Saturday 31 October 2020

வாழிய பல்லாண்டு


 

ஞானம் என்றும் வெல்லும்

 ஞானம் என்றும் வெல்லும்

அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர்.
அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் பிச்சைக்காரனைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக்காக ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசன் என்னிலும்பணக்காரனல்ல; இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல” என்று கூவிக்கொண்டேயிருந்தான்.
அரசனது காவலர்கள் அவனை தாக்க முயன்றனர். இது கண்ட அரசன் அவனை அடிக்க வேண்டாம் என்று தடுத்து, ‘அந்தக் காசைப் பிடுங்கிக் கொண்டு அவனை விரட்டிவிடுங்கள். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்’ என்று கட்டளையிட்டான். 
ஆட்கள் அவ்வாறே செய்தனர். பல்லக்கு தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரன் அங்கு வந்து நின்று கொண்டு, “என்னிலும் ஏழையான அரசன் என் காசைப் பிடுங்கிக் கொண்டான். என்னிலும் ஏழையான அரசன் என் காசை பிடுங்கிக்கொண்டான்” என்று உரத்துக் கூவினான்.
அதுகண்ட அரசன், தன் காவலாளியிடம், “முன்பு அவன் தன்னைவிடப் பணக்காரணல்ல என்றுதான் சொன்னான். இப்போது தன்னைவிட ஏழை என்று என்னைச் சொல்லுகிறான். இது என் செல்வத்தையே பழித்துக் காட்டுவதாக இருக்கிறது. போனால் போகிறான் காசை அவனிடம் கொடுத்து விரட்டுங்கள்” என்று கூறினான். காவலர்களும் அப்படியே செய்தனர்.
பல்லக்கு மேல வீதியில் வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த அப்பிச்சைக்காரன், “அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான். அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான்” என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான்
அரசன் சினந்து, அவனைக் கொல்ல தன் வில்லையும் அம்பையும் எடுத்தான். பிச்சைக்காரன் ஒடி மறைந்தான்.
பல்லக்கு வடக்கு வீதியில் வந்தது, அங்கு நின்று கொண்டிருந்த பிச்சைக்காரன். “பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான். பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான்” என்று அலறிக் கொண்டேயிருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துத் துன்புறுத்த முயன்றனர்.
அவர்களை அரசன் தடுத்து, அவன் பிச்சைக்காரணல்ல அறிஞன் என உணர்ந்து அறிவிலும், செல்வத்திலும், வீரத்திலும் எனக்கு இணை எவருமில்லை என்ற என் இறுமாப்பை அழித்து ஒழித்த பேரறிஞன் இவனே.” எனப் பாராட்டிப் பொருளுதவியும் அளித்து அனுப்பி வைத்தான்.
ஞானத்துக்கு ஏது எல்லை. ஞானத்துக்கு அரசனும் ஒன்றே.. ஆண்டியும் ஒன்றே.
ஞானம் என்றும் வெல்லும்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 28 October 2020

வாழிய தங்கள் பணி. - மனிதத்தேனீ

 பாராட்டி

மகிழ்வோம்.
தமிழகத்தின் சிறந்த வழக்கறிஞர், நீண்ட காலமாக ஒரே அரசியல் நேர் கோட்டில் பயணிப்பவர், அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழிய தங்கள் பணி. - மனிதத்தேனீ



மனச்சலனமும் மாமருந்தும்

 மனச்சலனமும் மாமருந்தும்.

