Saturday 29 April 2023

போதும் என்ற நிலை நிறைவானது.

 போதும் என்ற நிலை நிறைவானது.

''தன்னிடம் இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம்.
எத்தனை கிடைத்தாலும்
மனம் திருப்தி,, நிம்மதி
அடைவது இல்லை..
நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் போது, நிம்மதியை இழக்கக் கூடிய சூழல்கள் ஏற்படுகிறது..
இருப்பதைக் கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாகக் கொட்டினாலும் போதாது தான்.
ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை... என்ன காரணம் என்பது புரியவில்லை என்று கேட்டார்.
அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை.
அங்கே அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.
அதன் கையில் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தார்.
குழந்தை அதைத் தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.
அடுத்து ஒரு பழத்தைக் கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது. மீண்டும் ஒரு பழத்தைக் கொடுத்தார்.
தன்னுடைய ஒரு கையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.
ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக் கண்டு அந்தக் குழந்தை அழுதது.
இதை கவனித்துக் கொண்டு இருந்த அந்தப் பணக்காரரிடம் அந்த அறிஞர்,
"இந்தக் குழந்தையைப்
பார்த்தாயா இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா" என்றார்.
அதே போன்று தான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை வாரது.நிம்மதி கிடைக்கும். தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்தப் பணக்காரருக்குப் புரிந்து விட்டது.
*தங்களிடம் உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..*
*அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கள்ளழகர்....!

 கள்ளழகர்....!

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
🙏 கு பண்பரசு

Friday 28 April 2023

அன்பான செயல்கள் நிலைக்கும்.

 அன்பான செயல்கள் நிலைக்கும்.

ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.
"நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார்.
நீங்கள் என்ன செய்வீர்கள்?"
அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".
குருஜி கேட்டார் - "அந்தப் பெண் உங்களை கடந்த பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"
அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் . (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)
குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"
அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார்.
மற்றும் புன்னகைத்தார்
குருஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுக்கிறேன். உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.
புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள். அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது.
அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர்.
உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார்.
உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான தேநீர் மற்றும் உணவு கொடுக்கிறார்.
மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார். நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று.
நீங்கள் சொன்னீர்கள் - உள்ளூர் ரயிலில்.
உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்துக் கேட்டார் - தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா.
குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்.
அந்த இளைஞன் சொன்னான் - குருஜி! அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
இளைஞர்களிடையே கூட்டத்தில் உரையாற்றிய குருஜி - *"இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்"* என்றார்.
*"அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் "அழகான நடத்தை" வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."*

மனிதத்தேனீயின் தேன்துளி

 


உ.வே.சாமிநாதய்யர் நினைவைப் போற்றுவோம்


 

செங்கல்பட்டு எம் எல் எம் திருமண மகால் திறப்பு விழா.

 செங்கல்பட்டு எம் எல் எம் திருமண மகால் திறப்பு விழா.

இன்று காலை தேவகோட்டை எம் எல் எம் . சுந்தரம் செங்கல்பட்டு மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டியுள்ள எம் எல் எம் திருமண மகால் ஏசி யை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் திறந்து வைத்தார்.
கமலா சினிமாஸ் உரிமையாளர் வி என் சிடி. வள்ளியப்பன், ராஜ் டிவி இயக்குநர் டாக்டர் எம். ரவீந்திரன், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் தலைவர் லேனா. காசிநாதன் வாழ்த்துரை வழங்கினர்.
அம்பத்தூர் மகளிர் சங்கத் தலைவி வள்ளி பழனியப்பன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக அதிகாலை பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள் குழுவினர் கணபதி ஹோமம் நடந்தது.
ஏஆர். எம். லெட்சுமணன் செட்டியார், எம் எல் எம். சுந்தரம், எம். விசாலாட்சி, எம். வெங்கடேஷ், எம். அருணாசலம், ஏ. வசந்தா, ஏ. ஷ்ரவன் நாராயணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.














Thursday 27 April 2023

செங்கல்பட்டு எம் எல் எம் திருமண மகால் திறப்பு விழா களைகட்டியது. விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வருகை ஆரம்பம். புகைப்படம் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி சிவசுப்பிரமணியன் மற்றும் முத்துராமன் கைவண்ணம்.

 


மகிழ்ச்சியான வாழ்க்கை.

