Saturday 30 March 2019

உ.வே.சா. நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பொதுநல அடிப்படையில் வாழ்ந்துதான் புத்தர் புகழ் பெற்றார்.
அவர்
இறைவனைப்பற்றிப் பேசவில்லையாயினும்
இறைவனைப் பணிவோர் கொள்ளும் அன்பு வாழ்க்கையையும்,
தியாகவாழ்வையுமே நடத்தினார்.
அதனால்
அவரே இறைவனின் இடத்தில் வைக்கப்பட்டுத் தொழப்பட்டார்.
சுவாமி விவேகானந்தரும்
இறை வாழ்க்கையில் ஈடுபட்டே பெரும் புகழுற்று உயர்ந்தார்.
தன்னம்பிக்கையைவிட, இறைநம்பிக்கையின் வீச்சு அதிகம்.
அதனாலேயே
தன் நம்பிக்கை கொண்டு முன்னுக்கு வந்தோரைவிட,
இறைவனை நம்பி மேலுக்கு வந்தோர் அதிகம்.
ஏனெனில் ,
இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் வேலைகள் யாவும் இறைவனுடையது.
அவனே செய்பவன்.
அவன் அளித்த சக்தியை வைத்தே அனைவரும் இயங்குகின்றனர்.
இந்தப் பிரபஞ்சம் எப்படிப் போனாலும் அதன் பயன் இறைவனைச் சார்ந்ததே.
ஏனெனில் அவனே பொறுப்பாளி.
ஆகவே ,
அவரவருக்கு அளிக்கப்பட்டுள்ள சக்தி, அந்தஸ்து எல்லாம் அவன் வேலையைக் கவனிக்கவே.
இதில்,
அவன் சித்தத்திற்கு மாறாக
"நான் செய்கிறேன் "
"எனக்காகச் செய்கிறேன் " என்பது அகங்காரமாகிறது.
அப்போதே இருவினைகளையும் ஏற்று அவற்றின் பயன்களை அனுபவித்து சம்சாரத்தில் விழ வேண்டியதாகின்றது.
"ஆட்டி வைப்பவன் இறைவன் "
என்னும் போது,
உங்களை நம்புவதைவிட இறைவனை நம்புவதே உத்தமம்.
ஈசனைநினை! தீரும் தீவினை!
வாழிய பல்லாண்டு வாழியவே

பதிலுக்குப் பதில்


மனிதத்தேனீயின் தேன்துளி


மதுரையின் புகழ்பெற்ற ராஜேஷ் ஸ்கிரீன் பிரிண்டிங் உரிமையாளர், ஓய்வின்றி உழைக்கும் அருமை நண்பர் ஆர். இளங்கோவன் மனிதத்தேனீக்கு கைத்தறி ஆடை அணிவித்த மகிழ்வான தருணம். அருகில் அவரது சகோதரர் ஆர். செல்வம் உள்ளார்.