நம் வாழ்வில் ஏதாவது ஒரு நிலையில் மனச்சலனம்(சலிப்பு) வரத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்...!, எங்கு அன்பு மிகையாய் இருக்கிறதோ, அங்கே மனச்சலனம் ஏற்பட்டே தீரும்...!
வெளியுலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் மனச்சலனம் ஏற்படுவது இயற்கையானது.
செக்குமாடு போல ஒரே வேலையைச் செய்தும், அதுபோல் சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கி திறனற்ற மனமில்லாதவர்களாக காட்சியளிப்பதோடு மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கையிலும் மனச்சலனம் ஏற்படுகின்றது...
மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் மனச்சலனம் என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும். மனநிறைவு பெற வேண்டுமானால், வாழ்க்கையில் மனச்சலனம் என்பதே இருக்கக் கூடாது...
மகிழ்ச்சியாக இருப்பவர்களால் தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும், வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு மனச்சலனம் ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்...?
எனவே!, மனச்சலனம் எனும் சரிவில் உங்களை வீழ்த்தி விடாமல் இருக்க அதன் இறகுகளை விரித்து உதறுங்கள்.
"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை...!என்று சொல்லிக் கொள்ளுங்கள்...
'இப்படியே இருக்கப் போவதில்லை'என்று தீர்மானியுங்கள்...
"என்னால் எதையும் செய்திட முடியும்" என்று நம்பிக்கை கொள்ளுங்கள், செய்திடுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள், துணிந்து இறங்குங்கள். போட்டிகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்...
செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு மனச்சலனத்தை ஏற்படுத்தாது, மாறாக ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்..
ஆம் நண்பர்களே...!
எந்தத் துறையில் இருந்தாலும், எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், அன்புடனும், இரக்கத்துடனும், உயரிய குறிக்கோள்களை மனதில் கொண்டு செய்து பாருங்கள்...!
உங்கள் செயல்கள் யாவும் மனித குலத்திற்குச் செய்யப்படும் சேவையாக மலர்வதோடு, மனச்சலனம் என்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாமல் போய் விடும்...!!
இதை வாழ்க்கையில் ஒருமுறை கடைப்பிடித்துத் தான் பாருங்களேன், அதன் பிறகு உங்களுக்கு இதன் முழு பொருளும், பெருமையும் புரியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 27 October 2020


 

போராட்டமே வாழ்க்கை.

 போராட்டமே வாழ்க்கை.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும் . இன்பமோ துன்பமோ அனுபவம் நம்மை பலப்
படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது...
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா...? என்றால் அதுதான் இல்லை. மேலும் மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறி கொடுக்கிறான்...
இவ்வுலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை...
காரணம்!, அவைகளுக்கு வாழ்க்கையின் முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்...
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி முடியாதற்கு காரணம், அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது...
அது என்ன...? தன்னம்பிக்கை, மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்...?
அப்படி ஒன்று இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மன உறுதியொன்று மட்டுமே தீர்வாக அமைகிறது...
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான், கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்...
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ள மாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது...
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்...!
ஆனால்!, தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவை தேடிக் கொள்கிறான்...
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். இன்பமும், துன்பமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்...
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது...
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது...
ஆனால்!, இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, தற்கொலைகள், இப்போதுதான் அதிகமாகி வருகிறது. எந்த ஆன்மீகமும் இவர்களை காப்பாற்றவில்லை..
*ஆம் நண்பர்களே...!*
*வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமே...! போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக்கொம்பே...!*
*வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள்...!!*
*வாழ்க்கை என்பது, ஓர் குறிக்கோள், அதைச் சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள்...!!!*
அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 24 October 2020

வாழிய பல்லாண்டு


 

அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு.

 அனைத்து சிக்கல்களுக்கும்

தீர்வு உண்டு.
நமக்கு ஏற்பட்ட சிக்கல்களின் ஆரம்பமான இடத்தை விட்டு பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் எங்கோ தேடுகின்றோம்...
ஆம்.!, சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்...? எதனால் இந்த சிக்கல்கள் நேர்ந்தது...? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை...
சரி.!, நாம்தான் சிக்கல்களுக்கு கட்டியங்காரனாக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை உறுதியாக எதிர்கொள்கிறோமா...? - என்றால் அதுவும் இல்லை...! (கட்டியங்காரன் - சூத்திரதாரி)
*ஆனால்!,எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத சிக்கல் என்று எதுவுமில்லை...*
காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பது இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை...
அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியாவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது...
*ஆம் நண்பர்களே...!*
*எல்லா பூட்டுகளுக்கும் சாவி உண்டு, அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு...!*
*வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு அஞ்சுவது அறிவுடைமை ஆகாது, அவற்றை எதிர் கொள்வதே சிறந்தது...!*
*கவலையுறுவதால் மட்டுமே சிக்கல்களில் இருந்து விலக முடியாது, இன்னும் கூறவேண்டுமானால், கவலையுறும் பொழுது சிக்கல்கள் இன்னும் பெரிதாகி விடும்...*
*தீர்க்கவியலாத துன்பம் வாழ்க்கையில் ஏதுமில்லை, ஆனால் அவற்றை தீர்க்க வழிமுறைகளை அறியாமல்தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்...*
திறக்க முடியாத பூட்டுகள் ஏதுமில்லை, அதற்கான சாவியை தேடிப்பிடித்தால் போதும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Friday 23 October 2020