 மகிழ்ச்சியான வாழ்க்கை.

*விசிறியை அசைக்காமல் காற்றும் வராது, வியர்வை சிந்தாமல்
வெற்றியும் கிடைக்காது. *
*எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த
விடை மவுனம்!!*
*எந்த ஒரு சூழ்நிலைக்கும் சிறந்த எதிர்வினை புன்னகை!!*
*பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல!!*
*நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்*
*காலம் ஒரு போதும் காத்து இருப்பதில்லை
எனவே
பேச வேண்டியதையும்
சொல்ல வேண்டியதையும்
கேட்க வேண்டியதையும்
சந்தர்ப்பம் கிடைக்கும்
போது கேட்டு விடுங்கள்
பிறகு வாய்ப்பு கிடைக்காது..!*
*எதிர் பாராதது
எதிர் பாராமல் நடந்தால்
அது உனக்கானது..*
*எதிர் பார்த்தது
எதிர் பார்த்தும் நடக்க வில்லையென்றால்
அது உனக்கில்லாதது..*
*கிடைத்ததை அனுபவிக்கவும்
கிடைக்காததை இரசிக்கவும் கற்றுக் கொண்டாலே
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 26 April 2023

தட்டிக் கொடுப்பதும் தூக்கி விடுவதும்.

 தட்டிக் கொடுப்பதும் தூக்கி விடுவதும்.

சூழ்நிலைகள் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை.
அதை நீ எதிர்கொள்ளும்
விதம் தான் உன்
வெற்றியைத் தீர்மானிக்கும்.
முடிந்ததை மீண்டும்
காட்சிப்படுத்த முடியாது.
நடக்கப்போவது எதுவெனத் தீர்மானித்து
ஒத்திகை நடத்திட
இயலாது.
இந்நொடியே நமக்கானது
மகிழ்ந்திருங்கள்.
உன்னுடைய தோல்விக்கு
யாரையும், எதையும்
காரணம் காட்டாமல்.
உன்னில் உன் செயல்,
சிந்தனைகளில்
காரணத்தைத் தேடு.
விரைவில் வெற்றி
உன் வசம்.
போகும் பாதை புதிதாய்
இருக்கலாம்.
சில நேரங்களில் புதிராகவும் இருக்கலாம்.
*விடையைத் தேடு*.
*முயற்சியை நாடு*.
*வெற்றியைப் பாடு*.
முந்திச் செல்வதும்
முன்னேறுவதும் மட்டும்
வெற்றியல்ல.
*தட்டிக் கொடுப்பதும் தூக்கி விடுவதும் கூட வெற்றி தான்*.
தடைகளைக் கண்டு தளராதே.
துன்பத்தைக் கண்டு துவளாதே.
கஷ்டத்தைக் கண்டு கலங்காதே.
முடியும் என்பதையே
உனது மூச்சாக்கிக் கொள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு என்.ராமசாமி


 

Tuesday 25 April 2023

நேசிக்கப்படும் அளவு நடந்துகொள்.

 நேசிக்கப்படும் அளவு நடந்துகொள்.

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல. அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்குத் தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின.
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்…
விழித்தெழுந்தான் அவன்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