Friday 29 March 2019

பாரதிதாசன் நினைவு தினக் கூட்டம்


தினபூமி மதுரை 29.03.2019 பக்கம் 8


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆங்கில நாளிதழ் டைம்ஸ் நவ் ல் வெளியான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் பேட்டி.
#நிருபர் : இந்தியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்ற பரபரப்பான குற்றச்சாட்டிற்கு என்ன பதில்?
#முஷ்ரப்: உலகளவில் பாகிஸ்தானை இந்தியா தனிமைபடுத்த முயற்சிக்கும் போது நாங்கள் இந்திய அரசியலில் மோடியை மீண்டும் பிரதமராக ஆக விடாமல் தடுப்பதில் என்ன தவறு?
#நிருபர்: அப்படியென்றால் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். சரி அதற்கு என்னென்ன மாதிரி நடவடிக்கைகளை பாகிஸ்தான் செய்து வருகிறது
#முஷ்ரப்: இந்தியாவில் மோடிக்கு எதிராக அவதூறுகளை பரப்புவோம். ராணுவத்தின் உதவியுடனும் தடைசெய்யப்படாத இஸ்லாமிய இயக்கங்கள் மூலமாகவும் சமூகவலைதளங்கள் மூலமாகவும் இந்திய நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வோம். அதை எந்த வழியில் செயல்படுத்துவோம் என கூற முடியாது. தாய்நாட்டு ரகசியம்.
#நிருபர்: நீங்கள் ஆசைப்பட்ட படி தனியாக நாட்டை பிரித்து கொடுத்தாகி விட்டது. இன்னும் ஏன் இந்தியா மீது கோபம்.?
#முஷ்ரப் : (கோவத்துடன்) கிழக்கு பாகிஸ்தானை எங்களிடம் இருந்து பிரித்து வங்கதேசம் உருவாக காரணமே இந்தியா தான். அந்த போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தே ஆக வேண்டும்.இந்தியாவில் உள்ள மாநிலங்களை தனித்தனி நாடாக பிரித்தால் தான் நாங்கள் அமைதி கொள்வோம்.
#நிருபர்: இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதே.
#முஷ்ரப்: உண்மைதான். கேரளா தமிழ்நாட்டிற்கு இன்னமும் எங்கள் நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி வந்துகொண்டு தான் இருக்கிறது. காரணம் மக்களை ஒரே ஒரு இறை கொள்கையை பின்பற்றவைக்கத்தான். இந்தியாவில் ஏகப்பட்ட மதங்கள் கலாச்சாரங்கள் மொழிகள் பண்பாடுகள். இவையோடு எப்படித்தான் நீங்கள் வாழ்கிறீர்களோ?
#நிருபர்: கடைசி கேள்வி. ராகுல் காந்தி பற்றியும் காங்கிரஸ் பற்றியும் உங்கள் நிலைப்பாடு என்ன?
#முஷ்ரப்: காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட பொழுது எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு தேவையான உதவிகள் எப்போதும் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் தலைவர்களை எங்கள் நாட்டினர் வளர்ப்பு பிராணி (நாய்) என்று செல்லமாக அழைப்பர்.
ராகுல் ஒரு நல்ல மனிதர். குறிப்பாக அவர் ஹிந்துவும் கிடையாது. இந்தியனும் கிடையாது. ஆதலால் அவரை அடுத்த இந்திய பிரதமாராக ஆக்குவதே எங்கள் லட்சியம்
தமிழனா இருந்தா ஷேர் பண்ணு

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.
பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.
அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைது, ஓர் அரைகுறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருந்தவில்லை.
ஒவ்வொ வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.
“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்.
சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.
என்னைத்தாக்கிவிட்டால் தாங்கள்பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.
நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்க மாட்டேன்.
காரணம், கிருபானந்தவாரியர் சொன்ன ஒரு கதை.
கோயில் யானை ஒன்று நன்றாக்க்குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.
“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.

ராமனின் அதிரடி


மனிதத்தேனீயின் தேன்துளி


Thursday 28 March 2019

வள்ளல் அழகப்பச் செட்டியார் நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு 28.03.2019 பக்கம் 7


மதுரைமணி 28.03.2019 பக்கம் 4



மக்கள்குரல் 28.03.2019 பக்கம் 7


விண்ணை முட்டியது விஞ்ஞான வளர்ச்சி....

