Tuesday 31 August 2021

பெருங் கொடையாளரிடம் வாழ்த்துப் பெற்ற கார் லேனா குழுவினர்.

 பெருங் கொடையாளரிடம் வாழ்த்துப் பெற்ற கார் லேனா குழுவினர்.

மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக களம் காண உள்ள கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் நகரத்தார் பழமுதிர்ச் சோலை பாதயாத்திரை சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குப் பல கோடி மதிப்பிலான ஆபரணங்கள் வழங்கிய அருட் கொடையாளர், அறப்பணிச் செல்வர், தொழிலதிபர், சோழபுரம் ஏஎன். சுப்பையா
அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மகிழ்வான வேளை.
பண்பாடும் நல்மரபும் நமக்குத் துணை நின்றிட வெற்றிக் கனியை எளிதாக்கிடுவோம். - மனிதத்தேனீ



பைத்தியக்காரர்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள்...

 பைத்தியக்காரர்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள்...

ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் தாலிபன்களிடம் ஒவ்வொரு நகரமாக சரணடைந்த பிறகு, தாலிபன்கள் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இந்த கைப்பற்றலால், தாலிபன் குழு மட்டுமே உலகில் வான்படை கொண்ட ஒரே பயங்கரவாத குழுவாக இருக்கிறது.
தாலிபன்களிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன?
ஜூன் 2021 நிலவரப்படி ஆஃப்கன் விமானப் படையிடம் 167 விமானங்கள் இருந்தன. இதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் இருந்தன என்று அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.
ஆனால் அதில் எத்தனை விமானங்களை தாலிபன்கள் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த ஜூலை 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் 9 பிளாக் ஹாக், இரு எம்.ஐ- 17, நிரந்தரமாக இறக்கைகள் பொருத்தப்பட்ட ஐந்து விமானங்கள் என மொத்தம் 16 விமானங்களைப் பார்க்க முடிகிறது.
மீதமுள்ள விமானங்கள் நாட்டை விட்டு வெளியே பறந்துவிட்டன அல்லது மற்ற விமான தளங்களுக்குச் சென்று இருக்கின்றன என்று பொருள் கொள்ளலாம்.
வேறு எதையெல்லாம் கைப்பற்றியுள்ளனர்?
2003 - 2016 காலகட்டத்தில் அமெரிக்கா ஏகப்பட்ட ராணுவ சாதனங்களை ஆப்கானிஸ்தான் படையில் கொண்டு வந்தது. பல நிறுவனத்தின் 3,58,530 ரைஃபிள்கள் 64,000 இயந்திரத் துப்பாக்கிகள், 25,327 க்ரெனைட் லாஞ்சர்கள், 22,174 ஹம்வீ (அனைத்து நிலபரப்பிலும் பயணிக்கும் வாகனம்) வாகனங்களை ஆஃப்கனில் கொண்டு வந்ததாக அமெரிக்கா அரசின் அறிக்கை கூறுகிறது.
2014ஆம் ஆண்டு நேட்டோ படைகள் தங்கள் போரை நிறுத்திய பிறகு, நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஆஃப்கன் ராணுவத்திடம் கொடுக்கப்பட்டது. அந்நாட்டு ராணுவம் தாலிபன்களை எதிர்கொள்ள திணறியதால், அமெரிக்கா பல நவீன ரக ராணுவ தளவாடங்களை வழங்கியது.
கிட்டத்தட்ட 20,000 எம்-16 ரைஃபிள்களை 2017ஆம் ஆண்டில் மட்டும் விநியோகித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 3,598 எம் 4 ரைஃபிள்கள், 3,012 ஹம்வீ வாகனங்களுடன் இன்னும் பல ராணுவ தளவாடங்களையும் ஆஃப்கான் ராணுவத்துக்கு வழங்கியது என அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.
புதிய ஆயுதங்களைக் கொண்டு தாலிபன்களால் என்ன செய்ய முடியும்?
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்
தாலிபன் போன்ற ஒரு குழுவினர் கையில் நவீன ஆயுதங்கள் கிடைப்பது "மிகப்பெரிய தோல்வி" என வாஷிங்டன்னில் உள்ள வில்சன் மையத்தின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
இதன் விளைவுகள் ஆப்கானிஸ்தானில் மட்டும் இருக்காது. கறுப்புச் சந்தையில் சிறிய ஆயுதங்கள் வரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள மற்ற கிளர்ச்சியாளர்களுக்கு இது சாதகமாக அமையலாம். வரவிருக்கும் மாதங்களில் ஆயுதங்கள் தொடர்பான ஒரு விநியோகச் சங்கிலி தோன்றக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு உள்ளது எனவும்,தாலிபன் கூட்டணியிலிருந்து, அதன் கூட்டணி குழுக்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வெளியேறவும் வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள்.
குறிப்பு; இவர்கள் கைக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்திருப்பது பைத்தியக்காரன் கையில் கிடைத்த ஆயுதத்துக்கு சமம்..என்ன ஆகுமோ..?
தொகுப்பாளருக்குப் பின்னால் தலிபான்கள் நின்றுகொண்டு ஆப்கன் மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று கூற வைக்கிறார்கள். கீழே பதிவு செய்துள்ள புகைப்படமே அதற்கான சான்றாகும்.

