Tuesday 31 October 2023

வாழ்க்கைக்கு வேர் . .

 வாழ்க்கைக்கு வேர் . .

*ஒரு மனிதன்
அடைவதற்கான மிகவும்
கடினமான இலக்கு யாதெனில், எளிமை தான்.*
அந்த எளிமையை
உணர்ந்த ஒருவன்,
வாழ்வில் அனைத்து
வெற்றிகளையும் பெறுவான்.
*எளிமை
என்ற சொல்லுக்குப் பல பொருட்களுண்டு.*
*எளிமைதான் எத்தனை வகை.*
பொருள் எளிமை,
நடத்தை எளிமை,
செயல்முறை எளிமை,
மொழி எளிமை,
உணவு எளிமை
என்று பலவகை எளிமைகள் இருக்கின்றன.
*பொருள் எளிமை *
ஒருவர் பெருஞ் செல்வந்தராக இருப்பார். ஆனால் தன்னுடைய செல்வப் பகட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர்தான் எளிமைக்குச் சொந்தக்காரர்.
*அவர் சாதாரண தட்டில்தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத்தானே தவிர, தட்டையல்ல.*
அவர் உடையிலும்
எளிமை தெரியும். பயன்படுத்தும் பொருட்களிலும் எளிமைத் தெரியும்.
*நடத்தையில் எளிமை *
*நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதி அளிப்பது.*
பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது.
*செயல்முறையில் எளிமை*
செயல்முறை எளிமை என்பது தன் அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைபிடிப்பது, செயல் திட்டங்களை எளிமைப்படுத்துவது.
*எதையும், எவரும் எளிதாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்.*
உணவில் எளிமை
உடலும் உள்ளமும் நலம் பெறுவகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாவின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவு உண்பது.
*மொழியில் எளிமை*
இறுதியாக,
ஆனால் மிக முக்கியமாக
மொழியில் எளிமை கடைபிடிப்பது.
*மொழி எளிமை என்பது, நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும், அனைவருக்கும் குறிப்பாக அந்த தகவல்களைப் பெறுபவர்களில் மிகச் சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது.*
எளிமை என்பது
ஏழ்மை அல்ல.
அற்புதமான வாழ்க்கைக்கு வேர்.
*எளிமையாக வாழ்வதன் மூலம்
மாசற்ற இயற்கை,
நோயற்ற உடல்,
நிறைந்த செல்வம்,
போட்டி - பொறாமையற்ற
சமுதாயத்தை உருவாக்கலாம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 30 October 2023

தளர்வு ஓய்வு .

 தளர்வு ஓய்வு . .

*'சும்மா இருத்தல்'
என்ற நிலை.*
*நீயாக முயன்று முயற்சித்து, வலுக்கட்டாயமாக எந்தவித
செயலும் செய்யாமல் இருப்பதல்ல.*
*உன் தீவிர முயற்சிகள் அனைத்தும் முற்றுப்பெறும் போது,
*அது தன்னால் உருவாவது. *
*"தூக்கம் என்பதை எப்படி
உன் முயற்சியால் வரவழைக்க முடியாதோ அது போல. "*
*தளர்வு, ஓய்வு போன்றவை
தன்னியல்பாக
உன்னில் நிகழ வேண்டும்.*
*மற்றவர்கள்
என்ன செய்தார்கள் என்பது முக்கியமில்லை.*
*நான்
என்ன செய்தேன் என்பதே கேள்வி. *
*விலகிச்
செல்வதையெல்லாம்
அப்படியே விட்டுவிடுங்கள்.*
*எவ்வளவு
இழுத்து பிடித்தாலும்
சிலகாலம் மட்டுமே. *
*சுமைகள்
இல்லாத வாழ்க்கை என
இங்கு எவருக்கும் அமைவதில்லை.*
*சுமைகளைச் சுமக்க
கற்றுக் கொள்ளுங்கள்.*
*வாழ்வு இனிமையானதாக நகரும். *
*நல்லதை
யார் சொல்கிறார்கள்
என்பது முக்கியமில்லை*
*எதற்காகச் சொல்கிறார்கள்,
எப்படிச் சொல்கிறார்கள்,
ஏன் சொல்கிறார்கள்
என்பதை உணர்ந்தால்*
*சொல்பவரை விட
கேட்பவருக்கு நன்மை அதிகம். *
*வாழ்க்கையில்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் நல்ல விஷயங்களைக்
கூறும் நல்ல மனிதர்களை இழந்து விடாதீர்கள்.*
*கவலைகளை
நிரந்தரமாக்குகின்றவன்
நோயாளி.*
*அதைத்
தற்காலிக மாக்குகின்றவன்
புத்திசாலி.*
*அதைத்
தன்னுள் சேர்க்காதவன்
அதி புத்திசாலி.*
*விதி ஆயிரம் கதவுகளை
மூடினாலும்,*
*விடாமுயற்சி சில
ஜன்னல்களையாவது
திறக்கும் .*
*நமக்கு
எல்லாம் கிடைத்தாலும்
இறைவனின் அனுக்கிரகம்
இருந்தால் மட்டுமே அவற்றை அனுபவிக்க முடியும்.*
*கற்றுத் தெளிவது
கல்வி,
பட்டுத் தெளிவது
அனுபவம்.*
*கற்றது
மறந்தாலும்
பட்டது
மறக்காது.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேராற்றலைப் போற்றிடுவோம்


