Friday 30 June 2023

தரமான குணங்கள்.

 தரமான குணங்கள்.

*உங்களிடம் இந்த 7 குணங்கள் இருந்தால் நீங்களும் சாதனையாளரே.*
தன்னம்பிக்கை உடையவன் தரணியை ஆள்வான்’ என்பார்கள்.
தன்னம்பிக்கைதான் ஒருவரைச் சாதிக்க வைக்கும். என்னதான் நம்மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தாலும் சில சமயங்களில் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளம்பிற்கே சென்று விடுகின்றோம்.
தரமான சில குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம்தான் சாதனையாளர்.
அதற்கு, தன்னம்பிக்கை மிகவும் அவசியம். உண்மையில், தன்னம்பிக்கை உடையவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்.
* தன்னம்பிக்கையுடைய மனிதர்கள் தாங்கள் எடுக்கும் முடிவில் அடுத்தவர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள், பிறரின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டாலும், எது சரி, எது தவறு என்பதை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, தங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவார்கள்.
பொதுவாக இப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகளுமே இதயபூர்வமானதாகவும், நிம்மதியைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
விவாதம் செய்வது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. எதிர்தரப்பினர் கூறும் கருத்துகளில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
தன் கருத்துகள் அனைத்தும்
ஆமோதிப்பதையும் விரும்பமாட்டார்கள் .
மேலே குறிப்பிட்டுள்ள 7 குணங்களோடு உங்கள் குணம் ஒத்துப்போனால் நிச்சயம் நீங்களும் ஒரு தன்னம்பிக்கையாளர்தான்.
All reactions:
Krishna Raman, R Prabhu and 4 others

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Thursday 29 June 2023

தகுதி என்பது என்ன.

 தகுதி என்பது என்ன.

பாதை இலகுவா கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள். போகும் இடத்தை அடைந்து விடலாம்.
எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு.
தகுதியை மீறி ஆசைப்படக் கூடாது என்பது உண்மை தான ஆனால், உங்கள் தகுதி என்ன என்பதை மற்றவர் தீர்மானிக்க கூடாது.
நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை இழிவாக நினைப்பவர்களைக் குறை மட்டும் காண்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடுங்கள்.
நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.. அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.. அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே.
எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடைப் பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் “என்னால் முடியும்.
விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே. விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்து விடாதே.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ரம்ஜான் வாழ்த்து


 

Wednesday 28 June 2023

வார்த்தைகளின் சக்தி.

 வார்த்தைகளின் சக்தி.

*உலகிலேயே துயரம்
மிகுந்த மனிதன்.
எதிலும் தயக்கம்
காட்டுபவன் தான்.*
*நீங்கள் உண்மையை
மட்டும் சொன்னால்
நீங்கள் எதையும் நினைவில்
வைத்திருக்க வேண்டிய
அவசியமில்லை.*
*கயிறு அறுந்த போது தான்
பட்டத்துக்குத் தெரிந்தது
உயரம் தனதல்ல என்று.*
*"தலைக்கனம் தவிர்"*
*எல்லை உள்ள ஒரு வெற்றிக்கு,*
*எல்லையற்ற முயற்சிகள் தேவை.*
*வெற்றி பெறுவதற்கான
மிகவும் சிறந்த வழி.*
*மற்றொரு முறை முயற்சி செய்வதே.*
*பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்க வேண்டிய மீதிச்
சில்லறைக்காக முழுப் பயணத்தையும் ரசிக்க மறக்கிறோம்.*
*அப்படி தான் வாழ்க்கையிலும்*
*சில சில்லறைப் பிரச்சனைக்காக முழு வாழ்க்கையையும் ரசித்து வாழ மறந்து விடுகிறோம்.*
*உங்களைக் குறித்து நீங்களே தாழ்த்தி அல்லது எதிர்மறையாகப் பேசாதீர்கள்.*
*ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உண்டு.*
*இந்த உலகில் கூறப்படும்
தத்துவங்கள், அறிவுரைகள்,
போதனைகள் அனைத்தும்
சூழ்நிலையைப் பொறுத்து
மாறுதலுக்கு உட்பட்டது.*
*அமைதி நிறைந்த
அடிமைத்தனத்தை விட.*
*ஆபத்துடன் கூடிய
சுதந்திரமே மேலானது.*
*பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும்உண்மை இல்லா
விட்டால்.*
*உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து
விட்டால்.*
*இது பொய்யில் உண்மை, அது
உண்மையில் பொய்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 27 June 2023

திசை திருப்பும் கலை.