விண்ணை முட்டியது விஞ்ஞான வளர்ச்சி....
மண்ணில் பலமிக்க ராணுவம்,
வான்வழியில் வலிமைமிக்க விமானப் படை, கடல் பகுதியில் சக்தி மிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் படையினர்....
இன்று விண்வெளியில் சர்வ வல்லமை படைத்த சூப்பர் பவர் தேசமாக இந்தியா உருவாகி உள்ளது...
அனைவருக்கும் ஒரு தேசத்தின் பாதுகாப்பு முப்படைகளும் தான் என்று தெரியும்..
ஆனால் அதையும் தாண்டி விண்வெளி ஏவுகணை பாதுகாப்பு படை என்று
மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளது என்று தெரிய வாய்ப்பில்லை...
இன்று நான்காவது அதி சக்தி வாய்ந்த விண்வெளி படையாக ASAT செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை படையை இந்தியா உருவாக்கி சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது...
Mission Sakthi என்ற திட்டத்தில்
விண்வெளியில் (LEO) லோ எர்த் ஆர்பிட் ல் 300 கிமீ உயரத்தில் சுற்றி வரும் செயற்கைகோளை 3 நிமிடத்தில்
ASAT என்ற Anti Statellite Missile -
செயற்கைகோளுக்கு எதிரான ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்டது.
இந்த ஏசாட் சாதனை என்பது பொகரான் 1 மற்றும் 2 சாதனைகளை விட மிகவும் பெரியது... பாகிஸ்தான் உள்ளே சென்று பாலாகோட் முகாம்கள் மீது நடத்திய வான்வழி தாக்குதலை விட மிகவும் சக்தி வாய்ந்தது...
விண்வெளி போர், மின்னணு யுத்தம்...
எதிர் காலத்தில் ஒரு தேசத்தை தோல்வி அடையச் செய்ய ராணுவம், விமானப் படை, கப்பல் படை மூலம் தாக்குதல் நடத்த தேவையில்லை...
விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைகோள்களை தாக்கி அழித்தால் போதுமானது. அந்த நாடே ஸ்தம்பித்துப் போகும்...
இன்டர்நெட், தகவல் தொடர்பு, செல்போன், ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து நின்று போகும்...
மேலும் ராணுவ கண்காணிப்பு, அறிவியல் ஆராய்ச்சிகள், வங்கி நடவடிக்கைகள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விடும்...
செயற்கைகோளை வீழ்த்தினால் ஒரு தேசத்தை வீழ்த்தி தோல்வியடையச் செய்ய முடியும்...
இந்த வலிமை அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
இன்று 4 வது நாடாக விண்வெளி சூப்பர் பவர் நாடாக உருவாகி விட்டது...
தேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டுமா?, எதிரி நாடுகளின் ரகசிய கண்காணிப்பை முறியடிக்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்றால், அணு ஆயுதங்களை விட சக்தி தேவைப்படுகிறது என்பதை உணர வேண்டும்...
BMD - Ballistic Missile Defence அமைப்பு உருவாக்கி விட்டது இந்தியா...
இதன் மூலம் இந்தியாவை அத்துமீறி கண்காணிக்கும் எதிரி நாட்டின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சக்தி கிடைத்துள்ளது...
எதிரி நாட்டிலிருந்து வான்வழியில் அத்துமீறி நுழையும் ராணுவ விமானங்களையும், இந்தியா மீது தாக்குதல் நடத்த அனுப்பும் ஏவுகணைகளை விண்வெளியில் அழிக்கும் சக்தியை இந்திய தேசம் பெற்று விட்டது என்பதை பிரதமர் மோடியை தவிர வேறு யாரும் அறிவிக்க முடியாது என்பதை உணர வேண்டும்...
இது குறித்து ஓய்வு பெற்ற DRDO முன்னாள் தலைவர் V.K.சரஸ்வாத் கூறுகையில், UPA காங்கிரஸ் அரசு இந்த செயற்கைகோளுக்கு எதிராக ஏவுகணை ஆய்வு செய்ய அனுமதி தரவில்லை என்று தெரிவித்தார்...
அப்போது இது வெறும் கதை, காகிதப் புலிகள் என்று பிற நாடுகள் இந்தியாவை விமர்சனம் செய்தது....
2012 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் UPA காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை அனுமதி கேட்டும் தர மறுத்து விட்டது என்று கூறியுள்ளார்...
ISRO முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேசுகையில், அரசியல் ரீதியாக முடிவு எடுக்கும் துணிவு முந்தைய UPA காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்று தெரிவித்துள்ளார்...
இது குறித்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கேட்டதற்கு இப்படி ஒரு திட்டமே இல்லை என்றும் இதைப் பற்றி தனக்கு தெரிகிறது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
2014 ல் பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு தான் DRDO க்கு அனுமதி கிடைத்தது என்று தெளிவுபடுத்தி உள்ளார்கள்...
தற்போதைய DRDO தலைவர் சதீஷ் ஷெட்டி பேசுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி இந்த ஆய்வுக்கு அனுமதி அளித்தார்...
கடந்த ஆறு மாதங்களாக 100 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இன்று விண்வெளியில் வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்...
எனவே BMD என்ற விண்வெளி ஏவுகணை தாக்குதலில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் சக்தியை உருவாக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்...
இந்த பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்...
இந்திய தேசம் சர்வ வல்லமை படைத்த சூப்பர் பவர் என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்தார். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தினார், வியத்தகு சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் சார்பாக பாராட்டுக்களை பிரதமர் மோடி தெரிவித்தார்...