குழந்தைகளிடம் இருந்து

 குழந்தைகளிடம் இருந்து

பெரியவர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.
பெரியவர்களால் தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்களாக விளங்குகிறார்கள். வாழ்க்கைக்கு தேவையான முக்கிய விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர்
தாங்கள் கற்றறிந்த அனுபவ பாடங்கள் மூலம் பிள்ளைகளுக்கு வழி காட்டுகிறார்கள்.
பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் மாற்றக்கூடிய குணங்களை குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் தாங்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களிடம் எப்போதும் சுறுசுறுப்பு மிகுந்திருக்கும். வேடிக்கையான சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் அப்படி இருப்பதில்லை.
தாங்கள் விரும்பிய விஷயங்களை அரிதாகவே செய்வார்கள். ஏதாவதொரு நிர்பந்தத்திற்கு ஆளாகி, கட்டாயத்தின் பெயரில் செய்து முடிக்கவேண்டிய நிலையில் இருப்பார்கள். அது நெருக்கடிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளைப் போல விரும்பிய விஷயங்களைச் செய்வதற்கு பெரியவர்கள் முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? என்ன நினைப்பார்களோ? என்று குழந்தைகள் கவலைப்படுவதில்லை. ஆனால் பெரியவர்கள் அடுத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் தங்கள் காரியங்களை செய்வார்கள்.
பெரும்பாலும் அவர்கள் தங்களின் விருப்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவர்களின் ஆலோசனைப்படியே செயல்படுவார்கள். குழந்தைகள் அதற்கு இடம் கொடுப்பதில்லை. தாங்கள் விரும்பியபடியே செய்து முடித்து மன நிறைவு அடைவார்கள்.
குழந்தைகளிடம் நேர்மை குடிகொண்டிருக்கும். அவர்களுடைய மனம் குழப்பமின்றி தெளிவாகவும் இருக்கும். அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்வார்கள். அந்த பதில் நேர்மையாகவும், சரியாகவும் இருக்கும். அவர்களை போல வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக இருக்க பெரியவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பெரியவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் மகிழ்ச்சி தொலைந்து போயிருக்கும். அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகையை உதிர்ப்பார்கள். குழந்தைகளின் உள்ளமும், முகமும் மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கும்.
குழந்தைகள் எளிதில் திருப்தி அடைந்து விடுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்வார்கள். ஆனால் பெரியவர்கள் நிறையப் பேரிடம் எப்போதும் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு காரியத்தை செய்து முடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்று எளிதில் மன திருப்தி அடையமாட்டார்கள். தங்களிடம் இருக்கும் திறமையையும் உணர மாட்டார்கள்.
குழந்தைகள் புதிதாக ஏதேனும் ஒன்றைக் காணும்போதெல்லாம் அதனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள். அதுபற்றி அறிந்து கொள்ளும் வரை ஓயமாட்டார்கள். அறியும் வரை உற்சாகத்துடன் செயல்படவும் செய்வார்கள். பெரியவர்கள் எந்தவொரு வேலையையும் ஆர்வமாகத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி விடும்.
குழந்தைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறார்கள். அவர்களிடம் எதிர்காலம் பற்றிய கவலை எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்து நிகழ் காலத்தை வீணடிக்கிறார்கள். வாழ்க்கையில் கடந்து போகும் தருணங்கள் எதுவும் திரும்ப வராது என்பதைப் புரிந்து கொள்ள பெரியவர்கள் மறந்து விடுகிறார்கள்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 71 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆங்கிலத் துறை தலைவர், கானாடுகாத்தான் நேமம் கோவில் நலச் சங்கத் தலைவர், ஏழு புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர், காசி சத்திர திருத்தேர் பணிக்கு துணை நின்றவர், இன்றைய தமிழக அரசின் கல்வித் துறைக்கு வழிகாட்டி, ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர், நேமம் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா துணைச் செயலாளர் பணியாற்றிய அறப்பணியாளர், பெருங் கொடையாளர் என நாளும் நற்றமிழுக்கு உழைப்பவர்
பேராசிரியர் கதி. பழனியப்பன்.
இவரது இல்லத்தரசியார் மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் வள்ளியம்மை ஆச்சி என்பது கூடுதல் சிறப்பு.
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு 24.04.2023


இயல்பாக வாழ முடியும்.

 இயல்பாக வாழ முடியும்.

இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது.
“என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும்“ என்ற சிந்தனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
ஆனால், பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின் போது இயலாமையால் தவிக்கிறார்கள்.
அந்த நேரத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். இதே சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழ முடியும்.
தன் வாழ்வில் நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவர் துறவியை தேடிச் செல்கிறான்.
அவரை பார்த்ததும் தன் அனைத்து குறைகளையும் கொட்டித் தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி, ‘இளைஞனை பார்த்து, ' உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன.‘ என்று கேட்கிறார்.
உடனே இளைஞன்,
‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்‘ என்று துறவியிடம் கூறினான்.
பின்னர், ‘மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய். எதை எல்லாம் இழந்திருக்கிறாய்‘ என்று துறவி கேட்டார்.
ஆனால் துறவி கேட்டதற்கு இளைஞனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாக நிற்கிறான்.
இன்றைய உலகில் நாமும் ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால் நல்லது எதையும் இழப்பதற்கு நாம் முன் வருவதில்லை.
அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்படும் நாம் எதுவுமே வேண்டாம் என சிந்திப்பது இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் உதவிக்கு நன்றியைக் கூட எதிர்பார்க்க கூடாது.
*எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது மிகவும் அவசியம். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றமும், உயர்ந்த விரக்தியும் உருவாகும்.*
*நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்.
அதுவும் தீவிரமாக; ஒரே வழிதான் இருக்கிறது. அதன் பெயர் அன்பு.*
*ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பாசத்தில் முழுமையான தீவிரம் இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பு இருக்காது. ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை. உங்களின் எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றம் தருகின்றன.*
*எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் அன்பு ஒரு போதும் நிலைப்பதில்லை. அன்பு இருக்கும் இடத்தில் எதிர்பார்ப்பு அவசியமில்லை, எதிர்பார்ப்பு இல்லாமல் வாழக் கற்று கொள்ளுங்கள்
ஏமாற்றம் இல்லாமல் வாழ்வீர்கள்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உண்மை வீழவே விடாது.