 திசை திருப்பும் கலை.

சிறு கல்லைத் தூக்கியெறிந்தால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில் தான் முடியும்.
சூரியன் மிகமிக வலிமை வாய்ந்தது. எங்கோ இருக்கிறது. ஆனால், ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது. ஆனால், அந்தப் பெரிய சூரியனைக் கிணற்று நீரில் காண முடியும். கிணற்றுக்குள் அதன் பிம்பத்தைக் காண முடியும்.
சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரியும். அதற்குக் காரணம் கிணற்றில் சலனம் இல்லை. அதனால் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரிகிறது, அது போலத்தான் நம் உள்ளமும்.
எந்தவிதச் சலனமும் இல்லாமல் இருந்தால் தான், நாம் எண்ணிய குறிக்கோள்களை எளிதில் அடைய முடியும்.
ஓட்டப்பந்தயம் ஒன்றில் இருவர் மட்டுமே பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர். ஒரு கட்டத்தில் ஒருவர் களைப்படைந்தார். ஆனால், பந்தயத்தில் தோற்பதை அவர் விரும்பவில்லை.
அதனால் மற்றவரை திசைதிருப்பும் விதமாக தங்கக் குமளி (ஆப்பிள்) ஒன்றை உருட்டி விட்டார். அதை எடுக்க விரும்பிய மற்றவர் கவனம் தடுமாறியது.
இதற்கிடையில் தங்கக் குமளியை உருட்டி விட்டவர் வேகமாக ஓடி எளிதில் இலக்கை அடைந்தார். மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத்தான், சலனத்திற்கு இடம் கொடுத்தால், நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது.
நம்முடைய மனதிலும் கூட சில நேரங்களில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றி நம்மைக் குழப்பி விடும்.அப்போது நாம் சலனப்படாமல் பொறுமையுடன் இருந்தால் மனம் தெளிவடைந்து அமைதி ஏற்படும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 26 June 2023

என்னதான் நடைபெறுகிறது.

 என்னதான் நடைபெறுகிறது.

முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில்
சிக்மன் பிராய்டு கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார்.
பிராய்டு இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார்.
மின்சார விளக்கு கிராமத்தவருக்குப் புதிது.
அவருக்கு அது பற்றி பயம்.
ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார்.
படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதிப் பார்த்தார்.
விளக்கு அணையவில்லை.
விளக்கை அணைப்பதற்கு பிராய்டை எழுப்பி கேட்கலாம்.
ஆனால் அவர் இது கூட தெரியலயே என மிகவும் மட்டமாகக் கருதிவிடலாம்.
ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார்.
காலையில் பிராய்டு வந்ததும்
“என்ன இரவு நல்ல உறக்கமா ” என்று கேட்டார்.
“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ” என்று கேட்டார்.
பிராய்டுக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சார பயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது.
”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச், இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் என்றார்.
“பட்டனை தட்டினால் போதுமா, இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று” என்றாராம்.
மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும்
பட்டனைத் தட்டுவது தான் தெரியும்.
அன்பை, வாழ்வைப் பற்றி என்ன தெரியும்
உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து. அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா
யோசித்துப் பாருங்கள்.
எதுவும் தெரியாது.
உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது
உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .
வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது.
அனாதிகாலமாக இந்த பிரபஞ்சத்தில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள்.
தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும்
உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில்,
மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும், மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.
மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது
கோபம் எங்கிருந்து வருகிறது
அதன் உற்பத்திக் களம் எங்கே
எதுவும் தெரியாது.
ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறி விடுகின்றார்.
ஏன்
என்னதான் நடைபெறுகிறது
அதன் ஆரம்பப் புள்ளி எங்கே
அதன் ஆதார சுருதி எங்கே
உங்களுக்குத் தெரியாது.
உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின்
இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில்
நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை
அறிந்து கொள்ள முடியும்
உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்து கொண்டுவிட்டால்
அப்போது இந்த வாழ்வின் அத்தனை இரகசியத்தையும் நீங்கள் உணர முடியும் .