மதுரையில் நகரத்தார் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றி அனைவரது பேரன்புக்கும் நன்மதிப்பிற்கும் உரிய இளைஞர், மதுரை நகரத்தார் சங்கத்தில் புதிய நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராக பணியாற்றிட விருப்பத்துடன் உள்ள கண்டனூர் மு. முருகப்பன் மனிதத்தேனீக்கு கைத்தறி ஆடை அணிவித்த மகிழ்வான தருணம். அருகில் முன்னாள் முது நிலை துணைத் தலைவர் வலையபட்டி வி டி கண்ணன் உள்ளார்.


தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம் முதல் சேவகன் என்று தன்னை அழைக்கச் சொன்னவர் - மனிதத்தேனீ புகழாரம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🎴எங்கு சென்று வந்தாலும் சரி, நம் வீட்டில் நுழையும் போது கிடைக்கும் அமைதியான உணர்வுக்கு ஈடில்லை.
🎴நல்ல யோசனை தோன்றும் போதே உடனே செய்து விடுங்கள். ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.
🎴கோபமாய் பேசுபவரை விட அமைதியாக பேசுபவரேயே இந்த உலகம் நம்புகிறது.
🎴எல்லையறிந்து பழகும் உறவுகளில் மட்டுமே, மகிழ்ச்சி பொங்கும். சோகங்கள் கரையும். ஆயுள் நீளும். வாழ்வின் எல்லை வரை, எல்லையறிந்து நிற்போம், உறவுகள் காப்போம்.
🎴கால் வழுக்கி விழுந்தா கை கால் தான் அடி படும். வாழ்க்கையில் வழுக்கி விழுந்தா மிச்ச வாழ்க்கை மட்டுமில்ல, நம்ம கூட இருக்கிறவங்க வாழ்க்கையும் சேர்ந்து அடிபடும். கவனமா கையாள்வோம் வாழ்க்கையை.
வாழ்க்கை வாழ்வதற்கே
எல்லாம் நன்மைக்கே

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


Wednesday 27 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்.

கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்.
'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...
'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'
என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.
அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.
பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...
'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?
மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...
கடவுள் சாகா வரம் பெற்றவர்...
எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...
கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.
டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.
'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.
கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.
உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.
எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.
கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.
உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேண்டும் என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.
கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...
இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.
இணையதளத்தில் படித்தது.

திகைத்த நண்பர்


மனிதத்தேனீயின் தேன்துளி


மழலையர் பள்ளி ஆசிரியரின் நினைவாற்றல்.....