ஆணவம் வீழும்.

 ஆணவம் வீழும்.

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...
அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான நிறை குடங்களுக்கு அது வருவதில்லை...
வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள் தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் ஒரு சிலருக்குப் பிறந்து, தடுமாறி ஒரு செயலைச் செய்யத் தொடங்கியதும், ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, அவர்களைக் கூனிக் குறுகச் செய்கின்றது...
ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பது இல்லை; அடிதான் பலமாக விழுகிறது...
தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;
தான் அமைச்சராகி விட்ட போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகள்,
தான் சொன்ன ஏதோ ஒன்றைப் பொது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாளும் எதையாவது உளறிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;
இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய் விடு கின்றார்கள்...
‘எதற்கும் தான் காரணமல்ல'; என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. ‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், பொது இடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை.
ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; திரைப்பட நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. ஆனால்!, அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு...
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது...
ஆம் நண்பர்களே
நம்மிடம் ஏதும் இல்லை' என்பது ஞானம். நம்மை தவிர ஏதும் இல்லை' என்பது ஆணவம்.
ஞானம் , பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால்!, ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.
ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் நம்மையே அழிக்கும்.
1

மனிதத்தேனீயின் தேன்துளி

 


இணைந்த கரங்கள் இணையில்லாச் செயல்கள் மலர்ந்திட. இன்னும் 19 நாட்களில் நடைபெறும் நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் களத்தில் தலைவர் :நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், முதுநிலைத் துணைத் தலைவர்: தேவகோட்டை எஸ் எம் எம் எஸ்பி. வெங்கடாஜலம், துணைத் தலைவர் :சொக்கநாதபுரம் வி. வயிரவன் என்ற பாலு, செயலாளர் : வேந்தன்பட்டி ( ஐசிஐசிஐ) ஆர். மெய்யப்பன், பொருளாளர் :கண்டரமாணிக்கம் ரிவோ எம். பிஎல். மீனாட்சி சுந்தரம், இணைச் செயலாளர் :மானகிரி எல் எஸ். கணேசன். இவர்களது வரலாற்று வெற்றிக்கு வடம் பிடிப்போம். ஆலவாய் மாநகரில் பண்பாட்டு முத்திரை பதிப்போம். நேர்மையுடன் - மனிதத்தேனீ


 

Monday 30 August 2021

பகவான் கிருஷ்ணர் பிறந்த நாள்


 

என்.எஸ்.கிருஷ்ணன் நினைவைப் போற்றுவோம்


 

சிக்கனம் சிறப்பானது.

 சிக்கனம் சிறப்பானது.

வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவனை ஒருபோதும் மதியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரவுக்கேற்பச் செலவு செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தமிழ் நூல்கள் தெரிவித்துள்ளன.
*சற்றே எண்ணிப் பாருங்கள்! வரவுக்கு மேல் எப்படி யாரால் செலவு செய்ய முடியும்? கடன் தானே ஒரே வழி!
மளிகைக்கடை, பால்காரர், வீட்டுவாடகை என்று பாக்கி வைக்கலாம். அல்லது வீடு, நகை என அடமானம் வைத்தோ, வேறு வழியிலோ கடன் வாங்கலாம்.
அது வட்டிச் செலவை மேலும் கூட்டும்.பின்னால் வரப்போகிற வருமானத்தை நம்பி செலவழிப்பது மேற்கத்திய கலாச்சாரம்! ஆபத்தானது!! சரிப்படாது!!!*
தனது வருவாய் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி பின்னால் அதுவும் இல்லாமல் கெட்டுவிடும் என்று சொல்கிறார் மெய்ஞானி வள்ளுவர்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் - குறள். 479
''ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை''
போகாறு அகலாக் கடை (478)..என்று வரவு செலவு பற்றி, திருக்குறள் கூறியுள்ளது.
வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு மிகாமல் இருந்தால் தவறு இல்லை என்பது இதன் பொருள்.
வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்;
வருமானம் குறைவாக இருப்பவர்கள் தன் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ வேண்டும் .
எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி, செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
சிலருக்கு வருமானம் அதிகமாகவே வரும்.
அதற்காக கண்ணை மூடிக் கொண்டு செலவு செய்தால் கேடுதான் விளையும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Friday 27 August 2021

இயல்பாய் இருக்க வேண்டும்.

 இயல்பாய் இருக்க வேண்டும்.

பெற்றோர்களை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களைக் கண்டுகொள்வது இல்லை.
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.
இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி...அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். "பாதுகாப்பு எல்லாம் கொடுக்கமுடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" எனக் கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன் கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை...
ஒரு பழமொழி உண்டு ..'கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும்கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என. அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை?
நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும் வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.
*செவன் சாமுராய்....*
அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.
ஒரு விவசாய கிராமம்...அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களைக் காப்பாற்றுகிறார்கள். அந்தப் போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.
போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்...விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொண்டு வயலுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் சென்றுவிடுகிறார்கள்.
தம் தேவை அவர்களுக்கு முடிந்தது எனத் தெரிந்துகொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்.
இதுதான் உலகம்.
நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்பப் பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டுப் போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.
இதனை உணந்தால் நமக்கு பின்னாளில் அதிர்ச்சிகள் என்பது இருக்காது.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கார் லேனா தலைமையிலான வெற்றியாளர்கள் குழு. வரும் 19-09-2021 நடைபெறும் மதுரை நகரத்தார் சங்கத்தின் தேர்தலில் களம் காணும் நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் மகளிர் சங்கத்தின் மேனாள் தலைவர், முனைவர் அங்கயற்கண்ணி லெட்சுமணன், மேனாள் செயலாளர் லெ மு மு. லெட்சுமணன் அவர்களைச் சந்தித்த மகிழ்வான தருணம். மரபு வழி மாண்பினைக் காத்திட செயல் வேகம் மிக்க வெளிப்படையான நிர்வாகம் மலர்ந்திட, நமது முழு ஆதரவினை வழங்கிடுவோம். வரலாற்று வெற்றியைப் பெற்றிடுவோம். - மனிதத்தேனீ



 

வாழிய மணமக்கள். இன்று இரவு மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்ற புகழ் பெற்ற குட்டி போட்டோகிராபி உரிமையாளர், சிறந்த உழைப்பாளி, அருமை நண்பர் கே ஆர். பிரேம்நாத் என்ற குட்டி அவர்களின் மகள் ஜுலா ராணி - சபரி மணவிழா வரவேற்பில் மனிதத்தேனீ.,நகரத்தார் முன்னோடிகள் வி டி. கண்ணன், வி. சீனிவாசன், மலையலிங்கம், கண. தியாகராஜன், என். ராமநாதன், முருகப்பன், தேனப்பன், மற்றும் எஸ்பி. அண்ணாமலை, எஸ் கே. ரமேஷ் உள்ளனர். வாழிய மணமக்கள்.