மனிதத்தேனீயின் தேன்துளி


 

சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் பிறந்த நாள்


 

வளைகாப்பு நிகழ்ச்சி.

வளைகாப்பு நிகழ்ச்சி.
திருநகர் எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் உள்ள மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர்கள் பணியில் சென்னையில் உள்ள பொறியாளர் இளம்பரிதி (அண்மையில் பணி நிறைவு) - பிரீடா பத்மினி இவர்கள் மூத்த மகன் மோனா மனைவி சோபனா வளைகாப்பு விழா இன்று நண்பகல் தோப்பூர் அருகில் உள்ள ஜவகர்லால் சரோஜா ஏசி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம் மற்றும்
விஎன்ஆர் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் என். ராஜா குடும்பத்தினர் பங்கேற்று மகிழ்ந்த தருணம்.
உறவினர்கள் சூழ வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வளரட்டும் தலைமுறை.

தொடரட்டும் நட்புணர்வு.













 

துன்பத்தைத் தூக்கி எறியுங்கள்.

 துன்பத்தைத் தூக்கி எறியுங்கள்.

*வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நம்மைத் தொடர்வது
மிகவும் முக்கியம்.*
*ஏனென்றால் ஒரு ஈ சி ஜி யில் கூட ஒரு நேர்கோடு என்றால் நாம் உயிருடன்
இல்லை என்று அர்த்தம்.*
*மனிதன் முகம் வாடியது போல் தோன்றக் காரணம் அவனது மனம்.
கவலைகள், சிந்தனைகள், கனவுகள், இன்ப மயக்கம்
போன்றவற்றின் கனத்தால்
எப்போதும் அழுந்திக் கிடப்பதுதான்.*
*இன்பமோ துன்பமோ சற்று பொறுங்கள். அதைக் கவனித்துப் பாருங்கள். அது நகர்வதை நீங்கள் கவனிக்கும் போதே காணலாம். தயவுசெய்து துன்ப காலத்தில் இருந்து வெளியேறி. இத்தருணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.*
*பொன் பொருளை விட
மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில் அதை யாரும் உங்களுக்குக் கடனாய்க் கொடுக்க
மாட்டார்கள்.*
*மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால் கவலையின்றி வாழ மூன்று வழி தான்.*
*போவது போகட்டும்,
வருவது வரட்டும்,
நடப்பது நடக்கட்டும்
என்று இருப்பது தான்.*
*காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்க பழகிக்கொண்டால் எந்தக் காயமும் பெரிதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*எத்தனை முறை உங்கள் சந்தோஷங்கள் பறிக்கப்பட்டாலும், பூத்துக் கொண்டே இருங்கள்
பூக்களைப் போல.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 24 June 2023

மாலைமுரசு 24.06.2023 பக்கம் 3


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

பேசுகிற படி எழுதுகிற படி நாம் நடக்க வேண்டும்.