மழலையர் பள்ளி ஆசிரியரின் நினைவாற்றல்.....
30 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் படித்த மாணவரின் பெயரை கேட்டவுடன் மழலையர் பள்ளி ஆசிரியருக்கு தன் மாணவரின் ஞாபகம் வருகிறது என்றால், அவர் எந்த அளவுக்கு தன் மாணவர்களை நேசித்திருப்பார்?
டெல்லியில் மழலையர் பள்ளி (Play school) வைத்து நடத்தும் சுதா சத்யன், அமெரிக்காவுக்குச் செல்ல நேற்று டெல்லியிலிருந்து சிகாகோ செல்லும் விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்படத் தயாரானதும் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகன் பாசின் என்ற பெயரைக் கேட்டவுடன் சுதாவுக்கு பழைய நினைவுகள் கண்முன் வந்து சென்றன.
ஒரு சின்ன பிளாஷ்பேக்..
30 ஆண்டுகள் முன்பு சுதா ஒரு மழலையர் பள்ளியில் வேலை செய்தார்.
அங்கு ரோகன் பாசின் என்னும் சிறுவனை பெற்றோர் அழைத்து வந்து சுதாவின் வகுப்பில் சேர்த்தனர். சுதா அந்தச் சிறுவனைப் பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் என் பெயர் `கேப்டன் ரோகன் பாசின்' என்று கூறியிருக்கிறார். சுதாவுக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்துப் போனது. விமானி ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே கனவு கண்ட ரோகன் கடைசியில் விமானியாகிவிட்டார்.
இப்போது செய்திக்கு வருவோம்.. `கேப்டன் ரோகன் பாசின்' என்னும் பெயரை கேட்டதும் சுதாவுக்கு தன் மாணவனாகத்தான் இருக்கும்; அவன் கனவு கண்டபடியே விமானியாகிவிட்டான் என்று உறுதியாக நம்பினார் சுதா. விமானப் பணிப்பெண்ணை அழைத்த சுதா, விமானி ரோகனை நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். விமானப் பணிப்பெண் ரோகனை அழைத்து வந்தார். தன் ப்ளே ஸ்கூல் டீச்சரைப் பார்த்த ரோகனுக்கு இன்ப அதிர்ச்சி. இருவரும் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வைப் பற்றி கேப்டன் ரோகனின் அம்மா ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது மழலையர் பள்ளியில் சுதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், நேற்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கேப்டன் ரோகன் குடும்பத்தில் பலர் இந்திய விமானப்படையில் பணிபுரிபவர்கள். ரோகனின் தாத்தா ஜெய்தேவ் பாசின், 1951-.ம் ஆண்டு முதன் முதலில் கமாண்டர்கள் ஆன 7 விமானிகளில் இவரும் ஒருவர். ரோகன் ப்ளஸ் டூ படிக்கும்போதே விமானி ஆனவர்.
நன்றி ராஜப்பா தஞ்சை

Tuesday 26 March 2019

எஸ்.நாராயண ராவ் இறைவன் திருவடி சேர்ந்தார்


மனிதனை கொல்வது நோயா? பயமா?

மனிதனை கொல்வது நோயா? பயமா?
1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?
2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த பாட்டிகளை விட சிகரெட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?
3.கள்ள சாராயம் குடித்த முதியவரைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?
4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?
5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாள் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழித்தால் ஆன்டிபயாட்டிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?
6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?
7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த முதியவர்களின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?
8. ஆற்றுத்தண்ணியை அள்ளிப் பருகிய காலத்தில் அனைவருக்கும் நீரால் நோய் இல்லை. ஆனால் மினரல் வாட்டர் என்று குடித்த உடன் நீர் நோய்கள் வருவது ஏன்?
9. காலைப் பலகாரமும் மதியச் சாப்பாடும் இரவு சாப்பாடும் வயிறு முட்ட சாப்பிட்ட போது வராத இனிப்பு நோய், உப்பு நோய் பாஸ்ட் புட், அரை வேளை உணவு, கண்ட எண்ணெய் பலகாரம், உர அரிசி சாதம் சாப்பிட்ட உடன் வருவது ஏன்?
இவை எல்லாம் ஏன்? ஏன்? ஏன்?
காரணம் மிக மிகச் சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று......
நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.....
முதியவர்களுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிற்றுவலி கைகால் வலி அவ்வளவுதான்....,
ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்......
எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.
இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.....
உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்......
இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.....
நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.....
வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்...
காற்றை கண்டு பயப்படாதீர்கள்....
குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்...
சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்...
சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்.....
இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்.....
இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம்!
வாழ்க வளமுடன்!! வாழ்க நலமுடன்!!!
நன்றி கனகசபை ராமசாமி

கேள்வியும் பதிலும்....