 உண்மை வீழவே விடாது.

மரணத்தை விட
கொடியது..
போலி அன்பிற்கு
அடிமையாக
இருந்தோம் என
அறியும் தருணம்!
அழகு இல்ல,
சந்தோசம் இல்ல,
பணம் இல்ல,
பாசம் இல்ல
உதவி இல்ல,
வெள்ள கலர் இல்ல,
சிரிப்பு இல்ல,
நிம்மதி தூக்கம் இல்ல,
நட்பு இல்ல,
காதல் இல்ல,
எதுவுமே இல்ல 🙇
ஆனா எல்லாம் வேணும்னு தோணுது 😞
கிராமத்துல வாழ்றவங்க முக்கியமா காடுகள் சூழ்ந்த கிராமத்துல இந்த பழம் சுவைக்காம இருக்க முடியாது.. எங்க கிராமத்துல கெழக்கா பழம்னு சொல்வாங்க கிளக்காய்
💞
மகிழ்ச்சியாக இருக்கும் போது யாரும்
கடவுளை நினைப்பதில்லை
மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கின்ற நேரம்தான் அவரை நினைத்து
பார்ப்பதற்கு சரியான நேரமாகும்..
ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியுடன் அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன் இருக்கும் போது மட்டுமே நீங்கள்
கடவுளுக்கு
எதிலுமே திருப்தி அடையாத
எவரின் மனமும்,
திருவோடு போலத்தான்,
ஏந்திக் கொண்டே திரி,
பொய் என்றுமே
உன்னை வாழ விடாது ...
உண்மை என்றுமே
உன்னை வீழவே விடாது !!
எப்படி தான் உன்னால் மறக்க முடிகிறது.....!!!!!????
அதை மட்டும் கற்றுத்தர.....
இறுதியாக
24×7....⌚
ஓய்வு நேரத்திலும் கூட
வேலை
செய்துகொண்டே
இருக்கும்
கடிகாரம் போல் தான்
என் மனமும்
ஓயாமல்
உன்னை
நினைத்துக்கொண்டே
இருக்கிறது....
என்னை வெட்டுங்கள்
என்று குளங்கள் கெஞ்சுகின்றது,
எங்களை தயவுசெய்து
வெட்டாதீர்கள் என்று மரங்கள்
மன்றாடி வருகின்றது,
என்ன செய்வது ...
மனிதன் பிறக்கும் போதே
தலைகீழாய் பிறந்தவன் ...
எல்லாவற்றையும் தலைகீழாக
தான் செய்கின்றான் !!
#குறள்62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
#உரை62 பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
இட்லிக்கு ஒரு கவிதை
அன்னை ஊட்டிய அமிர்தம் நீ!
காலையில் வரும் பௌர்ணமி நிலவு நீ!
வெண் பஞ்சு மேகம் போல வந்த அமுதம் நீ!
தாய்ப் பால் நின்ற பிறகுதாயாய் நின்ற உணவு நீ!
மனைவி கை பட்டதால்
மல்லிகை பூ நீ!
தேங்காய் சட்னி உடன் வந்தால் தேவாமிர்தம் நீ!
தக்காளி சட்னி உடன்
வந்தால் தங்கம் நீ!
புதினா சட்னி உடன் வந்த பசுமை பூ நீ!
சாம்பார் உடன் சேர்ந்ததால் சாகாவரம் பெற்றாய் நீ!
யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் வெற்றி பெறும் சிறந்த நட்பு நீ!
மருத்துவர் பரிந்துரைக்கும் மகத்தான மருந்து உணவு நீ!
எப்போதும் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீ!
இனிமையான இட்லி நீயே.