 பேசுகிற படி எழுதுகிற படி

நாம் நடக்க வேண்டும்.
பொதுவாக ஒருவர் அறிவுரை கூறுகிறார் என்றால், அதைக் கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது என்பதை மனிதர்கள் கவனிப்பார்கள்.
ஒரு சிறுவன் அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனது தாயார் அவனை நல்வழிப்படுத்த, தனது குருவிடம் அவனை அழைத்துச் சென்றார். குரு அவர்களைப் பார்த்து விட்டு, அடுத்த வாரம் வரும்படி கூறினார். தாயாரும் அடுத்த வாரம் மகனை மறுபடி குருவிடம் அழைத்துச் சென்றார். குரு திரும்ப அடுத்த வாரம் வரும்படி கூறினார். தாயார், மறுபடி அடுத்த வாரம் குருவிடம் மகனை அழைத்துச் செல்ல, குரு சிறுவனைக் கூப்பிட்டு, அறிவுரை கூறினார்.
'தம்பி. அதிகமாக சர்க்கரை சாப்பிடாதே. உடல்நலத்திற்கு தீங்கு. அளவாக சாப்பிடு' என்றார்.
என்ன ஆச்சரியம். மகன் அன்று முதல் சர்க்கரை அளவை குறைத்து விட்டான். தாயாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குருவிடம் சென்று மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துக் கொண்டார். மேலும், குருவிடம், ஏன் தாங்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே இந்த அறிவுரையைக் கூறவில்லை, என்று வினவினார்.
அதற்கு குரு, பின்வருமாறு பதிலளித்தார்.
'எனக்குமே சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லை. அறிவுரை கூறுவதற்கு முதலில் நான் கடைபிடிக்க வேண்டும். அதனாலேயே இரண்டு வாரம் கழித்து, நான் கடைபிடித்தப் பிறகு, உபதேசம் அளித்தேன். அதன் காரணமாகவே, உபதேசம் பலனளித்தது என்றார்.
தாயும், அறிவுரையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டார்.
இப்போது, கேள்விக்கு வருவோம். பொருளாதாரத்தில் முன்னேறாத ஒருவர், எத்தகைய கருத்து கூறுகிறார் என்பதைப் பொறுத்து மக்கள் அதனைப் பொருட்படுத்துவர்.
வள்ளலார் காசினை கையால் தொட மாட்டார். மிகப் பெரிய ஞானி. அவர் பின்னால், மக்கள் சென்று, ஜீவகாருண்யத்தை வாழ்வியலாக பின்பற்றி வருகின்றனர்.
வேதாத்திரி மகரிஷி தனது 50 வது வயதில், ஆன்மிக வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி விட்டார். மக்கள் அவரது உபதேசங்களைப் பின்பற்றி நடக்கின்றனர்.
எனவே, ஞானிகள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், அவர்கள் கூறும் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவர் பெரிய ஞானியாக இருக்கலாம். அவரை பொருளாதாரத்தின் அடிப்படையில் அவரை மதிக்காமல் போனால், இழப்பு மதிக்காதவருக்கே.
எனவே, பொருளாதாரத்தில் ஒருவர் பின்தங்கி இருந்தாலும், அவருக்கு அறிவுரை கூறும் தகுதி இருந்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

கண்ணதாசன் பிறந்த நாள்


 

வாழிய தம்பதியர்.

 வாழிய தம்பதியர்.

இன்று மணநாள் 23 ஆம் ஆண்டு கண்டு மகிழும் அருமை இளவல், மதுரை நகரத்தார்களின் முன்னோடி, காவடிச் செம்மல், மதுரை உதவும் கரங்கள் அமைப்பு நிறுவனர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பில் துடிப்பாகப் பணியாற்றும் செயல்வீரர் , மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்காணிப்பாளர், நாள்தோறும் பலரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வழ்த்தினைப் பதிவு செய்திடும் நற்பண்பாளர்,அரிமா சங்க முன்னோடி, தேவகோட்டை
அருளிசை மணி
வீர. சுப்பிரமணியன் - ஜெயகீதா
(மதுரை வில்லாபுரம் கிளை சிட்டி யூனியன் வங்கியின் வளர்ச்சி மேலாளர்)
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, மணநாள் நூற்றாண்டு கண்டு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய தம்பதியர் - மனிதத்தேனீ

Friday 23 June 2023

பபு என்ற நாராயணன் அவர்களுக்கு வாழிய பல்லாண்டு


 

செயல்கள் தான் நிலைக்கும்.

 செயல்கள் தான் நிலைக்கும்.