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*#மனம் தளராமை*
*வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.*
*மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு செயல்படலாம்.*
*1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.*
*2. நல்ல வேளை. இதோடு போச்சு.*
*3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.*
*4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல*
*5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.*
*6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?*
*7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.*
*8. கஷ்டம் தான் … ஆனா முடியும்.*
*9. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.*
*10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?*
*11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?*
*12. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?*
*13. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.*
*14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.*
*15. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.*
*16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.*
*17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.*
*18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.*
*19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.*
*20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?*
*21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.*
*எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.*
*"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.*
*எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.*
*எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*
*எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.*
*நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
*வாழ்க_வளமுடன்•*

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்
Published : Mar 25, 2019 6:40 PM
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், நல்ல நேரம் முடியப் போவதாகக் கூறி ஏற்கனவே அங்கு வேட்பு மனுத் தாக்கலில் ஈடுபட்டிருந்த சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கார்த்தி சிதம்பரம், தேர்தல் விதிகளை மீறி 10 க்கும் மேற்பட்டவர்களோடு, ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்றார். 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என போலீசார் தடுத்தும் அவரது ஆதரவாளர்கள் கேட்கவில்லை.
கார்த்தி சிதம்பரம் உள்ளே சென்றபோது அங்கு ஏற்கனவே ராஜேந்திரன் என்ற சுயேட்சை வேட்பாளர் மனுத் தாக்கல் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் ஒன்றரை மணிக்குள் நல்ல நேரம் முடிந்து விடும் எனக் கூறி, ராஜேந்திரனை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம் தனது மனுவை ஆட்சியரிடம் வழங்கினார்.
வேட்பாளர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது எந்த வகையில் நியாயம் என சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய கார்த்தி சிதம்பரத்தின் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