 

ஆழ்ந்த இரங்கல். காரைக்குடி தொழில் வர்த்தகக் கழகத்தின் மேனாள் தலைவர், ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, நகரத்தார் மாநாடுகளைப் பல பெருநகரங்களில் நடத்திடத் துணை நின்றவர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் செயலாளர், சமூக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர், அனைத்து சமூக மக்களின் பேரன்பைப் பெற்றவர், அருமை அண்ணன் காரைக்குடி முத்து பழனியப்பன் அவர்கள் இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


வெற்றித் திருமகன்களுடன் இனிய சந்திப்பு.

 வெற்றித் திருமகன்களுடன்

இனிய சந்திப்பு.
மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக வரலாற்று வெற்றியினைப் பெற்ற அருமைச் சகோதரர்
பேராற்றல் மிக்க தலைவர்
பாகனேரி ஆர்எம். வயிரவன்
துணைத்தலைவர், குழுவின் தளபதி
தேவகோட்டை
ஏ. சொக்கலிங்கம்
துணைச் செயலாளர்
பண்பாளர்
ஆவினிப்பட்டி ஆ. வள்ளியப்பன்
பொருளாளர்
அறப்பணிச் செம்மல்
தேவகோட்டை ஏ. லெட்சுமணன்
இன்று இரவு திருநகர் வீட்டில் மனிதத்தேனீக்கு
அன்பைச் சொல்லும் இனிய தருணம்.
செயலாளர் வாய்ப்பினை
நம் ஐவர் குழுவில்
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவற விட்ட அருமைத் தம்பி
நெற்குப்பை சி. லெட்சுமணன்
தொடர்ந்து உத்வேகத்துடன் முன்னிலும் முனைப்புடன் பணியாற்றுவார்.
செயலாளர் தேர்வு பெற்றுள்ள அருமைச் சகோதரர் நாட்டரசன்கோட்டை
சோமசுந்தரம் அவர்களுக்கும் நமது வாழ்த்தும் பாராட்டும்.
புதிய குழுவினர் முழு சுதந்திரத்துடன் நமது முன்னோர்கள் ஆசியுடன், ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் மிகச் சிறந்த பணியினைச் செய்வார்கள்.
மதுரை நகரத்தார் சங்கம்
மீண்டும் ஒரு பொற்காலத்தைப் படைத்திட வாய்ப்பு வழங்கிய நகரத்தார் பெருமக்களின் வெற்றி இது.
வாழிய புதிய நிர்வாகிகள் வாழியவே.


கவலைப்பட ஒன்றுமில்லை . .

 கவலைப்பட ஒன்றுமில்லை . .

மனதை
எப்போது‌ம் உற்சாகமாக
வைத்து‌க் கொ‌ண்டா‌ல்
நா‌ம் எப்போதுமே
இளமையாக இரு‌க்கலா‌ம்.
அது எப்படி ‌
பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது
மனதை உற்சாகமாக
வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம்
என்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.
எதையு‌ம் நேர்நிலையாகச் ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌ வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எந்தச் ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம்
உடை‌ந்துப் போகாம‌ல்
ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.
எல்லாவ‌ற்‌றி‌ற்குமே
இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன் உள்ளன. வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அல்லது நோ‌ய் வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள்.
முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் என்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.
இல்‌லை, உட‌ல் நல‌க் குறைவு ஏற்படு‌கிறது என்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
அத‌ற்கு‌ம் இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன். ஒன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இல்‌லையெ‌ன்றா‌ல் நலம் குறைவீர்கள்.
நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள்
என்றா‌ல் ஏன்
அதை‌ப் ப‌ற்‌றிக் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.
எதிலு‌ம் ஒன்று ந‌ல்லது
அல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம்.
ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒன்‌று‌மி‌ல்லை,
கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அதிலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள்.
இப்படி இரு‌க்க, உங்க‌ள் வா‌ழ்‌க்கை‌ப் ப‌ற்‌றிய கவலையைத் தூ‌க்‌கி எறிந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை என்‌பது
பூ‌ங்காவன‌ம் அல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் என்பதை உணரு‌ங்க‌ள்.
போரா‌ட்ட‌க் கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எதற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழப் பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
எப்போது‌ம் நட‌ப்பவை எல்லா‌ம் ந‌ன்மை‌க்கே என்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உங்‌களது வா‌ழ்‌க்கையைச் ‌சிற‌ப்பாக வாழ‌ப் பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.‌
நீ‌ங்க‌ள் ‌எந்தப் ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள்
என்றா‌ல் ‌நீ‌ங்க‌ள்
தவறான‌ பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் என்று பு‌ரி‌ந்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
முத‌லி‌ல் உங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். ‌‌
சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அளி‌‌க்கு‌ம்.
பு‌திதாகச் செ‌ய்யு‌ம் போது தா‌ன் உற்சாக‌ம் அதிகரி‌க்கு‌ம்.
அரை‌த்த மாவையே அரை‌த்து ‌
நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது என்பதை உணரு‌ங்க‌ள்.
உற்சாக‌மும். மகிழ்ச்சியும்
உங்களு‌க்கு‌ள் தா‌ன் இரு‌க்‌கிறது.
அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள்.
ம‌ற்றவ‌ர்களு‌க்கு
மு‌ன்னுதாரணமாக
வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Saturday 28 October 2023