*இது ஒரு சம்பவம்..*
அது இரவு நேரம்.
சாலையின் ஓரமாக ஒரு பன்னிரண்டு வயது சிறுவனை நிற்க வைத்து ஒரு காவல்துறை அதிகாரி, மணிக் கணக்காக ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சிறுவனும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த சாலை வழியாகப் போன பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியமாக அந்த காட்சியை பார்த்துக் கொண்டே போனார்கள்.
சில சமயங்களில் அந்த சிறுவன் ஏதோ கேட்க, அந்த போலீஸ் அதிகாரி அவனுக்கு பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் தங்கள் மொபைலில் இந்தக் காட்சியை படமாகவும் எடுத்தார்கள்.
அப்படி எடுத்த ஒரு படத்தால்தான் இந்த விசித்திரமான விஷயம் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர். இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது அந்த நல்ல காரியம்.
ஆம். இந்தூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரிதான்
அந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவன் ஒருவனுக்கு இலவசமாக டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார்
தினமும் தெரு ஓரத்தில் நின்று.
அந்த காவல்துறை அதிகாரியின் பெயர் வினோத்.
அந்த 12 வயது மாணவன் பெயர் ராஜூ.
"எப்படி ஆரம்பமானது இந்த டியூஷன் "
கடந்த ஆண்டு ஒரு ஊரடங்கு மாலையில் காவல்துறை அதிகாரி வினோத்
வழக்கமான ரோந்துப் பணியில் இருக்கும்போதுதான் தற்செயலாக அந்தப் பையனைப் பார்த்தார்.
சாலை ஓரத்தில் சோகமான முகத்தோடு நின்று போலீஸ்காரர்களை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜூ.
அவனை அருகே அழைத்தார் வினோத்.
"யார் தம்பி நீ "
ராஜூ தன் கதையைச் சொன்னான்.
அப்பா ரோட்டோரம் டிபன் கடை வைத்திருந்தாராம். ஊரடங்கால் கடை மூடப்பட்டு விட்டது.
மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனாலும் இந்தச் சிறுவனுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்.
"எதிர்காலத்தில் என்ன ஆக விரும்புகிறாய் ராஜூ "
"உங்களை போல
போலீஸ் ஆக "
வினோத்துக்கு ஆச்சரியம்.
"போலீஸ் ஆக ஆசையா "
"ஆமாம் சார், ஊரே அடங்கி ஒடுங்கி கிடக்கும் இந்த நேரத்திலும் நீங்கள் எல்லோரும் எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறீர்கள், எனக்கும் இதைப் போல சேவை செய்ய ஆசை "
"வெரிகுட்."
"ஆனால் ... ஸ்கூல் எல்லாம்
எப்போது திறக்கும் எனத் தெரியலை சார்."
"ஏதாவது டியூஷனுக்குப் போகலாமே தம்பி."
"இல்லை சார். அதற்கு ஃபீஸ்..."
"ஓ "
கொஞ்ச நேரம் யோசித்தார் வினோத்.
"ஒன்று செய்யலாம்."
"என்ன சார் "
"நாளை இதே நேரம், இரவு எட்டு மணிக்கு இந்த இடத்திற்கு வந்து விடு."
அடுத்த நாளிலிருந்து ஆரம்பமானது அந்த இலவச டியூஷன்.
டியூட்டியை முடித்து விட்டு வரும் வினோத் தினமும் அந்தப் பையனுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தார்.
டியூஷனுக்கான இடம்
காவல் நிலையத்துக்கு அந்த பையனை அழைத்து செல்ல அவர் விரும்பவில்லை.
எனவே அவர் வசம் போலீஸ் ஜீப் இருந்தால் ஏதாவது ஒரு தெரு விளக்கின் அடியில் அதை நிறுத்தி வைத்து விட்டு, ஜீப் பானெட்டிலேயே வைத்து பாடம் நடத்துவார் வினோத்.
ஜீப் இல்லையென்றால்.
ஏதாவது ஒரு ATM வாசலில்.
அல்லது தெருவில் எங்கே வெளிச்சம் இருக்கிறதோ, அங்கேதான் டியூஷன் சென்டர்.
சந்தோஷமாக படித்துக் கொண்டிருக்கிறான் ராஜூ.
அதை விட சந்தோஷமாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வினோத்.
மீடியாக்காரர்கள் காவல்துறை அதிகாரி வினோத்திடம்
கேட்டார்கள்.
"எப்படி சார் இருக்கிறது இந்த புது டியூஷன் அனுபவம் ?"
சிரித்தார் வினோத்.
ஏற்கனவே இதற்கு முன் அவர் பணி புரிந்த ஊர்களில் எல்லாம் இதே போல பலருக்கும் டியூஷன் எடுத்திருக்கிறாராம்.
அவரிடம் படித்த சில மாணவர்கள் இப்போது காவல் துறையிலும் பணிக்கு சேர்ந்திருக்கிறார்களாம்.
மகிழ்ச்சி.
நிச்சயமாக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் ஒரு மனிதர் இந்த வினோத்.
காக்கிச்சட்டை என்றாலே கடுமை என்று சிலர் நினைக்க வைக்கிறார்கள்.
ஆனால் கடவுள் கூட சில வேளைகளில் காக்கிச் சட்டை அணிந்து வரலாம்
என வினோத் போல இருக்கும் சிலர் நினைக்க வைக்கிறார்கள்.
*பல நூல் படித்து நீயறியும் கல்வி. *
*பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்.*
*பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்.*
*இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"