👆🏻👌👌👌👆🏻👆🏻👆🏻👌👌முழுமையான சைவ உணவுக்கு பெயர் போன திருச்சி செல்லம்மாள் உணவகம்.
புத்தூர், ஆபீசர் காலனியில் இருக்கும் இந்தக் கடையில் கீரைதான் சிறப்பே. தினசரி 5 வகை கீரைகள் மெனுவில் கட்டாயம் இருக்கும். மண்பானையில் பொங்கியெழும் கைகுத்தல் அரிசிச் சோற்றின் வாசம் நம்மை கமகமவென வரவேற்கிறது.
வரிசையாக ஏழெட்டு மண் அடுப்புகள். வேக வைக்க புளியமர விறகு. ஒவ்வொரு அடுப்பிலும் மண் சட்டி. இடுப்புயர மண் பானைகள், வெந்து பொங்குவதை கிண்டி விடுவதற்கென மர அகப்பைகள், காய்கறிகள், பல வகை கீரைகள்... கண்முன்னே ஆரோக்கியம் தெரிகிறது.
‘‘சொந்த ஊர் துறையூர் பக்கத்துல உப்பிலியாபுரம் கிராமம். பி.ஏ. படிச்சிருக்கேன். கல்யாணமானதும் திருச்சிலதான் வாழ்க்கை. முதல்ல மகளிர் விடுதி தொடங்கினேன்...’’ என்று ஆரம்பித்தார் இந்த உணவகத்தின் உரிமையாளரான செல்லா என்கிற செல்வி.
‘‘வீட்டை விட்டு வெளில தங்கறவங்க முதல்ல மிஸ் பண்றது வீட்டுச் சாப்பாடுதானே. அதனால ஹாஸ்டல்ல தங்கியிருந்த பெண்களுக்கு வீட்டுச் சாப்பாடு செய்து கொடுத்தேன்.
சுவை, மணத்தை விட ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். சமைக்கும் உணவில் அதுதான் பிரதானம். சோறை குறைவாகவும் காய் கறி கீரைகளை அதிகமாகவும் சாப்பிட வைப்பேன். இது எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ‘நீங்க உனவகம் தொடங்களாமே’னு பல பேர் சொன்னாங்க. அப்பதான் சமையல் சார்ந்த சேவையா 5 வருஷங்களுக்கு முன்னாடி இந்த உணவகத்தை ஆரம்பிச்சேன்...’’ என்கிறார் செல்வி.
சமைப்பதில் தொடங்கி பரிமாறுகிற வரை எல்லாவற்றுக்கும் மண்பாண்டங்களையே பயன்படுத்துவதுதான் ‘செல்லம்மாள் உணவக’த்தின் சிறப்பு. வேலை பார்ப்பவர்கள் அனைவருமே பெண்கள். அனபான உபசரிப்புக்குக் குறைவில்லை!
‘‘எங்க வீட்ல மண் பாத்திரங்கள்லதான் சமைச்சுக்கிட்டிருந்தோம். இதனால காய்கறி, கீரைகளோட கலர் மாறாம இருக்கிறதையும், இயற்கையான சுவை அப்படியே இருக்கறதையும் தெளிவா உணர முடிஞ்சது. ஹோட்டல்லயும் அதையே முயற்சி செஞ்சோம்.
வீட்ல சின்ன அளவுல சமைக்கிறதுக்கும் ஹோட்டல்ல பெரிய அளவுல சமைக்கிறதுக்கும் நிறைய சவால்கள் இருந்தது. மண்பாண்டங்களுக்கு வாழ்நாள் குறைவு. கவனமா கையாளணும். சமைக்கிறப்ப விரிசலோ ஓட்டையோ விழலாம். சமைச்சு முடிச்சதும் பல நேரங்கள்ல கசியும். சமைக்கிறப்பவே பாத்திரம் உடைஞ்சு மொத்தமும் வீணாகறதும் நடக்கும். இதையெல்லாம் மீறி மக்களுக்கு சுவையான, சத்தான சாப்பாடு கொடுக்கணும்கிற எண்ணத்துலதான் மண்பானை சமையலை செய்யறோம்...’’ என்கிற செல்வி, தனது உணவகத்தின் மெனுவிலும் வித்தியாசம் காட்டத் தவறவில்லை.
தினமும் அம்மியில் அரைத்த மசாலாவில் செய்த 6 வகையான குழம்புகள்; 5 வகை கீரைகள்; 7 வகையான பொரியல்கள்; விதவிதமான பச்சடி, துவையல்; இரண்டு வகை ரசம்; கூட்டு.
இவர்களது ஸ்பெஷல் என வாழைப்பூ உருண்டை குழம்பையும் புளிச்ச கீரையையும் சொல்லலாம்.
எங்குமே கிடைக்காத சுவையில் இவை அசத்துகின்றன. ‘‘காலை 4:30 மணிக்கே அரைத்தல், இடித்தல் வேலை களைகட்டும். 10 மணிக்கெல்லாம் பரபரப்பா சமையல் வேலை ஆரம்பமாயிடும். மதிய உணவு மட்டும்தான் தர்றோம். மிளகு குழம்பு, கொள்ளுத் துவையல், மல்லித் துவையல், இடித்த பொடி + செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கைக்குத்தல் அரிசி சாதம், அவல் பாயாசம், சுட்ட அப்பளம்னு அத்தனையும் ஆரோக்கிய சமையல்.
 இதுபோக தினசரி மெனுல சிறுதானிய உணவுகளுக்குனு ஒரு பட்டியல் உண்டு...’’ என்கிறார் சமைக்கும் அக்கா கோகிலா.
ஒருவரே இத்தனையையும் ருசிக்க முடியுமா என்கிற கேள்விக்கும் செல்வியிடம் பதில் இருக்கிறது. நிச்சயமா இவ்வளவு பொரியல் கீரையையும் ஒருத்தரால சாப்பிட முடியாது. தவிர, எல்லாருக்கும் எல்லா காய், கீரைகளும் பிடிக்கும்னும் சொல்ல முடியாது. ஃபுல் மீல்ஸ் என்ற பேர்ல பிடிக்காததையும் தேவையில்லாததையும் இலைல வைச்சு வீணாக்கறதுல எங்களுக்கு உடன்பாடில்ல.
அதனால எல்லா காய், கீரைகளையும் கொஞ்சம் கொஞ்சமா குவளைல வச்சு வாடிக்கையாளர்களோட இருக்கைக்கு எடுத்துட்டுப் போய் காட்டுவோம். யாருக்கு என்ன தேவையோ அதை மட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்.
மெனு கார்டுல ஒரு அயிட்டத்தோட பேரை மட்டும் படிச்சுட்டு தேர்வு பண்றதுக்கும், ஒரு உணவை கண்ணால பார்த்து வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லையா?’’ என்கிறார்.
விலை? 350 கிராம் அளவுள்ள சாதம் ரூ.15 மட்டுமே. குழம்பு வகையறாக்கள் ஒரு கப் ரூ.15. சாம்பார், ரசம், கீரை, பொரியல் போன்றவை ஒவ்வொன்றும் தலா ரூ.10. இங்கு பணிபுரியும் அத்தனை பெண்களும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
உணவையும் விருந்தோம்பலையும் உண்மையாக நேசித்துச் செய்கிறவர்கள். ‘‘உயிர்ச்சத்தும் நன்மை செய்யற நுண் அணுக்களும் இறந்துடாம முழுச் சத்தோட சமைக்கறதுதான் எங்க நோக்கம்...’’ என்கிறார் கடையில் வேலை செய்யும் ஜெயாம்மாள் பாட்டி.
‘‘மண் பானைல சமைக்கறதால முழுச்சத்தும் கிடைக்குது. அதோடு உணவுப் பொருட்களோட நிறமும் மாறாது. சமைக்கிறப்ப நுண் சத்துகள் கொஞ்சமாதான் வீணாகும். விறகைத்தான் பயன்படுத்தறோம்.
புகைபோக்கி அடுப்புகளை வைச்சு திறந்த வெளிலதான் சமைக்கிறோம். மிளகாய், மல்லி, பருப்பு தானிய வகைகளை நாங்களே அரைச்சு இடிச்சு உணவுல சேர்க்கறோம். செக்குல ஆட்டி எடுக்கற நல்லெண்ணெய்லதான் முழுக்க முழுக்க சமையல் செய்யறோம்...’’ என்கிறார் செல்வி.
சமைப்பதும் பரிமாறுவதும் மட்டுமல்ல... குடிநீரும் மண் குவளையில்தான். அதுவும் ஓமமும் சீரகமும் கலந்து காய்ச்சி ஆற வைத்த குடிநீர்! .
நீங்களும் ஒரு முறை சென்று சுவைத்து கூறுங்கள்.....
நன்றி முருகப்பன் .