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எதிர்பார்ப்பும் முன்னேற்றமும் . .

 எதிர்பார்ப்பும் முன்னேற்றமும் . .

எல்லோருக்கும் எதிர்பார்ப்பு என்பது இயல்பான வெளிப்பாடு தான்.
சிறுவயது முதலே இதுதான் இலட்சியம், இதுயிதைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாதவர்களே கிடையாது.
விளையாட்டாகவோ உண்மையான எதிர்பார்ப்பாகவோ அந்த இலட்சியம் இருக்கலாம்.
அது மெய்ப்படுமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
முதலில் மனம் எதன் மீதோ ஆசையைப் பதிக்கிறது.
அதையே நினைத்து வளரும் போது அதன் மீது ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் வருகிறது.
அதை அடைய தக்க உபாயத்தை நாடும் போது இலட்சியம் மெய்ப்படும்.
ஆனால் அதற்கான முயற்சியோ உழைப்போ எதையும் போடாமல் சும்மாவே அதன்மீது வெறித்தனமாக ஆசை கொள்வது மிகவும் ஆபத்தானது.
அது நிறைவேறாத போது அது தன்னால் வந்த தவறு என்று மனம் சிந்திக்காது.
மாற்றாக அதை எப்படியேனும் அடைந்து விடவே மனம் துடிக்கும்.
அது தீய உணர்வுகளை விதைத்து குற்றச் செயல்களைச் செய்யவும் தூண்டும்.
வாழ்க்கையில் இலட்சியத்தை எட்டிப் பிடிக்க எதிர்பார்ப்பை நோக்கிச் செல்ல தன்னை எல்லா வகையிலும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
பெரிதாகக் கனவு காண்பதில் ஒரு தவறில்லை.
அது மெய்ப்பட தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
தேர்வில் நிறைய மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் வரவில்லை; பெண்வீட்டில் நிறைய சீர்வரிசை தருவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் செய்யவில்லை; விழுந்த பொருளாதாரம் இனி எழுந்து நிற்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அது மீண்டுவர ஓராண்டு ஆகும்போல; கம்பனியில் நிறைய சம்பளம் தருவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் சராசரியாகத் தான் தந்தனர்; மழை பெய்து விதைத்தால் நல்ல மகசூல் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பொய்த்து போனது; இப்படி எத்தனையோபேர் பலவித எதிர்பார்ப்புகளை நெஞ்சில் சுமந்தவாறு வாழ்கிறார்கள்.
அதில் அவர்களுடைய எக்காம் வெளிப் படுவதை உணரமுடிகிறது.
இது ஏன்? தகுதிக்கேற்ப உழைப்பும் விவேகமும் உபாயமும் செயல்பாடும் நூறு சதவிகிதம் இருந்தால் எதிர்பார்ப்பு ஓரளவுக்குப் பூர்த்தியாகி இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்தவைகளுக்கும் உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமான நடை முறைகளுக்கும் அதிக இடைவெளியும் வேறுபாடும் இருக்கலாம்.
அச்சமயம் அங்கே மன அழுத்தம் ஏற்படும். பல்லாண்டுகளாய் ஆசைப்பட்டு எதிர்பார்த்து அதற்காக முயற்சிசெய்து அதை நோக்கிப் போகும் போது மனதில் உங்கள் மீதே உங்களுக்குக் கோபம் ஆத்திரம் எல்லாம் வரும்.
இதன் விளைவால் நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளும் போக்கு தென்படும்.
இந்த விபரீதமான வெளிப்பாடு தேவையில்லை தான். மனதில் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் இயல்பாய் எது சாத்தியப்படுமோ அதை ஏற்றுக்கொண்டு பயணித்துக்கொண்டு போகவேண்டும்.

