் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 1.4 கோடி மாணவர்கள் பல்வேறு விதமான பள்ளிகளில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-
நாட்டிலேயே களில் தமிழகத்தில்தான் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. அதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அதிகமான விபத்துக்கள் நிகழ்கின்றன. கடந்த 2016ம் ஆண்டில் 5 ஆயிரத்து 10 விபத்துகளில், 1,207 பேர் உயிரிழந்துள்ளனர், 6 ஆயிரத்து 233 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 1.5 கோடி குடும்பங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் காப்பீடு திட்டத்தை அரசு செய்து கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.
தகவல். திரு ஏ ஆர் லெட்சுமணன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

“துஷ்டனைக் கண்டால் தூர விலகு’
************************************************
குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,
தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.
துரியோதனன், அந்தப் பக்கமாக தேரில் வந்தான்.
தர்மர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம்.
அரசகுலத்தவன் ஏன் தெருவில் நடக்க வேண்டும்.....?
இதுபற்றி அவன் தர்மரிடமே கேட்டு விட்டான்.
“”அண்ணா! நம்மைப் போன்றவர்கள் தெருவில் நடக்கலாமா.....?நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் தந்தும் நீ நடந்து செல்கிறாயே!இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ?” என்றான்.
தர்மர் அவனிடம்,
,”"தம்பி! நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும்.தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம்.ஒவ்வொரு தெருவாக நடந்தால் தான், நமது நாட்டின் நிலைமை, மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்,” என்றதும்,
துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது.
”"நாடாளப் போவது நானல்லவா!
அப்படிப் பார்த்தால் நானல்லவா நடந்து செல்ல வேண்டும்,
இவன் ஏன் நடக்கிறான்....?
சரி…சரி…இவனைப் போலவே நாமும் நடப்போம்,” என தேரில் இருந்து குதித்தான்.
மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும்,அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான்.
அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம்,
இவனும் கவனித்துப் பார்த்தான்.
ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது.
கடைக்காரன், ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான்.
தர்மருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.”
"சே…இவனெல்லாம் ஒரு மனிதனா! இவனது காலில் ஒரு முள் குத்தினால் “ஆ’வென அலறுகிறான்.
ஆனால், இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான்.ஐயோ! அதன் அவலக்குரல் இவனது காதுகளில் விழத்தானே செய்கிறது!
இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா?’ ‘ என்று அவனை மனதுக்குள் திட்டியபடியே நடந்தார்.
அப்போது,அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித் துண்டுகளை எடுத்தான்.தன் கடையின் கூரையில் எறிந்தான்.
தேவையற்ற எலும்புகளை அள்ளினான்.
தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான்.
அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது.
கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான
காகங்கள் கொத்தித் தின்றன.
“”ஐயோ! தவறு செய்துவிட்டோமே!
இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும்,
மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல.காகங்களுக்கும்,நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வ தோடு,தர்மத்தையும் பாதுகாக்கிறான்.
அப்படியானால், இவனைப் பற்றிய தப்பான
கருத்து என் மனதில் ஏன் ஏற்பட்டது....?
நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவ னாயிற்றே!”என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.
நிஜத்தில் நடந்தது என்ன தெரியுமா.....?
இவர் தனியாக நடந்து போயிருந்தால் \
இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது.
ஆனால்,
துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட \\குணம் காற்றில் பரவி,தர்மரையும் பாதித்து விட்டது.
இதனால் தான்
“துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்றார்கள்.
துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ…அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும்மிருகநிலைக்கு சற்று நேரமாவது
\மாறி விடுமாம்.....!
அதனால் தான் அப்படி ஒரு பழமொழியே வந்தது.,....!!/
நன்றி திரு டி ஜி ராமமூர்த்தி

நான்கு ஆண்டுகள் முன்பு அபுதாபியில்


தினமலர் மதுரை 28.11.2017 பக்கம் 4


Tuesday 28 November 2017

மகாகவி பாரதி பிறந்தநாள் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஷாஜகானின் கண்ணீர் தாஜ்மஹாலை உருவாக்கியது.
அசோகனின் கண்ணீர் ஆசியாவில் புத்தமதத்தை பரப்பியது.
சீதையின் கண்ணீர் இராமயணத்தை உருவாக்கியது.
திரெளபதியின் கண்ணீர் மகாபாரதத்தை உருவாக்கியது.
கண்ணகியின் கண்ணீர் சிலப்பதிகாரத்தை உருவாக்கியது.
சந்தோஷங்கள் சரித்திரம் படைப்பதில்லை.
கண்ணீர் துளிகள் தான் காவியம் படைக்கிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா பானர்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...
மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார்...ஆனால் அது தேவையில்லை...1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ...தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்..
அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்...எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்..
பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் ..அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்...
இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம் ...அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..
இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்....இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்..
இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள்.....ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள்....அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது..
போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ....அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்...அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்...
தெரியாதவர்களுக்கு இந்த மெசேஜை பகிரவும்...
புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...நன்றி
சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..
(K. பாபு
கூட்டுறவுசார் பதிவாளர் / பொது விநியோகத் திட்ட அலுவலர்
9976510606.)

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)



*சைவம் Vs அசைவம்*
🐐 ஆட்டுக்கறியை விட :
மேலானது
*வெண்பூசணிக்காய்*
🐤 கோழிக்கறியை விட :
மேலானது
*கோவைக்காய்*
🐷 பன்றிக்கறியை விட :
மேலானது
*முருங்கைக்காய்*
🐟 மீன்கறியை விட :
மேலானது
*வாழைக்காய்*
🐫 ஒட்டகக்கறியை விட :
மேலானது
*கொத்தவரங்காய்*
🐞 நண்டுக்கறியை விட :
மேலானது
*புடலங்காய்*
🐢 ஆமைக்கறியை விட :
மேலானது
*வெண்டைக்காய்*
🐍 பாம்புக்கறியை விட :
மேலானது
*பீர்கங்காய்*
🐔 புறாக்கறியை விட :
மேலானது
*சுரைக்காய்*
🐂 மாட்டுக்கறியை விட :
மேலானது
*தேங்காய்*
🐣 முட்டையை விட :
மேலானது
*கத்திரிக்காய்*
எல்லா காய்கறியையும் விட
மேலானது : *அரசாணிக்காய்*
சுவைக்காக அசைவம் சரி
ஆனால் ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது உண்மையில்லை
🕺🏼🌽🕺🏼🥒💐