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🕉எப்படி இருக்கணும்னு நினைக்கிறோமோ அப்படி இல்லாத போதும், நம் எதிர் பார்ப்புகள் ஏமாற்றம் தரும் போதும் நம் நம்பிக்கை தகர்ந்து விடுகிறது.
🕉சிக்கலான கேள்விகளுக்கு எல்லாம் நாம் சொல்லும் சாதுர்யமான பதில்களால் சமாளிக்க முடியும்.
🕉எவன் செத்தால் என்ன? எவன் பிழைத்தால் எனக்கு என்ன? எல்லோரையும் தூற்றுவது தான் என் வேலை, இவ்வளவே என் உலகம் என்பது இங்கு பலரின் மன நிலை.
🕉தொடக்க நிலையில் ஏற்படும் சிறு தடைகளை வெற்றிகரமாக தாண்டி விட்டால் போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களை நோக்கி ஓடி வரும் அதற்கு சில புரிதல்கள் தேவை.
🕉கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரிந்தால், அந்த வாழ்க்கைக்குப் பெயர் தான் அழகான வாழ்க்கை.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

வினோபாவின் வெற்றி


மனிதத்தேனீயின் தேன்துளி


தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம்


Monday 25 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு பாடலின் பல்லவி இல்லாமலேயே சரணமோ அல்லது சரணத்தின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.
அவ்வகை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த எம். எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் டி எம். செளந்திர ராஜன், பி.சுசீலா , பி.பி. சீனிவாஸ், சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர் ,ஜேசுதாஸ் , எஸ். பி. பாலசுப்ரமணியம் ,சீர்காழி ஐயா மற்றும் இதில் விடுபட்ட ஏனைய கலைஞர்களும் இவருடைய பாடல்களுக்கு பெருமை சேர்த்தனர்.
அதில் சில படப் பாடல்களின் சரணங்கள் மட்டும் உங்கள் ரசனைக்கு.
"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா"
"தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்"
"கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா "
"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா"
"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்"
"காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்"
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்"
"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? "
"கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ "
"செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா ||
"நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே"
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் "
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா"
"வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா "
பிரமிப்பாக இருக்கிறதல்லவா? வாழ்க காவியக் கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களுடைய புகழ்.