Thursday 22 October 2020

ஸ்ரீ தர் வேம்பு. வாழியவே.

 ஸ்ரீ தர் வேம்பு. வாழியவே.

ஸ்ரீதர் வேம்பு What a man !! What a different thinking !!
தமிழகத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியரான தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீதர் வேம்பு
ஒரு அப்பா குடிகாரர் என்றால், அவர் தன்னுடைய வருமானத்தை வீட்டுக்குக் கொண்டு வருவதில்லை. அவருடைய குழந்தை புறக்கணிப்படும்.
உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு ஸ்ரீதர் வேம்பு என்பவர் ஜோஹோ கார்ப்பரேசனை நிறுவியவர். சிலிக்கான் வேலி நட்சத்திரமான இவரை ஃபோர்ப்ஸால் மதிப்பிடப்பட்ட இந்நிறுவனத்தின் மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் அவர் கடந்த வருடம் ஒரு அசாதாரணமான முடிவை எடுத்துத் தமிழகத்தில் இருக்கும் தென்காசிக்குத் திரும்பி வந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் இந்நாட்களில் ஒரு ஆசிரியராகவே வலம் வருகிறார். வேஷ்டி சட்டை அணிந்து மதலாம்பாறை பகுதியில் எளிமையாக சைக்கிளில் வலம் வருகிறார்.
6 மாதங்களுக்கு முன்பு மூன்று குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை, அவருடைய இலவச நேரத்தில் ட்யூசன் எடுக்க துவங்கினார். இப்போது 4 ஆசிரியர்கள் 52 குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். அவர்கள் அனைவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
53 வயதான இவர் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி இலவசமாக ஊரகப் பள்ளி ஒன்றை துவங்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். அப்பள்ளி இலவசமாக கல்வி, உணவு ஆகியவற்றைத் தருவதோடு, சான்றிதழ்களுக்கான அடிப்படையாக கருதப்படும் மதிப்பெண்கள், டிகிரிகள் அவற்றை நம்பாத ஒரு மாற்றுக் கல்வியை வழங்கும் திட்டத்தில் அவர் உள்ளார்.
இது தற்போது மிகவும் தீவிரமான செயல்பாடாக மாறியுள்ளது. "நானும் பகுதி நேரம் வகுப்பெடுக்கின்றேன். இவைகளை ஒருங்கிணைத்து ஒரு மாடலை உருவாக்க முயன்று வருகிறோம். முறையான ஆவணங்களைத் தயாரிக்கவும், தேவையான அனுமதிகளைப் பெறுவதிலும் பிஸியாக இருக்கின்றேன்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இந்த பள்ளி சி.பி.எஸ். இ. அல்லது வேறெந்த வாரியத்துடன் தொடர்பு கொள்ளாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது வேம்புவின் புதிய முறைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில், ஜோஹோ காப்பரேசனின் ஒரு அங்கமாக உள்ள ஜோஹோ பல்கலைக்கழகம் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் இடை நின்ற மாணவர்களை ஐ.டி. வல்லுநர்களாகவும், குழுத்தலைவர்களாகவும் மாற்றியுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்படத் துவங்கிய பின்புதான் இந்த கிராமத்தில் சவால்கள் அதிகமானது. நடைமுறையில் இந்தக் குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை. சில மாணவர்களின் பெற்றோர்களிடம் ஸ்மார்ட்ஃபோனகள் இருக்கின்றன ஆனால் அவைகள் மலிவானவை. எனக்கு நிறைய நேரம் இருந்தது. அதனால் நாங்கள் நடைமுறை சோதனைகளில் இறங்கினோம். அவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பித்தேன்.
கடந்த செப்டம்பர் 13ம் தேதி அன்று, வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”சில நாட்களிலேயே, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும் எனது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகிறது நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியராய் இருப்பதில் இருக்கும் சிரமங்கள் புரிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
களத்தில் நான் பார்த்தது என்னவென்றால் வறுமைதான். இங்கு வரும் குழந்தைகள் பசியில் இருந்தனர். நீங்கள் பசியில் இருக்கும் போது எப்படிப் படிப்பீர்கள்? அதனைச் சரி செய்ய வேண்டும். நான் மதிய உணவு திட்டத்தை வரவேற்கின்றேன். ஆனால் அது போதாது. நாள் ஒன்றுக்கு 2 நேர உணவினை வழங்கும் அவரின் பள்ளி, மாலை 4:30 மணிக்கு, குழந்தைகள் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு, சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது – என்கிறார் வேம்பு.