 

ஏளனம் செய்யாதே..

 ஏளனம் செய்யாதே..

**********************
ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
யாகம் துவங்கியது. அப்போது, கிழிந்த அழுக்கடைந்த ஆடை, மெலிந்த தேகத்துடன் ஒரு வேதியர் உள்ளே வந்தார். தலைமை வேதியருடன் வந்திருந்த மற்ற வேதியர்கள் ஓரளவுக்காவது வசதியுள்ளவர்கள். ஏதோ வீட்டில் இருப்பதில் நல்ல ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவரோ, நெற்றியில் சந்தனம் மட்டும் இட்டு, வேதம் ஓத இருந்த அந்தணர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார்.
தலைமை வேதியர் அவரைப் பார்த்து முகம் சுழித்தார்.
'எழுந்திரும்! இங்கே உட்காரக் கூடாது, நீர் ஒன்றும் வேதம் சொல்ல வேண்டாம். அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து சந்தனம் அரைத்தால் போதும், புரியுதா!' என்றார்.
வந்தவர் பதிலேதும் பேசவில்லை. தலைமை வேதியர் இட்ட கட்டளையை பணிவுடன் ஏற்றார். சந்தனம் அரைக்க ஆரம்பித்தார். அவர் சூரிய மந்திரத்தை முணுமுணுத்தபடியே சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார்.
தலைமை வேதியர் அவரைக் கவனித்தார்.
'இவனுக்கு என்ன தைரியம்! வாய் முணுமுணு க்கிறதே! என்னைத் திட்டி கொண்டே சந்தனம் அரைக்கிறான் போலும்! யாகம் முடியட்டும், கவனித்துக் கொள்ளலாம்' என்று மனதிற்குள் கருவிக்கொண்டே யாகத்தை நடத்தினார்.
யாகம் முடிந்ததும் எல்லாருக்கும் சந்தனம் அளிப்பது வழக்கம். தலைமை அந்தணர் முறைப்படி முதலில் வாங்க வேண்டும். அவர் சந்தனத்தை வாங்கி உடலில் பூசினாரோ இல்லையோ! 'ஐயோ அம்மா!' என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்.
குளிர வேண்டிய சந்தனம் உடலைச் சுட்டது.
'சந்தனம் ஏன் சுடுகிறது?'
நான் சூரிய மந்திரம் உச்சரித்தபடியே அரைத் தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டிவிட்டார் போலும்!'
ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் என்னிலும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே!' தலைமை வேதியர் வருத்தப்பட்டார்.
சந்தனம் அரைத்தவர் மனம் நெகிழ்ந்து, சூடு தணிக்குமாறு சூரியனைப் பிரார்த்தித்தார். தலைமை வேதியரின் உடலில் இருந்த சூடு தணிந்தது.
இவ்வளவு சக்தி வாய்ந்த அந்த அபூர்வ மகான் யார் தெரியுமா? ஸ்ரீ ராகவேந்திரர்.
அவரை 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று சொல்லி பூஜிப்போர், குளிர்ந்த மனதுடன் சகல நலனும் பெற்று வாழ்வர்.
குருவே சரணம்...
26.08.2021.. நேசமுடன் விஜயராகவன்....

Thursday 26 August 2021

மகிழ்ச்சியுடன் இருக்க......

 மகிழ்ச்சியுடன் இருக்க......

எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.
எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.
எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.
இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.
வாழ்க்கையும் இதே மாதிரி தான்.
நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.
அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.
சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.
எந்தச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.
அவன் தான் இறைவன்
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.
உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.
இறைவன் சிலரை
வறுமையால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரை
நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரைக்
கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.
நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்.
நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்" .
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்
இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருங்கள்.
அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்

வாழிய பல்லாண்டு


 

அன்னை தெரசா பிறந்த நாள்


 

குழுவாகச் செய்யப்படும் வேலை வெற்றியை எளிதில் பெற்றிடும்.

