Friday 15 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*🌳மாறுதல் ஒன்றே மாறாத நியதி*
*🌳மாறுதலை ஏற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயம்*
வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ
வேறுபாடுகள்
இருக்கின்றன என்றாலும் ஒரு
வேறுபாடு மிகவும்
பிரதானமாக
இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள். அது என்னவென்றால்
வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது
அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி
அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும்
மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள்.
மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள்.
*༺🌷༻*
உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று
சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன்
அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும்
வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். மகரயாழ் மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற
தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை
மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள்
மட்டுமே வெற்றியடைகிறார்கள்.
*༺🌷༻*
அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு
ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு
சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப்
பொருள்கள் விற்கும் கடை ஒன்று இருந்தது.
ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த
கடையில் காலம் செல்லச் செல்ல
வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை
அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட
யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த
மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த
கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர
வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு
வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு
வந்தார்.
*༺🌷༻*
சாண்டியாகோ என்ற இளைஞன் அவர்
கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம்
மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும்
விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச்
சொன்னார். வியாபாரமே இல்லாததால்
கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற
எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை
நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த
வியாபார முறையையே இப்போதும்
கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது.
அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ
கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப்
பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில்
சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான்.
கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா
விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள்
பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும்
அதிகரித்தது.
*༺🌷༻*
ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல
தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது
சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன்
கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும்
தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக்
கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம்.
பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க
கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு
போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும்
பெரிய பலன் கிடைக்கும் என்று
தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.
*༺🌷༻*
அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர்
குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை
வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில்
அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும்
அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு
எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க
வேண்டி இருந்தது. சாண்டியாகோ
வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு
ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால்
அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட
வேண்டி இருந்திருக்கும்.
*༺🌷༻*
மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும்
புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும்,
சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே.
ஆனால் *மாறுதல் ஏற்படும் போது இதுவரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.*

No comments:

Post a Comment