உண்மையான கம்பீரம் . .

 உண்மையான கம்பீரம் . .

*அறிவை
வளர்த்துக்கொண்டே இருங்கள்.*
*நீங்கள்
எடுக்கும் முடிவு தான் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வைத் தரும்.*
*அந்த முடிவை சரியாக எடுக்கும் ஆற்றலை அறிவு தான்
உங்களுக்குத் தரும்.*
*போலியும்,
பொய்யும்
நிறைந்த மனிதனுக்கு
ஆரம்பத்தில் வெற்றி தோன்றலாம்.
முடிவில் தோல்வி நிச்சயம்.*
*பணம் இருக்கும் போது
கிடைக்கும் உறவு, பாசம்,*
*மதிப்பு, மரியாதை
அனைத்தும் முற்றிலும்
போலியானது.*
*இந்த உண்மையை பணமும், வேலையும்
இல்லாதபோது உணர்ந்து கொள்வீர்கள்.*
*யார் எப்படி இருந்த போதும்
நீங்கள் நேர்மையாக இருங்கள்.*
*அது தரும் பரிசே
உண்மையான கம்பீரம்.*
*எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும்
தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.*
*நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படும் இடையூறு.*
*பிடித்தவர்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்று விடாதீர்கள். *
*தன்னை விட யாருமே
உங்களை அதிகம் நேசிக்கக்
கூடாது என்ற கர்வமே கோபத்திற்கு காரணம்.*
*பிறர் நினைத்ததை
எழுதும் காகிதமாக
இருக்காதீர்கள்.*
*நீங்கள் நினைத்ததை
எழுதும் எழுது கோலாக
இருங்கள்.*
*உண்மையாக இருப்பது
போல் நடிக்கிறார்கள் என்றால்.*
*அதை நம்புவது
போல் நடிப்பதில் தவறில்லை.*
*முயற்சி நிறுத்தப்படும் போது
தோல்வியாகிறது.
தொடரப்படும் போது வெற்றியாகிறது. *
*உரிமை உண்டு என
எண்ணினாலும் நமக்கு மதிப்பு
இல்லை என்று தெரியும் போது*
*ஒதுங்கி இருப்பதே நல்லது ஆகும்.*
*முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை .*
*தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப் பெரிய பிழை .*
*உங்கள் சிந்தனையின் தரம் .*
*உங்கள் வாழ்க்கையின்
தரத்தைத் தீர்மானிக்கிறது*

எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார் திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளத்தூர் எங்கள் வீட்டில் உறவினர்கள் சூழ இனிய தருணம். மற்றும் அதனை முன்னிட்டு இன்று பள்ளத்தூர் முதியோர் இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு. - மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அலமேலு சொக்கலிங்கம்
















 

நேற்று மாலை ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் நடைபெற்ற எங்கள் மகன் நிச்சயதார்த்தம் விழாவில் பங்கேற்ற நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக களம் காணும் நமது பேரன்பும் பேராதரவும் பெற்ற இனியவர் பாகனேரி ஆர்எம். வயிரவன் அவர்கள் தலைமையில் உள்ள ஐவர் குழு. அதன் தளபதி துணைத் தலைவர் களம் காணும் ஏ. சொக்கலிங்கம், செயலாளர் களம் காணும் செயல் வீரர் சி. லெட்சுமணன், துணைச் செயலாளர் களம் காணும் ஆ. வள்ளியப்பன், பொருளாளர் களம் காணும் ஏ. லெட்சுமணன் மற்றும் அருமை இளவல் ஆர். கதிர் நம்முடன் 1987 முதல் நகரத்தார் பணிகளில் தொடர்ந்து பயணப்படும் யுடிஎல். ராமசாமி. மகிழ்வுடன் - மனிதத்தேனீ

 




மனிதத்தேனீ மகன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் நடைபெற்ற விழாவின் தொடர்ச்சிப் படங்கள் .