 குழுவாகச் செய்யப்படும் வேலை வெற்றியை எளிதில் பெற்றிடும்.

பல நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர். ஆனால்!, மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது...
ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாகச் செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது...
ஏனெனில்!, கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது, குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும்போது நமக்கு சகிப்புத் தன்மை, மற்றும் பலவித சூழ்நிலைகளைக் கையாள்வது போன்ற சிறப்புப் பண்புகள் வந்து சேரும்...
கோடை காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்க விடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராகப் பறந்தது...
அது அடுத்த நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாகப் பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் நகர முதல்வர் (மேயர்). இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு...? என மக்களிடம் கேட்டார்...
"நான் தான்” என்றான் ஒரு சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதை பறக்க வைத்தேன்” என்றான் அவன்...
ஆனால் காற்றோ!, "நான்தான் காற்றாடி பறந்ததற்குப் பொறுப்பு” என்றது. என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும், சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது காற்று...
இல்லை!, நான்தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால், நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நான் இல்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி தரையில் விழுந்து இருக்கும். அதை அந்தச் சிறுவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே!, நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அந்த காற்றாடியின் வால்...
இப்போது நீங்களே கூறுங்கள், யார் உண்மையில் காற்றாடியை பறக்க வைத்தவர்கள்.
ஆம் நண்பர்களே
எந்தவொரு செயலையும், "நான்தான் செய்தேன்", "என்னால்தான் அந்த செயல் செய்யப்பட்டது" என்று தன்னைப் பற்றி பெருமை கொள்ளாமல், நாங்கள் அல்லது எங்களது கூட்டு முயற்சியால் சாதித்தோம் அல்லது செய்யப்பட்டது போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.
நிர்வாகவியலார்கள் இதைத்தான் கூட்டு முயற்சி (Team Work) என்பார்கள். தன் முயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

திரு.வி.க. பிறந்த நாள்


 

தெளிவான செயல் திட்டம் நேர்த்தியான நிர்வாகம். மாநகர் மதுரையில் கார் லேனா குழுவினர் வெற்றிக்குத் துணை நின்றிடுவோம். வாழிய மரபுவழி - மனிதத்தேனீ

 


வாழிய பல்லாண்டு. இன்று அகவை 95 இல் தடம் பதிக்கும் தமிழ்ப் பணிச் செம்மல், சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உயர் பணியில் முத்திரை பதித்த, கவிஞர் புதுவயல் என். செல்லப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். இவர்கள் பேராசிரியர் விசாலாட்சி சுப்பிரமணியன் அவர்களின் மாமனார் என்பது கூடுதல் சிறப்பு. வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

கணபதிக்கு சிந்தாமணி விநாயகர் என பெயர் வரக்காரணம் என்ன?..

 கணபதிக்கு சிந்தாமணி விநாயகர் என பெயர் வரக்காரணம் என்ன?...

ஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம்.
அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். உள்ளே சென்று முனிவரை பணிந்த தேவேந்திரனை பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனுக்கு உண்ண கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார்.
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று!"
என்பது வள்ளுவன் வாக்கல்லவா?
முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான்.
கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதை பயன்படுத்தி வந்தார்.
ஒரு நாள், காட்டுக்குள் ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு அந்த பரிவாரத்தின் அரசனான கணன் என்பவன் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா? அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் மன்னனான கணன்.
மன்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான். என்னதான் மன்னனாக இருந்தாலும் மனிதன் அல்லவா? கலிபுத்தியான பொறாமை அவனைத் தொற்றி கொண்டது.
"நான்"நாடாளும் மன்னன்! காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா? என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி!" என மனதில் எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என எண்ணிக்கொண்டு சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான்.
முனிவர் சொன்னார். "மன்னா, இது எனக்கு பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப்பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப்பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் மாபெரும் தவறு. ஆகையால் கொடுக்க முடியாது!" என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான்.
ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன? யோசனையில் ஆழ்ந்தார் முனிவர். அப்போது ஒரு அசரீரி எழுந்தது, "முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான "கணபதி" ஒருவரே! அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்." என்று சொன்னது, அந்தக் குரல்.
உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப்பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் கபில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார்.
"விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்." என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
விநாயகர் அன்று முதல் "சிந்தாமணி விநாயகர்" எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்.
ஓம் விக்னேஷ்வரா போற்றி போற்றி...🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