வேம்புவைப் பொறுத்தவரை , கொள்கைகள் எல்லாம் சென்னை அல்லது டெல்லியில் நல்ல நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் கிராமங்களை நெருங்கும் போது அவை நீர்த்துப் போய்கிறது. களத்தில், இந்தத் திட்டங்களை நிறைவேற்றப் போதுமான திறமையாளர்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
சிலர் உண்மையாகவே படிக்க விரும்புகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு, 8 அல்லது 10 வகுப்பிற்கு பிறகு, பள்ளியில் இருந்து வெளியேறிவிட நினைக்கின்றனர். இடைநிற்றலைத் தடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. இந்தப் பகுதியில் மாணவர்களை அவர்களின் அறிவுத்திறன் பொறுத்து பிரிக்கப்படுகின்றனர். அவர்களின் வயதுகளை வைத்து அல்ல. அது மிகவும் உண்மையான சவாலாக இருக்கிறது.
மற்றொருமொரு சவால் என்னவென்றால், ஆசிரியர்கள் இந்த கிராமங்களிலேயே வாழ்வது இல்லை. 40 கி.மீ அப்பால் இருக்கும் நகர்ப்புறத்தில் இருந்து வருகிறார்கள் செல்கிறார்கள். தங்களால் முடியும் என்று யோசிக்கின்ற போது மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். ஆனால் கிராமப்புறப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடத் தங்களின் குழந்தைகளை கிராமப்புற பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளே அரசு பள்ளியில் படிக்கின்றனர். பெற்றோர்களின் வருமானம் குறைவாக இருக்கலாம். அவர்களுக்கு ஒரு சில நாட்களே வேலை இருக்கலாம். குடிப்பழக்கம் மற்றொரு பிரச்சனை. ஒரு அப்பா குடிகாரர் என்றால், அவர் தன்னுடைய வருமானத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அவருடைய குழந்தை புறக்கணிப்படும். அவர்கள் பசியோடு இருப்பார்கள். நான் இதை இங்கே பார்த்தேன் என்று கூறினார் வேம்பு.
கல்வி முறைகளில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு வேராக இருப்பது மதிப்பெண்கள்தான். நல்ல திறமையான குழந்தைகளும் கூட மதிப்பெண்களில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் பெறும் அறிவைக் குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. நிறையப் பேர் பாரம்பரிய முறையில் கல்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் எங்களின் குடும்பத்தில் அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். அவர்கள் அறிவாளியானவர்கள் ஆனால் அவர்களின் தேர்வு முடிகள் அதனை அறிவிப்பதில்லை. இந்த சிஸ்டம், பரீட்சையில் தோல்வியுற்ற ஆனால் சிறப்பான முறையில் செயல்படுகிற, பாரம்பரிய முறையில் கற்காதவர்களுக்கும் இந்த சிஸ்டம் இடம் அளிக்க வேண்டும்.
இந்தப் பள்ளிக்கு முன்பு, ரூ. 3,300 கோடி இயக்க வருமானத்தை 2018 – 2019 ஆண்டில் பெற்ற, 50 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஜோஹோ நிறுவனம் தமிழகம் முழுவதும் ஊரக அலுவலகங்களைத் திறந்து, மென்பொருள் பொறியாளர்களை அவர்களின் கிராமத்திற்கு அழைத்து வந்தது. என்னுடைய ஒரே கோரிக்கை கிராமப்புறங்களில் அலுவலகங்கள் திறப்பதுதான். அவர்கள் அவர்களின் இடங்களைத் தேர்வு செய்து கொள்ளட்டும். மேலும் 10 அலுவலகங்களை இன்னும் 3 மாதங்களில் திறந்துவிடுவோம். கேரளா ஆந்திராவிலும் 100 நபர்கள் வேலை செய்யும் வகையில் அலுவலகங்கள் திறக்கப்படும் என்று கூறினார்.
மதலாம்பாறையில் நிறைய நண்பர்களை டீக்கடையில் இருந்தும், குழந்தைகளின் கிரிக்கெட் அணியில் இருந்தும் பெற்றிருப்பதாகக் கூறும் அவர், அவர்கள் மிகவும் இனிமையானவர்கள். அந்நியமானவராக இருப்பினும் கூட நட்போடு பழகுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
We salute Sridhar Vembu Sir for the great service being done by your team for the pupils who are from villages, with foo
நன்றி லெட்சுமணன் செட்டியார்