எதுவும் கிடைக்குமென்று நினைத்து யாரும் பிறப்பதில்லை ..!

 எதுவும் கிடைக்குமென்று நினைத்து யாரும் பிறப்பதில்லை ..!

எதுவும் நிலைக்குமென்ற எண்ணத்தில் எதையும் செய்யவும் தேவையில்லை….!
யாராக இருந்தால் என்ன ..?
காணும் அந்த நேரம் உண்மையாய் இருந்துவிடுங்கள் ..!
கண்ணாடியைப் போல் பிம்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் .. !உள்வாங்கி விடாதீர்கள்.. !
ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தத்துவம் தான்.. !
எதற்காக நம்பவேண்டும் மற்றவர்களை .. !ஏமாறுவதற்காகத்தானே .. ?!
அதனால் நம்பிக்கை என்ற வார்த்தை உங்கள் மேல் மட்டும் ஆதிக்கம் செலுத்தட்டும்..!
உங்களை உங்களால் ஏமாற்ற முடியாதென்பதால் நம்பிக்கைக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள் மட்டும்தான்..!
மானிட நீதி அவரவருக்கான வாழ்வியல் வழிசார்ந்தே உருவாக்கப்பட்டிருக்கும் போது ..
அடுத்தவர் சொல்வதில் உனக்கான வாழ்க்கை இருந்துவிட சாத்தியமே இல்லையே .. !
விழிப்போடு நோக்கு ஒவ்வொரு விடியலையும்..! உனக்குள் விழித்திரு ஒவ்வொரு நொடியும்..!
வாழ்க்கை_என்பது
வேறல்ல_நீதான்..!

Wednesday 25 August 2021

நல்ல எண்ணம் வேண்டும்.

 நல்ல எண்ணம் வேண்டும்.