கடமையும் கலையும்

 கடமையும் கலையும் . .

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.
ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கி கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டுசிலைகள் இருந்தன.
எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.அதைக் கண்ட வழிப் போக்கர் ஒருவர்,
“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.
கல்தச்சர் சொன்னார்,
“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..
வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுசொன்னார் -
எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா..
தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார்
“அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது.”என்றார்.இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” - வழிப் போக்கர்.
“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,
ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்ன என்றார் வழிப் போக்கர்.
தனது வேலையை சற்று நிறுத்தி விட்டு வழிப் போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர் சொன்னார்,
“யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள்.
அய்யா,வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்க வில்லை.
சேதம் சிறியதா? , பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை.செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்த கல்தச்சர்..
உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை.
அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.
அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும்
இன்பத்தை விட,,தன் மனத் திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்…

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அண்மையில் மணிவிழா கண்ட தேவகோட்டை எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் - செல்வலெட்சுமி அவர்களுக்கு மனிதத்தேனீ பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம். அருகில் அலமேலு சொக்கலிங்கம், சொ. ராம்குமார். எனது சகலை ஓ. சிறுவயல் சிதம்பரம் - காவேரியின் சம்பந்தி இவர்கள்.

 


திருக்கண்டியூரில் அருட்கோலோச்சும் பிரம்மா சரஸ்வதி

 திருக்கண்டியூரில் அருட்கோலோச்சும் பிரம்மா சரஸ்வதி*

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசர் ஆலயத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் தரிசிக்கலாம். பிரம்மாவுக்கென்று தனிக்கோயில் அளவுக்கு தனிச் சந்நதி எனில் அது இதுதான். நல்ல கட்டமைப்பு கொண்ட ஜீவக்கலை ததும்பி நிற்கும் சிலை. வேறெங்கும் காணமுடியாத திகைப்பூட்டும் அதிசயம் இது. மனிதனைப் படைத்த பிரம்மாவை அவரே படைத்துக் கொண்டாரோ என்று திணறடிக்கும் அழகு. நான்கு முகங்களிலும் ஞானத்தின் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று இடையறாது உதட்டில் பொங்குகிறது.
இப்படியொரு சிலையை வேறெங்கேயாவது காணமுடியுமா என்பது சந்தேகமே. அழகிய ஜடையின் அலங்காரமும், மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும், பூணூலின் மெல்லிய நுணுக்கமும் பார்ப்போரை மயக்கும் கலையழகு. அதுமட்டுமல்லாது தனது கணவனோடு அடக்கமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள். கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிறநாயகி.
அவ்விருவரையும் தரிசித்து பொங்கும் படைப்பில் திரண்டு நிற்கும் ஞான அமுதத்தை அகத்தில் தேக்குவோம். இத்தலம் தஞ்சை மாவட்டம் திருவையாறிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது

எளிமை உண்மை . .

 எளிமை உண்மை . .

தொலைக்காட்சி நம் நாட்டிற்குள் புகாத பொற்காலம் அது..!
அகில இந்திய வானொலி
அத்தனை வீடுகளிலும் அரசாட்சி செய்து வந்த நேரம் .
அந்தக் காலத்தில்தான் , அநத கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...
அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!
ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க ,
உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் !
“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.
மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."
பதறிப் போனார் அந்தப் பெண் .
அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள ,
போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க ஸார் ..”
தொடர்ந்து கண்ணதாசன் :
"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக
அருமையாக
பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?"
ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் , இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் ஸார் ..”
இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...
அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
அடுத்த காரணம் ..
திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
ஆம் ..!
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்”
நன்றி கதிர் மணி

Wednesday 21 October 2020

உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

 உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

சமூக வலைதளங்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளன.
பலர் தங்களது விலைமதிப்பற்ற நேரத்தை சமூக வலைதளங்களிலேயே மூழ்கடித்து வருகின்றனர்.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் அடக்க முடியாத ஆர்வம் கொண்டுள்ளனர்.
மற்றவர்களைப் பற்றி சமூக வலைதளங்கள் மூலமாகத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்ற தீராத ஆசையை மனதில் ஏற்படுத்திவிடுகிறது. அவர்கள் புதிய பொருள்களை வாங்கினால் நமக்கும் அந்தப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற ஆவல் தோன்றும்.
வெளிநாடுகளுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ அவர்கள் பயணித்தால், நாமும் அங்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அவ்வாறு ஏற்படும் ஆசைகளை நாம் நிறைவேற்ற முயற்சி செய்தால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். அவற்றை நிறைவேற்ற முடியாமல், அந்த ஆசைகளைத் தொடர்ந்து மனதில் கொண்டிருந்தால் அமைதியை இழந்து மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் நிலைஉருவாகும்.
அப்படியானால், இதிலிருந்து விடுபட வழி உள்ளதா?
நிச்சயம் உள்ளது
பெரும்பாலானோர் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதைக் காணும் நாம் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பதாக எண்ணி அவர்களைப் போலவே வாழத் துணிகிறோம். அவர்களைப் போலவே உடையணியவும், அவர்கள் வைத்திருக்கும் பொருள்களை வாங்கவும் தீரா ஆசை கொள்கிறோம்.
ஆனால், உங்கள் வாழ்வில் காணப்படும் துன்பம் நிறைந்த பக்கங்கள் அவர்களின் வாழ்விலும் உண்டு என்ற அடிப்படையை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டுவிட்டால் அவர்களிடம் உள்ள பொருள்களுக்காகவும் அவர்கள் வாழும் வாழ்க்கைக்காகவும் நீங்கள் ஏக்கத்தை வளர்த்துக் கொண்டு அச்சத்துக்கு உள்ளாக மாட்டீர்கள்.
அடுத்தது, உங்களிடம் இல்லாத பொருள்களுக்காக ஏங்குவதை நீங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் உங்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைச் சிதைத்துவிடும். உங்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையில்லாத மனஅழுத்தத்தில் சிக்கி உழல்வதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
எனவே, மற்றவர்கள் வாழ்வைக் குறித்து அறிந்து கொள்வதில் செலுத்தும் கவனத்தை உங்களின் வாழ்க்கை குறித்த சிந்தனைகளில் நீங்கள் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் விரயமாகும் உங்கள் நேரத்தை மற்ற பயனுள்ள விவகாரங்களை நோக்கி மடைதிருப்பினால் உங்கள் வாழ்வு மேம்படுவதோடு உங்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வும் சிறக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

தடம் மாறாத நம்பிக்கை. வாழிய பல்லாண்டு.

 தடம் மாறாத நம்பிக்கை.

வாழிய
பல்லாண்டு.
இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அன்புச் சகோதரர், மீனாட்சி திருமைந்தர் வி என் சிதம்பரம் செட்டியார் மதுரை நிறுவனங்களின் நம்பிக்கை நாயகன், ஓய்வறியா உழைப்பாளி, கீழச்சிவல்பட்டி
எம். மலையலிங்கம்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