எப்போதும் நாம் ஒரு பொருளை, அல்லது மனிதர்களின் உருவத்தை வைத்தே எடை போடுகிறோம்...
அது மிகவும் தவறானது. ஒருவரின் உடலையோ!, அவர் அணிந்திருக்கும் உடையை வைத்தோ எடைபோடக் கூடாது...
அவருடைய செயலைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். அவர் உருவத்தை வைத்து அல்ல...
இந்தக் கதையை வாசியுங்கள்...
ஒரு அழகான பெண், ஒரு விமானத்தில் ஏறினார். தனது இருக்கையை தேடிச் சென்றபோது, தனக்கு ஒதுக்கிய இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இரண்டு கையையும் இழந்த ஒருவர் அமர்ந்திருந்தார்...
அவரைக் கண்டதும் அந்தப் பெண்ணுக்கு அருவருப்பாக இருந்திருக்கிறது. இந்த நபர் அருகில் நாம எப்படி அமர்ந்து பல மணிநேரம் பயணம் செய்வது...? என்று தயங்கிய அந்தப் பெண்.,
விமான பணிப் பெண்ணை அழைத்து,, எனக்கு வேறு இடத்தில் இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டார்...
அதற்கு விமான பணிப் பெண், "ஏன் உங்களுக்குத்தான் இருக்கை ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறதே" என்றார்...
அதற்கு அந்தப் பெண், "எனக்கு அவர் அருகில் அமர்ந்து பயணிக்க அருவருப்பாக இருக்கிறது. அதனால்தான் வேறு இருக்கை கேட்டேன் என்றார்...
விமான பணிப்பெண் அதிர்ச்சியடைந்தார். காண்பதற்கு நல்ல படித்தவர் போல இருக்கிறார்கள். ஆனால்!, கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் பேசுகிறார்களே என்றெண்ணினார்...
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல். சற்று நேரம் பொறுங்கள், நான் போய் வேறு இருக்கை இருக்கின்றதா...? என்று பார்த்து வருகிறேன் என்று கூறிச் சென்றார்..
சற்று நேரத்தில திரும்பி வந்து, ''நீங்கள் எடுத்திருக்கும் பயணச்சீட்டு வணிக வகுப்பு ( எக்கானமிக் கிளாஸ்) ஆனால்! எக்கானமிக்ளாசில் உங்களுக்கு ஒதுக்குவதற்கு வேறு இடமில்லை...
முதல் வகுப்பு பிரிவில் மட்டும்தான் ஒரு இருக்கை இருக்கிறது. ஆனாலும்!, நீங்கள் எங்களது மதிப்பு வாய்ந்த பயணி. உங்களது கோரிக்கையையும் ஆய்ந்தறியாமல் நாங்கள் இருக்க முடியாது...
அதனால், எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வணிக வகுப்புப் (எக்கானமி கிளாஸ்) பயணி ஒருவருக்கு முதல் வகுப்பு இருக்கையில் ஒதுக்குகின்றோம். சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறியதும் அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
விமானப் பணிப் பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காமல், முதல் வகுப்பிற்கு செல்லத் தயாரானார்கள்.. ஆனால்!,அங்கு நடந்ததது வேறு...
விமான பணிப்பெண் நேராக அந்த இரண்டு கைகளையும் இழந்தவரிடம் சென்று,
"அய்யா!, தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்களது பயணப் பொருட்களை எல்லாம் நான் எடுத்துக்கொண்டு வருகிறேன்..."
நீங்கள் முதல் வகுப்பிற்கு வாருங்கள், உங்கள் அருகில் இவர்களைப் போல ஒருவரை அமரவைக்க எங்களுக்கு மனமில்லை" என்று பணிவாகக் கூறியதும், விமானத்தில் இருந்த அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்...
அந்த கைகளை இழந்தவர் எழுந்து,
"நான் ஒரு பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரன், போரில் என்னுடைய இரண்டு கைகளையும் இழந்து விட்டேன், முதல் முறையாக இந்தப் பெண் கூறியதைக் கேட்டதும், இவர்களைப்போல உள்ளவர்களுக்காகவா இரவென்றும், பகலென்றும் பாராமல் பல இன்னல்களுக்கு இடையில் போரில் ஈடுபட்டோம் என்று நினைத்து மிக வருத்தமாக இருந்தது...
ஆனால்!, இப்போது நீங்கள் எல்லாரும் கைதட்டி ஆராவாரம் செய்வதை பார்த்தபோது மனசுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...
மற்றும், உங்களை போன்ற நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியபடி, முதல் வகுப்பை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார்...
அந்தப் பெண்மணியோ அவமானத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்....
யாரையும் ஏறிட்டுப் பார்க்கும் திறனின்றி தலையை குனிந்து உட்கார்ந்து விட்டார்.
ஆம் நண்பர்களே
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடைபோட்ட வண்ணம் இருக்கிறோம். நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
நம்மைப் போல் தான் மற்றவர்களும் பிறர் மீது நல்ல எண்ணமோ, கெட்ட எண்ணமோ கொண்டு இருப்பார்கள் என்று நாம் நினைத்துப் பார்ப்பது இல்லை.
அழகு என்பது உருவத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒருவரின் குணமும், அவரது செயலும்தான் அவர் எப்படிப்பட்டவர் என்று தீர்மானிக்கிறது.
அழகு என்பது நாம் பார்க்கின்ற வெளித் தோற்றத்தில் இல்லை. அது மனம் தொடர்புடையது. அது நம் நடத்தையில்தான் வெளிப்படும். அதை உணர்ந்து நடப்பதற்கு முயற்சி செய்வோம்.